முன்னோக்கு

புத்தகம் எரிப்பது அமெரிக்காவுக்கு வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தணிக்கை செய்யும் ஒரு முக்கிய செயலில், ஜனநாயக உரிமைகள் மீதான அச்சமூட்டும் தாக்கங்களுடன், புத்தக வெளியீட்டகம் W.W. Norton, பிளேக் பெய்லி எழுதிய அமெரிக்க நாவலாசிரியர் பிலிப் ரோத்தின் (1933–2018) வாழ்க்கை வரலாறு என்ற நூலை அச்சிடுவதை “நிரந்தரமாக” அகற்றுவதற்கான முடிவை அறிவித்துள்ளது. பல நபர்கள் பெய்லி மீது பாலியல் தவறான நடத்தை பற்றி குற்றம் சாட்டியுள்ளனர். இதில் 2003 ஆம் ஆண்டின் பாலியல் பலாத்காரமும் உள்ளது. அவர்களில் எவரும் இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

பெய்லியின் 880 பக்க புத்தகம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுள்ளதுடன் மற்றும் அதன் துறையில் இந்த ஆண்டின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெய்லியின் 2014 நினைவுக் குறிப்பையும் கைவிடுவதாகவும் Norton அறிவித்துள்ளது.

பிளேக் பெய்லி, 2011 (Photo credit–David Shankbone)

பாசாங்குத்தனம் வழியும் ஒரு அறிக்கையில், Norton இன் தலைவர் ஜூலியா ஏ. ரீட்ஹெட், "திரு பெய்லி வேறு எங்கும் அதை வெளியிடுவதை தேடுவதற்கான சுதந்திரத்தை கொண்டிருப்பார்" என்று வலியுறுத்தினார். உண்மையில், ஒரே இரவில் பெய்லி ஒரு "ஒன்றுமில்லாத நபராகி விட்டார்", அவர் இல்லாது போய்விட்டார்.

"பாலியல் வன்கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு எதிராக போராடும் மற்றும் அதிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களை பாதுகாப்பதற்காக செயல்படும் அமைப்புகளுக்கு" நன்கொடை வழங்குவதற்காக பெய்லியின் புத்தகத்திற்கான முற்பணத்தொகை பொருத்தமாக இருக்கும் என்று புத்தக நிறுவனம் மேலும் அபத்தமாக கூறியது.

Norton இணைய தளத்தில் நீங்கள் பிலிப் ரோத்: சுயசரிதை ஐதேடுகிறீர்கள் என்றால், நீங்கள் பின்வரும் செய்தியை பெறுவீர்கள்: “எங்களை மன்னியுங்கள்! நீங்கள் தேடும் பக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை."

வெளியீட்டு நிறுவனத்தின் இதுபற்றிய அறிக்கை "1923 முதல் சுயாதீனமானதும், ஊழியர்களுக்குச் சொந்தமானதும், மற்றும் உயிர்வாழும் புத்தகங்களை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது," “Norton உங்களுக்காக இங்கே உள்ளது." என்று கூறியது. புத்தக நிறுவனம் "எங்கள் கைகளில் கிடைக்கும் சிறந்த புத்தகங்களை வெளியிடும் வணிகத்தில் தொடர்ந்தும் இருப்போம். பின்னர் அதனை இயலுமானவரை தொடர்ந்து வைத்திருக்கும்" என உறுதியளிக்கிறது. அல்லது பாலின பிரச்சினைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்களின் ஒரு சிறிய குழு அழுத்தத்தைப் பயன்படுத்தும் வரை.

