சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Leaked phone call on Ukraine lays bare Washington’s gangsterism

உக்ரேன் குறித்து வெளியான தொலைபேசி அழைப்பு வாஷிங்டனின் காடைத்தனத்தை அம்பலப்படுத்துகிறது

Bill Van Auken
10 February 2014

Use this version to printSend feedback

ஐரோப்பா மற்றும் யூரேஷியாவிற்கான மூத்த அரசு அதிகாரி விக்டோரியா நூலாந்துக்கும் மற்றும் உக்ரேனுக்கான அமெரிக்க தூதர் ஜோஃப்ரி பயாட்டிற்கும் இடையிலான ஒரு தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவு மீது அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு மிகக் குறைந்த ஆர்வம் காட்டியுள்ளன. அது கடந்த வியாழனன்று யூ-டியூப்பில் வெளியிடப்பட்டு, சர்வதேச சர்ச்சை தொடங்குவதற்குரிய விடயமாக மாறியிருந்தது.

வெளியாகி இருக்கும் அந்த ஒலிப்பதிவில் உள்ளவற்றில் பிரதானமாக முன்னுக்கு வந்திருப்பது என்னவென்றால், சுமார் மூன்று மாதங்களாக உக்ரேனில் நிலவிவரும் நெருக்கடியில் வாஷிங்டனின் ஐரோப்பிய கூட்டாளிகளால் வகிக்கப்பட்டு வரும் பாத்திரம் மீதான அதன் மனோபாவத்தைக் குறிப்பிடுகையில், செல்வி. நூலாந்தின் கேள்விக்கிடமின்றி இராஜாங்கரீதியில் அல்லாத Fuck the EU என்ற வார்த்தை பிரயோகமாகும். ஒரு தனிப்பட்ட உரையாடலை பொதுப்படையாக ஒலிபரப்பியது "முன்பில்லாத அளவிற்கு ரஷ்யாவின் மிகத் தாழ்ந்த வியாபார-திறமையாகும்" என்று குற்றஞ்சாட்டியதன் மூலமாக அந்த சச்சரவைத் தலைகீழாக திருப்புவதற்கான அரசு துறையின் சொந்த முயற்சியையே, ஊடகங்களின் வேறு கோணம் அந்த விவகாரத்தில் கடமை உணர்ச்சியோடு எதிரொலித்துள்ளது.

அவ்வாறு கசிந்ததற்கு மாஸ்கோ தான் பொறுப்பாகுமென்ற அமெரிக்க குற்றச்சாட்டை ரஷ்ய அரசு பலமாக மறுத்துள்ளது. அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கான மக்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுபார்த்த ஓர் அரசாங்கமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிடம் இருந்து வரும் இந்த குற்றச்சாட்டு, எவ்விதத்திலும், சிறப்பானதல்ல.

நூலாந்து மற்றும் பயாட்டிற்கு இடையில் நடந்த தொலைபேசி உரையாடலின் நிஜமான அரசியல் முக்கியத்துவம் பெரிதும் மறைக்கப்பட்டுள்ளது. அந்த உரையாடல் எடுத்துக்காட்டுவதைப் போல, உக்ரேனில் அமெரிக்க கொள்கையின் குற்றஞ்சார்ந்த ஏகாதிபத்திய குணாம்சம் பேரழிவுகரமாக வெளிப்படுவதும் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் கபடத்தனமான "ஜனநாயக" பாசாங்குகள் அம்பலப்படுவதும் ஏதோ திடீர் நிகழ்வல்ல.

கடந்த மாதம் அவரது காங்கிரஸ் உரையில் ஒபாமா அறிவித்தார்: உக்ரேனில், அனைத்து மக்களுக்கும் தங்களைச் சுதந்திரமாக மற்றும் அமைதியாக வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என்பதிலும் மற்றும் நாட்டின் எதிர்காலம் மீது கருத்துக்கூற அவர்களுக்கு உரிமை உள்ளதென்ற கோட்பாட்டிலும் நாம் நிற்கிறோம், என்றார்.

எவ்வாறிருந்த போதினும், அந்த ஒலிப்பதிவு எதைத் தெளிவுபடுத்துகிறதென்றால், அமெரிக்க புவிசார் மூலாபாய நலன்களுக்கு முழுமையாக அடிபணிந்த ஓர் ஆட்சியை நிறுவுவதை நோக்கமாக கொண்ட ஓர் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த, வன்முறை உட்பட, சர்வதேச காடைத்தனத்தின் அனைத்து முறைகளையும் வாஷிங்டன் பயன்படுத்தும் என்பதையே ஆகும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் சிலி மற்றும் அர்ஜென்டெனா போன்ற நாடுகளில் அமெரிக்காவினால் ஒத்து ஊதப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புகளோடு அல்லாமல், ஜனநாயகத்தோடு இந்த நடவடிக்கைக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

1991இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பாகமாக அரசு சொத்துக்களை தனியார் கைப்பற்றியதில்திருடியதில்இருந்து தங்களைத்தாங்களே செல்வசெழிப்பாக்கி கொண்ட மேற்கத்திய தரப்பின் வரிசையில் நிற்கும் உக்ரேனிய செல்வந்த தட்டுக்களின் ஒரு கூட்டத்தின் கரங்களுக்குள் அரசியல் அதிகாரத்தை மாற்றுவதே அமெரிக்க முயற்சியின் துல்லியமான நோக்கமாகும். இவ்வாறு செய்வதன் மூலமாக, ரஷ்ய எல்லையின் மிக நெருக்கத்தின் உள்ள உக்ரேனை ஓர் அமெரிக்க ஏகாதிபத்திய நுழைவுத்தளமாக மாற்ற திட்டமிடுகிறது. மேலும் யூரேஷியாவின் மூலோபாய நிலப்பகுதி முழுவதிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் உந்துதலின் பாகமாக ரஷ்ய பிராந்தியத்தை பிளவுபடுத்த மற்றும் நவகாலானித்துவ அந்தஸ்திற்கு அதை அடிபணிய செய்ய அது விரும்புகிறது.

நூலாந்து-பயாட் (Nuland-Pyatt) உரையாடல் இந்த திட்டத்தின் அங்கிங்குமாக சில விடயங்களைக் கொண்டுள்ளது. ரஷ்ய-விரோத உக்ரேனிய தேசியவாதத்தை தீவிரப்படுத்துவதில் மற்றும் ஜனாதிபதி விக்டோர் யானுகோவிச் அரசாங்கத்திற்கு எதிராக ஓர் அச்சுறுத்தும் கருவியாக (திமிசுக்கட்டையாக) சேவை செய்யும் தீவிர வலது அரசியல் சக்திகளுக்கு உதவுவதில் அவர்கள் சம்பந்தப்படுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒன்றுபடுவதை நோக்கி திரும்பாமல், ரஷ்யாவுடனான ஓர் உடன்பாட்டை நோக்கி திரும்புவதென்ற உக்ரேனிய ஜனாதிபதியின் திருப்பமே ஆட்சி மாற்றத்திற்காக செய்யப்படும் தற்போதைய பிரச்சாரத்திற்கான தூண்டுபொறியாகும்.

