பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் கருத்து கணிப்புகளில் அதிவலது வேட்பாளர் மரின் லு பென் உயர்வடைந்து வருகிறார்

மொழிபெயர்ப்பின்மூலக்கட்டுரையைஇங்கேகாணலாம்

கடந்த வாரம் முழுவதும், நவ-பாசிச பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென் தேர்தல் கருத்து கணிப்புகளில் வேகமாக உயர்ந்து வருகிறார், அதேநேரத்தில் பதவியில் இருக்கும் இமானுவல் மக்ரோன் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறார். லு பென்னின் வாக்குகள் சுமார் 21 சதவீதமாக உள்ளன, இது கருத்துக் கணிப்புகளைப் பொறுத்து 2 முதல் 4 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மக்ரோனின் வாக்குகள் 4 புள்ளிகள் குறைந்து 27 சதவீதமாக உள்ளன.

அடிபணியா பிரான்ஸ் கட்சியின் (LFI) வேட்பாளர் ஜோன்-லூக் மெலோன்சோனும் கருத்துக் கணிப்புக்களில் 11ல் இருந்து 15.5 சதவீதமாக உயர்ந்துள்ள போதிலும், ஒரு நவ-பாசிச பிரெஞ்சு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு உண்மையான சாத்தியம் என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. சமீபத்திய எலாபே கருத்துக் கணிப்பின்படி, லு பென் இரண்டாவது சுற்றில் மக்ரோனுக்கு எதிராக நிறுத்தப்பட்டால் 47.5 சதவீத வாக்குகளை பெறுவார். முந்தைய கருத்துக் கணிப்புகளில், மக்ரோனுக்கு எதிரான இரண்டாவது சுற்று போட்டியில் அவர் 45 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

அதிவலது தலைவர் மரின் லு பென் தெற்கு பிரான்சிலுள்ள துலோனில் ஜூன் 17, 2021 அன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். (AP Photo/Daniel Cole)

இந்த கருத்துக் கணிப்புக்களின் முடிவுகள், மக்ரோனில் தொடங்கி, ஆளும் வட்டாரங்களில் கவலைக்குரிய ஊகங்களைத் தூண்டிவிட்டுள்ளது. பிரான்சில் அதிவலதின் உயர்விற்கு தான் பொறுப்பில்லை என்று அரசுத் தலைவர் அபத்தமாக வலியுறுத்தினார்.

'நான் ஒருபோதும் தேசிய முன்னணியை (National Front) குறைத்துமதிப்பிடவில்லை,' என மக்ரோன் பூராஸில் ஒரு பிரச்சாரத்தில், மரின் லு பென்னின் அதிவலது தேசிய பேரணி (National Rally) கட்சியின் முன்னாள் பெயரைக் குறிப்பிட்டு கூறினார். பின்னர் ஒரு நவ-பாசிச தேர்தல் வெற்றி சாத்தியம் பற்றி கேட்கப்பட்டதற்கு, 'இல்லாத ஒன்று' என்று கருத்துத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

மக்ரோன் தனது சொந்த முன்னாள் பிரதம மந்திரி எட்வார்ட்பிலிப்பால் முரண்பட்டார். 'நிச்சயமாக, மரின் லு பென்னால் வெல்ல முடியும்,' என்று பிலிப் Le Parisien பத்திரிகையிடம் கூறினார். அவர் தொடர்ந்தார், 'நான் ஒரு உயர்ந்த வாக்களிப்பின்மைக்கு அஞ்சுகிறேன், இது ஒருபோதும் நல்ல ஜனநாயக ஆரோக்கியத்தின் அடையாளமாக இருக்காது.'

