இங்கிலாந்து ஆய்வுகள், சுகாதார நெருக்கடி ஒரு வர்க்கப் பிரச்சினை என்பதை உறுதிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாதம், தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் (ONS) 2011 மற்றும் 2014 க்கு இடையில் ஆயுள் எதிர்பார்ப்பு காலத்தில் உள்ள இன வேறுபாடுகளின் பகுப்பாய்வை வெளியிட்டது. அது 'வெள்ளை மற்றும் கலப்பு இனக்குழுக்களில் உள்ள ஆண்களும் பெண்களும் மற்ற எல்லா இனக்குழுக்களையும் விட குறைந்த ஆயுள் எதிர்பார்ப்புகாலம் கொண்டிருப்பதையும்; அனைத்து இனக்குழுக்களையும் விட கறுப்பு ஆபிரிக்க குழுக்கள் புள்ளிவிவரரீதியாக அதிக ஆயுட்காலம் கொண்டுள்ளதாகவும்” கண்டறிந்தது.

அறிக்கை: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணங்களிலிருந்து ஆயுட்காலம் எதிர்பார்ப்பு மற்றும் இறப்புக்கான இன வேறுபாடுகள்: 2011 முதல் 2014 வரை

கலப்பு இன ஆண்களின் ஆயுட்காலம் 79.3, வெள்ளையினத்தவரின் 79.7, கறுப்பு கரீபியன் 80.7, பங்களாதேஷ் 81.8, இந்தியர்கள் 82.3, கறுப்பு ஆபிரிக்கர்கள் 83.8 மற்றும் ஆசிய மற்றவர்கள் 84.5. பெண்களுக்கான புள்ளிவிவரங்கள் கலப்பின (83.1), வெள்ளையின (83.1), கறுப்பு கரீபியர்கள் (84.6), இந்தியர்கள் (85.4), பிற ஆசியர்கள் (86.9), பங்களாதேஷ் (87.3) மற்றும் கறுப்பு ஆபிரிக்கர்கள் (88.9) என மதிப்பிட்டது.

இந்த ONS ஆய்வு விரிவான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை (50 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள்) இறப்புப் பதிவுகள் மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை உள்ளடக்கிய குடும்ப வைத்தியர்களின் நோயாளி பதிவுகளுடன் முதன்முதலாக இணைத்தது. அதன் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த ஆயுட்கால மதிப்பீடுகள், 'சற்று அதிகமாக மதிப்பிடப்பட்டவை' மற்றும் 'துல்லியமான முடிவுகள் எச்சரிக்கையுடன் கையாளப்படவேண்டும்' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் 'ஒட்டுமொத்த தோற்றங்கள் பிற வெளியிடப்பட்ட ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகின்றன' என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த புள்ளிவிவரங்கள் சமூகத்தினை வர்க்க ஆய்வுகளிலிருந்து அணுகாமல் இனரீதியான அணுகுமுறையின் திவால்நிலையை நிரூபிக்கின்றன. வெள்ளையர்கள் மேல்மட்டத்தில் இருந்தால், இன சமத்துவமின்மை ஒரு மேலாதிக்கம் செய்யும் சமூகப் பிரச்சனை என்றால், கறுப்பினத்தவர்களும் மற்றும் ஆசியர்களின் அதிக ஆயுள் எதிர்பார்ப்புகாலம் என்பதில் இருந்து ஒருவர் என்ன முடிவிற்கு வரலாம்?

ஒரு இனரீதியான பகுப்பாய்வில், மக்கள்தொகையின் ஆரோக்கியம் பற்றிய பிரச்சனை முற்றிலும் குழப்பமிக்கதும், சிதைவடைந்ததுமாகும்.

