ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

For an international coalition to fight Internet censorship

An open letter from the International Editorial Board of the World Socialist Web Site to socialist, anti-war, left-wing and progressive websites, organizations and activists

இணைய தணிக்கையை எதிர்த்துப் போராடும் ஒரு சர்வதேச கூட்டணிக்காக

சோசலிச, போர்-எதிர்ப்பு, இடதுசாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள், அமைப்புகள் மற்றும் நடவடிக்கையாளர்களுக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து ஒரு பகிரங்க கடிதம்

23 January 2018

கூகுள், பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் ஏனைய பிற சக்தி வாய்ந்த தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அமெரிக்க அரசானது இணையத்தில் சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை அணுகுவது மீது பாரிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதே போன்ற ஒடுக்குமுறை கொள்கைகள் ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் முதலாளித்துவ அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த புதிய தணிக்கை முறையானது, இணையத்தில் மக்கள் என்ன படிக்கிறார்கள், எழுதுகிறார்கள், என்ன சிந்திக்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் நோக்கில், ஒரு தீவிர கண்காணிப்பு நடவடிக்கையுடன் இணைந்து வருகிறது. அரசு, இராணுவ-உளவுத்துறை முகமைகள் மற்றும் சந்தை ஏகபோக தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் இந்த கூட்டணியினது நடவடிக்கைகள், பேச்சு சுதந்திரம் மற்றும் பிற முக்கிய ஜனநாயக உரிமைகளுக்கு ஓர் அபாயகரமான எச்சரிக்கையாகும்.

“போலி செய்திகள்" மற்றும் "ரஷ்ய ஊடுருவலை" தடுப்பதற்காக என்ற மோசடியான மூடுமறைப்பின் கீழ், 21 ஆம் நூற்றாண்டு முதலாளித்துவ பொலிஸ் அரசின் ஒரு தொழில்நுட்பவியல் கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரலில் தொடங்கி, இடதுசாரி வலைத் தளங்களை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக தேடல் முடிவுகளில் கூகுள் செய்திருந்த மோசடியை அம்பலப்படுத்திய விபரங்களை உலக சோசலிச வலைத் தளம் 2017 கோடையில் பிரசுரித்தது. கூகுள் தேடல் முடிவுகளில் இருந்து வந்த பயனர்களில் அண்ணளவாக 70 சதவீத வீழ்ச்சியை WSWS அறிவித்தது. ஏப்ரல் 2017 வரையில் WSWS க்கு வாசகர்களைக் கொண்டு வந்திருந்த முதன்மை 150 கூகுள் தேடுசொற்களில், இப்போது 145 சொற்கள் நமது வலைத் தளத்தின் ஒரேயொரு தேடல் முடிவைக் கூட கொண்டு வரவில்லை. globalresearch.ca, consortiumnews.com, counterpunch.org, alternet.com, wikileaks.com மற்றும் truthdig.org போன்ற ஏனைய எதிர்ப்பு வலைத் தளங்களும் கூகுள் தேடல் உருவாக்கிய வாசகர்களில் கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளதையும் WSWS விசாரணை எடுத்துக்காட்டியது.

கூகுளின் முதன்மை செயலதிகாரிகளுக்கு ஆகஸ்ட் 25, 2017 தேதியிட்ட ஒரு பகிரங்க கடிதத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்:

இந்தளவிற்கான தணிக்கை என்பது அரசியல் இருட்டிப்பாகும். உங்கள் நிறுவனம் வெளியிட விரும்பாத செய்திகளை முடக்குவதும் மற்றும் உங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துக்களை ஒடுக்குவதுமே கூகுள் தணிக்கை நெறிமுறையின் வெளிப்படையான உள்நோக்கமாக உள்ளது. ஒரு வர்த்தக நிறுவனமாக கூகுளின் தனியுரிமைகள் என்னவாக இருந்தாலும், அரசியல் இருட்டடிப்பு என்பது ஒரு சட்டபூர்வ நடைமுறை கிடையாது. இது ஏகபோக அதிகாரத்தின் ஒட்டுமொத்த துஷ்பிரயோகமாகும். நீங்கள் செய்து கொண்டிருப்பது என்னவென்றால் பேச்சு சுதந்திரம் மீதான ஒரு தாக்குதலாகும்.

