மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வேலை நேரத்தை 37.5 மணிநேரத்திலிருந்து 40 மணி நேரமாக உயர்த்துவதற்கான நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெல்ஜியத்தின் கென்டில் உள்ள வோல்வோ கார் ஆலையின் தொழிலாளர்கள் வியாழக்கிழமை, கருவிகளை போட்டுவிட்டு உற்பத்தியை நிறுத்தினர்.
இந்த நடவடிக்கை, நூற்றுக்கணக்கான காலை ஷிப்ட் (shift) தொழிலாளர்களை பாதித்தது மற்றும் குறைந்தபட்சம் ஓரளவு பிற்பகல் ஷிப்டுக்கும் நீட்டிக்கப்பட்டது. இரவு ஷிப்ட் வேலைக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
பெல்ஜிய செய்தி வலைத் தளமான hln.be இன் படி, வாராந்திர வேலை நேரத்தை அதிகரிக்கும் ஒப்பந்தம் 'தொழிற்சங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் முன்பே தொழிலாளர்களுடன் கதைக்கப்படவில்லை.' வொல்வோ இந்த வாரம் தொழிலாளர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதத்திலேயே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழிலாளர்கள் தன்னியல்பாக ஆர்ப்பாட்டம் செய்த பின்னர், திட்டமிட்ட வேலை நேர நீட்டிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நிறுவனம் அறிவித்தது. இருப்பினும், இந்த நடவடிக்கையை செயல்படுத்த இன்னும் உறுதியாக உள்ளது. 'தெளிவாக இருக்க வேண்டும்: 40 மணி நேர வாரம் விவாதத்திற்கு வரவில்லை' என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பார்பர் ப்ளோம் (Barbar Blomme) அறிவித்தார். 'எங்கள் வெற்றிகரமான எக்ஸ்சி 40 (XC40) மாடலுக்கு அதிக கிராக்கி உள்ளது, மேலும் நாம் உற்பத்தியை அதிகரிக்க இது ஒரு காரணம்.' இலையுதிர்காலத்தில் மேலும் 'ஆலோசனைகளுக்கு' பின்னர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள நியூ ரிவர் வலி ஆலையில் 2,900 வொல்வோ டிரக் தொழிலாளர்கள் UAW தொழிற்சங்கத்தால் முன்மொழியப்பட்ட மூன்றாவது தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிப்பதற்கு முன்னதாக பெல்ஜியத்தில் வொல்வோ கார் தொழிலாளர்களின் பணி நிறுத்த நடவடிக்கை வருகிறது. UAW ஆதரவு உடன்படிக்கைக்கு, இரண்டு பெரும் எதிர்ப்பின் பின்னர் வேர்ஜீனியா தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தின் மூன்றாவது பதிப்பில் ஊதியங்கள் மற்றும் சுகாதார சேவைகள் மீதான தாக்குதல்களும் உள்ளன.
கென்டில் வேலைநிறுத்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களும் வேர்ஜீனியாவில் வேலைநிறுத்தம் குறித்து தொழிலாளர்களுக்கு சுருக்கமாகவும் ஆதரவைத் திரட்டவும் கென்டிற்கு பயணம் செய்தனர். தலையீடு ஒரு சிறந்த பதிலைச் சந்தித்தது. பெல்ஜிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் உள்ள தங்கள் சகாக்களுடன் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர் மற்றும் போர்க்குணமிக்க வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர். டப்ளினில் வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்களின் தீர்மானம் மேலும் பலப்படுத்தப்பட்டது.
'ஐரோப்பாவில் உள்ள சகாக்கள் எங்களைப் போலவே போராடுகிறார்கள்' என்று டப்ளின் தொழிலாளி WSWS இடம் கூறினார். 'நாங்கள் அவர்களின் வலியை உணர்கிறோம், அவர்கள் எங்கள் வலியை உணர்கிறார்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது நிச்சயமாக ஊக்கமளிக்கிறது.'
கென்டிலிருந்து ஆதரவு வீடியோவை ஆலையில் உள்ள மற்ற சகாக்களுக்கு அனுப்பியதாக ஒரு தொழிலாளி தெரிவித்தார்.
'கென்டில் உள்ள தொழிலாளர்கள் எங்களை ஆதரிப்பதாக பலர் பேசுகிறார்கள். வீடியோவின் நேரம் இதைவிட சிறப்பாக இருந்திருக்க முடியாது. வொல்வோ தனது பொதுத்தொடர்பு எந்திரத்தை கொண்டு நம்மை பயமுறுத்துவதைப் போலவே, வாக்களிப்பதற்கு சற்று முன்னர் இந்த வீடியோவை பார்க்கிறோம், இது மீண்டும் நெருப்பை எழுப்புகிறது.' இது வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்களின் தீர்மானத்தை பெரிதும் ஊக்குவித்துள்ளது.
மேலும் படிக்க
- பெல்ஜியத்தின் கென்டில் உள்ள வொல்வோ தொழிலாளர்கள் அமெரிக்காவில் தங்கள் சகாக்களின் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கின்றனர்
- UAW இன் சரணடைவு ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன் வொல்வோ தொழிலாளர்கள் முழு ஒப்பந்தத்தையும் கூடுதல் வாரத்தையும் கோருகின்றனர்
- இரயில்வே மற்றும் விமான நிலையங்களில் அடையாள பொது வேலைநிறுத்தங்களுக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுக்கின்றன