ஏகாதிபத்திய குண்டர் கலாச்சாரமும் ஜூலியன் அசாஞ்சை கொல்ல சிஐஏ சதியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் படுகொலை குறித்து சிஐஏ விவாதித்த தகவல்கள் வெளிப்பட்டமை அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் அதிர்ச்சியூட்டும் குற்றவியல்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. சட்டத்தின்படி, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையிலுள்ள அசாஞ்சிற்கு எதிரான அமெரிக்காவிற்கு நாடுகடத்தும் வழக்கினையும், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்கள் மற்றும் அவர்களின் புலனாய்வு அமைப்புகளின் மிக உயர்ந்த நிலை வரை சதிகாரர்களின் விசாரணை மற்றும் வழக்குத் தொடரப்படுவதையும் அவர்கள் நிறுத்தவேண்டும்.

ஜூலியன் அசாஞ் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் இருந்து 2019 ஏப்ரல் மாதம் இழுத்து வெளியேற்றப்படுகின்றார்

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட Yahoo News இன் விசாரணையின்படி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிஐஏ இயக்குனர் மைக் பொம்பியோ 2017 இல் விக்கிலீக்ஸை 'அரசு சாராத விரோத உளவுத்துறை சேவை' என்று பெயரிட்டு, அதன் ஊழியர்களையும் அதனுடன் இணைந்துள்ளவர்களையும் சிஐஏ இன் “தீவிரமான உளவு எதிர்ப்பு” நடவடிக்கைகளின் ஒரு சட்டபூர்வ இலக்காக்கினார்.

பொம்பியோ பின்னர் அசாஞ்சின் கடத்தல் அல்லது படுகொலைக்கான திட்டங்களை உருவாக்கும்படி கேட்டார். இந்த அறிக்கை 30 க்கும் மேற்பட்ட அமெரிக்க ஆதாரங்களின் தகவலை அடிப்படையாகக் கொண்டது. பொம்பியோவும் சிஐஏ உம் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இந்த ஆதாரங்கள், முன்னாள் அமெரிக்க உயர் அதிகாரிகள், சிஐஏ உளவு நடவடிக்கைகளின் நெருக்கமான விவரங்களை அம்பலப்படுத்தி, மார்ச் 2017 இல் 'Vault 7' இன் தகவல் கசிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், அசாஞ் மீதான அமெரிக்க வேட்டை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது என்று விளக்குகிறது. விக்கிலீக்ஸ் நிறுவனரை கொல்ல திட்டங்கள் விவாதிக்கப்பட்டதாக மூன்று ஆதாரங்கள் தெரிவித்தன. ட்ரம்ப் அதை எப்படி செய்ய முடியும் என்று அவ்வமைப்புகளிடம் 'விருப்பத்தேர்வுகளை' கேட்டதாக கூறப்படுகிறது. ஒரு ஆதாரத்தின்படி, சிஐஏ தலைவர்கள் வெளிப்படையாகக் கேட்டுகப்பட்டனர் மற்றும் கொலைத் திட்டங்களின் 'வரைபுகளை' வழங்கினர் மற்றும் விவாதங்கள் 'அசாஞ்சைக் கொல்வது சாத்தியமா, அது சட்டபூர்வமானதா?' என விவாதிக்கப்பட்டதாக ஒரு தகவல் குறிப்பிட்டது.

அசாஞ் புகலிடம் கோரிய இலண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திலிருந்து ரஷ்ய ஆதரவுடன் தப்பிக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அசாஞ்சை கடத்தும் திட்டங்களில், ரஷ்ய தூதரக வாகனத்தை இடிப்பது, இலண்டன் தெருக்களில் ரஷ்ய முகவர்களுடன் துப்பாக்கிச் சூடு மற்றும் கடைசியாக முயற்சியாக அசாஞ்சை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல முயற்சிக்கும் எந்த ரஷ்ய விமானத்தின் டயர்களையும் சுடுவதும் உள்ளடங்கியிருந்தது. ஒரு மூத்த அதிகாரி Yahoo விடம் 'தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்த' பிரிட்டன் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

