முன்னோக்கு

புத்தாண்டு அறிக்கை

2022: பெருந்தொற்றின் மூன்றாம் ஆண்டும் எழுச்சியுறும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1. புத்தாண்டு தொடங்கும் வேளையில், கோவிட்—19 பெருந்தொற்று அதன் மிக ஆபத்தான மற்றும் மரணகரமான கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. முதன்முதலில் 2021 நவம்பரில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் வகை இப்போது உலகளாவிய மேலாதிக்க வகையாக இருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுமையும் அசாதாரண வேகத்தில் பரவிக் கொண்டிருக்கும் இது அன்றாட புதிய தொற்று எண்ணிக்கைகளை முன்னொருபோதுமில்லாதளவு மிகப்பெரும் உச்சங்களுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் கடைசி வாரத்தில், அமெரிக்காவில் தினசரி தொற்று எண்ணிக்கை 500,000 ஐ நெருங்கி வருகின்றது.

2. உலகளாவிய பெருந்தொற்று வரலாற்றுப் பரிமாணங்கள் மிக்க ஒரு பேரழிவாகி இருக்கிறது. இந்த பெருந்தொற்றின் அழிவுகரமான பாதிப்பானது, திட்டமிட்டு, உயிர்களை விடவும் இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், SARS—CoV—2 ஐ ஒழிப்பதற்கு அவசியமான பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை நிராகரிக்கவும், அதற்குப் பதிலாக உலக மக்கள்தொகை முழுமைக்கும் காட்டுத்தீ போல் இந்த வைரஸ் பரவுவதற்கு அனுமதிக்கும் விதமான கொள்கைகளை பின்பற்றவும் முதலாளித்துவ அரசாங்கங்கள் —முதலும் முதன்மையுமாய் அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும்— மேற்கொண்ட முடிவுகளின் விளைபொருளாய் இருந்தது என்பதால் இது ஒரு குற்றமும் ஆகும்.

3. 2020 முழுமையிலும் அத்துடன் 2021 இன் பகுதியிலும் கூட, தடுப்பூசி போடுதல் மற்றும் ஒரு பலதரப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒரு கலவையைக் கொண்டு வணிகங்களுக்கு சார்பான ஒரு அடிப்படையில் இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு விட முடியும் என்பதான பாவனையை அரசாங்கங்களும் ஊடகங்களும் பராமரித்து வந்தன. இந்த அணுகுமுறையானது பள்ளிகள் பாதுகாப்பான முறையில் மீண்டும் திறக்கப்படுவதற்கும் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைத் தொடர்வதற்கும் அனுமதிக்கும் என்பதாகக் கூறின. இந்த கூற்றுகள் ஆரம்பத்திலிருந்தே, SARS—CoV—2 ஆனது பல மணி நேரம் காற்றில் தொடர்ந்து இருக்கத்தக்க ஏரோசால்கள் என்ற நுண்ணிய நீர்த்துகள்கள் மூலமாகவே பிரதானமாய் பரவுகிறது என்று ஸ்தாபித்திருந்த விஞ்ஞானத்தை திட்டமிட்டு ஒடுக்கி வைப்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இவ்வாறாக, மிகப் பெரும்பான்மையான பள்ளிகள் மற்றும் வேலையிடங்கள் உள்ளிட, முறையான வடிகட்டல் ஏற்பாடும் காற்றோட்ட ஏற்பாடும் இல்லாத உள்ளரங்க வெளிகள் வைரஸ் பரவலுக்கான பிரதான மையங்களாக ஆகியிருக்கின்றன. தடுப்பூசிகள் அத்தனை நாடுகளுக்கும் தடையின்றி கிடைக்கத்தக்க வகையில் ஒரு உலகளாவிய மூலோபாயமும் பயனுடைய வேலைத்திட்டங்களும் இல்லாதிருப்பதை நியாயப்படுத்துகிற விதத்தில், தேசியளவிலான முன்முயற்சிகளின் அடிப்படையில் இந்த பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட முடியும் என்று கூறப்பட்டது இன்னும் அடிப்படைப் பொய்யாக இருந்தது. ஆனால் அத்தனை பொய்களும் மற்றும் பொய்யான மூலோபாயங்களும் ஒமிக்ரான் வகையின் வெடிப்பால் முற்றிலுமாக தகர்த்தெறியப்பட்டுள்ளன.

4. அரசாங்கங்கள் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதில் தான் முழுக்கவனத்தையும் குவித்துள்ளன என்பதான பாவனை முற்றிலுமாய் உருக்குலைந்தது தான் ஒமிக்ரானுக்குக் கிட்டிய பதிலிறுப்பாய் உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவினால் முன்னிலை கொடுக்கப்பட்டு, உலகெங்கிலும் அநேக அரசாங்கங்களால் வெளிப்படையாகப் பின்பற்றப்படுகிற மூலோபாயமாக இருப்பது “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்” என்பதாகும். இதுவரை அறியப்படாத ஏதோவொரு புள்ளியில், வைரஸ், எளிதாகத் தாக்கக் கூடிய மனிதர்களை இனி காண முடியாத அளவுக்கு அநேக மக்களுக்கு அது ஏற்கனவே தொற்றிச் சென்றிருக்கும் என்பது தான் இந்த குற்றவியல் கொள்கையின் கீழமைந்த கருத்தாக்கமாக இருக்கிறது. ஜனவரி 3 அன்று ஃபைனான்சியல் டைம்ஸ் தலையங்கத்தில் கூறப்பட்டதைப் போல, “வைரஸுக்கும் மனித நோயெதிர்ப்பு சக்தி அமைப்புக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் என்பதன் அர்த்தம் தடுப்பூசி அல்லது நோய்த்தொற்றின் மூலமாக கடுமையான கோவிட் அறிகுறிகளுக்கு எதிராக அதிக மக்கள் சற்று பாதுகாப்பைப் பெறுவதற்கான நிலைமையை சிறப்பானதாக்கும் என்கின்ற முடிவுக்கு வருவது நியாயமானதாகவே தெரிகிறது.”

5. தொற்றுநோயை ஒழிப்பதன் சாத்தியம் குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ் பரிசீலிக்கவும் கூட இல்லை என்பது பெரிதும் குறிப்பிடத்தக்கதாகும். “கோவிட்—19 ஐ ஒழிப்பதற்கு 2020 இன் தொடக்கத்தில் நமக்கிருந்திருக்கக் கூடிய குறைந்தளவான வாய்ப்பும் நீண்டநாட்களுக்கு முன்பே போய்விட்டது” என்று அது திட்டவட்டம் செய்கிறது. “பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு உலகளாவிய சுகாதார அவசரகால நிலைமைக்குள் நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்றாலும் அவை காலவரையற்று தொடர்ந்து செல்ல முடியாது. மன ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும், சமூக இணக்கத்திற்கும் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திற்குமான கூட்டுத்தாக்கம் மிகப் பெரியவையாக இருக்கும்.”

6. இந்த வசனத்தின் முக்கியத்துவம் தெளிவாய் இருக்கிறது: SARS—CoV—2 ஒரு தொற்று நோயாக பல ஆண்டுகளுக்கு இருக்கும், ஏன் தசாப்தங்களுக்கும் கூட இருக்கும். பாதிப்பிலும் மனித உயிர்களிலும் என்னென்ன பின்விளைவுகள் நேர இருக்கின்றன? பெருநிறுவன—நிதிச் சிலவராட்சியினருக்கும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கங்களுக்கும் சிறிதும் அக்கறையில்லை. வெறுக்கத்தக்க ஒரு சமூகவிரோத மனோநிலை முதலாளித்துவ வர்க்கத்தினுள் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது. அது உயிரிழப்பு எண்ணிக்கையில் அல்ல மாறாக பங்குச் சந்தை மதிப்புகளின் மீது தான் கவனம் குவிக்கிறது.

7. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னரான ஆண்டுகளை சார்லஸ் டிக்கன்ஸ் “மிகச்சிறந்த காலம்” மற்றும் “படுமோசமான காலம்” என்று பிரபலமான விதத்தில் விவரித்தார். இந்த வார்த்தைகள் இன்றைய யதார்த்தத்திற்கு எத்தனை நன்றாகப் பொருந்துகின்றன. முதலாளித்துவ வர்க்கத்திற்கு, இந்த பெருந்தொற்றின் ஆண்டுகள் ஒரு வரத்திற்குக் குறைவில்லாத ஒன்றாய் இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தைமதிப்பு 125 சதவீதம் அதிகரித்து 3.0 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அளவை எட்டியிருக்கிறது. மைக்ரோசாப்டின் சந்தை மதிப்பு 110 சதவீதம் அதிகரித்து 2.5 டிரில்லியன் டாலர்கள் ஆகியிருக்கிறது. ஆல்பபெட் நிறுவனத்தின் சந்தைமதிப்பு 108 சதவீதம் உயர்ந்து 1.9 டிரில்லியன் டாலர்களாகி இருக்கிறது. சமூகவிரோதப் பண்புடைய எலான் மஸ்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1,311 சதவீதம் அதிகரித்து 1.1 டிரில்லியன் டாலர்களாகி இருக்கிறது. வசதியான மேலிருக்கும் 5 சதவீதத்தினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மிக வசதியான பிரிவுகளின் மொத்த செல்வத்தின் அளவு அதிகரித்திருக்கிறது.

8. ஆனால் சமூகத்தின் மிகப்பெரும்பான்மையான பரந்த மக்களோ “படுமோசமான காலத்தில்” வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பெருந்தொற்று தொடங்கிய இரண்டாண்டு காலத்தில், 5.5 மில்லியன் பேர் இறந்திருப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 840,000 க்கும் அதிகமான எண்ணிக்கையும் இதில் அடங்கும். எனினும் பெருந்தொற்று இல்லாதிருந்தால் ஏற்பட்டிருக்கத்தக்க மரணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு கணக்கிட்ட “கூடுதல் மரணங்கள்” சகிதமான உண்மையான மரணங்களின் எண்ணிக்கை 18 மில்லியனுக்கும் அதிகமாயிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஆக, 2020 ஜனவரி முதலான வெறும் இரண்டு ஆண்டுகளில் பெருந்தொற்றினால் விளைந்திருக்கக் கூடிய மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது முதலாம் உலகப் போரின் நான்காண்டு காலத்தில் (1914—1918) ஏற்பட்ட சுமார் 20 மில்லியன் இராணுவ மற்றும் சாதாரண மக்கள் மரணங்களின் எண்ணிக்கையை அண்மித்துவருகின்றது.

9. பயங்கரமானதாக இருக்கும் இந்த மரணங்களது எண்ணிக்கையும் கூட பெருந்தொற்றின் அழிவுகரமான பாதிப்பினை முழுமையாக அளவிடப் போதுமானதாயில்லை. SARS—CoV—2 தொற்றுவோரில் ஒரு பெரும் சதவீதத்திலானோர் நீண்டகால கோவிட் (Long COVID) பாதிப்பினால் பீடிக்கப்படுகின்றனர். இது பல அங்க அமைப்புமுறைகளைப் பாதிப்பதுடன் பல தரப்பான பலவீனப்படுத்துகின்ற, உடல்ரீதியாக வலியளிக்கின்ற, மற்றும் உணர்வுரீதியாக வடு ஏற்படுத்துகின்ற விளைவுகளைக் கொடுக்கிறது. 2021 ஜூலையில் EClinicalMedicine வலைத் தளத்தில் பதிவிட்ட ஒரு அறிக்கையின் படி, அது மேற்கொண்ட ஆய்வில் பங்குபெற்ற பெரும்பான்மையானோருக்கு நீண்டகால கோவிட்டில் இருந்து மீள 35 வாரங்களுக்கும் அதிகமான காலம் (கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள்) பிடித்தது.

10. இந்த நிலை தவிர்க்கமுடியாததாக இருந்திருக்கவில்லை. 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனாவிலான அனுபவம், “பூச்சிய கோவிட்” (Zero COVID) கொள்கை சாத்தியமானதே என்பதுடன் மிகவும் பலன் தரக் கூடியதுமாகும் என்பதை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது. இந்தக் கொள்கையை அமுல்படுத்தலின் மூலம் மரணங்களை 5,000 க்குக் கீழான எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது, 2020 மே மாதத்திற்குப் பின்னர் வெறும் இரண்டு மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.

11. வைரஸை ஒழிப்பதற்கான தெரிவை நிராகரித்து விட்டு, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள ஊடகங்கள் சீனாவின் கொள்கையை நோய்க்கான ஒரு கொடுமையான பதிலிறுப்பாக, இன்னும் விநோதமான பதிலிறுப்பாகவும் கூட, சித்தரிக்கின்றன. சீனாவின் அரசாங்கம் நிச்சயமாக “எதேச்சாதிகார” தன்மையுடையதே. ஆனால் பெருந்தொற்றுக்கு பரந்த மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு சரியான பதிலிறுப்பை மதிப்பிழக்கச் செய்யும் நோக்கத்துடன் விஷமமான விதத்தில் இந்தப் பதம் பிரயோகிக்கப்படுகிறது. சொல்லப் போனால், இலக்குவைத்த கடையடைப்புகள், பாரிய எண்ணிக்கையிலான பரிசோதிப்புகள் மற்றும் தொடர்புகளின் தடமறிதல் மற்றும் தொற்று பாதித்த மனிதர்களைத் தனிமைப்படுத்துதல் உள்ளிட பல நூற்றாண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த அடிப்படை பொதுச் சுகாதார நடவடிக்கைகளைப் பயன்படுத்தி சீனா இதுவரைக்கும் இந்த வைரஸை திறம்பட கட்டுப்படுத்த இயலுமானதாக இருந்திருக்கிறது.

12. உதாரணமாக, நோய் தொற்றுவதை நிறுத்த தனிமைப்படுத்தும் முறை பயன்படுத்துவதென்பது, 14 ஆம் நூற்றாண்டின் வெனிஸில் கறுப்பு மரணத்தின் சகாப்த காலம் வரை பின்செல்லக் கூடிய நோய்த் தடுப்பு முறையாக உள்ளது. நோய் தொற்றியோரை தனிமைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிற நவீன கால வழிவகைகள் 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆரம்பகால நிலைமைகளில் சாத்தியமானதை விடவும் அதிநவீனமானவையும் மனிதநேயமிக்கவையாகவும் இருக்கின்றன என்பது உண்மையே. எனினும் மத்தியகால ஐரோப்பாவில் கூட, மரணமென்பது ஒரு நோயின் ஆகமோசமான விளைமுடிவாக, சாத்தியமானால் எப்பாடுபட்டேனும் தடுக்க வேண்டியதாகவே பார்க்கப்பட்டது. பின் ஏன் 21 ஆவது நூற்றாண்டில், மிக முன்னேறிய தொழில்நுட்பங்களை தமது கைவசம் கொண்டுள்ள நாடுகள் பணத்தை இழப்பதைக் காட்டிலும் உயிரை இழப்பது சிறந்து என்ற கண்ணோட்டத்தை ஒரு கொள்கையாக முடிவுசெய்கின்றன? இப்போதிருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களால் SARS—CoV—2 பரவலைத் தடுத்துநிறுத்தி பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருகிற நடவடிக்கைகளை திட்டமிட்டு நிராகரித்து, பின்பற்றப்படுகிற மூர்க்கத்தனமான “சமூக நோயெதிர்ப்புசக்தி பெருக்க” பதிலிறுப்பானது ஒரு படுபயங்கரமான சமூக மற்றும் தார்மீக பிற்போக்குத்தனத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.

