கட்டலான் பிராந்திய தேர்தல்களில் ஸ்பெயினின் பாசிச வோக்ஸ் கட்சி எழுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெருந்திரளான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில், பெப்ருவரி 14 ம் தேதி கட்டலான் பிராந்திய தேர்தல்கள் கட்டலான் பாராளுமன்றத்திற்குள் அதிவலது வோக்ஸ் கட்சி நுழைந்ததைக் கண்டது; 1982 க்குப் பின்னர் ஒரு தீவிர வலது கட்சி முதல் தடவையாக அவ்வாறு செய்தது. வோக்ஸ் கட்சியானது 11 இடங்களையும் கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகளையும் பெற்று, சட்டமன்றத்தில் நான்காவது பெரிய கட்சியாக இருந்தது.

பெரும்பான்மைக்கு தேவையான 68 இடங்களில் எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை. ஸ்பெயினின் ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சியின் (PSOE) கட்டலான் கிளையான கட்டலோனியா சோசலிச கட்சி (PSC) பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சியாகும். கட்டலான் பாராளுமன்றத்தில் 135 ஆசனங்களில் 33 ஆசனங்களை அது பெற்றது, இது 2017 தேர்தல்களில் வென்ற 17 ஆசனங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பெற்றுள்ளது.

ஸ்பெயினின் தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சித் தலைவரான சாண்டியாகோ அபாஸ்கல் 2021 பிப்ரவரி 12 வெள்ளிக்கிழமையன்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகிறார். (AP Photo/Emilio Morenatti)

இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்சிகளாக சுதந்திர-சார்பு கட்டலான் குடியரசு இடது (ERC) மற்றும் கட்டலோனியாவிற்காக ஒன்றுசேரல் (JxCat) கட்சிகளாக இருந்தன. ERC 33 இடங்களைக் கைப்பற்றி, ஒரு இடத்தை கூடுதலாக இந்த முறை பெற்றது, JxCat ஆனது 32 இடங்களை எடுத்துக் கொண்டது, இரண்டு இடங்களை இழந்தது. பொடேமோஸின் கட்டலான் கிளை, சாமானியர்கள் எங்களால் முடியும் (ECP) கட்சியானது அதன் எட்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டது.

PSC க்கான தேர்தலை வழிநடத்திய சாண்டியாகோ இல்லா (Santiago llla), ERC இன் பெரே அரகோனேஸ் Pere Aragonès இருவரும் கட்டலோனியாவில் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளனர். JxCat மற்றும் சுதந்திர-சார்பு, போலி-இடது மக்கள் ஐக்கியக் கட்சி (CUP) உடன் அரகோனேஸ் கூட்டணி ஒன்றை நாடுவார், இது PSC உடன் எந்த கூட்டணியையும் நிராகரிக்கிறது. அவர் அடுத்த பிராந்திய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது, இதனால் பார்சிலோனாவில் ஒரு கட்டலான் தேசியவாத அரசாங்கத்தை அதிகாரத்தில் இருத்துகிறார்.

ஸ்பெயினின் வலதுசாரி மக்கள் கட்சி (PP) அரசாங்கம் அக்டோபர் 1 கட்டலான் சுதந்திர சர்வஜன வாக்கெடுப்பிற்கு பின்னர் சிறப்பு தேர்தல்களை நடத்திய பின்னர், 2017 க்குப் பின்னர் கட்டலோனியாவில் நடைபெற்ற முதல் வாக்கெடுப்பு இது. 2017 தேர்தல்களில் போலவே, மாட்ரிட்டின் நம்பிக்கையானது கட்டலான் தேசியவாதிகளுடனான நிலைப்பாட்டை தங்களுடைய சொந்த ஆதரவில் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறது. 2021 தேர்தல்கள் பிரிவினைவாதக் கட்சிகளுக்கு ஒரு குறுகிய பெரும்பான்மையைத்தான் திருப்பிக் கொடுத்தன, ஆனால் முன்னதைப் போலவே PP வாக்குகள் சரிந்தன.

