இலங்கை பிரதமர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அச்சுறுத்தும் உரையை ஆற்றினார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்குகாணலாம்.

இலங்கைப் பிரதமர் மகிந்த இராஜபக்ஷ, திங்கட்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவிற்கு அரசாங்கமே பொறுப்பாளிஎன்பதை மறுத்ததோடு, தனது சகோதரர் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யுமாறு கோரிபோராடிவரும் உழைக்கும் மக்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் எச்சரிக்கையையும் விடுத்தார்.

அரசாங்கம் ஆட்சியை தக்கவைக்க துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவசரமாக அறிவிக்கப்பட்ட உரை,தெரணதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படப்போவதாக அறிவித்ததையடுத்து, ஆளும் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் மெல்லிய பெரும்பான்மையே உள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் “வீட்டிற்குச் செல்லுமாறு” கோரி தீவு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விண்ணைத் தொடும் பணவீக்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள்பற்றாக்குறைமற்றும் நீண்டமின்வெட்டுகளுக்கு மத்தியில், இந்தபோராட்டங்களுக்கு வெகுஜனஆதரவு பெருகி வருகிறது.

வரிசையில் காத்திருக்கும் 'மக்களின் களைப்பு' மற்றும் 'பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் மக்கள் படும் துன்பத்தையும்' புரிந்து கொண்டதாக பிரதமர் கபடத்தனமாகஅறிவித்தார். ஆனால் அவரது உரையின் உண்மையான நோக்கம், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று கண்டித்து, அவற்றை உடனடியாக நிறுத்தக் கோருவதுதான்.

இலங்கை பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ [Credit: Wikimedia Commons]

இராஜபக்ஷ கூறியதாவது: “’பாராளுமன்றத்தில் உள்ள225 பேரும்வேண்டாம்’ என்ற கோஷம் இன்று வீதிகளில் எதிரொலிக்கிறது. அதன்மூலம்இந்த ஜனநாயக அமைப்பு நிராகரிக்கப்படுகிறது. இது நல்லதாகத் தோன்றினாலும், அதன் ஆபத்தை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இராஜபக்ஷ எந்த ஜனநாயகம் பற்றி பேசுகிறார்! கோபம் மற்றும் விரக்தியால் திரளாக தெருக்களுக்கு தள்ளப்பட்டுள்ளமக்கள், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளைச்சேர்ந்த அனைத்து225சுயநல பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்ப்பதற்குறிய அடிப்படை ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துகின்றனர். இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகள் அனைவரும்,பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பாளிகள்ஆவர்.

ஜனாதிபதி பதவியும் பாராளுமன்றமும் ஜனநாயக உரிமைகள் மீதான அடுத்தடுத்த தாக்குதலுக்கான கருவிகளாகவே உள்ளன. தற்போதைய அரசாங்கம், அதிக ஊதியம் மற்றும் மேம்பட்ட நிலைமைகளைக் கோரிமுன்னெடுக்கப்படும் தொழிலாளர்களின் தொழிற்சங்கநடவடிக்கையை குற்றமாக்குவதற்கு, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இலவசக் கல்விசீரழிப்புக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள்வீசவும் தடியடிபிரயோகம் செய்யவும் பொலிஸை கட்டவிழ்த்து விட்டது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுவதன் மூலம் கருத்துச் சுதந்திரம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதே நேரத்தில், இராஜபக்ஷ ஆட்சியானது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் பிற்போக்குசிங்கள பேரினவாதத்தை தூண்டிவிட்டு, நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம்களை கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கங்கள் செய்ததைப் போன்று, முன்நகர்ந்து வெகுஜன எதிர்ப்புக்களுக்கு எதிராக ஒரு கொடூரமான பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட அரசாங்கம் தயாராக உள்ளது என்பதற்கான ஒரு வெளிப்படையானஎச்சரிக்கையே வரலாற்றில்இருந்து பிரதமர்நினைவூட்டுவதாகும்.

1980களின் பிற்பகுதியில் தீவின் தெற்கில் வேலையற்ற சிங்கள இளைஞர்கள் மத்தியில் தோன்றிய அரசாங்க எதிர்ப்பு இயக்கம் பற்றியே இராஜபக்ஷ குறிப்பிட்டார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியானது, அரசியல் எதிரிகள் மற்றும் தொழிலாளர்கள் மீதான மக்கள்விடுதலைமுன்னணியின்(ஜே.வி.பி.) கொலைகாரத் தாக்குதல்களை சாக்குப்போக்காகப்பயன்படுத்தி, அரசாங்க-விரோதஅமைதியின்மையை முறியடிக்கும் முயற்சியில்,இராணுவ அனுசரணை பெற்ற கொலைப் படைகளை கட்டவிழ்த்துவிட்டது. இதில் சுமார் 60,000கிராமப்புற இளைஞர்கள்கொன்று குவிக்கப்பட்டனர். மக்கள்மத்தியில்அச்சத்தை பரப்ப வீதிகள்எங்கும்வரிசையாகசடலங்கள் எரிந்துகொண்டிருந்தன.

