WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Why is NATO at war with Yugoslavia? World power, oil
and gold
நேட்டோ யூகோஸ்லாவியாவுக்கு எதிராக யுத்தம்
செய்வது ஏன்? உலக அதிகாரம், எண்ணெய், தங்கம்
Statement of the Editorial Board of the World
Socialist Web Site
24 May 1999
Use
this version to print
அமெரிக்காவின்
தலைமையிலான நேட்டோ படைகள்
1999
மார்ச் 24ம்
திகதியில் இருந்து யூகோஸ்லாவியாவை பேரழிவுகளைக் கொண்ட
குண்டுவீச்சுக்களுக்கு இலக்காகிக் கொண்டுள்ளது. நேட்டோவின்
15.000
யுத்த விமானங்கள் யூகோஸ்லாவிய நகரங்களிலும்,
கிராமங்களிலும்
குண்டுகளைப் பொழிந்து தள்ளியுள்ளன. பக்டரிகள்,
ஆஸ்பத்திரிகள்,
பாடசாலைகள்,
பாலங்கள்,
எண்ணெய்க் குதங்கள்,
அரசாங்கக் கட்டிடங்கள்
ஆதியன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பிரயாணிகள் போக்குவரத்து,
புகையிரதங்கள்,
பஸ் வண்டிகளின்
பிரயாணிகள்,
தொலைக்காட்சி நிலையங்கள்,
ஒலிபரப்பு நிலையத் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டுள்ளனர். சேர்பியா கொசோவா இரண்டினதும் அயலில் உள்ள
சிவிலியன்களும் இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த யுத்தம்
யூகோஸ்லாவியாவுக்கும் முழு பால்கனுக்கும் மொத்தத்தில் கிழக்கு
ஐரோப்பாவுக்கும் ஏற்படுத்தியுள்ள நீண்டகாலத் தாக்குதல்களைப்பற்றி இந்த
யுத்தத்தை திட்டமிட்டு நடத்துபவர்கள் எதுவும் சொல்வதாக இல்லை. இரண்டாம்
உலகயுத்தத்தின் முடிவிலிருந்து யூகோஸ்லாவியாவினால் அபிவிருத்தி செய்யப்பட்ட
கைத்தொழில் சமூக அடிப்படைகளில் பெரும்பகுதி அழிந்துபோயுள்ளது. மத்திய
ஐரோப்பாவின் பெரும்பகுதிக்கு ஒரு முக்கியமான பொருளாதார உயிர்நாடியாக
விளங்கிய டான்யூப் நதியைக் கடந்து செல்லமுடியாது போயுள்ளது. சேர்பியாவில்
நவீன நாகரீகத்தின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம்,
தண்ணீர்,
சுகாதார வசதிகள்
இடைவிடாது தாக்கப்பட்டுள்ளன. ஈராக்கில் அமெரிக்கா,
பிரித்தானியா,
பிரான்சிய குண்டுவீச்சுக்களால் சிருஷ்டிக்கப்பட்ட முழுப் பேரழிவுகளைப்
போன்று இவற்றின் பரிமாணமும் யுத்தம் நிறுத்தப்பட்டு அளப்பரிய கொலைகளைப்
பற்றிய அறிக்கைகள் வெளிவரும்போது மட்டுமே தெளிவாகும்.
படுகொலைகள்
யூகோஸ்லாவியா
மீதான தாக்குதல்கள் நேட்டோவினாலும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களாலும்
கொசோவாவின் அல்பானியன் இனக்குழுவுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை
நிறுத்துவதற்கான ஒரு மனிதாபிமான முயற்சியாக நியாயப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுவீச்சுடன் சேர்ந்து இடம்பெறும் பிரச்சார இயக்கத்தின் சக்தியும்
சிடுமூஞ்சித்தனமும் நேட்டோவின் பாதுகாப்பு யுத்தத்தின் முரண்பாடுகளை தனக்கே
உரித்தான பாணியில் வெளிப்படையாக பிரதிபலிக்கின்றது. யூகோஸ்லாவிய ஜனாதிபதி
மிலோசோவிக்கின் காட்டுமிராண்டித்தனங்களும் சேர்பியர்களின் படுகொலைகளின்
கொசோவா அல்பானியர்களின் கொலைகள் பற்றிய பரந்தளவிலான கொலைகள் முடிவற்ற
''இனச்
சுத்திகரிப்பு''
நடவடிக்கைகளும் துயரங்களுக்கு
உள்ளாகியுள்ள அகதிகள் பற்றிய தொலைக்காட்சி பிரதிபலிப்புக்கள் மூலமும்
பொதுமக்களை வாத விவாதங்கள் மூலமும் பழக்கி எடுக்கவும் பொதுமக்களைத் தூண்டி
விடவும் செய்யப்பட்டவை அல்ல. ''நேட்டோவை
எதிர்ப்பதானது அல்பானியர்களைப் பலவந்தமாக வெளியேற்றி,
பிரமாண்டமான படுகொலைகளை
நடாத்துவதை ஆதரிப்பதாக விளங்கும்''
என
அரசியல் அமைப்புக்களும் வெகுஜனத் தொடர்புச்சாதனங்களின் வித்துவான்களும்
பிரகடனம் செய்கின்றனர்.
ஈராக்குக்கு
எதிரான குண்டுவீச்சுக்கு ஆதரவாக பொதுஜன அபிப்பிராயத்தைத் திரட்டும்
பொருட்டு கிளின்டன் ஆட்சியாளர்கள்
''பேரழிவுக்கான
ஆயுதங்கள்''
என்ற வார்த்தையை ஓயாது
உச்சாடனம் செய்து வந்தனர். நாளுக்குநாள் ஈராக்கை தூள்தூளாக்கியதன் பின்னரே
கிளின்டன் ஆட்சியாளர்கள் சதாம் ஹுசேனின் கண்காண முடியாததும்
உயிராபத்தானதுமான வாயுக்கள்,
கிருமிகள் இரசாயனங்களிலிருந்து
உலகைக் காப்பாற்ற வேண்டும் எனப் பிரகடனம் செய்தது. யூகோஸ்லாவியாவுக்கு
எதிரான யுத்தத்தில் ''பேரழிவுக்கான
ஆயுதங்கள்''
பெரிதும் சக்திவாய்ந்ததும்
ஆத்திரமூட்டும் மந்திரமுமான ''இனக்குழுச்
சுத்திகரிப்பினால்''
பதிலீடு செய்யப்பட்டது. இந்த
வாா்த்தைகளின் முக்கிய பெறுமானம் என்னவெனில் இது நாஸி ஜேர்மனியின்
பிரதிபலிப்புக்களுக்காக மன்றாடுகின்றது. கொசோவாவில் நேட்டோவின்
''இனக்குழுச்
சுத்திகரிப்பானதை''
சர்வநாசத்தின்
1990களின்
பாணியிலானது.
இத்தகைய ஒரு
ஒப்பீடானது தவறான திசையில் இட்டுச் செல்வதோடு வரலாற்று ரீதியில் அவமானம்
நிறைந்த போலியானதுமாகும். நாஸி பேரழிவானது நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டதும்
நாசிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதுமான ஐரோப்பா பூராவும் இருந்த
இலட்சோபலட்சம் யூதர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து படுகொலை செய்வதாக
விளங்கியது. கொலைகார முகாம்களுக்கு அவர்களைக் கொண்டு செல்வதானது
பிரமாண்டமான படுகொலையின் இணைப்புத் தொடுவையாக விளங்கியது.
பாதுகாப்பற்ற
60
லட்சம் யூதர்கள் நாசிகளினால் கொலைசெய்யப்பட்டனர். அமெரிக்க இராஜாங்க
திணைக்களத்தின்படி இது கொசோவாவில் கடந்த ஆண்டு கொலைசெய்யப்பட்ட
2000
மக்களுடன் ஒப்பிடப்படுகின்றது. (250000
அல்பானியர்கள் கொலைசெய்யப்பட்டார்கள் என்ற சமீபகால வாதங்கள்
வெறுப்பூட்டுவதும் போலியானதுமாகும். மேற்கத்தையப் பத்திரிகையாளர்களின்
நம்பத்தகுந்த பார்வையாளர்கள் இதற்கு முரணான தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.)
கொசோவாவில்
கொலை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டுமடங்கானதாக இருப்பினும்
கூட சனத்தொகை வேறுபாடுகளுடன் ஒப்பிடும்போது உயிரிழப்புக்கள் (உதாரணமாக
இலங்கை அல்லது துருக்கி) உலகம் பூராவும் உள்ள மோதுதல்களுடன் ஒப்பிட்டு
நோக்குமிடத்து இன்னமும் குறைவானதாகும். இந்த ஒப்பீடு கொசோவாவில் இடம்பெறும்
மக்களின் துயரங்களை அலட்சியம் செய்வதற்கான ஒரு வாதமாகாது. எவ்வாறெனினும்
இது யூகோஸ்லாவியாவில் தனது முழு அளவிலான குண்டுவீச்சினை நியாயப்படுத்த
நேட்டோ கையாளுகின்ற முற்றிலும் தவறான பணியை வெளிச்சத்துக்கு கொணர்கின்றது.
கொசோவாவிலான
வன்முறைகளின் அமைப்பையிட்டு இன்னொரு கருத்தையும் வெளியிட வேண்டும். இந்த
மாகாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருக்க அல்பானியன்
தேசியவாதிகளுக்கும் கொசோவா விடுதலை இராணுவ (KLA)
பிரிவினைவாதிகளுக்கும்
யூகோஸ்லாவிய அரசாங்கத்துக்கும் இடையேயான உள்நாட்டு யுத்தம்
1998ல்
ஆரம்பமாகியது.
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக்குழு சகல வகையான சோவினிசத்தையும் எதிர்க்கின்றது.
பெல்கிரேட் ஆட்சியாளர்களின் பிற்போக்குத் தேசியவாதத்துக்கு ஆதரவாக நாம்
வக்காலத்து வாங்கப்போவதில்லை. நேட்டோத் தாக்குதலுக்கு முன்னதாக ஒரு ஆண்டு
காலம் இடம்பெற்ற குறுங்குழுவாத வன்முறைகள் முற்றுமுழுதாக சேர்பியர்களின்
கைவேலை எனக்கூறுவது அரசியல் யதார்த்தத்தை அடியோடு பொய்மைப்படுத்துவதாகும்.
கொசோவா விடுதலை இராணுவம் போதைப்பொருட்களின் பணத்தினால் நிதியீட்டம்
செய்யப்பட்டு,
திரைமறைவில்
சீ.ஐ.ஏ. ஆலோசகர்களின் ஆதரவைப் பெற்று சேர்பியன் பொதுமக்களுக்கு எதிராகத்
தனது சொந்தப் பயங்கரவாத இயக்கத்தை முன்னெடுத்தது.
நேட்டோ
சேர்பியன் அடக்குமுறையில் இருந்து அல்பானியன் சிறுபான்மை இனக்குழுவின்
காவலனாகக் காட்டிக்கொள்ளச் செய்யும் பாசாங்கு கொஞ்ச நஞ்சமல்ல. இதை
ஆதரித்துவரும் நேட்டோ அங்கத்துவ நாடுகள் இதைக்காட்டிலும் பரந்தளவிலான
இனக்குழு சுத்திகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு அதை அமுல்படுத்திய
விதத்தைக் கணக்கில் கொள்ளுங்கள்.
1995ல்
அமெரிக்க ஆதரவுடன் இரண்டுலட்சம் சேர்பியர்கள் குரோசியாவில் இருந்து
வெளியேற்றப்பட்டனர். (அன்றில் இருந்து குரோசியா அமெரிக்காவின் ஒரு
ஆதரவாளனாகவும் சேர்பியாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு
''முன்னணி
அரசாகவும்''
மாறியது.) கடந்த
15
வருடங்களுக்கு மேலாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான குர்டிஷ் மக்கள்
துருக்கியில் இருந்து அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவின் ஆதரவுடன் மட்டுமல்லாது அமெரிக்க இராணுவத் தளபாடங்களுடனும்
இது இடம்பெற்றது. இதேசமயம் துருக்கி தொடர்ந்தும் நேட்டோ அங்கத்துவ நாடாக
இருந்து வருவதோடு யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சிலும் பங்கு கொண்டுள்ளது.
அல்பானியன்
சனத்தொகைமீது திணிக்கப்பட்ட தண்டனையில் சேர்பியா,
பிரான்சு,
அல்ஜீரியா மீதும் அமெரிக்கா வியட்நாம் மீதும் திணித்த
காட்டுமிராண்டித்தனத்திலிருந்து பெரிதும் பின்னணியில் நின்றுகொண்டுள்ளது.
அமெரிக்க
வெகுஜனத் தொடர்புச்சாதனங்கள் அரசியல் நிபந்தனைகளைக் கொண்டிருந்தன. இஸ்ரேல்
அரசின் ஆதரவுடன் 1987 91ல்
இன்ரிபாடாவை நசுக்கும்படி அல்லது 1982ல்
பேரூட்டில் படுகொலைகளை கட்டவிழ்த்து விடும்படி கட்டளையிட்டன. இவை
கொசோவாவில் இடம்பெற்ற ஆத்திரமூட்டும் தரத்துக்கு எதுவிதத்திலும்
குறைந்தவையல்ல.
''இனக்குழுச்
சுத்திகரிப்பு''
சவால்களை ஆய்வு செய்யும்போது
உலகின் பெரும் வல்லரசுகள் பலதடவைகள் ஏகாதிபத்தியவாதிகள் பேரழிவுக்கான
நிலைமைகளை உருவாக்க அனாவசியமான தலையீடுகளை நியாயப்படுத்த இனக்குழு
மோதுதல்களை காட்டிக்கொண்டுள்ளனர். 20ம்
நூற்றாண்டின் மிகப்படுபயங்கரமான நிகழ்வாக 1947ல்
இந்தியாவில் இந்துக்களுக்கும்,
முஸ்லீம்களுக்கும் இடையேயான
மோதுதல்களைக் காட்டி பிரித்தானியா,
பாகிஸ்தான் தனியரசை ஸ்தாபிக்க
ஒழுங்குகள் செய்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தப் பிரிவினையைத்
தொடர்ந்து உருவான வன்முறையானது ஒரு மில்லியன் மக்களின் உயிர்களைப்
பலிகொண்டதோடு 12
மில்லியன் மக்களை அகதிகளாக்கியது.இதைப்போன்றே யூகோஸ்லாவியாவில் ஏகாதிபத்திய
தலையீடு இனவாத வன்முறைகளின் பரிமாணத்தை மோசமாக்கியதோடு இது அயல்நாடுகளுக்கு
பரவும் சாத்தியத்தையும் அதிகரிக்கச் செய்தது.