ஆகவே உலக சோசலிச வலைத் தளத்தை இருட்டடிப்பு செய்வதை நிறுத்துமாறும், உங்களது புதிய பாரபட்சமான தேடல் கொள்கைகளால் எதிர்விதமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இடதுசாரி, சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள் மீதான தணிக்கையைக் கைவிடுமாறும், உங்களையும் கூகுளையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

கூகுள் இந்த கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை. ஆனால் உலக சோசலிச வலைத் தளத்தின் கண்டுபிடிப்புகளைக் குறித்து குறிப்பிட்டிருந்த செப்டம்பர் 26, 2017 இல் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று, கூகுள் "அதன் தேடல் முடிவுகளில் அரசியல், பாலின, இனவாத அல்லது இனவம்ச பாரபட்சங்களைப் பிரதிபலிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, அதன் தேடல் மென்பொருள் வழிமுறையில் (அல்காரிதம்) ஆழ்ந்த பரிசோதனைகளைச் செய்து வருகிறது" என கூகுள் தெரிவித்ததாக மேற்கோளிட்டது.

இது முற்று முழுமையான ஒரு பொய்யாகும். உலக சோசலிச வலைத் தளம் முதன்முதலில் அம்பலப்படுத்தியதில் இருந்து, அரசு-இராணுவ-உளவுத்துறை-பெருநிறுவன தொழில்நுட்ப கூட்டு, அதன் உலகளவிலான தணிக்கை முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது என்ற உண்மையில் அது எந்த இரகசியமும் வைக்கவில்லை. டிசம்பர் 2017 இல், ட்ரம்ப் நிர்வாகம் இணைய நடுநிலைமையைக் கைவிட்டது, அதேவேளையில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஏனைய இடங்களின் அரசாங்கங்களும் இணைய பேச்சு சுதந்திரத்தின் மீது ஒடுக்குமுறைகளைத் தொடங்கி உள்ளன. செய்திகளை அணுகுவதைத் தடுக்க, குறிப்பாக இடதுசாரி வலைத் தளங்களை இலக்கில் வைத்து, ஜனவரி 2018 இல், பேஸ்புக் அதன் செய்தியோடையில் (newsfeed) மாற்றங்கள் செய்தது, அத்துடன் அதன் தலைமை செயலதிகாரி மார்க் சுக்கெர்பேர்க் பாசாங்குத்தனமான பெருநிறுவன வார்த்தைஜாலத்துடன் கூறுகையில், பயனர்கள் "இன்னும் அதிகமாக இணைந்திருப்பதற்கும், தனிமையைக் குறைவாக உணருமாறு" செய்யவே இந்த மாற்றம் என்று கூறினார்.

ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அச்சுறுத்தல் உடனடியானது மற்றும் நீண்டகாலத்திற்குரியது. 1990 களில் இணைய வளர்ச்சியானது, தகவல் பரிமாற்றத்தையும் உலக தொடர்புகளையும் பாரியளவில் விரிவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியது. ஆனால் தகவல்கள், செயற்கை அறிவு மற்றும் தகவல் தொடர்புகளுக்கான தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளதும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுமான முதலாளித்துவ அரசுகளும் பில்லியனிய செல்வந்த தட்டுக்களும், வெடிப்பார்ந்த சமூக சமத்துவமின்மை, அதிகரித்து வரும் மக்கள் அதிருப்தி மற்றும் உயர்ந்து வரும் சர்வதேச பதட்டங்களுக்கு விடையிறுப்பதற்காக இணையத்தை அரசு வேவுபார்ப்பு, சர்வாதிகாரம், தனியார் இலாபம் மற்றும் போருக்கான ஒரு கருவியாக மாற்றி வருகின்றனர்.

இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல் எனும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஜனவரி 16 இணைய கலந்துரையாடலுக்கு அனுப்பிய ஓர் அறிக்கையில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியான் அசான்ஜ் மிகச் சரியாக எச்சரித்தார்:

மக்கள் தங்களையும் மற்றவர்களையும் கல்வியூட்டுவதற்கான ஆற்றலில் இணையம் ஒரு புரட்சியைக் கொண்டு வந்துள்ளது, அதேவேளையில் இதன் விளைவாக ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழல், நடப்பு ஸ்தாபகங்களின் மையத்தையே உலுக்கியுள்ளது. சமூகரீதியிலும் மற்றும் நிதியியல்ரீதியிலும் தற்போதைய உயரடுக்குகளுடன் இணைந்துள்ள கூகுள், பேஸ்புக் மற்றும் சீனாவில் உள்ள இவற்றிற்கு இணையானவை, விவாதங்கள் மீதான கட்டுப்பாட்டை மறு-ஸ்தாபிதம் செய்ய நகர்ந்துள்ளன.

செயற்பாட்டாளரும் திரைப்பட இயக்குனருமான ஜோன் பில்ஜெர், உலக சோசலிச வலைத் தளம் இணைய கலந்துரையாடலுக்கு அனுப்பிய மற்றொரு செய்தியில், தேடல் முடிவுகளில் மற்றும் மென்பொருள் வழிமுறைகளில் செய்யப்படும் மோசடியை "பகிரங்கமான தணிக்கை" (rank censorship) என்று கண்டித்ததுடன், தொடர்ந்து கூறுகையில், “சுதந்திரமான பத்திரிகையாளர்கள் பிரதான ஊடகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், உலக இணைய வலையமே ஆழமான விவாதத்திற்குரிய மற்றும் ஆதாரத்தை அடிப்படையாக கொண்ட பகுப்பாய்வின் அடித்தளமாக, உண்மையான பத்திரிகையியலாக உள்ளது,” என்றார்.

ஆளும் வர்க்கம் அதன் தகவல் ஏகபோகமயமாக்கலுக்கும், போர் தொடுப்பதற்கான பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் அதன் தகைமைக்கும், ஏமாற்றி பறித்த செல்வவள திரட்சி மற்றும் அதீத சமூக சமத்துவமின்மையைச் சட்டபூர்வமாக்குவதிலும், இணையத்தை ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அடையாளம் காண்கிறது. ஜனநாயகமும் சுதந்திரமான தகவல் பரிமாற்றங்களும் சமகாலத்திய முதலாளித்துவத்துடன் பொருத்தமற்றுள்ளன. உலக மக்கள்தொகையில் மிக வறிய அரைவாசிப் பேர், அதாவது சுமார் 3.6 பில்லியன் மக்கள் கொண்டுள்ள அதேயளவிலான செல்வ வளத்தை எட்டு பில்லியனர்கள் கொண்டுள்ளனர். உலகப் பொருளாதாரத்தின் மீது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள இந்த தன்னலச் செல்வந்த தட்டுக்கள், விவாதத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும், மற்றும் முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராக அரசியல்ரீதியில் உலகளவிலான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்குமான களமாக விளங்கும் இணையத்தைக் குறித்து அஞ்சுகின்றன.

உலகளவில் 2005 இல் 1.0 பில்லியனாக இருந்த அல்லது மொத்த உலக மக்கள்தொகையில் 16 சதவீதமாக இருந்த இணைய பயனர்களின் எண்ணிக்கை, 2017 இல் உலகளவில் 3.8 பில்லியனாக, அதாவது மொத்த மக்கள்தொகையில் 52 சதவீதமாக உயர்ந்தது. இளைஞர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், சீனா மற்றும் இந்தியாவில் மட்டும் 320 மில்லியன் பேர் உள்ளடங்கலாக, மொத்தம் 830 மில்லியன் இளைஞர்கள், இப்போது இணையத்தில் உள்ளார்கள். 2012 இல் சுமார் 1.7 பில்லியனாக இருந்த மொபைல் இணைய பயனர்கள், ஆசியா, ஆபிரிக்கா, மத்தியக் கிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் அதிகரித்த அதிகளவிலான அதிகரிப்புகளுடன், 2017 இல் 5 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. மிகப் பெரியளவில், அதிகளவில் இணைந்துள்ள மற்றும் முன்னொருபோதும் இல்லாதளவில் அதிகமாக சர்வதேசளவில் ஒருங்கிணைந்துள்ள உலக தொழிலாள வர்க்கம், மிகப் பிரமாண்டமான அரசியல் சக்தியாக முன் நிற்கிறது.