பிலிப் ரோத்தின் சுயசரிதை

பெய்லியின் புத்தகத்தை அழிப்பிற்குட்படுத்துவது ஒரு மோசமான உதாரணத்தை உருவாக்குகின்றது. இது கலைஞர்கள், வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை ஒரே மாதிரியாக அச்சுறுத்தும் நோக்கம் கொண்டது. இதனால் அனுப்பப்படும் செய்தி தெளிவாக உள்ளது: ஆதிக்கம் செலுத்தும் பொதுக் கருத்தை ஆத்திரத்திற்குட்படுத்தும் எந்தவொரு செல்வாக்குமிக்க நபரும் கண்டிக்கப்படலாம் மற்றும் அதே வழியில் தடுக்கப்படலாம்.

இந்த விவகாரத்தில் நியூ யோர்க் டைம்ஸ் இழிந்தவகையில் மூக்கை நுழைத்தலில் சுறுசுறுப்பாக உள்ளது. ஏப்ரல் 21 அன்று, டைம்ஸ் பெய்லிக்கு எதிரான “பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை” குறிப்பிடும் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

டைம்ஸ் கட்டுரையில் கூறப்பட்ட கூற்றுக்களுக்கு சிறிதளவு முன்னுரிமையுள்ள நம்பகத்தன்மையை வழங்க எந்த காரணமும் இல்லை. அக்டோபர் 2017 இல் #MeToo சூனிய வேட்டை தொடங்கியதிலிருந்து ஊடகங்களினால் "பூரணப்படுத்தப்பட்ட" ஒரு வடிவத்துடன் இது ஒத்துப்போவதை உறுதிப்படுத்துகின்றது. பெய்லி ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை அல்லது ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் இதுவரை கூறப்பட்ட சம்பவத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.

ஆச்சரியப்படும் விதமாக, ஆதாரமற்ற இந்த கூற்றுகளின் அடிப்படையில், ஏப்ரல் 21 அன்று டைம்ஸின் மகிழ்ச்சியான சொற்றொடரில் Norton, “விரைவான மற்றும் அசாதாரண நடவடிக்கை எடுத்தது.” என எழுதியது. மே மாத தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட 10,000 பிரதிகள் கொண்ட இரண்டாவது அச்சிடலை நிறுத்தியதாக வெளியீட்டு நிறுவனம் முதலில் அறிவித்தது. இப்போது, Norton மற்றொரு மதிப்பற்ற படி மேலே சென்றுள்ளது.

பெய்லி இந்த குற்றச்சாட்டுகளை "திட்டவட்டமாக தவறான மற்றும் அவதூறானது" என அறிவித்துள்ளார். Norton இன் சமீபத்திய அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, அவரது வழக்கறிஞர் வெளியீட்டாளரின் "கடுமையான, ஒருதலைப்பட்ச முடிவை ... அவர் மீதான தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளாமலும் அல்லது திரு பெய்லிக்கு இக்குற்றச்சாட்டுகளை மறுக்க வாய்ப்பளிக்காமலும் எடுத்ததாக கண்டனம் செய்தார்."

பெய்லியின் புத்தகத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஒரு உண்மையற்ற கூறு உள்ளது. சுயசரிதை பொய்களைக் கொண்டுள்ளது என்றோ அல்லது ஆசிரியர் மற்றொருவரின் படைப்புகளைத் திருடினார் என்றோ யாரும் வாதிடுவதில்லை. இதற்குமாறாக, இப்புத்தகத்தின் மீதான விரோதமான மதிப்புரைகள் கூட புத்தகத்தின் முழுமையை ஒப்புக்கொள்கின்றன. மாறாக சுயசரிதையாளர் ஒரு சந்தேகத்திற்குரிய "ஒழுக்கக் குற்றச்சாட்டின்" கீழ் வீழ்ந்துள்ளார்.