பெருந்தொகையான
மக்களின் வெளியேற்றத்திற்கு யார் பொறுப்பு?
கொசோவாவில்
இருந்து வெளியேறியுள்ள எட்டு லட்சம் அல்பானியன் இனக்குழு அகதிகளை அவர்களின்
வீடுகளுக்குத் திரும்பச் செய்வதே தனது தாக்குதலின் முதல் நோக்கம் என நேட்டோ
இப்போது கூறிக்கொள்கின்றது. இங்கு சிடுமூஞ்சித்தனம் ஒரு புதிய கட்டத்தை
எட்டுகின்றது.
அகதிகளின்
நெருக்கடியை உருவாக்கிய நிகழ்வுகளின் ஒழுங்குமுறையை நேர்மையாக
ஆய்வுசெய்யுமிடத்து நேட்டோவின் இந்த வாதம் நிராகரிக்கப்படும். பெருமளவிலான
மக்கள் வெளியேறியது மார்ச்
24ம்
திகதிக்கு பின்னரேயன்றி அதற்கு முன்னர் அல்ல. அன்றைய தினம் கிளின்டன்
நிகழ்த்திய உரையில் ஒரு யுத்தத்துக்கான அதிகாரபூர்வமான காரணங்களைக்
குறிப்பிட்டார். பெருமளவு மக்கள் வெளியேறுவதை அடியோடு தடுப்பதாக அவர்
குறிப்பிட்டார். ஒரு நேட்டோ தாக்குதல் இல்லாமல் இன்றுள்ள அகதிகளின்
எண்ணிக்கை ''பல
இலட்சங்களாக''
அதிகரிக்கும் ஆபத்து இருந்து
கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உண்மையில் நடந்தது என்ன?
குண்டுவீச்சுக்கள் பெருமளவிலான மக்களை அழித்து நாசமாக்கியதோடு
குடியிருப்பாளர்களை கிலியடையவும் செய்தது. பெல்கிரேட் படைகளுக்கும் கொசோவா
விடுதலை இராணுவத்துக்கும் இடையேயான போரைப் புதிப்பித்து வைத்தது.
ஆயிரக்கணக்கான மக்களன்றி பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.
இவற்றின் சகல
விளைவுகளும் உள்நோக்கம் இல்லாமல் செய்யப்பட்டவை அல்ல. நேட்டோ வல்லரசுகள்,
விமானத் தாக்குதல்கள்,
கொசோவியன்
விடுதலைப்படைகள்,
சேர்பியப்படைகளை ஓரம்கட்ட
உதவும் என எதிர்பார்த்தன. இது 1995ல்
பொஸ்னியா மீதான விமானத்தாக்குதல்கள் குரோஷியன் முஸலீம் படைகளை
எதிர்த்தாக்குதல்களில் இறங்கச்செய்யவும் சேர்பியர்களை வெளியேற்றவும்
வாய்ப்பளிக்கும் என்ற பாணியில் அமைந்திருந்தது.
அகதிகள்
சிடுமூஞ்சித்தனமான முறையில் கையாளப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்து
கொசோவன் அல்பானியர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டதும் நேட்டோ அவர்களின்
தற்காலிக முகாம்களுக்கு மிகவும் அற்பசொற்ப உதவிகளை வழங்கிக்கொண்டு
அவர்களின் அவல நிலைமைகளை யுத்தத்துக்கு ஆதரவு திரட்டப் பயன்படுத்தச்
சுரண்டிக்கொண்டது. அங்கு நிலைமைகள் அந்தளவுக்கு அருவருப்பான ஒரு கட்டத்தை
அடைந்ததால் இனக்கலவரங்கள் மூண்டது. இந்நிலைமையில் கூட ஒரு சிறிய அளவிலான
அகதிகளை மட்டுமே மேற்கத்தைய நாடுகள் ஏற்றுக்கொண்டன.
சில நேட்டோ
இராணுவத் தலைவர்களின் அறிக்கைகள் பெருமளவுக்கு வெளிவராத போதிலும் கொசோவா
சனத்தொகைக் குறைப்பு நடவடிக்கையானது அவர்களின் நலனுக்கு
பயன்படுத்தப்பட்டதோடு காபெட் குண்டு (Carpet
bombing)
குண்டுவீச்சுக்களைத் தொடங்கவும் மாகாணத்தில் ஒரு தரை
ஆக்கிரமிப்பை தயார் செய்யவும் அவர்களுக்கு வாய்ப்பளித்தது.
அகதிகள்
திரும்புவது சம்பந்தமாகக் கேட்கப்படும் தர்க்க ரீதியான கேள்வி இதுதான்;
திரும்புவது எதற்கு?
நேட்டோவின் பீரங்கித்
தாக்குதல்களுக்கு இலக்காகாது எஞ்சியுள்ள கொசோவாவின் வீடுகள்,
வேலைத்தலங்கள்,
வீதிகள்,
பாலங்கள் நீர் விநியோக
நிலையங்கள் என்ன?
பிரச்சார அரசியல் கொண்டாட்டம்
1937 ல்
அல்டோஸ் ஹன்னி எழுதுகையில் ''பிரச்சாரவாதிகளின்
நோக்கம்''
ஒரு குழு மக்கள் பகுதியினர்
மக்கள் குழுக்களின் வேறு சில பிரிவினர் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை
மறைக்கச் செய்வதேயாகும்.''
என்றார்.
இன்றைய யுத்தத்தில் யூகோஸ்லாவிய மக்களுக்கு எதிரான நேட்டோ வன்முறைகளின்
அளவானது சேர்பியர்களை பேய் பிசாசுகளாக்குவதை வேண்டி நிற்கின்றது.
கோடைக்
காலத்தின் ஆரம்பத்தில் நேட்டோவின் கொலைகள் சேர்பியன் அரசாங்கமும் கொசோவா
விடுதலை இராணுவமும் கொசோவாவில் நடாத்திய தலையீட்டினால் ஏற்பட்ட கொலைகளைத்
தாண்டிச் செல்கின்றது. மார்ச்
24ம்
திகதிக்கு முன்னர் கொசோவாவில் நடாத்திய தலையீட்டினால் ஏற்பட்ட கொலைகளைத்
தாண்டிச் செல்கின்றது. மார்ச் 24ம்
திகதிக்கு முன்னர் கொசோவாவில் கொலைசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு
வருட உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 2000
எனப் பல மதிப்பீடுகள் குறிப்பிட்டன. மார்ச் 24ம்
திகதியில் இருந்து நேட்டோவினால் கொலைசெய்யப்பட்ட சேர்பியர்களதும்,
அல்பானியர்களதும்
எண்ணிக்கை 1000க்கும்
அதிகமானது.
சேர்பியர்கள்
''அட்டூழியங்களை''
செய்யும்போது நேட்டோ
''தவறுகளை''
மட்டுமே செய்கின்றது.
பொதுவாகச் சொன்னால் சேர்பியர்களின் கொள்ளைகள்,
கொலைகள் பற்றிய
நேட்டோவின் ஒவ்வொரு புதிய கோரிக்கைகளும் நேட்டோவின் குண்டுவீச்சுக்களால்
கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை பற்றி கடைசியாகக் கிடைத்த
அத்தாட்சிகளைத் தொடர்ந்தே தலைநீட்டியுள்ளது. நேட்டோவின் சிகிச்சை
நோயைக்காட்டிலும் மோசமானது எனக் குறிப்பிடுவதானது கூட்டின் பேச்சாளர்களைக்
கிறீச்சிட வைத்தது;
நிஜ எதிரி மறக்கப்பட்டு
விட்டாரா?
மிகவும்
அக்கறைக்குரிய பிரச்சினை
''எதிரியின்
வகையறாக்கள் விரைவாக நோக்கத்தை விரிவுபடுத்துகின்றன. ஆரம்பத்தில்
அல்பானியர்களின் கொலைகளுக்கும்,
துயரங்களுக்கும் மிலோசவிக் ஆட்சியாளர்களே காரணம் என பிரகடனம்
செய்யப்பட்டது. எனினும் சமீப நாட்களில் யுத்தப் பிரச்சாரத்தில் ஒரு பெரிய
நச்சு அறிவிப்பு தலைதூக்கியுள்ளது. மொத்தத்தில் சேர்பியன் சனத்தொகையே
குற்றவாளி.
புதிய
போக்கிற்கு இணங்க சேர்பியன் மக்கள் ஊழல் மிக்கவர்களாய் உள்ளனர். கொசோவா
அல்பானியர்களின் துயரங்களின் அங்கங்களில் இருந்து வேறுபட்டது அல்ல.
ஏறக்குறைய
புரிந்துகொள்ள முடியாத பாகுபாட்டு உணர்வுகளால் பீடிக்கப்பட்டுள்ளனர். பல
நேட்டோ பிரச்சாரகர்களின்படி இந்த வியாதிக்கான பரிகாரம் ஒரு தரை
ஆக்கிரமிப்பாகும். பெல்கிரேட்டை கைப்பற்றும் ஒரு நீண்டகால ஆக்கிரமிப்பு
ரீதியான குடியேற்றமுமேயாகும்.
இது
19ம்
நூற்றாண்டு காலனித்துவம் என்ற பதத்தை ஒரு ''நாகரீகமான
பயணமாக''
புனருத்தாரணம்
செய்வதாக வருணிக்கப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய யுத்தம்
இப்பிரச்சாரம்
தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. இது பாரிய அரசியல் மோதுதல்களின் சிக்கலான
நிலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும் எனும் பொதுஜன அபிப்பிராயம் ஒரு
தொகைக் கேள்விகளை எதிர் கொள்கின்றது. இவற்றுக்கு ஒரு பதில் மட்டுமே உள்ளது.
இன்றைய யுத்தத்தில் அந்தக் கேள்வி இதுதான்;
''இனச்சுத்திகரிப்பை
நிறுத்தவேண்டியதில்லையா?''
இந்தத்
தெளிவுபடுத்தல் வெகுஜனத்தொடர்புச் சாதனங்கள் யூகோஸ்லாவியாவை நேட்டோவைக்
காட்டிலும் ஒரு ஆக்கிரமிப்பாளனாகச் சித்தரிப்பதை அனுமதிக்கின்றது. இந்தக்
கூட்டு யதார்த்தத்திற்கு முற்றிலும் எதிரிடையான விதத்தில் கொசோவா
அல்பானியர்களின் சார்பில் ஒரு பாதுகாப்பு யுத்தத்தை நடத்துவதாகக் காட்டிக்
கொண்டுள்ளது.
ஒரு
யுத்தத்தின் தன்மையை நிர்ணயம் செய்வதற்கு எல்லா யுத்தங்களிலும்
காணக்கூடியதாக உள்ள பொறுக்கியெடுக்கப்பட்ட அட்டூழியங்களை மட்டும் ஆய்வு
செய்வது அல்ல ஆனால் அதில் இடுபட்டுள்ள அரசுகளின் வர்க்க அடிப்படைகளையும்
பொருளாதார அத்திவாரங்களையும்,
அனைத்துலக பாத்திரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தத்
தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்து நேட்டோவினால் நடத்தப்பட்டுவரும் யுத்தம்
யூகோஸ்லாவியாவுக்கு எதிரான ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு யுத்தமாகும்.
அமெரிக்காவும்
ஐரோப்பிய வல்லரசுகளும் இந்த நேட்டோவின் மையமாக விளங்குகின்றன. நேட்டோ
உலகின் மிகவும் முன்னேறிய முதலாளித்துவ வல்லரசுகளைக் கொண்டுள்ளது. இந்த
நாடுகள் ஒவ்வொன்றிற்கும் அரசின் கொள்கைகள் நிதிமூலதனத்தின் புலன்களை
வெளிப்படுத்துகின்றன. இவை பெரும் ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களையும் நிதி
நறுவனங்களையும் கொண்டுள்ளன. இந்த நாடுகளில் ஆழும் வர்க்கம் தொடர்ந்தும்
இருந்து வருவதானது இந்த உலகம் பூராவும் முதலாளித்துவத்தின்
விஸ்தரிப்புக்கள் பிணைக்கப்பட்டுள்ளது.
ஒரு
விஞ்ஞானபூர்வமான பதம் என்ற முறையில் ஏகாதிபத்தியம் ஒரு உலகப் பொருளாதார
அமைப்பு என்ற விதத்தில் முதலாளித்துவத்தின் அபிவிருத்தியில் ஒரு
திட்டவட்டமான வரலாற்றுக் கட்டடத்தைக் குறித்து நிற்கின்றது.
19ம்
நூற்றாண்டின் இறுதியிலும் 20ம்
நூற்றாண்டை நோக்கியும் அபிவிருத்தி கண்டது. இது முதலாளித்துவத்தின்
அடிப்படை புறநிலைப் போக்குகளை எடுத்துக்காட்டுகின்றது. இவற்றில் மிகவும்
முக்கியமானது ஏகபோக வர்த்தக நிறுவனங்களின் பிரமாண்டமான வளர்ச்சி சுயாதீனமான
போட்டியை நசுக்கியமை,
உலகச் சந்தையில் பிரமாண்டமான
வங்கி அமைப்புக்களின் (நிதிமூலதனம்) அதிகரித்த ஆதிக்கம்;
தேசிய எல்லைகளைத்
தாண்டி சந்தைகளுக்கும்,
மூலப்பொருட்களுக்கும் உலகம்
பூராவும் புதிய உழைப்புக்கு மூலமாக ஈட்டிக் கொள்ளவும் முதலாளித்துவம்
மிகவும் பலமான முறையில் அபிவிருத்தி கண்ட நாடுகளில் (ஐரோப்பா,
வடஅமெரிக்கா,
ஜப்பான்) ஏகபோகத்திற்கும் நிதி மூலதனத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
ஏகாதிபத்தியம்
பின்தங்கிய நாடுகளில் ஒரு கொள்ளையும் ஒட்டுண்ணித் தன்மையும் கொண்ட
உறவுகளைக் கொண்டுள்ளது. தனது நிதி மேலாதிக்கத்தின் மூலம் சர்வதேச
நாணயநிதியம்,
உலகவங்கி போன்ற
பிரமாண்டமான நிதி நிறுவனங்களை வாகனமாகப் பாவித்து தனது கடனில் தங்கியுள்ள
சிறிய அரசுகள் மீது கொள்கைகளைத் திணிக்கும் அந்தஸ்தைக் கொண்டுள்ளது. உலகச்
சந்தை மீதான தமது மேலாதிக்கத்தின் மூலம் ஏகாதிபத்திய வல்லரசுகள்
மூலப்பொருட்களின் விலைகளைக் குறைப்பதோடு சிறிய அரசுகளை வறிய நிலையில்
வைத்துக்கொண்டுள்ளன. எவ்வளவுக்கு எவ்வளவு இந்த நாடுகள் கடன் பெறுகின்றனவோ
அவ்வளவுக்கு அவ்வளவு வறியவையாகவும் அடிபணிந்தவையாகவும் மாறுகின்றன.
