wsws : Tamil : History
Download the Font

 

இந்த நூல் பற்றிய ஒரு சிறு குறிப்பு

Use this version to print | Send feedback

"ஜனநாயக" புரட்சியின் ஆரம்பக் கட்டமானது, பெப்ரவரி புரட்சியில் இருந்து ஏப்ரல் நெருக்கடி மற்றும் மென்ஷிவிக்குகளும் நரோட்னிக்குகளும் பங்கேற்று மே 6ம் தேதி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் மூலம் அதன் தீர்வு வரை நீள்கிறது. இந்தத் ஆரம்பக்கட்டம் முழுவதிலும், இந்த எழுத்தாளர் அதில் நேரடியாகப் பங்கு பெறவில்லை. பெட்ரோகிராடில் மே 5ம் தேதியன்று கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு சற்று முந்தைய பொழுதுதான் அவர் வந்தார். புரட்சியின் முதல்கட்டம், புரட்சிகர வாய்ப்புக்கள் ஆகியவை என்னால் அமெரிக்காவில் எழுதப்பட்ட கட்டுரைகளில் கூறப்பட்டிருந்தன. என்னுடைய கருத்தில், இக்கட்டுரைகளில் இருந்த அடிப்படை புள்ளிகள் அனைத்தும் லெனினால் அவருடைய "தொலைவில் இருந்து கடிதங்கள்" ("Letters from Afar") என்பதில் கொடுக்கப்பட்ட புரட்சியை பற்றிய பகுப்பாய்வுடன் முழுமையாக இயைந்த நிலையில்தான் உள்ளன.

பெட்ரோகிராடில் நான் வந்து இறங்கிய முதல் நாளில் இருந்தே என்னுடைய பணி போல்ஷிவிக்குகளின் மத்திய குழுவுடன் முழுமையாக ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாகும். பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெல்லப்படுவது தொடர்பான லெனினின் செல்வழியை (Course) நான் இயல்பாகவே முழுமையாகவும் பகுதியிலும் ஆதரித்தேன். விவசாயிகளை பொறுத்தவரையில் எனக்கும் லெனினுக்கும் கருத்து வேறுபாட்டின் நிழல்கூட இருந்ததில்லை. அந்த நேரத்தில் லெனின், வலது போல்ஷிவிக்குகள் மற்றும் அவர்களுடைய முழக்கமான "பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம்" என்பதற்கெதிரான போராட்டத்தின் முதல் கட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். நான் முறையாகக் கட்சியில் நுழைவதற்கு முன் கட்சியின் பெயரால் வெளியிடப்பட்ட ஏராளமான தீர்மானங்கள், பத்திரங்கள் ஆகியவற்றை வரைவதில் நான் பங்கு பெற்றுள்ளேன். கட்சியில் என்னுடைய சம்பிரதாயபூர்வமான நுழைவை மூன்றுமாத காலம் தாமதப்படுத்தியதற்கு ஒரே காரணம் Mezhsrayontsi அமைப்பினதும், பொதுவில் புரட்சிகர சர்வதேசியவாதிகளினதும் சிறந்த பிரிவினரை போல்ஷிவிக்குகளுடன் இணைத்துவிடும் முயற்சியை விரைவுபடுத்தவேண்டிய விருப்பத்தினால்தான். இந்தக் கொள்கையானது, இதேபோல் லெனினுடைய முழுமையான உடன்பாட்டுடன் என்னால் செயல்படுத்தப்பட்டது.

