முன்னோக்கு

ஸ்டார்மரின் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக சோசலிச எதிர்ப்பைக் கட்டியெழுப்புவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

சேர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் போக்கில் ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தின் தலைமையில் தனது இடத்தை எடுக்கிறார். கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் அரசாங்கம் எந்த வெறுப்புடன் பார்க்கப்பட்டதோ, கெய்ர் ஸ்டார்மர் அவரது “ஏகமனதான வெற்றிக்கு” முற்றிலுமாக டோரிக்கள் மீதான வெறுப்புக்கும் ஆழமான ஜனநாயக விரோதமான முதல்-பின்-தெரிவு முறை (வெற்றி பெறும் வேட்பாளர் முழு மாவட்டத்தையும் அல்லது தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், விகிதாச்சார ஆசன ஒதுக்கீடு இல்லை) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சோசலிச வெளிப்பாடு இல்லாத பரவலான இடதுசாரி உணர்விற்கும் உண்மையில் கடன்பட்டுள்ளார்.

இந்தக் காரணிகள் ஒரு புதிய பிற்போக்குத்தன அரக்கனை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளன, இது எந்தவொரு முந்தைய தொழிற்கட்சி தலைவரையும் விட மிகவும் வலதுபுறத்தில் உள்ளது. மக்கள் வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் சற்று அதிகமானவர்களை அண்மித்து மிகக் குறைந்த வாக்குப்பதிவைச் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் பங்கெடுத்ததற்காக ஒரு குற்றவாளி என்ற புகழையும், சமத்துவமின்மை மற்றும் தனியார்மயமாக்கலை ஊக்குவித்ததற்காக ஒரு தாட்சரிச சமூக தீவைப்பாளர் என்ற புகழையும் சம்பாதிக்க டோனி பிளேயர் பல ஆண்டுகளை எடுத்துக் கொண்டார்.

பிரிட்டனின் தொழிற்கட்சியின் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் ஜூலை 5, 2024 வெள்ளிக்கிழமை, லண்டனில் 10 டவுனிங் தெருவில் உரையாற்றுகிறார். தொழிற்கட்சித் தலைவர் ஸ்டார்மர் ஜூலை 4 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார், பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்றாம் சார்லஸ் மன்னரால் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். [AP Photo/Kin Cheung]

ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் சமூக கோரிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்துள்ளவரும், இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் ஒடுக்குமுறைக்கு பொறுப்பேற்றவருமான ஸ்டார்மர், காஸா இனப்படுகொலை மற்றும் உக்ரேனிய போரை ஆதரித்ததில் இருந்து அவரது கரங்களில் இரத்தக்கறை படிந்த நிலையில் அவரது பிரதம மந்திரி பதவியைத் தொடங்குகிறார். வலதுசாரிகளின் அரசியல் மொழியில், நாட்டை ஐக்கியப்படுத்தி, நாட்டை கட்சிக்கு முன்னால் வைக்க வேண்டும் என்று அவர் பேசுகிறார். ஆனால் “நாடு” இரண்டாகப் பிளவுபட்டுள்ளது, முன்னாள் தலைமை வழக்குத்தொடுனர் ஸ்டார்மரும் அவரது அரசாங்கமும் வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் இராணுவ-பாதுகாப்பு இயந்திரத்தின் பக்கம் நிற்கின்றனர்.

ரிஷி சுனக்கின் டோரிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத தேர்தல் தோல்வியை வழங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாடெங்கிலும் உள்ள பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் கேள்வி இதுதான்: “அவர்களின் மாற்றீடுகளை நாம் எவ்வாறு அகற்றுவது?” அவரது உள்ளூர் தொகுதியில் ஸ்டார்மரின் சொந்த தனிப்பட்ட பெரும்பான்மையும், மற்றும் அவரது பல அமைச்சர்களின் பெரும்பான்மையும், தேர்தல் நடந்த இரவிலேயே கூட பாதி அல்லது அதற்கும் அதிகமாக குறைக்கப்பட்டன.

சுயேட்சை வேட்பாளர்களுக்குக் கிடைத்த கணிசமான வாக்குகளும், ஓரளவிற்கு பசுமைக் கட்சியும் ஒரு அரசியல் மாற்றீட்டிற்கான விருப்பத்தைக் காட்டுகின்றன. ஆனால் இந்த வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர்கள், பல தசாப்தங்களாக அரசியல் ஸ்தாபகத்திற்கு “எதிர்ப்பை” வரையறுத்து வந்துள்ள, மற்றும் தற்போதைய முட்டுக்கட்டை மற்றும் விரக்தியின் தற்போதைய உணர்வை உருவாக்கி வந்துள்ள முற்றிலும் திவாலான எதிர்ப்பு, அமைதிவாத, போலி-சீர்திருத்தவாத அரசியலின் பிரதிநிதிகளாக உள்ளனர்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைப் போலவே, இது தொழிலாளர்களை ஒரு வழியைத் தேடுவதில் அதிவலதை நோக்கி உந்தித் தள்ளும் அபாயம் உள்ளது. சீர்திருத்தக் கட்சியானது டோரி அடித்தளத்தின் அதிதீவிர வலதுசாரிகளை மறைத்ததன் மூலமாக பெருமளவில் அதன் ஆதரவைப் பெற்றது என்றபோதும், அதன் மொத்த 14 சதவீத வாக்குகள் என்பது, ட்ரம்ப் மற்றும் லு பென்னின் வளர்ச்சியில், தொழிலாள வர்க்க நலன்களைக் காட்டிக்கொடுக்கும் ஓர் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கில் வேரூன்றியுள்ளது என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும்.

