சோசலிச சமத்துவக் கட்சி, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாகும். மனிதகுலம் எதிர்கொள்ளும் அனைத்து பாரிய பிரச்சினைகளுக்கும் —சமத்துவமின்மை, சுரண்டல், போர், சர்வாதிகாரம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு— ஒரு தொழிலாளர் அரசை நிறுவுதல், பொருளாதாரத்தின் மீது ஜனநாயக கட்டுப்பாட்டை ஸ்தாபித்தல், தேசிய-அரசு அமைப்பை முடிவுக்கு கொண்டுவருதல், சமூக சமத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு உலகளாவிய சோசலிச சமூகத்தை கட்டியெழுப்புதல் அவசியம் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு என்ற ஒரு உலகளாவிய சோசலிச இயக்கத்தின் பாகமாகும். உலகெங்கிலும் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையை கட்டமைக்க போராடுகிறது. அது, வர்க்க ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பொதுவான அரசியல் இயக்கத்தில், தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.