ஆப்கான் வெளியேற்றக் கொள்கை குறித்து நெருக்கடியில் உள்ள பைடெனும், ஐரோப்பிய சக்திகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை விரிவுபடுத்தி, ஆப்கானிஸ்தான் தலைநகரிலிருந்து நீண்ட மற்றும் மிகப் பரந்த வெளியேற்றத்தை வழங்க பைடென் நிர்வாகத்திற்கு அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குள்ளும், மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளிடமிருந்தும், அதிலும் குறிப்பாக பிரிட்டனிலிருந்து அதிகரித்தளவிலான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை, நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளின் தலைவர்களின் கூட்டம் தான் தாலிபான் தாக்குதலில் வெறும் 11 நாட்களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ ஆதரவு கைப்பாவை ஆட்சி வீழ்ச்சியடைந்தது குறித்து உலக அரங்கில் முதல் முறையாக பைடென் பேசவுள்ள நிகழ்ச்சியாகும்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஜி-7 கூட்டத்திற்கான சுழற்சி முறை தலைவராக இருப்பார் என்பதுடன், கூட்டத்தின் பெயரளவிலான தொகுப்பாளராகவும் இருப்பார். அண்ணளவாக 6,000 அமெரிக்க துருப்புக்களின் பிரசன்னத்தைச் சார்ந்துள்ள காபூல் விமான நிலையத்தை ஆக்கிரமிக்க பிரிட்டிஷ் அதிகாரிகள் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்துள்ளனர்.

இந்த ஆகஸ்ட் 22, 2021 இல், ஆப்கானிஸ்தானில், காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு வெளியேற்றத்தின் போது காணப்படும் அமெரிக்க சேவை உறுப்பினர்கள். (Staff Sgt. Victor Mancilla/U.S. Marine Corps via AP)

காபூலில் இருந்து கிளம்புவதற்கு “சில மணி நேரங்கள் இருக்கலாம், வாரங்கள் அல்ல” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார், இங்கிருந்து தோராயமாக 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், இவர்களில் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் இராஜதந்திரிகள் மற்றும் பிற பணியாளர்கள், மற்றும் இவர்களது செயல்பாடுகளை எளிதாக்கிய மொழி பெயர்ப்பாளர்கள், எழுத்தர்கள் மற்றும் சேவை பணியாளர்கள், ஓட்டுநர்கள், மெய்க்காப்பாளர்கள், உளவாளிகள், தகவல் அளிப்பவர்கள் மற்றும் பலர் உட்பட ஏராளமான ஆப்கானியர்கள் அடங்குவர்.

முழு அமெரிக்க வெளியேற்றத்திற்குப் பின்னர் பிரிட்டிஷ் படைகள் அல்லது ஏனைய நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இருக்க முடியும் என்ற கூற்றுக்களை வாலஸ் நிராகரித்தார். “அமெரிக்காவிற்குப் பின்னர் வேறு எந்த நாட்டவரும் இங்கு தங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 31 அன்று படைகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தால் அது தாலிபான்களுடன் மோதல் ஏற்பட வழிவகுக்கும், ஏனென்றால் அத்தகைய முடிவிற்கு “அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன” என்று பிரிட்டிஷ் ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி (James Heappey) ஒப்புக்கொண்டார். “இது தான் யதார்த்தம்,” என்று அவர் கூறினார். “நாம் அவர்களுக்கு வாக்களிக்க மறுக்கலாம்; ஆனால் வலுக்கட்டாயமாக அங்கேயே தங்குவதற்கு போதுமான இராணுவ பலம் நம்மிடம் உள்ளது,” என்றாலும் “காபூல் ஒரு போர் மண்டலமாக மாறியுள்ள நிலையில்” வெறியேற்றும் விமானங்கள் தொடர்ந்து செயல்பட முடியாது என்றும் சேர்த்துக் கூறினார்.