இறுதியாக
பலவீனமான அரசுகளில் தொங்கிக்கொண்டு இராணுவக் குண்டுவீச்சைத் தொடரும் ஆபத்து
இன்று இருந்து கொண்டுள்ளது. இறுதி ஆய்வுகளில் அவை
''தலைகாக்கும்
ஜனநாயகங்கள்''
ஆகத் தம்பட்டம் அடிக்க
வேண்டும் அல்லது உலக ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமான மூலோபாயத்
திட்டங்களிற்கு பொருத்தமான விதத்தில்''
அயோக்கிய அரசுகளாக''
பேயாட்டத்தில்
ஈடுபடவேண்டும் 1980களில்
ஈரானுக்கு எதிரான ஈராக்கின் யுத்தத்தில் ஈராக்குக்கு அமெரிக்கா ஆதரவு
வழங்கியது. ஆனால் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்காவின்
பிடியை பலப்படுத்தும் திட்டத்திலிருந்து அது நழுவியதும் அது தாக்குதலுக்கு
இலக்காகியது. சேர்பியாவைப் பொறுத்தமட்டில் இதுவே உண்மை.
1980களில்
சுலோபோடன் மிலோசேவிக் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்து
யூகோஸ்லாவியாவில் அரச கைத்தொழில்களை நாசமாக்கும்போது வாஷிங்டன் அவருக்கு
ஆதரவு நல்கியது. 1990களில்
விளையாட்டு விதிகள் மாற்றம் கண்டதோடு சேர்பியா ஏகாதிபத்தியவாதிகளால்
வெறுத்தமட்டில் ஒரு உபத்திரவத்துக்குரிய ஒன்றாகியது. மிலோசேவிக்
ஏகாதிபத்தியவாதிகளின் ''பெரிதும்
தேடப்படுபவர்களின்''
பட்டியலில்
சேர்ந்து கொண்டார்.
எந்த ஒரு நாடு
சம்பந்தமாகவோ அல்லது தலைவர் சம்பந்தமாகவோ ஏகாதிபத்தியத்தின் தீர்மானம்
திடீரென மாற்றம் கண்டு வந்தது. ஏனெனில் பிரித்தானிய சாம்ராஜ்யம் பற்றி
பிரதமர் பாமர்ஸ்டன் குறிப்பிட்டதுபோல் இதற்கு நிலையான நண்பர்களோ அல்லது
நிலையான எதிரிகளோ கிடையாது. நிலையான நலன்களை மட்டுமே அது கொண்டிருந்தது.
யூகோஸ்லாவியா
ஒரு ஏகாதிபத்திய வல்லரசு அல்ல. ஆனால் ஒரு சிறிய பின்தங்கிய நாடாகும்.
1990களில்
அதனது மாஜி ஆறு குடியரசுகளில் மூன்று குடியரசுகள் விலகிக் கொண்டதில்
இருந்து அது தேய்ந்து போயிற்று.
இந்தப்
போக்கில் மிலோசேவிக்கின் பாத்திரம் முற்றிலும் பிற்போக்கானதாக விளங்கியது
என்பதில் சந்தேகம் இல்லை. சேர்பியன் தேசியவாதத்தினை சுரண்டிக்கொண்டதன்
மூலம் குரோஷியாவின் ருஜ்மனதும்,
பொஸ்னியாவின்
இஸட்பெகோவிக்கினதும்,
சுலோவியாவின்
குகனதும் சோவினிச கொள்கைகளை எதிர்கொள்ள முடியாது போய்விட்டது. ஆனால்
மிலோசவிக் இந்தப் போக்கினைத் தூண்டி விடுபவராக விளங்கினார் என்பது இதன்
அர்த்தமாகாது. மாறாக அவர் கிழக்கு ஐரோப்பாவின் பல மாஜி ஸ்டாலினிச
போக்கிரிகளைப் போன்று சந்தைப் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்தாபிதம் செய்யும்
சமூகப் போக்குகளைக் கட்டவிழ்த்துவிடும் போக்குகளுக்கு இயைந்து போனார்.
தேசியமயமாக்கப்பட்ட கைத்தொழில்களை உடைக்கக் கோருவதிலும்,
இனக்குழு பதட்ட
நிலைமையை கொந்தளிக்கச்செய்து சிக்கனக் கொள்கைகளைத் திணிப்பதிலும் இங்கு
ஏகாதிபத்திய வல்லரசுகள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தன. யூகோஸ்லாவியா
மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்குவாரங்கள் ஐக்கிய பால்கனை
கலைப்பதற்கான புறநிலை அத்திவாரத்தினையிட்டன.
1991ல் இருந்து பெரும்
வல்லரசுகளின் அரசியல் தலையீடுகள் மூலம் யூகோஸ்லாவியாவை உடைத்தெறிவது
உத்தரவாதம் செய்யப்பட்டது. யூகோஸ்லாவியாவைக் கலைப்பதன் மூலம் ஒரு வன்முறைப்
பெறுபேறுகளையிட்டு முன் அனுமானிக்கப்பட்ட போதிலும் அதை உடைத்து எறிய
ஜேர்மனி ஊக்கமளித்தது. அது 1991ல்
குரோஷியாவினதும் சுலோவினியாவினதும் சுதந்திரத்தை திடுதிடுப்பென
அங்கீகரித்தது. அமெரிக்கா இன்னும் பொறுப்பற்ற முறையில்
1992ல்
பொஸ்னியா பிரிந்து செல்வதற்கு தனது அங்கீகாரத்தை வழங்கியது.
மேலும்
யூகோஸ்லாவியாவை பிராந்திய மட்டத்தில் பார்த்தாலும் கூட ஒரு முதலாளித்துவ
அரசு அல்ல. அங்கு ட்ரான்ஸ்நஷனல் திரட்சிகள் கிடையாது. யூகோஸ்லாவிய
நிதிமூலதனம் அந்நாட்டின் எல்லைகளுக்கு வெளியே எந்வொரு கணிசமான
பாத்திரத்தையும் வகிக்கவில்லை. ஒருவர் சேர்பியன் முதலாளித்துவத்தைப்
பற்றிப் பேசும்போது அவர்கள் மிலோசேவிக்குடன் சேர்ந்து யூகோஸ்லாவியாவை
தவிடுபொடியாக்கும் போக்கின் போது அரச சொத்துக்களை களவாடியதன் மூலம் தம்மை
செல்வந்தர்களாக்கிக் கொண்ட ஒரு தட்டினரில் இருந்து இப்போது
தலைநீட்டியுள்ளவர்கள் ஆவர்.
சேர்பியாவை
நாசி ஜேர்மனியுடனும் மிலோசேவிக்கை ஹிட்லருடனும் ஒப்பிடுபவர்கள்
அறியாமையினதும் மோசடியினதும் கூட்டு ஆவர். விஞ்ஞான பூர்வமான அரசியல்
ஆய்வானது சுழற்றிவீசும் பண்புடையது அல்ல. ஒரு ஆஸ்திரியன் கோர்ப்பரலை ஒரு
பெரும் குரல் கொண்டவராக மாற்றுவதும்,
ஒரு சார்லி சப்ளினின்
மீசையை உலகின் மிகப்பயங்கரமான பிரதிபலிப்பை உணர்த்துவதாகக் காட்டுவதும் சில
புறநிலை முன்னிபந்தனைகளில் தங்கியிருந்தன. அது ஜேர்மனியின் கைத்தொழிலின்
பிரமாண்டமான வில்லனாகும். ஹிட்லர் ஐரோப்பா முழுவதையும் ஜேர்மன்
முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தின் கீழ்க் கொணர முயன்ற ஒரு ஆக்கிரமிப்பு
ஏகாதிபத்திய வல்லரசின் தலைவராவார். ஹிட்லரின் இரத்தம் தோய்ந்த தாக்குதல்கள்
நிறுத்தப்படுவதற்கு முன்னதாக ஜேர்மனிய மேலாதிக்கம் ஆங்கிலக்
கால்வாயிலிருந்து காக்கசஸ் மலை வரையும் யூகோஸ்லவாக்கியா உட்பட பால்கனைத்
தழுவிக்கொண்டிருந்தது. ஹிட்லரின் இராணுவ அபிலாசைகள் சீமென்ஸ்,
குரூப்,
ஐ.ஜீ. பார்பென்,
டைமிலர் பென்ஸ் டியூச்பால் மற்றும் மாபெரும் ஜேர்மன் கூட்டுக்களின்
பொருளாதார ஆவல்களைப் பிரதிபலித்தது.
இந்தத்
துன்பமயமான பெறுபேறுகள் இந்த வரலாற்று யதார்த்தத்தினை திரிபுபடுத்துவதோடு
இணைந்து கொண்டிருக்காது இருந்திருக்குமானால் சேர்பியாவை நாசி ஜேர்மனிக்கும்,
மிலோசேவிக்கை
ஹிட்லருக்கும் ஒப்பிடுவது சிரிப்புக்கிடமானது. ஆரம்பத்தில் இருந்து
சேர்பியா வெளிநாட்டு நிலங்களை ஆக்கிரமித்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. மாறாக
அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிராந்தியங்களை தனது எல்லைகளுக்குள்
கொண்டிருக்க முயன்றது. மிலோசேவிக்கைப் பொறுத்தமட்டில் இந்த
''ஹிட்லரின்''
முன்அனுபவமானது வருடாவருடம் சுருங்கிக்கொண்டு போகும் எல்லைகளைக் கொண்ட ஒரு
பெடரேசனின் மிச்சசொச்சங்களுள் தொங்கிக்கொள்வதாக விளங்கியது.
தொகுத்துச்
சொன்னால் இந்த யுத்தம் ஒரு சிறிய அரை பின்தங்கிய நாட்டுக்கு எதிரான பெரும்
ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஒரு கூட்டாகும். யூகோஸ்லாவியாவின் இறைமையைத்
துவம்சம் செய்யும் இது ஒரு புதிய காலனித்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது.
இதன் நோக்கம் கொசோவா மீதி நேட்டோவின் ஒரு வகையான பாதுகாப்பு வலயமாக
விளங்குவதேயாகும். இது பொஸ்னியாவில் ஆட்சிபுரியும் நேட்டோ சர்வதேச
நாணயநிதியத்தினைப் பெரிதும் ஒத்ததாக உள்ளது. பிரச்சாரத்துக்கு அப்பால்
யுத்தம் ஏன் இடம்பெறுகின்றது?
நேட்டோ
பேச்சாளர்களின் மோசடிக் கோரிக்கைகளும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின்
பொய்ப் பிரச்சாரங்களும் இந்த யுத்தத்துக்கு அப்பால் உரித்து
எறியப்படும்போது எஞ்சுவது என்ன?
இந்தப்
பலம்வாய்ந்த தாக்குதலுக்குச் சார்பாகக் காட்டப்படும் உத்தியோகபூர்வமான
காரணங்கள் இந்த ஒரு சிறிய பெடரேசனுக்கு எதிரான பலம் வாய்ந்த ஏகாதிபத்திய
நாடுகளின் ஒரு அம்மணமான யுத்தப்புகை மண்டலம் என்பதைக்காட்டும். இத்தகைய ஒரு
வெறியும் ஆவேசமும் கொண்ட பிரச்சாரம் இல்லாமல் இராணுவக் குண்டுவீச்சுக்களின்
பாதையில் ஏகாதிபத்திய சக்திகள் இறங்கியதற்கான நிஜ காரணங்களை ஆய்வதில்
பொதுமக்கள் ஈடுபடுவதைத் தள்ளி வைப்பது பெரிதும் கஷ்டமானது.
இந்த
நூற்றாண்டின் ஆரம்பத்தில் றோசா லக்சம்பேர்க் பரந்த அடிப்படையிலான பிரச்சார
இயந்திரத்தைத் தனது பாவனைக்கென கொண்டுள்ள முதலாவது உற்பத்திமுறை
முதலாளித்துவமே எனக் குறிப்பிட்டார். இன்று போன்று அன்றும் பலவீனமான
நாடுகளை அவற்றின் விருப்புக்கு மாறாகப் பலாத்காரமாக இழுத்துச் செல்வதற்கான
ஒரு மூடுதிரையாக ''மனிதாபிமானம்''
பயன்பட்டது அமெரிக்கா,
இங்கிலாந்து,
பிரான்சு,
பெல்ஜியம்,
ஒல்லாந்தின்
''நாகரீகமாக்கும்
பயணங்களின்''
நிஜ நோக்கம் தமது முக்கிய
போட்டியாளர்களை விடக் கூடுதலாக பெறுமதிமிக்க மூலப்பொருட்களையும்
சந்தைகளையும் புவி அரசியல் நலன்களையும் ஈட்டிக்கொள்வதேயாகும். ஆதலால் இன்று
யூகோஸ்லாவியா மீதான தாக்குதலின் நோக்கம் ஏகாதிபத்திய வல்லரசுகளின் சட
நலன்களை ஈட்டிக்கொள்வதேயாகும். மேற்கத்தைய வல்லரசுகள் கொசோவாவில் உள்ள
பிரமாண்டமான கனி வளங்களைச் சுரண்டிக் கொள்வதில் கண்வைத்துள்ளன. இது
கட்மியம் (Cadmium)
வெள்ளி,
தங்கம்,
துத்தநாகம் (Zinc)
ஆகியவற்றை உள்ளடக்கிக்
கொண்டுள்ளது. கொசோவா 17
பில்லியன் தொன் நிலக்கரிப் படிவங்களைக் கொண்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
ஆனால் இது ஏகாதிபத்திய கணிப்பீட்டின் ''சிறிய
மாற்றம்''
ஆகும். கொசோவாவில் இருந்து
உடனடியாகக் கொள்ளையடிக்கத்தக்க சட தேட்டங்கள் கடந்த
5
ஆண்டுகளுக்கு மேலாக நேட்டோ வல்லரசுகள் அபிவிருத்திசெய்து கொண்டுள்ள பாரிய
நலன்களை பிராந்தியங்களுக்கு கிழக்கே அமெரிக்காவினதும் மற்றும் நேட்டோ
வல்லரசுகளதும் உலக மூலோபாய அபிலாசைகள் இந்த யுத்தத்தில் கொண்டுள்ள
தொடர்புகள் சம்பந்தமாக சிறிதும் கவனம் செலுத்தாமல் விடப்பட்டிருப்பது
ஆச்சரியமளிக்கின்றது.