ஈக்குவடாரின் இலண்டன் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கிய UC Global நிறுவனம் சிஐஏ உடன் இணைந்து அசாஞ் மீது உளவு பார்த்தது மற்றும் அவரது கடத்தல் மற்றும் கொலை பற்றி விவாதித்தது என்று ஸ்பெயினில் தற்போதைய நீதிமன்ற வழக்குக்கு உட்பட்ட கூற்றுகளை Yahoo வின் விசாரணை உறுதிப்படுத்துகிறது மற்றும் கணிசமாக விரிவுபடுத்துகிறது.

அசாஞ்சின் கொலைக்கான திட்டங்கள் இருப்பதில் சிறிதும் ஆச்சரியம் இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் பல தசாப்தங்களாக தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக உலகெங்கிலும் உள்ள தனது தொழில்முறை கொலையாளிகளை அனுப்பியுள்ளது. அசாஞ்சிற்கு எதிரான சதி 1976 இல் சிலி எதிர்த்தரப்பாளர் ஓர்லாண்டோ லெட்டிலியரின் கொலையை நினைவு கூர்கின்றது. வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள வாஷிங்டன் டிசியில் அவரது கார் வெடித்துச் சிதறியது. அகஸ்டோ பினோசேயின் இரகசிய போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இது, கொலை நடவடிக்கை கொண்டோர் என்றழைக்கப்பட்டதன் கீழ் அமெரிக்க உளவுத்துறையால் வசதிசெய்து கொடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் இது எப்பொழுதும் மறுக்கப்பட்டு வந்தது.

இன்று புதியது என்னவெனில் ஆளும் வர்க்க வன்முறை மற்றும் அடக்குமுறையை பெருகிய முறையில் அப்பட்டமாக செய்யப்படுவதாகும். ஒரு காலத்தில் மறைமுகமாக வைக்கப்பட்டு கடுமையாக மறுக்கப்பட்டு மற்றும் கையாட்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சதிகள், இப்போது வெளிப்படையான முறையில் நடத்தப்படுகின்றன.

2018 ஆம் ஆண்டில் துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் இளவரசர் முகமது பின் சல்மானின் கையாட்களால் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலைசெய்யப்பட்டு மற்றும் துண்டு துண்டாக்கப்பட்டமை, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகளின் போலியான “கண்டனத்தை” மட்டுமே வெளிப்படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு, ஈரானிய இயற்பியலாளர் மொஹ்சென் ஃபக்ரிஸாடேயின் அமெரிக்க-இஸ்ரேலிய படுகொலையை நியூ யோர்க் டைம்ஸ் மகிமைப்படுத்தியது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பதிவுகள் மற்றும் அமெரிக்க இராஜதந்திர தகவல்கள் கசிந்த பின்னர் அசாஞ்சின் கொலை பரவலாக விவாதிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், விக்கிலீக்ஸ் 'அசாஞ்சை கொலை செய்தல்' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை தயாரித்து, அதில் முந்தைய இரண்டு ஆண்டுகளில் முக்கிய பிரமுகர்களால் அவரது உயிருக்கு எதிரான அச்சுறுத்தல்களை சேகரித்தது.

Fox Newsஇன் வர்ணனையாளர்கள் அப்போதைய ஒபாமா நிர்வாகத்தை, 'ஒரு பரத்தை **** மகனை சட்டவிரோதமாக சுட வேண்டும்', 'சிஐஏ அவனை வெளியே அழைத்துச் செல்லவிடுங்கள்' என்று கூறி, 'நாங்கள் உன்னைப் பிடித்தால் நாங்கள் உன்னை தூக்கிலிடப் போகிறோம்' என்று கூறினர். முன்னாள் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் நியூட் கிங்ரிச், அசாஞ்ச் 'பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்' என்றும் 'எதிரிப் போராளியாக கருதப்பட வேண்டும்' என்றும் கூறினார். அவரது கூற்றை அப்போதைய துணை ஜனாதிபதி ஜோ பைடென் ஒப்புக்கொண்டு, அசாஞ்சை 'உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி' என்று முத்திரை குத்தினார். வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தனிப்பட்டமுறையில் 'நாங்கள் இந்த நபரை ட்ரோன் மூலம் கொல்லமுடியாதா?' என்று கேட்டதாக கூறப்படுகிறது.

ஒபாமாவின் கீழ் அசாஞ்சின் படுகொலை தொடர்பான உயர்மட்ட விவாதங்கள் நடந்தன என்பதில் சந்தேகமில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தல்கள், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கடுமையான சேதத்தையும், உள்நாட்டு வர்க்க பதட்டங்களையும் வெடிக்கச் செய்த தொடர்ச்சியான விக்கிலீக்ஸ் வெளியீடுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தனது இந்த இலக்கை அடைய இன்னும் பொறுப்பற்ற முறையில் முயன்றதை நிரூபிக்கிறது. மேலும், மேலும் பல ஆதாரங்கள் கசிவது ட்ரம்பின் ஜனவரி 6 சதி தொடர்பாக ஆளும் வட்டாரங்களில் அதிகரித்து வரும் கோஷ்டி மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டங்களில் பிரிட்டிஷ் அரசின் நெருக்கமான ஈடுபாடு, அசாஞ் தனது தற்கொலைக்கான 'கணிசமான ஆபத்து' காரணமாக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படக் கூடாது என்பது தொடர்பான ஜனவரி 4 -ஆம் தேதி மாவட்ட நீதிபதி வனேசா பரய்ட்ஸர் அளித்த ஆச்சரியமான தீர்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அந்த தீர்ப்பு அமெரிக்காவால் எதிர்க்கப்பட்டது, அக்டோபர் 27-28 அன்று உயர்நீதிமன்றத்தில் திட்டமிடப்பட்ட விசாரணையில் முடிவை எதிர்த்து விரிவான அடிப்படையில் மேல்முறையீடு செய்ய இந்த ஆகஸ்டு வரை காலம் வழங்கப்பட்டது.

தெளிவாக, பரய்ட்ஸர் சிந்தனையில் இருந்த 'தற்கொலை' வகை அமெரிக்க அரசால் திட்டமிடப்பட்ட ஒரு கொலையாகும். அசாஞ்சின் மீதான போலி-சட்ட குற்றச்சாட்டு சிஐஏ விவாதித்த கைது அல்லது கொலைக்கான துணை நடவடிக்கையாகும். அசாஞ்ச் அமெரிக்க சிறை அமைப்பின் பிடியில் சிக்குவாரானால், அவர் ஜெஃப்ரி எப்ஸ்டைனைப் போன்ற ஒரு தலைவிதியையே சந்திக்க நேரிடும். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் கடத்தல் வழக்கில் சாட்சியமளிக்க அழைக்கப்பட முன்னரே சிறையில் தூங்கி தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கில் அமெரிக்க சமுதாயத்தின் டசின்கணக்கான பிரபல்பயமான நபர்களை சிக்கவைத்திருக்கும்.

இந்த சதித்திட்டத்திலிருந்து அறிந்ததன்படி, கடந்த பத்தாண்டுகளாக சிறைவைப்பை மேற்பார்வை செய்த ஒரு பத்திரிகையாளரின் வெளிப்படையான கொலைக்கு மறுப்புதெரிவிக்கும் நிலையில் தான் ஜனவரி மாதம் தயாராக இல்லை என்று இங்கிலாந்து ஆளும் வர்க்கம் உணர்ந்தது. ஒப்படைக்கப்படுவதை முதலில் மறுத்ததிலிருந்து பிரிட்டிஷ் நீதித்துறை எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருந்தது. இந்த வழக்கைத் தொடர்வதன் மூலம், பிரிட்டிஷ் அரசு தெரிந்தே கொலைக்கான அல்லது தொடர்ந்து அசாஞ்சை அமைதிப்படுத்தும் சதிக்கு உடந்தையாக உள்ளது.

