சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

One Belt, One Road: China’s response to the US “pivot”

ஒரே இணைப்பு, ஒரே பாதை: அமெரிக்காவின் "முன்னிலைக்கு" சீனாவின் பிரதிபலிப்பு

By Peter Symonds
4 December 2015

Use this version to printSend feedback

ஆசியாவின் கடந்த மாத இரண்டு உயர்மட்ட ஒன்றுகூடல்களில்ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு (Asia Pacific Economic Cooperation -APEC) மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில்அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, எல்லாவிதத்திலும் சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்டிருந்த பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (Trans Pacific Partnership -TPP) மூலமாக ஒரு பொருளாதார அணியை பலப்படுத்தியும் மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் இராணுவ உறவுகள் மற்றும் கூட்டணிகளைக் கொண்டும், அவரது "ஆசியாவை நோக்கிய முன்னிலை" நிகழ்ச்சிநிரலுக்கு அழுத்தமளிக்க, தென் சீனக் கடலின் கடல் போக்குவரத்து பிரச்சினைகளை மீண்டும் கையிலெடுத்தார்.

அந்த "முன்னிலை" உத்தியோகபூர்வமாக 2011 இல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கூட, ஒபாமா நிர்வாகம், உலகளாவிய பொருளாதார முறிவு ஆழமடைந்து வந்ததற்கு விடையிறுப்பாக, வளர்ச்சி அடைந்துவரும் சீனாவால் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல் முன்னிறுத்தப்படுவதை உணர்ந்து அதை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மீது அதன் கவனத்தை ஒருமுகப்படுத்த தொடங்கியது. சீனா, வெறுமனே அதன் பரந்த பொருளாதார உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டு, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அமெரிக்க மேலாதிக்கத்தின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வெட்டி வருகிறது.

சீனாவை விலக்கி வைத்த பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையையும் (TPP) மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் ஒரு பரந்த அமெரிக்க இராணுவ கட்டமைப்பையும் எதிர்கொண்ட நிலையில், சீன ஆட்சி எதிர்வினையாற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பு அது பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்களால்அதாவது கடந்த மூன்று தசாப்தங்களில் முதலாளித்துவ மீட்சி நிகழ்வுபோக்குகளினூடாக தன்னைத்தானே செழிப்பாக்கிக் கொண்ட ஒரு சிறிய செல்வந்த தன்னலக்குழுவால் நிபந்தனைக்குட்பட்டுள்ளது. பரந்தளவில் பார்க்கையில், பெய்ஜிங் ஆயுத போட்டியில் ஈடுபட்டு கொண்டே வாஷிங்டனை சாந்தப்படுத்த முயல்கிறது, ஆனால் இது ஒரு வழியில் தான் முடிவுக்கு வர முடியும்.

http://www.wsws.org/asset/2b112475-1d22-4b58-a7fa-e182161d75bE/One+Belt%2C+One+Road.jpg?rendition=image480
ஒரே இணைப்பு, ஒரே பாதை

உள்கட்டமைப்புக்கு கணிசமான முதலீட்டை வழங்குவதன் மூலமாகவும், வர்த்தக மற்றும் பொருளாதார இலாபங்களை அதிகரிப்பதினூடாகவும், யுரேஷியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை அதன் திட்டத்திற்குள் கொண்டு வந்து, அவ்விதத்தில் அமெரிக்க "முன்னிலை" நிகழ்ச்சிநிரலை மழுங்கடிக்க முடியுமென பெய்ஜிங் நம்புகிறது.

கோலாம்பூரின் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில், சீன பிரதமர் லீ, தென்சீனாவிலிருந்து தென் கிழக்கு ஆசியா எங்கிலும் தரைவழி போக்குவரத்து இணைப்புகளை ஸ்தாபிக்கவும் அத்துடன் அப்பிராந்தியத்தில் துறைமுக வசதிகளை மேம்படுத்தவும் சீனாவின் கடமைப்பாட்டு முயற்சிகளை உயர்த்திக் காட்டி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) தலைவர்களுக்கு ஒரு தீர்க்கமான அழைப்பை விடுத்தார். சீன-ஆசியான் சிறப்பு உள்கட்டமைப்புக்குரிய அடுத்த கட்ட கடனுக்காக, அவர் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் உறுதியளித்தார்.