நேட்டோவும் சோவியத்யூனியனின் வீழ்ச்சியும்
ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தி கடந்த நூற்றாண்டின் இறுதியில் உலகைப்
பொட்டளிகட்ட எடுத்த முயற்சியைத் தரிசித்ததுபோலவே சோவியத்யூனியனை அக்குவேறு
ஆணிவேறாக்கியமை கிழக்கு ஐரோப்பாவிலும் ரூஷ்யாவிலும் மத்திய ஆசியாவிலும் ஒரு
ஆதிக்க சூனியத்தை ஏற்படுத்தியதோடு உலகில் புதிய பிளவுகளைத் தவிக்க
முடியாததாக்கியது. இந்தத் தீர்க்ககரமான காலகட்டத்தில் யூகோஸ்லாவியாவின்
பிரதான முக்கியத்துவம் என்னவெனில் இது உலகின் பெரும் வல்லரசுகள் தமது
ஆதிக்கத்தை விஸ்தரிக்கக் கண்வைத்துள்ள ஒரு பிரமாண்டமான பிராந்திய
பொட்டலத்துள் தங்கியுள்ளதே. இந்தப் பிராந்தியத்தைத் திறந்து வைப்பதைச்
சாத்வீகமான முறையில் அணுகுவது என்பது அமெரிக்கா,
ஜேர்மனி,ஜப்பான்,
பிரான்சு,
பிரித்தானியாவுக்கும்
மற்றும் வல்லரசுகளுக்கும் முடியாத காரியமாகும். வளர்ச்சி கண்டுவருவது
பிராந்தியங்களை கைப்பற்றவும் மூலப்பொருட்களையும் உழைப்பையும் சந்தைகளையும்
தமது பிடிக்குள் கொணரவும் இடம்பெறும் ஒரு போராட்டமாகும். இது கடந்த
நூற்றாண்டின் ''ஆபிரிக்காவுக்கான
போட்டா போட்டியை''
தாண்டிச்
செல்வதாக விளங்கும்.
இந்தப்
போக்கானது இலாப முறையின் மிகவும் ஆழமான தேவைகளைப் பிரதிபலிக்கின்றது. இன்று
ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகள் தமது இலாபத்தை பூகோளரீதியிலேயே அளவீடு செய்கின்றன.
உலகின் எந்தவொரு சந்தையையும் ஜெனரல் மோட்டார்ஸ்சோ ரொயோட்டோ,
லொக்ஹீட் மாட்டீனோ,
எயார் பஸ்ஸோ அல்லது
கொக்கா கோலாவோ புறக்கணத்துவிட முடியாது,
ஒதுக்கிவிட முடியாது இந்தப்
பிரமாண்டமான தொழிற்பாடானது கண்டங்கள் பூராவும் மேலாதிக்கத்தை
ஈட்டிக்கொள்ளப் போட்டியிடுகின்றன. அவற்றைப் பொறுத்தமட்டில் முதலாளித்துவ
சுரண்டலுக்கெனப் புதிதாகத் திறந்துவிடப்பட்ட பூகோளத்தின்
6ல்
ஒரு பாகத்தினுள் ஊடுருவல் நடாத்துவது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான
பிரச்சினையாகும்
இந்தப்
பிராந்தியத்தை முதலாளித்துவ உற்பத்தியினதும் வெளிநாட்டு நாணய மாற்றினதும்
உலக அமைப்பினுள் இணைப்பது அனைத்துலக முதலாளிவர்க்கம் இன்று முகம்கொடுக்கும்
மிகவும் தீர்க்கமான பிரச்சினையாகும். முதலாளித்துவம்
21ம்
நூற்றாண்டுக்குள் நின்றுபிடிக்க எழுப்பவேண்டிய கேள்வி இதுதான்;
20ம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளித்துவம் உலகைப் பிரித்தாள ஏற்பாடு
செய்வது அவசியமாக இருந்திருக்குமானால் அனைத்து பெரும் ட்ரான்ஸநஷனல்
கூட்டுத்தாபனங்களும் இன்று ஒரு பூகோளரீதியான பண்பைக்கொண்டுள்ள வேளையில் அது
அவ்வளவுக்கு உக்கிரமாக இருக்கவேண்டும்.
அமெரிக்கா,
சிதறடிக்கப்பட்ட
சோவியத்யூனியனை மிகவும் உக்கிரமான முறையில் சுரண்டுகின்றது. இது
அமெரிக்காமீது சோவியத்யூனியன் கொண்டிருந்த வரலாற்று குழறுபடுகள் மூலம்
விளக்கப்படுகின்றது. அமெரிக்கன் முதலாளித்துவம்,
சார்புரீதியில்
காலதாமதமாகி முதலாம் உலகயுத்தத்தின் போதே தலைமை அந்தஸ்துக்கு உயர்ந்தது.
அதே ஆண்டில் 1917ல்
அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபட்டதோடு ரூஷ்யாவில் அக்டோபர் புரட்சியின் வெற்றி
சோவியத்யூனியனை ஸ்தாபிதம் செய்வதற்கான களத்தை உருவாக்கியது. ஏழு தசாப்த
காலங்கள் சோவியத்யூனியனின் இருப்பின் புறநிலை விளைவுகள் காரணமாகவே
பூகோளத்தின் பெரும்பகுதி அமெரிக்க முதலாளித்துவத்தின் நேரடிச் சுரண்டலுக்கு
உள்ளாகுவது தடுக்கப்பட்டது.
இந்தப்
பிராந்தியங்களுள் அமெரிக்க மூலதனம் மீளவும் இடம்பிடித்துக் கொள்வதும்
மூலப்பொருட்கள்,
மனித உழைப்புக்கான
கோரிக்கைகளும்,
இழந்தவற்றை விறாண்டிக்
கொள்வதும் அமெரிக்க குளிர் யுத்தக் கொள்கையின் முக்கியமான உள்ளடக்கமாகியது.
''கம்யூனிச
விஸ்தரிப்பை நிறுத்தும்''
முயற்சியானது அதன் பொய்கள்,
மிகைப்படுத்தல்களை
உரிந்து பார்க்கும்போது அமெரிக்க வங்கிகளதும் கூட்டுத்தாபனங்களதும்
இலாபத்தைச் சுருட்டிக்கொள்ளும் முயற்சியை ரூஷ்யாவுக்கும் கிழக்கு
ஐரோப்பாவுக்கும் விஸ்தரிப்பதையே இடைவிடாத இலக்காகக் கொண்டிருந்தன.
1989,91
சம்பவங்கள் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் கரங்களைக்
கட்டிப் போட்டுவிடவில்லை.
பிரமாண்டமான
மேற்கத்தைய ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகள் மாஜி சோவியத்யூனியனின் பிராந்தியங்களை
மீண்டும் உலக முதலாளித்துவத்தினுள் ஈர்ப்பது என்பது ஏகாதிபத்திய
வல்லரசுகளுக்கு முக்கியமான கோடானுகோடி பெறுமதிவாய்ந்த மூலப்பொருட்களை
உறிஞ்சிக் கொள்வதை உள்ளடக்கிக்கொண்டு இருந்தது. கஸ்பியன் கடலோரமாக உள்ள
(அஜர்பைஜான்,
கஸாக்கஸ்தான்,
டுக்மெனிஸ்டான்) மாஜி சோவியத் குடியரசுகளில்தான் தோண்டி எடுக்கப்படாமல்
உலகின் மாபெரும் எண்ணெய் படிமங்கள் இருந்து கொண்டுள்ளன. இந்த வளங்கள்
இப்போது பெரும் முதலாளித்துவ நாடுகளிடையே பங்கிடப்பட்டுள்ளன. இந்த
எரிபொருட்களே புதிய இராணுவவாதத்துக்கு எண்ணெய் வார்ப்பதோடு உள்ளும்
எதிரிகளுக்கு எதிரான ஏகாதிபத்திய சக்திகளின் புதிய ஆக்கிரமிப்பு
யுத்தங்களுக்கும் இட்டுச் செல்லும். அத்தோடு ஏகாதிபத்தியவாதிகளிடையே
முன்னொருபோதும் இல்லாதவிதத்திலான மோதுதல்களுக்கும் இட்டுச் செல்லும்.
கடந்த
தசாப்தத்தில் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் யுத்த வெறியினை புரிந்து
கொள்வதற்கான திறவுகோல் இதுவேதான். யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சு
பூகோளத்தைப் பற்றிப் பீடித்துக் கொண்டுள்ள ஒரு தொகை ஆக்கிரமிப்பு
யுத்தத்தின் இன்றைய வகையாகும். அவர்கள் சில பிராந்திய ஊக்குவிப்புக்களைக்
கொண்டிருந்தாலும் இந்த யுத்தங்கள் சோவியத்யூனியனின் முடிவுடன் ஆரம்பமான
அமெரிக்காவினது சந்தர்ப்பங்களையும் சவால்களையும் பிரதிபலிப்பதாக
விளங்கியது. மூலவளங்களுக்காகப் போட்டியாளர்களிடையே எதிர்வந்து கொண்டுள்ள
போராட்டத்தில் நின்றுபிடிக்கத் தனது இராணுவ பலத்தை ஒரு துரும்புச்
சீட்டாகப் பயன்படுத்தலாம் என வாஷிங்டன் நினைக்கின்றது.
கஸ்பியன் எண்ணெய்யும் புதிய வெளிநாட்டுக் கொள்கை விவாதமும்
'' உலகில்
உள்ள அபிவிருத்தி செய்யப்படாது எஞ்சியுள்ள எண்ணெய் எரிவாய்வு மூலவளங்களுள்
பெரியவற்றுள் கஸ்பியன் பிராந்தியம் ஒன்றாகும்.''
1998ல் ஒரு எக்ஸ்ன்
நிர்வாக அதிகாரி மேற்கண்டவாறு விளக்கினார். அவர்
2020ம்
ஆண்டளவில் அந்தப் பிராந்தியம் ஒரு நாளைக்கு 60
இலட்சம் பீப்பாக்களை உற்பத்தி செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த மூலவளங்களைத் தோண்டுவதற்கு 300 500
பில்லியன் டாலர்கள் வரை எண்ணெய்க் கைத்தொழிலில் முதலீடு செய்யப்பட
இடமிருப்பதாக அவர் எதிர்பார்க்கின்றார்.
அமெரிக்கச்
சக்தி வலு திணைக்களம் 163
பில்லியன் பீப்பாய் எண்ணெய்யையும் 337
ட்ரிலியன் கனஅடி ஆழமான இயற்கை எரிவாயுவும் கண்டுபிடிக்கப்படுமென
மதிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் கண்டுபிடிக்கப்படுமிடத்து இந்தப்
பிராந்தியம் ஈரான் அல்லது ஈராக்குடன் ஒப்பிடத்தக்க ஒரு பெற்றோலியம்
உற்பத்தியாளராக மாறும்.
மேற்கத்தைய
ஆய்வாளர்களின் படி கஸ்பியன் பிராந்தியம் உலகின் பெரும் தங்க
உற்பத்தியாளனாகவும் விளங்கும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள் கிஸாக்ஸ்தான்
10.000
தொன்களுடன் உலகின் இரண்டாவது பெரிய இரும்பைக் கொண்டுள்ளது. அமெரிக்கா,
ஜப்பான்,
கனடா,
பிரித்தானியா,
அவுஸ்திரேலியா,
நியூசிலாந்து,
இஸ்ரேல் நாடுகளில் இருந்து சுரங்கம் தோண்டும் கம்பனிகள் இப்பிராந்தியத்தில்
ஏற்கனவே செயற்பட்டு வருகின்றன.
பெரும்
முதலாளித்துவ நாடுகளும் அபிவிருத்தி கண்டுவரும் ஒரு தொகை பிராந்திய
சக்திகளும் இந்த வளங்களில் கண்வைத்துக் கொண்டுள்ளன. இவற்றில் தலையிடவும்
தமது செல்வாக்கை விஸ்தரிக்கவும்,
தமது
போட்டியாளர்களுக்கு சாதகமற்ற முறையில் தமது நலன்களை அடையவும் புறநிலைத்
தலையீடுகள் சம்பந்தமாக முதலாளித்துவ சக்திகளிடையே ஒரு கூர்மையான அக்கறை
இருந்து கொண்டுள்ளது. இந்த அவசியங்கள் தீர்க்கமான முறையில் வளர்ச்சி
காண்பதை பெரும் கொள்கையாக்க சஞ்சிகைகளிலும்,
அரசாங்கப்
பேச்சுவார்த்தைகளிலும்,
ஆசிரியத்
தலையங்கங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
அமெரிக்க ஆளும்
வர்க்கப் பிரமுகர்களிடையே இந்த விவாதம் மிகவும் கணிசமானதும் கடைகெட்ட
சகுனங்களையும் கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அமெரிக்க ஆளும்
வர்க்கப் பிரமுகர்களிடையே இந்த விவாதம் மிகவும் கணிசமானதும் கடைகெட்ட
சகுனங்களையும் கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
1991ல்
இருந்து அமெரிக்க முக்கிய பிரதி வகுப்பாளர்களிடையே உலக விவகாரங்களில்
நாட்டின் புதிய இடம் குறித்து ஒரு திட்டவட்டமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
சோவியத்யூனியன் இல்லாத ஒரு நிலையில் அமெரிக்க புதிய
''யூனி
பொலர்'' (Unipolar)
உலகின் எஜமானாக தன்னைக்
கான்கின்றது எனவும்,
இதில் அது
குறைந்த பட்சம் இப்போதைக்கு அசைக்க முடியாத மேலாதிக்கம் கொண்டுள்ளது என்ற
முடிவுக்கு பலர் வந்துள்ளனர். இந்தப் பிரதியாளர்களின் வாதப் பிரதிவாதங்கள்
இந்த செல்வாக்குகளை எப்படி அமைப்பது என்பது பற்றியாகும்.
