மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்புக்குள் வளர்ந்து வரும் நெருக்கடியின் அரசியல் சாராம்சம் கூர்மையாக குவிமையப்படுத்தப்பட்டு வருகிறது. இது ஜனநாயகக் கட்சிக்குள் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஏற்பட்டுவரும் ஒரு நெருக்கடியாகும், இது முதலாளித்துவ இரு-கட்சி அமைப்புமுறையின் பிற்போக்குத்தனமான இயக்கவியலில் DSA இன் பாத்திரத்தை மேலும் அம்பலப்படுத்துகிறது.
DSA க்குள் சில காலமாக அழுத்தம் அதிகரித்து வருகிறது, ஆனால் இந்த மாத தொடக்கத்தில் DSA இன் தேசிய அரசியல் குழுவின் (NPC) பல உறுப்பினர்கள், இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஜனநாயகக் கட்சி ஊழியரை அமைப்பின் 'தேர்தல் பணிப்பாளராக' நியமிப்பதற்கான முடிவை NPC இன் பெரும்பான்மை தாமதப்படுத்தியதால், நெருக்கடி பகிரங்கமாக வெடித்தது.
எவ்வாறெனினும், சம்பந்தப்பட்ட உண்மையான பிரச்சினைகள் ஊழியர் தொடர்பான பிரச்சினையை விட மிகவும் ஆழமானவையாக இருக்கின்றன. ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு நிதியளிப்பதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் மற்றும் அமெரிக்காவில் 120,000 இரயில்வே தொழிலாளர்களின் ஆற்றல்வாய்ந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக்குவதற்கும் DSA ஆனது அதன் காங்கிரஸ் பிரதிநிதிகளின் ஆதரவு வாக்குகளால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை குறித்து வளர்ந்து வரும் பிரச்சனைகளை தலைமையின் பிளவு பிரதிபலிக்கிறது. DSA ஆனது கடந்த ஆண்டில் 10,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இழந்துள்ளது, ஏனெனில் அது ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவாக இருக்கிறதை தவிர வேறொன்றுமில்லை என்று அதிகரித்தளவில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலும், சமூக கோபமானது வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க /நேட்டோ போரின் தாக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் மேலும் உக்கிரமடைந்துள்ளது. வெளிநாடுகளில் போரைத் தொடரவும் தீவிரப்படுத்தவும் துடிக்கும் ஜனநாயகக் கட்சியால் உள்நாட்டில் எந்த இடையூறும் ஏற்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த காரணத்திற்காக, பைடன் நிர்வாகத்திற்கு புன்னகைக்கும் 'இடது' முகமூடியை வழங்க DSA ஐ மேலும் பெரிதாக ஜனநாயக கட்சி நம்பியுள்ளது. இதற்கு, DSA உறுப்பினரான அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸிக்கு பிரதிநிதிகள் சபை தலைமைத்துவத்தில் ஒரு முக்கிய பொதுப் பதவியை வழங்க ஜனநாயக கட்சி முன்மொழிகிறது. இந்த மூலோபாயத்தின் நோக்கம் ரஷ்யாவுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தவும், வேலைநிறுத்தங்களைத் தடை செய்யவும், சமூக எதிர்ப்பை நசுக்கவும் பைடன் நிர்வாகத்திற்கு ஒரு சுதந்திரமான கரத்தை DSA வழங்குவதாகும்.
ஜனநாயகக் கட்சியின் மூலோபாயம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏனென்றால் ஜனாதிபதி பைடன் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) ஆதரவைப் பெற, DSA அதன் சொந்த நம்பகத்தன்மையை பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு எதிராக ஒரு எதிர்ப்பு ஏற்படலாம். இந்த காரணத்திற்காக, DSA இன் தலைமை இடதுசாரி எதிர்ப்பிற்கு விடையிறுக்கும் வகையில் அதன் இடதுசாரிகளுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியை சாராத எந்தவொரு அரசியல் நடவடிக்கையையும் 'குறுங்குழுவாதம்' என்று கண்டனம் செய்கிறது. குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை இலக்காகக் கொண்டு DSA பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது
நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் DSA ஆனது கருத்தரங்குகளை நடத்துகிறது
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், DSA இன் தலைமை அமைப்புகள் இரண்டு பொது 'விவாதங்களை' ஏற்பாடு செய்தன. ஏனெனில் அமைப்பிற்குள் 'விரக்தி' மனநிலை என்று தலைவர்கள் குறிப்பிட்டதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதேவேளை, DSA ஆனது சோசலிஸ்டுகளாக இருப்பதாக நினைத்து சேர்ந்த உறுப்பினர்களில் பெரும் பகுதியினர் தற்போது, அது இல்லை என்பதை புரிந்துகொண்டு வருகிறார்கள்.