சீனா மற்றும் ஆசியானுக்கு இடையே பொருளாதார உறவுகளை அதிகரிப்பது, அத்துடன் இருதரப்பு வர்த்தகத்தை 2020 க்கு முன்னதாக 1 ட்ரில்லியன் டாலரை எட்டும் வகையில் செய்வது என இந்த தரைவழி இணைப்புகள் ஒரு மூலோபாய நோக்கத்தையும் கொண்டுள்ளனஅது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களை தென்கிழக்கு ஆசியா வழியாக இறக்குமதி செய்யும் கப்பல் போக்குவரத்து வழிகளைச் சீனா சார்திருப்பதைக் குறைக்கிறது. அமெரிக்க இராணுவ மூலோபாயவாதிகளோ, சீனாவிற்கு எதிரான அவர்களின் போர் திட்டங்களின் ஒரு முக்கிய கூறுபாடாக மலாக்கா ஜலசந்தி மீது கட்டுப்பாட்டை பெறுவது உட்பட ஒரு கடல்போக்குவரத்து முற்றுகை நடவடிக்கையைக் கருத்தில் கொள்வார்கள் என்பது பெய்ஜிங்கிற்கு நன்கு தெரியும்.

கடந்த வாரம் சீனா, நான்காவது சீன-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய (CCE) உச்சிமாநாட்டை நடத்தியது. அதில் லீ, கிழக்கு ஐரோப்பா, பால்கன்கள் மற்றும் பால்டிக் நாடுகள் "ஐரோப்பாவிற்கான கிழக்கு வாயில் என்றும், ஒரே இணைப்பு ஒரே பாதை திட்டத்தின் வழிகளில் அவை உள்ளடங்கியிருக்கும்" என்றும் அவற்றின் பாத்திரத்தை உயர்த்திக் காட்டினார். “சீனா-ஐரோப்பா தரைவழி-கடல்வழி விரைவு சாலையைக் கட்டமைக்கவும் மற்றும் ஐரோப்பாவுடனான இணைப்பை அதிகரிக்கவும்" பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய மொத்தம் அந்த 16 நாடுகளுடன் அவர் இணைந்து இயங்க விரும்புவதாக லீ தெரிவித்தார். கிரேக்க துறைமுகம் பிரேயுஸ் வரையிலான ஒரு பரந்த ரயில் இணைப்பு திட்டத்தின் பாகமாக, ஹங்கேரி மற்றும் சேர்பியாவின் தலைநகரங்களுக்கு இடையே அதிவிரைவு ரயில் போக்குவரத்தைக் கட்டமைக்கும் உடன்படிக்கை ஒன்றில் சீனா கையெழுத்திட்டது. பால்டிக் கடல், ஏட்ரியாடிக் (Adriatic) கடல் மற்றும் கருங்கடலின் துறைமுக வசதிகளுக்கான முதலீடுகளையும் லீ அறிவித்தார், ஆனால் திட்டவட்டமான தகவல்களை தரவில்லை.

அனைத்திற்கும் மேலாக பெய்ஜிங்கின் உறுதி, பிரதான ஐரோப்பிய அதிகாரங்களை நோக்கி திரும்பியுள்ளதுஅவை அனைத்தும் அமெரிக்காவுடன் உத்தியோகபூர்வ நேட்டோ இராணுவ கூட்டணியின் பாகமாக உள்ளன. சீனாவின் ஐரோப்பிய இராஜதந்திர அணுகுமுறை பல ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற போதினும், கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் தொடக்கத்தில் மூன்று முக்கிய விஜயங்கள்ஜனாதிபதி ஜி இன் பிரிட்டன் விஜயம், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் சீனாவிற்கான விஜயங்கள்சீனாவைப் போலவே அதேயளவிற்கு ஐரோப்பாவின் பொருளாதார மற்றும் மூலோபாய பிரச்சினைகளை உயர்த்திக் காட்டுகின்றன.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அனைத்தும் யுரேஷியாவில் அவற்றின் சொந்த ஏகாதிபத்திய அபிலாஷைகளைக் கொண்டுள்ளன, அது மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார முறிவு மற்றும் குறிப்பாக ஐரோப்பாவின் மந்தநிலைமையால் கூடுதலாக எரியூட்டப்படுகிறது. உலகின் மிகப்பெரிய மலிவு உழைப்பு களமாக மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா எழுச்சியடைந்ததும், சகல பிரதான சக்திகளும்அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாஅவற்றின் பொருளாதார தலையீடு மற்றும் முதலீட்டை அதிகரிக்க முனைகின்றன, அவ்விதத்தில் அது பெய்ஜிங் மீது அவர்களின் செல்வாக்கை அதிகரிக்கிறது.