பிரான்சில் 'அழுக்குகளை அழித்தொழிக்க' அழைப்பு விடுத்ததன் மூலம் இந்த வாரம் ஒரு அவதூற்றை ஏற்படுத்திய அதிவலது விவாதவாதி எரிக் செமூரின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் மரின் லு பென்னுக்கு உதவுவதாக பிலிப் மேலும் கூறினார். பிலிப் கூறினார், 'எரிக் செமூரின் மிகவும் ஆக்ரோஷமான இயல்பு, அவரது கருத்துக்களின் அடிக்கடி மூர்க்கத்தனமான தன்மை, ஒப்பீட்டளவில் லு பென்னை மென்மையாக்குவதாகத் தெரிகிறது என்பதையும் நான் கவனிக்கிறேன்.' இருப்பினும், 'அவர் வெற்றி பெற்றால், என்னை நம்பினால், விஷயங்கள் நாட்டிற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும்' என்று அவர் மேலும் கூறினார்.

மக்ரோனின் வேட்பாளர்நிலை வெளித்தோற்றத்தை விட மிகவும் பலவீனமானது என்று தாங்கள் நம்புவதாகவும், லு பென்னின் சாத்தியமான வெற்றியின் விளைவுகள் குறித்து அவர்கள் அஞ்சுவதாகவும் வணிகத் தலைவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர்.

பிரெஞ்சு நிறுவனங்களின் முதலாளிகள் இயக்கத் (MEDEF) தலைவர் Geoffroy Roux de BŽzieux ஏற்கனவே MEDEF ஆனது ஒரு மெலோன்சோன் ஜனாதிபதி பதவியை ஏற்க முடியும் என்பதை தெரியப்படுத்தியுள்ளார். முதலாளிகள் அமைப்பின் தலைவர் மெலோன்சோனை ஆமோதித்தார், அதாவது அவர் 'ஆட்சி செய்யத் தயாராக இருக்கிறார்' என்றார். De BŽzieux மேலும் கூறினார், 'ஆமாம், எங்கள் கருத்து வேறுபாடுகள் ஆழமானவை. ஆனால் நமது எதிரிகள் கூட அதை அங்கீகரிக்கின்றனர்: ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிகளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஒரு திடமான மற்றும் ஒத்திசைவான வேலைத்திட்டத்துடன் ஆட்சி செய்ய தயாராக உள்ளனர்.'

நிதியப் பிரபுத்துவமும் பாரிஸ் பங்குச் சந்தையும் ஸ்பெயினில் அதிகாரத்தில் இருக்கும் LFIஇன் சகோதரக் கட்சியான பொடெமோஸின் கொள்கைகளை நெருக்கமாக அவதானித்துள்ளன. பொடெமோஸ் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை அதிகரிப்பதற்காக சமூக செலவினங்களைக் குறைத்துள்ளது, கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் போது வெகுஜன தொற்றுநோய் கொள்கையைப் பின்பற்றியது, மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் நவ-நாஜிக் குழுக்களைக் ஆயுதமயமாக்கியது. மெலோன்சோனின் ஒரு வெற்றியானது இந்த வலதுசாரிப் போக்கைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று MEDEF உறுதியாக நம்புகிறது, எனவே அவருக்கு ஒரு வெற்று காசோலையைக் கொடுக்கிறது.

LFIஇன் தலைமையானது அதன் பங்கிற்கு, கருத்துக் கணிப்புக்களில் அதன் வேட்பாளர் உயர்ந்த போதிலும், அது ஒரு சாத்தியமான மக்ரோன் வெற்றிக்கு ஆதரவாளரின் பாத்திரத்துடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளும் என்பதை சமிக்ஞை செய்துள்ளது. LFI தலைமையின் மெலோன்சோனின் உதவியாளரான Adrien Quatennens, மக்ரோன் - லு பென் இரண்டாம் சுற்று நடந்தால், மக்ரோனுக்கு வாக்களிக்க LFIஒரு மறைமுகமான அழைப்பையே கொடுக்கும் என்று வலியுறுத்தினார். 'ஒரு வாக்கு கூட அதிவலதுக்கு செல்லக்கூடாது என்று கூறுவதற்கு நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்போம்,' என்று அவர் கூறினார்.