இந்த தொகுதியின் பதிப்பாசிரியர்கள், அந்நேரத்தில் ஒற்றுமையை ஆதரித்து நான் எழுதிய கட்டுரைகளுள் ஒன்றில் போல்ஷிவிக்குகளின் அமைப்புரீதியான ''குறுகிய குழுப்பற்று" இருப்பது பற்றிய குறிப்பு இருக்கிறது என்ற உண்மையின்பால் எனது கவனத்தைக் கொண்டு வந்துள்ளனர். தோழர் சோரின் போன்ற ஆழ்ந்த பண்டிதர்கள் கட்சி யாப்புக்களுள் ஒன்றினது பந்தியின் மீதான உண்மையான வேறுபாடுகளில் இருந்து நேரடியாகவும் விரைவிலும் இந்தச் சொற்றொடரை அனுமானம் செய்வதில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். குறிப்பாக வாய்மூலமும் செயற்பாட்டின் மூலமும் என்னுடைய உண்மையான, அமைப்புரீதியான பிழைகளை ஒத்துக் கொண்டுள்ள அளவில் இதன் நிமித்தம் எந்த விவாதத்திலும் ஈடுபடுவது தேவையில்லை என நான் பார்க்கிறேன். ஆனால் மேலே உள்ள மேற்கோளுக்கு அதிக குழப்பமற்ற வாசகர் எளிமையான உடனடி விளக்கத்தை காணவியலும். அக்காலக்கட்டத்தில் இருந்த ஸ்தூலமான நிலைகள் மூலம் அது விளக்கப்பெறும். Mezhrayontsi தொழிலாளர்களிடையே அக்கட்டத்தில் பெட்ரோகிராட் குழுவின் அமைப்பு ரீதியான கொள்கைகள் பற்றிக் கடுமையான அவநம்பிக்கை இன்னும் நிலவியிருந்தது. ''குழுப்பற்றை'' அடிப்படையாய் கொண்டிருந்த வாதங்கள், அச்சூழ்நிலையில் எப்பொழுதுமே இருப்பது போல் Mezhrayontsகாரர்களிடம் அனைத்து வகையான "அநீதி" பற்றி இருந்த குறிப்புக்களில் வெளிப்பட்டன. இந்த வாதங்களை நான் பின்வருமாறு மறுத்தேன்: கடந்த காலத்திலிருந்து மரபுவழியாக குறுகிய குழுப்பற்று இருக்கிறது, ஆனால் அது குறைந்துபோக வேண்டும் என்றால், Mezhrayontsi தன்னுடைய சொந்த தனிப்பிரிவாக இருத்தலையும் முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.

முதலாம் சோவியத் பேராயத்திற்கு முற்றிலும் வாதத்திற்காக நான் கூறிய கருத்தான அது 12 பேஷேகோனோவ்கள் கொண்ட அரசாங்கத்தை கொண்டிருக்கிறது என்பது, சிலராலும், சுகானோவாலும், நான் அதைக் கூறியதற்கு காரணம் ஒன்றில் தனிப்பட்ட முறையில் பேஷேகோனோவ்களுக¢கு அடிபணிந்திருந்தேன் அல்லது ஒரு சிறப்பு அரசியல் நிலைப்பாட்டை லெனினிடம் இருந்து மாறுபட்ட வகையில் நான் கொண்டிருந்தேன் என்பதை சுட்டிக்காட்டுறது என விளக்கம் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் அபத்தமானதாகும். எமது கட்சி, மென்ஷிவிக்குகள், சமூகப் புரட்சியாளர்கள் தலைமையில் சோவியத்துக்கள் அதிகாரத்தை ஏற்கவேண்டும் என்று கோரியபோது, அது அதன் மூலமாய் பேஷேகோனோவ்கள் இருந்த அரசாங்கத்தைத்தான் கோரியது. இறுதிப்பகுப்பாய்வில், பேஷேகோனோவ், ஜேர்நோவ் மற்றும் டான் இவர்களுடைக்கிடையே கொள்கையளவிலான வேறுபாடு ஏதும் கிடையாது. இவர்கள் அனைவருமே முதலாளித்துவத்தில் இருந்து பாட்டாளி வர்க்கத்திற்கு அதிகாரம் மாற்றப்படுவதற்கு சமமான முறையில் பிரயோசனமானவர்கள். ஒருவேளை புள்ளிவிவரத்தில் பேஷேகோனோவ் கூடுதலான தேர்ச்சி பெற்றிருந்திருக்கக் கூடும், அதையொட்டி அவர் டெசெரெடெல்லி அல்லது ஷேர்னோவ் என்ற நடைமுறையாளர்களை விட கூடுதலான கவர்ச்சியை கொடுத்திருக்கலாம். ஒரு டசின் பேஷகோனோவ்கள் என்பது குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் விசுவாசமுள்ள ஒரு டசின் பிரதிநிதிகள் என்று பொருள்கொள்ளவேண்டுமே அன்றி கூட்டணி என்பதல்ல. எமது கட்சியின் தலைமையில் பீட்டர்ஸ்பேர்க் மக்கள் "பத்து முதலாளித்துவ மந்திரிகள் வீழ்க" என்ற கோஷத்தை எழுப்பியபோது, அதன்மூலம் அவர்கள் அந்த மந்திரிகளுடைய பதவிகள் மென்ஷிவிக்குகள் அல்லது நாரோட்னிக்குகளால் நிரப்பப்பட வேண்டும் என்று கோரினர். "திருவாளர் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளே, காடெட்டுக்களை அடித்து விரட்டுங்கள்! அதிகாரத்தை உங்களுடையை கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள்! அரசாங்கத்தில் 12 (அல்லது எவ்வளவு வேண்டுமானாலும்) பேஷேகோனோவ்களை இட்டு நிரப்புங்கள், ஆனால் நாங்கள் உறுதி கூறுகிறோம், இயன்ற அளவு "அமைதியான முறையில்" உங்களை உங்கள் பதவியில் இருந்து அகற்றும் நேரம் வந்தவுடன் வெகு விரைவில் வெளியேற்றுவோம்!" இங்கு ஒன்றும் சிறப்பு அரசியல் ந¤லைப¢பாடு ஏதும் கிடையாது. லெனின் மீண்டும் மீண்டும் கூறியதுதான் இங்கும் கூறப்பட்டது.