இணைய தணிக்கை, தகவல் கட்டுப்பாடு மற்றும் பொலிஸ்-அரசு வேவுபார்ப்பை நியாயப்படுத்த, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளாலும் பெருநிறுவன ஊடகங்களாலும் பயன்படுத்தப்படும் கூற்றுகள் பொய்களின் தொகுப்பாகும். ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டபூர்வ வழக்கு விசாரணைகளை நீக்குவதற்காக, பீதி உணர்வு கொண்ட ஒரு சூழலை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

முன்னாள் அமெரிக்க இராணுவத்தினனும் FBI உளவாளியுமான கிளிண்ட் வாட்ஸ் அமெரிக்க செனட் க்கு ஜனவரி 17 இல் கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள குறைந்த படிப்பறிவுகொண்ட மக்கள் கை தொலைபேசி வழியாக அதிகரித்தளவில் இணைய களத்தில் இறங்குவதானது, குறிப்பாக பயங்கரவாதிகள் மற்றும் எதேச்சதிகாரவாதிகள் சமூக ஊடகங்களூடாக அவர்கள் தந்திரமாக செயல்படுவதற்கு இலக்காக்குகின்றது” என்றார்.

பேஸ்புக் இன் வழக்கறிஞர் மொனிக்கா பிக்கெர்ட் செனட் சபையில் பேசுகையில் ஓர்வெல்லியன் மொழியைப் பயன்படுத்தினார், “பொய் செய்திகளைத் தடுக்கவும் அங்கீகாரமான செய்திகளுடன் மக்கள் இணைந்திருக்க உதவவும் நாங்கள் அதிகரித்தளவில் புதிய வழிகளைக் கண்டறிந்து வருகிறோம்—அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்றார்.

“ரஷ்ய தலையீடு" என்பதற்கு குறைவின்றி "போலி செய்திகள்" என்பதை துணைக்கு இழுப்பது மோசடியானது. ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும், அமேசானின் ஜெஃப் பெஜொஸ் க்கு சொந்தமான நியூ யோர்க் டைம்ஸ் இன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இன் பெருநிறுவன ஊடக பிரச்சாரகர்களும், உண்மையில் இந்த முதலாளித்துவ பிரசுரங்கள் எதில் நிபுணத்துவம் கொண்டுள்ளனவோ, அதாவது போலிச் செய்திகளை பரப்பி விடுவதை, எதிர்க்கும் வலைத் தளங்கள் மீது குற்றச்சாட்டாக வைக்கின்றன.

2003 ஈராக் படையெடுப்புக்கு முன்னதாக, "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" என்ற பொய் கூற்றுகளை விட இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வேறெதுவும் இருக்காது, அது 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது. நிரந்தர போரில் ஈடுபட்டுள்ளதும், ஒவ்வொரு கண்டத்திலும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை நடத்தி உள்ளதும், மற்றும் உலகெங்கிலும் துருப்புகளை நிலைநிறுத்தி உள்ளதுமான ஓர் அரசு, இப்போது “ரஷ்ய தலையீடு" என்ற முற்றிலும் ஊர்ஜிதப்படுத்தப்படாத கூற்றுகளைக் கூறி வருகிறது. ஆளும் வர்க்கம், இந்த இட்டுக்கட்டுப்பட்ட குற்றச்சாட்டுக்களை, அதிருப்தியை குற்றகரமாக்கவும் மற்றும் விமர்சனபூர்வ கருத்துரைகள் வழங்கும் பிரசுரங்களை தேசத்துரோகம் என்பதற்கு சமமாக முத்திரை குத்துவதற்கும் பயன்படுத்துகிறது.

ஏகாதிபத்திய போர்கள் எப்போதுமே அரசியல் ஒடுக்குமுறையுடன் இணைந்து செல்கின்றன. அமெரிக்கா முதலாம் உலக போருக்குள் இறங்கி ஒரு சில வாரங்களில், காங்கிரஸ் சபை உளவுத்துறை சட்டத்தை நிறைவேற்றியதுடன், சோசலிஸ்டுகளைச் சிறையில் அடைக்கவும் மற்றும் குடிபெயர்ந்தவர்களில் தீவிரமானவர்களை நாடுகடத்தவும் அதை பயன்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின் போது, சோசலிஸ்டுகளின் பத்திரிகைகளை அனுப்புவதிலிருந்து அவர்களை தடுத்ததுடன், ஸ்மித் சட்டத்தின் கீழ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வழக்கிற்கு உட்படுத்தியது மற்றும் 100,000 க்கும் அதிகமான ஜப்பானியர்களை வதைமுகாம்களில் அடைத்தது. வியட்நாம் போருக்கு எழுந்த பாரிய எதிர்ப்பை முகங்கொடுத்த ஜோன்சன் மற்றும் நிக்சன் நிர்வாகங்கள், எண்ணற்ற குடியுரிமைகள் மற்றும் இடதுசாரி அரசியல் நடவடிக்கையாளர்களை வேவு பார்ப்பதற்காக இழிவார்ந்த COINTELPRO திட்டத்தை நடைமுறைப்படுத்தின. 2001 க்குப் பின்னர் இருந்து, ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தேச பாதுகாப்பு சட்டங்கள் (PATRIOT) மற்றும் FISA சட்டங்கள் மூலமாக பாரிய கண்காணிப்பு திட்டங்களை ஸ்தாபித்துள்ளதுடன், நிழலுலக சிறைக்கூடங்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி, “பயங்கரவாதத்திற்கு" எதிராக சண்டையிடுகிறோம் என்ற போர்வையில் சிஐஏ சித்திரவதையாளர்களைப் பாதுகாக்கின்றனர்.

சமூக ஊடகங்களின் ஜனநாயக சாத்தியத்திறனை அமெரிக்க இராணுவம் அதன் நடவடிக்கைகளுக்கு ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தலாக காண்கிறது. டிசம்பர் 21, 2016 மூலோபாய ஆவணத்தில், அமெரிக்க படைகளுக்கான போர் பயிற்சி கல்லூரி (War College) எழுதியது, “சமூக ஊடகங்களின் தாக்கங்களும் மற்றும் ஒரு பெரும் டிஜிட்டல் நகரில் வேகமாக தகவல்கள் (மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள்) பரவுவதும் மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் … இங்கே அமெரிக்காவில், பொலிஸால் கொல்லப்படுவதைக் காட்டும் காணொளிகள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்க போராட்டங்களுக்கும் மற்றும் அரசியல் இயக்கங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது.”

ஏப்ரல் 2017 இல் பிரசுரிக்கப்பட்ட மற்றொரு ஆவணத்தில், போர் கல்லூரி அதன் அச்சத்தை வெளிப்படுத்தியது, அதாவது, “தங்கள் பகுதியில் நடக்கும் சம்பவங்களைக் குறித்து மற்றவர்களுக்கு தகவல் அளிக்க விரும்பும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை அந்த நேரத்திலேயே மக்களிடையே பரப்ப படமெடுத்து அனுப்ப முடியும்.”

இந்த அபாயத்தின் அளவை குறைத்து மதிப்பிட முடியாது. உலக சோசலிச வலைத் தளத்தின் இணைய வழி கலந்துரையாடலில் (webinar) டேவிட் நோர்த்துடன் பங்குபற்றிய சுதந்திர பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜ் விவரித்தவாறு:

இந்த தணிக்கை உலகளாவியளவில் உள்ளது. ஜேர்மன் அரசின் வலையமைப்பு அமுலாக்க சட்டமானது (Network Enforcement Act), ஆட்சேபிக்கத்தக்கவை எனக் கூறப்படும் கருத்துக்களுக்காக சமூக ஊடக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கிறது. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இணையத்திலிருந்து "போலி செய்திகளை" நீக்க சூளுரைத்துள்ளார். செச்சென் குடியரசின் சர்வாதிகாரி ரம்ஜன் காடிரொவ் அமெரிக்காவின் தடை பட்டியலில் இருக்கிறார் என்பதற்காக, அவரின் பயனர் கணக்கை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அழித்துள்ளது. காடிரொவ் நிச்சயமாக மோசமானவர்தான், ஆனால் அமெரிக்க உள்நாட்டு சுதந்திரங்களுக்கான ஒன்றியம் குறிப்பிடுவதைப் போல, இந்த தடையானது நடைமுறையளவில் கருத்துக்களைத் தணிக்கை செய்ய அமெரிக்க அரசுக்கு அதிகாரமளிக்கிறது. இஸ்ரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இயங்கி வரும் பேஸ்புக், 100 க்கும் அதிகமான பாலஸ்தீன நடவடிக்கையாளர்களின் கணக்குகளை நீக்கியுள்ளது. இது ஓர்வெல்லியன் உலகில் கூறப்படும் பொலிஸ் சிந்தனை, “செய்தி உரை" (Newspeak) மற்றும் "சிந்தனை-குற்றம்" என்பதை நோக்கிய, அல்லது இதை பேஸ்புக் அழைக்க விரும்புவதைப் போல, “பாரபட்சத்தைக் கலைவது" மற்றும் "எதிர்-உரை,” (counterspeech) என்பதை நோக்கிய ஓர் அச்சுறுத்தலான அணிவகுப்பாகும்.” [Truthdig.com, ஜனவரி 21, 2018]

அடிப்படை ஜனநாயக உரிமைகளின் உயிர்பிழைப்புக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல் எதிர்க்கப்பட வேண்டும். இதற்கு இணைய தணிக்கை மற்றும் கண்காணிப்புக்கு எதிரான ஒரு பரந்த கூட்டணியை ஒழுங்கமைப்பதும் ஒருங்கிணைப்பதும் அவசியமாகும். உலக சோசலிச வலைத் தளம், இதற்காக, சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களின் சர்வதேச கூட்டணியை உருவாக்க பொறுப்பேற்கிறது. நாங்கள் சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள் மற்றும் அமைப்புகளும், அத்துடன் குறிப்பிட்ட நோக்கத்திற்காக இணைய தணிக்கையை எதிர்த்து ஒரு கூட்டணியை உருவாக்க விரும்பும் மற்றும் அதற்கு தயாராக இருக்கும் தனிப்பட்ட செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் இதில் பங்கெடுப்பதை வரவேற்கிறோம்.

ஆனால், சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களின் சர்வதேச கூட்டணி நடைமுறைக்கு வரவேண்டுமானால், குறிப்பிட்ட சில கோட்பாடுகளில் அங்கே உடன்பாடு இருக்க வேண்டும், அவற்றில் உள்ளடங்குபவை:

 

இந்த கோட்பாடுகளுக்கு இணங்க, சர்வதேச கூட்டணி பின்வரும் இன்றியமையா பணிகளை எடுக்க வேண்டும்:

 

 

 

 

இக்கூட்டணியின் கோட்பாடுகள் மற்றும் பணிகளில் உடன்படுவதானது, இணையத்தைத் தணிக்கை செய்யவும் மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிக்கவும் முயலும் அரசுகள் மற்றும் பெருநிறுவனங்களின் சூழ்ச்சிக்கு எதிராக, ஒரு சர்வதேச எதிர்-நடவடிக்கையை அபிவிருத்தி செய்வதற்கான நடைமுறையளவிலான தொடக்க புள்ளியாக இருக்கும்.

சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களின் இந்த சர்வதேச கூட்டணியில், பல அரசியல் கேள்விகள் மீது தவிர்க்கவியலாமல் பல்வேறு கருத்துக்களும் முரண்பட்ட கண்ணோட்டங்களும் இருக்கும். பங்கேற்பதற்காக ஓர் அரசியல் போக்கை ஏற்க வேண்டும் என்பதல்ல. பங்கெடுக்கும் வலைத் தளங்களும் அமைப்புகளும் சுதந்திரமாக அவர்களின் சொந்த சுயாதீனமான வேலையைத் தொடரும்.

