இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் வேலை அழிப்புக்கும் பண வீக்கத்துக்கும் வழிவகுக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது கொள்கை வகுப்பாளர்களும், கொவிட்-19 தொற்று நோயால் ஆழமடைந்த நிதி நெருக்கடிக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக இருக்கும் எனக் கூறிக்கொண்டு, கடந்தாண்டு ஒரு தொடர் பொருளாதார தேசியவாத நடவடிக்கைகளை அமுல்படுத்தினர். எவ்வாறெனினும், கொழும்பின் கொள்கைகள், வேலை மற்றும் சம்பள வெட்டுக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பின் ஊடாக, இந்த பேரழிவின் சுமையை தொழிலாளர் மற்றும் ஏழைகளின் மீது சுமத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.

வீழ்ச்சியடைந்து வரும் ஏற்றுமதிகள், சுற்றுலா வருமான இழப்பு மற்றும் உயர்ந்த கடன் தவணை செலுத்தலையும் எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், சில பண்டங்களின் இறக்குமதிக்கு தடை விதித்ததுடன் மேலும் பணத்தை அச்சடித்துள்ளது. இதன் மூலம் 'பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும்' என்று அது வலியுறுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகள், வேலைகளையும் ஊதியத்தையும் வெட்டியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ (AP Photo/Eranga Jayawardena)

பெப்ரவரியில், 50,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இலங்கையின் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிரன்டிஸ், கொழும்பில் ரத்மலான பகுதியில் உள்ள அதன் 20 வருட பழைய தொழிற்சாலையில் இருந்து 1,000 தொழிலாளர்களை நீக்கியுள்ளது. தொழிலாளர்களுக்கு வெறும் மூன்று மாத சம்பளம் நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்டது. கடந்த வருடம், இந்த நிறுவனம் தனது ஏனைய ஆலைகளில் இருந்து பல நூறு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

நிறுவனம், இதற்கு சர்வதேச கேள்வி வீழ்ச்சி மற்றும் குறைந்த உற்பத்தி திறன் மீது பழி போட்டது. ரத்மலான ஆலையில் நீண்ட காலமாக ஒப்பீட்டளவில் அதிக சம்பளம் வாங்கிய பணியாளர்களுக்கு, அயலில் உள்ள நிறுவனத்தின் இன்னொரு ஆலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலை கொடுக்கபட்டது.

பிரன்டிக்ஸ் தொழிலாளர்கள், இந்த 'வாய்ப்பை' நிராகரித்தனர். பிரன்டிக்சுக்கு ஆலைகள் உள்ள பங்காளாதேசில் அந்த நாட்டின் மலிவான கூலியை பயன்படுத்தி இலாபத்தை கூட்டுவதற்காக, உற்பத்தியை அங்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த 12 மாதங்களாக, கடுநாயக சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஸ்மார்ட் ஷர்ட், ஓகாயா லங்கா மற்றும் ஸ்டார் கார்மன்ட் மற்றும் வலயத்திற்கு வெளியே உள்ள எஸ்கியுவல் நிறுவனத்திலும் 3,500 இற்க்கும் மேற்பட்ட வேலைகள் அழிக்கப்பட்டன.

கொழும்பின் நடவடிக்கைகள், இறக்குமதி வணிகர்களை, குறிப்பாக வாகனங்கள், சக்கரங்கள், பீங்கான்கள் மற்றும் இதர சரக்குகளை இறக்குமதி செய்யும் வணிகர்களை கடுமையாக பாதித்தன. வாகன தொழிற்துறையில் மட்டும் கிட்டத்தட்ட 100,000 வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸின் பூகோள தாக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சுற்றுலா துறையில், சுமார் அரை மில்லியன் வேலைகள் துடைத்துக் கட்டப்பட்டுள்ளன.

இலங்கையின் இளைஞர் வேலையிழப்பு 2020 இன் இரண்டாவது காலாண்டில் 28 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இது தற்போது தொடரும் வேலை வெட்டுக்கள் மாறும் தொழில் சந்தைக்கு புது முகங்கள் வருகை தருவதன் விளைவாகும்.

இளைஞர்களின் அதிருப்திக்கு முகம் கொடுத்துள்ள இராஜபக்ஷ அரசாங்கம், கடந்த வருடம் குறைந்த வருவானம் பெரும் குடும்பங்களில் இருந்து 100,000 இளைஞர்களை பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள தொழில் திட்டத்தில் வேலைக்கு அமர்த்தியது. 22,500 ருபாய் ($115) சொற்ப மாத சம்பளத்துக்கு இந்த இளம் தொழிலாளர்கள் அரசு துறையில் வெவ்வேறு இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு தற்போதைய தொழிலாளர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் போன்ற சமூக உரிமைகள் எதுவும் கிடையாது.

இறக்குமதி தடை பணவீக்கத்தை மேலும் அதிகரித்ததுள்ளதுடன் ரூபாயின் மதிப்பு இறங்கி கொண்டே வருகின்றது. 2020 இன் முற்பகுதியில், ஒரு அமெரிக்க டொலருக்கு இலங்கை ரூபாயின் மதிப்பு 180 ஆக இருந்தது. இன்று அது 192 மற்றும் 198 ரூபாய்களுக்கு நடுவே ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது. இது 7 முதல் இருந்து 10 சதவீதம் வரையான மதிப்பிழப்பு ஆகும்.

கடந்த மாதம், உத்தியோகபூர்வ வருடா வருடம் உணவு விலைவாசி உயர்வு சதவீதம் சுமார் 8 சதவீதமாக இருந்த போதிலும், உருளை கிழங்கு, தானியங்கள், பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் சர்க்கரை போன்றவற்றின் இறக்குமதி மதிப்பு, கடந்த 12 மாதத்தில் 10 சதவீத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இருந்த 287 ரூபா விலையுடன் ஒப்பிடும் போது பச்சை பயறின் தற்போதைய விலை கிலோ 700 ருபாய் ஆகும்.

இலங்கையில் சமையலுக்கு அத்தியாவசியமான மசாலா பொருட்களின் விலை, உள்ளூர் வழங்கல் பற்றாக்குறையால் வேகமாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கிலோ மஞ்சளின் விலை ஐந்து மடங்கு அதிகரித்து 5,000 ரூபாயாக உள்ளது.

இந்த தாங்க முடியாத விலை வாசி உயர்வு பற்றி, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கேட்ட போது, 'இரண்டாம் உலகப் போரின் போது எமது தாத்தா பாட்டி, கொள்ளு மற்றும் சிறு தானியங்களை உண்டனர். மக்களும் இப்போது அவ்வாறே செய்ய வேண்டும், மக்கள் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டும்', என்று சிடுமூஞ்சித் தனமாக கூறினார்,

அமைச்சரின் இந்த வார்த்தைகள் தற்செயலானவை அல்ல. உண்மையில், எல்லா இடங்களிலும் உள்ள ஆளும் வார்க்க்த்தினர், தொழிலாளர்களை கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்கள் மற்றும் பெரும் மந்தநிலை காலகட்டத்துக்கு தள்ளுகின்றனர்.

பெப்ரவரி 12 அன்று, இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் W.D. லக்ஷ்மன், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, அரசாங்கம் 'பதிலீடு' நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை கையாளுகிறது என்று கூறினார். இறக்குமதி கட்டுப்பாடுகள், வெளிநாட்டு நாணய பரிமாற்றுதலில் தடைகள் மற்றும் இறக்குமதி மாற்று கொள்கைகள் மற்றும் இராஜபக்ஷவின் தேர்தல் வாய்ச்சவடாலாக இருந்த, 'சுபீட்சத்தின் வாசல்' என்ற அபத்தம் போன்றவையை இது குறிக்கின்றது.

எவ்வாறெனினும், ஆளுநரின் வார்த்தைகள், தொழிலாளர் மற்றும் ஏழைகளுக்கு எதிராக கடுமையன கொள்கைகள் தயார் செய்யப்படுவதை குறிக்கின்றது. 1970களில் இதே போன்ற சிக்கன நடவடிக்கைகள் 'இலங்கை மக்களின் பெரும் வெறுப்புக்கு' உள்ளாகி இருந்தது என்பதை அவர் ஒப்பு கொண்டார்: 'நாம் அந்த நாட்களுக்கு போக வேண்டும் என்று நான் கூறவில்லை, அனால் அந்த காலகட்டத்தின் சில கொள்கைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,' என அவர் கூறினார்.

1970 களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டரசாங்கம், இறக்குமதி கட்டுப்பாடு மற்றும் பதிலீடுகள் மற்றும் ஏனைய பொருளாதார தேசியவாத கொள்கைகளே சுபீட்சத்திற்கான பாதை என்று வலியுறுத்தியது.

