முன்னோக்கு

வர்க்கப் போராட்டமும் கோவிட்-19 தொற்றுநோயை ஒழிப்பதற்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒன்றரை வருடத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், உலகளவில் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான கொள்கைகளுக்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஒரு இயக்கம் உருவாகியுள்ளது.

அக்டோபர் 15 அன்று, இங்கிலாந்து பெற்றோர் லீசா டியஸ் அழைப்புவிடுத்திருந்த இரண்டாவது பள்ளி வேலைநிறுத்தம் நடந்தது. தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் கைவிடும் சூழ்நிலையில் வகுப்பறைகளுக்கு மீண்டும் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைகள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவுதை தடுக்க பாதுக்காப்பற்ற பள்ளிகளை மூடக் கோரி, அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 15 பள்ளி வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

இடது: அயோவாவின், வாட்டர்லூவில் வேலைநிறுத்தம் செய்யும் ஜோன் டீர் தொழிலாளர்கள் (ஆதாரம்: UAW லோக்கல் 838 முகநூல் பக்கம்) மையம்: #SchoolStrike2021 இன் ஒரு ஆதரவாளர், வலது: கடந்த ஆண்டு சிகாகோவில் வேலைநிறுத்தம் செய்யும் சேவை தொழிலாளர்கள் (உலக சோசலிச வலைத் தள ஊடகம்)

வேலைநிறுத்தங்கள் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சர்வதேச அளவினதாக இருந்தன. பிரிட்டன், அமெரிக்கா, கனடா, பிரேசில், ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து, துருக்கி, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட, உலகெங்கிலும் உள்ள பெற்றோர்களும் தொழிலாளர்களும் வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவளித்து அறிக்கைகளையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். #SchoolStrike2021 என்ற ஹேஷ்டேக், நிகழ்வு தினத்தன்று கிட்டத்தட்ட 7,500 முறை ட்வீட் செய்யப்பட்டு இங்கிலாந்தில் பிரபலமாகியது, மேலும் கடந்த மூன்று வாரங்களில் 40,000 முறைகளுக்கு நெருக்கமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பிரதி வெள்ளிக்கிழமை பள்ளி வேலைநிறுத்தத்திற்கு லீசா டியஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னைய வேலைநிறுத்தத்திலிருந்து அக்டோபர் 15 வேலைநிறுத்தம் எதனால் வேறுபடுகிறது என்றால், கடந்த இரண்டு வாரங்களில் அதிவேகமாக அதிகரித்துள்ள வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தின் பின்னணியில் இது நடந்துள்ளது, அதாவது இது உலகளவில் தொற்றுநோய் ஒழிப்பு கொள்கையை அமல்படுத்த கட்டாயப்படுத்தும் திறனுள்ள ஒரு சமூக சக்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், ஜோன் டீர் விவசாய உபகரண உற்பத்தி ஆலையில் 10,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர், இது 35 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் நடைபெறும் முதல் வேலைநிறுத்தமாகும், அதாவது வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) ஆதரவு பெற்ற ஒரு ஒப்பந்தத்தை 90 சதவீத தொழிலாளர்கள் நிராகரித்ததன் பின்னர் இது நடக்கிறது. கலிபோர்னியாவில் 60,000 திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு தொழிலாளர்கள் செய்த வேலைநிறுத்தம், நாடக மேடை ஊழியர்களின் சர்வதேச கூட்டணி (International Alliance of Theatrical Stage Employees-IATSE) என்ற தொழிற்சங்கம் ஹோலிவுட் தயாரிப்பாளர்கள் உடனான ஒரு தற்காலிக ஒப்பந்தத்திற்கு அறிவித்ததன் பின்னர் சனிக்கிழமை இரவு கடைசி நேரத்தில் தான் நிறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் பற்றிய செய்தி, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய “11வது மணிநேர” ஒப்பந்தம் பற்றி அறிந்த, சமூக ஊடகங்களில் தொடர்பில் உள்ள திரைப்படத் தொழிலாளர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பைத் தூண்டியது, இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை IATSE இரகசியமாக வைத்திருக்கிறது.

