ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers Party in Argentina seeks to “refound” Fourth International in alliance with Stalinism

ஆர்ஜென்டினாவில் தொழிலாளர் கட்சி ஸ்ராலினிசத்துடன் கூட்டு சேர்ந்து நான்காம் அகிலத்தை “மீள ஸ்தாபிப்பதற்கு” முயல்கிறது

By Eric London and Bill Van Auken
7 June 2018

ஏப்பிரல் 2 மற்றும் 3 ,2018, ஆர்ஜென்டினாவின் Partido Obrero (தொழிலாளர் கட்சி- PO) புவேனோஸ் அயர்சில் நான்காம் அகிலத்தை மீள அமைப்பதற்காக ஒருங்கிணைப்புக் குழு (Coordinating Committee for the Refoundation of the Fourth International - CRFI) என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தியது.

1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்திற்கு “மீளஸ்தாபித்தல்” அல்லது “மீளக்கட்டமைத்தல்” என்ற முழக்கம் புதியதொன்றல்ல. CORQI (Comité d’Organisation pour la Reconstruction de la Quatrième International) என்று அறியப்பட்ட பியர் லம்பேர் இன் பிரெஞ்சு OCI உடன் 1970களில் தொழிலாளர் கட்சி (PO) அதன் கூட்டுக்குச் சென்றதில் இருந்து, 45 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. லம்பேர் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியையும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள வலதுசாரி முதலாளித்துவ தேசிய இயக்கங்களை நோக்கி திரும்பியபோதும், அதேவேளை அவருடைய முந்தைய CORQI கூட்டாளிகளை போலீஸ் முகவர்கள் என கண்டனம் செய்தபொழுது அந்த துணிகர முயற்சியே உடைந்து சிதறியது. பின்னர் PO “மீளஸ்தாபித்தல்” நிகழ்ச்சியில் சிலகாலமே நீடித்திருந்து, தோல்வியில் முடிவடைந்த ஆர்ஜென்டினாவிலுள்ள நவ்வெல் மொரேனோ (Nahuel Moreno) தலைமையிலான அதிதீவிர பப்லோவாதப் போக்குடன் தன்னையே கூட்டுச் சேர்த்துக்கொண்டது.

குறுகிய காலமே நீடித்த இவ்வனைத்துக் கூட்டுக்களும் நான்காம் அகிலம் இருக்கவில்லை, மற்றும் அது ஒருபோதும் கூட இருந்ததில்லை என்ற ஒரு பொது உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்ததன. “மீளக்கட்டமைத்தல்” என்பது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்றால் அரசியல் ரீதியாக பன்முகத்தன்மைகொண்ட அமைப்புக்கள், வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயம் பற்றிய அடிப்படைக் கேள்விகளில் எந்த உடன்பாடும் இல்லாமல் ஒன்றுகலத்தல் ஆகும். துல்லியமாய் அவர்கள் உடன்படும் ஒரே புள்ளி, என்ன தேசியக் கொள்கை இருந்தாலும் அதன் சொந்த சிறந்த நலன்களுக்கு பொருந்துவதாகக் கருதுகின்ற கொள்கையை ஒவ்வொரு அமைப்பும் பின்பற்றுவதற்கான உரிமையை கொண்டிருப்பதாகும். அரசியலுக்கு அப்பட்டமாக கோட்பாடற்ற இந்த அணுகுமுறையானது ட்ரொட்ஸ்கிசத்துடன் ஒன்றும் பொதுவானதல்ல. 1938 முதற்கொண்டு நான்காம் அகிலத்தால் திரட்டப்பட்ட அனுபவங்கள் மற்றும் படிப்பினைகள் தொடர்பான அதன் மனோபாவம், அரசியல் குரோதம், தத்துவார்த்த அலட்சியம், குறுகிய நோக்குடைய தேசிய சந்தர்ப்பவாதம் மற்றும் கொடூரமான அறியாமை இவற்றின் சேர்க்கையால் விளக்கப்படுகிறது.

நான்காம் அகிலத்தின் வரலாறு எந்த புறநிலை முக்கியத்துவத்தையும் கொள்ளவில்லை, அங்கு படிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஒன்றுமில்லை என அது அவர்களில் இந்த நிலைப்பாட்டிலிருந்து குறிப்பிடுகிறது. ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்திற்கும் அனைத்துவடிவிலான இடைநிலைவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக அவர் எழுதிய அனைத்தும் பழங்கதையாகி விட்டன என்பதோடு அதை அலட்சியப்படுத்தலாம் என்பதுமாகும். திருத்தல்வாத ட்ரொட்ஸ்கிச எதிர்ப்புப் போக்குகளுக்கு —முதன்மையாக பப்லோ வாதம் மற்றும் சக்ட்மன் வாதம் இவற்றுக்கு எதிராக— நான்காம் அகிலத்தால் நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்களைப் பொறுத்தவரை இவை அர்த்தமற்றவையாகப் பார்க்கப்பட்டன. ஆகையால், கடந்த 80 ஆண்டுகால அரசியல் போராட்டத்தில், ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு கட்சிகளாலும் போக்குகளாலும் ஆற்றப்பட்ட பாத்திரத்தை ஆய்வு செய்தலோ அல்லது கலந்துரையாடலோ தேவையில்லையாம். கடந்தகாலக் குற்றங்கள் மற்றும் காட்டிக்கொடுப்புக்கள் அனைத்தும் மறக்கப்படக் கூடியவையே. இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது, ஒவ்வொருவரும் மீண்டும் தூய்மையான நிலையில் தொடங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

புவேனோஸ் அயர்சில் ஏப்பிரல் கூடலானது நான்காம் அகிலத்தை “மீளஸ்தாபித்தல்” மற்றும் “மீளக்கட்டமைத்தல்” எனும் களங்கம் மிக்க வரலாற்றின் அத்தகைய முயற்சிகளில் எந்தவிதமான முந்தைய நிகழ்ச்சிக்கும் அப்பால் சென்றது. PO வின் தலைவர் கோர்கே அல்தமிரா மற்றும் கிரேக்க EEK (தொழிலாளர் புரட்சிக் கட்சி), தலைவர் சவாஸ் மிஷேல்-மட்சாஸ் நான்காம் அகிலத்தை மீளக் கட்டியமைப்பதில் ரஷ்யாவில் உள்ள ஸ்ராலினிச ஆதரவு கட்சிகளும் உள்ளடங்கும் என்று அறிவித்தனர். ஸ்ராலினிச ஆட்சிகளால் இழைக்கப்பட்ட குற்றங்கள் —நூறாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள் மற்றும் ட்ரொட்ஸ்கியின் படுகொலை ஆகியன— “ஐக்கியம்” என்ற பெயரில் மறக்கப்பட வேண்டுமாம். ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், ஸ்ராலினிசத்திலிருந்து ட்ரொட்ஸ்கிசத்தைப் பிரிக்கும் இரத்த ஆற்றின் மீது பாலம் கட்டப்பட வேண்டும்.