தணிக்கைக்கு எதிரான தேசிய கூட்டணி ஒரு அடிப்படை உண்மையை மீண்டும் மீண்டும் கூறியது. Norton இன் முடிவை எதிர்ப்பதில், அது ஒரு பலவீனமானதாக இருந்தாலும் புத்தகங்கள் “அவற்றின் உள்ளடக்கம் குறித்து தீர்மானிக்கப்பட வேண்டும் என அது சுட்டிக்காட்டியது. இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் சிக்கலான வாழ்க்கையை நடத்தினர் மற்றும் நடத்துகின்றனர். ஒரு எழுத்தாளரின் சொந்த சுயசரிதை நிச்சயமாக எமது விளக்கம் மற்றும் அவர்களின் படைப்புகளின் மீதான பகுப்பாய்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், வாசிக்கும் பொதுமக்கள் எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கவிட வேண்டும்.”

பிரெஞ்சு எழுத்தாளர் ஜோன் ஜெனெட்டின் "குற்றவியல்" அவரது மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான திருடனின் இதழ் (The Thief’s Journal -1949) என்ற தலைப்பில் பதிக்கப்பட்டுள்ளது. இது பரவலாகவும் விருப்பத்துடனும் வாசிக்கப்படுகிறது. மற்றொரு பிரெஞ்சு எழுத்தாளரான லூயி-ஃபெர்டினாண்ட் செலின் எழுதிய, இரவின் முடிவுவரையிலான பயணம் (Journey to the End of the Night -1932) என்ற குறிப்பிடத்தக்க நாவலை அதன் ஆசிரியர் பின்னர் நாஜி சார்பு யூத எதிர்ப்பு ஆனார் என்பதற்காக அழிக்க வேண்டும் என இதுவரை யாரும் முன்மொழியவில்லை.

கொடூரமான செயல்களில் தண்டனை பெற்ற மரண தண்டனை கைதிகள் மற்றும் பலரும் உட்பட நபர்கள் தங்கள் புத்தகங்களை எப்போதும் வெளியிட்டுள்ளனர். அந்த விஷயத்தில், மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் பொதுவாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இறப்புக்கு காரணமான உண்மையிலேயே கடுமையான குற்றவாளிகளான முன்னாள் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் தளபதிகள் அடங்கிய ஒரு குழு, அதன் (பேய் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை) நினைவுக் குறிப்புகள் மற்றும் போலியான கவிதைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இது சேலம் (Salem) சூனிய வேட்டையை நினைவூட்டுகின்ற ஒரு வெறித்தனமான கூக்குரலை மட்டுமே எடுக்கிறது, மேலும் ஒரு மரியாதைக்குரிய சுயசரிதை தொகுதியின் ஆசிரியர், இந்த விஷயத்தில் நிலையான படைப்பாக மாறக்கூடிய ஒரு தொகுதியின் ஆசிரியர், மெல்லிய காற்றில் மறைந்துவிடுகிறார்.

மெக்கார்த்திசத்தின் இருண்ட நாட்களுக்கு பின்னர் பெய்லி மீதான தாக்குதல் முன்னோடியில்லாததாக உள்ளது. அதன்போது அமெரிக்க அரசாங்கம் அதன் வெளிநாட்டு நூலகங்களிலிருந்து இடதுசாரி எழுத்தாளர்கள் மற்றும் அனுதாபிகளின் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அகற்றியது. இது, மறைந்த ஜேம்ஸ் லெவின், வூடி ஆலன், கெவின் ஸ்பேஸி, பிளாசிடோ டொமிங்கோ, அஜீஸ் அன்சாரி, லூயிஸ் சி.கே, சார்லஸ் டுடோயிட், கரிசன் கெய்லர் மற்றும் ஜெஃப்ரி ரஷ் போன்ற தனிநபர்களின் அழிவு (அல்லது அழிக்க முயற்சித்த) ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஒரு சமீபத்திய செயல்முறையை தொடர்வதுடன் அதிகரித்து மற்றும் தணிக்கையை நிறுவனமயமாக்குகின்றது.

