மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஐரோப்பாவில் கொரோனா வைரஸினால் ஒவ்வொரு 17 விநாடிகளிலும் ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார். நவம்பர் 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், ஐரோப்பாவில் 29,000 க்கும் அதிகமானோர் தங்களுடைய உயிர்களை இழந்ததாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளதுடன், தினசரியாக COVID-19 வைரஸ் இறப்புகள் தொடர்ந்து 4,000 க்கும் அதிகமானவைகளாக இருக்கின்றன. இந்த கொடூரமான வேகத்தில் மரணங்கள் தொடர்ந்தால், சுகாதார அமைப்புமுறைகள் நிலைகுலையும் போது, அவைகள் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன, ஐரோப்பாவில் மட்டும் ஒவ்வொரு மாதமும் 120,000 முதல் 150,000 பேர்கள் வரை தங்களுடைய உயிர்களை இழப்பார்கள்.
ஒவ்வொரு பெரிய ஐரோப்பிய நாட்டிலும் பதிவான மரணத்தின் அளவுகள் அதிர்ச்சியூட்டுகின்றன. கடந்த வாரம் பிரான்சில் தினசரி சராசரியாக 500 பேர்கள் இறந்துள்ளனர். இத்தாலியில், செவ்வாயன்று 731 பேர்கள் உயிர்களை இழந்தனர், புதன்கிழமையன்று 753 பேர்கள் உயிரிழந்தனர். அதே நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஸ்பெயினில் 435 மற்றும் 351 ஆகவும், பிரித்தானியாவில் 598 மற்றும் 529 ஆகவும் இருந்தன. பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள செய்தி ஊடகங்களால் வெற்றிக் கதையாக நீண்ட காலமாக புகழப்பட்ட ஜேர்மனியில் கூட, செவ்வாயன்று மட்டும் 357 பேர்கள் இறந்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின் காட்டுமிராண்டித்தனத்திற்குப் பின்னர் கண்டமானது இந்த அளவிலான பாரிய மரணங்களைக் காணவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடந்ததைப் போலவே, ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் ஆளும் வர்க்கமும் மில்லியன் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாக்க அவசியமானது என்றும் தீர்மானித்துள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று மட்டுமே விபரிக்கக்கூடியதற்கு அரசியல் பொறுப்பை அவர்கள் ஏற்கின்றார்கள்.
ஐரோப்பிய அரசியல்வாதிகள் COVID-19 க்கான அணுகுமுறையை டிரம்ப் நிர்வாகத்தால் அதன் ஆரம்ப கட்டங்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பேரழிவு கையாளுதலில் இருந்து வேறுபடுத்தினாலும், கண்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் ஒரு கொள்கையை பின்பற்றுகின்றன. ஐரோப்பிய அரசியல்வாதிகள் COVID-19 க்கான அவர்களின் அணுகுமுறையை ட்ரம்ப் நிர்வாகத்தால் அதன் ஆரம்ப கட்டங்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பேரழிவுகரமான கையாளுதலில் இருந்து வேறுபடுத்தினாலும் கண்டத்தின் அனைத்து அரசாங்கங்களும் பாசிச எண்ணம் கொண்ட வெள்ளை மாளிகையில் இருப்பவர்களைக் காட்டிலும் குறைவில்லாத குற்றவியல் மற்றும் படுகொலை கொள்கைகளைத்தான் செயற்படுத்துகின்றன. இது "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையாகும், இது மனித உயிர்களின் மதிப்பை பொருட்படுத்தாமல், வைரஸ் மக்கள்தொகையில் பரவ அனுமதிக்கிறது, இதனால் பெருவணிகங்கள் தொடர்ந்து இலாபத்தை பெறமுடியும் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கு தாரளமாக பங்குகளின் கொடுப்பனவுகளை பராமரிக்க முடியும்.
பாரிய கொலைக்கான இந்த கண்டத்தின் பரந்த மூலோபாயத்தின் மாதிரி சுவீடன் ஆக இருக்கிறது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, வணிகங்கள் திறந்த நிலையில் இருக்க அனுமதிப்பதற்கு ஆதரவாக அனைத்து தேசிய மற்றும் பிராந்திய பொது முடக்க நடவடிக்கைகளையும் நிராகரிக்க சுவீடிஷ் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் விளைவாக உலகின் மிக உயர்ந்த இறப்பு விகிதங்களில் ஒன்றாக இந்த நாடு இருக்கிறது, ஏனெனில் மோசமாக பராமரிக்கப்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லங்கள் வழியாக வைரஸ் பரவியது. 80 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு பராமரிப்பு வழங்க ஸ்டாக்ஹோம் பிராந்தியத்தில் அதிகமான மருத்துவமனைகள் மறுத்துவிட்டதால் பல வயதான குடியிருப்பாளர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளமுடியாமல் இறந்துள்ளனர்.