ஸ்ராலினிசத்திற்கும் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் முன்மொழியப்பட்ட சமரசப்போக்கு ரஷ்யாவின் முரட்டுப்படிவாதம் கொண்ட ஸ்ராலினிச-சார்பு ஐக்கிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (OKP) தலைவியான டரியா அலெக்ஸாண்ட்ரோவ்னா மிட்டினா (Darya Alexandrovna Mitina) க்கு CRFI ஆல் நீட்டிக்கப்பட்ட அழைப்பிதழில் ஸ்தூலமாக வெளிப்படுத்தப்பட்டது. அப்பெண்மணி CRFI இன் முழுக் கலந்துரையாடல்களிலும் முழுமையாகப் பங்கேற்றார் மற்றும் மாநாட்டின் முடிவில் அங்கே கூடிய PO உறுப்பினர்களுக்கு முக்கியமான உரையாற்ற அழைக்கப்பட்டவர்களுள் அவரும் ஒருவர் ஆவார். மாநாட்டிற்கு அவர் வரவேற்கப்பட்டது மிஷேல்-மட்சாஸ் ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது, அவர் மிட்டினாவுடன் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக அரசியல் தொடர்பை பராமரித்து வருகிறார்.


மிட்டினாவும் மிஷேல்-மட்சாசும் புவேனோஸ் அயர்ஸ் மாநாட்டில்

“பல்வேறு நாடுகளில் வர்க்கப் போராட்டத்தை சிறப்பாக ஒழுங்கமைக்க மற்றும் “சர்வதேச ஒற்றுமையுணர்வு நடவடிக்கையை” ஒழுங்கமைக்க ஒரு “புதிய அகிலத்தைக்” கட்டுவதற்கு மிட்டினா அவரது உடன்பாட்டை அறிவித்தார். அவரது பேச்சு பார்வையாளர்களால் பரவலாக வரவேற்கப்பட்டது. OKP இன் வரலாறு ஒருபுறம் இருக்கட்டும், மிட்டினாவின் அரசியல் இணைப்புக்களையும் நடவடிக்கைகளையும் பற்றி பார்வையாளர்களில் பெரும்பாலான பகுதியினர் ஒன்றும் அறியாதவர்களாவர். PO இன் கீழணிகளிலிருந்து அல்தமிரா மற்றும் மிஷேல்-மட்சாஸ் களால் மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் பார்ப்போம்.

ரஷ்ய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியானது (OKP) ஜெனடி சுங்கானோவ் (Gennady Zyuganov) தலைமையிலான ரஷ்ய கூட்டமைப்புக் கம்யூனிஸ்ட் கட்சி (CPRF) இலிருந்து பிளவுற்று 2014ல் உருவாகியது. புட்டின் ஆட்சியின் அரசியல் கூட்டாளியான சுங்கானோவ் இன் தேசிய பேரினவாத அமைப்புடன் OKP இன் வேறுபாடுகள் ஒரு தந்திரோபாய வகைப்பட்டதாகும். சுங்கானோவ் இன் கட்சியை போலவே OKP யும் ஸ்ராலினைப் புகழ்வதுடன் அவரது குற்றங்களையும் நியாயப்படுத்தியது. OKP வலைத் தளத்தில் அண்மையில் பதிவிடப்பட்ட கட்டுரை ஒன்று பின்வருமாறு அறிவிக்கின்றது:

மாபெரும் லெனினது வேலையைத் தொடர்ந்தவர் ஸ்ராலின், அவரைச் சுற்றி தொடர்ச்சியான ஒத்திசைவு கொண்ட மற்றும் நம்பிக்கையுள்ள போல்ஷிவிக்குகள் அணிதிரண்டனர். அவரது தலைமையின் கீழ்தான் சோசலிச தொழில்மயமாக்கல், விவசாயத்தை கூட்டுப்பண்ணைமயமாக்கல், மற்றும் கலாச்சாரப் புரட்சி அடையப்பட்டது. ஸ்ராலின், முதலாளித்துவப் பாதைக்கு திரும்புவதை ஆதரித்தோரை: ட்ரொட்ஸ்கிஸ்டுகள், சினோவியேவிஸ்டுகள், புக்காரினிஸ்டுகள் பல்வேறு தேசியவாதிகள் மற்றும் மற்ற சரணாகதியாளர்கள் ஆகியோரை அம்பலப்படுத்தினார் மற்றும் தோற்கடித்தார் என்கிறது.

“சோவியத் ஒன்றியத்தின் புத்துயிர்ப்புக்கு” OKP அழைப்பு விடுப்பதோடு மாஸ்கோ வழக்கு விசாரணைகளின் பொழுது மற்றும் 1936-1940 பயங்கரத்தைத் தொடங்கியபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிற்போக்கு ஆவணமான “ஸ்ராலின் அரசியலமைப்பு” என்று அறியப்பட்ட 1936 இன் சோவியத் அரசியலமைப்பையும் கூட புகழ்கிறது. OKP இன் பிரதான அரசியற்குறிக்கோள் சுங்கானோவ் இன் CPRFக்கு அழுத்தம் கொடுத்து அதை இடதுக்கு திருப்புவதாகும். அது பழமைவாத தேவாலய அமைப்புடனான கூட்டில் ரஷ்யாவின் “மீள்- ஸ்ராலினிசமயமாக்கல்” க்கு முற்படுகிறது.