வாஷிங்டனுக்குப் பின்னால் சுழல்வதில், முக்கிய மூன்று" என்று குறிப்பிடப்படும் மூன்று எதிர்தரப்பு தலைவர்களில் யார் அரசு ஏற்க வேண்டும் மற்றும் மற்றவர்கள் என்ன பாத்திரம் வகிக்க வேண்டுமென்பதை திரைக்குப் பின்னால் வாஷிங்டன் கட்டளையிட்டு வருகிறது என்பதை நூலாந்து தெளிவுபடுத்துகிறார். 2004இல் வாஷிங்டனால் ஒத்து ஊதப்பட்ட ஆரஞ்ச் புரட்சி என்றழைக்கப்படுவதால் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்ட பலவீனமான அரசில் வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரியாக மற்றும் பொருளாதார மந்திரியாக சேவையாற்றிய தந்தை நாட்டுக் (Fatherland) கட்சியின் அர்செனி யாட்சென்யுக் (Arseniy Yatsenyuk) துணை வெளியுறவு செயலரால், "இவர் தான் பொருளாதார அனுபவமும், ஆட்சி செலுத்தும் அனுபவமும் பெற்றுள்ளார்" என்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யானுகோவிச்-விரோத போராட்டக்காரர்களில் இரண்டு முக்கிய வலதுசாரி தலைவர்கள்சீர்திருத்தங்களுக்கான உக்ரேனிய ஜனநாயக கூட்டணி அல்லது Udar (குத்து" என்பதன் சுருக்கம்) தலைவரும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான விடாலி க்லெட்ஸ்ச்கோ, மற்றும் நவ-பாசிச ஸ்வோபோடா கட்சியின் தலைவர் ஓலெஹ் தியாஹ்ன்பொக் ஆகியோர்வலதுசாரி கும்பலை தொடர்ந்து தூண்டிவிட, "வெளியில்" இருக்கிறார்கள் என நூலாந்து பரிந்துரைக்கிறார்.

நூலாந்தும் மற்றும் தூதரும் அந்த இரண்டு பிரபலங்களையும் "Yats மற்றும் "Klitsch என்று குறிப்பிடுகின்றனர். பொதுவாக செல்ல நாய்க்குட்டிகள் இந்த வகையிலான பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

கீவ்விற்கான அவரின் சமீபத்திய விஜயத்தின் போது (அது தொலைபேசி அழைப்பு கசிந்த சமயத்தோடு சரியா பொருந்தி இருந்தது) நூலாந்து பதிவு செய்யப்பட்ட உரையாடலில் குறிப்பிட்டிருந்த மூன்று எதிர்தரப்பு தலைவர்களை, அதாவது "Yats, Klitsch ஆகியோரை மற்றும் மைதான் சதுக்கத்தில் வன்முறை போராட்டங்களை ஒழுங்கமைப்பதில் தீர்க்கமான பாத்திரம் வகித்து வரும் ஒருவரான ஸ்வோபோடா தலைவர் தியாஹ்ன்பொக்கைச் சந்தித்ததோடு, பொதுவிடத்திலும் அவர்களோடு பகிரங்கமாக காட்சி அளித்தார்.

மாஸ்கோ-யூத மாஃபியாக்கள் ஆளும் உக்ரேனில்" அச்சங்களைத் தூண்டியமைக்காக மற்றும் "கீக்ஸ் (kikes) மற்றும் ஏனைய இழிந்த" ரஷ்யர்கள், ஜேர்மனியர்களுக்கு எதிராக போராடியதற்காக இரண்டாம் உலக யுத்த-கால உக்ரேனிய பாசிசவாதிகளை புகழ்ந்ததற்காக அவரது சீடர்களைப் பாராட்டியதோடு, வெறியூட்டும் யூத-விரோத உரைகளை நிகழ்த்தியமைக்காக தியாஹ்ன்பொக் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கடந்த ஆண்டு தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறிருந்த போதினும், இது நூலாந்தை தடுத்துவிட வில்லை.

ஜாரிச ரஷ்யாவின் படுகொலைகளில் இருந்து தப்பிக்க அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த யூதர்களின் பேத்தியான நூலாந்து, டிசம்பர் 2013இல் உக்ரேனுக்கான அவரின் முந்தைய விஜயத்தின் போது, பாரிய ஹிட்லர் இராணுவ படுகொலையாளர்களை பூஜிக்கும் ஸ்வோபோடா குண்டர்களுக்கு மைதான் சதுக்கத்தில் சில சிற்றுண்டிகளை அளித்து, காணக்கிடைக்காத ஒரு ஈடு இணையற்ற காட்சியை வழங்கினார்.