DSAயின் விவாதங்கள், ஜனநாயகக் கட்சித் தலைமை அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸை சக்திவாய்ந்த பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவில், இரண்டாவது மிக உயர்ந்த பதவிக்கு நியமிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அறிவித்ததோடு ஒத்துப் போயின.
அத்தகைய நடவடிக்கை மிகவும் கணக்கிடப்பட்ட அரசியல் முடிவாக இருக்கும். DSA ஆனது உண்மையில் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதற்கான அடையாளமாக இருக்காது. ஆனால் ஜனநாயகக் கட்சித் தலைமையானது தனது 'இடது' பிம்பத்துடன் பகிரங்கமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது என்பதை இது குறிக்கிறது.
துணைத் தலைவர் பதவியை 'குடியரசுக் கட்சியினருடன் மோதுவதற்கான ஒரு உயர் பதவி' என்று அழைத்த Politico செய்திச் ஸ்தாபனமானது, இது ஒகாசியோ-கோர்டெஸ் 'ஜனநாயகக் கட்சியினரின் செய்தி மற்றும் மூலோபாயத்தை வழிநடத்துவதில் அதிக பொறுப்பை கொண்டிருப்பார்' என்று பொருள்படும் என்று கூறியது. அத்தகைய நடவடிக்கை குறித்து 'உரையாடல்கள்' நடந்துள்ளன என்பதை ஒகாசியோ-கோர்டெஸ் உறுதிப்படுத்தினார், அதே நேரத்தில் சக்திவாய்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர். மேற்பார்வைக் குழுவின் தரவரிசை ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான ஜேமி ராஸ்கின் என்பவர் Politico செய்திச் ஸ்தாபனத்திடம் கூறுகையில், 'அவரது திறமைக்கு நான் மிகுந்த பாராட்டுதலைக் கொடுக்கிறேன், மேலும் இந்த அற்புதமான புதிய உறுப்பினர்களுடன் சேர்ந்து குழுவில் அதிகபட்ச பலன்களை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்' என்றார்.

கூடுதலாக, சனிக்கிழமையன்று, DSA-ஆதரவு வெர்மான்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் பைடனுடன் வெள்ளை மாளிகையில் தயாரிக்கப்பட்ட வீடியோவில் தோன்றினார். இந்த வீடியோ, கார்ப்பரேட் அமெரிக்காவின் எதிர்ப்பாளராக பைடனின் கேலிக்கூத்து விம்பத்தை விளம்பரப்படுத்தியது. பைடனை 'ஜோ' என்று அழைத்த சாண்டர்ஸ், வெள்ளை மாளிகை எழுதியதை அசெளகரியமாக வாசித்தார். கடன் நிவாரணம் இல்லாததற்கு 'இந்தக் குடியரசுக் கட்சி அதிகாரிகள்தான்' காரணம் என்று சாண்டர்ஸ் கூறினார். 'இதைச் செய்ய நாங்கள் நரகம் போல போராடுகிறோம்' என்று சாண்டர்ஸ் பைடனுக்கு அருகில் நின்றுகொண்டு கூறினார். உண்மை என்னவென்றால், பைடன் கடன் நிவாரணத்தை தடுக்க 40 ஆண்டுகளாக நரகம் போல போராடுகிறார் என்பதுதான் உண்மை.
பைடன் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் அமெரிக்காவின் ஜனநாயக சோஷலிஸ்டுகளை (DSA) பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் காட்ட முயற்சிக்கின்றன. DSA இல் முக்கிய நபர்களை ஊக்குவிப்பதன் மூலம், DSA ஆனது கட்சியின் திசையில் செல்வாக்கு செலுத்தும் திறனைக் கொண்டுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இது செய்யப்படுகிறது.
DSA தலைமையானது 'தீ அணையாமல் இருப்பதை உறுதி செய்ய வெந்தணலின் மீது ஊதுகிறது'
வெள்ளை மாளிகை மற்றும் பிரதிநிதிகள் சபையானது ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் சாண்டர்ஸை முன்னிலைப்படுத்தி மேடைக்கு அழைக்கும் நிலையில், DSA அதன் சொந்த அமைப்பிற்குள் எதிர்ப்பின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேலை செய்து வருகிறது. வியாழனன்று நடைபெற்ற 'DSA இன் எதிர்காலம்: ஒரு தேசிய அரசியல் குழு (NPC) விவாத' கருத்தரங்கு மற்றும் வெள்ளியன்று தேசிய தேர்தல் குழு ஏற்பாடு செய்த 'ஒரு பொறுப்பான கட்சிக்கான பாதை' ஆகிய இரண்டு DSAயின் கருத்தரங்குகளிலும் இது பிரதிபலித்தது.
வியாழனன்று நடந்த NPC விவாதத்தின் போது பேசிய NPC உறுப்பினர் ஜஸ்டின் சார்லஸ் (எதிர்ப்பில் கையெழுத்திட்டவர்) அதன் இருப்பிற்காக போராடும் ஒரு அமைப்பின் இருண்ட படத்தை வரைந்துகாட்டி, 'இது இடதுகளுக்கு ஒரு கடினமான நேரம்,' என்று கூறினார். இது DSA குறித்த வெளிப்படையான குறிப்பு ஆகும். 'இது எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கலாம், ஆனால் நாங்கள் செய்வதை நிறுத்துகிறோம் என்று அர்த்தமல்ல' என்று கூறிய அவர், DSA தற்போது 'தீ அணையாமல் பார்த்துக் கொள்ள எரிக்கற்களை ஊதினால் போதும்' என்று மேலும் தெரிவித்தார்.
தேசிய அரசியல் குழுவின் (NPC) தலைவர் கிறிஸ்டியன் ஹெர்னாண்டஸ் அரசியல் நெருக்கடியை 'சோர்வு' என்று குற்றம் சாட்ட முயன்றார். பல DSA இன் உறுப்பினர்கள் 'விரக்தியை' உணர்கிறார்கள் என்று குறிப்பிட்டார், அதே நேரத்தில் NPC உறுப்பினர் சோபியா குய்மாரெஸ் கட்லர், 'நாங்கள் வேகத்தைத் தக்கவைக்க போராடினோம், எங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது' என்று அதை ஒப்புக்கொண்டார்
கிளைகளுடன் தொடர்பு கொள்வதற்கான எங்கள் திறனில் DSA 'உண்மையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என்று ஆஷிக் சித்திக் கூறினார், மேலும் மொத்தம் 200 கிளைகளுடன் தொடர்பு கொள்ள ஐந்து அமைப்பாளர்களை நியமிக்க மட்டுமே நிறுவனத்திடம் போதுமான பணம் உள்ளது என்றார். உறுப்பினர்கள் அதிக பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று சுவாரஸ்யமாக கூறிய சித்திக், DSA இன் பெரும் வசதியான நிலைமையையும் சுட்டிக்காட்டினார்: 'நாங்கள் உறுப்பினர் கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளோம், உங்களில் பலர் அதைக் கொடுக்க முடியும் என்று எனக்குத் தெரியும்' என்று கூறினார்.
மற்றய பேச்சாளர்களும் இதேபோன்ற அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர், ஆனால் யாரும் நெருக்கடியின் அடித்தளத்திலுள்ள அடிப்படை அரசியல் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவில்லை. மாறாக, இந்த வேறுபாடுகளை நசுக்குவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்வுகள், NPC இலுள்ள இரண்டு பிரதான பிரிவுகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உரையாடல்கள் மூலம் நிரூபிக்கப்படுகின்றன.
'குறுங்குழுவாதத்திற்கு' எதிரான பிரச்சாரம்
NPC இன் பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவு என்ற வகையில் DSA வின் பாத்திரத்திற்கு பல்வேறு நியாயங்களை முன்வைத்ததோடு, சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தைக் (WSWS) குறிக்கும் 'குறுங்குழுவாதம்' குறித்த தற்காப்பு கண்டனங்களை தெரிவிப்பதில் தங்கள் கருத்துக்களை மையப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, கிறிஸ்டியன் ஹெர்னாண்டஸ் வியாழனன்று கூறினார், 'ஒரு தொழிலாள வர்க்கக் கட்சியின் தேவையில் கருத்து வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை,' ஆனால் ஜனநாயகக் கட்சிக்குள் DSA தொடர்ந்து பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று மேலும் கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, DSA உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ளக்கூடாது என்று கூறிய அவர், 'நடைமுறையில் நல்லதாகத் தோன்றினாலும், மிகக் குறைவாகவே பொருள்படும் ஒரு கடுமையான தீவிரவாத தீர்விற்கோ அல்லது பொருத்தமின்மைக்கு நம்மைத் தள்ளுவதையோ நாம் தவிர்க்க வேண்டும்' என்று மேலும் தெரிவித்தார்.
DSA தலைமையை அதிகம் விமர்சிப்பதாகக் காட்டிக் கொண்ட NPC உறுப்பினர் ஜெனிபர் போலன், DSA தொடர்ந்து 'ஜனநாயகக் கட்சியினராக' இயங்க வேண்டும், ஆனால் 'தெளிவான சோசலிச செய்தியுடன்' என்று கூறியதோடு, ஜனநாயகக் கட்சியுடனான அதன் உறவுகளை DSA அந்நியப்படுத்திவிடக் கூடாது என்பதில் போலன் கவனமாக இருந்தார்: 'நமது உறவுகளை முற்றிலுமாக அழிக்காத வகையில் நாம் இதை விமர்சனரீதியாக செய்ய முடியும்' என்று அவர் குறிப்பிட்டார்.
'சுயாதீனமான அமைப்பு மற்றும் வலுவான தேர்தல் அமைப்பு ஆகிய இந்த இரண்டு குறிக்கோள்களும் முதன்மையாக ஒன்றுக்கொன்று எதிரானவை என்று நாம் நினைக்கக்கூடாது' என்று சித்திக் கூறினார். இருப்பினும் 'தேர்தல் ஒழுங்கமைப்பு' என்பது ஜனநாயகக் கட்சியில் சேருவது மற்றும் ஜனநாயகக் கட்சியினராக தேர்தல்களில் பிரச்சாரம் செய்வது ஆகும். ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகுவது குறித்து DSA விவாதிக்கத் தொடங்குவதற்கு 'பல ஆண்டுகள்' ஆகும் என்று அவர் கூறினார்.
சோசலிச சமத்துவக் கட்சியை (SEP) இலக்காகக் கொண்ட ஒரு தற்காப்புக் கருத்துரையில், சித்திக், 'வெகுஜனரீதியாக அமைப்பில் ஈடுபடாத ஏனைய அமைப்புக்களும் இடதுகளில் உள்ளன, அதை குறுங்குழுவாதம் என்று அழைப்பது நியாயமானது' என்றார். 'குறுங்குழுவாதம்' மற்றும் 'வெகுஜன அமைப்பில் ஈடுபடவில்லை' என்பதன் மூலம் சித்திக், இந்த அமைப்புகள் ஜனநாயகக் கட்சியில் இருந்து சுயாதீனமாக இருப்பதைக் குறிக்கிறார். கம்யூனிசத்திற்கு எதிரான ஒரு மறைமுகமான கருத்துரையில் சித்திக், 'இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் எங்கு தோல்வியடைந்தனர் என்பதை மதிப்பீடு செய்து, எங்கும் தோல்வியடையாத மூலோபாயங்களை நாங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.' என்று கூறினார்,
அடுத்த நாள் இரவு, DSA அதன் இரண்டாவது பொதுக் கூட்டத்தை நடத்தியது, இது நடைமுறையில் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு மணி நேர வணிகமாக இருந்தது. இந்த நிகழ்வு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மீதான கடுமையான கண்டனங்களுடன் முடிவடைந்தது.