இந்த ஆண்டு தேர்தலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 51.3 சதவீதமாகக் குறைந்தது, இது பிராங்கோ ஆட்சி முடிவுக்கு வந்த 1978 ஜனநாயக மாற்றத்திற்குப் பின்னர் இருந்த மிகக் குறைந்ததாகும். 2017 தேர்தல்களில் 79.1 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடப்படுகையில் அது மிக அதிக பதிவாக உள்ளது.

COVID-19 நிச்சயமாக வாக்களிப்பை பாதித்தாலும், பதிவு குறைந்த வாக்குப்பதிவு பெருந்தொற்று நோய்களால் மட்டும் விளக்கப்பட முடியாது. பிற்போக்கு தேசியவாத கட்சிகளுக்கு இடையே ஒரு தவறான "தெரிவு" இருப்பது பரந்தளவில் மக்கள் மத்தியில் ஏமாற்றமாக உள்ளது, அவற்றின் சிக்கன-ஆதரவு கொள்கைகள் மற்றும் பிரிவினைவாத வாய்ச்சண்டையானது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மதிப்பிழந்துள்ளது, மற்றும் மாட்ரிட்-சார்பு கட்சிகள் இதுவரை வலதை நோக்கி நகர்ந்துள்ளன. மேலும் அது சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து, கட்டலோனியாவில் எதிர்ப்புக்களை மிருகத்தனமாக ஒடுக்கும் அதே நேரத்தில், கட்டலான் தேசியவாதக் கட்சிகள் ஸ்பெயினின் PSOE-Podemos அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தன.

கட்டலான் அரசாங்கத்துடன் இணைந்த கருத்து ஆய்வுகளுக்கான மையம் (CEO) நடத்திய சமீபத்திய ஆய்வு, கட்டலோனியாவின் மக்களில் 44.5 சதவீதம் மட்டுமே கட்டலான் சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர் என்று கண்டறிந்துள்ளது. கட்டலான் தேசியவாதிகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு ஸ்த்திரத்தன்மை இருந்தபோதிலும், மிகக் குறைந்த வாக்குப்பதிவு என்பது அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சியைப் பெற்றது. ERC மற்றும் JxCat முறையே 2017 இல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்குகளிலிருந்து சுமார் 600,000 மற்றும் 570,000 பெற்றன.

அதன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நான்கு முதல் ஒன்பது உறுப்பினர்களாக அதிகரித்த போலி-இடது மக்கள் ஐக்கிய கட்சியின் (CUP) ஆசனங்கள் மட்டுமே கட்டலான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு கட்டளையிட முடியும். 135 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தற்போது சுதந்திர சார்பு கட்சிகள் 74 இடங்களைக் கொண்டுள்ளது, இது 2017 இல் நான்கு ஆக அதிகரித்துள்ளது.

கட்டலான்-தேசியவாதக் கட்சிகள் மக்கள் வாக்குகளில் பெரும்பான்மையையும் பெறத் தவறிவிட்டன: அவர்கள் கூட்டாக 48 சதவீத வாக்குகளைப் பெற்றனர், இது 2017 ஐ விட 0.5 சதவீதம் அதிகமாகும். இந்த வீழ்ச்சியிலிருந்து PSC ஆனது கட்டலான் தேசியவாதிகளுக்கு ஆதரவு கிடைத்தது, இது அவர்களின் வாக்கு எண்ணிக்கையை 48,000 க்கும் அதிகமாக அதிகரித்தது.

மிகக் குறைந்த மதிப்பீட்டின்படி ஸ்பெயினில் 68,000 உயிர்களைப் பலிகொண்ட பெருந்தொற்று நோய்க்கு PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் பேரழிவுகரமான விடையிறுப்பை சுகாதார அமைச்சராக இருந்த SPC இன் சாண்டியாகோ இல்லா மிகவும் மதிப்பிழந்த நிலையில் கட்டலான் தேசியவாதிகள் மிகவும் மதிப்பிழந்துள்ளனர். இந்த ஒரு வாக்கு, கட்டலான் தேசியவாதத்திற்கு எதிரான எதிர்ப்பிலிருந்து பெரிதும் பயனடைந்தது. ஆனால், இல்லாவின் தேர்தல் முறை கட்டலான் தேசியவாதக் கட்சிகள் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதிலிருந்து தடுக்கவில்லை.

கட்டலான் தேசியவாதிகளுக்கு ஆதரவாக ஏற்பட்ட வீழ்ச்சியின் முக்கிய ஆதாயம் வோக்ஸ் (Vox) ஆகும். இது 218,000 வாக்குகளை பெற்றது. வலதுசாரி குடிமக்கள் கட்சி மற்றும் PP இரண்டும் இணைந்து போட்டியிட்டன. குடிமக்கள் கட்சியின் (Citizens) நிலைமை பேரழிவுகரமானது, கடந்த தேர்தலுக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்குகளை இழந்து, சட்டமன்றத்திலுள்ள ஒற்றை மிகப் பெரிய கட்சியிலிருந்து இரண்டாவது சிறிய கட்சியாக வீழ்ச்சிடைந்து வெறும் ஆறு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அவர்கள் மூன்று ஆசனங்களை கூடுதலாக வென்ற மக்கள் கட்சியால் அடிமட்டத்திற்கு போட்டியில் தோற்கடிக்கப்பட்டது.

ரோடா டு பெரா, மான்ட்-ரோய்க் டெல் கேம்ப், குனிட், கேம்பிரில் மற்றும் கலாபெல் போன்ற சிறிய நகரங்கள் உட்பட, Tarragona கடற்கரை நெடுகிலும் உள்ள சுற்றுலா பகுதிகளில் வோக்ஸ் மிகச் சிறப்பாக வெற்றி பெற்றது, அங்கு அது 12 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. இந்தப் பெருந்தொற்று நோய் இந்த சுற்றுலா தலங்களை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது: விடுமுறை வணிக உருவாக்குபவர்களை நம்பி இருக்கும் சிறு வணிகங்கள் அவர்களுடைய வருமானம் கிட்டத்தட்ட முற்றிலும் வறண்டு விட்டன. வோக்ஸ் இரண்டு சிறிய நகராட்சிகளில் அதிக வாக்குகளை பெற்றது, La Pobla de Mafumet (21.3 சதவிகிதம்) மற்றும் Vilamalla (22.5 சதவிகிதம்) ஆகியவை, பிரிவினைவாத எதிர்ப்பு உணர்வுகளின் மரபார்ந்த கோட்டைகளாக இருந்தவைகளானது அவைகள் வெகுஜன வாக்களிப்பு இல்லாததைக் கண்டன.

வோக்ஸிற்கு வாக்குகள் அதிகரிப்பதற்கான பொறுப்பு PSOE-பொடேமோஸ் அரசாங்கம் மற்றும் அதன் பிராந்திய இணைப்புக்களான PSC மற்றும் ECP ஆகியவை இதுவரை வலதிற்கு மாறியுள்ளன, அவைகள் வோக்ஸின் கொள்கைகளை முக்கிய நீரோட்டத்தின் ஒரு பகுதியாக முன்வைக்க அனுமதித்துள்ளன. பொடேமோஸின் மறைமுக ஆதரவுடன், 2019 இன் PSOE காபந்து அரசாங்கம் கட்டலோனியாவில் அமைதியான எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்ததற்காக கட்டலோனியாவின் தேசியவாத அரசியல்வாதிகளை சிறையிலடைப்பதற்கும் மற்றும் கட்டலான் சுதந்திரம் மீதான 2017 பொதுஜன வாக்கெடுப்புக்கு எதிராகவும் வன்முறையுடன் ஒடுக்கியது.

PSOE-பொடேமோஸ் அரசாங்கமானது கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகள் அதன் பதவிக் காலம் முழுவதும் தண்டனைகளை உறுதி செய்துள்ளது. கட்டலான் தேர்தல்கள் முடிந்த மறுநாள், அரசாங்கத்தின் அரசாங்க வக்கீல்கள் அலுவலகம், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டலான் சுதந்திர செயற்பாட்டாளர்களை கட்டலான் பிராந்திய அரசாங்கம், அரை சுதந்திர அந்தஸ்துடன் விடுவித்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சிறைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டது.

அனைத்து ஸ்தாபகக் கட்சிகளும் அழுகிப்போன வலதுசாரி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தன. PSOE-Podemos அரசாங்கம் பின்பற்றிய "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகள் பற்றி விவாதம் இல்லாததே அவற்றின் முக்கிய குணாம்சமாக இருந்தது. பெருந்தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டன, நூறாயிரக்கணக்கானவர்கள் வேலைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர், மில்லியன் கணக்கானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அல்லது ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பில் வங்கிகளுக்கும் பெருவணிகத்திற்கும் பில்லியன் கணக்கான யூரோக்கள் கொடுக்கப்பட்டன என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

வோக்ஸ் கட்சியானது வெளிநாட்டவர் விரோத, புலம்பெயர்வு-எதிர்ப்பு ஆத்திரமூட்டும் மற்றும் ஒரு "இஸ்லாமிய மயமாக்கலை நிறுத்து!" என்ற பிரச்சாரத்துடன் மேடையில் ஆதிக்கம் செலுத்தியது.

குறிப்பிடத்தக்க வகையில், பிரச்சாரத்தின் போது, வோக்ஸ் செய்தித் தொடர்பாளர் சேவியர் ஓர்டேகா ஸ்மித், கட்டலோனியாவில் ஒரு சிறுபான்மை PSOE அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வோக்ஸ் இன் விருப்பத்தை தெரிவித்தார்: "நீங்கள் என்னை PSOE தலைமையிலான ஒரு அரசாங்கத்திற்கும் சதிகாரர்கள் தலைமையிலான ஒரு அரசாங்கத்திற்கும் [கட்டலான் தேசியவாதிகளின் 2017 சுதந்திர வாக்கெடுப்பைக் குறிப்பிடுகிறது] மற்றும் பிரிவினைவாதிகள், மோசமானவர்கள் இடையே தேர்வு செய்ய வேண்டும் என்றால், நாம் கெட்டதைத் தேர்ந்தெடுப்போம்."

"ERC இன் பிரிவினைவாதிகளை விட கட்டலோனியாவின் அரசாங்கத்தை சோசலிஸ்டுகளுடன் [PSOE] மீட்பது எப்போதும் எளிதானது. பிரிவினைவாதிகள் மற்றும் சதிகாரர்கள் அல்லாத ஒரு அரசாங்கத்தின் முதலீட்டை ஆதரிப்பதற்கு நாங்கள் எங்கள் சக்தியில் அனைத்தையும் செய்வோம்," என்று ஓர்டேகா ஸ்மித் கூறினார்.

இல்லா மற்றும் PSC ஆனது இப்போதைக்கு வோக்ஸ் உடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டன.

பாராளுமன்ற கூட்டணி இறுதியில் தேர்தல்களிலிருந்து வெளிப்பட்டாலும், கட்டலான் தேசியவாதிகளின் திவால்-சிக்கன ஆதரவு மற்றும் பிரிவினைவாத கொள்கைகளோ அல்லது PSOE/PSC மற்றும் Podemos/ECP இன் பிற்போக்குத்தனமான அரசியலோ அதி-வலதுகளை எதிர்த்து போராடாது. PSOE-Podemos அரசாங்கமானது வோக்ஸால் அதன் மீது வைக்கப்படும் ஒவ்வொரு கோரிக்கையும் —பெருந்தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த மறுப்பதிலிருந்து அகதிகள் மீதான அதன் மிருகத்தனமான ஒடுக்குமுறை வரை— கிட்டத்தட்ட ஏற்றுக் கொண்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிய பாதையானது கட்டலான் பிரிவினைவாதத்தையும் போலி-இடது மற்றும் சமூக-ஜனநாயக கட்சிகளையும் ஒரே மாதிரி நிராகரிக்க வேண்டும். ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்திற்கும் சமூகத்தை சோசலிச மாற்றத்திற்கான ஒரு பொதுப் போராட்டத்தில், கட்டலோனியாவிலுள்ள தொழிலாளர்கள், ஸ்பெயினிலும், ஐரோப்பா முழுவதிலுமுள்ள தங்களுடைய வர்க்க சகோதர சகோதரிகளிடம் திரும்ப வேண்டும்.

Loading