தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Obama, Castro move to “normalize” US-Cuba ties ஒபாமா மற்றும் காஸ்ட்ரோ அமெரிக்க-கியூபா உறவுகளைச் "சீராக்க" நகர்கின்றனர்
By Bill Van Auken Use this version to print| Send feedback புதனன்று மதியம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவினால் ஒரேநேரத்தில் அளிக்கப்பட்ட உரைகள், காஸ்ட்ரோ ஆட்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஒரு நீண்ட கால நல்லிணக்கத்திற்கான தேடலாக இருந்து வந்த விடயத்தில், ஒரு வரலாற்று திருப்புமுனையைக் குறித்தன. வாஷிங்டனும் ஹவானாவும் முழுமையான தூதரக உறவுகளை மீளிருப்பு செய்யும் என்றும், CIAஇன் தோல்வியில் முடிந்த பிக்ஸ் வளைகுடா படையெடுப்புக்குச் சற்று முன்னதாக, அத்தீவிலிருந்த அமெரிக்க உடைமைகளை கியூப அரசு தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து, ஜனவரி 1961க்குப் பின்னர் முதல்முறையாக அவை தூதர்களைப் பரிமாறிக் கொள்ளுமென்றும் அவ்விரு ஜனாதிபதிகளும் அறிவித்தனர். அத்துடன் கூடுதலாக, கியூபாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதார தடைகளைப் பகுதியாக தளர்த்துவதாகவும் ஒபாமா அறிவித்தார். "தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு நாடு" என்ற கியூபாவின் அந்தஸ்தை வெளியுறவுத்துறை மறுஆய்வு செய்யுமென்றும் அவர் தெரிவித்தார், அது நிஜமான உறைவை விசித்திரமாக தலைகீழாக்கியதாகும், கியூபாவின் ஒரு பயணிகள் விமானத்தைத் தரையிறக்கியதுடன், ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்த ஹோட்டல் குண்டுவீச்சுக்கள் மற்றும் ஏனைய தாக்குதல்களை நடத்திய குற்றங்களுக்காக நாடுகடத்தப்பட்டிருந்த கியூப பயங்கரவாதிகளை அமெரிக்கா ஆதரித்து, பாதுகாப்பு அளித்தது. அவ்வாறு முத்திரைக் குத்துவது, அமெரிக்க நிதியியல் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகிறது. அமெரிக்க காங்கிரசால் இயற்றப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படி பொருளாதார தடை நடைமுறையில் இருக்கின்ற அதேவேளையில், அவை நடைமுறைபடுத்தப்பட்டுள்ள ஒரு சில முக்கிய துறைகளில் அவற்றைத் தளர்த்துவதற்கு ஒபாமா கூடுதல் அதிகாரத்தை உபயோகித்து வருகிறார். அமெரிக்க பிரஜைகள் கியூபாவிற்கு பயணிப்பது மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன, கியூப நாட்டு புலம்பெயர்ந்தோர் கியூபாவிற்கு அனுப்பும் தொகை கணிசமான அளவுக்கு (ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 500 டாலரிலிருந்து $2,000 டாலராக) உயர்த்தப்பட உள்ளது. இதர அமெரிக்க பிரஜைகளும் இது போன்று நிதியளிக்க அனுமதிக்கப்படுவார்கள். அமெரிக்க பயணிகள் முதல் முறையாக அமெரிக்க வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் அட்டைகளை உபயோகிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதற்கு கூடுதலாக, வங்கியியல் உறவுகளும் விரிவாக்கப்படும். கியூபாவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை அளிக்க தொலைதொடர்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யவும், மற்றும் "உள்கட்டமைப்பு உட்பட அவசியமான இயந்திரமுறைகளை ஸ்தாபிக்கவும்" அமெரிக்க நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். "வளர்ச்சி அடைந்துவரும் கியூப தனியார் துறையை மேம்படுத்துவதற்காக", கட்டிட பொருட்கள், விவசாய உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களை நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் "அரசாங்கத்திடமிருந்து அதிக பொருளாதார சுதந்திரமும்" அளிக்கப்படும். கியூப அரசாங்கத்தை தூக்கியெறியவும் மற்றும் அதன் தலைவர்களைப் படுகொலை செய்யவும் அடுத்தடுத்து வெற்றிபெற்று வந்த நிர்வாகங்கள், சிஐஏ மற்றும் பெண்டகனின் ஓர் ஒருங்கிணைந்த மற்றும் நீண்டகால முயற்சியின் பாகமாக அந்த கரீபிய தீவு நாட்டின் மீது தண்டிக்கும் ஒரு பொருளாதார தடைகளை விதித்தும், ஹவானாவுடன் வாஷிங்டன் தூதரக உறவுகளை முறித்துக் கொண்டும், அரைநூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்குப் பின்னர், இத்தகைய நகர்வுகள் அரங்கேறுகின்றன. அமெரிக்க இலாப நலன்களுக்கு எதிராக கியூப புரட்சியால் முன்னெடுக்கப்பட்ட உபாயங்கள் மீது அமெரிக்காவிற்கு இருக்கும் கோபம் தணிந்துவிடவில்லை. அவற்றை நேர்மாறாக ஆக்கவே ஒரு புதிய உத்தியை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. கியூபாவின் 1959 புரட்சிக்கு தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோவும், அவரது தம்பி ராவுலும் தப்பிப்பிழைத்துள்ள தந்திரோபாயங்களிலிருந்து, அமெரிக்க நிர்வாகத்தின் பதினோராவது தலைமையாக விளங்கும் ஒபாமா, இந்த மாற்றத்தை சமிக்ஞை செய்து அறிவித்தார், “ஐந்து தசாப்த காலமாக அதே விடயத்தை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை, ஒரு மாறுபட்ட விளைவை எதிர்பார்க்கிறேன்," என்றார். "கியூபாவில் ஐனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை" வாஷிங்டன் தொடர்ந்து கண்காணிக்கும் என்பதை ஒபாமா வலியுறுத்தினார். அதன்மூலம் ஓர் அமெரிக்க கைப்பாவை ஆட்சியைக் கொண்டு வருவதையும் மற்றும் 55 ஆண்டுகளுக்கு முன்பு சர்வாதிகாரி ஃபெல்சென்சியோ பாடிஸ்டா (Fulgencio Batista) ஆட்சியின் கீழ் அனுபவித்த உறவு முறையை மீளமைவு செய்வதையும் அவர் குறிப்பிடுகிறார். கியூப ஆட்சியை நிலைகுலைக்கும் குறிக்கோளுடன் அமெரிக்க முகமைகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஒன்றில் சம்பந்தப்பட்டு இருந்ததற்காக, ஐந்து வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த USAID ஒப்பந்ததாரர் ஆலன் க்ராஸை கியூப அரசாங்கம் விடுவிப்பதுடன் சேர்ந்து, நல்லிணக்கத்தின் அலங்கார வேலையாக சிறைக்கைதிகளின் பரிவர்த்தனை நடந்தேறியது. அத்தீவில் அமெரிக்க-நிதியுதவியுடன் நடந்த "அதிருப்தி" இயக்கத்துடன் தொடர்புபட்ட 53 கியூபர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முக்கிய சிஐஏ உளவுத்துறை "உடைமை" என்று வர்ணிக்கப்பட்ட பெயர் வெளியிடப்படாத ஒரு கியூப பிரஜையும் விடுவிக்கப்பட்டார். அதன் தரப்பிலிருந்து வாஷிங்டன், கியூப உளவுத்துறை அதிகாரிகளான "கியூப ஐவரில்" (Cuban Five) எஞ்சிய மூன்று உறுப்பினர்களை விடுவித்தது, அத்தீவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி இருந்த பயங்கரவாத குழுக்களைக் கண்காணிக்க அவர்கள் புளோரிடாவின் மியாமிக்கு அனுப்பப்பட்டு இருந்தபோது, அங்கே 1998இல் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அவருடைய உரையில் ராவுல் காஸ்ட்ரோ அந்த மூன்று நபர்களின் விடுவிப்பை உயர்த்திக் காட்டினார், கடந்த 15 ஆண்டு காலமாக அம்மூவரது விடுதலை தான் சர்வதேச மற்றும் நாடு தழுவிய பிரச்சாரத்திற்குரிய பொருளாக இருந்ததாக அவர் தெரிவித்தார். ஒரு முன்னுரையை தொடர்ந்து, அதில் அவர் கியூபாவின் "தேசிய சுதந்திரம் மற்றும் சுயநிர்ணயத்திற்கு" மற்றும் "ஒரு வளமான மற்றும் நிலையான சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கு" அவருடைய அர்ப்பணிப்பை உறுதிப்படுத்திய பின்னர், கியூப ஜனாதிபதி கூறுகையில், சிறையில் இருந்த கியூபர்களை ஒபாமா விடுவித்தமை "எமது மக்களை மதிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும் உரியதாகும்" என்று தெரிவித்தார். அவரது உரையின் பாதியளவைக் கடந்த பின்னர் தான் காஸ்ட்ரோ தூதரக உறவுகள் மீண்டும் திறக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டார், இருந்தபோதினும் எச்சரிக்கையோடு, “இது எந்த வகையிலும் இதயதானத்தில் உள்ள பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது என்பதை அர்த்தப்படுத்தாது. நமது நாட்டுக்கு மிகப் பெரிய அளவிலான உயிரிழப்புகளை மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் பொருளாதார, வணிக மற்றும் நிதியியல் தடைகளை நீக்க வேண்டும்,” என்றவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அமெரிக்க ஜனாதிபதியால் அவரது கூடுதல் அதிகாரங்களை பிரயோகிப்பதன் மூலமாக, அதன் பயன்பாட்டை மாற்றியமைக்க முடியும்,” என்றார். பிந்தைய வார்த்தைகளின்படி கியூபா ஏறத்தாழ ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அது சேர்ந்து கொள்ள முயற்கிறது என்பதே உண்மையாகும். அந்த கூட்டு அறிக்கை, கனடா மற்றும் வத்திக்கானால் இடைத்தரகு செய்யப்பட்டு, 18 மாதங்களுக்கு அதிகமான இரகசிய பேச்சுவார்த்தைகளின் விளைபொருளாக இருந்தது. போப் பிரான்ஸிஸ் "அந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்காக உற்சாகமான வாழ்த்துக்களை" வெளிப்படுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அத்துடன் அத்தீவில் அதன் இழந்த செல்வாக்கையும் சொத்துக்களையும் அதனால் மறுபடியும் ஈட்ட முடியும் என்ற ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக, ஹவானா மற்றும் ஏனைய நகரங்கள் முழுவதும் தேவாலய மணிகள் ஒலிக்கப்பட்டன. கியூப அரசாங்கம் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை தீவிரமாக பின்பற்றி இருந்த நிலையில், மிகவும் அடிப்படையாக, இந்த மாற்றங்கள் குறைந்தபட்சம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கியூப அரசாங்கத்தால் பின்பற்றப்படும் கொள்கைகளுடன் பிணைந்துள்ளது. அதேநேரத்தில் அன்னிய முதலீட்டை மற்றும் தனியார்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் பல தொடர்ச்சியான நடவடிக்கைகளை அது அறிமுகப்படுத்தி உள்ளதுடன், அதேவேளையில் கியூப புரட்சி மூலமாக வென்றெடுத்த சீர்திருத்தங்களை திரும்ப பெற்று வருகிறது. அரசுதுறையில் வேலைகளின் அழிப்பு, கியூபாவின் அன்னிய முதலீட்டு சட்டத்தின் தீவிர திருத்தம் மற்றும் 180 சதுர மைல் அளவில் சீன பாணியில் "சிறப்பு பொருளாதார மண்டலத்துடன்" மேரியலில் ஒரு மிகப் பெரிய புதிய துறைமுகத்தை திறந்திருப்பது ஆகியவையும் இதில் உள்ளடங்குகிறது. ஹவானா அன்னிய முதலீட்டாளர்களுக்கு நிறுவனங்களுக்கு முழு உரிமையை, வரி விலக்குகளை வழங்குவதுடன், மற்றும் தொழிலாளர் ஒப்பந்ததாரராக அரசே முக்கிய பாத்திரம் வகிப்பதுடன், அரசுத்துறை-ஒழுங்கமைப்பில் பயின்ற ஒரு மலிவு தொழிலாளர்களையும் வழங்கி வருகிறது. அமெரிக்க தரப்பிலிருந்து, பெரு வணிக நலன்கள் அவர்களின் ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டியாளர்களுக்கு கியூபாவில் பெரும் இலாபத்தை ஈட்டியளிப்பதாக பார்க்கும் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வர ஆக்ரோஷமாக அழுத்தம் அளித்து