நாட்டின் 26ஆண்டுகால இனவாதப் போருக்கு வழிவகுத்த,தீவின் வடக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தோன்றியதையும்பற்றி பிரதமர் குறிப்பிட்டார். தமிழர்கள் மீதான ஜனநாயக விரோத மற்றும் பாரபட்சமான கொள்கைகள் மற்றும் சிங்கள பேரினவாத குண்டர்களால் தொடர்ச்சியாகமுன்னெடுக்கப்பட்டஇனப் படுகொலைகளால்உருவானஆழ்ந்த விரக்தியாலேயே தமிழ் இளைஞர்கள் புலிகள் மற்றும் பிற ஆயுதமேந்திய தமிழ் குழுக்களில் இணைந்துகொண்டனர். அடுத்தடுத்துஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களின் பிரதிபலிப்பு, இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவுகொண்ட ஒரு இரத்தக்களரி யுத்தமாகும்.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளராக அவரது சகோதரர் கோட்டாபயவும், 2009இல் இறுதிபோரில் கொடூரமான இராணுவத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினர். இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கண்மூடித்தனமாக படுகொலை செய்யப்பட்டதுடன் இலட்சக்கணக்கான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டதடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டனர்.

பிரதமர் தனது தொலைக்காட்சி பார்வையாளர்களிடம், 'இதை கவனமாக பரிசீலித்து, இப்போதைய செயல்களின் மூலம் நமதுதேசத்தை வரலாற்றில் மீண்டும் ஒரு இருண்ட காலத்திற்கு நழுவவிடாமல் பாதுகாக்க வேண்டும்' என்று கூறினார். இது ஒரு அச்சுறுத்தலாகும், குறிப்பாக கைகளில் இரத்தம் தோய்ந்த ஒரு மனிதரிடமிருந்துஇந்தஅச்சுறுத்தல் வருகிறது. இந்த அச்சுறுத்தல்நடப்புஎதிர்ப்புஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மட்டுமல்ல, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த கிராமப்புற மக்களுக்கும் எதிரானதாகும்.

உக்கிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பாளர்களை குற்றம் சாட்டிய இராஜபக்ஷ, “நீங்கள் வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் ஒவ்வொரு நொடியும் எமது நாடு டொலர்களைப் பெறுவதற்கான சாத்தியமான வாய்ப்புகளை இழக்கிறது,” என்றார்.

இராஜபக்ஷ யாருடைய டொலர்களைப் பற்றி பேசுகிறார்? நிச்சயமாக, நாளுக்கு நாள் உயிர் பிழைக்கப் போராடும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பணம் அல்ல. பலர் பட்டினியைநெருங்குகின்றனர், இல்லையெனில்அத்தியாவசிய உணவுகளைப் பெற முடியாமல்ஏற்கனவே பட்டினிகிடக்கின்றனர். மருந்து மற்றும் வாழ்க்கைக்குதேவையான பிற அடிப்படைபொருட்களைப் பற்றி பேசவேவேண்டியதில்லை.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பங்குச் சந்தை ஊக வணிகர்கள், வணிக தொழில்முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் போன்ற பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கு பற்றி பிரதமர் பேசினார். வெகுஜனங்கள்மத்தியில் கோவிட்-19பரவ அனுமதிக்கும் அரசாங்கத்தின் குற்றவியல் கொள்கையின்விளைவாக தொற்றுநோய்பரவிக்கொண்டிருக்கும்போது, உயர்ந்தசெல்வத்தைகுவித்துக்கொண்ட செல்வந்த உயர் அடுக்கினரேஇவர்கள். இராஜபக்ஷ ஆட்சி அவர்களுக்கு மிதமிஞ்சிய வரிக் குறைப்புகளையும் கையூட்டுகளையும் வழங்கியது. பொருளாதாரத்தைத் ஊக்குவித்தல் என்ற பெயரில் பணம் அச்சடிப்பதன் மூலம் இவர்களுக்குநிதியும்அளிக்கப்பட்டதுடன், தொழிலாளர்களை பாதுகாப்பற்ற சுகாதார நிலைமைகளின் கீழ் வேலை செய்ய நிருப்பந்தித்தது.

இலங்கையின் பங்குச் சந்தை ஜனவரியில் அதன் வரலாற்று உச்சமான புள்ளிக்கு உயர்ந்து, 13,500சுட்டெண்ணைஎட்டியதுடன்,ஊக வணிகர்களுக்கு அதிர்ஷ்டத்தை அறுவடை செய்ய உதவியது. இலங்கையின் ஒன்பது முன்னணி நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 364பில்லியன் ரூபாவை (1.8பில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலாபமாகஈட்டியதுடன், அவர்களின் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தமாக 21பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றுக்கொண்டனர்.

