முன்னோக்கு

பைடென் நிர்வாகம் பொய்யுரைக்கிறது: ஓமிக்ரோன் அச்சுறுத்தல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்

கோவிட்-19 இன் ஓமிக்ரோன் வகை அமெரிக்கா எங்கிலும் நோய்தொற்றுக்களின் ஓர் அலையைத் தூண்டிவிட்டுள்ள நிலையில், நகர வளாகங்கள் வரையில் பரிசோதனை முகாம்கள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அபாயகரமான புதிய கோவிட்-19 வகையின் அதிகரிப்பை 'விஞ்ஞானிகளோ' வெள்ளை மாளிகையோ எதிர்பார்க்கவில்லை என்று கூறி துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் மக்களுக்குப் பொய்யுரைத்தார்.

Vice President Kamala Harris (AP Photo/Manuel Balce Ceneta)

“[கோவிட்-19 இன்] [இந்த] டெல்டா [வகை] வரவிருப்பது நமக்குத் தெரியாது,” என்று வெள்ளிக்கிழமை லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் வெளியான ஒரு பேட்டியில் ஹாரீஸ் கூறினார். “டெல்டா வரவிருப்பது பெரும்பாலான விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கவில்லை —இவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைத்தான் நாம் நம்பியிருக்கிறோம்— அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். ஓமிக்ரோன் வரவிருப்பதையும் நாங்கள் காணவில்லை. இது, இதுதான் இந்த, இந்த மோசமான வைரஸின் இயல்பாக உள்ளது, இது வெளிப்படும் போது, உருமாறுகிறது மற்றும் வேறு வகைகளாக வெளிப்படுகிறது,” என்றார்.

தனியார் இலாபத்திற்காக மனித உயிர்களைத் தியாகம் செய்யும் ஒரு பேரழிவுகரமான கொள்கைக்குப் பொறுப்பேற்பதிலிருந்து தப்பிப்பதற்காக ஹாரீஸ் பொய்யுரைக்கிறார். ஹாரீஸூம் பைடெனும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்கள் அவர்களைக் கண்டிக்காது என்று எதிர்பார்ப்பதால், மக்களை அவர்கள் முட்டாள்களாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் உலகின் முன்னணி நுண்கிருமியல் துறை நிபுணர்கள், தொற்றுநோயியல் வல்லுனர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஹாரீஸ் அறிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பைடெனின் கோவிட்-19 பரவல் சார்ந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரிக் பிரைட் எழுதுகையில், “இந்த வகைகள் வந்து கொண்டிருக்கின்றன & நமக்கு உடனடியான திட்டங்களும் & நடவடிக்கைகளும் தேவை என்று டிசம்பர் 2020 இல்,” வெள்ளை மாளிகையை 'நான் தனிப்பட்டரீதியில் எச்சரித்தேன்,” என்று எழுதினார். அவர் 'பரவலைக் கண்காணித்து மெதுவாக்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தினேன். அவர்கள் அனைவருக்கும் தெரியும். #ஆச்சரியப்பட ஒன்றுமில்லை,” என்று பிரைட் எழுதினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அமெரிக்க உயிரிமருத்துவ நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவரான பிரைட், கோவிட்-19 முன்னிறுத்திய அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளைக் கண்டித்து இரகசிய இராஜாங்க ஆவண வெளியீட்டு புகார் ஒன்றைப் பலர் அறிய பதிவு செய்தவர் என்பதோடு, “ஜனவரி 2020 ஆரம்பதிலேயே அதிகரித்து வந்த கோவிட்-19 அச்சுறுத்தலைக் குறித்து பொது சுகாதார அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்,” என்று எச்சரித்தார்.

இந்த புதிய வகைகளின் அபாயம் குறித்து யாருக்கும் தெரியாது என்ற ஹாரீஸின் வாதத்திற்குப் பதிலளித்து, கிருமியியல்துறை நிபுணர் அங்கேலா ராஸ்முஸ்சென், “'நாங்கள்' கூறியிருந்தோம். தலைவர்கள் அதைக் கேட்கவில்லை,” என்று பதிலளித்தார். தொற்றுநோயியல் துறை நிபுணர் கிரெக் கொன்சால்வ்ஸ், “இது வந்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்,” என்பதைச் சேர்த்துக் கொண்டார்.

“'நாங்கள்' என்ன எச்சரித்தோம் என்பதும் உங்களுக்குத் தெரிய வேண்டுமா?” கிருமியியல் துறை நிபுணர் கிறிஸ்டின் ஜி. ஆண்டர்சன் எழுதினார். “பூஸ்டர் தடுப்பூசிகளின் தேவையை உறுதிப்படுத்தும் அதேவேளையில், உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம். தரமான முகக்கவசங்களை இலவசமாக வழங்க வேண்டிய தேவை. பரந்தளவில், மலிவாக, விரைவாக பரிசோதனைகளின் அவசியம்,” குறித்து எச்சரித்திருந்தோம்.

புதிய மாறுபாடுகளின்ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கும்விஞ்ஞானபூர்வ பலமான குரல்களில் ஆண்டர்சனின் குரலும் ஒன்றாக இருந்தது. அக்டோபர் 18 இல் வாஷிங்டன் போஸ்டில்பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் ஆண்டர்சன் பின்வருமாறு எச்சரித்தார், “இந்த வைரஸ் அமைதி அடைந்து வருவதை எடுத்துக்காட்டும் எதையும் நான் பார்க்கவில்லை... இந்த வைரஸ் அதனால் முடிந்த வரை மட்டுமே பரவும் என்று நான் நினைக்கவில்லை.” உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வன் கெர்க்கொவ் அந்த கட்டுரையில் எச்சரிக்கையில், “நாம் இந்த வைரஸை மதிக்க வேண்டும்... இன்னமும் இந்த வைரஸில் நிறைய வீரியம் உள்ளது,” என்றார்.

பைடென் நிர்வாகத்தைப் போலவே, அனைத்து பிரதான அமெரிக்க பத்திரிகைகளின் தலையங்க பக்கங்களும் விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தின, இந்த பெருந்தொற்று மக்களிடையே 'அவ்வப்போதைய பகுதிசார் தொற்றாக' ஆகும் போது அது முடிவுக்கு வரும் என்று அவை அறிவித்தன.

அதற்கு நேரெதிர் விதமாக, உலக சோசலிச வலைத் தளமோ விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரியளவில் எடுத்துக் காட்டியது.

சுமார் ஓராண்டுக்கு முன்னர், டிசம்பர் 22, 2020 இல், உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது,

“இந்த வைரஸை தடுக்காமல் —'சமூக நோயெதிர்ப்பு பெருக்கும்' குற்றவியல் கொள்கை மூலம்— சுதந்திரமாக பரவ அனுமதித்தால், அது பெரும் எண்ணிக்கையிலான மக்களைத் தொற்ற அனுமதிப்பதாகும், பெரும்பாலும் அது அதிகமாக தொற்றக்கூடியதாக, அனேகமாக, இன்னும் அதிக உயிராபத்தானதாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகலாம்.”

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், ஜனவரி 30 இல், “புதிய கோவிட்-19 திரிபுகளின் பரவலைத் தடுக்க பள்ளிகள் மற்றும் வணிகங்களை மூடுங்கள்' என்று தலைப்பிட்டு WSWS ஒரு முன்னோக்கு வெளியிட்டது.

இந்த கொரோனா வைரஸ் மாதக்கணக்கில் பரவினால், அது அதிகமாக மாற்றமெடுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதிகமாக மாற்றம் எடுக்கும் பட்சத்தில், அவை தடுப்பூசிகளுக்குக் குறைந்தளவில் தாக்குப்பிடிக்கும் என்பதோடு அவ்விதத்தில் அதிக அபாயகரமானதாக பரிணமிக்கும் சாத்தியக்கூறும் அதிகரிக்கும்.

“கோவிட்-19 இன் உலகளாவிய புதிய அலையைத் தடுக்க ஓர் அவசர வேலைத்திட்டம்!” என்ற தலைப்பில் ஏப்ரல் 5 இல் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு ஓர் அறிக்கையைப் பிரசுரித்தது.

கட்டுப்பாடின்றி இந்த நோய் பரவ அனுமதித்தால் தானாகவே காணாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக அது கோவிட்-19 இன் புதிய, இன்னும் வீரியம் மிக்க மற்றும் இன்னும் உயிராபத்தான புதிய வகைகள் உருவாக வழிவகுத்துள்ளது. அது மக்களை மீண்டும் நோய்தொற்றுக்கு உள்ளாக்கி இருப்பதற்குக் கூடுதலாக, இந்த புதிய வகை வைரஸ்கள், கோவிட்-19 ஐ தடுக்க கிடைத்திருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் ஒன்றை சிதைக்கும் விதத்தில், குறைந்தபட்சம் சில தடுப்பூசிகளின் செயல்திறனைப் பகுதியாகவேனும் குறைத்துள்ளன.