ஞாயிறு காலை தொலைக்காட்சியில் பேசுகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய மூலோபாய போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யா உடனான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தொடர்ந்து கவனம் செலுத்த ஏதுவாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முடிவை பைடென் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் பெய்ஜிங்கில் இருந்தாலும் அல்லது மாஸ்கோவில் இருந்தாலும், நாங்கள் வெளியேறுவது குறித்து நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா?” என்று அவர் கேட்டார், பின்னர் கேலியாக சிரித்தார். “மேலும் அங்கு என்ன நடந்தாலும் தொடர்ந்து முழுமையாக ஆக்கிரமித்து அங்கேயே சிக்கி இருக்கும் அளவிற்கு அவர்கள் எங்களுக்கு சிறப்பாக எதையும் செய்யவில்லை” என்றும் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க துருப்புக்களை இறுதியாக திரும்பப் பெறுவதற்கு பைடென் முதலில் ஒப்புதல் அளித்ததிலிருந்து அவரது நிலையான கருத்தாகவுள்ள இந்த குறிப்பு, “முடிவற்ற போர்களுக்கு” இருக்கும் பரந்த மக்கள் எதிர்ப்புக்கு பதிலிறுப்பாக அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் மிக சக்திவாய்ந்த அணுவாயுத போட்டியாளர்களுடனான உலகளாவிய மூலோபாய மோதல் போன்ற மனித நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய போர் அபாயத்தை கொண்டுள்ள ஒரு போக்கையே தொடர்கிறது. மத்திய ஆசியாவில் இருந்து கடைசி அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வந்த குறிப்பிட்ட நேரத்தில், அமெரிக்க கடற்படை தென் சீனக் கடல் மற்றும் தைவான் ஜலசந்தியில் சீனாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தது, மேலும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளபதிகள் அரை டஜன் ஆண்டுகளுக்குள் சீனா உடனான போருக்கு முன்னறிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் அதன் கைப்பாவை ஆட்சியின் விரைவான வீழ்ச்சியின் சிதறடிக்கும் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் பொருளாதார வலிமையின் பரந்த வீழ்ச்சியை ஈடுசெய்யவும், மற்றும் அதன் உலகளாவிய ஆதிக்க நிலையை நிலைநாட்டவும் என, எந்த நாட்டினதையும் விட மிகுந்த சக்திவாய்ந்த அதன் பாரிய இராணுவ இயந்திரத்தை பயன்படுத்துவதில் இன்னும் உறுதியாக உள்ளது.

அந்த போர்க்குணம் ஜி-7 உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது, அப்போது அமெரிக்க ஜனாதிபதி அவரது ஐரோப்பிய கூட்டாளிகளால், குறிப்பாக பிரிட்டிஷால் காபூலில் இன்னும் சிறிது காலம் அமெரிக்க தலையீடு நீடிக்க வலியுறுத்தப்படுவார். இதுபோன்ற வேண்டுகோளுக்கு அவரது பதில் என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, அதற்கு பைடென், “நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம் என்று நான் அவர்களிடம் சொல்வேன்,” என்று கூறி நிராகரித்தார்.

பிரிட்டிஷ் ஆயுதப்படை அமைச்சர் குறிப்பிட்டது போல, அது தாலிபான்களையும் சார்ந்தது. காபூல் விமான நிலையத்தில் இஸ்லாமியக் குழு அமெரிக்க இராணுவத்துடன் தினமும் விவாதித்து வருவதாக பைடென் குறிப்பிட்டார், மேலும் பென்டகன் அதிகாரிகள் இத்தகைய பேச்சுவார்த்தைகள் “ஒரு நாளில் பல முறை” நடக்கின்றன என்று திங்களன்று தெரிவித்தனர்.