13. வரலாற்றில் தேவையானது “விபத்துகளின் இயற்கைத் தெரிவின் மூலமாகவே உணரப்படுகிறது” என்று ட்ரொட்ஸ்கி ஒருமுறை கூறினார். ஒரு குறிப்பிட்ட வவ்வால் வைரஸ் வூஹானின் ஈரமிக்க சந்தை ஒன்றில் மனிதர்களுக்குத் தொற்றி தொற்றுநோயாக விளைந்தது ஒரு விபத்தாக இருந்தது. ஆனால் சமூக, பொருளாதார மற்றும் சூழல் நிலைமைகளது ஒரு சிக்கலான பரிவர்த்தனையில் வேரூன்றியிருந்த அப்படியானதொரு விபத்து நிகழ்வதற்கான சாத்தியம் முன்னெதிர்பார்த்திருந்த ஒன்றாகவே இருந்திருந்தது. இந்த வரலாற்று அர்த்தத்தில், வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவிய நிகழ்வானது “நடக்கவிருந்த ஒரு விபத்தாக”வே இருந்தது. அதைப் போன்றே, அத்தகையதொரு நிகழ்வுக்கென பிரயோசனமான தயாரிப்பு எதுவும் முக்கிய முதலாளித்துவ நாடுகளிடம் இல்லாதிருந்தமையும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நாசகரமான முடிவுகளின் வரிசையும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியாக காலாவதியாகிப் போன கட்டமைப்புகளாலும் அதன் ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான சமூக மற்றும் பொருளாதார நலன்களாலும் தீர்மானிக்கப்பட்டவையாக இருந்தன.

வரலாற்றில் பொதுச் சுகாதாரமும் சமூக முன்னேற்றமும்

14. பொதுச் சுகாதாரத்தின் நிலை என்பது, சமூக முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த நிலையின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றாகும். மறைந்த புத்திசாலித்தனமான அறிஞர் ஜோர்ஜ் ரோஷன் 1958 இல் வெளியிடப்பட்ட பொதுச் சுகாதாரத்தின் வரலாறு (The History of Public Health) என்பதில் எழுதியது போல், 'அதன் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவது நவீன அரசின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.'[1] பொதுச் சுகாதாரத்தின் முன்னேற்றங்கள், மனித உயிரினத்தைப் பற்றிய புரிதல், நோய்களுக்கான சிகிச்சை, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட ஒரு கிருமி நாசினிகள் சூழலின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தல், தடுப்பூசிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் வளர்ச்சி, குழந்தை இறப்பு குறைப்பு மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பு ஆகிய இத்தகைய சாதனைகள் மனித நாகரிக வரலாற்றில் மைல்கல்களாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றன.

கிழக்கு அலபாமா மருத்துவ மைய செவிலி அப்பி ஸ்மித் Opelika, Ala இல் 2020 டிசம்பர் 10 வியாழனன்று அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு கோவிட்—19 நோயாளிக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார். பெருந்தொற்று தீவிரமடைகின்ற வேளையில், இந்த மருத்துவ மையம் கோவிட்—19 நோயாளிகளது ஒரு புதிய பாய்வுக்கு முகம்கொடுக்கிறது. (AP Photo/Julie Bennett)

15. ஒரு நாட்டு மக்களது உடல் ஆரோக்கியத்திற்கும் அதன் சமூக மற்றும் அரசியல் அமைப்பின் தரத்துக்கும் இடையில் ஒரு ஆழமான உறவு நிலவுகிறது என்ற உறுதியான நம்பிக்கை 18 ஆம் நூற்றாண்டின் அறிவொளிமயமாக்கல் சிந்தனையின் ஒரு இன்றியமையாத கூறாக இருந்தது. இந்த நம்பிக்கை வட அமெரிக்காவில் அறிவொளிமயமாக்கல் சிந்தனையைப் பின்பற்றியவர்களால் உயர்த்திப் பிடிக்கப்பட்டு, கிரேட் பிரிட்டனுக்கு எதிரான காலனித்துவ மக்களின் புரட்சிகரப் போராட்டத்திற்கு ஆதரவில் எடுத்துவைக்கப்பட்டது. தோமஸ் ஜெபர்சனின் நெருங்கிய நண்பரும் அமெரிக்க அறிவொளி சிந்தனை வழிநடந்தோரில் மிகச் செல்வாக்கு பெற்றவர்களில் ஒருவராக இருந்தவருமான பெஞ்சமின் ரஷ் அமெரிக்க மெய்யியல் அமைப்பிற்கு முன்பாக 1774 இல் வாசித்த ஒரு ஆய்வறிக்கையில் ,பொதுச் சுகாதார வரலாற்றாசிரியரான ஜோர்ஜ் ரோஸன் குறிப்பிடுகிறவாறாக “எந்தவொரு பெரும் சமூக மாற்றமும் அதனுடன் ஒன்றிணைந்து உடல்ரீதியாக ஆரோக்கியத்தில் மாற்றங்களை உருவாக்குமளவுக்கு நோய், அரசியல் ஸ்தாபகங்கள் மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு ஆகியவை மிகவும் பரஸ்பர தொடர்புடையவையாக இருக்கின்றன” என்று அவதானித்திருந்தார். [2]

16. அறிவொளிமயமாக்கல் சிந்தனையின் இந்த உட்பார்வையானது பொதுச் சுகாதாரத்தில் அடுத்துவந்த முன்னேற்றங்களின் மூலம் நியாயம் பெற்றது, 19 ஆம், மற்றும் இன்னும் ஆற்றலுடன், 20 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய புரட்சிகர ஜனநாயக மற்றும் சோசலிச இயக்கங்களில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் இல்லாமல் இவை சாதிக்கப்பட்டிருக்க முடியாது. அதிகரித்த சக்திவாய்ந்த சமூக, அரசியல், மற்றும் சாத்தியவளரீதியாய் புரட்சிகர சக்தியாக தொழிற்துறை தொழிலாள வர்க்கம் வளர்ச்சி பெற்றமைக்கும் பொது சுகாதாரம் நவீன சமூகத்தில் ஒரு மையமான பிரச்சினையாக ஆனமைக்கும் இடையில் தொடர்பு இருந்தது என்பது மறுக்கவியலாத வரலாற்று உண்மையாகும். தொழிலாள வர்க்கத்தினால் செய்யப்பட்ட முன்னேற்றங்கள் பொதுச் சுகாதாரத்தின் மேம்பாட்டில் பிரதிபலித்தன. இந்த முன்னேற்றங்களில் மிக முக்கியமானதாய் இருந்தது 1917 அக்டோபர் புரட்சியாகும்.