நவம்பர் 21 இல், உலக சோசலிச வலைத் தளம் கோவிட்-19 பெருந்தொற்று மீது உலகளாவிய தொழிலாளர் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையை அறிவித்த அதன் அறிக்கையில், WSWS குறிப்பிடுகையில், “தடுப்பூசிகள் மெதுவாக செலுத்தப்பட்டு வருவதற்கு மத்தியில் பாரிய நோய்தொற்றைத் தொடர செய்வது, தடுப்பூசியையே எதிர்க்கும் வகைகளை உருவாக்க அச்சுறுத்தும் பரிணாமரீதியான அழுத்தங்களை உருவாக்குகிறது என்று விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர்,” என்பதைக் குறிப்பிட்டது.

ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களில், உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவிக்கையில், ஓமிக்ரோன் கடந்த மூன்று வாரங்களில் உலகெங்கிலும் வேகமாக பரவி உள்ளது, அதுவொரு 'கவலைப்படுத்தும் வகை' என்று அறிவித்தது.

உலகெங்கிலும் இந்த வைரஸ் தொடர்ந்து பரவுவதைக் கட்டுப்படுத்துவற்கான எந்தவொரு பொது சுகாதார நடவடிக்கைகளும் இல்லாமலேயே தடுப்பூசிகளின் அபிவிருத்தியானது, ஒரு 'மந்திரச் சாவியை' போல, இந்த பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் என்ற வாதத்தின் மற்றும் ஓமிக்ரோன் உருவாகி இருப்பது ஆளும் வர்க்கத்தின் 'தடுப்பூசி மட்டுமே போதும்' மூலோபாயத்தின் திவால்நிலையை மற்றும் குற்றகரத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.

இந்த 'மூலோபாயம்', பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடுவது உட்பட வோல் ஸ்ட்ரீட்டின் இலாப நலன்களுக்குக் குழிபறிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் நிராகரிப்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. இப்போது இந்த கொள்கை அனுமானிக்கத் தக்கவாறு இருந்த, அனுமானித்தவாறு, பேரழிவை உருவாக்கி உள்ளது.

இவ்வாறு இருந்தும், விஞ்ஞானிகளின் அழைப்புகளை மீறி பைடென் நிர்வாகம் பள்ளிகள் மற்றும் வணிகங்களைத் திறந்து வைப்பதை இரட்டிப்பாக்கி வருகிறது. இதன் விளைவாக, அமெரிக்கா எங்கிலுமான சுகாதார நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. “நம் நாட்டின் சுகாதாரத்துறை தற்போது பொறிந்து வருகிறது,” என்று அவசரகால மருத்துவர்களுக்கான அமெரிக்கன் கல்லூரியின் ரோட் ஐலாண்டு பிரிவு தலைவர் டாக்டர் நாடைன் ஹைமெல்ஃபார்ப் செவ்வாய்கிழமை எச்சரித்தார்.

“ஓமிக்ரோன் வருவது எங்களுக்குத் தெரியாது' என்ற ஹாரீஸின் முட்டாள்தனமான மற்றும் பொய் வாதங்கள் இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து ஆளும் வர்க்கமும் மற்றும் அதன் ஊடக ஊதுகுழல்களும் முடிவின்றி தொடர்ச்சியாக கூறும் பொய்மைப்படுத்தல்கள், தவறான தகவல் வழங்குதல் மற்றும் பிரச்சாரத்தில் சமீபத்தியது மட்டுமே ஆகும் — இத்தகைய பொய்மைப்படுத்தல்கள் ஒரு கொள்கையை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன, இதனால், உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில் 825,000 க்கும் அதிகமான இறப்புகளும் உலகளவில் 5.3 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இத்தகைய பொய்களை அம்பலப்படுத்துவதும், நவீன வரலாற்றில் இந்த மிகப்பெரிய குற்றங்களுக்குப் பின்னால் உள்ள சமூக மற்றும் அரசியல் நலன்களைப் பற்றி தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரிதலை அபிவிருத்தி செய்வதும், கோவிட்-19 பெருந்தொற்று மீதான உலகளாவிய தொழிலாளர் விசாரணையின் முக்கிய பணியாகும். இது, இதன் விளைவாக, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொடுக்கப்படும் போராட்டம், கோவிட்-19 ஐ அகற்றுவதற்கான மற்றும் முற்றிலும் ஒழிப்பதற்கான போராட்டத்திற்குத் தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஓர் இன்றியமையா அடித்தளமாக ஆகிறது.

Loading