இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
இலங்கை, மோசமடைந்துவரும் உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்ட எழுச்சியால் மூழ்கிப் போயுள்ளது. ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஒரு-நாள் பொது வேலைநிறுத்தத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றினர். அவர்கள் ஜனாதிபதி கோடபாய இராஜபக்ஷ மற்றும் அவரின் அரசாங்கத்தை பதவி விலகுமாறும் பேரழிவுகரமான சமூக நிலைமைகளை முடிவுக்கு கொணடுவருமாறும் கோரிய போதிலும் அடிப்படையில் இந்த கோரிக்கைகள் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்துக்கும் எதிரானதாகவே இருந்தது.
அரசியல் நெருக்கடியால் பலவீனமடைந்த ஜனாதிபதி இராஜபக்ஷ, முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றவும் வெகுஜன இயக்கத்தை அடக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் (ச.நா.நி.) பிற்போக்கு சிக்கன கோரிக்கைகளை செயல்படுதவும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட எதிர்க் கட்சிகள் தமது பங்கிற்கு இந்த வெகுஜனக் கோபத்தை பாதுகாப்பான பாராளுமன்ற வழிகளில் திருப்ப முயல்கின்றன. அவர்களின் சிறிய தந்திரோபாக வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் இந்தக் கட்சிகள் ச.நா.நி. இன் திட்ட நிரலை ஆதரிப்பதோடு அதை அமுல்படுத்த ஒரு இடைக்கால ஆட்சி அமைப்பதற்கும் அதன் பின்பு பொதுத் தேர்தலை நடத்தவும் பிரச்சாரம் செய்கின்றன. முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்தவும் அவற்றை இந்த முதலாளித்துவ கட்சிகளுடன் கட்டிப்போடவும் தலையீடு செய்தன.
முன்னிலை சோசலிச கட்சியானது (மு.சோ.க.) இந்த அழுகிப்போன அரசியல் சூழ்ச்சிகளுக்கு உத்வேகத்துடன் உதவி செய்வதுடன் ஒரு கூட்டணிக்கான சாத்தியத்தைப் பற்றி கருத்து அறிய எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளது. அதே நேரம், வர்க்கப் போராட்டங்கள் ஒரு புரட்சிகரத் திசையை எடுக்காமல் தடுப்பதன் பேரில் தொழிற் சங்கங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றது.
ஜே.வி.பி. முதலாளித்துவ ஆட்சி மற்றும் அதன் கொடூரமான 26 வருட தமிழர்-விரோத இனவாத போருக்கான அதன் ஆதரவு காராணமாக தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் அதிருப்திக்கு உள்ளன நிலையில், அதில் இருந்து பிரிந்துசென்ற ஒரு கன்னையாலேயே 2012 இல் மு.சோ.க. உருவாக்கப்பட்டது. மு.சோ.க.யின் இப்போதுள்ள முன்னணித் தலைவர்கள், போர் காலம் முழுவதிலும் ஜே.வி.பி.யில் இருந்தனர். அவர்களின் பிளவானது, ஜே.வி.பி.யின் இனவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுடன் எந்த அடிப்படையான முறிவையும் கொண்டிருக்கவில்லை.
தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான இயக்கத்தையும் தடுப்பதிலும் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டுகொடுப்பதிலும் இந்த போலி இடது கட்சியின் வகிபாகம் கடந்த இரு மாதங்களில் போதியளவில் தெளிவாகத் தெரிகின்றது. மு.சோ.க. அதன் சோசலிச வாய்ச்சவடால்களை கைவிட்டு, சோசலிசத்தை தொலைதூர எதிர்காலத்திற்கான ஒரு பணி என் வலியுறுத்துவதுடன், இப்போது ஊழல்களுக்கு முடிவுகட்டி அவ்வப்போதான சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் முதலாளித்துவத்தினுள் தீர்வுகள் கிடைக்கும் என்ற போலி நம்பிக்கைகளை பரப்பி வருகின்றது.
மு.சோ.க. ஆனது ஐ.ம.ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மற்றொரு போலி-இடது குழுவான ஐக்கிய சோசலிச கட்சி (USP) உட்பட ஏனைய சிறிய அரசியல் கட்சிகளுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கன “ஐக்கிய முன்னணி” என்ற போர்வையில் இதற்கு முன்னரும் நாட்டில் இரு பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளின் பிரச்சாரங்களை ஆதரிப்பதில் ஐக்கிய சோசலிசக் கட்சி ஒரு சாதனையைக் கொண்டுள்ளது.
மே 20 அன்று, புபுது ஜயகொட, துமிந்த நாகமுவ மற்றும் சஞ்சீவ பண்டார உட்பட மு.சோ.க.யின் தலைவர்கள், ஐ.ம.ச. இன் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பன்டார மற்றும் கபிர் ஹாசிம் தலைமையிலான தூதுக் குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
வலது-சாரி ஐ.ம.ச., பாரியளவு மதிப்பிழந்துபோன ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 2020 தொடக்கத்தில் ஏற்பட்ட பிளவில் இருந்த உருவாக்கப்பட்டதாகும். ஐ.தே.க.யில் இருந்து ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே தெரிவானார். அவர் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஆவார். ஐ.தே.க.யைப் போலவே ஐ.ம.ச.யும் தொழிலாளர் வர்க்க-விரோத, பெரும்வணிக-சார்பு மற்றும் அமெரிக்க-சார்பு வேலைத் திட்டத்தையே பின்பற்றுகின்றது. விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி இராஜபக்ஷ, அரசாங்கமானது அதன் அனைத்து சிக்கன நடவடிக்கைகளையும் அமுல்படுத்தும் என ச.நா.நி.க்கு நிரூபிப்பதற்காகவே அவரை புதிய பிரதமதராக நியமித்துள்ளார். ஐ.ம.ச., விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு தனது நிபந்தனையுடனான ஆதரவை வழங்கியுள்ளது.
வலது-சார் முதலாளித்துவ ஐ.ம.ச. உடனான ஒரு கூட்டணியை எதிர்பார்ப்பதில் மு.சோ.க.க்கு எந்ந சிரமும் கிடையாது. ஐ.ம.ச. உடன் நடந்த “பரந்த கலந்துறையாடல்” பற்றிய ஜயகொடவின் மகிழ்ச்சியான கருத்துக்களை மு.சோ.க.யின் முகநூல் வெளியிட்டுள்ளது. “இந்த அவசரமான சூழ்நிலையில் குறுகிய காலத்துக்குள் வெகுஜனங்களுக்கு நன்மைகள் பெறவும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் எங்களால் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பதை நாம் கலந்துறையாடினோம்” என்ற அவர் கூறியுள்ளார்.
உண்மையில், சர்வதேச நிதி மூலதனத்தால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் தற்போதைய ஆட்சியைப் போலவே ஐ.ம.ச. அரசாங்கமும் ஈவிரக்கமற்றதாக இருக்கும். எனினும் மு.சோ.க. வெட்கமின்றி அதை உழைக்கும் மக்கள் எதிர்கொள்கின்ற சமூக பேரழிவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறையாக முன்வைக்கின்றது.
மு.சோ.க. ஜனநாயக உரிமைகளின் ஒரு பாதுகாவலனானகவும் ஐ.ம.ச.யை இழிந்த முறையில ஊக்குவிக்கின்றது.
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை எவ்வாறு ஒழிப்பது என்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் “சிறு வேறுபாடுகளே” இருப்பதாகவும் ஆனால் அதன் முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடுகள் இருக்கின்றன” என்றும் ஜயகொட அறிவிக்கின்றார். ஜனாதிபதியின் கைகளில் பாரிய அதிகாரங்களை ஒன்றுகுவிக்கும் எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை, ஐ.ம.ச.யின் தாய்க் கட்சியான ஐ.தே.க.வே ஸ்தாபித்த்து. உண்மையில், ஐ.ம.ச., மு.சோ.க. ஆகியன நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை உடனடியாக ஒழிப்பதை முன்வைக்கவில்லை, மாறாக அதன் திருத்தத்தையே முன்வைக்கின்றன.
இந்த இரு கட்சிகளும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆயுதம் ஏந்திய குண்டர்களால் அரச-எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது மே 9 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பற்றியும் கலந்துறையாடியுள்ளன. இப்போது இந்த ஆத்திரமூட்டல், அரச-விரோத போராட்டகாரர்கள் மிதான பொலிஸ் வேட்டையாடலுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. “இந்த அடக்குமுறையைத் தோற்கடிக்க” ஐ.ம.ச. தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதாக மு,சோ.க. அறிவிக்கின்றது. இது முற்றுமுழுதாக ஒரு பயனற்ற வாக்குறுதியாகும்.
மக்கள் முன்னிலையில் நம்பகத் தன்மையை பெறுவதற்காக, ஐ.தே.க.யின் ஜனநாயக-விரோத அடக்குமுறையின் நீண்ட சரித்திரத்தில் இருந்து தம்மை தூர விலக்கிக் கொள்ள ஐ.ம.ச. ஏங்குகிறது. மு.சோ.க., இந்த ஸ்தாபனக் கட்சிக்கு விருப்பத்துடன் ஜனநாயக சாயம் புசுகின்றது. மு.சோ.க. உடனான மற்றொரு கலந்துரையாடலுக்கு ஐ.ம.ச. தயாராகி வருவதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹாசிம் தெரிவித்ததில் ஆச்சரியம் கிடையாது.
இதே நோக்கத்துக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மே 18 அன்று இதே போன்ற பேச்சுவார்த்தைகளை மு.சோ.க. நடத்தியது. இதன் மூலம், நாட்டின் தமிழ் அடுக்குகளின் பிரதான கட்சியான முதலாளித்துவ தமிழ் கூட்டமைப்பை, தொழிலாளர்கள் இளைஞர்கள் முகங்கொடுக்கும் சமூகப் பேரழிவுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறையாக இழிந்த முறையில் அது தூக்கிப் பிடித்தது. தமிழ் கூட்டமைப்பு விவகாரத்தில், அதை தமிழர்களின் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாகவும் மு.சோ.க. சித்தரிக்கின்றது. உண்மையில், தேசியப் பிரச்சனை எனப்படுவதற்கான தமிழ் கூட்டமைப்பின் “தீர்வு”, தமிழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் இழப்பில் தமிழ் முதலாளித்துவத்துக்கு அதிக அதிகாரப் பகிர்வு பெறுவதே ஆகும்.
அதே நேரம், மு.சோ.க. அதன் வர்க்க போராட்ட மையம் மற்றும் சிறிய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் போராட்டங்களை தடம் புரளச் செய்ய ஏனைய தொழிற் சங்கங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. ஏப்ரல் 28 மற்றும் மே 6 பொது வேலைநிறுத்தம் உட்பட ஏப்ரல் தொடக்கத்தில் வெடித்த தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களின் போதான அவற்றின் தலையீடானது குறிப்பாக குற்றகரமானதாகும்.
தொழிற்சங்க ஒருங்கிணப்பு மையம் தொழிற் சங்கங்களின் வெகுஜன அமைப்பும், ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகவும் கோரியும், அதற்குப் பதிலாக ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யின் கோரிக்கையான இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் கோரி, இந்த போராட்டங்களுக்கும் வேலை நிறுத்தங்களுக்கும் அழைப்புவிடுத்தன. இந்தச் தொழிற்சங்க முன்னணிகள், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் எந்தெவாரு கோரிக்கையையோ கொள்கையையோ முன்வைக்கவில்லை, மாறாக, தொழிலாளர்களின் கோபத்தைத் கட்டுப்படுத்த “எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை” போன்ற வெற்று முழக்கங்களை ஊக்குவித்தன.
வர்க்கப் போராட்ட மையத்தின் தலைவர் துமிந்த நாகமுவ மற்றும் மு.சோ.க.யுடன் இணைந்த ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் தலைவரான சஞ்சீவ பண்டாரவும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் பங்காளிகளாக உள்ளனர். இந்த மு.சோ.க. தலைவர்கள், இராஜபக்ஷ நிர்வாகம் நெருக்கடியின் உச்சத்தில் இருக்கும் போது, மே 11 முதல் திட்டமிட்ட காலவரையறையற்ற போது வேலை நிறுத்தத்தை கைவிடுவது உட்பட இரு தொழிற்சங்க முன்னணிகளின் மோசமான காட்டிக்கொடுப்புகளை ஆதரித்தனர். ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனங்களைப் போல், தொழிற்சங்கங்களும் கூட மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இரண்டு-நாள் போது வேலைநிறுத்தங்களில் இணைந்துகொண்டதையிட்டு அச்சமடைந்தன.
பொதுச் செயலாளர் குணரத்தினம் மே 11 அன்று சுட்டிக்காட்டியது போல், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான “உடனடித் தீர்வுகளுக்கான” மு.சோ.க.யின் முன்மொழிவுகள், அதன் முதலாளித்துவ சார்பு தன்மையை மிகவும் வெளிப்படுத்துகின்றன. இடைக்கால அரசாங்கத்துக்கு மு.சோ.க. விடுக்கும் அழைப்பானது ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.க்கு மட்டுமன்றி, நாட்டின் பெரும் வணிக ஆலோசனை குழுக்கள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்களும் விடுக்கும் அழைப்புக்கு மிக ஒத்ததாக உள்ளது.
மு.சோ.க.யின் ஏழு அம்ச வேலைத்திட்டமானது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் நியமிக்கப்பட்ட ஆறு மாத காலத்துக்கான தற்காலிக இடைக்கால ஆட்சிக்கு அழைப்புவிடுக்கின்றது. அது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து “மக்கள் வாக்கெடுப்புக்கு இட்டுச்செல்லும் ஒரு மக்கள்-சார்பு அரசியலமைப்பை தயாரிப்பதே” அதன் பணியாக இருக்க வேண்டுமாம். அது சமூக உரிமைகள், நீதித்துறை மீளாய்வுகளின் ஒரு பட்டியல் உட்பட ஒரு விரிவான “ஜனநாயக” சோடிப்பை விளக்குகிறது. இனவெறி மற்றும் தேசிய ஒடுக்குமுறையை சட்டவிரோதமாக்குவதையும், அத்துடன் அரசாங்க-விரோத எதிர்ப்பாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் விரிவான 'ஆலோசனைகள்' நடத்துவதையும் பிரேரிக்கின்றது.
இதன் அர்த்தம், தீவின் பெரும் பணக்கார்களின் சலுகைகள், செல்வம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வங்கிகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்கின்ற, தற்போதுள்ள இழிவான முதலாளித்துவ கட்சிகளால் வரையப்பட்ட ஒரு முதலாளித்துவ அரசியலமைப்பாகவே அது இருக்கும் என்ற உண்மையை மூடிமறைப்பதே ஆகும்.
சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே முதலாளித்துவத்தின் அரசியல் சேவகர்களால் ஆன திவாலன நாடாளுமன்ற முறைமையின் மூலம் அன்றி, தொழிலாளர்கள் இளைஞர்கள் முகங்கொடுக்கும் சமூகப் பேரழிவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு பரந்த போராட்டத்தின் பாகமாக, உழைக்கும் மக்களின் சுயாதீனமான நடவடிக்கையின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை உடனடியாக ஒழிக்க அழைப்பு விடுக்கம் ஒரே கட்சியாகும்.
மு.சே.க., இலங்கையிலும் சர்வதேச அளவிலும் இலாப முறைமையில் உள்ள உண்மையான பொருளாதார நெருக்கடியை மூடி மறைப்பதன் நோக்கில், ஊழலுக்கு எதிர்ப்பு என்பதை உருட்டிக்கொண்டிருக்கிறது. இது பெரும் பணக்காரர்களின் செல்வத்தை அபகரிக்கவும் அனைத்து வெளிநாட்டு கடன்களின் முழுமையான நிராகரிப்புக்கும் அழைப்பு விடுக்கவில்லை, மாறாக, செல்வந்தர்களின் மீது உயர்ந்த வரி விதிப்புக்கும் வெளிநாட்டுக் கடன்களை “மறுசீரமைக்கவுமே” அழைப்பு விடுக்கின்றது.
குறிப்பிடத்தக வகையில் மு.சோ.க. கிரேக்கத்தில் உள்ள சிரிசா, ஸ்பெயினில் உள்ள பொடேமோஸ் ஆகியவற்றின் தீவிர அபிமானியகும். 2015இல் அதிகாரத்துக்கு வந்த போலி-இடது சிரிசா அரசாங்கம், பேரழிவான சமூக விளைவுகளுடன் நாட்டின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர் வர்க்கத்தின் மிது சுமத்துகின்ற நிதி மூலதனத்தின் கட்டளைகளைச் செயல்படுத்தியது. பெடேமொஸ், சோசலிச கட்சியுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் இணைந்ததோடு தொழிலாளர் வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களை ஆதரித்தது.
இப்போது, மு.சோ.க. இலங்கையில் அதையே செய்து முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்க சிறந்த வழிமுறையாகத் தன்னை ஊக்கிவிக்கின்றது. இலங்கையின் ஸ்தாபன ஊடகங்கள், இந்தப் போலி-இடது குழுவுக்கு கணிசமான முக்கியத்துவம் கொடுத்து அதன் உதவியை நாடுவதற்கு முதலாளித்துவக் கட்சிகள் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரள்வுக்கும் சோசலிச வேலைத்திட்டத்துக்கான போராட்டத்திற்கும் மு.சோ.க. காட்டும் எதிர்ப்பு அதன் வர்க்க நிலைப்பாட்டில் இருந்து ஊற்றெடுக்கின்றது. வளர்ந்துவரும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தால் அச்சமடைந்துள்ள நாட்டில் உள்ள உயர்-மத்திய வர்க்கத்தையே இந்தக் கட்சி பிரதிநிதித்துவம் செய்கின்றது.
மு.சோ.க.யின் போலி ஜனரஞ்ஜக தோரணையையும் இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்துக்கான அதன் முன்னோக்கையும் நிராகரிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. தொழிலாளர் வர்க்கம் முகங்கொடுக்கும் தீவிர சமூக பிரச்சனைகளுக்கு இலாப முறைமை மற்றும் தேசிய வேலைத்திட்டத்துக்குள் தீர்வு கிடையாது.
இராஜபக்ஷ- விக்கிரமசிங்க அரசாங்கம், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமாக தாக்குதல்களை செயல்படுத்த தயாராகின்றது. மு.சோ.க. ஆதரிக்கும் இடைக்கால அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் இதையே செய்திருக்கும்.
சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, தொழிலாள வர்க்த்துக்கு அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலை, வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்-வர்க்க அயல்புறத்திலும் தொழிற்சங்கங்கள், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அதன் போலி இடது அடிவருடிகளிடம் இருந்தும் விலகி, சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப தொழிலாளர்களுக்கு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.
வெளிநாட்டுக் கடன்களின் இரத்து, உற்பத்தி விநியோகத்தின் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாடு, தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பாரிய வங்கி மற்றும் பெருநிறுவனங்ளின் தேசியமயமாக்குதல் உட்பட நடவடிக்கைக் குழுக்கள் போராடுவதற்கான கொள்கைளை சோசலிச சமத்துவக் கட்சி வரைந்துள்ளது. ஒரு சில செலவந்தர்களின் இலாபங்களுக்காக அன்றி, பரந்த பெரும்பாண்மையினரின் தேவைகளை நிறைவுசெய்யவதற்காக சமூகத்தை சோசலிச ரதியில் மறு ஒழுங்கு செய்வதற்கான தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக அடித்தளம் இடுகின்ற அத்தகைய போராட்டத்துக்கு, தொழிலாள வர்க்கம் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் பரந்த அடுக்குகளை அதன் பக்கத்துக்கு வெல்ல முடியும்.
இந்த அரசியல் போராட்டமானது சர்வதேச ரீதியல் தொழிலாள வர்கத்தின் வளர்ந்துவருகின்ற போராட்டத்தின் ஒரு பாகமாக இருப்போதடு உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை ஒழிப்பதை நோக்கி திருப்பப்படுவது அவசியமாகும். நாம், தொழிலாளர்கள் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்த வேலைத் திட்டத்துக்காகப் போரடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
மேலும் படிக்க
- இலங்கையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகள்
- சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) மூன்றாவது தேசிய மாநாடு: இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளுக்கும்
- இலங்கை: காலிமுகத்திடல் எதிர்ப்புகளின் "கட்சி சார்பின்மை" சாக்குப்போக்கின் பின்னால் இயங்கும் முதலாளித்துவ அரசியல்