கார்ட்டர்
ஜனாதிபதியாக இருந்தவேளையில் தேசிய பாதுகாப்பு செயலாளராக விளங்கிய சிர்நியூ
பிரன்செஸ்கியினால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை செப்டம்பர்,
அக்டோபர்
1997 Foreign affairs
சஞ்சிகையில்
பிரசுரமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது ''ஆசியாவுக்கான
ஒரு பூகோள மூலோபாயம்''
என்ற தலைப்பில்
இது வெளியாகியிருந்தது.
''உலகின்
ஒரு தலைமைச் சக்தி என்ற வகையில் அமெரிக்க காலநிகழ்வின் அந்தஸ்துடனான ஒரு
தலைமுறை காலத்துக்கு மேற்பட்ட எந்தவொரு தனியொரு சவால்காரருடனும்
போட்டியிடமுடியாது.''
என பிரசென்ஸ்கி எழுதியுள்ளார்.
அதிகாரத்தின் நான்கு முக்கிய பரிமாணங்களில் இராணுவம்,
பொருளாதாரம்,
தொழில்நுட்பம்,
கலாச்சாரம் பூகோள
அரசியல் தாக்குதலை எதிர்கொள்வதில் அமெரிக்காவுடன் ஈடுகொடுக்கக்கூடிய
வேறுநாடு இருப்பதாகத் தெரியவில்லை.''
''வெஸ்டர்ன்
ஹெமிஸ்பயரில்''
தனது அதிகாரத்தனத்தை
இறுக்கிக்கொண்டு அமெரிக்கா,
ஐரோப்பா,
ஆசியா என்ற இரண்டு
கண்டங்களிலும் ஊடுருவுவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.''
என பிரசென்ஸ்கி வாதிடுகின்றார்.
''பூகோளரீதியில்
ஒரு super power
ஆக அமெரிக்கா தோன்றியுள்ளமை
இன்று ஐரோப்பாவுக்கும்,
ஆசியாவுக்கும் ஒரு கூட்டானதும்
சுருக்கமானதுமான மூலோபாயத்தை அத்தியாவசியமாக்கியுள்ளது.''
பிரன்செஸ்கி
எழுதுவதாவது; ''அமெரிக்காவின்
பின்னர் அடுத்து ஆறு பெரும் பொருளாதாரங்களும் இராணுவச் செலவாளிகளும்
இருந்து கொண்டுள்ளனர். இவற்றில் ஒன்றைத்தவிர ஏனையவை அப்பட்டமான அணுவாயுத
வல்லரசுகள். ஒன்று மறைமுகமாக அணுவாயுதத்தைக் கொண்டுள்ளது. யூரோ ஏசியா உலக
சனத்தொகையில் 70
வீதத்தைக் கொண்டுள்ளது. அதன் மொத்தத்தேசிய உற்பத்தியில்
60
வீதத்தையும்,
அதன் வலுவளங்களில்
75
வீதத்தையும் கொண்டுள்ளது. கூட்டாகப் பார்க்குமிடத்து யூரோ ஏசியாவின்
சாத்தியமான அதிகாரம் அமெரிக்காவின் மீது கூட நிழலாடுகின்றது. உலகப்படத்தை
நோட்டமிடும்போது ஐரோப்பா,
ஆசியாவில் ஆதிக்கம் கொண்ட ஒரு
நாடு மத்தியகிழக்கையும்,
ஆபிரிக்காவையும் தன்னியக்கமான முறையில் கட்டுப்படுத்தவல்லது என்பதை
எடுத்துக்காட்டுகின்றது.
''ஒரு
தீர்க்கமான புவியியல் அரசியல் களமாக ஐரோப்பா,
ஆசியா வந்ததன் பின்னர்
ஐரோப்பாவுக்கென ஒரு கொள்கையையும் கொண்டிருப்பது இனிப்போதியதன்று. ஐரோப்பா
ஆசிய பரந்த நிலப்பரப்பும் ஆபிரிக்கா தொடர்பான அதிகாரப் பங்கீட்டுடன்
இடம்பெறுவது அமெரிக்கன் பூகோள முதன்மை ஸ்தானத்துக்கும் வரலாற்றுப்
பாரம்பரியங்களுக்கும் தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்
தனித்து நின்று யூரோ ஏசியாவை மேலாதிக்கம் செய்வது சாத்தியம் என அவர்
எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவுக்கு சாதகமான பெரும் வல்லரசுகளிடையே ஒரு
சமபல நிலையை உருவாக்க உதவ ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகிப்பதன் மூலம்
அமெரிக்க நலன்களுக்கு உதவ முடியுமெனப் பிரசென்ஸகி காண்கிறார். அவர் ஒரு
முக்கியமான நிபந்தனையை முன்வைக்கின்றார். உறுதியற்ற யூரேசியாவின்
உடனடிப்பணி,
எந்தவொரு அரசோ அல்லது
அரசுகளின் கூட்டோ அமெரிக்காவை வெளியில் தள்ள அல்லது அதனது தீர்க்கமான
பாத்திரத்தைக் குறைக்காதிருப்பதை ஊர்ஜிதம் செய்வதையாகும்.
''இந்த
நிலைமையை அவர் ஒரு''
இரக்கமான அமெரிக்கன்
மேலாதிக்கம்''
என
வருணிக்கின்றார்.
பிரசென்ஸ்கி
அத்தகைய ஒரு முடிவை எட்டுவதற்கான ஒரு சிறந்த வாகனமாக நேட்டோவைக்
காண்கின்றார். அமெரிக்கா ஜப்பானுடன் கொண்டுள்ள உறவுகளைப் போலல்லாது நேட்டோ
யூரோசியன் பிராந்தியத்தில் அமெரிக்க அரசியல் செல்வாக்கையும்,
இராணுவ
அதிகாரத்தையும் உறுதி செய்கின்றது. ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் இன்னமும்
பெரிதும் அமெரிக்கப் பாதுகாப்பில் தங்கியுள்ள ஒரு நிலைமையில் ஐரோப்பாவின்
அரசியல் நோக்கம் தன்னியக்கமான முறையில் அமெரிக்கச் செல்வாக்கை
விஸ்தரிப்பதாகும். மாறாக செல்வாக்கை சிருஷ்டிப்பதும் அதிகாரமும்
அத்திலாந்திக் சமுத்திரக் கூட்டைத் தாண்டிச் செல்வதில் தங்கியுள்ளது.
''ஒரு
பரந்த ஐரோப்பாவும் ஒரு விஸ்தரிக்கப்பட்ட நேட்டோவும் அமெரிக்க கொள்கையின்
நீண்டகால,
குறுங்கால நலன்களுக்குச்
சேவகம் செய்வதாக விளங்கும். ஒரு பரந்த ஐரோப்பா புவியியல் அரசியல்
முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் சிறப்பாக மத்தியகிழக்கு அமெரிக்காவை
சவால் செய்யக்கூடிய அரசியல் ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு ஐரோப்பாவை
சமகாலத்தில் சிருஷ்டிக்காமல் அமெரிக்க செல்வாக்கின் அளவை விஸ்தரிக்கும்.''
இந்த
மேற்கோள்கள் கூறுவது என்னவெனில் நேட்டோ அது ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து
முதற்தடவையாக இராணுவ எதிர்த்தாக்குதல் நடவடிக்கையில் யூகோஸ்லாவியாவில்
ஈடுபட்டுள்ளமையானது அமெரிக்க அதிகார வட்டாரங்களில் அமெரிக்காவின் உலக
அந்தஸ்தை அதிகரிக்கும் ஒரு நடவடிக்கையாகத் தெளிவாகியுள்ளது. அதேசமயம்
நேட்டோ போலந்து,
ஹங்கேரி,
செக் குடியரசினுள் விஸ்தரித்துக் கொண்டுள்ளமையானது ஐரோப்பாவிலும் உலகிலும்
அமெரிக்கச் செல்வாக்கின் பலம் வாய்ந்த விஸ்தரிப்பாகியுள்ளது.
இந்தப்பிராந்தியம் பற்றிய பிரசென்ஸ்கியின் முன்னோக்கு முற்றிலும்
விசித்திரமானது அல்ல. இன்றைய நிலைமையின் கீழ் அவர் அமெரிக்கா
பயன்பாட்டுக்கு கடைப்பிடித்துள்ள் ஒரு வடிவத்தினை மீழ உயிர் பெற்றெழச்
செய்துள்ளார். ஒரு கண்டத்தில் உள்ள ஒன்றை மற்றொன்றுக்கு எதிராகத் தூண்டி
விடுவதன் மூலம் ஐரோப்பாவில் தனது நலன்களைக் கட்டிக் காப்பது பிரித்தானிய
ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியமான புவியியல் அரசியல் மூலோபாயமாக இருந்து
வந்துள்ளது. உலக மேலாதிக்கத்துக்கான முதலாவது நவீன யூரோ ஏசியன் மூலோபாயம்
பிரித்தானியாவில் விஸ்தரிக்கப்பட்டது. பிரசென்ஸ்கியைப் பிரதிபலிக்கும்
விதத்தில் ஏகாதிபத்திய மூலோபாயவாதியான ஹால்போட் மக்கின்டா
1904ல்
''வரலாற்றின்
புவியியல் மையம்''
என்ற ஆய்வுப் பத்திரத்தில்
யூரோ ஏசியன் நிலத்தையும் ஆபிரிக்காவையும் அவர் கூட்டாக
''உலகத்
தீவு''
எனப் பெயர் சூட்டியுள்ளார்.
இது பூகோள ரீதியான மேலாதிக்கத்தை அடைவதற்கு தீர்க்கமான முக்கியத்துவம்
கொண்டதாக விளங்கியது. மக்கின்டரின்படி முன்னைய உலக பேரரசுகளைத் தடைசெய்த
தடைக் கல்லாக குறிப்பாக போக்குவரத்தின் வரையறைகள் (குறைபாடுகள்) விளங்கி
வந்துள்ளது. இது 20ம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் பெருமளவுக்கு தீர்க்கப்பட்டது. இது ஒரு
பூகோளரீதியான மேலாதிக்கத்தை ஸ்தாபிதம் செய்வதற்குப் பெரும்
வல்லரசுகளிடையேயான போராட்டத்துக்கு களம் அமைத்துக் கொடுத்தது. யூரோ ஏசியன்
பரந்த நிலப்பரப்பின் ''மைய''
பிராந்தியத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள பகுதி வொல்கா,
யாங்ஜி,
ஆத்திக்,
இமாலய மலையை எல்லையாகக்
கொண்டுள்ளமை ஒரு திறவுகோலாக உள்ளதாக மக்கின்டர் நம்பினார். அவர் தமது
மூலோபாயத்தை பின்வருமாறு தொகுத்துக் கூறினார்;
கிழக்கு ஐரோப்பாவை யார்
ஆட்சி புரிகின்றனர் என்பது மையத்தினைக் கட்டுப்படுத்துகின்றது. மையத்தை
யார் ஆட்சி செய்கின்றனர் என்பது உலகத் தீவினை யார் ஆட்சி புரிகின்றனர்
என்பது உலகைக் கட்டுப்படுத்துகின்றது.''
ஊகங்கள்
என்னவாக இருந்தபோதிலும் அவை பின்னர் முதலாளித்துவ விமர்சகர்களின்
கண்டனத்துக்கு உள்ளாகின. மக்கின்டரின் எழுத்துக்கள் இன்றைய பிரசென்ஸ்கியைப்
போல் அவரது கால பெரும் இராஜதந்திரிகளால் நெருக்கமாக ஆய்வு செய்யப்பட்டதோடு
இந்த நூற்றாண்டின் முதல் அரைநூற்றாண்டுக் காலப்பகுதியை உருவமைத்த பெரும்
வல்லரசு மோதுதல்களில் ஒரு ஆழமான செல்வாக்கையும் செலுத்தின.
உலக மூலோபாயம்,
இயற்கை
வளங்கள் மீதான கட்டுப்பாடு ஆகிய இரண்டு காரணங்களுக்காகவும் அமெரிக்கா
முன்னைய சோவியத் பிராந்தியத்தில் ஒரு மேலாதிக்க பாத்திரத்தை வகிக்கத்
தள்ளப்பட்டது. அதனது எதிரிகள் அல்லது எதிரிகளின் கூட்டுக்கள் இந்தப்
பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க அந்தஸ்தை பிரச்சினைக்கு
உள்ளாக்கியிருக்கும். அமெரிக்காவில் உள்ள அரசியல் அமைப்பு இந்த உண்மையை
நன்கு அறிந்துகொண்டிருந்தது.
வாஷிங்டன் மத்திய ஆசியாவில் அரசியல் மேலாதிக்கத்துக்கு
திட்மிடுகின்றது
சர்வதேச
உறவுகளுக்கான அமெரிக்க பிரதிநிதிகள் சபைக் கமிட்டி கஸ்பியன்
பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்து
இருந்தது. 1998
பெப்ரவரியில் ஒரு கூட்டத்தில் கமிட்டித் தலைவரான டக் பெரெயிட்டர்
19ம்
நூற்றாண்டில் மத்தியாசியா தொடர்பாக இடம்பெற்ற பெரும் வல்லரசுகளின்மோதுதலை
நினைவூட்டி பேச்சை ஆரம்பித்தார்.
பேரரசுக்கான
போட்டியில் ரூஷ்யாவும்,
பிரித்தானியாவும்
ஆட்சிக்கும்,
செல்வாக்கிற்குமான ஒரு நீடித்த
போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததாக பெரெய்டர் குறிப்பிட்டார். அவர்
தொடர்ந்து குறிப்பிட்டதாவது ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் சோவியத்யூனியனின்
வீழ்ச்சி ஒரு புதிய மாபெரும் போட்டிகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அங்கு
கிழக்கு இந்திய வர்த்தகக் கம்பனியின் (East
Indian Trade Company)
நலன்கள் யூனோகால்,
டோடால் இன்னும் பல
அமைப்புக்களாலும்,
நிறுவனங்களாலும் பதிலீடு செய்யப்பட்டன.
இந்தப்
பிராந்தியத்திலான வலுவளங்கள் தொடர்பாக வெளிவந்த அமெரிக்க கொள்கை இலக்குகள்,
அரசுகளின்
சுதந்திரத்தையும் மேற்குலகுடன் அவை கொண்டுள்ள உறவுகளை போஷிப்பதாகவும்
எண்ணெய்,
எரிவாயு,
போக்குவரத்துப்
பாதைகளில் ரூஷ்யாவின் ஏகபோகத்தைத் தகர்ப்பதாகவும் பல்வேறுபட்ட
விநியோகஸ்தர்கள் ஊடாக மேற்கத்தைய வலுப் பாதுகாப்பை ஊக்குவிப்பதாயும்
ஈரானைத் தொடுக்காத ஒரு கிழக்கு,
மேற்கு (எண்ணெய்) குழாய்
பாதைகளை ஸ்தாபிதம் செய்ய ஊக்குவிப்பதையும் மத்திய ஆசிய பொருளாதாரங்களில்
ஈரான் கொண்டுள்ள ஆபத்தான நெம்புகோலுக்கு இடமளியாதிருப்பதை ஊக்குவிப்பதையும்
உள்ளடக்கிக் கொண்டுள்ளது.''