அக்டோபர் புரட்சியின் உலக வரலாற்று முக்கியத்துவம்

17. போல்ஷிவிக் கட்சியால் தலைமை கொடுக்கப்பட்டதும் முதலாம் ஏகாதிபத்திய உலகப் போரில் இருந்து எழுந்ததுமாய் இருந்த ரஷ்யாவிலான 1917 அக்டோபர் புரட்சியானது, உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்ததாக இருந்தது. 150 மில்லியன் மக்கள் கொண்டதொரு நாட்டில் முதலாவது தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டமையானது, முதலாளித்துவத்தின் மற்றும் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வரலாற்றுரீதியாக கடக்கப்படக் கூடிய தன்மையை நடைமுறையில் விளங்கப்படுத்தியது. அக்டோபர் புரட்சியின் சமூகத் தாக்கமும் வரலாற்றுத் தாக்கங்களும் ஒரு உலகளாவிய தன்மை கொண்டவையாக இருந்தன. தொழிலாளர்’ அதிகாரத்தின் ஸ்தாபகமும் உற்பத்தி சாதனங்களது முதலாளித்துவ உடைமைத்தனத்தின் கலைப்பும் ரஷ்யாவில் தொடங்கியது. ஆனால் ட்ரொட்ஸ்கி முன்னெதிர்பார்த்தவாறாக:

சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்குகிறது, சர்வதேச அரங்கில் கட்டவிழ்கிறது, உலக அரங்கில் பூர்த்தியடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது அந்த வார்த்தையின் ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தரப் புரட்சியாக ஆகிறது; நமது ஒட்டுமொத்த பூகோளத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது முழுமை காண்கிறது. [3]

18. அக்டோபர் புரட்சியானது சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளாக தீவிர முற்போக்கான சமூக—பொருளாதார மற்றும் கலாச்சார உருமாற்றத்தை நடத்தியதுடன் நிற்கவில்லை. உலகெங்கும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் போராட்டங்களுக்கு அது கொடுத்த உத்வேகம் தான் அதன் மகத்தான தாக்கமாய் இருந்தது. கம்யூனிச அகிலத்தின் ஸ்தாபகமும், 1919க்கும் 1922க்கும் இடையில் நடத்தப்பட்ட அதன் முதல் நான்கு காங்கிரஸ்களும் சோசலிசப் புரட்சிக்குத் தயாரிப்பு செய்யும் மற்றும் தலைமை கொடுக்கும் பிரச்சினையை சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் நிறுத்தின.

19. அக்டோபர் புரட்சியால் முன்நிறுத்தப்பட்ட தீவிரமான அபாயத்தை ஆளும் வர்க்கங்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டன. ரஷ்யாவில் சந்தித்த தோல்வியின் அளவு தெளிவான நிலையில், ஐரோப்பாவின் முதலாளித்துவ வர்க்கம் சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலை ஒடுக்க மிருகத்தனமான வன்முறையில் இறங்கியது. அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் தான் பாசிசம் ஒரு முக்கியமான இயக்கமாக முதன்முதலில் எழுந்தது.

20. தனது அத்தனை செல்வமும் அதிகாரமும் இருந்தபோதிலும், சோசலிசப் புரட்சியின் மீது கொண்ட அச்சத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கம் வேறெவருக்கும் பின்தங்கியிருக்கவில்லை. இந்த அச்சம், பகுத்தறிவற்ற பாதுகாப்பின்மையுணர்வின் வெளிப்பாடாக இருக்கவில்லை. அமெரிக்க முதலாளித்துவத்தின் பாரிய விரிவெல்லையானது, உள்நாட்டுப் போருக்குப் பிந்திய காலத்தில் துரிதமாக அது அபிவிருத்தி கண்டிருந்த நிலையில், ஒரு பாரிய பலநிற மற்றும் பலஇன தொழிலாள வர்க்கத்தை உருவாக்கியிருந்தது, அத்தொழிலாள வர்க்கத்தின் ஆற்றலுக்கு, வர்க்க நனவு புகட்டப்பட்டு அரசியல்ரீதியாக வழிநடத்தப்படுமேயானால், அது நிலவும் சமூக ஒழுங்கிற்கு தடுத்துநிறுத்த முடியாத ஒரு சவாலை முன்வைக்க முடியும் எனும் நிலை இருந்தது. 1871களிலேயே, அமெரிக்க ஆளும் வர்க்கமானது பாரிஸ் கம்யூனின் உதயத்திற்கு கம்யூனிசவிரோத வெறித்தனத்தின் வெடிப்பைக் கொண்டு பிரதிபலிப்பை காட்டியது. 1870கள் தொடங்கி அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் அபிவிருத்தி அடைய அடைய, தொழிலாளர்களை ஒடுக்க அரசாங்கத்தாலும் பெருநிறுவனங்களாலும் பிரயோகிக்கப்பட்ட தாட்சண்யமற்ற வன்முறையுடன் சித்தாந்தரீதியாக கம்யூனிசவிரோதத்திற்கு அடித்தளமிடப்பட்டது.

வரலாற்றாசிரியர் நிக் ஃபிஷ்சர் எழுதியவாறாக:

அது பொதுவாக எத்தனை இரக்கமின்றி செயல்படுத்தப்படுகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், கம்யூனிசவிரோதம் என்பது பெரும்பாலும் முந்தைய அத்தனை சித்தாந்தங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களும் தோல்வி கண்டிருந்த நிலையில் “கம்யூனிச” சக்திகள் வெற்றிபெற்று விடக் கூடும் என்ற அடிப்படை அச்சத்தையே வெளிப்படுத்தியது; அமெரிக்காவின் மிகப் பரந்த அடித்தட்டு வர்க்க மக்களின் சிதறிக் கிடந்த கூறுகளை ஒரு ஒன்றுபட்ட சக்தியாக “கம்யூனிஸ்டுகள்” ஒன்றிணைத்துவிடக் கூடும், பாரிஸிலும் பின்னர் ரஷ்யாவில் 1905 இலும் நடந்ததைப் போல, அவர்கள் புரட்சியில் தோளுயர்த்தக் கூடும். முற்போக்குவாதம், ஜனரஞ்சகம், இலவச வெள்ளி, வீட்டு மனைகள், இலவச மண், மீட்பு, புனரமைப்பு மற்றும் விடுதலை தோல்வியடையும்போது 'கம்யூனிசம்' வெற்றிபெறக்கூடும். அதன் பதாகையின் கீழ், மாபெரும் எண்ணிக்கையிலான நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தினர் தங்களது பேதங்களை பின்தள்ளக் கூடும்; அவ்வாறே, வெள்ளை மற்றும் கறுப்பினத் தொழிலாளர்களும் குத்தகை விவசாயிகளும், பூர்வ—குடியைச் சேர்ந்த மற்றும் புலம்பெயர்ந்த தொழிற்சாலைக் கரங்களும், கத்தோலிக்கர்களும் புரோட்டஸ்டண்ட்களும், கிறிஸ்தவர்களும் யூதர்களும் ஒன்றுபடக் கூடும். அதுதான் அவர்களுக்கு கொடுங்கனவாய் முன்நின்றது. [4]

ரஷ்யப் புரட்சிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் அளித்த பதிலிறுப்பு

21. அமெரிக்க ஆளும் வர்க்கம் அக்டோபர் புரட்சியை உள்நாட்டு ஸ்திரத்தன்மைக்கான ஒரு அச்சுறுத்தலாக மட்டும் காணவில்லை. வரலாற்றில் எதிர்ப்புரட்சிகரமானதும் புரட்சிகரமானதும் என்ற இரண்டு திருப்புமுனையான நிகழ்வுகள் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில், ஒரு சில வார கால இடைவெளியில் நிகழ்ந்தன என்பது வரலாற்றின் வரலாற்று நகைமுரண்களில் ஒன்றாய் இருக்கிறது. 1917 ஏப்ரல் 3 அன்று, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜனாதிபதி வூட்ரோ வில்சன், ஜேர்மனி மீது போர் பிரகடனம் செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டினார். இது பிரதான உலக ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்காவின் எழுச்சியைக் குறித்து நின்ற ஒரு நிகழ்வாக இருந்தது. அதற்கு இரண்டு வாரங்களின் பின்னர், 1917 ஏப்ரல் 16 அன்று, நாடுகடத்தப்பட்டிருந்த லெனின் பெட்ரோகிராட் வந்துசேர்ந்தார், ரஷ்யாவின் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கிவீசுவதற்கும் சோவியத்துகளின் (தொழிலாளர்’ கவுன்சில்கள்) அடிப்படையில் தொழிலாளர்’ அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் தயாரிப்பு செய்வதற்கு போல்ஷிவிக் கட்சிக்கு அறைகூவல் விடுத்தார்.

22. வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் இந்த குறிப்பிடத்தக்க இடைத்தொடர்பின் முக்கியத்துவம் என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சி சமூகப் புரட்சியின் எப்போதும் இருக்கும் அச்சுறுத்தலுடன் இணைந்து வளர்ந்தது. 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தை எதிர்கொண்ட மைய மூலோபாய பிரச்சனை, ஒருங்கிணைந்த உள்நாட்டு மற்றும் உலகளாவிய ஆபத்துக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதுதான்.

23. வன்முறைப் பிரயோகமே ஆரம்பகட்ட பதிலிறுப்பாய் இருந்தது. போல்ஷிவிக் அரசாங்கத்தைத் தூக்கிவீசுவதற்கான ஒரு நாசகர இராணுவப் பிரச்சாரமாக நிரூபணமான ஒன்றில் வூட்ரோ வில்சனின் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்திற்கு துருப்புகளை அனுப்பியது. அமெரிக்காவிற்குள்ளாக, “முற்போக்கு” வில்சன் நிர்வாகமானது போர்க்குணத்தின் அலைக்கு ஒடுக்குமுறையின் ஒரு திடீர் தாக்குதலைக் கொண்டு எதிர்வினையாற்றியது. 1919 மற்றும் 1920 ஆண்டுகள், இழிபுகழ் பெற்ற “சிவப்பு பயம்”, படுபயங்கரமான பால்மர் தேடுதல்சோதனைகள் (Palmer Raids), சாக்கோ மற்றும் வன்செட்டியின் கைது, மற்றும் தேசியளவிலான உருக்காலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கொடூரமாக ஒடுக்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டன. கு குளுக்ஸ் கிளான் (Ku Klux Klan ) துரித வளர்ச்சி கண்டது. தொழிலாளர்களின் கடுமையான எதிரியாகவும் யூத—விரோதம் கொண்டவராகவும் இருந்த ஹென்றி ஃபோர்டு, ஜேர்மனியில் ஹிட்லரின் வளர்ச்சியை உற்சாகத்துடன் பார்த்துவந்ததோடு நாஜிக்களுக்கு நிதி உதவியும் வழங்கினார். சாக்கோவும் வான்செட்டியும், உலகளவிலான எதிர்ப்புகளையும் தாண்டி, இறுதியில் மசாசூட்ஸ் அரசினால் 1927 ஆகஸ்டில் மின்சார நாற்காலியில் அமர வைத்து கொலை செய்யப்பட்டனர்.

24. 1929 வோல் ஸ்ட்ரீட் பொறிவும் பெருமந்தநிலையின் தோற்றமும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உள்நாட்டுக் கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கட்டாயப்படுத்தியது. நிர்க்கதியான சமூக நிலைமைகள் தொழிலாள வர்க்கத்தை தீவிரமயப்படுத்தின. சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சி உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கை வெளிப்படையாக நிராகரித்துக் கொண்டிருந்தது என்ற யதார்த்த நிலையிலும் கூட, 1933 இல் அதிகாரத்துக்கு வந்த பிராங்ளின் டெலனோ ரூஸ்வெல்ட்டின் நிர்வாகமானது அக்டோபர் புரட்சியின் உதாரணம் தொழிலாள வர்க்கத்தின் நனவில் கொண்டுவரக் கூடிய தாக்கத்தைக் குறித்து அஞ்சியது. அமெரிக்க மக்களுக்கு ரூஸ்வெல்ட் ஒரு “புதிய ஒப்பந்த”த்திற்கு வாக்குறுதியளித்தமையும், அதனைத் தொடர்ந்து “சமூக பாதுகாப்பு” அறிமுகம் செய்யப்பட்டமை போன்ற சீர்திருத்தங்கள் பின்தொடர்ந்தமையும் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் மேலெழுந்து வந்த அலையானது தொழிற்சாலை அமைப்புகள் காங்கிரசின் உருவாக்கம் மற்றும் சோசலிச இடதுகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த வேலைநிறுத்தங்களது ஒரு முன்கண்டிராத அலை ஆகியவற்றில் வெளிப்பாட்டை கண்டதுடன் மற்றும் தொழிற்சாலைகளைப் பறிமுதல் செய்த உள்ளிருப்பு போராட்டங்களினால் எடுத்துக்காட்டப்பட்டவாறாக, ஒரு அதீத புரட்சிகரத் தன்மையைப் பெற்று விடுமோ என்ற அச்சத்தால் ஊக்குவிக்கப்பட்டவையாக இருந்தன.

25. இரண்டாம் உலகப் போரின் வெடிப்பானது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களையும் தீவிரமயப்படுத்துகின்ற நீண்டகால விளைவைக் கொண்டிருந்தது. 1930கள் முழுமையிலும் கொலைபாதக களையெடுப்புகள் மற்றும் ஹிட்லருடன் 1939 வலிந்து—தாக்காத ஒப்பந்தம் கையெழுத்திட்டமை உள்ளிட்ட ஸ்ராலினால் பின்பற்றப்பட்ட கொள்கைகள் சோவியத் ஒன்றியத்தை அழிவின் விளிம்பு வரை கொண்டுவந்து விட்டன என்றபோதும், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகள் 1941 ஜூனில் ஜேர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து வந்த ஆரம்பகட்ட தோல்விகளில் இருந்தான ஒரு மீட்சியை சாத்தியமாக்கியிருந்தன. 1941 டிசம்பரில் அமெரிக்கா உலகப் போரில் நுழைந்த பின்னர், ஜேர்மனி மற்றும் ஜப்பான் மீதான வெற்றி சோவியத் ஒன்றியத்துடனான ஒரு கூட்டணி இல்லாது சாத்தியமாகவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்திலான சமூக சீர்திருத்தங்கள்

26. நாஜி ஜேர்மனியைத் தோற்கடித்ததில் சோவியத் ஒன்றியம் தீர்மானகரமான பாத்திரம் வகித்தது. ஸ்ராலினிச ஆட்சி அமெரிக்காவுடன் இணக்கம் காண விழைந்த போதிலும், போருக்குப் பிந்திய காலத்தில் உலகெங்கும் பொங்கியெழுந்த வெகுஜனப் போராட்டங்களது அலையை அதனால் முற்றிலுமாகக் கட்டுப்படுத்த இயலவில்லை. மறுதரப்பில் அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் சீர்திருத்தவாத சமரசம் ஆகியவற்றின் ஒரு திறமையான கலவையைக் கொண்டு புரட்சிகர அச்சுறுத்தலைக் கலைத்து விட விழைந்தன. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்த கூறுகளின் இடைத்தொடர்புகள் தான் பனிப் போரின் குணவியல்பினை வரையறை செய்வதாக இருந்தது.

27. இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய கால் நூற்றாண்டு காலத்தின் போது, சமூக சமரசத்தின் ஒரு உள்நாட்டுக் கொள்கை மேலாதிக்கம் செலுத்தியது. சமூக சீர்திருத்தங்கள் வழங்குவதை சாத்தியமாக்கிய உலகப் பொருளாதாரத்தின் பொதுவான விரிவாக்கம் தான் இந்த சமரசத்திற்கான பொருளாதாய அடிப்படையாக இருந்தது. சர்வதேசக் களத்தில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலனித்துவ—எதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிரான உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு அமெரிக்கா தலைமை கொடுத்தது. ஈரானிலும் குவாத்தமாலாவிலும் போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பலவீனப்படுத்துபவையாக பார்க்கப்பட்ட ஆட்சிகள் தூக்கிவீசப்படுவதற்கு அது ஏற்பாடு செய்தது. கொரியாவிலும் வியட்நாமிலும் திகைப்பூட்டும் அளவிலான இராணுவ வன்முறையில் அமெரிக்கா இறங்கியது. ஆயினும் தனது இராணுவ வலிமையின் — குறிப்பாக அணு ஆயுத பயன்பாடு (1945 இல் ஜப்பானுக்கு எதிராக அமெரிக்கா இதில் இறங்கியிருந்தது) முழுப் பலத்தையும் பிரயோகிக்கும் அதன் திறனானது மிகப்பெருமளவுக்கு சோவியத் ஒன்றியத்தின் இருப்பினால் அதன் மீது திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் தீர்மானிக்கப்பட்டவையாக இருந்தது. சோவியத்தின் ஒரு கூட்டாளிக்கு எதிரான வரம்பற்ற இராணுவ நடவடிக்கையானது நாசகரமான உலகளாவிய பின்விளைவுகளது சாத்தியத்தைக் கொண்டதொரு இராணுவ பதிலிறுப்பினை கிரெம்ளினிடம் இருந்து தூண்டக் கூடிய சாத்தியத்தினை அமெரிக்காவால் இல்லாது செய்ய முடியாதிருந்தது. 1950 இல் சீனாவுக்கு எதிராக அணுஆயுதப் போரை நடத்துவதற்கு எதிராக ஜனாதிபதி ட்ரூமன் முடிவெடுப்பதற்கும், 1962 இல் கியூபா மீது படையெடுப்பதற்கு எதிராக ஜனாதிபதி கென்னடி முடிவெடுப்பதற்கும், மற்றும் ஜோன்சன் மற்றும் நிக்சன் ஆகிய ஜனாதிபதிகள் வடக்கு வியட்நாமின் மீது அணு குண்டுகள் போடுவதற்கு எதிராக முடிவெடுப்பதற்கும் இட்டுச்சென்ற தீர்மானகரமான காரணியாக இதுவே இருந்தது.

28. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்குள்ளாக முக்கிய சீர்திருத்தங்களுக்கான முன்முயற்சிகள் அக்டோபர் புரட்சியின் மிஞ்சியிருந்த அரசியல் மற்றும் சமூகப் பின்விளைவுகளின் ஆழமான பாதிப்பைக் கொண்டிருந்தன. ஜேர்மனியில் sozialmarktwirtschaft (சமூக சந்தைப் பொருளாதாரம்) ஸ்தாபிக்கப்பட்டமை, மற்றும் பிரிட்டனில் தேசிய சுகாதார சேவை உருவாக்கப்பட்டமை, மற்றும் இவைபோன்று இரண்டாம் உலகப் போரை அடுத்த காலத்தில் தோன்றிய சமூக நல அரசுகளின் மற்ற பல வடிவங்கள் அனைத்துமே அக்டோபர் புரட்சியின் பின்விளைவுகளின் விளைபொருட்களாய் இருந்தன. அமெரிக்காவிற்குள்ளாக, 1960களின் பாரிய சமூகத்தின் (Great Society) வடிவத்தில் புதிய ஒப்பந்தம் (New Deal) நீட்சி செய்யப்பட்டமை இதே நிகழ்ச்சிப்போக்கின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது. Great Society இனால் முன்னெடுக்கப்பட்ட முன்முயற்சிகள் அனைத்திலும், மெடிக்கேர் (Medicare) மற்றும் பின்னாளில் மெடிக்எய்ட் (Medicaid) அறிமுகப்படுத்தப்பட்டமை மிக முக்கியமானவையாக இருந்தன. அரசியல் பிற்போக்குத்தனம் சூழ்ந்த ஆண்டுகளில் எல்லாம், இந்த இரண்டு திட்டங்களுமே, இரண்டு முதலாளித்துவக் கட்சிகளாலும் இடைவிடாத தாக்குதல்களுக்கு குறிவைக்கப்படக் கூடியவையாக ஆகவிருந்தன.

29. போருக்குப் பிந்தைய ஒழுங்கின் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் உடன்பாடுகள் பொறிந்து போனமை என்பது முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் பலவீனத்தின் விளைபொருளாக இருந்ததே அன்றி, அதன் வலிமையின் விளைபொருளாக அல்ல. அதன் வர்த்தக மற்றும் செலுத்துமதி நிலுவையின் தொடர்ச்சியான வீழ்ச்சியில் பிரதிபலித்த அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலையில் ஏற்பட்ட நீண்டகால வீழ்ச்சி 1960களின் பின்பகுதியில் ஒரு நெருக்கடிப் புள்ளியை எட்டியது. அதிகரித்துச் சென்ற பணவீக்கமும் தேசிய நிதிநிலை மீதான அழுத்தமும் அமெரிக்கா வெளிநாட்டுப் போர்களுக்கு நிதி வழங்கிக் கொண்டே உள்நாட்டில் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என்பதற்கான எச்சரிக்கைகளாக பார்க்கப்பட்டன. ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்காக இருந்த தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் அதிகரித்துச் சென்றமை சீர்திருத்தவாதக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல அச்சுறுத்தின. டாலருக்கும் தங்கத்திற்குமான மாற்றீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு 1944 இல் உருவாக்கப்பட்டிருந்த பிரெட்டன் வூட்ஸ் முறையை முடிவுக்குக் கொண்டு வர 1971 இல் அமெரிக்கா எடுத்த முடிவானது தேசிய சீர்திருத்தவாதக் கொள்கைகளுக்கு சாவு மணி அடித்ததோடு முதலாளித்துவ சமூக பிற்போக்குத்தனத்தின் ஒரு புதிய காலகட்டம் தொடங்கியதற்கும் கட்டியம் கூறியது.