மக்ரோனுக்கு வாக்களிக்கும் அழைப்பை எவ்வாறு சிறந்த முறையில் தொகுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நம்பிக்கையில், LFI உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் 'ஆலோசனையை' LFI தலைமை ஏற்பாடு செய்யும் என்று Quatennens மேலும் கூறினார். எவ்வாறாயினும், LFI தனது வாக்காளர்களை பாதிக்க முடியாது என்பதில் அக்கறை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்: “மக்கள் அவர்கள் விரும்பியதைச் செய்வார்கள். அதனால்தான் நாங்கள் அடிப்படையை ஆலோசிக்கப் போகிறோம். அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிவதாகும் ஆனால் தெளிவாக இருக்கட்டும்: RN [தேசிய பேரணி, லு பென்னின் கட்சி] வாக்களிப்பது ஒரு விருப்பமாக இருக்காது.

மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்குமே எதிரான சக்தி வாய்ந்த எதிர்ப்புக்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே நிலவுகின்றன. ஆனால் LFI போன்ற பிற்போக்குத்தனமான போலி-இடது கட்சிகளால் அதன் மீது சுமத்தப்பட்ட அரசியல் தடையை உடைக்காமல் இந்த எதிர்ப்பானது வெளிப்பாட்டைக் காண முடியாது.

உண்மையில், 2017 தேர்தல்களில் மக்ரோன்-லு பென் போட்டியிட்டதில், LFI வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மக்ரோன் மற்றும் லு பென் ஆகிய இருவருக்கும் விரோதப் போக்கைக் கொண்டிருந்தனர். இந்த எதிர்ப்பிற்கு அழைப்பு விடுப்பதன் மூலம்தான் பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) 2017ல் இரண்டாவது சுற்றுப் புறக்கணிப்புக்கான அழைப்பையும், தொழிலாள வர்க்கத்தில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் அழைப்பு விடுத்தது.

எவ்வாறெனினும், 2017 இல் மெலோன்சோன் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) வேட்பாளர் Philippe Putou இருவரும் 2022 இல் Quatennensஇன் மொழியைப் பிரதிபலிக்கும் மொழியில், தாங்கள் மக்ரோனை ஆதரிப்பதாக தெளிவுபடுத்தினர். மக்ரோனுக்கு அவர்கள் கொடுத்த ஆதரவு ஓரளவிற்கு மறைக்கப்பட்டிருந்தாலும், அது மிகவும் உண்மையானதுதான். மக்ரோனுக்கு எதிரான சமூக எதிர்ப்பின் முதல் பெரிய வெடிப்பில் NPA மற்றும் LFI ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன: சமூக சமத்துவத்திற்கான 'மஞ்சள் சீருடை' எதிர்ப்புக்கள் மக்ரோனால் வன்முறையாக ஒடுக்கப்பட்டன, அதே நேரத்தில் NPA, LFI மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களை தங்கள் ஆதரவில் அணிதிரட்ட எதுவும் செய்யவில்லை.

இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான எதிர்ப்பாக உள்ளது, இது ஒரு நவ-பாசிசத்தின் மீதான வெறுப்பு அல்ல என்பதுதான் லு பென் குறித்த MEDEF இன் அமைதியின்மைக்கு அடித்தளமாக உள்ளது. 1940 ஜூலை 10 அன்று நாஜி இராணுவம் பிரான்சை தோற்கடித்ததைத் தொடர்ந்து, தேசிய சட்டமன்றத்தின் வாக்கெடுப்பின் மூலம் பிலிப் பெத்தானை நாஜி ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியாக நிறுவுவதற்கு முதலாளித்துவ வர்க்கம் தானே இணங்கிக் கொண்டது. இது லு பென் ஒரு ஜனாதிபதியாக இடமளிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. ஆனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியல் பாரம்பரியம் மீண்டும் நாஜிசத்துடன் ஒத்துழைப்பிற்கு செல்லும் ஒருவர் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து பெறக்கூடிய முடிவுகளை கண்டுதான் அது அஞ்சுகிறது.