ரோத்தின் தொகுதியில் ஏறக்குறைய ஒரு தசாப்தத்தை கழித்த மரியாதைக்குரிய இலக்கிய வாழ்க்கை வரலாற்றாசிரியர் பெய்லி, இந்த மோசமான பிரச்சாரத்திற்கு தகுதியற்றமுறையில் பலியாகிறார். தற்போதைய விவகாரத்தில் ரோத்தின் இருப்புக்கூட பெரும்பாலும் இதில் தங்கித்தத்தளிக்கிறது.

இவ்விடயத்தில் ஏப்ரல் 21 டைம்ஸ் கட்டுரை இழிந்த பூனையை பையில் இருந்து வெளியே விடுகின்றது. "திரு. பெய்லியை மூழ்கடித்த சர்ச்சை அவரது ரோத்தின் சுயசரிதைக்காக அவர் பெற்ற ஓரளவு விளம்பரத்தினாலே வெடித்தது என்பதை அது உணர்ந்துகொண்டுள்ளது. இது தவறான நடத்தை என்று குற்றம்சாட்டிய சில பெண்கள் முன்வருவதற்கு வழிவகுத்தது." குற்றஞ்சாட்டியவர்களில் சிலர் “திரு. பெய்லி மீது குவிந்த புகழ்ச்சியை பற்றி மட்டும் கவலைப்பட்டது மட்டுமல்லாமல், அவரது ரோத்தின் வாழ்க்கை வரலாற்றில், அவர், எழுத்தாளரின் தவறான தன்மையை மன்னிப்பதாகவும் அவதானித்தனர். பல இலக்கிய விமர்சகர்கள் சுயசரிதையில், திரு. பெய்லி திரு. ரோத் பெண்களை தவறாக நடத்துவதைத் மறைத்தார்" என்றனர்.

இங்கே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் வரிக்கு வரி படிக்க வேண்டியதில்லை. டைம்ஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் Norton இனாலும், அவர்கள் கூறுவதுபோல், ரோத் "பெண்களை தவறாக நடத்தியதற்காக" அவரை போதுமான அளவு கண்டனம் செய்யத் தவறியதற்காக பெய்லி தண்டிக்கப்படுகிறார்.

பிலிப் ரோத், 1973

ரோத்தின் எழுத்து ஜனநாயகக் கட்சியிலும் அதைச் சுற்றியும் செயல்படும் இனம் மற்றும் பாலின மாஃபியாக்கள் மற்றும் முக்கியமாக போலி-இடது மற்றும் பெண்ணிய பிரிவுகளையும் ஆத்திரமூட்டியுள்ளது. மறைந்த எழுத்தாளர் தனது மனிதக் கறை-2000 (The Human Stain-2000) என்ற புத்தகத்தில் அடையாள அரசியலுக்கான தனது வெறுப்பைப் பற்றி எந்த இரகசியத்தையும் வைத்திருக்கவில்லை. 2018 இல், அண்மையில் தொடங்கப்பட்ட #MeToo தொடர்பாக பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தீர்ப்பளிக்கப்படக்கூடிய "நீதிமற்றத்தை" தான் அதில் காணவில்லை என்று ரோத் கருத்து தெரிவித்தார். மாறாக "வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அதற்கு எதிராக முறையீடு செய்யப்படமுடியாது உடனடியாக தண்டனைக்கு இட்டுச்செல்கின்றது. குற்றம் சாட்டப்பட்டவர் ஆட்கொணர்வு உரிமை நிராகரிக்கப்பட்டு, அவர் மீது குற்றம் சாட்டியவரை எதிர்கொள்ளும் மற்றும் விசாரிக்கும் உரிமையையும், உண்மையான நீதி அமைப்பைப் போன்ற எந்தவொரு விஷயத்திலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் மறுத்ததை நான் காண்கிறேன். அவ்வாறான விசாரணையில்தான் அறிவிக்கப்பட்ட குற்றத்தின் தீவிரத்தன்மை குறித்து கவனமாக வேறுபாடுகள் வரையப்படலாம்" என்றார்.

