கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் ஒரு ஆண்டில் ஐரோப்பாவின் பில்லியனர்களின் செல்வம் திடீரென அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பாவின் உழைக்கும் மக்களுக்கு பெருமளவில் கடும் இன்னல்கள், வேலையின்மை, வறுமை, பாரிய மரணங்கள், சமூக தனிமைப்படுத்தல், துக்கம் மற்றும் துன்பங்களில் கடந்த ஆண்டு ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால் பில்லியனர்களுக்கு, கோவிட்-19 பெருந்தொற்று நோய் முன்னெப்போதும் இல்லாத செழிப்பை ஒரு வருடத்தில் கொண்டு வந்துள்ளது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் (Forbes) இதழின் வருடாந்திர உலகளாவிய பில்லியனர்கள் பட்டியலானது ஐரோப்பாவின் பில்லியனர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கூட்டாக 1 டிரில்லியன் டாலர்களை கொண்ட செல்வந்தர்களாக உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.

Bernard Arnault (SOURCE: Wikimedia Commons/Jérémy Barande / Ecole polytechnique Université Paris-Saclay)

வெறும் 628 பேருக்கு இடையே பகிரப்பட்டுள்ள அவர்களின் இந்த கூட்டுச் செல்வம் இப்போது 3 டிரில்லியன் டாலர்களாக உள்ளன. இதன் பொருள் அவர்களின் செல்வம் ஒரு வருட இடைவெளியில் சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு 511 ஆக இருந்ததிலிருந்து சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக நுழைபவர்களை தவிர, ஐரோப்பாவின் மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வம் கிட்டத்தட்ட 800 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில் மிகப்பெரும் செல்வந்த தனிநபரும், மற்றும் உலகின் மூன்றாவது செல்வந்தரும் ஆடம்பர ஃபேஷன் சில்லறை விற்பனைக் குழுமமான LVMH இன் முக்கிய பங்குதாரரான பேர்னார் ஆர்னோ (Bernard Arnault) ஆவார். மார்ச் 20, 2020 இல் 311 யூரோக்களிலிருந்து இன்று 577.20 யூரோக்களாக இருக்கும் LVMH இன் பங்கின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக, அவரது செல்வம் ஒரு வருடத்திற்கு முன்பு 76 பில்லியன் டாலர்களிலிருந்து இன்று 150 பில்லியன் டாலர்களாக கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

ஒரு நூற்றாண்டின் மிகப்பெரிய பெருந்தொற்று நோயின் ஒவ்வொரு நொடிக்கும் - அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது உட்பட ஆர்னோவின் செல்வம் ஒவ்வொரு நாளும் தோராயமாக 208 மில்லியன் டாலர்கள் அல்லது வினாடிக்கு 2,400 டாலர்கள் அதிகரித்துள்ளது.

ஆர்னோ தவிர, மற்றய நான்கு பிரெஞ்சு தனிநபர்கள் ஐரோப்பாவின் 10 செல்வந்தர்களில் அடங்குகிறார்கள், அவர்கள் அனைவரும் உயர்-ஆடம்பர வடிவமைப்பாளராக ஆடைகள் மற்றும் ஆடம்பர பொருள் பங்கு விலைகள் காரணமாக தங்கள் செல்வத்திற்கு காரணமாக உள்ளனர்.

73.7 பில்லியன் டாலர்களுடன் ஐரோப்பாவின் மூன்றாவது செல்வந்தரான பிரான்சுவாஸ் பெத்தான்கூர் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers), L’Oreal நிறுவனத்தின் வாரிசும் மற்றும் உலகின் மிகப்பெரும் செல்வந்த பெண்மணியும் ஆவார். ஐரோப்பாவில் ஐந்தாவது செல்வந்தரான பிரான்சுவா பினோ (François Pinault), 45.5 பில்லியன் டாலர்களுடன், ஆடம்பர வணிகச் சின்னமான கெரிங்கின் (Kering) கெளரவத் தலைவராக உள்ளார், இது Gucci போன்ற லேபிள் அடையாளங்களை சொந்தமாகக் கொண்டுள்ளது. சகோதரர்களான அலன் (Alain) மற்றும் ஜெரார் வேர்த்தைய்மர் (Gerard Wertheimer), ஐரோப்பாவில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது செல்வந்தர்களாவார்கள், தலா 35.5 பில்லியன் டாலர்களுடன், Chanel நிறுவனத்தைக் கொண்டுள்ளனர்.