இந்நூலின் பதிப்பாசிரியரான தோழர் லென்ட்ஸ்னர், விடுத்த எச்சரிக்கை பற்றி அடிக்கோடிட்டு கூறுதல் தேவை என்று நான் கருதுகின்றேன். அவர் குறிப்பிட்டதுபோல், மீண்டும் பதிக்கப்பட்டுள்ள இந்த நூலில் இருக்கும் உரைகளில் பெரும்பாலானவை பிழைகள் நிறைந்தவை கூட, பேச்சில் இருந்து அப்படியே எடுக்கப்பட்டவை என்று கூறவியலாது. சமரசவாத பத்திரிகை நிருபர்கள் கொடுத்த தகவலின் படி வெளியானவை, பகுதி அறியாமை நிறைந்தும் பகுதி தீய எண்ணத்துடனும் இருந்திருக்கலாம். இவ்விதத்தில் இருக்கும் சில ஆவணங்களை விரைந்து மேலீடாக ஆய்வுசெய்து, இவை அனைத்தையும் ஓரளவிற்கு சரி செய்து ஓரளவிற்கு மேலதிக விபரத்தை கொடுக்கவேண்டும் என்ற எனது ஆரம்பத் திட்டத்தை நிராகரிக்க வைத்துவிட்டது. அவற்றை அப்படியே இருக்கவிடுவோம். அவை ''மறு புறத்தில் இருந்து'' வந்திருந்தபோதிலும் கூட தங்களுடைய சொந்தப் பாணியில் அவையும் கூட ஒரு சகாப்தத்தின் ஆவணங்கள் ஆகும்.

இந்த நூல் தோழர் லென்ட்ஸ்னருடைய கவனமான, திறமையான பணி இல்லாமல் இருந்தால் அச்சேறியிருக்காது. அவரும் அவருடைய உதவியாளர்களான தோழர்கள் ஹெல்லெர், கிரைஷனோவ்ஸ்கி, ரோவென்ஸ்கி மற்றும் ஐ.ரூமெர் ஆகியோர்தான் குறிப்புக்களை தொகுப்பதற்கு பொறுப்பையும் கொண்டிருந்தனர்

அவர்களுக்கு என்னுடய தோழமையுடனான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். இத்தொகுதியையும் அதேபோல எனது மற்றைய நூல்களையும் தயாரிப்பதில் எனது மிக நெருக்கமான உடனுழைப்பாளர் எம்.எஸ். கிளாஸ்மனால் ஆற்றப்பட்ட பிரம்மாண்டமான பணியை குறிப்பாக நான் கவனத்தில் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த மிகச் சிறந்த தோழர், தொழிலாளி, மனிதர் மிகவும் துயரம் தோய்ந்த முறையில் மரணமடைந்ததில் ஆழமான மனவேதனை உணர்வுகளுடன் இவ்வரிகளை முடிக்கிறேன்.

 

 


Copyright 1998-2005
World Socialist Web Site
All rights reserved