30. சோவியத் ஒன்றியமும் அதன் கிழக்கு ஐரோப்பிய “இடைத்தாங்கி அரசு”களும் தேசிய அடிப்படையிலான சீர்திருத்தவாதத்தின் பெருகிச் சென்ற நெருக்கடியில் இருந்து தப்பி விட முடியவில்லை. சோவியத் பொருளாதாரத்தின் சிக்கலான தன்மை வளர்ச்சியடைந்தமையானது அதன் தேசியத் திட்டமிடல் முறையை அதிகமான அளவில் தாக்குப்பிடிக்க முடியாததாக்கியது. அதற்கு உலகப் பொருளாதாரத்தின் வளங்களுக்கு அணுகல் அவசியமாயிருந்தது, ஆனால் அது இரண்டிலொரு வழிகளில் மட்டுமே சாதிக்கப்பட முடியும் என்பதாய் இருந்தது: ஒன்று முதலாளித்துவம் தூக்கிவீசப்பட்டு உலகப் பொருளாதாரம் ஒரு சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கு செய்யப்படுவதன் மூலமாக; அல்லது சோவியத் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்புகளுக்குள்ளாக ஒருங்கிணைப்பதன் மூலமாக. இரண்டாவது பாதைக்கு, தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறையை இல்லாதொழிப்பது, வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசு ஏகபோகத்தைக் கைவிடுவது, ஒரு தொழிலாளர் சந்தையை உருவாக்குவது, மற்றும் தனியார் சொத்துடைமைக்கும் தனிநபர் செல்வக் குவிப்பிற்கும் இருந்த தடைகளை அகற்றுவது ஆகியவை அவசியமாயிருந்தது.

31. முதலாவது பாதை சோவியத் அதிகாரத்துவத்தின் நலன்களுக்கு முற்றிலும் இணக்கமற்றதாய் இருந்தது. அதன் பொருளாதாய தனிச்சலுகைகளின் பாதுகாப்பு என்பது “தனியொரு நாட்டில் சோசலிசம்” எனும் ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் ஒரு புதியவடிவமாக இருந்த ஏகாதிபத்தியத்துடனான “சமாதான சகவாழ்வு” கொள்கையின் மீது பிரிக்கவியலாமல் சார்ந்திருந்தது. ஆக, அக்டோபர் புரட்சியின் ஒட்டுமொத்த முற்போக்கான பொருளாதார மற்றும் சமூக பாரம்பரியத்தை இறுதியாக மறுதலிப்பதுதான் ஸ்ராலினிச ஆட்சி தேர்ந்தெடுத்த பாதையாக இருந்தது. இந்த பிரம்மாண்டமான காட்டிக்கொடுப்பின் விளைவு சோவியத் மக்களுக்கு மட்டும் துன்பியலாக இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் பாதையில் தொழிலாள வர்க்கம் கண்டிருந்த அத்தனை முற்போக்கான முன்னேற்றங்கள் மீதுமான ஒரு உலகளாவிய தாக்குதலுக்கு அது கதவுகளைத் திறந்து விட்டிருந்தது. இந்த வரலாற்று அர்த்தத்தில் தான் பெருந்தொற்றிற்கு ஆளும் வர்க்கம் அளித்திருக்கும் கொடூர பதிலிறுப்பானது புரிந்துகொள்ளப்பட முடியும்.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் 30 ஆண்டு கால முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் சமூக தாக்கமும்

32. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு இப்போது 30 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. உற்பத்தி சாதனங்களது தனிச் சொத்துடைமையை மீட்சி செய்வதற்கு மிக்கையில் கோர்பச்சேவ் தலைமையிலான ஸ்ராலினிச ஆட்சி எடுத்த முடிவானது முதலாளித்துவத்தின் தீர்மானகரமான மற்றும் திரும்பவியலாத வெற்றியாக ஆளும் வர்க்கத்தால் போற்றப்பட்டது. இன்னும் சிலர் “வரலாற்றின் முடிவு” என்றும் கூட அறிவித்தனர். முதலாளித்துவத்தையும், தேசிய—அரசு அமைப்புமுறையையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ ஜனநாயகம் மனித முன்னேற்றத்தின் உச்சகட்டத்தை குறித்து நின்றது என்பதையே சோவியத் ஒன்றியத்தின் முடிவு நிரூபணம் செய்ததாக அவர்கள் கூறினர். முதலாளித்துவத்திற்கு சோசலிசத்தினால் முன்நிறுத்தப்பட்ட சவாலானது என்றென்றைக்குமாய் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகக் கூறினர்.

33. வரலாற்றின் மீதான இந்த நப்பாசையான பொருள்விளக்கமானது இரண்டு தவறான அடிப்படைக் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது: முதலாவது சோவியத் ஸ்ராலினிசத்தை சோசலிசம் மற்றும் மார்க்சிசத்துடன் அடையாளப்படுத்துவது; இரண்டாவது ஸ்ராலினிச ஆட்சியின் மறைவு முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியைக் கடந்து விட்டதையும் தீர்த்து விட்டதையும் குறிப்பதாகக் கொள்வது.

34. 1990 மேயில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ஸ்ராலினிச அரசுகள் தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளைக் கலைக்கும் நிகழ்ச்சிப்போக்கை தொடங்கிக் கொண்டிருந்ததும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் உச்சம்கண்ட கொள்கைகளை கோர்பச்சேவ் கடைப்பிடித்துக் கொண்டிருந்ததுமான வேளையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது இந்த அபிவிருத்திகள் சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்குக் கொண்டிருந்த தாக்கங்களைக் குறித்து விவாதித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பத்தாவது முழுப்பேரவையில் வழங்கப்பட்ட ஒரு அறிக்கையில் அது பின்வருமாறு விளக்கியிருந்தது:

கிழக்கு ஐரோப்பாவின் நிகழ்வுகளுக்கு இரண்டு பொருள்விளக்கங்கள் கொடுக்கப்படும் சாத்தியமுள்ளது. இது சோசலிசத்தின் மீதான முதலாளித்துவத்தின் வரலாற்று வெற்றி; தொழிலாள வர்க்கம் ஒரு பாரிய வரலாற்று தோல்வியை சந்தித்திருக்கிறது; சோசலிச முன்னோக்கு அடிப்படையில் நாசமடைந்திருக்கிறது, முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு முழு புதிய காலகட்டத்தின் விளிம்பில் நாம் நிற்கிறோம் என்பதாக ஒருவர் சொல்லலாம்; இல்லையென்றால் ஏனைய அத்தனை போக்குகளிடம் இருந்தும் அதனை வேறுபடுத்திக் காட்டும் அனைத்துலகக் குழுவின் நிலைப்பாடான, ஏகாதிபத்திய போருக்குப் பிந்தைய ஒழுங்கின் பொறிவானது சர்வதேச அளவில் பாரிய அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களின் பாதையில் மட்டுமே தீர்க்கப்படவிருக்கின்ற ஆழமான சமநிலைக்குலைவின் ஒரு காலகட்டத்தைத் திறந்து விடுகிறது. இன்று மேலோங்கியிருக்கும் ஸ்திரமின்மை மட்டம் என்பது 1930களுக்குப் பிந்தைய காலத்தில் வேறெந்தவொரு சமயத்திலும் நாம் இணைகாண முடியாத ஒன்றாகும் என்று கூறலாம். [5]

35. மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் சாத்தியமாக இருந்த பொருள்விளக்கங்களில் எது சரியென்று நிரூபணமாகியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. முதலாளித்துவ அமைப்புமுறை முரண்பாடுகளை வெற்றிகண்டு முன்னேற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை தொடக்கிவைப்பதற்கெல்லாம் வெகுதூரத்தில், கடந்த மூன்று தசாப்தங்கள் சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சி; முடிவற்ற மற்றும் விரிந்துசெல்லும் தொடர்ச்சியான ஏகாதிபத்திய மூர்க்கப் போர்கள் மற்றும் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பொறிவு அதிகரித்துச் செல்லும் நிலை ஆகியவற்றினாலேயே குணாம்சப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த அத்தனை போக்குகளும் பெருந்தொற்றின் இரண்டாண்டு காலத்தில் மேலும் வேகம்பெற்றிருக்கின்றன.