உலக ஊடகங்களும் எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிலாந்தில் உள்ள 'தாராளவாத' கார்டியன் மற்றும் அமெரிக்காவில் நியூ யோர்க் டைம்ஸ் இதற்கு உடந்தையாக உள்ளன. இதை எழுதும் நேரத்தில், Yahoo News இன் வெளிப்படுத்தல்கள் பற்றி டைம்ஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. கார்டியன் திங்கட்கிழமை மாலை (இரவு 9 pm BST) தாமதமாக ஒரு கட்டுரையை வெளியிட்டு அதன் ஊடகப் பிரிவில் புதைத்தது.

தாமதமாக அசாஞ்சை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதிலும், இந்த ஆவணங்கள் அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த மற்றும் திருத்த முடியாத குற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு வழக்கின் முழு தாக்கங்களையும் மறைக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றன. நாடுகடத்தப்படுவது தொடர்பான வழக்கை தர்மசங்கடமான அரசாங்கங்கள் தவறாக அறிவுறுத்திய ஒரு வழக்கு என்று வர்ணம் பூசியுள்ளனர். இது ஒரு புத்திசாலித்தனமான நீதித்துறை மூலம் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

இந்த சமீபத்திய வெளிப்படுத்தல்கள் இந்த மோசடியை வெடிக்கச் செய்கின்றன. எடுக்கப்பட வேண்டிய ஒரே முடிவு, அசாஞ்சின் ஒப்படைப்பு உடனடியாக கைவிடப்பட வேண்டும். அவரை நாடு கடத்த கோரும் முறையான உரிமை கூட அமெரிக்காவிற்கு இல்லை. இங்கிலாந்து சட்டத்தின் கீழ், மரண தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ள ஒரு நாட்டிற்கு யாரையும் ஒப்படைக்க முடியாது. மேலும் அவரது வழக்கை விசாரிக்க இங்கிலாந்துக்கு உரிமை இல்லை. இரண்டு அரசுகளும் அவரை கடத்தும் மற்றும் கொலை சதித்திட்டங்களில் பங்கெடுக்கின்றனர்.

இந்த உண்மைகள் மட்டும் அசாஞ்சின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. நாடு கடத்தப்படுவதற்கு எதிரான தீர்ப்பில், பரய்ட்ஸர் UC Global மற்றும் சிஐஏ இன் கண்காணிப்பு தொடர்பான வழக்கு தொடுனர் முன்வைத்த சான்றுகளைப் பற்றி 'இந்த வழக்குடன் இவை தொடர்புடையதாகக் கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை' மற்றும் 'எந்தவொரு கண்காணிப்பின் பலனையும் வழக்கிற்கு ஒதுக்கப்பட்ட வழக்கறிஞர்களால் பார்க்க முடியாது” என்று கூறினார்.

பரய்ட்ஸரின் அறிக்கை அசாஞ்சின் சுதந்திரத்திற்கு தனித்த நீதித்துறை ஊடான வழி இல்லை என்பதை நிரூபிக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய ஒரு வெகுஜன சர்வதேச இயக்கத்தினை கட்டுவது அவசியம்.

அத்தகைய இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், உத்தியோகபூர்வமான 'அசாஞ்சை நாடுகடத்த வேண்டாம்' பிரச்சாரகர்கள் போல, பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் அவருக்கு முதல் பதவியில் இருந்த ட்ரம்ப் ஆகியோரிடம் முறையீடுகளை முழுமையாக நிராகரிக்க வேண்டும். இந்த ஆளுமைகள் அனைத்தும், அவர்களின் உளவுத்துறை தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், விக்கிலீக்ஸின் நிறுவனர் கொல்லும் சதியில் ஈடுபட்டுள்ளனர். அசாஞ்சை விடுவிப்பதற்கான போராட்டம், இந்த ஏகாதிபத்திய குண்டர்களை அவரது இடத்தில் நிறுத்தும் போராட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Loading