ஆயினும், இந்த கொள்கைகள், 1973-74களில் எண்ணெய் விலை உயர்வு இலங்கை மற்றும் ஏனைய நாடுகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதை தடுக்க இலாயக்கற்றதாய் இருந்ததன.

கூட்டு அரசாங்கம் 'எண்ணெய் அதிர்ச்சிக்கு' மற்றும் இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பின் துரித வீழ்ச்சிக்கு பதிலிறுப்பாக, உணவு உபயோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் உட்பட மோசமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியது. அரிசி மற்றும் மிளகாய் போன்ற அடிப்படை உணவுகள் நாட்டினுள் போக்குவரத்து செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் பாண் (bread) பங்கீட்டு முறையில் விநியோகிக்கப்பட்டது.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் என்ற முன்நோக்கு நூலில் விவரித்தது போல்:

“1973-74 எண்ணெய் அதிர்ச்சிகளும் உலக பொருளாதார மந்தநிலையும் இலங்கை மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு, குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவு இறக்குமதியில் விலையேற்றம், ஒரு கூர்மையான அந்நியச் செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கு நிதி அமைச்சர் என்.எம். பெரேரா, உணவு இறக்குமதி மீது கடும் கட்டுப்பாடுகள், அரிசி போக்குவரத்தில் அரசின் ஏகபோக உரிமை மற்றும் சம்பளக் கட்டுப்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய தேசியப் பொருளாதார ஒழுங்குமுறையை விரிவாக்கினார். பெருந்தோட்டப் பகுதிகளில் வேலையின்மை, தொழில் நிரந்தரமின்மை மற்றும் விலைவாசி அதிகரிப்பும் கடுமையான வறுமைக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் பட்டினிச் சாவுக்கும் வழிவகுத்தது.

1976 இல் வெடித்த பொது வேலை நிறுத்தத்தையும் கிராமப்புறத்தில் நிலவிய அமைதியின்மையை பயன்படுத்திக்கொண்ட வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி, 1977 இல் ஆட்சிக்கு வந்தது. இது இலங்கையின் தேசிய பொருளாதார ஒழுங்குமுறைகளை உடனே கலைந்து, திறந்த-சந்தை கொள்கைகளை அமுல்படுத்தி, நாட்டை பூகோள உற்பத்தியுடன் ஒருங்கிணைத்து, அதனை மலிவு கூலிகள் தளமாய் மாற்றியது.

ஐ.தே.க. ஆட்சி, எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்தியதுடன் தமிழர்-விரோத இனவாதம் மூலம் தொழிலாளர் வார்க்கத்தை பிளவுபடுத்தி, அது ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் மீது தீவிரமாக முன்னெடுத்து வந்த தாக்குதலுக்கு எதிராக தலைதூக்கிய பரந்த எதிர்ப்பை கீழறுத்தது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மனின் கருத்துக்கள், பெரும் வர்த்தகர்களும் அரசாங்கமும் உழைக்கும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் தாக்குதலுக்கு மக்களை தயார் படைத்துகின்ற மற்றும் நியாயப்படுத்துகின்ற முயற்சியாகும்.

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம், 2024 வரை, வருடாந்தம் 4.5 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு கடன்காரர்களுக்கு செலுத்த வேண்டி இருக்கிறது. அதற்காக இந்த மாதம் அது, சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் கொடுத்து மாறல் கடனை வாங்கியுள்ளதுடன், வேறு நாடுகளிடம் இருந்தும் அதிக கடன் கேட்டு தொடர்ந்து மன்றாடி வருகிறது. வர்த்தக கடன்களைப் பெறுவது மேலும் மேலும் கடினமாகி வருவதால், கொழும்பு பணத்தை அச்சடிக்கவும் செய்கின்றது. கடந்த வருடம் கிட்டத்தட்ட 650 பில்லியன் ரூபாவை அது அச்சடித்துள்ளது.

தொழிலாளர்களும் ஏழைகளும் எப்போதும் மோசமடைந்து வரும் சமூக நிலையை முகம் கொடுக்கையில், இராஜபக்ஷ ஆட்சியின் கொள்கைகளால் பெருவணிகம் கடந்த 12 மாதங்களில் அதிக பயனடைந்துள்ளது. இலங்கையின் டெய்லி FT இன் செய்தியின் படி, 'வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பெரும் நிறுவனங்கள், 2021 நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில், 861 பில்லியன் ரூபாயை கூட்டு வருமானமாகவும் 80.7 பில்லியன் ரூபாவை இலாபமாகவும்' பெற்றுள்ளன.

Loading