ரஷ்ய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம்

டரியா மிட்டினா ரஷ்ய அரசுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு நீண்டகால ஸ்ராலினிச அரசியல் செயல்பாட்டாளர் ஆவார். அவர் ஆப்கான் பிரதமர் முகம்மட் யூசுப்ஃபின் பேத்தி ஆவார், பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கு தூதுவராக நியமிக்கப்பட்டார். அவரது விக்கிப்பீடியா சுயசரிதையின்படி:

2014க்குப் பின்னர் இருந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் (ரஷ்யா) அரசியற்குழுவின் உறுப்பினர் மற்றும் அதன் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்புள்ள ஒரு செயலாளராக இருந்தார்.

அவர் இரண்டாவது பேரவைக்கான (1995-1999) அரச டுமாவின் பிரதிநிதியாக இருந்தார். 2016 அரசு டுமா தேர்தல்களின் பொழுது Cheremushkinskiy தேர்தல் மாவட்டத்தில் “ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகள்” கட்சியிலிருந்து ஒரு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார், ஆனால் வெற்றி பெறவில்லை.

அவர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் கழகத்தின் மத்திய குழுவின் முதல் செயலராக இருந்தார். 1993-ல் அதன் நிறுவனர்களுள் ஒருவராகவும் இருந்தார்.

2014 மே-ஆகஸ்டில், மிட்டினா, மாஸ்கோவில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சகத்தின் பிரதிநிதியாக இருந்தார்.


டொனெட்ஸ்கில் துருப்புகளுடன் மிட்டினா

OKP இன் சர்வதேச விவகார செயலர் என்ற வகையில், பல வகையிலான ஸ்ராலினிஸ்ட்டுகள், பப்லோவாதிகள், முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு அமைப்புக்களுடன் ரஷ்ய அரசின் சார்பில் சர்வதேச தொடர்புகளை வளர்த்தெடுப்பதற்கு பணியளிக்கப்பட்டார்.

“குடும்ப மதிப்புக்கள்”, “வாழ்வதற்கான உரிமை”, “தேசிய பாதுகாப்புவாதம்”, “ஐரோப்பிய எல்லைகளைக் காத்தல்”, மற்றும் வெள்ளை தேசியவாதம் ஆகிய அடிப்படையில் ரஷ்யாவுடன் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவதை முன்னேற்றும் ஒரு வலதுசாரிக் குழுவான, யூரோ-ரஷ்ய பிரதிநிதிகளுடனான ஒரு சந்திப்புக்கு அவர் அண்மையில் கூட்டிச்செல்லப்பட்டார். அவரது பயணம் விரிவானது மற்றும் கணிசமான நிதி ஆதரவைக் கொண்டது என்பதை சுட்டிக்காட்டியது. புவேனோஸ் அயர்ஸ் ஐ விட்டுச் சென்றதிலிருந்து, அவர் சீனா, வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகியவற்றுக்குச் சென்று, அரசு அதிகாரிகளுடனும் அதேபோல ஸ்ராலினிச மற்றும் மாவோயிச கட்சிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தினார்.


Euro-Rus தலைவர் கிரிஸ் ரோமன் (வயதான மனிதர் சூட் ஜாக்கெட் அணிந்துள்ளார்) உடன் மிட்டினா

மார்ச் 5, 2018 PO வின் மீள்ஸ்தாபக மாநாட்டில் பங்கேற்பதற்கு அர்ஜெண்டினா  பறக்கும் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் மிட்டினா, சார்வாதிகாரியின் இறப்பின் 65வது ஆண்டு நினைவுதினத்தில் ஜோசப் ஸ்ராலினுக்கான ஒரு பகிரங்க நினைவுக்கூட்டத்தில் பங்கேற்றார். கிரெம்ளின் சுவர் அருகில் உள்ள ஸ்ராலினின் கல்லறையின் கீழ் மலர்களை வைத்து, அவரும் OKP இன் ஏனைய உறுப்பினர்களும் ஸ்ராலினிச குழுக்கள், ரஷ்ய தேசியவாதிகள், புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பேரினவாதிகள் மற்றும் நவ பாசிச குழுக்கள் அருகே நிற்க ஸ்ராலினின் நினைவைக் கௌரவப்படுத்தினர். மிட்டினாவும் அவரது OKP சகாக்களும் ஸ்ராலினுக்கு பின்னர் பதவிக்கு வந்தவர்களான லியோனிட் பிரெஷ்னேவ் மற்றும் யூரி ஆந்ரோபோவ் ஆகியோரின் கல்றைகளிலும் மலர் வளையம் வைத்தனர்.

மிட்டினா இந் நினைவுகூர்தலை ஒரு வலைப்பதிவு இடுகையில் பெருமையாக நினைவுகூர்ந்து எழுதினார்: “65 ஆண்டுகளுக்கு முன்னர், விட்டுச்சென்ற மனிதனுக்கு, இந்நாள்வரை, சமமாக ஒருவரும் நிற்க முடியாது…. நான் Josef Vissarionovich [Stalin] உடன் நிற்கிறேன்….. ஆண்டுக்கு இருமுறை அந்நினைவகத்திற்கு மலர்கள் கொண்டுசெல்கிறேன்.”

ஸ்ராலினின் கல்லறையில் ஆண்டுக்கு இருமுறை பூக்கள் வைக்கப் போகின்ற ஒருவரை, இரங்கத்தக்க அரசியல் பிற்போக்காளர் என்றே விளக்கமுடியும், அவருக்கு மேடையை வழங்குபவர் அல்லது அவருடன் மேடையைப் பகிர்பவர் அவருக்கு உடந்தையாளராகத்தான் இருக்க முடியும்.

PO மாநாட்டில் டரியா அலெக்ஸாண்ட்ரோவ்னா மிட்டினாவின் பிரசன்னம் தற்செயலானதல்ல. அத்தகைய சக்திகளுடன் கூட்டானது, கோர்கே அல்தமிரா ஆல் திட்டமிடப்பட்ட “மீளஸ்தாபித்தல்” இன் முக்கிய கூறாகும்.

