நவம்பர் 14 நடக்கவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. ஏகாதிபத்திய யுத்தம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளுக்கு எதிராக சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைத்து கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது.
கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர் மயில்வாகனம் தேவராஜா இன்று இலங்கை வானொலி தேசிய சேவையில் கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார். அடுத்த வாரம், சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, யாழ்ப்பாண மாவட்ட தலைமை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தர் ஆகியோரின் தொலைக் காட்சி உரைகள் ஒளிபரப்பப்படும்