எதிர்ப்பாளர்களை குற்றம் சாட்டிய பிரதமர், அதே போல் பொறுப்பை தொற்றுநோய்மீது போட்டார்.அரசாங்கமேமக்களைப் பாதுகாத்ததாகஅவர்கூறினார். இது ஒரு பொய்! உலகப் பொருளாதார நிலை வெளிநாட்டு வருமானத்தை பாதித்துள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கத்தைத் தவிர, ஏனைய அனைவரும் மற்றும் அனைத்துமேபொறுப்பாளிகள்.

உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கையை கடுமையாகப் பாதித்துள்ளது என்பது நிச்சயமாக உண்மைதான் என்றாலும், பெருவணிகத்தின் இலாபங்களையும் பெரும் செல்வந்தர்களின் செல்வத்தையும் பாதுகாக்கும் முயற்சியில், நெருக்கடியின்சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தியததற்கு அரசாங்கம் முழுப் பொறுப்பாகும்.

அவசரகால கடன்களுக்காகசர்வதேச நாணய நிதியத்திடம் கெஞ்சும் அரசாங்கம்,இப்போது மேலும் கஷ்டங்களை சுமத்துவதற்கு தயாராகி வருகிறது. கடந்த வாரம் புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர், சர்வதச நாணய நிதியத்தின்சிக்கனக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு 'அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை' அவசியம் என்று அறிவித்தார். இது இன்னும் விலைஅதிகரிப்பு, வரிஅதிகரிப்பு, அதிக தட்டுப்பாடு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கூட்டுத்தாபனமாக்கப்பட்டு தனியார்மயமாக்கப்பட்டால் பெரும்வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

எதிர்ப்பாளர்கள் தனது எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் 'அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை' எவ்வாறு அடையப்படும் என்பதை மஹிந்த இராஜபக்ஷ முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளார். தங்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க பிரச்சாரம் செய்யும் வெகுஜனங்களுக்கு எதிரான கொடூரமான அரச அடக்குமுறையின் அச்சுறுத்தல்களின்வடிவில் பிற்போக்குமீண்டும் அதன் அசிங்கமான தலையை நீட்டத்தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 2-3வார இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ ஊரடங்குச் சட்டத்தை விதித்து, இராணுவத்தினரையும் பொலிஸாரையும் வீதிகளில் இறக்கியபோது, ​​வெகுஜன எதிர்ப்புக்கள் அச்சுறுத்தலை மீறிஇடம்பெற்றதால், அரசாங்கம் தற்காலிகமாக பின்வாங்கியது. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.),ஏப்ரல் 7அன்று வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், ஆட்சியானதுநேரம் எடுத்துக்கொள்கிறதுஎன்று எச்சரித்தது. பிரதமர்இப்போது அரசு அடக்குமுறையை மிகவும் பரந்த மற்றும் வன்முறை அளவில் பயன்படுத்துவதாக அச்சுறுத்துகிறார்.

அதன் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப்போராட, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த ஜனநாயக அமைப்புகள் தேவை. சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு வேலைத்தளத்திலும், தொழிற்சாலை மற்றும் தொழிலாள வர்க்க புறநகர் பகுதியிலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்துமுதலாளித்துவ கட்சியிலிருந்தும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது.

தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு தொழிற்சங்கங்களேபெரும் தடையாக உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக, நாட்டின் நெருக்கடியைப் புரிந்து கொண்டதாகக் கூறி, தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டத்தையும்தொழிற்சங்கங்கள்விற்றுவிட்டன. கடந்த வாரம், அரச துறைதொழிற்சங்கங்கள்எதிர்ப்புகளை ஆவியாக்கி விடுவதற்காகஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. தொழிற்சங்கத் தலைவர்கள் தாங்கள் 'பாராளுமன்றத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பகமானஆட்சி செய்யக்கூடிய' அரசாங்கத்தின் பக்கம்- அதாவது 225பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மற்றொரு முதலாளித்துவ அரசாங்கத்தின் பக்கம் நிற்பதாகஎன்று அறிவித்தனர்.

தொழிலாள வர்க்கம் தனது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடக் கூடிய, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களையும் தன் பக்கம் இழுக்ககூடிய ஒரு சோசலிச செயல் திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சிமுன்வைத்துள்ளது.தொழிலாளர் ஜனநாயகஅமைப்புகளான நடவடிக்கைக் குழுக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்குஅடித்தளத்தை நிறுவுகிறது. பணக்காரர்களின் இலாபங்களுக்குஅன்றி, பெரும்பான்மையினரின் தேவைகளின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்கக்கூடிய ஒரு உண்மையான ஜனநாயக அரசாங்கம்இதுவே ஆகும்.

இந்தத் வேலைத்திட்டத்திற்காக போராடும் ஒரே கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், அதை கட்டியெழுப்புமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading