உலக சோசலிச வலைத் தளம் (WSWS)என்பது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினதும், உலகெங்கிலும் உள்ள அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளினதும் இணைய தள வெளியீடாகும்.
சோவியத் ஒன்றியம் மற்றும் மூன்றாம் அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்த சோசலிச புரட்சியின் உலகக் கட்சியே நான்காம் அகிலமாகும்.
அனைத்துலகக் குழு என்பது நான்காம் அகிலத்தின் தலைமையாகும். அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகர் ஜேம்ஸ் பி. கனன் தலைமையிலான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும் மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாத பிரிவுக்கும் இடையே நான்காம் அகிலத்தில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இது நவம்பர் 23, 1953 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதன் வரலாறு முழுவதும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மார்க்சிச கோட்பாடுகளை பாதுகாத்தது, இன்று உலகில் புரட்சிகர சோசலிசத்தின் ஒரே பிரதிநிதியாக உள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் புரட்சிகர சக்தியாக அணிதிரட்ட போராடுகின்றன.
நாம் காக்கும் மரபியம்1988 இல் புத்தக வடிவில் பிரசுரிக்கப்பட்டது. 1982-1986 முதல், ICFI யின் முன்னாள் பிரிட்டிஷ் பிரிவின் தேசியவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்க ICFI மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக் நடத்திய அரசியல் போராட்டத்தில் அதன் மூலங்கள் உள்ளது. இது 20 ஆம் நூற்றாண்டில் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை நிலைநாட்டுகிறது.
ஆகஸ்ட் 3-9, 2008 அன்று மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) ஸ்தாபக மாநாட்டில் இந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த பணி, சோசலிசத்திற்கான போராட்டத்தின் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் அனுபவங்களைக் கண்டறிந்து, தத்துவார்த்த, அரசியல் அடித்தளங்களை ஸ்தாபிக்கிறது.
ICFI இன் இந்த அறிக்கை, ICFI 1985-1986 முதல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவின் உடனடிவேளையில் ஆகஸ்ட் 1986 இல் எழுதப்பட்டது. இது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக WRP இன் அரசியல் சீரழிவின் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றியும், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை அது காட்டிக்கொடுத்ததை பற்றியும் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.
1988 இல் எழுதப்பட்ட இந்த தொலைநோக்கு ஆவணம், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மத்தியில் அதிகரித்துவரும் மோதல்; ஆசிய-பசிபிக் கரையோர நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி; சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான இந்த முன்னோக்கு, நான்காம் அகிலம் சஞ்சிகையில் ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கிறது
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே முதலாளித்துவ சுரண்டல், வறுமை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைக்கவும் ஐக்கியப்படுத்தவும் முனைகின்ற ஒரே அரசியல் அமைப்பு ஆகும்.
சர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமையின் பாரம்பரிய நாளைக் கொண்டாடுவதற்காகவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தில் அணிதிரட்டுவதற்காகவும், மே 2, 2020 அன்று, ICFI தனது ஏழாவது ஆண்டு இணையவழி மே தின பேரணியை நடத்தியது.
ஜனவரி 1998ல், ICFI தனது முதல் சர்வதேச கோடைகால பள்ளியை நடத்தியது. அது, அன்றைய எரியும் பிரச்சினைகளுக்கான பதிலானது —வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, பொருளாதார நெருக்கடி ஆழமடைதல், சமூகத்தின் கலாச்சார மட்டத்தின் வீழ்ச்சி மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் அரசியல் முடக்கம்— 20ம் நூற்றாண்டின் படிப்பினைகளை ஆராய்ந்து, உள்ளீர்த்துக் கொள்வதுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்ற முக்கிய முன்மாதிரியை அமைத்தது.
இந்த உரைகள், 20ம் நூற்றாண்டின் சிக்கலான அடிப்படை பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்தின.விரிவுரையாளர்கள் மார்க்சிசத்தின் அடித்தளங்கள், விஞ்ஞானபூர்வ முன்னோக்கு மற்றும் புறநிலை உண்மையைப் பாதுகாத்தல்;முதலாம் உலகப் போரின் மூலங்கள்; ஜேர்மனியில் பாசிசத்தின் எழுச்சி; சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் தோற்றம், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவம் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கலை மற்றும் கலாச்சாரத்தின் சிக்கல்கள் பற்றி உரையாற்றினர்.
இந்த விரிவுரைகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேசியவாத கொள்கைகளுக்கும் சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிச அகிலத்திற்குள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் எதிராக, 1923 இல் ட்ரொட்ஸ்கி நிறுவிய ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பு நடத்திய போராட்டம் தொடர்பான முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று பிரச்சினைகளை விளக்குகிறது.
1917 ம் ஆண்டில், லெனின், ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் செயல்பட்ட ரஷ்ய தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து உலக வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை நிறுவியது.2017 ம் ஆண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு,ஒரு இணையவழி விரிவுரைத் தொடருடன் அதன் நூற்றாண்டு தினத்தை நினைவுகூர்ந்தது.
இந்த விரிவுரைகள் 1982-1995 வரையிலான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றைக் குறிக்கின்றன: தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடு மற்றும் வேலைத்திட்டத்தின் திருத்தங்கள் பற்றிய விரிவான விமர்சனத்தின் ஆரம்ப வடிவமைப்பிலிருந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கழகங்களை கட்சிகளாக மாற்றுவதற்கான முடிவு வரை காணலாம்.