இந்த விரிவுரைகள் 2007 இல் மிச்சிகனில் உள்ள அன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவ கட்சி (அமெரிக்கா) கோடைகால பள்ளியில் வழங்கப்பட்டன.
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேசியவாத கொள்கைகளுக்கும், சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிச அகிலத்துக்குள்அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் எதிராக, 1923 இல் லியோன் ட்ரொட்ஸ்கிஸ்தாபித்தஇடது எதிர்ப்பின்போராட்டம் தொடர்பான முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று பிரச்சினைகள் தொடர்பாகஅவர்கள் உரையாற்றுகிறார்கள்.
1926 பிரிட்டிஷ் பொது வேலைநிறுத்தம், 1925-1927 சீனப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்துக்குள்ளே பொருளாதாரக் கொள்கை குறித்த ஸ்ராலினின் பேரழிவு கொள்கைகளுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் ஆகியவை இதில் அடங்கும். ட்ரொட்ஸ்கியின் நினைவுச்சின்னப் படைப்பான காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி பற்றிபீட்டர் டானியல்ஸ் மற்றும் பில் வான் ஆக்கென் ஆகியோரின் சொற்பொழிவுகள், இது எதிர் புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சடத்துவ வளர்ச்சியின் அடிப்படையையும் மற்றும் மத்தியவாத போக்குகளுக்கு எதிரான ஒரு புதிய நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தையும் விளக்குகிறது.
இந்த விரிவுரை தோல்வியுற்ற ஜேர்மன் புரட்சியின் மூலோபாய மற்றும் தந்திரோபாய படிப்பினைகளை மையமாகக் கொண்டுள்ளது. இவை, இடது எதிர்ப்புக்கும் ஸ்ராலின், சினோவியேவ் மற்றும் காமெனேவ் தலைமையிலான முக்கூட்டுக்கும் இடையில் விரைவாக ஒரு சூடான விடயங்களாக மாறிய பாடங்களாகும்.
1925-1927 இரண்டாம் சீனப் புரட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாகும். இது, பல்லாயிரக்கணக்கான கம்யூனிச தொழிலாளர்கள் கொல்லப்பட்டதோடு, தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியை முற்றிலுமாக அழித்ததோடு முடிந்தது. குறிப்பாக 1949 இல் நிறுவப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மை, 1925-27 இன் படிப்பினைகளைப் புரிந்து கொள்ளாமல், நவீன சீன வரலாற்றை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது.
ரஷ்ய புரட்சி மற்றும் சோவியத் அரசு பற்றிய புரிதல் —அதன் எழுச்சி மற்றும் பின்வந்த சீரழிவு— 21 ஆம் ஆண்டின் போராட்டங்களுக்குத் தயாராகும் பொருட்டு 20 ஆம் நூற்றாண்டின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவதில் முக்கியமானது.