Kellogg உணவு உற்பத்தி தொழிலாளர்கள், அலபாமா நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் நியூயோர்க், மாசசூசெட்ஸ் மற்றும் மின்னசோட்டாவில் உள்ள செவிலியர்கள் என வேலைநிறுத்தங்கள் பரவலாக தொடர்கின்றன. தென்னாபிரிக்காவில், உயர்ந்து வரும் பணவீக்கத்தை ஈடுசெய்ய ஊதிய உயர்வு கோரி, தோராயமாக 170,000 உலோகத் தொழிலாளர்கள் ஈடுபடும் உலகளவிலான மிகப்பெரிய வேலைநிறுத்தம் இரண்டு வாரத்தை நிறைவு செய்யவுள்ளது.

இந்த வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள பல தொழிலாளர்களால் இது இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது. கோவிட்-19 க்கு முன்னர் கூட தொழிலாளர்கள் போராடுவதற்கு கணிசமான அளவு நிலைமைகள் இருந்தன, என்றாலும் ஒவ்வொரு முக்கிய முடிவையும் தனது இலாப நோக்கத்திற்கு கீழ்ப்படுத்தும் ஆளும் உயரடுக்கின் கோவிட்-19 க்கான குற்றவியல் பதிலிறுப்பால் அவை பெரியளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மனித உயிர்களின் இழப்பு, போர்க்காலத்தைத் தாண்டி முன்நிகழ்ந்திராத மட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் பதிவாகியுள்ள மொத்த கோவிட்-19 இறப்புக்கள், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வைரஸூக்கு பலியான 20,000 க்கும் அதிகமானவர்கள் உட்பட, தற்போது அதிவேகமாக 750,000 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தொடர்ந்து கணிசமாக குறைத்துக்காட்டப்படுகின்றன. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (Institute for Health Metrics and Evaluation) மாதிரிகளின் படி, அறிவிக்கப்படாத இறப்புக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் இறந்துபோன ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் உட்பட, உலகளவில் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்திருப்பார்கள் எனத் தெரிகிறது.

அமெரிக்காவில் மட்டும் இன்னும் கொரோனா வைரஸால் நாளொன்றுக்கு சராசரியாக 1,500 க்கும் அதிகமான மக்கள் இறக்கின்றனர், இது தடுப்பூசிகள் கிடைக்காத கடந்த ஆண்டின் இதே நேரத்தின் இறப்பு வீதத்தைப் போல கிட்டத்தட்ட இருமடங்காகும். இன்றுவரை தொற்றுநோயின் கடுமையான எழுச்சிக்கு பங்களித்த விடுமுறை கால பயணங்களை உள்ளடக்கிய மற்றும் பெரும்பகுதி வீட்டிற்குள் செலவழிக்கப்பட்ட காலமுமான 2020 ஆம் ஆண்டில் இருந்த நிலைமையை விட கணிசமாக உச்சபட்ச நாளாந்த நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்களுடன் அமெரிக்கா இந்த ஆண்டு குளிர்காலத்தை நோக்கி நகர்கிறது.

ஆனால் பாரிய மரணத்தின் கொடூரமான அளவை, பிரதான ஊடக அறிக்கைகளை வைத்து ஒருவரால் தற்போது புரிந்துகொள்வது கடினமே. மாறாக, முன்பு பலமுறை தவறாக வலியுறுத்தப்பட்டது போல, பெருநிறுவன ஊடகங்கள் தொற்றுநோய் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறி பொதுக் கருத்தை பரப்ப கூடுதல் நேரம் வேலை செய்கின்றன. செப்டம்பரில் நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கை, “வைரஸ் பரவி, தொடர்ச்சியான தொற்றுநோயாக மாறுவது போல தோன்றினாலும், மாறுபாடுகளுக்கு எதிராக அவ்வப்போது புதுப்பிக்கப்படும் தடுப்பூசிகள் மூலம் சமாளிக்கக்கூடிய குறைந்த ஆபத்துள்ள அச்சுறுத்தலாக இது மாறக்கூடும்” என்று கூறியுள்ளது.

தொற்றுநோய் இன்னும் கூட ஊடக அறிக்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் பிரசங்கங்களின் விவாதப் பொருளாக உள்ளது, இதனால், என்னவாயினும் எந்தவித கட்டுப்பாடுமின்றி மக்களிடையே வைரஸை வெடித்து பரவ அனுமதிக்கும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை”, மற்றும் “நோய் தணிப்பு,” அதாவது, பூட்டுதல்கள், பள்ளிகளை மூடுதல், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு, மற்றும் உலகளாவிய பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் ஆகிய தணிப்பு நடவடிக்கைகள் அல்லாமல், குறைந்தபட்ச முகக்கவசக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி தேவைகளுடன் கூடிய தணிப்பு நடவடிக்கை ஆகிய மூலோபாயங்களுக்கு இடையேயான ஏற்றுக்கொள்ளக்கூடிய விவாதத்தின் எல்லைகளை அது செயல்படுத்தும்.

வைரஸூக்கு மக்களை சரணடைய வைக்கும் முயற்சிகள், கொள்கைவாத தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. “வைரஸூடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்ற மந்திரத்தின் பொருள் கடந்த ஆண்டின் இயற்கை நோய்தொற்றுக்கு எதிராக சமூக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதாகும்,” என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் உறுப்பினர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங் கடந்த மாதம் WSWS நேர்காணலில் தெரிவித்தார். அதற்கு பதிலாக, “நாம் பூஜ்ஜியத்தை இலக்காகக் கொள்ள வேண்டும்; முடிந்தவரை குறைந்தபட்ச மனித பாதிப்பை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

கோவிட்டின் தற்போதைய கொடிய தாக்கத்தை ஊடகங்கள் மூடிமறைப்பதும் மற்றும் மக்களை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சிகளும், முடிந்தவரை உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக வைரஸூக்கு எதிராக இன்னும் நடைமுறையிலுள்ள பணியிட பாதுகாப்புக்களை நீக்குவதற்கான பிரச்சாரத்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ளன.

ஒஹியோவில் உள்ள Dana Inc. வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்கள், அவர்களது ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு ஊழியர் பற்றாக்குறை அதிகரிக்கும் அளவிற்கு கொரோனா வைரஸ் “காட்டுத்தீ போல் பரவுகிறது” என்று WSWS க்கு தெரிவித்தனர். இதற்கிடையில், தொழிற்சங்கங்கள் தொற்றுநோய் காலம் முழுவதும் அவர்களது நடத்தைக்கு ஏற்ப, தொழிலாளர்களை பாதுகாக்க எதுவும் செய்யாமல் இந்த பேரழிவுகரமான நிலைமைகளை வெறுமனே மேற்பார்வை செய்கின்றன. செப்டம்பரில் தொழிற்சங்க ஆதரவு பெற்ற ஒப்பந்த முன்மொழிவை 90 சதவீத தொழிலாளர்கள் நிராகரித்து வாக்களித்துள்ள போதிலும், UAW உம் மற்றும் ஐக்கியப்பட்ட எஃகு தொழிலாளர்கள் சங்கமும், பலர் வாரத்திற்கு 60 மணி நேரங்களுக்கு அதிகமாக வேலை செய்யும் அளவிற்கு தினசரி ஒப்பந்த நீட்டிப்புகளின் கீழ் டேனா தொழிலாளர்களை வேலையில் வைத்துள்ளன.