மாநாட்டிற்கான அவரது குறிப்பில், அல்தமிரா OKP பிரதிநிதி வருகை தந்திருப்பதை நியாப்படுத்தி, அறிவித்ததாவது:

“சுயமாகவே உருவாக்கிக்கொள்ளும்” அகிலத்தை நாம் கட்டவில்லை; அதாவது, ஒரு அரசியல் குறுங்குழுவை ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு விஸ்தரிப்பதை செய்யவில்லை. இந்த அரசியல் போராட்டத்தில், இன்று அந்த மேடையில் ரஷ்யாவில் கம்யூனிச மரபின் பேரில் பேசும் தோழர் ஒருவரைப் பெற்றிருக்கிறீர்கள், அது அவருக்கு ஸ்ராலினிசம்…, ஒரு அகிலத்தை அமைப்பதை நோக்கிய அடியெடுப்பில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைசெய்தால், ஆகவே ரஷ்யா மீண்டும் ஒருமுறை, நீண்ட வரலாற்றுக் காலத்தில் அது இருந்ததுபோல, அக்டோபர் புரட்சியின் ஆட்சியதிகாரப் பிரதேசமாக இருக்க முடியுமா என்பதைக் கற்றுக்கொள்ள நாம் இந்த தோழர்களுடன் அரசியல் கலந்துரையாடலை நடத்துகிறோம்.

இந்த வார்த்தைகளுடன், அல்தமிரா வரலாற்று ரீதியாக வேரூன்றிய வேலைத்திட்டத்தையும் நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளையும் மட்டும் மறுதலிக்கவில்லை, வரலாற்றின் முக்கியத்துவத்தையுமே மறுதலிக்கிறார். அப்பிரகடனத்திற்கு அவர் சேர்ப்பதெல்லாம் கடந்தகாலத்தில் நடந்தது நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. நூறாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளைப் படுகொலை செய்த ஸ்ராலினிச ஆட்சி, எண்ணற்ற காட்டிக்கொடுப்புக்களுக்கு தலைமை வகித்ததுடன் இறுதியில் சோவியத் ஒன்றியத்தையும் அழிப்பதற்கு இட்டுச்சென்றது, இவை நான்காம் அகிலத்தை மீளக்கட்டமைத்தலில் தற்கால ஸ்ராலினிஸ்டுகளுடன் ஒத்துழைக்கும் இந்த வழியில் குறுக்கே நிற்கக்கூடாதாம்.

செயல்பாட்டில், இது உண்மையில் எந்த அரசியல் அமைப்புடனும், போக்குடனும் அல்லது நபருடனும் ஒத்துழைக்கும் சாத்தியத்தைத் திறக்கும் அரசியலுக்கான அப்பட்டமான நடைமுறைவாத அணுகுமுறை ஆகும். கடந்தகாலத்தில் அவர்கள் என்னென்ன செய்திருந்தாலும், நீடித்துக்கொண்டிருப்பது ஒருபுறம் இருக்கட்டும், எந்தக் குறிப்பிட்ட முக்கியத்துவமும் இல்லாதவையாக நடத்தப்பட வேண்டும். கடந்தகாலத்தின் குற்றங்கள் துரதிருஷ்டவசமான மற்றும் மன்னிக்கத்தகுந்த தவறுகள் என்றும் கூட விரிவாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும், அவர்களின் தற்போதைய அரசியல் அடையாளத்திற்கு அவை சம்பந்தம் இல்லாதவை ஆகும். உண்மையில் விவகாரமாய் இருப்பது குறிப்பிட்ட செயல்முறைப் பணிகளில் உடன்பாட்டுப் புள்ளிகளைக் காணுவதாகும், ஆயினும் உடனடி நிகழ்காலத்தில் மிகக்குறைந்த அளவினதாய் மற்றும் முக்கியமான நிகழ்வுகளில் ஆகும்.

காட்டிக்கொடுப்புக்களிலும் குற்றங்களிலும் ஆழ்ந்து தோய்ந்துள்ள ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு இந்த குதிரை வியாபார -இரு தரப்பினருக்கும் நன்மையளிக்கும்- சந்தர்ப்பவாத அரசியல் வழிமுறை பிரயோகிக்கப்பட முடியும் என்றால், அது தேசியவாத, பாசிச, வலதும்கூட உள்ளடங்கிய அனைத்து அமைப்புக்களுக்கும் ஏன் பிரயோகிக்கப்படக் கூடாது? உண்மையில், ஸ்ராலினிச மற்றும் நவ-ஸ்ராலினிச அமைப்புக்களோடு உறவினை ஒன்றிணைப்பதற்கான அல்தமிராவின் முயற்சிகளின் தற்போதைய உண்மையான நோக்கம் துல்லியமாக அத்தகைய சக்திகளுடனான அரசியல் ஒத்துழைப்பை முறைமைப்படுத்துவதற்காகும், ரஷ்யாவில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகவும் ஆகும்.

ஸ்ராலினிச அமைப்புக்களின் முதன்மைப் பண்பியல்பு, சிறப்பாக ரஷ்யாவில், அவர்களது தேசியவாத தன்மையாகும். எப்போதாவது எந்தவித கம்யூனிச வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், அது ரஷ்ய பேரினவாதத்தை மூடிமறைப்பதற்கான மெல்லிய வெளிப்பூச்சு ஆகும். ஒரு பெரும் தேசியத் தலைவராக ஸ்ராலினை மகிமைப்படுத்துதலானது சோசலிஸ்ட் என முறையாக எதனையும் விவரிப்பதைவிடவும் பாசிசத்துடன் மிகவும் பொதுத்தன்மையைக் கொண்டிருக்கும்.

கிரேக்க EEK (Workers Revolutionary Party) இன் பொதுச்செயலாளரும் ஐரோப்பாவில் PO இன் முதன்மைக் கூட்டாளியுமான சவாஸ் மிஷேல்-மட்சாஸ், ஆர்ஜென்டினிய கட்சிக்கும் தேசியவாத அட்டையை விளையாட விருப்புக்கொண்டுள்ள சந்தர்ப்பவாத “இடது” அமைப்புக்களுக்கும் புட்டினின் முடிச்சுப்போடும் தூதுவரான டரியா மிட்டினாவுக்கும் இடையில் தரகராக பங்காற்றியுள்ளார்.

