முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஹாரிஸின் நிறைவுரை உலகளாவிய போரின் திட்டநிரலை ஏற்றுக்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சிக்காகோவில் ஆகஸ்ட் 22, 2024 வியாழக்கிழமையன்று, ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் உரையாற்றுகிறார். [AP Photo/J. Scott Applewhite]

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஏற்பு உரையுடன், நான்கு நாட்களாக இடம்பெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு கடந்த வியாழனன்று நிறைவடைந்தது.

ஒட்டுமொத்தமாக, இந்த மாநாடு முடிவில்லாத பைத்தியக்காரத்தனமான உரைகள் மற்றும் ஹாரிஸுக்கு இரட்சிப்புக்கான அல்லேலூயா வேண்டுகோள்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இது அவரது வலதுசாரி வாழ்க்கையை, ஒரு வழக்கறிஞராக, பில்லியனர்களின் அறிவிப்புக்கள் என்பன முற்றிலும் அவரை பொய்யராக்கியது. ஹாரிஸ் ஒரு “மகிழ்ச்சியின் ஜனாதிபதியாக” இருப்பதோடு, ஒரு (பல மில்லியன்களை கொண்டிருப்பவர்) ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் ஆசிய அமெரிக்கப் பெண்ணை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்துவதற்கான “வரலாற்று” தன்மையை தொடர்ந்து கொண்டிருப்பார்.

ஹாலிவுட் மற்றும் பாப் இசை பிரபலங்கள் ஹாரிஸைத் அரவணைத்தன் மூலம், ஜனநாயகக் கட்சியினர் கொள்கைக்கு பதிலாக பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இந்த மாநாட்டை மாற்ற முற்பட்டனர். ஆயினும், அவர்கள் முன்மொழிந்த கொள்கைகளின் நிஜமான உள்ளடக்கம் வேட்பாளரின் நிறைவு உரையில் வெளிப்பட்டது: அதாவது தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரின் ஒரு திட்டநிரல் ஆகும்.

“தலைமைத் தளபதி என்ற முறையில், அமெரிக்கா எப்போதும் உலகின் மிக சக்திவாய்ந்த மற்றும் கொடிய சண்டைப் படையைக் கொண்டிருப்பதை உறுதி செய்வேன்” என்று ஹாரிஸ் அறிவித்தார். இந்த படை யாருடன் சண்டையிடும் என்பது குறித்து ஹாரிஸ் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை. சீனா, ரஷ்யா, வட கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளை அவர் குறிப்பிடுகிறார். பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் எதிர்கால அணுஆயுத உலகப் போருக்கான அமெரிக்க மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டும் புதிய ஆவணத்தில் இலக்கு வைத்துள்ளது.

ஒரு அமெரிக்க முதலாளித்துவ அரசியல்வாதியின் எந்தவொரு பிரதான உரையையும் போலவே, ஹாரிஸின் ஏற்புரையும் இரண்டு பார்வையாளர்களை நோக்கி செலுத்தப்பட்டிருந்தது. அது, வோல் ஸ்ட்ரீட் மற்றும் ஜனநாயகக் கட்சியின் உண்மையான தளமான இராணுவப் புலனாய்வுக் கருவியாகும்., அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்க பைடென் நிர்வாகத்தின் இராணுவவாத வெளியுறவுக் கொள்கையைத் தொடர ஹாரிஸ் உறுதியளித்தார்.

ட்ரம்பைப் போலல்லாமல், ஹாரிஸ் நம்பகமானவரோ அல்லது சுயநலமோ இல்லாத ஒரு பாதுகாப்பான பெண்மணி என்று அவர் பிரகடனம் செய்தார் — முன்னாள் பாதுகாப்புச் செயலரும் சிஐஏ இயக்குனருமான லியோன் பனெட்டா தொடங்கி, இப்போது ஹாரிஸை வழிமொழிந்து வரும் குடியரசுக் கட்சியினரின் ஒரு பகுதியினர், மேலும் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினராக இப்போது இடங்களை வகிக்கும் மூன்று இராணுவ-உளவுத்துறை அதிகாரிகள் வரையில், மாநாட்டின் இறுதி நாளில் பல வலதுசாரி பேச்சாளர்களால் ஒலிக்கப்பட்ட ஒரு கருத்துரு இதுவாகும்.