போலி-இடது அரசியலுக்கு எதிரான ஒரு போராட்டம் மட்டுமே முன்னோக்கிய ஒரே பாதையாகும். ஐக்கிய இராஜ்ஜியத்தில் சோசலிசத்திற்கான ஒரு போராட்டம் குறித்து அக்கறையுடன் இருக்கும் தொழிலாளர்கள், அனைத்திற்கும் மேலாக கோர்பின் அனுபவத்தில் இருந்து படிப்பினைகளைப் பெற்றாக வேண்டும்.

2015 மற்றும் 2016 தொழிற்கட்சி தலைமைக்கான தேர்தல்களில் இரண்டு முக்கிய வெற்றிகளை பெற்ற கோர்பின், பிளேயரிசவாதிகள் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் இரண்டாவது வரிசையை அழிக்க அவருக்கு பெரும் ஆணை இருந்தது. அதற்கு பதிலாக, அவர் ஒவ்வொரு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கும் அவரது “பரந்த தேவாலய” கட்சிக்குள்ளாக பாதுகாப்பு வழங்கினார், அங்கு அவர்கள் கோர்பின் ஆதரவாளர்களை அவதூறு செய்யவும் வெளியேற்றவும், அவரது தேர்தல் வாய்ப்புகளை நாசப்படுத்தவும் மற்றும் அவரை அரசியலில் இருந்து அகற்றவும் சதி செய்தனர். ஸ்டார்மர் கோர்பினின் சொந்த நிழல் அமைச்சரவையில் இருந்து அதிகாரத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கினார்.

கோர்பின் அவரது சத்தியப்பிரமாண எதிரிகளுக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், பிரிட்டிஷ் அரசியலின் ஒட்டுமொத்த விண்மீன் தொகுப்பும் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் 2017 தேர்தலில் கிட்டத்தட்ட 13 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். ஸ்டார்மர், 9 மில்லியனுக்கும் சற்று அதிகமான வாக்குகளையே பெற்றிருந்தார். ஆனால், தேர்தலில் சுயேட்சையாக நின்றதற்காக தொழிற்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் கூட, கோர்பின் இன்றுவரை தொழிற்கட்சியின் முன்னால் மண்டியிடுவதை பராமரித்து வருகிறார்—இந்த நடவடிக்கையை அவர் எடுக்க நிர்பந்திக்கப்பட வேண்டியிருந்தது, அதுவும் கடைசி நேரத்தில் மட்டுமே.

தேர்தலுக்கு முன்னதாக ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிகையால் நேர்காணல் செய்யப்பட்ட கோர்பின், தொழிற்கட்சி வெற்றி பெறுவதைக் கண்டு அவர் “நிச்சயமாக” மகிழ்ச்சியடைவார் என்றும், கட்சி செய்யும் “நல்ல விடயங்களுக்காக” நாடாளுமன்றத்தில் அதை ஆதரிப்பதாகவும் விளக்கினார். இஸ்லிங்டன் வடக்கில் அவரது பிரச்சாரம் ஸ்டார்மருடன் நேரடியாக மோதல் ஏற்படாத வகையில் கவனமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

மீண்டுமொருமுறை, தொழிற்கட்சிக்கு எதிரான ஒரு பாரிய இயக்கத்திற்கான சாத்தியக்கூறின் மீது கோர்பின் அமர்ந்தார். தொழிற்கட்சியின் பிரபு நர்குண்டை தோற்கடித்து, 50 சதவீத கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதன் வேட்பாளர்களுக்கு எதிராக ஒரு தேசிய இயக்கத்தை அவர் முன்னெடுத்திருக்க முடியும். அவர்கள் அதற்கு பதிலாக டோரி-விரோதமாக வாக்களித்தனர் மற்றும் ஸ்டார்மருக்கு தயக்கத்துடன் வாக்களித்தனர். சுயேட்சைகள் மற்றும் பசுமைக் கட்சியினரின் வேறுபட்ட வரிசையை எதிர்பார்த்தனர், அல்லது வாக்களிக்க மறுத்தனர்.

தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு துரோகம் செய்த, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கோர்பினின் அன்புக்குரிய ஒரு அமைப்பான தொழிற்கட்சிக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே எந்த மோதலையும் தடுப்பதே அவரது அரசியலின் ஆல்பா மற்றும் ஒமேகாவாக இருக்கிறது. கோர்பினின் விருப்பம் அப்படிச் செய்யாமல் இருப்பது, இப்போதும், எப்போதும் இருக்கும். தேர்தல் அரசியலின் நடைமுறைவாதம் மற்றும் முதலாளித்துவத்தை தூக்கியெறியும் சாத்தியக்கூறு குறித்த சிடுமூஞ்சித்தனம் ஆகியவற்றில் தங்கியிருப்பதன் மூலம் இந்த நிலைப்பாட்டிற்கு அவர் தனிப்பட்ட ஆதரவை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இத்தகைய பலவீனப்படுத்தும் கருத்தாக்கங்கள் உடைக்கப்பட வேண்டும். உலகின் ஸ்டார்மர்களை அதிகாரத்தில் வைத்திருப்பதில் அவர்கள் தங்களுக்கே சொந்தமாக இல்லாத பலங்களை விட அதிக பங்கு வகிக்கிறார்கள்.

இந்த விடயத்தை நிரூபிப்பது போல, ஸ்டார்மர் வாஷிங்டன் டி.சி.க்கு பறந்து சென்று அரசியல் நடைபயிற்சியில் நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றார். அவர் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் இணைவார், மக்ரோனின் குழுமக் கட்சியானது புதிய மக்கள் முன்னணியின் கருணையால் அரசாங்கத்தில் அரிதாகவே தக்கவைக்கப்பட்டிருக்கும். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பலவந்தமாக வெளியேற்றப்படும் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனும், மதிப்பிழந்த ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸும் ஏகாதிபத்திய கூட்டணியின் இதயத்தானத்தில் ஆபத்தான அடித்தளத்தை நிறைவு செய்கின்றனர்.

ஆனால் இந்த இயலாதவர்கள் மலைக்க வைக்கும் பரிமாணங்களில் ஒரு போர் மற்றும் போர்க்கால சிக்கன நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகின்றனர். உக்ரேனில் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரின் அடுத்த கட்டத்தை எவ்வாறு எதிர்த்துப் போரிடுவது என்பதும், தொழிலாள வர்க்கத்தை தீவிரமாக சுரண்டுவதன் மூலமாகவும் பொதுச் சேவைகளை அழிப்பதன் மூலமாகவும் அதற்கு எவ்வாறு நிதியாதாரம் வழங்குவது என்பதுமே விவாதத்திற்கான தலைப்பாக இருக்கும். கட்டாய இராணுவ சேவை மற்றும் அரச ஒடுக்குமுறைக்கான திட்டங்களும் திட்டநிரலில் உயர்மட்டத்தில் இருக்கும்.

தன்னுடைய பங்கிற்கு தொழிற்கட்சி ஏற்கனவே பல பில்லியன்கள் செலவாகும் பாதுகாப்புச் செலவுகளை அதிகரிப்பதாகவும், அணுவாயுதங்களை நவீனப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது. இதில் நான்கு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டியெழுப்புவதும் அடங்கும். இதற்கு இன்னும் பல பில்லியன் செலவாகும்.

இன்றைய உலக அரசியல் நிலைமையின் இதயத்தானத்தில் உள்ள அடிப்படை முரண்பாடு இதுதான், இது தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியில் இறங்கி வருகிறது. ஆளும் உயரடுக்கு அதன் பலவீனமான மற்றும் நெருக்கடி நிறைந்த சமூக நிலைமையின் விரக்தியில் இருந்து மகத்தான அபாயங்களை எடுக்கிறது. ஆனால், ஒரு புரட்சிகர இயக்கம் அவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிக்கவில்லை என்றால், அவர்கள் சமூகத்தை மேலும் மேலும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் ஆழமாக மூழ்கடிப்பார்கள்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அந்த புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனில், காஸா இனப்படுகொலைக்கு எதிரான பரந்த எதிர்ப்பு, தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்தியப் போர் வேலைத்திட்டத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தின் ஆரம்பப் புள்ளியாக கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது அந்த சவாலை ஏற்கும். தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் கூர்மையான அபாயங்கள் சம்பந்தமாக முதலாளித்துவ ஊடகங்கள், பிரதான கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” என்று கடந்து செல்பவை மௌனம் காக்கும் சதியை உடைப்பதையும், இனப்படுகொலை மற்றும் போருக்கான ஸ்டார்மரின் கட்சிக்கு ஒரு சோசலிச மாற்றீட்டைக் கட்டியெழுப்புவதையும் எங்கள் தேர்தல் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டிருந்தது. அது கோர்பைனிசத்தை நாம் நிராகரித்ததையும் அதற்கு எதிரான நமது ஒன்பது ஆண்டுகால போராட்ட சாதனையையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

அந்த முன்னோக்கானது முற்றிலும் நிரூபணமாகியுள்ளது. இது இப்பொழுது பிரிட்டன் முழுவதும் உள்ள அனைத்து சோசலிச தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

Loading