Kings Fund உடல்நல சிந்தனைக் குழாமின் சமீபத்திய சுருக்கத்தின்படி, சீன மற்றும் கறுப்பு ஆபிரிக்க குழுக்கள் வெள்ளை குழுவை விட குறைவான இயலாமை விகிதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் கறுப்பு கரீபியர்கள், இந்தியர்கள், வங்கதேசத்தவர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் அதிகமாக உள்ளனர். வெள்ளையினத்தவர்களுடன் ஒப்பிடும்போது பெரும்பாலான இன சிறுபான்மை குழுக்களிடையே வயதான வயதில் உடல்நலம் தொடர்பான வாழ்க்கை மதிப்பெண்கள் குறைவாக உள்ளன. ஆனால் கறுப்பு கரீபியன், கறுப்பு ஆபிரிக்க மற்றும் கலப்பினத்தவர்களிடையே அவ்வாறல்ல. ஒட்டுமொத்த ஆரோக்கியம் குறைந்தவர்களில் வெள்ளையின ஜிப்சி மற்றும் ஐரிஷ் வழிப்போக்கர் குழுவினரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக மற்றும் கலாச்சார காரணிகள் இந்த வேறுபாடுகளுக்கு பங்களிக்கின்றன. ஆயுள் எதிர்பார்ப்பு ஆய்வின் ONS ஆசிரியர்கள் 'ஆசிய மற்றும் கறுப்பின இனக்குழுக்கள் புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற வெள்ளை இனத்தவரிடையே உள்ள தீங்கு விளைவிக்கும் உடல்நலம் தொடர்பான நடத்தைகளில் குறைவாக ஈடுபட வாய்ப்புள்ளது' என்று எழுதுகின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், 'கறுப்பு ஆபிரிக்க மற்றும் ஏனைய ஆசிய இனக்குழுக்களில் அதிக ஆயுட்காலம் இருப்பதற்கான சாத்தியமான காரணங்கள் அவர்கள் மற்ற இனக்குழுக்களை விட சமீபத்திய குடியேறியவர்களின் அதிக விகிதத்தைக் கொண்டிருக்கின்றனர். முந்தைய ஆராய்ச்சி புலம்பெயர்ந்த மக்கள் மற்றவர்களை விட ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டுகிறது” என்று எழுதுகின்றனர்.

இவை முக்கியமான காரணிகள். ஆனால் இவை முற்றிலும் இரண்டாம்தர நிலை அளவில் உள்ளன. அவர்கள் கவனம் செய்யத் தொடங்கிய சுகாதார நெருக்கடி ஒரு வர்க்கக் கேள்வியாகும். அனைத்து இனங்களிலும் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றில் பெரும் ஆதிக்கம் செலுத்துவது சமூக வர்க்கமாகும். ஆனால் இது இனப் பிரிவுகளின் அடிப்படையில் ஆரோக்கியம் பற்றிய விவாதத்தில் முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தல் என்பது 'வெள்ளை மக்களுக்கு' பொதுவான ஒரு ஆபத்து காரணி அல்ல, ஆனால் தொழிலாள வர்க்கத்தின் ஏழைப் பிரிவினரை கடுமையாக பாதிக்கிறது. பணக்கார சமூகங்களில் 7.6 சதவிகித மக்கள் மட்டுமே புகைப்பிடிக்கும் போது, இந்த விகிதம் ஏழை சமூகங்களில் 22 சதவிகிதத்தில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. புகைபிடித்தல் தொடர்பான 20 சதவிகித பணக்காரர்களில் 6,000 உடன் ஒப்பிடும்போது, சுமார் 11,000 புற்றுநோய்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மையான மக்கள்தொகையில் 20 சதவிகிதத்தில் கண்டறியப்படுகின்றன.

சமூக புள்ளிவிவரங்களின் இனமயமாக்கல் இதுவரை முன்னேறியுள்ளது, இது சிறுபான்மை இனக்குழுக்களுக்கு ஒத்த புள்ளிகளை வழங்குவது பெரும்பாலும் சாத்தியமற்றது. உள்-இன சமத்துவமின்மை குறித்த கடைசி முக்கிய ஆராய்ச்சி 2011 இல் Joseph Rowntree அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்டது. இது வெள்ளை பிரிட்டிஷ் இனத்தவரைவிட சீன, இந்திய, ஆபிரிக்க, பாகிஸ்தான் மற்றும் கரீபியன் குடும்பங்கள் அதிக வீட்டு வருமான சமத்துவமின்மை விகிதங்களை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது.

வர்க்கத்தின் முக்கியதன்மை கடந்த மாதம் வெளியிடப்பட்ட மற்றொரு சுகாதார அறிக்கையால் மிகவும் தெளிவுடன் உறுதிப்படுத்தப்பட்டது. The Lancet மருத்துவ இதழில், இங்கிலாந்தில் ஆயுட்கால எதிர்பார்ப்பு மீதான உள்ளூர் அரசாங்க நிதியின் வெட்டுக்களின் தாக்கம் குறித்து அந்த அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது. 'நிதிப் பற்றாக்குறை அதிக பின்தங்கிய பகுதிகளில் அதிகமாக இருந்தது மற்றும் இந்தப் பகுதிகளில் ஆயுள் எதிர்பார்ப்பில் மிக மோசமான மாற்றங்கள் இருந்தன.'

2013 மற்றும் 2017 க்கு இடையில் ஒவ்வொரு 100 பவுண்டுகள் தனிநபர் நிதியில் குறைப்பு பிறப்பில் சராசரி ஆயுட்காலத்தில் 1.3 மாத குறைவுடன் தொடர்புடையது. வெட்டுக்கள் இங்கிலாந்தில் 75 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 10,000 கூடுதல் இறப்புகளுடன் தொடர்புடையது. ஆயுட்காலத்தின் பாதகமான போக்குகள் 2011 க்கு முந்தைய தசாப்தத்தில் 'மிகவும் பின்தங்கிய பகுதிகளை விகிதாசாரத்திற்கு பொருத்தற்ற விதத்தில் பாதித்ததுடன், மேம்பாடுகளை பின்னோக்கி மாற்றியமைத்தன'.

இந்த கண்டுபிடிப்புகள் Health Equity அமைப்பின் பிப்ரவரி 2020 அறிக்கையில், 'இங்கிலாந்தில் சுகாதார நடுநிலை: 10 வருடங்கள் பாரிய மீள்பார்வை' இன் அறிக்கையில் எதிரொலிக்கிறது. 2011 ஆம் ஆண்டிலிருந்து, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இங்கிலாந்தில் ஆயுட்காலம் குறைந்தது முதல் தடவையாக இருப்பதை அது கண்டறிந்தது.

அந்த அறிக்கை விளக்குகிறது, 'குறைந்த கவனிப்பற்றவர்களுக்கும் மற்றும் மிகவும் அதிகமாக கவனிப்பற்றவர்களுக்கும் இடையே ஆண்களுக்கு 9.5 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 7.7 ஆண்டுகள் என இருந்தது ... 2010-12-இல், அதனுடன் தொடர்புடைய வேறுபாடுகள் முறையே 9.1 மற்றும் 6.8 ஆண்டுகள்' ஆக இருந்தன

நல்ல ஆரோக்கியத்தில் பல வருடங்களாக வர்க்கப் பிளவு மிகவும் மோசமடைந்துள்ளது. Kings Fund இந்த ஏப்ரல் மாதத்தில் எழுதியது, “கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஆயுள் எதிர்பார்ப்பில் உள்ள இடைவெளியை விட ஆரோக்கியமான வாழ்க்கை எதிர்பார்ப்பில் பணக்கார-ஏழை இடைவெளி இன்னும் அதிகமாக உள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை மோசமான ஆரோக்கியத்துடன் செலவிடுகிறார்கள், ஒப்பிடும்போது குறைந்த பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு அது ஆறில் ஒரு பங்கு மட்டுமே. ”

கோவிட்-19 இந்த ஏற்றத்தாழ்வுகளை பெரிதும் தீவிரப்படுத்தியுள்ளது. Kings Fund எழுதுகிறது, “கடந்த தசாப்தத்தில் இங்கிலாந்தில் ஆயுட்கால போக்கில் இரண்டு திருப்புமுனைகள் இருந்தன. 2011 முதல் ஆயுட்காலம் அதிகரிப்பது பல தசாப்தங்களாக நிலையான முன்னேற்றத்திற்குப் பின்னர் குறைந்துவிட்டது. இது அதற்கான காரணங்கள் பற்றி அதிக விவாதத்தை தூண்டியது. பின்னர் 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய் மிகவும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இருந்தது. இதன் விளைவாக ஆயுட்காலம் கூர்மையான வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அளவு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணப்படவில்லை.”

ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆண்களின் ஆயுட்காலம் 78.7 வருடங்களாகவும், பெண்களின் ஆயுட்காலம் 82.7 வருடங்களாகவும் வீழ்ச்சியடைந்துவிட்டது. கோவிட் காரணமாக இறந்தவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு தசாப்த வாழ்க்கையை இழந்தனர்.

பற்றாக்குறை மற்றும் கோவிட்-19 இறப்பு விகிதங்களுக்கிடையேயான நெருங்கிய தொடர்பை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது பொதுவாக ஏழை இன சிறுபான்மையினரின் விகிதாசாரமற்ற தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சுகாதார அறக்கட்டளையின் ஜூலை அறிக்கை, கோவிட்-19 இனால் இறக்கும் 65 வயதுக்குட்பட்ட, உழைக்கும் வயது மக்களிடையே சமூக வர்க்கத்திற்கும் இறப்பதற்கான வாய்ப்பிற்கும் இடையிலான தொடர்பு இன்னும் வலுவானது என்பதைக் காட்டுகிறது.

இந்த குழுவில், குறைந்த பின்தங்கிய பகுதிகளில் கோவிட்-19 இறப்பு விகிதம் இங்கிலாந்தில் மிகவும் கூடுதலாக பின்தங்கிய பகுதிகளில் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக காணப்பட்டது. மிகவும் பின்தங்கிய பத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளவர்கள், பத்தில் முதலாவது இடத்தில் உள்ள பணக்காரர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இறக்க வாய்ப்புள்ளது.

இந்த மக்கள்தொகையில் இறப்பு விகிதங்கள் வைரஸின் இரண்டாவது அலையில் முதலில் இருந்ததை விட அதிகமாக இருந்தன மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமாக இருந்தது. ஏனெனில் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் ஜோன்சன் அரசாங்கத்தின் 'மீண்டும் வேலைக்கு திரும்பு' கொள்கை மில்லியன் கணக்கானவர்களை கட்டாயப்படுத்தி மக்கள் பொதுப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பற்ற பணியிடங்களுக்குத் திரும்பி அதற்கான விளைவைப் பெறசெய்தது.

தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடியுடன் தொற்றுநோயின் விளைவுகளும் இணைந்து நீண்ட காலம் நீடிக்கும்.

கோவிட்-19 உலக அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. கோவிட் நோய்த்தொற்றின் நீண்டகால சுகாதார விளைவுகள் ஏற்கனவே இங்கிலாந்தில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கின்றன. தேசிய சுகாதார சேவைக்கு காத்திருப்போர் பட்டியல் சாதனை அளவில் உள்ளது. Lancet ஆய்வில் ஆயுட்காலம் தடைப்படுவதற்கான இயக்கி என அடையாளம் காணப்பட்ட வரவு-செலவுத் திட்ட செலவுகளை உள்ளூராட்சி அரசாங்கங்கள் குறைப்பது தொற்றுநோயால் அதிகளவில் நிதிரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பல பில்லியன்கள் பெருநிறுவனங்களுக்கு கையளிக்கப்பட்ட செலவுகளை ஈடுசெய்ய ஒரு மோசமான சமூக எதிர்-புரட்சி தயாராகிறது.

இந்த ஆபத்துகளை எதிர்கொள்வது என்பது வர்க்க சமுதாயத்தில் அவற்றின் தோற்றத்தையும், பெரும் பணக்காரர்களால் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக நடத்தப்படும் போரையும் புரிந்துகொள்வதாகும். தன்னலக்குழுவின் ஊழல்மிக்க முறையில் ஈட்டிக்கொண்ட செல்வங்களை கைப்பற்றுவதற்கும் சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வளங்களை கிடைக்கச் செய்வதற்கும் ஒரு எதிர் தாக்குதல் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கு இன அடிப்படையிலான அரசியலை நிராகரிக்க வேண்டும். இது தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் பிரிப்பதுடன், மில்லியன் கணக்கானோர் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிக்கு எந்த முற்போக்கான தீர்வையும் வழங்காது.

Loading