மே மாதம் Europesworld.org வலைத் தளத்தில் பிரசுரமான ஒரு கட்டுரையில், சீன-ஐரோப்பிய கல்வித்துறைசார் வலையமைப்பின் இயக்குனர் Wang Yiwei, பகிரங்கமாக சீனாவின் மூலோபாய நோக்கங்களை வெளியிட்டார், அவர் அறிவிக்கையில்: “அமெரிக்கா எழுச்சியடைந்த போது, ஐரோப்பா ஒரு வீழ்ச்சிக்கு உள்ளானது, அதன் சமீபத்திய முயற்சிகள் ஒருங்கிணைவுக்குத் திரும்பவியலாத அளவில் உள்ளன. யுரேஷியாவை மீட்டுயிர்ப்பதன் மூலமாக ஐரோப்பா மீண்டும் உலகின் மத்திய இடத்திற்குத் திரும்ப ஒரு வரலாற்று வாய்ப்பை இப்போது முகங்கொடுக்கிறது,” என்றார்.

இந்த கட்டத்தில், ஒரே இணைப்பு ஒரே பாதை திட்டம் பெரிதும் பகட்டான மற்றும் பொதுவான யோசனையின் எல்லையில் தான் உள்ளது. சீன அரசாங்கம் இந்த மார்ச்சில் "பட்டுச்சாலை பொருளாதார இணைப்பு மற்றும் 21ஆம் நூற்றாண்டு கடல் போக்குவரத்து பட்டுச்சாலையைக் கூட்டாக கட்டமைப்பதற்கான தொலைநோக்கு பார்வையும், நடவடிக்கைகளும்" என்று தலைப்பிட்ட ஓர் ஆவணத்தைப் பிரசுரித்தது. அதில் திட்டவட்டமான விளக்கங்கள் குறைவாக இருந்தன, “சமாதான சகவாழ்வு", “இருதரப்புக்கும் வெற்றி தரும் கூட்டுறவு" மற்றும் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்பின் ஆதாயங்களைக் குறித்த வனப்புரைகளே அதிகமாக இருந்தன.

இதுவரையில் தெரிய வந்துள்ள பரந்த புறவடிவங்களைப் பொறுத்த வரையில், தரைவழி இணைப்பானது, வரலாற்றுரீதியில் பட்டுச்சாலையின் தொடக்கப் புள்ளியாக விளங்கும் சீன நகரமான ஜியான் (Xian) இல் இருந்து, சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி (Urumqi) மற்றும் மத்திய ஆசியா வழியாக மாஸ்கோ மற்றும் ஐரோப்பாவிற்கு செல்லும் ஒரு பிரதான பாதையுடன் இணைக்கும் 80,000 கிலோமீட்டர் தூர அதிவிரைவு ரயில் பாதையின் கட்டமைப்பை உள்ளடக்கி உள்ளது. ஏனைய ரயில் பாதைகள், தென்சீனாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வழியாக சிங்கப்பூர் வரையிலும் மற்றும் மற்றொன்று ஜின்ஜியாங் இல் இருந்து பாகிஸ்தான் வழியாக சீனா கட்டமைக்கும் அரேபிய கடலில் உள்ள குவதார் (Gwadar) துறைமுகம் வரையிலும் உள்ளடக்கி உள்ளது.

சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் மற்றும் டிஜிட்டல் கம்பிவடங்களின் மிகப்பெரிய விரிவாக்கம், அத்துடன் மின்சார உற்பத்தி மற்றும் மின்சார கம்பிவடங்களின் மிகப்பெரிய விரிவாக்கத்தையும் அத்திட்டங்கள் உள்ளடக்கி உள்ளன. அத்துடன் சீனாவின் வளர்ச்சியடையா உள்நாட்டு பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூண்டுபொருளையும் வழங்கும், அந்த உள்கட்டமைப்பு முன்மொழிவுகள் சீனாவின் மிதமிஞ்சிய உற்பத்தி தகைமைகளுக்கு ஒரு வடிகாலை வழங்க மற்றும் சீன பெருநிறுவனங்களுக்கு இலாபகரமான வாய்ப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

அந்த கடல்போக்குவரத்து பாதை துறைமுக வசதிகளை விரிவாக்குவதில், அதுவும் குறிப்பாக சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்குக் கடல் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யவும் மற்றும் கென்யாவிலிருந்து ஆபிரிக்காவை ஒருங்கிணைக்கவும் தென்கிழக்கு ஆசியாவில் கவனம் செலுத்துகிறது.