இந்த கொடூரமான நிலைமைகளானது அரசாங்கக் கொள்கையின் விரும்பிய முடிவுகளாக இருந்தன, அதாவது எவ்வளவு விரைவோ அவ்வளவு விரைவில் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்தை” அடைவதாக அது இருந்தது. ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைத் திறந்து வைப்பதற்கான தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில், சுவீடிஷ் அரச தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் தனது ஃபின்லாந்து பிரதிநிதிக்கு மார்ச் நடுப்பகுதியில் எழுதினார், அதாவது “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்தை விரைவாக அடைவதற்கு பள்ளிகளைத் திறந்து வைப்பதற்காக ஒரு புள்ளியை நாம் பேசலாம்.”
பெருநிறுவன இலாபங்களுக்கும் மரணத்திற்கும் சர்வதேச அளவில் உத்தரவாதம் அளிக்கும் ஆளும் உயரடுக்கின் கொள்கைக்கான விளம்பரப் பையனாக டெக்னெல் ஆனார். இது Foreign Affairs இதழில் மே மாத கட்டுரையில், “சுவீடனின் கொரோனா வைரஸ் மூலோபாயம் விரைவில் உலகினுடையதாக இருக்கும்” என்று சுருக்கமாக தலைப்பிடப்பட்டுள்ளது. "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்தை" அடைய டெக்னலின் முயற்சி கூட நெருங்கவில்லை என்பது இந்த சமூக விரோதிகளுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அதிக தொற்று விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக சுவீடன் உள்ளது, மேலும் கடந்த இரண்டு வாரங்களாக இறப்பு விகிதம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது, நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அதன் அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது.
திடீர் வேலைநிறுத்தங்கள் மற்றும் வசந்த காலத்தில் தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்களால் ஆளும் உயரடுக்கின் மீது கட்டாயப்படுத்தப்பட்ட பொது முடக்க நடவடிக்கைகள் நீக்கப்பட்டவுடனேயே, அனைத்து அரசியல் பிரிவுகளின் ஐரோப்பிய அரசாங்கங்களும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு ஒருங்கிணைந்த முயற்சியையும் நாசப்படுத்துவதையும் பொருளாதார உற்பத்தியையும் இலாப ஓட்டத்தை வங்கிகளுக்கும் மற்றும் நிதியத் தன்னலக்குழு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் உறுதி செய்வதையும் தான் அமைத்துக் கொடுத்தன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளால் 2 ட்ரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான பிணையெடுப்பு நடவடிக்கைகளானது வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. முன்னோடியில்லாத வகையில் இந்த செல்வத்தை அடிமட்டத்திலிருந்து சமூகத்தின் உச்சியிலுள்ளவர்களுக்கு மாற்றுவது தொழிற்சங்கங்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது, இது பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் தொழிற்சங்கங்களால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையால் காட்டப்பட்டுள்ளது, ஐரோப்பிய ஒன்றியமானது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான மாபெரும் கையளிப்புகளை தொழிற்சங்கங்கள் அதில் பாராட்டுகின்றன.
கண்டம் முழுவதிலுமுள்ள அரசாங்கங்களானது அவர்களின் அரசியல் மூலத்தை பொருட்படுத்தாமல், பொருளாதாரத்தை முழுமையாக நிலைநிறுத்த அனைத்துச் செலவிலும் இயங்க வைக்கத் தீர்மானித்தன, மேலும் பெற்றோர்கள் தொழிலாளர் சக்தியிலிருந்து அகற்றப்படாமல் இருக்க குழந்தைகளை மனதில் கொள்ளும் சேவையாகப் பள்ளிகளைத் திறந்து விடுகின்றன. ஜேர்மனியின் பழமைவாத தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயக / சமூக ஜனநாயகக் கூட்டணி முதல், முன்னாள் முதலீட்டு வங்கியாளர் இம்மானுவேல் மக்ரோனின் பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் சமூக ஜனநாயக PSOE மற்றும் “இடது ஜனரஞ்சக” போடெமோஸுக்கு இடையிலான ஸ்பானிஷ் கூட்டணி வரை, இந்த அரசியல் சேர்க்கைகள் அனைத்தும் ஒரு “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” தற்போதைய பேரழிவிற்கு நேரடியாக வழிவகுத்த மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டிருப்பதை மேற்பார்வையிட்டன. ஜேர்மனியில் பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சி தலைமையிலான மாநில அரசாங்கங்களானது, துரிங்கியா இடது கட்சி மந்திரி போடோ ராமேலோவினால் “சுவீடிஷ் மாதிரி” பாராட்டுதல் காட்டியவாறு,” பிரிட்டனிலுள்ள போரிஸ் ஜோன்சனின் பலமான வலது டோரி அரசாங்கத்தை போல பெருநிறுவனங்களின் ஆணைகளை சுமத்துவதில் அதேயளவு இரக்கமற்றவைகள் தான்.