அட்லாண்டா DSA அத்தியாயத்தின் முன்னாள் தலைவரான அலெக்சாண்டர் ஹெர்னாண்டஸ், DSA நிறுவனரும் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளருமான மைக்கேல் ஹாரிங்டனை மேற்கோள்காட்டி, 1975 ஆம் ஆண்டின் கட்டுரையைப் படித்து வெள்ளிக்கிழமை நிகழ்வைத் தொடங்கினார்.
இந்த அடிப்படையான சமூக விரோதக் கட்டமைப்புகளை அவசரத் தேவையுடன் எப்படி மாற்றுவது? தெளிவற்ற மூன்றாம் சக்தியால் அல்ல. ஜனநாயகக் கட்சியில்தான் பெரும்பான்மையான சீர்திருத்த சக்திகள் குவிந்துள்ளன -தொழிற்சங்கவாதிகள், சிறுபான்மையினர், பெண்கள், பிரச்சினைக்குரிய தொகுதிகள் குவிந்துள்ளன. ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் என்ற முறையில்..., காலம் கோருவது போல் அது தீவிரமானது என்ற மாயை எனக்கு இல்லை. ஆனால் ஒரு தொடக்கத்தை உருவாக்கக்கூடிய ஒரே இடம் அதுதான்.
ஹெர்னாண்டஸ் மேலும் கூறினார், 'மைக்கேல் ஹாரிங்டன் சொல்வது சரிதான். DSA, ஜனநாயகக் கட்சியை ஒரு முதன்மைப் போர்க்களமாகப் பார்க்க வேண்டும். ஜனநாயகக் கட்சி, எல்லோரும் நினைப்பது போல் மோசமாக இல்லை. அத்தோடு, அனைத்து மாநில ஜனநாயகக் கட்சிகளும் இடதுகளுக்கு விரோதமானவை அல்ல.' ஹெர்னாண்டஸின் இந்த பங்களிப்புகள், DSA அதன் ஹாரிங்டோனைட் காலத்திலிருந்து விலகியிருக்கிறது என்ற அனைத்து கூற்றுகளையும் பொய்யாக அம்பலப்படுத்துகிறது. லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிஸ்ட்டுக்களால் படுகொலை செய்யப்பட்டதை ட்டுவீட்டரில் பாராட்டிப் புகழ்ந்த DSA உறுப்பினர்களில் ஹெர்னாண்டஸும் ஒருவராவார்.
ஜனநாயகக் கட்சி ஊழியரும் வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த DSA உறுப்பினருமான பென் டேவிஸ், 'இடது மூன்றாவது கட்சி-கொள்கை' 'ஒரு முழுமையான தோல்வி' என்று கூறினார், மேலும் DSA ஆனது முதலாளித்துவக் கட்சிக்குள் செயல்படுகிறது என்ற உண்மையின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டினார்: 'நாம் ஜனநாயகக் கட்சியிலிருந்து முறித்துக் கொள்ளுகிறோமா அல்லது மறுசீரமைப்பதா என்பது முக்கியமல்ல,' ஜனநாயகக் கட்சியுடன் 'பெரும்பான்மை ஆளும் அணிகளை' அமைப்பதே DSA இன் குறிக்கோள் என்றும், இதற்கு ஜனநாயகக் கட்சிக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
டேவிஸ் வியாழனன்று பேச்சாளர்களின் அறிக்கைகளை எதிரொலித்தார், DSA க்கு எந்த அரசியல் வேலைத்திட்டமும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார், 'DSA ஒரு உண்மையான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.' லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையை பகிரங்கமாக பாராட்டிப் புகழ்ந்த DSA பிரமுகர்களில் டேவிசும் ஒருவராவார்.
மூன்றாவது பேச்சாளர், போர்ட்லேண்ட், ஓரிகானில் உள்ள AFT லோக்கல் 2277 இன் செயலாளரும், போர்ட்லேண்ட் DSA இன் இணைத் தலைவருமான லாரா வாட்லின், 'வாக்குச்சீட்டில் தந்திரோபாய நெகிழ்வுத்தன்மை (அதாவது, ஜனநாயகக் கட்சியினராக தேர்தலில் போட்டியிடுவது) முக்கியமானது' என்றும், ஜனநாயகக் கட்சியிலிருந்து ஒரு முறிவு இப்போது நிகழ முடியாது, ஆனால் 'எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் மட்டுமே' அது நிகழும் என்று கூறினார்.