பெரொயிட்டரின்
கருத்துக்கள் சுட்டிக்காட்டுவதுபோல் தனது நலன்களின் பேரில் வாஷிங்டன்
பிராந்திய ஆட்சியாளர்களுடன் கணிசமான மோதுதல்களுக்கு செல்வதை முன்
அனுமானித்துக் கொண்டுள்ளது.''
பெரொயிட்டரின்
கருத்துக்கள் சுட்டிக்காட்டுவதுபோல் தனது நலன்களின் பேரில் வாஷிங்டன்
பிராந்திய ஆட்சியாளர்களுடன் கணிசமான மோதுதல்களுக்கு செல்வதை
முன்அனுமானித்துக் கொண்டுள்ளது. கஸ்பியன் எண்ணெய் வளங்களுக்கு முதலில்
பாய்ந்து கொள்ளும்போது கணிசமான அளவு மோதுதல்கள் ஏற்படும்.
மேற்கத்தைய
எண்ணெய் கம்பனிகளால் கோடிக்கணக்கான எண்ணெய் கம்பனிகளால் கோடிக்கணக்கான
எண்ணெய் உற்பத்தி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இவற்றை
ஏற்றுமதிசெய்யும் எண்ணெய் குழாய் வழிகளைப் பற்றி இன்னமும் உடன்பாடு
காணப்படவில்லை. பெரெய்டர் சுட்டிக்காட்டும் காரணங்களின்படி வாஷிங்டன்
கிழக்கில் இருந்து மேற்குக்கு எண்ணெய் அனுப்பும் வழியில் ஈரானையும்
ரூஷ்யாவையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் விடாப்பிடியாக
இருந்துகொண்டுள்ளது..
இந்தவிடயம்
அமெரிக்க அரசாங்க உயர்மட்டங்களில் அக்கறைக்குரிய ஒரு விடயமாக இருந்து
கொண்டுள்ளது. கடைசியாக இடம்பெற்ற பிரச்சினையில் வலுவள செயலாளர் பில்
றிச்சார்ட்சன் நியூயோர்க் டைம்சின் ஸ்ரீபன் கின்சருக்கு அளித்த பேட்டியில்
''நாம்
புதிதாக சுதந்திரம்பெற்ற நாடுகளை மேற்கு நோக்கி நகர்த்த முயற்சிக்கின்றோம்.
அவை வேறொரு வழியில் செல்லாமல் மேற்கத்தைய வர்த்தக அரசியல் நலன்களில்
நம்பிக்கை கொண்டவையாக இருப்பதை நாம் விரும்புகின்றோம். கஸ்பியனில் நாம்
பெருமளவு அரசியல் முதலீடு செய்துள்ளோம். குழாய்வழி தேசப்படமும் அரசியலும்
நேராக வருவது எமக்கு மிகவும் முக்கியம்.''
இந்தப்
பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கை உக்கிரமானதாக விளங்கவேண்டும் எனப் பல
மூலோபாயவாதிகள் வாதிட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்க
''நியூஸ்
அன்ட் வேர்ல்ட் றிப்போர்ட்''
ஆசிரியர் மோட்டிமார் சக்காமன்
என்ற பேர்வழி 1999
மேயில் மத்திய ஆசிய வளங்கள் ரூஷ்யா அல்லது ரூஷ்யா தலைமையிலான ஒரு கூட்டின்
கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் திருப்பப்படுவது ஒரு
''பயங்கரமான
கனவு''
ஆக விளங்கும் என அவர்
எச்சரிக்கை செய்துள்ளார். அவர் எழுதியதாவது;
நாம் பயங்கரமான
ஆபத்துக்களையிட்டு நனவாக இருக்கவேண்டும் இல்லையேல் இன்று நாம் எமது
வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டுள்ள உத்தரவாதங்கள் தொடர்ந்தும்
உத்தரவாதமாக விளங்காது.''
ரூஷ்யா முதன்மை
வகிக்கும் பிராந்தியத்தில் துருக்கிக்கு கிழக்கே ஆசியாவுக்கும்,
ஐரோப்பாவுக்கும்
இடையேயான பாலம் கஸ்பியன் சமுத்திரத்தில் எண்ணெய்யும் எரிவாய்வு வளங்களும்
4
ட்ரில்லியன் (400000)கோடிகளுக்கு
மேலான பெறுமதி கொண்டதாகும். அவை ரூஷ்யாவுக்கு பரந்தளவிலான செல்வங்களையும்
மூலோபாய வாய்ப்புக்களையும் வழங்கும்.''
இப்போது
மூண்டுகொண்டுள்ள புதிய மோதுதல்களுக்கு
''பெரும்
விளையாட்டு''
எனப் பெயர் சூட்ட வேண்டும் என
சுகர்மன் குறிப்பிடுகின்றார். இந்த மிகவும் உயர்ந்த தன்மை கொண்ட பதம்
மிகவும் பொருத்தமானது. ஏனெனில் இன்றைய மோதுதல்கள்
''உலகளாவியவையும்
வெறும் பிராந்திய விளைவுகளை மட்டும் கொண்டவையல்ல. ஈரான்,
ஈராக் உட்பட்ட ஒரு
புதிய எண்ணெய்க்கூட்டுக்கு அணுவாயுத குடையை ரூஷ்யா வழங்குகின்றது. இதனால்
மேற்கத்தைய நாடுகளையும் துருக்கி,
இஸ்ரேல்,
சவூதி அரேபியா முதலான
நாடுகளை ஆபத்தில் மாட்டும் வகையிலும் எண்ணெய் வலு உற்பத்தியாளர்களை
பலப்படுத்தும் விதத்திலும் எண்ணெய் விலையை பெரிதும் அதிகரிக்க முடியும்.
அபிவிருத்திகாணும் மூலோபாய அரசியல் ஆய்வு நிலையத்துக்காக செய்த ஒரு
அற்புதமான ஆய்வில் போல் விக்பியின் வார்த்தைகளில் சொன்னால்
''1970பதுகளின்
நடுப்பகுதியின் கனவு காட்சிகள் திரும்பவும் பழிக்குப்பழி வாங்கும்
விதத்தில் மீண்டும் காட்சி தரும்''
என்றுள்ளார்.
நேட்டோ
நாடுகளில் ஒன்று அல்லது பலதுக்கும் ரூஷ்யாவுக்கும் இடையேயான ஒரு இராணுவ
மோதுதலின் சாத்தியம் ஒரு வெறும் ஊகத்துக்குரிய விடயம் அல்ல. ஸ்டார்
எழுதுவதாவது;
எண்ணெய் வளம் கொண்ட அஜர்பைஜான்
அளவுக்கு வெறிகொண்டு வேறு எந்தவொரு நாடும் நேட்டொவின் அங்கத்துவத்தைக்
கோரவில்லை. ''அஜரி
வளங்களின் ஏற்றுமதி தொடர்பாக ரூஷ்யன் பெடரேசனுடன் மோதிக்கொள்ளும் சாத்தியம்
வேறு எந்தவொரு நாட்டைக்காட்டிலும் சாத்தியமாக உள்ளது.''
1998ல் அஜர்பைஜான்
நேட்டோவின் ''சமாதானத்துக்கான
பங்குடமை''
நடவடிக்கைகள்
144ல்
பங்கு கொண்டது.
யூகோஸ்லாவியாவுக்கு எதிரான இன்றைய யுத்த இயக்கத்தை நியாயப்படுத்த
முன்வைக்கப்பட்ட தர்க்கத்தை,
மத்திய
ஆசியாவில் இராணுவ ரீதியில் தலையிடும் பொருட்டு அமெரிக்க ஆளும்வர்க்க
கும்பல் முடிவு செய்யுமிடத்து இலகுவாக மீண்டும் பிரயோகிக்க முடியும்.
கிட்டத்தட்ட அங்குள்ள சகல நாடுகளிலும் இனக்குழு மோதுதல்கள்
இருந்துகொண்டுள்ளன. இந்த விடயத்தில் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி குழாய்வழிகள்
செல்வதை வாஷிங்டன் விரும்பும் மூன்று முக்கிய நாடுகள் உள்ளன. அஜர்பைசானில்
ஆர்மேனிய மக்களுடனான இராணுவ மோதுதல்கள் ஒரு தசாப்தத்துக்கு மேலாக நீடித்து
வருகின்றது. இதற்கு அயலில் உள்ள ஜோர்ஜியா ஆப்காசியாவில் அரசாங்கத்துக்கும்
ஒரு பிரிவினைவாத இயக்கத்துக்கும் இடையே இடத்துக்கிடம் யுத்தம்
இடம்பெறுவதைக் கண்டுள்ளது. இறுதியாகத் துருக்கி எண்ணெய் குழாய் முடிவுறுவது
இங்கேதான். அமெரிக்க ஆதரவுடன் கூடிய எண்ணெய் குழாய்கள் செல்லும் இந்தப்
பிராந்தியத்தினுள் துருக்கி பெரும்பான்மையினரான குர்திஷ் சிறுபான்மை தேசிய
இனத்துக்கு எதிரான நீண்ட அடக்குமுறை இயக்கத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த விடயங்களை
இன்றைய அமெரிக்க ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை. கடந்தமாதம்
அமெரிக்கப் பத்திரிகை ஆசிரியர்கள் மத்தியில் பேசிய கிளின்டன்,
யூகோஸ்லாவியாவில்
இனக்குழு மோதுதல் எந்தவிதத்திலும் விசித்திரமானது அல்ல. முன்னைய
சோவியத்யூனியனில் பெரும்பாலானவை மத்திய ஆசியாவின் புதிய நாடுகளான
உக்கிரேயின்,
மோல்டோவா,
தென்ரூஷ்யா,
ஜோர்ஜியாவின் காக்கசஸ்
உட்பட இந்தப் பிராந்தியங்களின் ஆரம்பத்துடன் இனக்குழு மோதுதல்களுக்கான
சாத்தியங்கள் எமது மிகவும் தீர்க்கமான நலன்களுக்கு எதிரான ஒரு மாபெரும்
அச்சுறுத்தலாகின. முன்னைய கம்யூனிஸ்ட் நாடுகள் ஸ்திரப்பாடு,
செல்வாக்கு
சுதந்திரத்தை நோக்கிப் பரிமாணம் கண்டன.''
இடம்பெறப்போகும் யுத்தங்கள்
யூகோஸ்லாவியாவிலான தலையீடு சம்பந்தமாக அமெரிக்கா கடைப்பிடித்த ஆக்கிரமிப்பு
மனப்பாங்கும் கஸ்பியன் பிராந்தியத்தில் எதிர்கால அமெரிக்க ஊடுருவலுக்கான
சாத்தியமும் உலகம் பூராவும் அலட்சியமான முறையில் கொள்ளப்பட மாட்டாது.
கடந்த
10
ஆண்டுகளாக ரூஷ்யாவுடனான மோதுதல்களுக்கான சாத்தியங்கள் உண்மையில்
அதிகரித்துள்ளதை இவை தெளிவுபடுத்தியுள்ளன. ஆதலால் அமெரிக்காவுக்கும் ஒன்று
அல்லது பல ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் இடையேயான ஒரு பெரும் மோதுதல்களுக்கான
சாத்தியங்கள் இருந்து வருவதாயும் கூடவே இது தெளிவாக்கியுள்ளது. ஐரோப்பிய
முதலாளி வர்க்கம் அமெரிக்காவுக்கு அடிபணிந்த அரசாக இருந்து வருவதை என்றும்
ஏற்றுக்கொள்ளாது. அதனது அந்தஸ்து அமெரிக்கா தனது நலனுக்காக வலியுறுத்தி
வரும் நிலையில் தொடர்ந்து மோசமடையும். மத்திய ஆசியாவினதும்,
கிழக்கு ஐரோப்பாவினதும்
கொள்ளைப் பொருட்கள் அமெரிக்காவுக்கும்,
ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இத்தாலிக்கும் இடையில்
எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதையிட்டு தவிர்க்கமுடியாத விதத்தில்
மோதுதல்கள் அபிவிருத்தியடையும்.
சமீபத்தில்
ஐரோப்பிய பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்களும் அரசியல்வாதிகளும்
ஐரோப்பிய பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கத் தலையீடு அதிகரித்து
வருவதையிட்டும் நேட்டோவை விஸ்தரிக்க நெருக்குவதையிட்டும் ஆட்சேபம்
தெரிவித்தன. பிரசென்ஸ்கி விபரித்ததுபோல் அமெரிக்க அதிகாரத்தை
ஐரோப்பாவினுள்ளும் ஆசியாவினுள்ளும் பரந்தளவில் விஸதரிக்கும் அமெரிக்கத்
திட்டங்களையிட்டு அவர்கள் என்ன செய்கின்றார்கள்?
பதட்ட நிலையை
ஏற்கனவே பெரிதும் காணமுடிகின்றது. யூகோஸ்லாவியாவிலான இராணுவத் தலையீடு
ட்ரான்ஸ் அத்லாந்திக் வர்த்தக மோதுதல்கள் வளர்ச்சி கண்டுள்ள ஒரு ஆண்டின்
மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய வல்லரசுகள் உலக வர்த்தகத்தில்
அமெரிக்காவின் மேலாதிக்க பாத்திரத்தை நசுக்குவதற்கான சாதனங்களை
நீண்டகாலமாகத் தேடிக்கொண்டுள்ளதோடு ஒரு நாணய கூட்டையும் ஸ்தாபிதம்
செய்துள்ளனர். உலகின் வைப்பு நாணயமாக டாலருக்குப் போட்டியாக
''யூரோ''
வையும் உருவாக்கிக்
கொண்டுள்ளனர். மேலும் ஐரோப்பிய நாணயக் கூட்டில் முன்னணிச் சக்தியான ஜேர்மனி,
கிழக்கு ஐரோப்பாவிலும்,
ரூஷ்யாவிலும் ஒரு கணிசமான அளவு வர்த்தகக் கழுமரமாகியுள்ளது. அமெரிக்க
ரூஷ்யன் மோதுதலுக்கான சாத்தியங்களும் மாஸ்கோவின் ஈடாட்டம் கண்ட நிலையும்
அதனது அந்தஸ்தைச் சங்கடத்துள் மாட்டியுள்ளது.