தாலிபான்கள், மிகப்பெரிய அமெரிக்க போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட குறைந்தது இரண்டு சம்பவங்கள் உட்பட, விமான நிலையத்தில் அமெரிக்க மற்றும் நேட்டோ நடவடிக்கைகளுக்கு எதிராகவோ, அல்லது தலைநகரமான காபூலுக்குள் ஊடுருவி அமெரிக்க மற்றும் ஏனைய வெளிநாட்டு குடியிருப்பாளர்களின் குறிப்பிட்ட குழுக்களை அகற்றவோ இராணுவ எதிர்ப்பில் ஈடுபடவில்லை.

அமெரிக்க படைகள் விமான நிலையத்தின் சுவர்களுக்கு வெளியே, அதைச் சுற்றி “சுற்றளவை விரிவாக்க” தரையில் நகர முடிந்தது, இருப்பினும் எந்த விவரத்தையும் அவர்கள் கொடுக்க மறுத்தனர் என்று பைடெனும் பென்டகன் அதிகாரிகளும் தெரிவித்தனர். பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, ரோந்துப் பணியில் அமெரிக்க சிப்பாய்களுடன் தாலிபான் போராளிகளும் “ஒரு பக்கம்” இணைந்திருந்ததை திட்டவட்டமாக மறுத்தார்.

CBS இன் “Face the Nation” நிகழ்ச்சியில் வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken) ஞாயிறன்று தோன்றுகையில், “ஆகவே, அமெரிக்க குடிமக்கள் வெளியேற தாலிபான்களிடம் அனுமதி கேட்க வேண்டும். இது உண்மையா இல்லையா?” என்று கேலியாக கேட்கப்பட்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தோல்வியின் அளவை உறுதிப்படுத்தும் வகையில், “அவர்கள் காபூலில் கட்டுப்பாட்டில் உள்ளனர். அதுதான் யதார்த்தம். அதுதான் நாம் சமாளிக்க வேண்டிய உண்மையும் கூட” என்று பிளிங்கன் பதிலிறுத்தார்.

இதற்கிடையில், அங்கு அமெரிக்க துருப்புக்களை இன்னும் தீவிரமாக நிலைநிறுத்த வேண்டுமென குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவினர் விடுக்கும் கோரிக்கைகளுடன் இணைந்ததாக, காபூல் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிலவும் ஆப்கானிஸ்தான் பொதுமக்களின் அவலநிலை குறித்து பெருநிறுவன ஊடகங்களில் பிரச்சாரம் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகள், விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலைமைகளின் கொடூரமான காட்சிகளை காட்டியதுடன், பைடெனின் படைகளை திரும்பப் பெறும் முடிவை ஓரளவு அல்லது முழுவதுமாக மாற்றியமைக்க வலதுசாரி விமர்சகர்கள் கோருவது பற்றியும் கூறின.

இது, பிரதிநிதி லிஸ் செனி (Liz Cheney) உம், புஷ் நிர்வாகத்தில் துணை ஜனாதிபதியாக அவரது தந்தையும், ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி அதனை ஆக்கிரமிப்பதற்கு எடுக்கப்பட்ட அசல் முடிவில் பெரும் பங்கு வகித்ததை உள்ளடக்கியது. மேலும், ஆப்கானிஸ்தான் போரின் ஒரு மூத்த படை வீரரான இல்லினாய்ஸின் பிரதிநிதி ஆதம் கின்ஸிங்கர் (Adam Kinzinger); மற்றொரு முன்னாள் இராணுவ அதிகாரியான அயோவா செனட்டர் ஜோனி எர்ன்ஸ்ட் (Joni Ernst); நெப்ராஸ்கா செனட்டர் பென் சாஸ்ஸே (Ben Sasse); மற்றும் முன்னாள் ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி (Nikki Haley) ஆகியோரும் நிகழ்ச்சிகளில் தோன்றியவர்களாவர்.