காஸாவிலுள்ள பாலஸ்தீன மக்களின் துன்பங்கள் குறித்த ஹாரிஸின் சுருக்கமான குறிப்பு, ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டாலும், (இது சந்தேகத்திற்கு இடமின்றி ஜனநாயகக் கட்சிக்கான போலி-இடது வக்காலத்துக்காரர்களால் குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பாராட்டப்படும்) இஸ்ரேலுக்கு வரம்பற்ற அமெரிக்க இராணுவ உதவி வழங்குவதற்கான ஒரு சமரசமற்ற சூளுரையை அவர் அப்பட்டமாக வலியுறுத்திய பின்னர் இது வந்தது: “இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான அதன் உரிமைக்காக நான் எப்போதும் துணை நிற்பேன், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் கொண்டிருப்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன்” என்று அவர் கூறினார்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காஸாவிலும், மேற்குக் கரை, லெபனான், யேமன், ஈரான் மற்றும் ஏகாதிபத்தியத்தால் இலக்கில் வைக்கப்பட்டுள்ள அப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளிலும் பத்தாயிரக் கணக்கானவர்களைக் கொல்வதற்கு அதிக குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வழங்கப்படும் என்பதாகும்.

பரந்துபட்ட பொது மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவது, சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவது மற்றும் கருக்கலைப்பு உரிமைகள் போன்ற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து தொடர்ச்சியான வாய்வீச்சு வாக்குறுதிகளை ஹாரிஸ் வழங்கினார்.

ஆனால், உலகப் போருக்கு அவசியமான பாரிய செலவினங்களை, சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, உணவு மானிய கூப்பன்கள் மற்றும் அடையப்பட்ட நன்மைகள் போன்ற சமூக திட்டங்களின் பராமரிப்புடன் இணைப்பது சாத்தியமில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் வியட்நாம் போரின் போது “துப்பாக்கிகளையும் வெண்ணெயையும்” இணைக்க முனைந்தார். ஆனால், அது திடீரென்று வியத்தகு முறையில் தோல்வியடைந்தது. ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அப்படியொரு முயற்சியைக் கூட செய்ய மாட்டார். சமூக முன்னேற்றம் பற்றிய அவரது வாக்குறுதிகள் சிடுமூஞ்சித்தனமான தேர்தல் சொற்பொழிவுகளாகும். அதற்கு முன்னதாக இல்லாவிட்டாலும் நவம்பர் 6 அன்று இது நிராகரிக்கப்படும்.

டொனால்ட் ட்ரம்பை ஜனநாயகத்திற்கான ஓர் அச்சுறுத்தலாகவும் ஒரு குற்றவாளியாகவும் ஹாரிஸ் கண்டனம் செய்தார். ஆனால், குடியரசுக் கட்சியிலோ அல்லது தேசிய பாதுகாப்பு எந்திரத்திற்குள்ளேயோ இருக்கும் அவரது உயர்மட்ட கூட்டாளிகளைக் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. கடந்த திங்களன்று, ஜனாதிபதி ஜோ பைடென் தனது மாநாட்டு உரையில், நவம்பர் 5 ஆம் தேதி தோல்வியடைந்தால் தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்க மாட்டார் என்று எச்சரித்ததை ஹாரிஸ் குறிப்பிடவில்லை. ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் ஒரு அதிதீவிர வலது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை அழைக்கும் சட்ட சூழ்ச்சிகள் மூலமாகவோ அல்லது அரசியல் வன்முறையை நேரடியாகத் தூண்டுவதன் மூலமாகவோ தேர்தல்களைக் கடத்த முனைந்தால், பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் என்ன செய்யும் என்பதை ஹாரிஸ் அதிகம் சுட்டிக்காட்டவில்லை.

அதற்கு பதிலாக, ஒரு மோசமான நபராக மட்டுமே காட்டப்பட்ட ட்ரம்ப்பை பற்றி, ஹாரிஸ் கேள்வி எழுப்பினார்: “அமெரிக்க ஜனாதிபதியின் அபரிமிதமான அதிகாரங்களை அவர் எவ்வாறு பயன்படுத்துவார். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த அல்ல. நமது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் தனக்கு கிடைத்த ஒரே வாடிக்கையாளருக்கும், தனக்கும் சேவை செய்வார்.”

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர், “கடந்த கால கசப்பு, சிடுமூஞ்சித்தனம் மற்றும் பிளவுபடுத்தும் சண்டைகளை கடந்து செல்ல” இரு கட்சி ஐக்கியத்திற்கான ஹாரிஸின் இராணுவப் வசைமாரி பொழிவுக்கும் அவரது வேண்டுகோளுக்கும் இடையே உள்ள தொடர்பை சுட்டிக்காட்டினார். அது, “எந்த ஒரு கட்சி அல்லது கன்னையின் அங்கத்தவர்களாக அல்ல, ஆனால் அமெரிக்கர்களாக” என்பதாகும்.

“ட்ரம்பும் குடியரசுக் கட்சியும் சர்வாதிகாரத்திற்கு சதி செய்து வருகின்ற நிலைமைகளின் கீழ், ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து வரும் அழைப்பு, ஆளும் வர்க்கத்திற்குள் அதன் பொது வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக ஐக்கியப்பட வேண்டும் என்பதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, வெளிநாட்டில் போரை நடத்துவதற்கு, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது போரை விரிவாக்குவது தேவைப்படுகிறது” என்று கிஷோர் எழுதினார்.

அந்த உரை முழுவதிலும், குடியரசுக் கட்சி ஸ்தாபகத்தின் ஒரு பிரிவுகளுக்கு உறுதியளிக்கக்கூடிய மற்றும் வேண்டுகோள் செய்யக்கூடிய வலதுசாரி மொழியைப் பயன்படுத்த ஹாரிஸ் முயன்றார். மேலும், ஹாரிஸ் மூச்சு விடுவதற்கான நேரத்தின் போதெல்லாம் அங்கிருந்த கூட்டம் “அமெரிக்கா, அமெரிக்கா” என்ற கோஷங்களை எழுப்பியது.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் குறிப்பிட்டதைப் போல, “பல வழிகளில், பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சியினர் ஆற்றிய உரை இது: குற்றங்களை எதிர்த்துப் போராடுவது, எல்லையைப் பாதுகாப்பது, ஒரு ‘வாய்ப்புள்ள சமூகத்துக்கு’ வாக்குறுதியளிப்பது, அமெரிக்க இராணுவத்தை உலகின் ‘மிகக் கொடிய’ இராணுவமாகப் பராமரிப்பது, மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்ற சர்வாதிகாரிகளை எதிர்ப்பதில் கவனம் செலுத்துவது”.

அம்மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் உட்பட, ஜனநாயகக் கட்சிக்காக போலி-இடது வக்காலத்து வாங்குபவர்கள், ஹாரிஸ் நிர்வாகம் இடது பக்கம் திரும்பும் என்று கூறிய அனைத்து பொய்களையும் ஹாரிஸின் உரை மறுத்துள்ளது.

இதுதான், உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் நிஜமான சமூக மனக்குறைகளையும் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்து வருவதையும் சுரண்டிக் கொள்வதற்கு ட்ரம்புக்கு வாய்ப்பளிக்கிறது. புலம்பெயர்ந்தவர்களை இனவாத அரக்கத்தனமாக சித்தரிப்பதன் மூலம், முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு விளைபொருளான இந்த நிலைமைகளுக்கு ஆளான அவர்களை ட்ரம்ப் ஒரு பலிகடா ஆக்குகிறார். அதே நேரத்தில், இந்த நெருக்கடிக்கான அவரது “தீர்வு”, பல மில்லியன்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை கைது செய்து நாடு கடத்துவதற்கு பெரிய அளவிலான பொலிஸ் அரசு வன்முறையைப் பயன்படுத்துவதாகும். இது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு மரண ஆபத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது.

கடந்த மாதம் இடம்பெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் பாசிசவாத காட்சிக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டை நிறைவு செய்த ஹாரிஸின் உரை, பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான இரு-கட்சி அமைப்புமுறையால் அமெரிக்க மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அப்பட்டமான மாற்றீடுகளை எடுத்துரைத்தது.

டொனால்ட் ட்ரம்பின் கீழ் குடியரசுக் கட்சியினர், பத்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரைக் கைது செய்து நாடு கடத்துகின்ற, முதலாளித்துவ நெருக்கடிக்கு அவர்களை பலிகடாவாக்க உறுதிபூண்டுள்ள ஒரு பாசிசவாத கட்சியாக அவர்கள் அபிவிருத்தி கண்டுள்ளனர். ஜனநாயகக் கட்சி, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த ஒரு போர் வெறி கொண்ட ஹாரிஸ் நிர்வாகத்தை நிறுவுவதோடு, ஈரானுடன் போரைத் தூண்டும் முயற்சியில் இஸ்ரேலுடன் இணைந்து, இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவிற்கு எதிரான பாரிய இராணுவக் கட்டமைப்பைத் தொடரும். இந்த வேறுபாடுகள் சார்பு ரீதியானது. இரண்டு கட்சிகளுமே ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

2024 தேர்தலில் மையப் பிரச்சினை, முதலாளித்துவ இரு கட்சி முறையின் முற்றுமுழுதான திவால்நிலை மற்றும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு எதிராக, ஒரு சுயாதீனமான, சோசலிச மாற்றீட்டை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டிய அவசரத் தேவையாகும்.

Loading