மேலும்
அமெரிக்க ஜப்பானிய மோதுதலும் தொடரும். ஒரு பெரும் எண்ணெய் இறக்குமதியாளரும்
கஸ்பியன் பிராந்தியத்தில் சொந்த நலன்களைக் கொண்டுள்ளதும் தீவு தேசத்துக்கு
அமெரிக்காவுடன் வர்த்தகத் தகராறுகளுக்கு குறைச்சல் இல்லை. மத்திய ஆசியாவில்
தனது வெற்றிக்கு ஒரு பெரும் இராணுவ நடவடிக்கை ஒரு திறவுகோல் என எவ்வளவுக்கு
எவ்வளவு அமெரிக்கா காண்கிறதோ ஜப்பானின் ஆளும் வட்டாரங்கள் தனது
இராணுவத்தின் மீது யுத்தத்துக்குப் பின்னர் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்
அளவையும் பரப்பையும் ஒரு முடிவுக்கு கொணரும்படி கோரிக்கைகளை முன்வைக்கும்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வெளிவெளியான மோதுதல்களை
தவிர்க்கமுடியாது. சீனா வரலாற்றுரீதியில் ஒரு ஒடுக்கப்பட்ட நாடு;
ஒரு
ஏகாதிபத்திய வல்லரசு அல்ல. எவ்வாறெனினும் முதலாளித்துவத்தை புணருத்தாரணம்
செய்து ஒரு பெரும் பிராந்திய பொருளாதாரச் சக்தியாகிவிட விரும்புகின்றது.
அமெரிக்கப்
பத்திரிகைகளில் இடம்பெறும் இன்றைய சீன எதிர்ப்பு வெறியாட்டம் எடுத்துக்
காட்டுவதைப்போல அத்தகைய ஒரு அபிவிருத்தியை அமெரிக்க ஆளும் பிரமுகர்களில்
கணிசமான ஒரு பகுதியினர் வன்மையாக எதிர்க்கின்றனர். மத்திய ஆசியாவில்
அமெரிக்கச் செல்வாக்கின் பரம்பல் சீனாவுக்கு ஒரு நேரடியானதும்,
உடனடியானதுமான
பயமுறுத்தலைக் கொண்டுள்ளது. ஏனெனில் ஏனைய காரணிகளால் சீனாவின்
பொருளாதாரத்தின் விரிவாக்கம் நேரடியாக பெற்றோலியத்தில் தங்கியுள்ளது.
2010ம்
ஆண்டளவில் சீனாவின் எண்ணெய் தேவைகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும் என
எதிர்பார்க்கப்படுகின்றது. இது அந்நாட்டினை 1995ம்
ஆண்டில் இருந்து இறக்குமதி செய்வதை 40
வீதமாக இறக்குமதி செய்யத் தள்ளப்படும்.
இந்தக்
காரணத்தினால் சீனா கஸ்பியன் எண்ணெய்யை கிழக்கு நோக்கி கொண்டு செல்லும்
அக்கறையை ஏற்கனவே வெளிப்படுத்திக் கொண்டுள்ளதோடு கஸாக் எண்ணெய் வளங்களில்
இருந்து 60
வீதத்தைப் பெற்றுக்கொள்ள 1997ல்
4.3
பில்லியன் டாலர்களுக்கான ஒரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுக்
கொண்டுள்ளது. அமெரிக்கா சந்தேகத்துக்கிடமற்ற முறையில் இந்தப்
பிராந்தியத்தில் அதனது நடவடிக்கைகளை குழிபறிந்து போகச் செய்யும்.
உலகம் பூராவும்
உள்ள அரசாங்கங்கள் தாம் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு கீழ்ப்படியாது
போனால் அடுத்த இராணுவ தாக்குதலின் பலிக்கடாவாக மாற நேரிடும் என அச்சம்
அடைந்துள்ளன. இந்த அச்சம் அமெரிக்காவின் எதிரிகளின் பட்டியலில்
இடம்பெற்றுள்ள குறைவிருத்தி நாடுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பாரிசும்
பேர்ளினும் ஐரோப்பாவில் அமெரிக்காவின் உள்நோக்கத்தையிட்டு பெரிதும் கவலை
கொண்டுள்ளதோடு பென்டகன் பிரான்சுடனும்,
ஜேர்மனியுடனுமான யுத்தத் திட்டங்களை சட்டைக்குள் வைத்துள்ளது. அது யுத்தப்
பாணியில் இருந்து விரைவாக எடுத்து அதை வெளியில் போடக்கூடும்.
உதாரணமாக இந்த
இரண்டு நாடுகளையும் காட்டியுள்ளது. மற்றொரு முக்கிய விடயத்தை
வலியுறுத்துவதற்காகும். அமெரிக்காவின் சகல எதிர்கால மோதுதலும் இப்போது
தலைதூக்கியுள்ள மோதுதலைப்போல் ஒருபக்கச் சார்பானதாக விளங்குமென
கூறிவிடமுடியாது. வாஷிங்டன் நீண்டகாலம் செல்வதற்கு முன்னர் முற்றுமுழுதாக
ஒரு அப்பாவி எனச் சொல்லமுடியாத எதிர்ப்பாளருடன் மோதிக்கொள்வது நிச்சயம்.
1915ல்
இருந்த வல்லரசுகளுக்குப் பதிலாக இன்றுள்ள பெரும் வல்லரசுகளைக் கொண்டு
லெனினின் மதிப்பீட்டை ஒழுங்குபடுத்தினால் அது பின்வரும் கேள்விகளை
எழுப்புகின்றது. ட்ரில்லியன் டாலர் கணக்கிலான பெற்றோலியத்தையும் கட்டிடக்
கொந்தராத்தையும் வழங்குவது வர்த்தக உடன்படிக்கைகளை விஸ்தரிப்பதும் யுத்த
உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வது போன்ற பிரச்சினைகளில் எவ்வாறெனினும்
சமாதானமான உடன்பாட்டை எட்டுவதில் அமெரிக்கா,
ஐரோப்பா,
யப்பான் வெற்றி பெறுமா?
இதையிட்டு
''ஆம்''
எனப் பதிலளிக்க
முடியாது. இந்த வல்லரசுகள் பிராந்திய மோதுதல்களின் மூலம் இலாபத்தை
ஈட்டிக்கொள்ள முயற்சிக்கலாம். மத்திய ஆசியாவை உற்பத்தியிலும்,
வர்த்தகத்திலும்
பூகோளமயமாக்கத்தில் ஒன்றிணைக்கும்போது பெரும் எண்ணெய் அகழ்வு
வேலைத்திட்டங்களை மேற்கத்தைய நாடுகள் நிதியீட்டம் செய்யும்போது பிராந்திய
இனக்குழு மோதுதல்கள் மோசமடையும். அதிகாரத்துக்குட்பட்ட பிராந்தியங்கள்
எண்ணெய் ஏற்றுமதி வருமானமாக பில்லியன் (டாலர்களை) கொண்டிருக்கும்போது
யுத்தம் மேலும் உக்கிரமடையும். ஏற்கனவே ஜோர்ஜியாவில் அப்காஷியன்
பிராந்தியத்தில் மோதுதல்கள் இந்த எண்ணெய் குழாய் வழிகளை அமைப்பதை ஒரு
தடவைக்கும் மேலாக தடுத்து நிறுத்தியுள்ளன. மேலும் மேற்கத்தைய மூலதனத்தின்
ஊடுருவலானது சர்வதேச நாணய நிதியத்தினால் நெறிப்படுத்தப்பட்ட சிக்கன
நடவடிக்கைகளுடன் இணைந்து கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஒரு சிலரை
செல்வந்தராக்கும் அதேசமயம் மத்திய ஆசிய மக்களில் பெரும்பான்மையினரை மேலும்
வறியவர்களாக்கியுள்ளது. ரூஷ்யாவைப் போல் கஸ்பியன்,
காக்கசஸ் குடியரசுகள்
''புதிய
காக்கசஸ், ''புதிய
அஸாரீஸ்''
போன்ற ஒரு சிறிய தரப்பினரை
மட்டும் பெரிதும் செல்வந்தராக்கியுள்ளது. இருந்தபோதிலும்
1991ல்
இருந்து முழு உற்பத்தியும்,
செல்வமும்
வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த
அபிவிருத்திகள் உலகினை புதிதாக கூறுபோடுவதை சுட்டிக்காட்டிக் கொண்டுள்ளன.
இது முக்கிய ஏகாதிபத்திய வல்லரசுகளினாலும் அவற்றின் இராணுவத்தினாலும்
தீர்மானம் செய்யப்படும். உலகின் ஒரு பிராந்தியத்தில் இடம்பெறப்போகும்
இராணுவ மோதுதலானது பால்கனைக் காட்டிலும் மோசமான முறையில் வெடித்துச்
சிதறுவதாக விளங்கும். அனைத்துப் பெரும் வல்லரசுகளும் அணுவாயுதங்களைக்
கொண்டுள்ளன. இது ஒரு நூற்றாண்டின் காலப்பகுதியினுள் ஒரு பெரும் மூன்றாவது
ஏகாதிபத்திய மோதுதலை தோற்றுவிக்கும் சாத்தியத்தை தோற்றுவித்துள்ளது. முதல்
இரண்டிலும் கூட்டாக ஏற்பட்டதைக் காட்டிலும் ஒரு பிரமாண்டமான பேரழிவையும்
மனித இன அழிவையும் ஏற்படுத்தும் சாத்தியம் இருந்துகொண்டுள்ளது.
யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சின் தாக்கங்கள்
யூகோஸ்லாவியாவுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கையினதும் இராணுவ
மயமாக்கலின் பொதுவான வளர்ச்சியினதும் முக்கியத்துவம் இதுவேயாகும்.
அதேவேளை இந்த
யுத்தமானது ஏகாதிபத்திய நாடுகளின் உள்ளே காணப்படும் பாரிய முரண்பாடுகளின்
வெளிப்பாடாகும். இவ்வகையான சமூக அடித்தள முறுகல் நிலையானது யுத்தத்தின்
வாயிலாக மேலும் மோசமடையும். ஏகாதிபத்திய பெரு நகர நிலையங்களுக்குள்ளேயே,
தவிர்க்கமுடியாத
நிலைமையூடாக சமூக முரண்பாடுகள் மோசமடைவதானது,
ஏகாதிபத்திய வெறியாட்ட காலங்களோடு அடியொட்டி வந்துள்ளதை முழு இருபதாம்
நூற்றாண்டும் காட்டி நிற்கின்றது.
மேற்கு
ஐரோப்பிய நாடுகளினதும் அமெரிக்க ஐக்கிய அரசுகளதும் உள்ளக சமூக
கட்டமைப்புக்கள் ஆழமான வர்க்க முரண்பாடுகளால் சிதறுண்டு போயுள்ளன. இந்த
நாடுகளில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆழமான பொருளாதார முனைவாக்கம்
தோன்றியுள்ளது. வரலாற்றில் முன்னொருபோதும் இருந்திராத அளவுக்கு சமூகத்தின்
மிகச் சிறு பிரிவானது பொருள் வளத்தில் புரள்கின்றது. எஞ்சிய பெரும்
பிரிவானது பொருள்வளமற்ற துயர வாழ்வில் உழல்கின்றது. இதற்குள்ளேயும்
பெரும்பான்மையினர் அடிப்படை வசதிகளும் இன்றி அல்லல்பட்டு நிற்கின்றனர். இவை
எல்லாம் சமூகத்தின் அடிப்படைப் போக்கின் தொடர்ச்சியை அல்லது
துரிதப்படுத்தலை கூடக் காட்டி நிற்பதாக கருதப்பட வேண்டும்.
அரசியல்
(ரீதியில்) வழியூடாக தம் குரலை வெளிக்காட்ட முடியாத அளவு ஊமையாகத்
தவிக்கும் அளவு சமூக முரண்பாடுகள் (ஆரோக்கியமற்ற) நோயுற்ற நிலையைப்
பெற்றிருக்கின்றன. அமெரிக்கா அதைப் பொறுத்தமட்டில் செயலற்றுப் போகும்
தறுவாயில் நிற்கும் சமூகமாகத் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது. நாட்டின்
பொது வாழ்வானது பள்ளிச் சிறார்களின் வன்முறைச் செயல்களால் தடைப்பட்டு
நிற்கின்றது. இவ்வாறான வன்முறை நிறைந்த சமூகவிரோத நடத்தையின் வெடித்துச்
சிதறலுக்கு மிகப் பொதுவான மேலோட்டக் கருத்துக்களைத் தவிர வேறு எந்தவிதமான
(உத்தியோகபூர்வமான அல்லது ஆய்வுக்குள்ளான) விளக்கம் எதுவும் தரப்படவில்லை.
எனினும் அவை ஒவ்வொன்றும் தத்தம் வழிகளில் சமகால அமெரிக்க வாழ்வின்
மிருகத்தனத்தினதும் சமூகத்தின் அடிமட்ட ஆழத்தில் அமுக்கு வைக்கப்பட்டுள்ள
விரோத உணர்வுகளினதும் சான்றுகளாகக் காணப்படுகின்றன.
இக்கருத்தானது
யூகோஸ்லாவியா மீது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுக்கு மேலும் ஒரு
உள்நோக்கத்தையும் தொட்டுக் காட்டுகின்றது. கடந்த நூற்றாண்டின்
கடைப்பகுதியில் ஏகாதிபத்திய கொள்கைத் திட்டமிடலின் தந்தையாகக்
கருதப்பட்டவர் சிசில் றோட்ஸ். ஏகாதிபத்திய நாடுகளுக்கு உள்ளேயே
நிரம்பிவழியும் இராணுவ மயமாக்கலானது உளவியல்,
சமூகம்
சார்ந்த வடிகாலை அமைக்கும் நன்மை புரிவதாக இவர் (சிசில்) கருதுகின்றார்.
தற்போதைய மோதுதலில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இருக்கும் பொருளாதாரம்
சார்ந்த நேரடியானதும் மறைமுகமானதுமான அக்கறை ஒருபுறமிருக்க தன்னாட்டுக்கு
வெளியிலுள்ள ஒரு இலக்கு மீது தன்நாட்டில் அடக்கி வைக்கப்பட்டுள்ள
விரக்தியையும் துயரங்களையும் கொட்டித் தீர்க்கும் சந்தர்ப்பமாகவே இந்த
யுத்தத்தை அது கருதுகின்றது.