கடைசி பேச்சாளரான பார்க்கர் மெக்குயினி தன்னை DSA இன் 'இடது' விமர்சகராக காட்டிக் கொண்டார், ஆனால் உண்மையில் அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் பிற DSA காங்கிரஸ் பிரதிநிதிகள் இரயில்வே வேலைநிறுத்தத்தை முறியடிக்க வாக்களித்ததை நியாயப்படுத்த முயன்ற ஒரே பேச்சாளர் அவர்தான்.
நான்சி பெலோசி மற்றும் சக் ஷுமர் ஆகியோருடன் திரைக்குப் பின்னால் 'போர்க்குணமிக்க பேச்சுவார்த்தைகளில்' ஈடுபட்டதற்காக DSA, காங்கிரஸின் ஸ்லேட்டை மெக்குயினி தனிப்பட்ட முறையில் எதிர்த்ததாகக் கூறிக்கொண்டார். வாராந்திர Weekly Worker பத்திரிகையில், டிசம்பரில் வெளியான ஒரு கட்டுரைக்கு இணங்க, DSA வின் பிரதிநிதிகள் ஒரு ரயில் வேலைநிறுத்தத்தை தடை செய்ய மட்டுமே வாக்களித்ததாக கூறிய McQueeney, ஏனெனில் அவர்கள் 'பாராளுமன்ற நடைமுறைகளை கையாள்வதில் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளாக நன்கு தேர்ச்சி பெறவில்லை', ஆகவே, தங்கள் வாக்கு 'அப்பட்டமான வேலை நிறுத்த முறியடிப்பு போலல்லாமல், மன்னிக்கக்கூடிய குற்றம்' என்று அழைத்தார்.
DSA, 'தாராளவாதிகளைப் போலவே அதே திசையில் நமது துப்பாக்கிகளால் குறி வைக்க வேண்டும்' என்று மெக்குயினி தொடர்ந்து கூறியபோது, இந்த அறிக்கை ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போருக்கு DSA இன் ஆதரவுடன் ஒத்துப்போகிறது என்பதை சுட்டிக்காட்டி, ஒரு நிருபர் இந்த நிகழ்வுச் chat இல் ஒரு கருத்தை வெளியிட்டார். பின்னர் DSA அமைப்பாளர்கள் இந்த நிருபரை நிகழ்வில் இருந்து வெளியேற்றினர்.
ஏகாதிபத்திய போருக்கு DSA பாராளுமன்ற பிரதிநிதிகளின் வாக்குகளைப் பற்றிய எந்தவொரு விவாதத்தையும் தடுக்கவும், இரயில்வே வேலைநிறுத்தத்தை நிறுத்தவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முண்டியடித்தனர். ஒரு DSA நிகழ்வு அமைப்பாளர் நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டார், 'எரிக் லண்டன் போன்ற உலக சோசலிச வலைத் தளத்தைச் சேர்ந்தவர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றால், தயவுசெய்து அவற்றை புறக்கணிக்க முடியுமா?' என்று கேட்டார்.
பின்னர் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தைத் தாக்குவதில் பேச்சாளர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள், 'எரிக் லண்டன் சார்ந்துள்ள அமைப்பில்' சேர வேண்டாம் என்று DSA உறுப்பினர்களை மெக்குயினி எச்சரித்தார், அதை அவர் 'அதிகாரத்துவ மையவாதம்' என்று அழைத்தார்.
இந்த வழியில், DSA தலைமையின் உண்மையான கவலை கடந்த வாரத்தின் போக்கில் மிகவும் தெளிவாக வெளிப்பட்டது. இந்த வளர்ந்து வரும் நெருக்கடியானது அரசியல் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான உண்மைகளை உறுதிப்படுத்துகிறது: (1) DSA இன் முக்கிய நோக்கம் அமெரிக்காவில் இரு கட்சி அமைப்புமுறைக்கு முட்டுக் கொடுப்பதும், ஜனநாயகக் கட்சியைச் சாராத ஒரு வெகுஜன, சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுப்பதும் ஆகும். (2) அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் வழிநடத்தப்படுவதை தடுப்பது DSA இன் முக்கிய பிரதான நோக்கமாக இருக்கிறது.