பெருநிறுவன ஊடகங்களில் எப்போதும் நடப்பது போல, ஆப்கானிஸ்தான் போரை எதிர்க்கும் 70 சதவீதத்திற்கு அதிகமான அமெரிக்கர்களின் சார்பாக ஒரு பிரதிநிதியையோ – செனட்டில் இருந்தபோது பைடென் இதற்கு வாக்களித்தார் – அல்லது நூறாயிரக்கணக்கான ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டதான அதன் 20 ஆண்டு கால இராணுவ ஆக்கிரமிப்பை போர் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து விமர்சித்த ஒருவரையோ கூட காட்டவில்லை.

“மிதவாதி” எனக் கூறப்படும் செனட்டர் சஸ்ஸே இன் கருத்துக்கள், கேபிடோல் மீதான ஜனவரி 6 தாக்குதல் குறித்து டொனால்ட் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்று வாக்களித்ததால், குறிப்பாக வெளிப்படுகிறது. ஞாயிறன்று Fox News இல் பேசுகையில், ஆகஸ்ட் 31 காலக்கெடுவை இரத்து செய்து, இராணுவத்தின் சுற்றளவை “கர்சாய் விமான நிலையத்திற்கு அப்பால்” விஸ்தரிக்க அழுத்தம் கொடுத்து இன்னும் அதிக படைகளை ஆப்கானுக்கு அனுப்பவும், மேலும் காபூலுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய இராணுவ விமானப்படை தளமான “பாக்ராமை நாம் திரும்ப கைப்பற்ற வேண்டுமா என்பதை தீர்மானிப்பது” தொடர்புபட்ட உடனடி பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார், இது கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் தற்போது தாலிபான்கள் வசம் உள்ளது.

“அவர்கள் அமெரிக்க வரலாற்றில் முட்டாள்தனமான இராணுவத் தவறுகளில் ஒன்றாக பாக்ராம் விமானப்படை தளத்தை கைவிட்டனர்,” என்ற நிலையில், “தற்போது நாம் ஒரேயொரு ஓடுபாதையைக் கொண்ட கர்சாய் பொது விமான நிலையத்தை நம்பியிருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம். அதாவது, ஒரு RPG … அந்த ஓடுபாதையில் ஒரு விமானத்தை தரையிறக்கியதால் நாம் சிக்கித் தவிக்கிறோம் என்பதால், ஜனாதிபதி நமக்கு ஏற்படுத்தியுள்ள ஆபத்தை அமெரிக்க மக்கள் முழுமையாக பாராட்டவில்லை என்றே நான் நினைக்கிறேன். எனவே, நாம் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த பிணைக்கைதி நிலைமையில் தொடர்ந்து நாம் நீடிக்க மாட்டோம் என்பதை தாலிபான்கள் அறிவார்கள் என்பதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும்” என்று சஸ்ஸே தொடர்ந்து கூறினார்.

திங்கட்கிழமை அதிகாலையில் அமெரிக்க இராணுவத்திற்காக வேலை செய்யும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் அநாமதேய தாக்குதல்காரர்களுக்கும் இடையே திடீரென வெடித்த துப்பாக்கிச் சண்டை விமான நிலையத்தின் ஆபத்தான நிலைமையை அடிக்கோடிட்டுக் காட்டியது. ஜேர்மன் மற்றும் அமெரிக்க இராணுவப் படைகள் தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவந்தன, என்றாலும் இதில் ஒரு ஆப்கான் காவலர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் இராணுவ புலனாய்வு எந்திரத்திற்குள் உருவெடுத்த கசப்பான குற்றச்சாட்டுக்களுக்கு “தாலிபான் கால அட்டவணைக்கு ஆட்டம் காட்டுதல்” என்ற தலைப்பிலான திங்கட்கிழமை தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குரல் கொடுத்தது. காபூல் தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் யதார்த்தம் பற்றிய பிளிங்கனின் கருத்துகளை அது மேற்கோள் காட்டியதுடன், “என்றாலும் இது அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை அல்ல. தாலிபான்களுக்கு சிறந்த விதிமுறைகளை ஆணையிட அமெரிக்க இராணுவம் போதுமான படை பலத்தை கொண்டுள்ளது…” என்று அறிவித்தது.

Loading