ரோத் அநீதிக்குள்ளாகிவிட்டார், மேலும் "ஒன்றுமில்லாத நபராவதற்கான" சாத்தியத்தை எதிர்கொள்கிறார். பல்கலைக்கழகப் படிப்புகளிலிருந்து அவரது பணிகள் மேலும் மேலும் திரும்பப் பெறப்படும் என்றும், அவரது "ஒழுக்கக்கேடான" மற்றும் "காமவெறி" நாவல்கள் நூலகங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் கோரப்படலாம்.

ரோத் தனது நாவல்களில், தடை செய்யத் தகுதியான ஒரு "தவறான அறிவியலாளர்" என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது கிட்டத்தட்ட தேவையற்றது. ரோத் ஒரு கலைஞராக இருந்தார், அதாவது யதார்த்தத்தை நேர்மையாகவும், இலட்சியமயமாக்கலும் இல்லாமல் சித்தரிக்க முயன்ற ஒருவர். இதன் விளைவாக, ஆணோ பெண்ணோ ஒரு நபரை "குற்றமற்றவர்" என்று கருத அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவரது முயற்சிகள் இப்போது ஸ்தாபக வட்டாரங்களில் நிலவும் அபத்தமான, பிலிஸ்தீன் மற்றும் முற்றிலும் முட்டாள்தனமான பார்வையை எதிர்க்கின்றன. இது ஒரு விக்டோரியன்வாத மிகைப்படுத்தப்பட்ட நாடகவகையில் இருந்து வெளிவருகிறது. அதாவது பெண்கள் எப்பொழுதும் புனிதமானவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் ஒருபோதும் யாரையும் முட்டாளாக்கவோ அல்லது துரோகம் செய்யவோ மாட்டார்கள் என்பதாகும். அமெரிக்க புத்திஜீவிகளுக்கு என்ன நடந்து விட்டது என்றால் அவர்கள் இந்த அபத்தமான, தகுதியற்ற நிலைக்குள் மூழ்கிவிட்டனர்.

2014 ஆம் ஆண்டில், ரோத், பெண்ணிய எதிர்ப்பு குற்றச்சாட்டுக்கு ஒரு நேர்காணலில் பதிலளித்தார். குற்றச்சாட்டு அபத்தமானது என்றாலும், "அவசியமில்லாமல் ஒரு பாதிப்பில்லாத கேளிக்கை அல்ல" என்று குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தார், “சில பகுதிகளில், ‘பெண்ணிய எதிர்ப்பு’ என்பது 1950களில் மெக்கார்த்திய வலதுசாரிகளால் பயன்படுத்தப்பட்ட ‘கம்யூனிச’ எதிர்ப்பு போலவே அதே நோக்கத்திற்காகவே ஒரு வெறும் வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது”.

உண்மையில், ரோத்தின் நற்பெயருக்கு எதிரான தாக்குதல் இந்த திட்டவட்டமான வலதுசாரி தன்மையைக் கொண்டுள்ளது. குட்டி முதலாளித்துவ இணங்கிப்போதல் மற்றும் அடக்குமுறை, யூத எதிர்ப்பு, அமெரிக்க பாசிசம், கம்யூனிசம், அடையாள அரசியல் மற்றும் பலவற்றைப் பற்றிய அவரது கோபமான மற்றும் தகவலறிந்த கலைத்துவமான அணுகுமுறையில் பொதிந்துள்ள அவரது மிகவும் பாராட்டத்தக்க மற்றும் நீடித்த தகமைகள் காரணமாக அவரது விமர்சகர்கள் இறுதியில் அவரை வெறுக்கிறார்கள்.