உண்மையில், ஒரு நவ-பாசிச அரசாங்கத்தை நிறுவுவதற்கான அதிகரித்துவரும் ஆபத்து, 2017ல் சோசலிச சமத்துவக் கட்சியினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: ஆளும் உயரடுக்குகள் பாசிச சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புவதை முதலாளித்துவ அரசின் நிறுவனங்களின் கட்டமைப்பிற்குள் இருந்து எதிர்க்க முடியாது.

இதற்கு, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான ஒரு போராட்டத்தில், திவாலான முதலாளித்துவ அமைப்புமுறையுடன் அவர்களை பிணைக்க முயலும் அனைத்து அரசியல் சக்திகளுக்கும் எதிராக, சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டுவது அவசியமாகிறது.

மக்ரோனின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு சர்வதேச வெடிப்பைக் கண்டுள்ளது. வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றில் அமெரிக்காவில் பல தசாப்தங்களில் நடந்த முதல் பெரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் பிரான்சில் 'மஞ்சள் சீருடை' மற்றும் 2019-2021 அல்ஜீரிய எதிர்ப்புக்கள் (புன்னகையின் புரட்சி அல்லது ஹிராக் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது) போன்ற போராட்டங்கள் ஆகியவை இப்போது உலகின் ஒவ்வொரு கண்டத்தையும் உலுக்கிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களின் அலையைத் தொடங்கியுள்ளன. LFI, NPA, CGT தொழிற்சங்க எந்திரம் மற்றும் சர்வதேச அளவில் அவற்றின் சகாக்கள் அரசியல் போராட்டத்திற்குள் வெகுஜனங்கள் வெடிப்புத் தன்மையுடன் நுழைவதற்கு விடையிறுக்கும் வகையில் முற்றிலும் எதிரான திசையில் சென்றுள்ளனர்.

ஆளும் உயரடுக்கின் பரிணாம வளர்ச்சி, அதன் 'இடது' பிரிவுகள் என்று கூறப்படுவது உட்பட, குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் போது, வலதுபுறமாக இருந்தது. LFI இம் அதன் கூட்டாளிகளும் நவ-பாசிச ஆதிக்கம் செலுத்தும் சுகாதார-அனுமதி சீட்டிற்கு எதிரான (anti-health pass) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொண்டனர், அவை வைரஸ் பரவலுக்கு எதிரான ஒரு விஞ்ஞானபூர்வமான போராட்டத்தை எதிர்த்தன. இப்பொழுது அவர்கள் அனைவரும் உக்ரேனில் பிரான்ஸ் மற்றும் நேட்டோவின் தலையீட்டை ஆதரிக்கின்றனர்; அவை அதிவலது உக்ரேனிய தேசியவாத குடிப்படைகளுக்கு ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் கொடுக்கின்றன.

ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம், கோவிட்-19 மீதான உத்தியோகபூர்வ அலட்சியம், தொழிலாளர்களை வறுமையில் ஆழ்த்தும் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பாசிச சர்வாதிகாரத்தின் ஆபத்து ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு போலி-இடதுகளுடன் சமரசம் செய்து கொள்ள முடியாத முறிவு தேவைப்படுகிறது. 20ம் நூற்றாண்டைப் போலவே இந்தப் போராட்டத்திற்கும் ஒரு சோசலிச முன்னோக்கில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சர்வதேசரீதியாகவும் மற்றும் புரட்சிகரமாகவும் அணிதிரட்டல் தேவைப்படுகிறது. போலி-இடதிற்கு ட்ரொட்ஸ்கிச மாற்றீடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான Le Parti de l'égalité socialiste (PES -சோசலிச சமத்துவக் கட்சி) ஆகும்.

Loading