மற்ற அமைப்புகளின் அரசியல் என்னவாக இருக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் கட்டளையிட முயலாது, அல்லது ஒரு கோட்பாடற்ற ஒற்றுமைக்காக எமது சோசலிச அரசியல் முன்னோக்கின் மீது எந்த கட்டுப்பாடுகளையும் நாங்களும் ஏற்க மாட்டோம்.

எவ்வாறிருப்பினும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இணைய பிரசன்னமாக விளங்கும் உலக சோசலிச வலைத் தளம், அதன் மார்க்சிச மற்றும் சோசலிச வேலைத்திட்டம், கொள்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். தொழில்நுட்ப ஏகபோகங்களைப் பறிமுதல் செய்யவும், இணையம் மீது சர்வதேச மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான ஆதரவைத் திரட்டவும் நாங்கள் முயல்வோம். பேச்சு சுதந்திரம் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளை நடைமுறையளவில் பாதுகாப்பதற்கு, முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதும் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக ஒரு போராடுவதும் அவசியமென்ற புரிதலை ஏற்படுத்த உலக சோசலிச வலைத் தளம் போராடும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும் பலத்தை எந்தளவுக்கு இப்போராட்டத்தினுள் கொண்டு வர முடிகிறதோ அந்தளவுக்கு மட்டுமே, சக்தி வாய்ந்த முதலாளித்துவ அரசுகள் மற்றும் அளப்பரிய பன்னாட்டு பெருநிறுவனங்கள் நடத்தும் இணைய தணிக்கையை வெற்றிகரமாக எதிர்க்க முடியுமென உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தும். தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நலன்களை, அதாவது அவர்களின் வாழ்க்கை தரங்கள், வேலையிட நிலைமைகள், கூலிகள், இதர பிறவற்றைப் பாதுகாப்பதற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்திற்கும் இடையே பிரிக்கவியலாத தொடர்பு குறித்து அதற்கு ஒரு புரிதலை உருவாக்குவது அதிமுக்கியமாகும். மாற்று செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை அணுகாமல், வெவ்வேறு நாடுகளில் உள்ள தொழிலாளர்களை நடைமுறையளவில் அவர்களின் பொதுவான போராட்டங்களில் ஒருங்கிணைக்க இயலாது. கட்டுப்பாடின்றி இணைய அணுகுதலானது, சோசலிசம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு உதவும். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பில் ஒரு முக்கிய கூறுபாடாக, இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தால் உத்வேகத்துடன் ஆதரிக்கப்படும். இது அவர்களின் போராட்டம். வெறுமனே பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கம் இதில் ஈடுபடுவது முக்கியமானது என்றல்ல. மாறாக பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்திற்கே முக்கியமானதாகும்.

கூட்டு வேலை மற்றும் விவாதங்களின் போது, அரசு-பெருநிறுவன கட்டுப்பாட்டுக்கும் இணைய தணிக்கைக்கும் எதிராக போராட இந்த வேலைத்திட்டத்தையும் மற்றும் புரட்சிகர சோசலிச அணுகுமுறையையும் மற்றவர்கள் பின்பற்றுமாறு நாங்கள் கோருவோம்.

சோசலிச, போர் எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களின் இணைய கூட்டணியில் இணைந்து செயல்பட ஒருங்கிணைவதில், அனைத்து சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள், அமைப்புகள் மற்றும் நடவடிக்கையாளர்களும் பங்கெடுக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்துகிறது மற்றும் வரவேற்கிறது.

இக்கூட்டணியில் இணைய ஆர்வமுள்ள வலைத் தளங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் அவர்களின் கேள்விகளை endcensorship@wsws.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இக்கூட்டணி வேலைகளில் பங்கெடுக்க விரும்பும் தனிநபர்கள் இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்பிக்கவும்.