ரோத் தனது திறமையான தருணங்களில், விடயங்களை தொந்தரவுக்குள்ளாக்கும், குழப்பம்மிக்க பார்வையை அளிக்கிறார். அடிப்படையில் தன்னுடனும் மற்றும் விடயங்கள் எவ்வாறு இருக்கின்றவோ அதனுடன் திருப்திப்படுத்துகின்ற வசதிபடைத்த குட்டி முதலாளித்துவம் எப்போதும் மற்றும் எல்லா இடங்களிலும் கருத்தூன்றிய கலை மீது அவநம்பிக்கை கொள்கிறது. அதற்கு சரியான சூழ்நிலைகள் கிடைத்தால் அதை இழிவுபடுத்தி அடக்க முயற்சிக்கிறது.

உள்ளுணர்வாக, வெகுஜன எதிர்ப்பின் தவிர்க்க முடியாத தோற்றத்தால் பயந்துபோன அமெரிக்க ஆளும் உயரடுக்கு, மக்களின் நனவு மற்றும் விழிப்புணர்வை மந்தமாக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவிக்கிறது. பார்வையாளரை அல்லது வாசகரை உணர்மையூட்டும் மற்றும் எச்சரிக்கும் அல்லது பொது விடயங்களில் சிந்தனைமிக்க அணுகுமுறையை ஊக்குவிக்கும் எந்தவொரு படைப்பையும் கண்டு இது தவிர்க்க முடியாமல் அஞ்சுகிறது. அந்த வகையில் பார்த்தால், ஜனநாயக உரிமைகள் மீதான ஒவ்வொரு குறிப்பிடத்தக்க தாக்குதலும் தொழிலாள வர்க்கத்தின் மீதானதும் மற்றும் அதன் அரசியல் முன்னேற்றம் மீதானதுமான தாக்குதல் ஆகும்.

ஆளும் உயரடுக்கின் ஜனநாயகக் கட்சி பிரிவு மிகவும் விழிப்புடன் உள்ளது, எனவே இந்த விஷயத்தில் மிகவும் தணிக்கை செய்கிறது. Times, Washington Post, Salon அல்லது Nation யாரும் Norton இன் மோசடியான நடவடிக்கை குறித்து தீவிரமான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. அனைத்தும் இதற்கு மாறாகவே இருக்கின்றன.

ரோத் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது பல விவகாரங்கள் காரணமாக பொதுவான நியதியில் இருந்து அகற்றப்படுவதற்கான ஆபத்தில் உள்ளார். இந்த உன்னத பிரச்சாரம் ஏன் அங்கு முடிவடைய வேண்டும்? எந்தவொரு எழுத்தாளர் அல்லது கலைஞரும் அவர்களது எந்தவொரு வகையிலான தனிப்பட்ட வாழ்க்கையினால் தார்மீக சிலுவைப்போரில் ஈடுபடுவோரால் ஆத்திரமூட்டப்படும் "நிரந்தரமாக அகற்றப்படும்" அபாயத்திற்குள்ளாகின்றார்கள். தற்போதைய சூழ்நிலை, பாரிய தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களுக்கு, ஒருவனுக்கு ஒருத்தி அல்லது தூய பாலியல் அல்லாத உறவுகளுடன் எவ்வித தலையீடுமில்லாமல், வாழ்பவர்களுக்கே உத்தரவாதம் அளிக்கிறது. இந்த சூழ்நிலையில் "சவுக்கடிக்கு" தப்பிப்பது யார்? மிகச்சிறந்த கலை நமக்கு எஞ்சியிருப்பதை இது உறுதி செய்யும் என்று நாங்கள் நம்பவில்லை. இவை அனைத்தும் உண்மையில் வாழ்வதுபோல் யதார்த்தத்துடன் எந்த தொடர்பும் இல்லாதது.

எமது நிலைப்பாடு தெளிவானது. Norton இன் தணிக்கையை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதுடன், பெய்லி இன் பாதுகாப்பிற்கு அழைப்பு விடுக்கின்றோம். ரோத் உலகைப் பார்த்ததைப் போலவே அதை சித்தரிக்கும் அவரின் உரிமையைப் பாதுகாக்கிறோம்.

Loading