சடலங்கள் குவிந்து கொண்டே இருக்கும் நிலையில், ஐரோப்பிய ஆளும் வர்க்கம் போக்கை மாற்றுவதற்கான எண்ணம் கொண்டிருக்கவில்லை. மக்ரோன் "வைரஸுடன் வாழ" ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிக மிக சாதாரணமாக அறிவித்துள்ளார், ஒரு தடுப்பூசி சில மாதங்களே வரக்கூடும் என்ற மூர்க்கத்தனமான முன்மொழிவு ஆகும்.
பள்ளிகள் மூடப்படுவதற்கு பெருநிறுவன மற்றும் அரசியல் உயரடுக்கினரின் கடுமையான எதிர்ப்பானது வைரஸ் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜேர்மனியில், அக்டோபர் மாத தொடக்கத்திற்கும் நவம்பர் தொடக்கத்திற்கும் இடையில் குழந்தைகளிடையே தொற்று பத்து மடங்கு உயர்ந்தது. ஆனால் நாட்டின் 16 மாநில அமைச்சர் தலைவர்கள் திங்களன்று சான்சிலர் அங்கேலா மேர்க்கெலை சந்தித்தபோது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முககவசங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
ஜேர்மனிய மாநிலமான பவேரியாவின் மந்திரி தலைவர் மார்கஸ் சோடர் (Markus Söder) சமீபத்தில் வீடியோக்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட போது, பள்ளிகளைத் திறந்து வைப்பதற்கான ஆளும் உயரடுக்கின் உறுதியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார், “பொருளாதார பொது முடக்கத்தைத் தடுக்க நாங்கள் விரும்பினால் எங்கள் குழந்தைகள் பராமரிக்க பட வேண்டும். இதுதான் உள்ளடக்கம்: பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்களும் பொருளாதாரத்தை இயங்க வைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.”
தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் உடல் நலத்திற்கு ஆபத்து விளைவிக்கத் தயாராக இல்லை, மற்றும் Deutsche வங்கி, BNP Paribas வங்கி, வோல்க்ஸ்வாகன் மற்றும் எயர்பஸ் போன்ற பெருநிறுவனங்கள் மேலும் லண்டன், பிராங்க்பேர்ட் மற்றும் பாரிஸ் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்ட பரந்த செல்வம் ஆகியவைகளின் கீழ்நிலைகளைப் பாதுகாக்க இறக்கக்கூடும் சாத்தியமுள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் மோசமான காற்றோட்டமான அறைகளில் 35 மாணவர்கள் வரை ஒன்றாக நெரிசலில் சிக்கியுள்ள நிலையில், சமீபத்திய வாரங்களில் பிரெஞ்சு பள்ளிகளில் வேலைநிறுத்தங்கள் வெடித்தன. இந்த ஆர்ப்பாட்டங்கள் கிரீஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகளை ஆக்கிரமித்ததையும், போலந்தில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து வந்தன. ஜேர்மனிய நகரங்களான வோர்ம்ஸ் மற்றும் எசென் பள்ளிகளிலுள்ள மாணவர்கள் ஆபத்தான நிலைமைகளை எதிர்த்து பாதுகாப்பான கல்விக்கு அழைப்பு விடுக்க பள்ளி வேலைநிறுத்தங்களுக்கான திட்டங்களை இந்த வாரம் அறிவித்துள்ளனர்.
அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தி, வைரஸைக் கட்டுப்படுத்த நேருக்குநேர் கல்வியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கோரிக்கையை அதிகரித் அளவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆதரிக்கின்றனர். இருப்பினும், COVID-19 க்கு எதிரான ஒரு பகுத்தறிவு கொள்கைக்கான போராட்டம் ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அரசியல் பிரச்சினையாகும். ஐரோப்பாவிலும் உலகெங்கிலுமுள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள் சோசலிசத்திற்காக போராட ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தை கட்டமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
வசந்த கால பொது முடக்கம் உட்பட இதுவரையிலான பெருந்தொற்று நோயின் அனுபவமானது, முதலாளித்துவத்துடன் COVID-19 க்கு எதிரான விஞ்ஞானரீதியான போராட்டத்தின் பொருத்தமின்மையை எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர்கள் வேலையின்மை காப்பீட்டுக் கொடுப்பனவுகள் அல்லது வருமானம் எதுவும் இல்லாமலும் மிகவும் மோசமாக கைவிடப்பட்டுள்ளனர், செயற்பூர்வமற்ற இணையவழி கற்றல் திட்டங்களை கொண்ட இளைஞர்கள், மேலும் சிறு வணிகங்கள், கலாச்சார மற்றும் கலை அரங்குகள் ஆகியவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளான சுகாதார சேவைகள், பொருள் போக்குவரத்து அல்லது உணவு விநியோகம் ஆகிய துறைகளிலுள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களின் ஒழுங்கு முறையற்ற விநியோகத்தையும் பெற்றதோடு அவைகள் இன்னும் மேம்பாடற்ற தரத்திலானவைகளாவும் இருந்தன.
டிரில்லியன் கணக்கான யூரோக்கள் பெரும் செல்வந்தர்களிடம் ஒப்படைக்கப்படுவதால், முக்கியமான சமூகத் தேவைகளுக்கு நிதியளிக்க வளங்கள் இல்லை என்ற கூற்று ஒரு அபத்தமான பொய்யாகும். இந்த வளங்கள் உள்ளன, ஆனால் அரசியல் ஸ்தாபகம் அவற்றை மக்கள்தொகைக்கு கிடைக்கச் செய்வதை மூர்க்கத்தனமாக எதிர்த்தது, மாறாக அவைகளை நிதியப் பிரபுத்துவத்திடம் ஒப்படைக்க அயராது உழைத்தது. உண்மையிலேயே கொடூரமான அளவில் மரணங்களைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக மிக இன்றியமையாத இந்த வளங்களை பறிமுதல் செய்வதற்கான போராட்டத்தை மேற்கொள்வதாகும்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க, எல்லா இடங்களிலும் பணிக்கு மீண்டும் செல்லும் உந்துதலை செயற்படுத்த உதவியுள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு சொந்த சுயாதீனமான அமைப்புக்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி மற்றும் பணியிடத்திலுமுள்ள சாமானிய பாதுகாப்பு குழுக்களானது தேசிய எல்லைகளைக் கடந்து தங்களுடைய போராட்டங்களை ஒருங்கிணைப்பு செய்வது, வைரஸ் பரவுவதை கண்காணிப்பதற்கும் மற்றும் நிறுத்துவதற்கானதுமான திறவுகோல் மட்டுமல்ல; அவைகள் ஐரோப்பா தழுவிய மற்றும் சர்வதேச பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் கட்டமைப்பாக சேவை செய்ய முடியும், பெருந்தொற்று நோய்க்கு விஞ்ஞானரீதியான மற்றும் மனிதாபிமான விடையிறுப்புக்கு தேவையான வளங்களைக் கைப்பற்ற முடியும்.
அத்தகைய விடையிறுப்பிற்கான முன்நிபந்தனை, பெரும் செல்வந்தர்களின் தீயவழியில் ஈட்டப்பட்ட செல்வத்தை பறிமுதல் செய்வதும் மாபெரும் பெருநிறுவனங்கள் ஜனநாயக முறையில் தொழிலாள வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பொது உடைமை பயன்பாடுகளுக்கு மாற்றுவதும் ஆகும். முதலாளித்துவ தன்னலக் குழுக்களின் கீழ்த்தரமான இலாபங்களை அல்ல, சுகாதாரத்தையும் மனித உயிர்களையும் பாதுகாப்பதன் அடித்தளத்தில் சமூக முடிவுகள் வழிநடத்தப்பட வேண்டும். ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளவும், சோசலிச வழியில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைக்கவும், மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதற்கான ஒரு போராட்டமே இதனுடைய அர்த்தமாகும்.