இதேவேளை
அவ்வாறு திசைதிருப்புவதன் எல்லையையும் அது அறிந்திருக்கின்றது. அத்தோடு அது
தன் ஏகாதிபத்திய பேராசையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் தன் உள்நாட்டுக்
கொள்கையை மறுவடிவமைக்கத் தொடங்கிவிட்டது. தேசியப் பொது நிதியினை அர்ப்பணம்
செய்யும் ஒரு உயர் தொழில் நுட்பம்கொண்ட பாசறையாகத் தன்னைத் தொடர்ச்சியாக
மீளமைத்துக் கொண்டிருக்கின்றது. வெளிப்படையாக சமூக அடக்குமுறையானது
சமூகநலத்திட்டங்களுக்காக மேன்மேலும் பதிலீடு செய்யப்படும். இந்த அடிப்படை
அணுகுமுறை ஏனைய பெரும் ஏகாதிபத்திய நாடுகளிலும் பின்பற்றப்படும்.
ஜனநாயக
உரிமையைப் பொறுத்தமட்டில் அவை பாதுகாப்பு அற்றவை. ஆட்சியிலுள்ள வர்க்கமானது
தன் உத்தியோகபூர்வமானதும்,
சட்டரீதியானதுமான
வாக்குறுதிகள் பொதுப் பிரகடனங்கள் என்பவற்றிலும் பார்க்க தம் யுத்தக்கள
முயற்சிகளில் தம் போக்கினை மிகத் தெளிவாக வெளிக்காட்டியுள்ளன. சேர்பிய
தொலைக்காட்சி நிலையம் மீதான தாக்குதல் ,
இன்டர்நெட்டை செயலிழக்கச் செய்ய விடுத்த மிரட்டல் என்பவற்றைக் கொண்டு
பார்க்கும்போது இது புரியும்.
நேட்டோ
நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் தகவல் ஊடகம்,
இராணுவ மேல்மட்டம்,
அரசாங்க அதிகாரிகள்
அனைவருக்கும் எரிச்சலூட்டும் வகையில் யுத்த வெறியை வெளிப்படுத்தவே இல்லை.
பெரும்பாலும் பிந்தியகால தேசிய வெறியர்கள் அரச நிறுவனங்களுக்கு உள்ளேயே
செயற்பட்டனர். பொதுமக்கள் மத்தியில் பரவலாக குழம்பிய,
அமைதியற்ற மனநிலையே
காணப்படுகின்றது. இந்த மனநிலை யுத்தத்துக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட
எதிர்ப்பாக கிழம்பவில்லை. எந்த நிறுவனங்களுக்கு மக்கள் தம் விசுவாசத்தை
முன்பு வெளிப்படுத்தினார்களோ அவை,
இந்த
மக்களைஅனாதரவாக விட்ட செயல்பாடே இதற்கு காரணம்.
எந்தப்
பாரம்பரிய அரசியல் கட்சிகள் தம்மைத் தொழிலாளர்களதும் சோசலிசத்தினதும்
காவலனாகக் காட்டிக் கொண்டனவோ அவற்றின் முழுமையான இயலாமையை யுத்தம்
வெளிக்காட்டியுள்ளது. வெறும் ஆதரவாளர்கள் மாத்திரமல்ல தற்போதைய யுத்தத்தை
வழிநடாத்துபவர்களும் சோசலிச,
ஜனநாயக தொழிற்கட்சி,
ஸ்டாலினிசக் கட்சிகள்
மத்தியில் இருந்தே தோன்றியுள்ளனர். முதிர்ச்சிபெற்ற நோக்குனர்களுக்கு அது
ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அத்தகைய நிறுவனங்கள் சந்தைப்
பொருளாதாரத்துக்கும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அடிவருடிகளாகவும்
ஏகாதிபத்திய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்தவர்களாகவும் தம்மை வெகு காலத்துக்கு
முன்பே வெளிக்காட்டிக் கொண்டனர். யுத்தம் அரசியல் சீரழிவுப் போக்கின்
பூரணத்துவத்தையும் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. ஏகாதிபத்தியத்துக்கான ஒரு
நிஜ சோசலிசப் பதிலீடாக இல்லாது போனாலும் மூலதனத்தின் அரசியல்,
பொருளாதாரக்
கோரிக்கைகளுக்கு தடையாக அவர்கள் விளங்கி வந்தனர். இன்று அவர்கள் முற்றிலும்
வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளாக மாறியுள்ளன. இன்னொரு அம்சத்தை இன்னும்
சிறப்பாகச் சொல்வதானால் ஒரு அரசியல் வெற்றிடத்தை யுத்தம் வெளிச்சம்
போட்டுக் காட்டியுள்ளது. சுய அர்ப்பணிப்பும் சமுதாயத்தின் மீது விமர்சனக்
கண்ணோட்டமும் கொண்ட புத்திஜீவிகள் இல்லாமையே அதுவாகும். யுத்தத்தை
நியாயப்படுத்தக் கையாளும் எடுகோள்களையும் வாதவிவாதங்களையும் எடைபோடும்
விமர்சனம் கல்விசார் அறிஞர்கள் மத்தியில் இருந்து தோன்றவில்லை. இணக்கமற்ற
புத்திஜீவிய கருத்துக் கேட்கிறதெனின் அது வலதுசாரிகள் மத்தியில் இருந்தே
வருகின்றது. அது மேலும் உக்கிரமான போர்க் குணக்கொள்கையை வேண்டி
நிற்கின்றது. அரசின் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் அலசி ஆராய்ந்து
பார்த்து,
அதற்கு
எதிர்ப்புக் காட்டிய காலங்களை மக்களின் நினைவில் இருந்து மறைத்துவிட்டன.
இந்த நிலை
எப்படித் தோன்றியது? 20ம்
நூற்றாண்டின் முற்கூற்றில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களுடன்
ஒப்புநோக்கும்போது நாம் நிறையத் தெரிந்துகொள்ள முடியும்.
1914ல்
யுத்தம் வெடித்தமை முழு தொழிலாளர்வர்க்கத் தட்டைச் சேர்ந்த
அதிகாரத்துவங்களும் சமூகஜனநாயகமும் அனைத்து நாடுகளிலும் உள்ள முதலாளி
வர்க்கத்துக்கும் அரசியல் ஆதரவு வழங்கி வந்தன. ஏகாதிபத்திய யுத்தத்துக்கு
எதிரான கொள்கைகளை உத்தியோகபூர்வமாகக் கடைப்பிடித்து வந்த கட்சிகளும்
அரசியல் தலைவர்களும் யுத்தச் செலவீனங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததோடு
தொழிலாளர் வர்க்கம் அரசைப்பேணிக் காக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி
வந்தனர். அவர்களது தீர்மானத்தின் பேரழிவு நிறைந்த பெறுபேறுகள் ஐரோப்பியத்
தொழிலாளர் வர்க்கத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை சகலரும்
அறிவர்.
தொழிற்சங்க
அதிகாரிகளின் ஒரு பகுதியினரும் சமூகஜனநாயகத் தலைவர்களும்
ஏகாதிபத்தியத்துக்கு ஊழல் புரியும் போக்கில் ஈடுபட்டதற்கான
தோற்றப்பாட்டுக்கு லெனின் சடரீதியான விளக்கத்தை கண்டார். காலனிகளை
மிலேச்சத்தனமாக சுரண்டியமையும் அவர்களின் வளங்களை கொள்ளையடித்தமையும்
ஐரோப்பிய முதலாளி வர்க்கம் தனது கொள்ளையில் கணிசமான தொகையை
ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளின் ஏவலுக்கெனத் தொழிற்கட்சித் தலைவர்களுடனும்
பங்கு போட்டுக் கொள்வதைச் சாத்தியமாக்கியது.
சமீப காலத்தில்
இதற்குச் சமமான தோற்றப்பாடு இடம்பெற்றுள்ளது. வியட்நாமின் அனுபவங்களின்
மூலம் தீவிரமயமாக்கப்பட்ட ஒரு முழுத்தட்டினரும்
1968
மே,
ஜூன் பிரான்சிய நிகழ்வுகளும்
1960களின்
பின் கூற்றிலும் 1970பதுகளின்
கடைக்கூற்றிலும் தீவிரம் கண்ட தொழிலாளர்வர்க்கப் போராட்ட நிகழ்வுகள்
என்பவற்றால் சீர்திருத்தவாதத்தை மேற்கொண்டவர்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் காட்டிக்கொண்ட எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டு
மத்தியதரவர்க்க வாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்தி ஒன்றிணைந்து கொண்டனர்.
1990ம்
ஆண்டு பங்குமுதல் சந்தை வளர்ச்சிமூலம் தம் அதிர்ஷ்டங்கள் (வாழ்க்கை
வசதிகள்) உயர்ந்து செல்வதை முன்னைய இந்த சீர்திருத்தவாதிகளின்
பெரும்பான்மையினர் கண்ணுற்றனர். இவர்களின் அரசியல் வாழ்வின்
திடீர்திருப்பமான ஒரு இணைப்பை இந்த பங்குச்சந்தை வளர்ச்சி
ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய யுத்தத்திற்காக வெறிகொண்டு வக்காலத்து
வாங்குபவர்களில் சிலர் இந்தத் தட்டில் இருந்தே ஈர்க்கப்பட்டுள்ளனர்.
உண்மையில் இந்த
செல்வம் திருடும் போக்கானது தீவிரவாத அரசியலின் வரலாற்றுடன் மட்டும்
கட்டுண்டு போய்விடவில்லை. மேலே சுட்டிக்காட்டியதுபோல் வீதாசார ரீதியில் ஒரு
சிறிய தட்டினர் செல்வம் ஈட்டிக்கொண்டனர். ஆனால் இது ஒரு கணிசமான அளவு
எண்ணிக்கையிலான முக்கியமான தனியாட்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு சதவீதத்தினர் அதனது செல்வத்தில்
40
வீதத்தை உரிமையாக்கிக் கொண்டுள்ளனர். இது இருபது இலட்சத்துக்கும்
அதிகமானவர்கள் வானளாவிய மட்டத்திலான வாழ்க்கைத் தரங்களை அனுபவிப்பதைக்
காட்டிக் கொண்டுள்ளது. இவர்களுக்கு அடுத்ததாக இதற்கு மேலதிகமாக கடந்த
இருபது ஆண்டுகளாக சனத்தொகையின் பத்து தொடக்கம் இருபது வீதத்தினர் தமது
அதிர்ஷ்டங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளதை கண்டுள்ளனர். இத்தகைய
புள்ளிவிபரங்களை மற்றும் பல முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும்
பட்டியலிட்டுக் கூறமுடியும்.
இந்தச்
செல்வந்தர் தட்டில் இருந்தே உத்தியோகபூர்வமான கட்சிகளின் அரசியல்
தலைவர்களும் வெகுஜனத்தொடர்புச் சாதனங்களும் பெரும்தொகையான கல்வியாளர்களும்
தோன்றியுள்ளனர். இந்த செல்வத் திரட்சியானது யுத்த முயற்சிக்கு அரசியல் பலம்
வழங்கவும் ஆளும் தட்டினரிடையே தனது விரிவாக்கத்துக்கான கோரிக்கைகளை
ஊக்குவிக்கச் செய்துள்ளது.
எவ்வாறெனினும்
வோல்ஸ்ரீட் செழிப்பானது ஒரு இருபக்கப் போக்கினைத் தரிசித்துள்ளது.
பங்குகளின் பெறுமானத்தின் அதிகரிப்பானது புதிய ஆட்சியாளர்களை சிக்கனக்
கொள்கையை ''உழைப்பு
ஈய்ந்து கொடுப்பையும்'' (பாதுகாப்பற்ற
தொழில்) உலகம் பூராவும் உள்ள ஏகாதிபத்திய மையங்களில் உழைக்கும் மக்களை
மேலும் மோசமாகச் சுரண்டும்படியும் கடைப்பிடிக்கும் படியும் கோரியது.
1980களிலும்
1990களிலும்
புதிய செல்வந்தர்கள் உருவானமை ஏகாதிபத்தியத்துக்கு புதிய வாக்காளர்களைச்
சிருஷ்டித்தது போலவே அது அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தினுள்
முதலாளித்துவ எதிர்ப்பு,
ஏகாதிபத்திய
எதிர்ப்பு இயக்கத்துக்கு பெரும் தொகையான பார்வையாளர்களையும் நிர்மாணித்தது.
உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் அபிவிருத்தியும் முன்னேறிய முதலாளித்துவ
நாடுகளில் பெரும்பாலானவற்றில் வாழ்க்கைத்தரத்தின் வீழ்ச்சியும் இளைஞர்களின்
எதிர்கால எதிர்பார்ப்புக்களின் வீழ்ச்சியும் புறநிலை ரீதியாக ஒரு புரட்சிகர
சமூக மாற்றத்தின் இயக்கத்துக்கு இட்டுச் செல்கின்றது.
இந்தப்
புறநிலைச் சாத்தியங்கள் ஒரு நனவான அரசியல் சக்தியாக மாற்றமடைவதற்கான அரங்கு
நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இன்று அவசியப்படுவது என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக
தொழிலாளர்,
புத்திஜீவிகள்,
இளைஞர்களை இத்தகைய ஒரு புரட்சிகர இயக்கத்தின் உட்கருவாகக் கொண்ட
சக்திகளிடையே சோசலிசத்துக்கான போராட்டம் அவசியமாகியுள்ளது. மார்க்சிசத்தை
அதன் பிற்போக்கு எதிரிடையான ஸ்ராலினிசத்துடன் போட்டு குழப்பியடித்ததால்
உருவாக்கப்பட்டுள்ள தடுமாற்றம் அரசியல் போதனை மூலம் தெளிவுபடுத்தப்பட
வேண்டும்.
இன்றைய
அமைப்பினை நினைவில் இருத்த நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொழிற்படும் சகல
சிந்தனாமுறைகளுக்கும் எதிராக ஒரு போராட்டம் இடம்பெறவேண்டும். இம்முயற்சிகள்
அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றிணைந்த சோசலிச அரசியல் கட்சியினைக்
கட்டி எழுப்புவதனூடாக அதன் உச்சக்கட்டத்தில் வெளிப்பாடாக வேண்டும்.
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் குரலான உலக சோசலிச வலைத்தளம் (WSWS)
இப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. |