மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜூலை 16 அன்று. இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பு கல்வியை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவதற்கான வேலைத் திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக இணையவழி பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் இந்த வாரம் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக (கே.டி.யு.) மசோதாவை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதுடன், ஆளும் கட்சியின் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அதை விரைவுபடுத்த எதிர்பார்க்கின்றது
இந்த மசோதா தற்போதைய கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. பீடங்களை அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்படும். இது கட்டணம் செலுத்தி பல்வேறு பட்டப் படிப்புகளை மேற்கொள்வதற்கு கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்களைச் இணைத்துக்கொள்ளும்.
இந்த இராணுவ கட்டுப்பாட்டிலான நிறுவனம், ஏற்கனவே கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அரச பல்கலைக்கழக முறைக்கு சமாந்தரமாக செயல்படும். இது இலவச கல்வி மீதான பெரும் அடியாகும். அத்துடன், இலங்கையில் கல்வியை தனியார்மயமாக்குவதற்கான மேலும் ஒரு படியாகும்.
இந்த மசோதா முதன்முதலில் 2018 இல் முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் போது முன்வைக்கப்பட்டது. இருப்பினும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் பெரும் எதிர்ப்பின் மத்தியில் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கோவிட்-19 தொற்றுநோயால் மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகளை நசுக்கும் அதன் பெரும்வணிக-சார்பு வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மசோதாவை மீண்டும் செயல்படுத்த இராஜபக்ஷ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. .
போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சியும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பாராளுமன்றத்தில் இந்த மசோதாவை தோற்கடிக்குமாறு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றன. மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, கல்வியை இராணுவமயமாக்குவதையும் தனியார்மயமாக்குவதையும் தோற்கடிக்க ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.
ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இலவச கல்வியைப் பாதுகாக்கப் போராடுவதில் உள்ள இன்றியமையாத பிரச்சினைகள் குறித்து ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில் கலந்துரையாடப்படும். மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டத்திற்கு ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பாளர் கபிலா பெர்னாண்டோ தலைமை தாங்குவார். பிரதான அறிக்கையை பிரகித் அரவிந்த வழங்குவார்.
திகதி: 16 ஜூலை 2021, வெள்ளிக்கிழமை
நேரம்: இரவு 7 மணி.
கூட்டத்திற்கு இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க
- இலங்கை அரசாங்கம் தொற்றுநோய் வேகமாக பரவும் நிலையில் அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை குற்றமாக்குகின்றது
- இலங்கை அரசாங்கத்தின் கொடூரமான அத்தியாவசிய சேவை உத்தரவுகளை எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆதரிக்கின்றன
- இலங்கை ஜனாதிபதி அரசாங்க ஊழியர்கள் மீது வேலைநிறுத்த தடையை விதிக்கின்றார்
- ஆத்திரமூட்டும் ஒரு நகர்வாக, இந்தியா சீனாவுடனான அதன் சர்ச்சைக்குரிய எல்லைக்கு 50,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை அனுப்புகிறது