வந்துள்ளன. கடந்த மே மாதம் தான், காஸ்ட்ரோ ஆட்சியின் "சீர்திருத்தங்களையும்" மற்றும் கியூபாவில் முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் மதிப்பிட அமெரிக்க வர்த்தக சபை ஒரு டஜனுக்கும் அதிகமான பெருநிறுவன செயலதிகாரிகளின் ஒரு குழுவை அத்தீவுக்கு அனுப்பியது. மிகப்பெரிய அளவிலான அமெரிக்காவின் புவிசார் மூலோபாய நோக்கங்களும் உறவுகளில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், ஏறக்குறைய அனைவரிடத்தும் அந்த தடைகளுக்கு இருக்கும் எதிர்ப்புடன், கியூபா மீதான வாஷிங்டனின் கொள்கை அமெரிக்காவை தனிமைப்படுத்த சேவை செய்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, ஹவானாவிற்கும் ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையே—இவை இரண்டுமே அதிகரித்துவரும் அமெரிக்க இராணுவ அச்சுறுத்தலின் முக்கிய இலக்கில் வைக்கப்பட்டிருப்பவை ஆகும்—ஸ்தாபிக்கப்பட்ட நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. பராக் ஒபாமா மற்றும் ராவுல் காஸ்ட்ரோவின் கூட்டு அறிக்கைகள் வரலாற்று சிறப்புமிக்கவையாக உள்ளன என்றால், அது குறைந்தபட்சமாக அல்ல ஏனென்றால், கியூபா புரட்சி மற்றும் காஸ்ட்ரோ அரசாங்கம் சோசலித்திற்கு ஏதோவொரு வித புதிய பாதையை பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற பிரமையை வளர்ப்பதற்கு, இலத்தீன் அமெரிக்க குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளின் மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஏனைய இடங்களில் உள்ள போலி இடது உட்கூறுகளின் நீண்டகால முயற்சி இருந்து வந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான புரட்சிகர தலையீடு இல்லாமல், அதற்கு மாறாக ஆயுதமேந்திய கெரில்லாக்களால் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்ட குட்டி-முதலாளித்துவ தேசியவாத ஆட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சோசலிசமாக கூறப்பட்டு வந்தது. சோவியத் ஒன்றியம் பக்கம் திரும்பியதன் மூலம் காஸ்ட்ரோவின் அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரோதம் மற்றும் ஆக்ரோஷத்தை எதிர் கொண்டது, அந்தவொரு பாஸ்டியன் பேரம்பேசல் 1991இல் மாஸ்கோ அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்புடன் பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவில் போய் முடிந்தது. சமீபத்திய ஆண்டுகளில், கியூப அரசாங்கம் வெனிசூலாவிலிருந்து கிடைக்கும் கருணை மானியங்களை நம்பியுள்ளது, வெனிசூலாவோ இப்போது வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணைய் விலைகளால் ஆழமான இடர்பாட்டுக்குள் நிறுத்தப்பட்டு வருகிறது. கியூப உழைக்கும் மக்களை விலையாக கொடுத்து அதன் சொத்து மற்றும் தனிச்சிறப்புரிமையை பராமரிக்கவும் விரிவுபடுத்தவும், அதன் சீன சமதரப்பால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதார அமைப்பு வகையை அதனால் எதிரொலிக்க முடியுமென கியூப தலைமையின் நம்பிக்கையுடன், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கி நேரடியாக தன்னைத்தானே திருப்பி வருகிறது. இத்தகைய முயற்சிகளும், அத்தீவில் அதிகரிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி தலையீடும், கியூபாவிற்குள் புதிய புரட்சிகர வெடிப்புகளுக்கான நிலைமைகளைத் தோற்றுவித்து, ஏற்கனவே வேகமாக அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க பதட்டங்களை தவிர்க்கவியலாமல் இன்னும் வேகப்படுத்தும். |
|
|