பெருந்தொற்று நோய் முழுவதிலும் வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆடம்பர நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு நிதிய தன்னலக்குழுவின் ஒட்டுண்ணித்தனமான பண்பு அடிப்படையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. ஆடம்பர வணிக சின்னப் பங்கு முதலீட்டு நிதிய (Luxury Brands Equity Fund) மேலாளர் ஸ்வேதா ராமச்சந்திரன் ஜனவரியில் ப்ளூம்பேர்க் நியூஸிடம் கூறுகையில், பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக பயணங்கள் மற்றும் உணவகங்களில் செலவிட முடியாத அதிக செலவழிப்பவர்கள் அதற்கு பதிலாக ஆடம்பர பொருட்களுக்கு திரும்பியுள்ளனர், இது அவர்களின் பங்கு விலைகளில் ஒரு அதிகரிப்பை தூண்டியுள்ளது எனக் கூறினார்.

பில்லியனர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் நிலையாக உள்ளது அல்லது அதிகரித்துள்ளது. ஜேர்மனியானது (78,000 கொரோனா வைரஸ் இறப்புக்களுடன்) ஐரோப்பாவில் மற்றய நாடுகளைக் காட்டிலும் மிக அதிக பில்லியனர்களைக் கொண்டுள்ளது, கடந்த ஆண்டு 29 ஆக உயர்ந்து 136 பில்லியனர்கள் உள்ளனர், இது குறைந்த விலை சில்லறை விற்பனை சங்கிலிகளின் பெருநிறுவனங்கள் முதன்மையாக இதில் உள்ளது. இத்தாலி (112,374 கொரோனா வைரஸ் இறப்புகளுடன்) மற்றொரு 15 பில்லியனர்களாக "அதிகரித்து", இப்போது மொத்தம் 51 பில்லியனர்கள் உள்ளனர். ஸ்பெயினில் ஆறு பேர்கள் பில்லியனர்களாக அதிகரித்து (உத்தியோகபூர்வமாக 76,000 இறப்புக்களுடன், ஆனால் தேசிய புள்ளியியல் நிறுவனத்தின்படி, 100,000 க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்), தற்போதைய மொத்தம் 30 பில்லியனர்கள் உள்ளனர். பிரித்தானியா (126,000 இறப்புகளுடன்) அதன் பில்லியனர்கள் எண்ணிக்கையை 45 ல் இருந்து 56 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தத்தில், 935,764 மக்கள் இந்த பெருந்தொற்று நோயின் தொடக்கத்திலிருந்து கொரோனா வைரஸால் உத்தியோகபூர்வமாக இறந்துள்ளனர் என்று வேர்ல்டோமீட்டர்ஸ் கூறுகிறது. கண்டத்தில் ஒவ்வொரு கொரோனா வைரஸ் மரணத்திற்கும், ஐரோப்பாவின் பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை வெறும் 1 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் வங்கிக் கணக்குகளின் இணையான அதிகரிப்பு குறித்து தற்செயலான எதுவும் இல்லை. உலகின் பில்லியனர்களின் செல்வத்தின் அதிகரிப்பு பங்கு விலைகளில் ஒரு பாரிய, தொடர்ச்சியான உயர்வில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து அரசாங்கங்கள் பங்குகளை முட்டுக்கொடுத்து நிறுத்துவதற்கு, பெருந்தொற்று நோய் முழுவதும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை பேணுவதுடன், பொதுப் பிணையெடுப்பு நிதிகளில் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் உட்செலுத்தப்படுவது குறித்து இது முன்னறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டும், பெற்றோர்கள் தொடர்ந்து பணிக்குச் செல்லும் வகையில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் - இது வைரஸ் தொடர்ந்து பரவுவதையும், மருத்துவமனைகள் நிரம்பி வழிவுவதையும், வெகுஜன இறப்புகளையும் உறுதி செய்யும்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடந்த புதனன்று தேசிய அளவில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது பேசிய நலன்கள் இவைதான். பிரான்சில் கொரோனா வைரஸ் முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது, ஞாயிறன்று மட்டும் 60,000 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இது மிகவும் தொற்றும் பிரிட்டிஷ் மற்றும் தென்னாபிரிக்க வகைகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ஆயினும்கூட மக்ரோன், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ சங்கங்களின் கோரிக்கைகளை கடுமையான பொதுமுடக்கத்திற்கான கோரிக்கைகளை மறுத்தார், "பொருளாதாரம்" உட்பட ஒரு பொதுமுடக்கத்தின் "விளைவுகளை" சமூகமும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மார்ச் 2020ல், இத்தாலியில் உற்பத்தியை நிறுத்தக் கோரிய திடீர் வேலைநிறுத்தங்களையும் மற்றும் நிரம்பி வழியும் மருத்துவமனைகளையும் எதிர்கொண்ட ஐரோப்பிய அரசாங்கங்கள் கடுமையான பொதுமுடக்க நடவடிக்கைகளை செயற்படுத்தின, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடின. 2 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பிணையெடுப்புக்களை நிறைவேற்றிய பின்னர், வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் போதே, குறிப்பிடத்தக்க பரிசோதனை, நோய்த் தடமறிதல் மற்றும் கண்காணிப்பு அமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், அவர்கள் பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறந்தன. அப்போதிருந்து, அவர்கள் அத்தியாவசியமற்ற உற்பத்தி மற்றும் நேரில் சென்று பள்ளியில் கற்றல் மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.

பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் கொள்கையாக இருப்பது: மில்லியன் கணக்கானவர்கள் நமது பில்லியன்களை வைத்திருக்க (மற்றும் அதிகரிக்க) இறக்க வேண்டும் என்றால், அது அப்படியே இருக்கலாம். ஒரு புதிய மற்றும் இன்னும் கொடிய வைரஸ் அலை சர்வதேச அளவில் பரவுவதால், மரணத்திற்கு சொல்லமுடியாத எண்ணிக்கையை அனுப்புவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

சமீபத்திய ஃபோர்ப்ஸ் அறிக்கையானது முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கும் சமூகத்தை வழிநடத்துவதற்கு நியாயமான உரிமையில்லை என்பதை விடையிறுக்க முடியாத நிரூபணமாகும். அவர்களின் தணியாத பேராசை உழைக்கும் மக்களின் அவலத்தையும் வறுமையையும் கோருவது மட்டுமல்லாமல், ஒரு கொடிய வைரஸ் உலகளாவியளவில் பரவுவதையும் கோருகிறது.

உடனடித் தேவையின் ஒரு நடவடிக்கையாக, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் செல்வம் பறிமுதல் செய்யப்பட்டு சமூகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும். அதன் தீயவழியில் ஈட்டப்பட்ட செல்வமானது சமூகத் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இந்த டிரில்லியன் கணக்கான செல்வமானது ஐரோப்பா முழுவதும் கடுமையான பொதுமுடக்கத்திற்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட வேண்டும், முழு மக்களுக்கும் முழு ஊதியமும் கொடுக்கப்பட வேண்டும், இதன் மூலம் அத்தியாவசியமற்ற உற்பத்தி மற்றும் பள்ளிகள் மூடப்பட முடியும், சிறு வணிகங்கள் மற்றும் சுயாதீன ஒப்பந்தக்காரர்களுக்கும் முற்றிலும் இழப்பீடு அளிக்க முடியும்.

பாரிய வளங்கள் ஒரு கணினி வழங்குதல் உட்பட உயர்தர இணையவழி கற்றலுக்கு முதலீடு செய்ய வேண்டும், வசதியான கற்றலுக்கான இடவசதி மற்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதிவேக இணைய இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

அத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, தொழிலாளர் அரசாங்கங்களுக்காகவும், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை ஸ்தாபிக்கவும் கண்டம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் தேவைப்படுகிறது.

Loading