பெய்ஜிங் உள்கட்டமைப்பு திட்டங்களின் இந்த பிரமாண்ட அணிவரிசைக்காக 1.4 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு நிதி ஒதுக்கவும் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்குக் பக்கவாட்டில் நிதியியல் அமைப்புகளை ஏற்படுத்தவும் அது முன்மொழிந்துள்ளது. பணம் வழங்குவதுடன் சேர்ந்து, சீனா, பொருளாதார ஒருங்கிணைப்புக்கு இருக்கும் வர்த்தக முட்டுக்கட்டைகள், பொருளாதார சிவப்பு நாடாக்கள் மற்றும் ஏனைய தடைகளை நீக்கும் அல்லது குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு அழைப்புவிடுக்கிறது.

சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு (AIIB) 50 பில்லியன் டாலர் ஆரம்ப தொகை வழங்கியுள்ளது, உத்தேச மதிப்பீடாக அது குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர் நிதியைக் கொண்டிருக்கும். கூடுதலாக 40 பில்லியன் டாலர் மத்திய ஆசியாவின் பட்டுச்சாலை திட்டங்களுக்கான நிதிக்கு செல்கிறது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார இணைப்பு நிதிக்காக சீனா 46 பில்லியன் டாலர் அறிவித்துள்ளது. சீனா, ஆகஸ்டில் அமைக்கப்பட்ட, பிரிக்ஸ் தலைமையிலான புதிய அபிவிருத்தி வங்கிக்கும் ஆரம்ப பங்களிப்பாக 10 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது. ஒரே இணைப்பு ஒரே பாதை திட்டங்களுக்கு, சீன அபிவிருத்தி வங்கி 1 ட்ரில்லியன் டாலர் நிதி வழங்குமென அறிவித்துள்ளது.

சீன அரசாங்கம், 2021 இல் இருந்து அத்திட்டங்களை முழு அளவில் செயல்படுத்த தொடங்கி 2049 இல் அவற்றை முடிக்கும் கண்ணோட்டத்துடன், அதன் OBOR பங்காளிகளுடன் அடுத்த ஆண்டே ஓர் ஐந்தாண்டு கால திட்டத்தை தொடங்க பரிந்துரைக்கிறது.

ஒரே இணைப்பு, ஒரே பாதை திட்டத்தின் பொருளாதார சாத்தியக்கூறுகள் ஏற்கனவே ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. மார்ச்சில், பிரிட்டன் அமெரிக்காவின் அணிவரிசையிலிருந்து முறித்துக் கொண்டு, சீன-ஆதரவிலான AIIB இல் கிடைக்கக்கூடிய நிதிய வாய்ப்புகளிலிருந்து ஆதாயமெடுக்க அதில் கையெழுத்திட்டது. சீனக் கல்வியாளர் Wang Yiwei கருத்துரைக்கையில்: “இந்த புதிய பட்டுச்சாலை திட்டம் புவிசார் அரசியல் ஈர்ப்பு மையத்தை அமெரிக்காவிடமிருந்து விலக்கி திரும்ப யுரேஷியாவை நோக்கி மறுதிருப்பம் செய்ய உதவும்... ஆசிய உள்கட்டமைப்பு வங்கியில் இணைவதென்ற பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்தின் சமீபத்திய முடிவு இந்த திசையில் தான் செல்கிறது, மேலும் அது ஆசியாவை நோக்கிய, குறிப்பாக சீனாவை நோக்கிய, ஐரோப்பிய மனோபாவத்தில் ஒரு பிரதான மாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, அது தெளிவாக அமெரிக்க நிலைப்பாட்டிலிருந்து விலகுவதாகும்,” என்றார்.

ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம், அதை விளிம்பிற்குத் தள்ளும் அல்லது ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் விதத்தில், சீனா மற்றும் ஐரோப்பிய சக்திகள் யுரேஷியாவை ஒருங்கிணைக்க செய்யும் நகர்வுகளை வெறுமனே ஒதுங்கி நின்று அனுமதித்துக் கொண்டிருக்காது. உலக மக்கள்தொகையில் 70 சதவீதத்தை மற்றும் பாதிக்கும் அதிகமான உலகளாவிய வெளியீட்டைக் கொண்டுள்ள ஒரு பிராந்தியமான யுரேஷியாவை, அமெரிக்க மூலோபாயவாதிகள் நீண்டகாலமாக அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான மையமாக கருதி வருகின்றனர்.

முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி (Zbigniew Brzezinski) 1997 இல் அவரது பிரமாண்ட சதுரங்க பலகை (The Grand Chessboard) நூலில் பின்வருமாறு எழுதினார்: “அமெரிக்காவைப் பொறுத்த வரையில், தலையாய புவிசார் அரசியல் பரிசு யுரேஷியா ஆகும்யுரேஷியா உலகின் மிகப்பெரிய கண்டம், புவிசார்-அரசியல்ரீதியில் அது புவி அச்சாக உள்ளது. யுரேஷியாவில் மேலாதிக்கம் செலுத்தும் ஓர் அதிகாரம், மிகவும் அபிவிருத்தி அடைந்த மற்றும் பொருளாதாரரீதியில் உற்பத்தி பிரதேசங்களான உலகின் மூன்று மிகமுக்கிய கண்டங்களில் இரண்டைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும்அவ்விதத்தில் யுரேஷியா சதுரங்க பலகையாக உள்ளது, அதில் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான போராட்டம் தொடர்ந்து அரங்கேறும்.”

1991 இல் சோவியத் ஒன்றிய பொறிவுக்குப் பின்னர், அமெரிக்கா பரந்த யுரேஷிய பெருநிலத்தை அதன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றுள்ளது. முதன்முதலில் 1999 இல் விவரிக்கப்பட்ட அதன் சொந்த பட்டுச்சாலை மூலோபாயமானது, முன்னாள் மத்திய ஆசிய சோவியத் குடியரசுகள் மற்றும் காகசஸ் இல் அதன் தலையீடுகளுக்கும் மற்றும் சதி ஏற்பாடுகளுக்கும் வழிகாட்டுவதாக இருந்தது. மத்திய ஆசியாவின் அண்டைநாடுகளில் வாஷிங்டனின் செயல்பாடுகளுக்கு அடித்தளம் வழங்கும் விதத்தில், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான படையெடுப்புக்கும் மற்றும் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் சாக்குபோக்கை வழங்கியது.

ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னிலை", நுட்பமாக செய்யப்பட்டதோ அல்லது அவசியமானளவிற்கு பொருத்தமான மூலோபாயமோ இல்லையென்றாலும், உக்ரேன் மற்றும் சிரியாவில் அதன் ஆத்திரமூட்டல்கள் மற்றும் தலையீடுகளோடு சேர்ந்து, அது, யுரேஷிய பெருநிலத்தை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில், சீனா மற்றும் ரஷ்யாவை உடைத்து மண்டியிட வைப்பதை நோக்கிய உள்நோக்கத்துடன் நகர்கிறது.

அக்டோபரில் TPP குறித்து உரையாற்றுகையில், ஜனாதிபதி ஒபாமா பின்வருமாறு அறிவித்தார்: “நமது முக்கிய வாடிக்கையாளர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் நமது எல்லைகளுக்கு வெளியே வாழ்கின்ற போது, சீனா போன்ற நாடுகள், உலகளாவிய பொருளாதார விதிகளை எழுத நம்மால் விட்டுவிட முடியாது. நாம் தான் அந்த விதிகளை எழுத வேண்டும்.” ஆனால் பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) மூலமாகவும், மற்றும் அதன் ஐரோப்பிய சமபல உடன்படிக்கையான அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மையைக் (TTIP) கொண்டும், அமெரிக்காவினால் உலகிற்கு கட்டளைகளை வரையறுக்க முடியாது போனால், பின் கடந்த மூன்று தசாப்தங்களில் அது செய்ததைப் போலவே அது இராணுவ ஆத்திரமூட்டல்கள், தலையீடுகள் மற்றும் போரையே நாடும்.

யுரேஷியாவைச் சத்தமில்லாமல் ஒருங்கிணைக்கும் ஒரே இணைப்பு, ஒரே பாதை திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை, ஒரு முதலாளித்துவ ஐக்கிய ஐரோப்பா நிலைத்திருந்த அளவிற்கு கூட நிலைத்திருக்கக் கூடியதல்ல. ஆழமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் எரியூட்டப்பட்டு, ஐரோப்பாவின் பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான பிளவுகள் மற்றும் விரோதங்கள், ஒவ்வொன்றும் அதனதன் நலன்களைப் பாதுகாக்க மேலெழுகையில் தீவிரமடைய மட்டுமே செய்யும். அமெரிக்க ஏகாதிபத்தியமே பிரதான ஸ்திரமின்மைப்படுத்தும் காரணியாகும், அதன் வரலாற்று வீழ்ச்சியை இராணுவ பலத்தைக் கொண்டு ஈடுகட்ட, அந்நடவடிக்கை உலகை ஒரு பேரழிவுகரமான போருக்குள் மூழ்கடித்தாலும் கூட, அதில் அது தீர்மானகரமாக இருப்பதை மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.