புஷ் நிர்வாகத்தின் குற்றங்களில் இருந்து ஒபாமாவின் கீழ் அந்த குற்றங்கள் ஆழமடைந்தது வரையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியை நூலாந்து போற்றுகிறார். டிக் சென்னி அப்போதைய துணை ஜனாதிபதியாக இருந்த போது வெளிநாடுகளின் மீது வலிந்துதாக்கும் யுத்தம், சரணடைய செய்தல் மற்றும் சித்திரவதை ஆகியவற்றிற்கான கொள்கைகளை முன்னெடுத்திருந்த போது மற்றும் உள்நாட்டில் ஒரு பொலிஸ் அரசின் உள்கட்டமைப்பைக் கட்டி வந்த போது, அவரின் ஒரு மூத்த வெளியுறவு கொள்கை ஆலோசகராக நூலாந்து சேவை செய்து வந்தார்.

அவருடைய கணவர் ரோபர்ட் காகன் வலதுசாரி வெளியுறவு கொள்கை வல்லுனராவார். அவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தங்களுக்கான அரசியல் மற்றும் சித்தாந்த தயாரிப்புகளில், ஒரு முக்கிய பாத்திரம் வகித்த நவ-பழமைவாத வாஷிங்டன் சிந்தனை கூடமான புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம் (Project for a New American Century) என்பதன் ஸ்தாபக தலைவராக சேவை செய்தார்.

இன்று நூலாந்து, அணுஆயுதம் கொண்ட ரஷ்யாவிற்கு நெருக்கமான எல்லைகளின் மீது அதேமாதிரியான கொள்கையை ஊக்குவிக்கிறார். இதைச் சுற்றியுள்ள பதட்டங்கள் "Fuck the EU என்ற கருத்துக்களில் பிரதிபலிக்கிறது. ஜேர்மனியின் தயங்குவதால், அதன் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்தொடர வாஷிங்டன், குறைந்தபட்சம் மாஸ்கோவுடன் ஒரு நேருக்குநேர் மோதலுக்குப் போகும் புள்ளி வரையில், அதிகளவில் பொறுமையிழந்து வருகிறது.

இப்போது வரையில், அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்ரோஷ கொள்கை பல்வேறு போலி-இடது உட்கூறுகளின் ஆதரவை அனுபவித்து வருகிறது. பின்நவீனத்துவ பிரஸ்தாபி ஸ்பாவோஜ் ஜிஜெக் (Slavoj Zizek) முதல் சர்வதேச சோசலிச அமைப்பு வரையில், அவை, ஜனநாயகம் மற்றும் மனிதாபிமானத்தின் ஒட்டுமொத்த முழக்கங்களை உட்கிரகித்து கொண்டுள்ளன. வாஷிங்டனின் சூழ்ச்சிகளை ஒருமுறை கூட குறிப்பிடாமல், உக்ரேனில் நடந்துவரும் சம்பவங்களின் மீது ஒரு நீண்ட அறிக்கையை சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பால் பிரசுரிக்க முடிகிறது.

வாஷிங்டனின் கொள்ளி வைக்கும் கொள்கை உக்ரேனில் ஓர் உள்நாட்டு யுத்த அபாயத்தை முன்னிறுத்துவதோடு, ஓர் உலகளாவிய மோதலுக்கான அபாயத்தை அதிகரித்துள்ளது. யானுகோவிச்சின் கீழ் அல்லது உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதில் உடன்பட்டுள்ள போட்டி கன்னை செல்வந்த மேற்தட்டுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவரது வலதுசாரி எதிர்பாளர்களின் அணியின்கீழ், உக்ரேனிய தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியாது. சமரசமற்ற முறையில் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் மற்றும் ரஷ்யா, ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களின் போராட்டங்களோடு ஐக்கியப்பட உறுதிபூண்ட, தங்களின் சொந்த சுயாதீனமான சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே தொழிலாளர்களால் ஒரு முன்னோக்கிய பாதையைக் காண முடியும்.