பெருநிறுவனங்களும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும், தொற்றுநோயை அவர்கள் குற்றகரமாக கையாண்டதன் விளைவாக உருவான விநியோக சங்கிலி இடையூறுகளுக்கு அதிக விரக்தியுடன் பதிலளித்து வருகின்றனர். கடந்த வாரம், பைடென் நிர்வாகம், International Longshore and Warehouse Union இன் ஆதரவுடன் கலிபோர்னியாவில் Long Beach துறைமுகத்தை நாள் முழுவதும் (24/7) இயக்குவதற்கான திட்டங்களை அறிவித்தது, இது ஏற்கனவே முறிந்து போகும் நிலையில் உள்ள துறைமுக தொழிலாளர்கள் மீது தவிர்க்க முடியாமல் மிருகத்தனமான கோரிக்கைகளை சுமத்தும்.

கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கு வளர்ந்து வரும் இயக்கம் மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சுரண்டலுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு ஆகிய இரண்டும், ‘முதலாளித்துவ நெருக்கடியும் முறிவும்’ ஒரே அடிப்படையிலான புறநிலை காரணத்தால் இயக்கப்படுகின்றன. முன்நிகழ்ந்திராத விகிதங்களில் ஒரு சமூக பேரழிவிற்குள் மக்களை மூழ்கடிக்க அனுமதித்ததன் பின்னர், முதலாளித்துவ அரசாங்கங்கள் தங்களது தற்போதைய நெருக்கடிக்கான விலையை தொழிலாளர்கள் மீது சுமத்தவும், நீண்ட வேலை நேரங்களையும் மற்றும் ஊதியங்கள் மற்றும் சலுகைகள் மீதான புதிய தாக்குதல்களையும் அமல்படுத்தவும் தற்போது முயன்று வருகின்றன.

சோசலிஸ்டுகளும் மற்றும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் அனைவரும் எதிர்கொள்ளும் பணிகள் என்னவென்றால், இந்த இயக்கங்களை இணைக்க அயராது உழைப்பது, அவர்களது பொதுவான நோக்கங்களை உணர்ந்து கொள்வது, மற்றும் உலகின் பெரும்பான்மை மக்களின், அதாவது தொழிலாள வர்க்கத்தின் தேவைகளைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான உத்தியை உருவாக்கிக் கொள்வது போன்றவையாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு, பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: கோவிட்-19 தொற்றுநோயை ஒழிப்பதற்கான வழிகள் என்ற அக்டோபர் 5 கட்டுரையில் இவ்வாறு எழுதியது: “தொழிலாள வர்க்கம் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை விஞ்ஞானத்தின் உதவியின்றி முன்னெடுக்க முடியாது, மேலும் தொற்றுநோயை தடுப்பதற்கு தேவையான விஞ்ஞானரீதியான நடவடிக்கைகளை அமல்படுத்த ஒரு தொழிலாள வர்க்க இயக்கம் உருவாக்கப்படுவது அவசியம்.

அக்டோபர் 24 அன்று, உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-RFC) இணைந்து முன்னோக்கி செல்லும் பாதையை கோடிட்டுக் காட்டும் வகையில் “பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: கோவிட்-19 தொற்றுநோயை ஒழிப்பதற்கான வழிகள்,” என்ற உலகளாவிய இணைய தள நிகழ்வை வழங்குகின்றன. இந்த நிகழ்வில், விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும், தொற்றுநோயின் உண்மையான நிலை பற்றி மறுபரிசீலனை செய்வார்கள், மற்றும் வைரஸை ஒழிக்க தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றியும், மேலும் தேவையற்ற உயிரிழப்புக்களை தடுப்பது பற்றியும் சுருக்கமாக விவரிப்பார்கள். இந்த முக்கியமான சந்திப்பில் கலந்து கொள்ளவும், பரந்தளவில் பார்வையாளர்களை சென்றடையும் வகையில் சமூக ஊடகங்கள் மற்றும் பிற இடங்களில் இது பற்றி ஊக்குவிக்கவும் திட்டங்களை வகுக்குமாறு அனைத்து வாசகர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading