நீதித்துறை கேலிக்கூத்து: பெடரல் நீதிபதி UAW எந்திரத்தின் பக்கம் நிற்பதோடு வாக்குச் சீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான வில் லெஹ்மனின் கோரிக்கையை மறுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillforUAWPresident.org ஐப்பார்வையிடவும்.

அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி டேவிட் எம். லோசன் புதன்கிழமை மாலை ஒரு தீர்ப்பை வெளியிட்டார், ஐக்கிய வாகன தொழிலாளர் (UAW) தொழிற்சங்கத்தின் தலைமை வேட்பாளர் வில் லெஹ்மன், UAW இன் தேர்தல் காலக்கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கக் கோரியும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்யும் பிற நடவடிக்கைகளுக்கும் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தார்.

செவ்வாய் கிழமை வாய்வழி வாதங்களுக்கு ஒரு நாள் கழித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது, அப்போது லெஹ்மனின் வழக்கறிஞர் எரிக் லீ, UAW மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் UAW உறுப்பினர்களுக்கு சரியாக அறிவிக்கவோ அல்லது அவர்கள் வாக்குகளைப் பெற்றதை உறுதிப்படுத்தவோ தவறியதால் லெஹ்மன் மற்றும் அனைத்து UAW உறுப்பினர்களின் உரிமைகளும் மீறப்பட்டுள்ளன என்று ஒரு சக்திவாய்ந்த வாதத்தை முன்வைத்தார். இதுவரை 10 சதவீத தொழிலாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர், மேலும் நவம்பர் 28 காலக்கெடுவின் போது ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 15 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோசனின் தீர்ப்பு நேர்மையற்றது, அறிவுபூர்வமாக ஊழல் நிறைந்தது மற்றும் இதுபோன்ற எல்லா நிகழ்வுகளையும் போலவே, UAW இல் உள்ள தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான முழுமையான அவமதிப்பை வெளிப்படுத்துகிறது.

மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான லோசன், UAW எந்திரம் மற்றும் நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளரின் பக்கம் முழுவதுமாக இருந்தார், அவர்கள் வழக்குக்கு எதிராக கூட்டாக வாதிட்டனர், தொழிலாளர் துறை லெஹ்மனை எதிர்த்து ஒரு அமிக்கோஸ் கூரியே ('நீதிமன்றத்தின் நண்பர்') சுருக்கத்தை சமர்ப்பித்தது

தீர்ப்பின் ஒரு கட்டத்தில், லெஹ்மனின் கூற்றின் முக்கியத்துவத்தையும், தேர்தலின் சட்டபூர்வத்தன்மை பற்றிய கடுமையான சந்தேகங்களையும் லோசன் ஒப்புக்கொண்டார். அவர் எழுதினார், லெஹ்மன், “வாக்குச்சீட்டுகளை அறிவிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் தொழிற்சங்கத் தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் குறைபாடுள்ளவை, என்று கூறுகிறார். காரணம், “இந்த செய்தி முழு உறுப்பினர்களுக்கும் எட்டப்படவில்லை, இதன் விளைவாக நேரடித் தேர்தல்களுக்கு குறைந்த பதில் கிடைத்தது. அந்த குறைகள் நிச்சயமாக தீவிரமானவை மற்றும் உறுப்பினர்களிடமிருந்து குறைவான முழுமையான பதிலானது, வாக்காளர்களின் விருப்பத்திற்கு உண்மையான பிரதிநிதித்துவம் இல்லாத தேர்தல் முடிவுகளை முன்வைக்கலாம் என்ற கவலையை எழுப்ப வேண்டும்.”

எவ்வாறாயினும், UAW உறுப்பினர்களில் 90 சதவிகிதத்தினர் அல்லது 900,000 தொழிலாளர்கள் வாக்களிக்கவில்லை என்பது லோசனின் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இது தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு சவாலையும் சாத்தியமற்றதாக மாற்றும் வகையில், விளக்கப்பட்ட குறுகிய தொழில்நுட்ப சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டது.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 1959 இன் தொழிலாளர்-மேலாண்மை அறிக்கை மற்றும் வெளிப்படுத்தல் சட்டத்தின் தலைப்பு I இன் அதிகாரத்தின் கீழ் “நிவர்த்தி செய்யக்கூடிய தனிப்பட்ட தீங்கு அவருக்கு ஏற்படவில்லை.” என்பதால், இந்த வழக்கில் லெஹ்மனுக்கு 'நிலைப்பாடு' இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேர்தல் நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று வாதிடுவதற்கான சரியான இடம், லோசன் தீர்ப்பளித்தார், அமெரிக்க தொழிலாளர் செயலரின் முன்னரராகும், அதாவது பைடென் நிர்வாகத்தின் முன்நிலையில். தேர்தல் ஏற்கனவே நடந்த பின்னர்தான் இதுபோன்ற முறையீடு நிகழக்கூடும், மேலும் வாக்காளர்களின் வாக்குப்பதிவை அடக்குவதில் ஈடுபட்டுள்ள UAW எந்திரத்தை முழுமையாக ஆதரித்த ஒரு அரசாங்கத்திற்கு அனுப்பப்படும்.

UAW இன் ஒவ்வொரு உறுப்பினரும் நியாயமான மற்றும் சட்டபூர்வமான தேர்தலில் பங்கேற்கும் உரிமை பற்றிய கேள்வியை முற்றிலும் புறக்கணித்து, லெஹ்மன் வாக்குச்சீட்டைப் பெற்றதால், அவருக்கு 'நிலைப்பாடு' இல்லை என்று லோசன் தீர்ப்பளித்தார். செவ்வாயன்று நடந்த விசாரணையில் லெஹ்மனின் வழக்கறிஞர் எரிக் லீ முன்வைத்த வாதங்களை அவர் பெரிதும் புறக்கணித்தார். அனைத்து UAW உறுப்பினர்களையும் போலவே லெஹ்மனும் ஒரு 'அர்த்தமுள்ள தேர்தலில்' பங்கேற்க முடியாமல் 'தனிப்பட்ட பாதிப்பை' சந்தித்துள்ளார், ஏனெனில் பல உறுப்பினர்களுக்கு இது பற்றி தெரியாது அல்லது வாக்குகள் கிடைக்கவில்லை என்று லீ வாதிட்டார்.

தங்களுக்கு வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை என்று கூறி தொழிலாளர்கள் கையெழுத்திட்ட மூன்று பிரமாணப் பத்திரங்களும் இதில் அடங்கும். மேலும், தேர்தல் நடைபெறுவது சக ஊழியர்களில் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்றும் அவர்கள் வாக்குமூலத்தில் அளித்துள்ளனர்.

தேர்தலில் 'குறிப்பிடத்தக்க வகையில் குறைந்த வாக்குப்பதிவு' பற்றி பல புள்ளிகளில் தீர்ப்பு குறிப்பிடுகிறது, ஆனால் அது அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டு, வாக்குச்சீட்டைப் பெறுவதை உறுதி செய்வதற்காக எடுத்ததாகக் கூறப்படும் நடவடிக்கைகள் பற்றி UAW எந்திரத்தால் வழங்கப்பட்ட 'முழுமையான விளக்கம்' என்று அழைக்கப்பட்டதை அது சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.

தீர்ப்பின் இந்தப் பகுதி பெரும்பாலும் UAW சுருக்கத்தில் இருந்து நகலெடுக்கப்பட்டது. UAW 'அதன் இணைய தளத்தில் கட்டுரைகளை வெளியிட்டது' என்று லோசன் எழுதினார்; முகநூலில் “தேர்தல் பற்றி ‘நிறைய’ பதிவுகள்”; UAW இன் உள்ளூர் கிளைகளுக்கு 3,000க்கும் சற்று குறைவான சுவரொட்டிகள் அனுப்பப்பட்டன; 'அனைத்து உள்ளூர் தொழிற்சங்கங்களின் நிதிச் செயலாளர்களுக்கு விநியோகிக்கப்படும் இரண்டு வழக்கமான செய்திமடல்களில், தொழிற்சங்க கிளைகள், தொழிற்சங்க தகவல் அமைப்பு (LUIS) தரவுத் தளத்தில் உறுப்பினர் தகவலைப் புதுப்பிக்குமாறு வலியுறுத்தியது; மற்றும் 'எல்லா உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது' அது LUIS ஐ புதுப்பிக்க நினைவூட்டுகிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உண்மையில் UAW இன் எந்திரத்தை முழுமையாக நம்பியிருந்தனவே அன்றி வேறெதுவுமில்லை. செவ்வாயன்று லீ சுட்டிக் காட்டியது போல், தொழிற்சங்க உள்ளூர் கிளைகள் தங்கள் உறுப்பினர் பட்டியல்கள் புதுப்பிக்கப்படுவதையும், அனைத்து தொழிலாளர்களும் வாக்குச் சீட்டைப் பெற்றதையும் உறுதிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்தார்கள் என்பதற்கு UAW அல்லது கண்காணிப்பபாளர் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

செவ்வாயன்று நடந்த விசாரணைகளின் போது, LUIS அமைப்பின் தன்மை குறித்து லோசன் கருத்துத் தெரிவித்தார், UAW மற்றும் கண்காணிப்பாளர் ஒப்புக்கொண்டபடி, ஆரம்பத்தில் முதலில் உள்ளூர் கிளைகளுக்கும் சர்வதேசத்துக்கும் இடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்கான ஒரு பொறிமுறையாக அமைக்கப்பட்டது, முழு உறுப்பினர்களுக்கும் தகவல்களை விநியோகிக்க அல்ல.

'சர்வதேசத்திற்கும் உள்ளூர் கிளைகளுக்கும் இடையிலான தொடர்பு,' லோசன் செவ்வாயன்று கூறினார், 'ஒரு வகையான உறுப்பினர்களை விலக்குகிறது.' இருப்பினும், நீதிபதியின் தீர்ப்பில் இவை எதுவும் குறிப்பிடப்படவில்லை.

செவ்வாய்க்கிழமை விசாரணையின் போது, லோசன் தானே நியமித்த கண்காணிப்பாளர், தேர்தலைப் பற்றிய அதன் மேற்பார்வையில் முற்றிலும் அலட்சியமாக இருந்தது, அது தேர்தலை சரியாக நடத்துகிறது என்ற அதிகாரத்துவத்தின் வாய்மொழி கூற்றுக்களை முற்றிலும் நம்பியிருந்தது என்பது வெளிப்பட்டது என்ற உண்மையையும் இந்த தீர்ப்பு புறக்கணித்தது.

லோசனின் தொழில்நுட்ப-அதிகார வரம்புக்குட்பட்ட நியாயங்கள் எதுவாக இருந்தாலும், இந்தத் தீர்ப்பானது முற்றிலும் கறைபடிந்த தேர்தலின் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அதிகாரத்துவத்திற்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறிய சதவீத உறுப்பினர்கள் மட்டுமே UAW தலைமைக்கு வாக்களிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

Loading