மிஷேல்-மட்சாஸ் க்கும் மிட்டினாவுக்கும் இடையிலான உறவு பத்தாண்டு காலத்திற்கும் மேலானதாகப் பின்செல்லும். அவர் 2007ல் அக்டோபர் புரட்சியின் 90வது ஆண்டுவிழாவில் கிரீசில் EEK கூட்டத்திற்கு பேச்சாளராக அழைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து, அவரது வலைப்பதிவில் எழுதினார்: அவரும் அவரது கணவரான சாயிட் காஃபுரோவ் (Said Gafurov) வும் செப்டம்பர் 2009ல் ”அங்கு நாம் ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய” ஐரோப்பிய சமூக மன்றத்தின் ஒழுங்கமைப்புக் குழுவின் கூட்டத்திற்கு ஏதென்சிற்கு வருகைதந்தபோது, விமான நிலையத்திற்கு வந்து மிஷேல்-மட்சாஸ் ஆல் அழைத்துச்செல்லப்பட்டோம்.


டரியா மிட்டினாவும் சாவாஸ் மிஷேலும் 2007 கிரேக்கத்தில் நடந்த கூட்டத்தில் மேடையை பகிர்ந்து கொள்கின்றனர்

சாயிட் காஃபுரோவ், அவரது மனைவியைப் போலவே, ரஷ்ய அரசுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டவராவர். அவர் பல்வேறு அமைச்சகங்களில் வேலை செய்துள்ளார் மற்றும் விளாடிமிர் புட்டினுக்கு பலமான ஆதரவுக்காக நன்கு அறிமுகமான ரஷ்யப் பொருளாதார மாத இதழில் துணை தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். ரஷ்ய புவிசார் நலன்களுக்கான ஆதரவில் அவர் தொடர்ந்து அரபிக் மொழியில் ஒலிபரப்புச் செய்தார் மற்றும் ஸ்ராலினிச ஆதரவு பிராவ்தாவுக்கான ஒரு வர்ணனையாளராகவும் வேலை செய்தார்.

ஐரோப்பிய சமூக மன்றத்தில் “ரஷ்யாவைப் பிரதிநிதித்துவம்” செய்வது என்பதன் பொருள் NGO க்கள், உளவு முகவாண்மைகள் மற்றும் பல்வேறு “இடது” அமைப்புக்களுடன் சேர்த்து, அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் ஒன்றாய்க் கொண்டுவரும் ஒரு சாதனத்திற்குள் கிரெம்ளினின் நலன்களைப் பாதுகாத்தலாகும்.

மிட்டினா மிஷேல்-மட்சாஸ் க்கு ரஷ்யாவில் ஸ்ராலினிச வட்டாரங்களின் மத்தியில் பரந்த தொடர்புகளை ஏற்படுத்த உதவினார். 2017ல் ரஷ்யாவிலும் மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் உள்ள “கம்யூனிஸ்ட் கட்சிகளை” ஐக்கியப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட செயின்ட் பீட்ர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற காங்கிரசிற்கு சிறப்பு விருந்தினராக அவர் அழைக்கப்பட்டார்.

இம்முயற்சிகள் வெளிப்படையாக பலனைத் தர ஆரம்பித்துள்ளன. வேர்க்கிங் ரஷ்யா (Working Russia) மாஸ்கோவிலுள்ள அதன் உறுப்பினர்களைக் கட்சியில் சேருமாறு வலியுறுத்தியது என OKP அண்மையில் அறிவித்தது. அண்மையில் இறந்த விக்டர் அன்பிலோவால் தலைமை தாங்கப்பட்ட வேர்க்கிங் ரஷ்யா, தேசியவாத வெறிக்கும் யூத-எதிர்ப்புக்கும் பேர்போனது. அது “ஸ்ராலினிஸ்ட் கூட்டு” (Stalinist Bloc) என்ற பதாகையின் கீழ் ஸ்ராலினின் பேரனுடன் ஒரு கூட்டில் தேர்தல்களில் போட்டியிட்டது.

யார் இந்த சவாஸ் மிஷேல்-மட்சாஸ்?

இரண்டு தசாப்தங்களான காலப்போக்கில் PO ஆல் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாடுகளில் சவாஸ் மிஷேல்-மட்சாஸ் பங்குபற்றியிருக்கும் அதேவேளை, ஆர்ஜென்டினியக் கட்சியானது அதன் உறுப்பினர்களுக்கு இந்த தனிநபரின் அரசியல் வரலாறு பற்றிய ஒரு சீரிய விவரம் எதையும் அளிக்கவில்லை. அவர் பார்வையாளர்களிடம் “CRFI-ஐ நிறுவிய மற்றும் கட்டியமைக்கும் ஒரு தோழர், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் CRFI ஐக் கட்டியமைப்பதில் பங்காற்றிய ஒரு முக்கிய உறுப்பினர், கிரீசில் வர்க்கப் போராட்டத்தில் 50 வருட நற்பெயரைக் கொண்ட கட்சியின் தலைவரான ஒரு தோழர்” என அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

அத்தகைய விவரிப்பானது PO அங்கத்தவர்களை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏமாற்றும் செயலாகும்.

மிஷேல்-மட்சாஸ் சந்தேகத்திற்கிடமான ஒரு அரசியல் பிரமுகராவர், அவரது முழு வரலாறும் கோட்பாடற்ற மற்றும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் அரசியல் சூழ்ச்சிக்கையாளல்களைக் கொண்டது. அவர் 1970களின் இறுதிவாக்கில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் (ICFI) கிரேக்க பகுதியான வேர்க்கர்ஸ் இன்டர்நேஷனல் லீக்கின் தேசிய செயலராக ஆனார். இருமுந்தைய தலைவர்கள் தொடர்பான அரசியல் வேறுபாடுகளை ICFI க்குள் ஒருபோதும் தெளிவுபடுத்தாது, அத்தலைவர்களை அகற்றிய பின்னர், அவர் இந்த நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

மிஷேல்-மட்சாஸ் இன் அரசியலின் ஒரே மாறா சிறப்பியல்பு அவரது தேசியவாத நோக்குநிலை ஆகும். சோசலிச சர்வதேசியக் கோட்பாடுகள், தொடர்ச்சியாக மிகவும் கொச்சையான தேசிய கணக்கீட்டுக்கு அடிபணியச் செய்தலாக இருந்தது. கொமெய்னி இன் அரசாங்கம் இடதுசாரி குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை கொடூரமாக ஒடுக்கிக் கொண்டிருந்தபொழுது, 1983ல் ICFI இன் முதுகுக்குப்பின்னால் மிஷேல்-மட்சாஸ் ஈரானுக்குச் சென்றார். இந்த கிளர்ச்சி ஒடுக்குதலுக்கு மத்தியில், மிஷேல்-மட்சாஸ் ஈரானிய அரசாங்கத்தை மெச்சும் கட்டுரைத் தொடர்களை எழுதினார். ஆட்சிக்கான பகிரங்க ஆதரவு நடவடிக்கையில் அவர் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் தோன்றினார்.

ICFI, ஜெர்ரி ஹீலியால் தலைமைதாங்கப்பட்ட பிரிட்டீஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (Workers Revolutionary Party - WRP) இன் தகர்வுக்கு இட்டுச்சென்ற தேசியவாத, சந்தர்ப்பவாத சீரழிவுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த வேளையில் 1985ல் மிஷேல்-மட்சாஸ், ICFI உடன் கோட்பாடற்ற பிளவினை மேற்கொண்டார். அவர் ICFI இன் “வரலாற்றுத் தலைவர்” என விவரித்த ஹீலியின் அனுமதி இன்றி சந்திப்பதற்குக் கூட அவர்களுக்கு அதிகாரமில்லை என்ற அபத்தமான வாதக்கூறின் அடிப்படையில், பிற பகுதிகளுடன் அனைத்துக் கலந்துரையாடல்களுக்கும் மறுத்தார்.

ஹீலியுடனான ஒரு கூட்டில் சேர்ந்து கொண்டும் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக்கொண்டும் மிஷேல்-மட்சாஸ், கிரீசிற்குள்ளும் சர்வதேசரீதியாகவும் என்னென்ன கூட்டுக்கள் அவரது அனுபவாத கணக்கீடுகளுக்கு சிறப்பாக சேவை செய்யமுடியுமோ அவற்றைப் பின்பற்றுவதற்கு தான் சுதந்திரமாக இருப்பதாக அவர் கணக்கிட்டார். ICFI உடனான பிளவுகளின் சில மாதங்களுக்குள்ளேயே அவர் கிரேக்க EEK (Workers Revolutionary Party) ஐ தொடங்கியதோடு, அதனை, “அருவமான பிரச்சாரவாதம்” மற்றும் “ட்ரொட்ஸ்கிசத்தின் தனிமைப்படல் மற்றும் தோல்விக் காலங்களின் நடைமுறைகள்” இவற்றிலிருந்து முறிவைக் குறிக்கும் “நான்காம் அகிலத்திற்கான ஒரு புதிய சகாப்தம்” என அவர் அறிவித்தார். இந்த “புதிய சகாப்தம்” எனப்படுவது, யதார்த்தத்தில் பப்லோவாத அரசியலை அதன் மிகத் தீவிர வடிவத்தில் நடைமுறைப்படுத்துவதாகும்.

கிரீசிற்குள்ளே, அனைத்துலகக் குழுவினதும் ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளினதும் நிர்பந்த நிலையிலிருந்து விடுபட்டு, மிஷேல்-மட்சாஸ் முதலாளித்துவக் கட்சியான பாசோக், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உடனான கோட்பாடற்ற கூட்டுக்களின் சுழன்று திரும்பலில் EEK –ஐ குழப்பத்தில் சிக்கவைத்தார். சர்வதேச முனையில், மிஷேல்-மட்சாஸ் மிக்கையில் கோர்பச்சேவை சோவியத் ஒன்றியத்தில் அரசியல் புரட்சியின் தலைவர் எனப் புகழ்ந்தார். EEK இன் அங்கத்தவர் தொகை தொடர்ந்து சிறிதாக இருந்தபோதிலும், மிஷேல்-மட்சாஸ் ஏதென்சில் குட்டிமுதலாளித்துவ இடது ஊழல் தட்டிற்குள் ஒரு முக்கிய நபரானார்.

கோர்கே அல்தமிரா மற்றும் சவாஸ் மிஷேல்-மட்சாஸ் க்கு இடையிலான உறவு நான்காம் அகிலத்தின் வரலாற்றை நோக்கி இருவராலும் கடைப்பிடிக்கப்படும் ஒரு இழிவுபடுத்தும் மனநிலையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

CRFI (நான்காம் அகிலத்தை மீள அமைப்பதற்கான ஒருங்கிணைப்புக் குழு) கடந்தகால வேறுபாடுகள் அல்லது அதைக் கடைப்பிடிக்கும் பல்வேறு போக்குகளின் வரலாற்று அபிவிருத்தி பற்றி அங்கு விவாதங்கள் இருக்கப்போவதில்லை என்ற “கோட்பாட்டின்” மீது நிறுவப்பட்டது. குழுவின் நிறுவன ஆவணம் இதனை வெளிப்படையாக விளக்குகிறது. அதன் கடைசி வரிகள் வாசிப்பது:

குறுங்குழுக்களின் வழிமுறைக்கு மாறாக, தீர்வுக்கு முன்னர் IV அகிலத்தை உடனடியாக மீள-ஸ்தாபிக்கத்தக்க சூழ்நிலைமைகளில் உள்ள கூறுகளில், அங்கு இருக்ககூடிய முற்றிலும் எழுத்துவகைக்குரிய எவ்விதமான அரசியல் வேறுபாடுகளையும் ஒரு முன்னைய தீர்வாக இருத்துகையில், நாம் சர்வதேசப் புரட்சிகர அமைப்பை, IV ஐ, அனைத்து வகையான வேறுபாடுகள் தொடர்பாக ஒரு துல்லியமான அரசியல் வரையறுப்பின் அடிப்படையில் எழுப்புவோம். சர்வதேசக் கட்சியை அமைப்பது புரட்சிகர மார்க்சிசத்தை குறுங்குழுவிடமிருந்து பிரிக்கும் வேலைத்திட்டப் புள்ளி ஆகும்.

இவ்வாறு நான்காம் அகிலமானது, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து கிடைக்கும் வரலாற்றுப் படிப்பினைகள் எதையும் விவாதிக்காத “குறுங்குழுவாத-எதிர்ப்பு” உடன்பாட்டின் அடிப்படையில் மற்றும் CRFI ஆதரவாளர் ஒவ்வொருவரும் அதன் சொந்த தேசிய சந்தர்ப்பவாத அரசியலை விமர்சனம் அல்லது குறுக்கீடு எதுவுமின்றி பின்பற்றுதற்கு தொடர்ந்து சுதந்திரமாக இருப்பர் என்ற உடன்பாட்டின் அடிப்படையில், “மீளஸ்தாபிக்கப்பட” இருந்தது.

EEK (Workers Revolutionary Party) ஐ பொறுத்தவரை, இது சிரிசாவின் சுற்றுவட்டத்தில் வேலை செய்வதை ஒரு கூறாகக் கொண்டிருப்பதுடன், அதனைப் பற்றி பிரமைகளையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. சிரிசாவின் ஜனவரி 2015 தேர்தல் வெற்றியை, கிரேக்கத் தொழிலாள வர்க்கத்திற்கான வெற்றி என வாழ்த்திக்கொண்டு, இந்த முதலாளித்துவக் கட்சியை இடதுக்குத் தள்ளமுடியும், “முதலாளித்துவ வர்க்கத்துடன் முறிவுக்கு” நிர்பந்திக்க முடியும் என்ற நிலைப்பாட்டை EEK முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது.

சிரிசா பற்றிய அதன் முன்னிலைப்படுத்தலுடன் மற்றும் சிரிசா கிரேக்கத் தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டிய ஒரு முதலாளித்துவக் கட்சி என்று எச்சரித்ததற்காக ICFI- ஐ அது “குறுங்குழுவாதி” எனத் தாக்கியதுடன் சேர்ந்து, EEK இந்த வரலாற்றுக் காட்டிக்கொடுப்பில் ஒரு துணைப்பாத்திரம் ஆற்றியது.

Partido Obrero அதன் சொந்த குறுகிய தேசிய சந்தர்ப்பவாதக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது, அதனைப் பொறுத்தவரை CRFI என்பது ஒரு “சர்வதேச” மூடுதிரையை வழங்கலை அர்த்தப்படுத்துகிறது. 1964ல் அதன் ஸ்தாபிதத்திற்குப் பின்னர் விரைவில், PO ஆர்ஜென்டினிய தேசிய சந்தர்ப்பவாதி நவ்வெல் மொரேனோ ஆல் நிறுவப்பட்ட மொரேனோவாதம் என்று அழைக்கப்பட்ட பப்லோவாத வலதுசாரிப் போக்கு பற்றி மேலோட்டமான விமர்சனங்களை, மொரேனோவாதிகளுடனேயே கூட்டுக்களைப் பின்பற்றுவதை மையப்படுத்தியிருந்த ஒரு அரசியல் நடைமுறையுடன் பிணைத்துக் கொண்டிருக்கிறது.

2017ல் PO தலைவர் அல்தமிரா, மொரோனோவாத சோசலிச தொழிலாளர் கட்சியை (Partido de los Trabajadores Socialistas — PTS) விமர்சித்தார், “Podemos in diapers,” என சுட்டிக்காட்டி விவரித்தார், ஸ்பெயினின் ஆளும் ஸ்தாபகத்திற்குள் தன்னையே ஒன்றிணைத்துக்கொண்ட முதலாளித்துவ “இடது” கட்சியைக் குறிக்கும் குறிப்பு அது. ஆனால் அதே ஆண்டு, PO மீண்டும் ஒருமுறை PTS, இடது முன்னணி என்று அழைக்கப்படும் (FIT), இவற்றுடன் கோட்பாடற்ற ஒரு கூட்டில் நுழைந்துகொண்டு, எந்த விமர்சனங்களையும் மாக்ரி-எதிர்ப்பு (Mauricio Macri) ஜனரஞ்சகவாதம் எனும் அளவீட்டுடனான குறைந்தபட்ச வேலைத்திட்டம் மற்றும் அதிக பாராளுமன்ற பதவிகளுக்கான வேட்கை என்பவற்றுக்கு அடிபணியச்செய்தது. மொரேனோவாதிகளுடனும் பெரோனிய கிர்ச்னர் (கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர்) பிரிவுடனும் PO கொண்ட சர்ந்தர்ப்பவாத சூழ்ச்சிக் கையாளல்கள் ஆகியன ஆர்ஜென்டினிய தொழிலாளர்களுக்கான பொடேமோஸ் அல்லது சிரிசா பாணி பொறி ஒன்றைத் தயார்செய்தலை நோக்கி வழிநடத்தப்பட்டது.

புவேனோஸ் அயர்சில் நடைபெற்ற அணிதிரள்வில் அல்தமிரா தனது உரையில், “இந்தப் போராட்டத்திற்கான வெற்றியில் Partido Obrero வையும் இடது முன்னணியையும் இறுக இணைத்துவிட்டால், குறுகிய காலத்தில், நாம் அதிகாரத்திற்கான வேட்பாளர்களாக இருப்போம்” என்று அறிவித்து, கருச்சிதைவிற்கான உரிமைக்காக ஆர்ஜென்டினாவில் நடைபெறும் போராட்டத்திற்கு சிறப்பு வலியுறுத்தல் அமைத்துக்கொடுத்தார்.

PO தலைவர் தனது சொந்த இயக்கத்தைப் பற்றிப் பேசுகையில், அதேபோல ஆர்ஜென்டினிய மொரேனோவாதிகளான PTS உடன் சந்தர்ப்பவாத தேர்தல் முன்னணியைப் பற்றிப் பேசும்பொழுது, கருச்சிதைப்பை சட்டரீதியாக்கும் மசோதாவை ஆதரிப்பதில் உறுதிப்படுத்திக் கூறல்களில் அவர்களுடைய பங்கின் விளைவாக “அதிகாரத்திற்கான வேட்பாளர்களாக” ஆவதில், அது ஒரேயொரு விடயத்தை அர்த்தப்படுத்தும். அதிகாரத்தைக் கைப்பற்றவும் தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவவுமான ஒரு புரட்சிர இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அணிதிரளலைப் பற்றி அவர் பேசவில்லை. மாறாக, ஆர்ஜென்டினிய முதலாளித்துவத்தின் உக்கிரமான நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், சிரிசா கிரீஸில் செய்ததுபோல அதிகமாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கு இடது முன்னணி (FIT) அழைக்கப்படும் என்ற சாத்தியத்தை அவர் ஆழ்ந்து சிந்தனை செய்கிறார்.

கட்சி, அரசு அதிகாரத்திற்காகத் தயார்செய்யும் விதமாக, PO தலைமையானது அரசு உறவுகளை ஸ்தாபிக்கிறது. அதுதான் OKP (ஸ்ராலினிச-சார்பு ஐக்கிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் டரியா மிட்டினாவுடனான உறவை இறுகப்படுத்துவதன் உண்மையான பொருளாகும்.


விளாடிமிர் புட்டினுடன் டரியா மிட்டினா (வலதில் இருந்து இரண்டாவது)

CRFI மாநாட்டிற்கு அதன் பங்களிப்பில், PO “ரஷ்யாவிலும் சரி சீனாவிலும் சரி முதலாளித்துவ வர்க்கம் ஒரு வர்க்கமாக எழவில்லை, இரு சம்பவங்களிலும் அது அரசால் மத்தியத்துவம் செய்யப்படுகிறது, அது ‘முதலாளித்துவத்திற்கு-முந்தைய’ அதிகாரத்துவ கட்டமைப்பின் பெரும்பகுதியைத் தொடர்ந்து வைத்திருக்கிறது”. PO புட்டினையும் ஜி ஜின்பிங்கையும் தோன்றியிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் “தங்களின் அரசுகள் சிதறுண்டுபோவதைக் கட்டுப்படுத்துவதற்கான தேவைக்கும்” இடையில் சமநிலைப்படுத்தும் “சிறப்புவகை போனபார்ட்டிஸ்டுகளாக” குறிப்பிடுகிறது.

இந்த நவ-பப்லோவாத முன்னோக்கின் கீழே, புட்டின் ஒருவகை ஏகாதிபத்திய எதிர்ப்பு மாற்றீடாய், அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு ஒரு எதிரெடையாய் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறார் என்ற கருத்துரு இருக்கிறது. இலத்தின் அமெரிக்காவிற்குள்ளே சீனா, ரஷ்யா இரண்டும் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியைக் கொண்டிருக்கையில், இந்தக் கண்ணோட்டமானது அரசு கொள்கையில் ஸ்தூலமான தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

Partido Obrero (தொழிலாளர் கட்சி - PO) போன்ற கட்சியின் சர்வதேச அரசியல் என்பது எப்பொழுதும் தேசிய அரசியலின் ஒரு நீட்டிப்பே ஆகும். ஒரு வலதுசாரி சக்தியான ரஷ்ய ஸ்ராலினிசத்துடன் ஒரு கூட்டை நோக்கித் திரும்புவது, ஆர்ஜென்டினாவிற்குள்ளேயேயான அதன் சந்தர்ப்பவாத தேர்தல் நோக்குநிலையுடன் கொண்ட ஒரு நிலைப்பாடாகும். PO வின் பங்களிப்பு உறுதிப்படுத்துவது போல, FIT முன்னணியில் அது மொரேனோவாதிகளிடம் ஐக்கியம் கொண்டதானது, “கிர்ச்சனரிசத்தின்- அதாவது பெரோனியத்தின் இடது பிரிவுடன் கூட்டுறவு வைத்திருப்பதில் தன்னையே நியாயப்படுத்தும் தேர்தல் ஒத்துழைப்பு” ஒன்றின் மீது நிறுவப்பட்டது.

நான்காம் அகிலத்தை “மீளஸ்தாபித்தல்” எனும் மூடுதிரையின் கீழ், முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் வலதுசாரி நீரோட்டங்களுடனும்கூட ஒரு கூட்டு சம்பந்தப்படுவதைத் தயாரித்துவரும் ஒரு ஆழமான பிற்போக்கு அச்சு இருக்கிறது.

புவேனோஸ் அயர்சில் நடைபெற்ற மாநாடும் நான்காம் அகிலத்தை ஸ்ராலினிசத்துடனான கூட்டில் “மீளஸ்தாபித்தல்” எனும் பாசாங்கும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். துல்லியமாக ஒவ்வொரு கண்டத்திலும் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி கொண்டுவருகின்ற புள்ளியில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துவதற்கான புதிய அரசியல் கருவிகளை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நான்காம் அகிலத்தை ஸ்தாபித்து 80 ஆண்டுகளும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாக்க நான்காம் அகிலத்திற்குள் பிளவு ஏற்பட்டு அனைத்துலக் குழுவை அமைத்து 65 ஆண்டுகளும் ஆகிறது. நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் படிப்பினைகளை நசுக்குவதன் அடிப்படையில் சர்வதேசப் போக்கு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியானது தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதைத்தான் விளைவிக்கும்.

ஆர்ஜென்டினாவிலும் இலத்தின் அமெரிக்காவிலும் உள்ள ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும், இக்காட்டிக்கொடுப்புக்களின் படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வதும் பப்லோவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒருசமரசமற்ற போராட்டதினூடாக நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்துலகக் குழுவின் நீண்ட போராட்டத்தின் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆர்ஜென்டினா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் அனைவரையும் இந்தப் போராட்டங்களின் ஆவணங்களை அக்கறையுடன் படிக்குமாறும் ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளைக் கட்டுவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரை ஆசிரியர்கள் பரிந்துரை செய்வது:

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக்கொடுத்தது எப்படி ?

நாம் காக்கும் மரபியம்