சமூக சமத்துவமின்மையின் பாரிய வளர்ச்சி

36. நிதிய சிலவராட்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த பெருந்தொற்று காலத்தை தனது களவாணித்தனத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறது. 2020 மார்ச்சில் பெருவாரியான இருகட்சி அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட CARES Act மூலம் ஒப்புதலளிக்கப்பட்டு, அமெரிக்க கூட்டரசாங்கக் கருவூலம் வோல் ஸ்ட்ரீட்டுக்குள்ளாக டிரில்லியன் கணக்கிலான டாலர்கள் பணத்தைப் பாய்ச்சியது. Forbes பத்திரிகை செய்தியின் படி, 2020 புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க பில்லியனர்கள் மொத்தமாக 3.4 டிரில்லியன் டாலர்கள் சொத்து கொண்டிருந்தனர், இதுவே ஒரு மலைப்பூட்டும் தொகை. அதற்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர், அவர்களின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 5.3 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது பெருந்தொற்று காலத்தில் 1.8 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அதிகரிப்பைப் பெற்றுள்ளது.

37. இதே கொள்கை தான் முக்கிய முதலாளித்துவ நாடுகள் அனைத்திலுமே அமலாக்கப்பட்டிருக்கிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் டிசம்பர் 28 அன்று வெளியான ஒரு செய்தியின் (”உலக மூலதனச் சந்தைகளுக்கான ‘மிகவெற்றிகரமான’ ஆண்டில் நிறுவனங்கள் 12 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாய் திரட்டுகின்றன”) படி, மத்திய வங்கியில் இருந்தான ஊக்கப்பொதி பாய்வும் பெருந்தொற்றில் இருந்தான துரிதமான மீட்சியும் பல உலகச் சந்தைகளை மேலே ஏற்றிய நிலையில், பங்குகள் விற்பனை, கடன் பத்திர வெளியீடு மற்றும் புதிய கடன்கள் கையெழுத்திடப்பட்டமை ஆகியவற்றின் மூலம் உலகப் பெருநிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் சாதனையளவாக 12.1 டிரில்லியன் டாலர் தொகையைத் திரட்டியிருந்தன.

ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் பாக்கி இருந்த நிலையில், இந்த பண அளவே 2020 உடன் ஒப்பிடுகையில் ஏற்கனவே 17 சதவீதம் அதிகமானதாய் இருந்தது. 2020 ஆம் ஆண்டேயும் ஒரு வரலாற்றுச் சாதனையைக் கண்டிருந்தது, கொரோனா வைரஸுக்கு முந்தைய 2019 ஆண்டுடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட கால் பங்கு அதிகமான பணத்தைத் திரட்டியிருந்தது என Refinitiv தரவின் அடிப்படையிலான ஃபைனான்சியல் டைம்ஸ் கணக்கீடு தெரிவித்தது.

பணத்திரட்டலின் இந்த அசுர வேகமானது உலகின் பல பாகங்களில் —மிகக் குறிப்பிடத்தக்கதாய், அமெரிக்காவில், இங்கு 5 டிரில்லியன் டாலர் திரட்டப்பட்டது— நிதிக்குவிப்பிற்கான நிலைமைகள் எத்தனை எளிதானவையாக இருந்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் இருக்கிறது.

38. தொழிலாளர்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்து இலாபங்களை உற்பத்தி செய்து தருவதற்கும், அவர்களது பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வைரஸைத் தொற்றி வந்து பரப்புவதற்கும் கட்டாயப்படுத்தப்படுவது என்பது நிதிச் சந்தைகளது பிணையெடுப்பின் தவிர்க்கமுடியாத பின்விளைவாக இருக்கிறது. பாரிய தொற்றினை பகிரங்கமாய் ஊக்குவிக்கிற வடிவமென்றாலும் சரி, அல்லது பைடன் நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்படுகிற “தடுப்பூசி—மட்டும்” மூலோபாயம் என்றாலும் சரி பெருந்தொற்றை நோக்கிய ஆளும் வர்க்கத்தின் கொள்கையை இந்த வர்க்க தர்க்கமே உந்துகின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெடிப்பு

39. பெருந்தொற்றுக்கு ஒரு பகுத்தறிவான, விஞ்ஞானபூர்வமான பதிலிறுப்பு அளிப்பதானது, ஆளும் வர்க்கத்தின் கொள்ளையிடும் நலன்களுடன் சேர்த்து, உலகம் போட்டி தேசிய—அரசுகளாக பிரிந்திருப்பதன் மூலமும் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று இயல்பிலேயே ஒரு உலகளாவிய பிரச்சினையாக உள்ளது, சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்படக் கூடிய ஒரு பிரச்சினையாக உள்ளது. முக்கிய முதலாளித்துவ சக்திகள் இடையிலான தேசிய மற்றும் புவியரசியல் மோதல்களின் காரணத்தால் இது சாத்தியமற்றதாக செய்யப்பட்டுள்ளது.

40. மூன்று தசாப்தங்களுக்கு முன்பாக சோவியத் ஒன்றியத்தின் கலைப்பைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் நடத்தப்பட்ட முடிவற்ற போர்களின் ஒரு வரிசை பின்தொடர்ந்து வந்தது. கடந்த தசாப்தத்தில், அமெரிக்கா தனது போர் திட்டமிடலுக்கான இலக்குகளை முன்னெப்போதினும் மிக நேரடியாக தனது பிரதான புவியரசியல் எதிரிகளாக அது காணக்கூடிய நாடுகளை நோக்கி, எல்லாவற்றுக்கும் முதலில் ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி திருப்பியிருக்கிறது.

41. பெருந்தொற்றின் இரண்டாண்டு காலத்தில் இராணுவவாத மிரட்டல்கள் அதிகரிக்கவே செய்துள்ளன. பைடென் நிர்வாகமானது உக்ரேனில் பொறுப்பற்றதொரு நேட்டோ—ஆதரவு இராணுவப் பெருக்கத்திற்கு தலைமை கொடுத்து, உக்ரேனின் வலது—சாரி அரசாங்கம் ரஷ்யாவுடனான அதன் எல்லையில் 125,000 படைவீரர்களை நிலைநிறுத்தும்படி தூண்டிவிட்டு, அமெரிக்கா “எவரொருவரது சிவப்புக் கோடுகளையும் ஏற்காது” என்று எச்சரித்துள்ளதுடன் இந்த புத்தாண்டு தொடங்குகிறது. உக்ரேன் ஆட்சியை பின்வாங்கச் செய்வதற்கெல்லாம் வெகுதூரத்தில், பைடென் நிர்வாகமானது ஒரு இராணுவ மோதலை ஊக்குவிப்பதில் தான் நோக்கம் கொண்டுள்ளதாய் தென்படுகிறது. “ரஷ்யா இன்னும் அதிகமாய் நகர முடிவுசெய்யுமானால் அப்போது உக்ரேன் அதற்கு அடுத்த ஆப்கானிஸ்தானாக மாறும்” என்று டிசம்பரில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் கிறிஸ் மர்பி மிரட்டல் விடுத்தார்.

42. எனினும் ரஷ்யாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்கள், உள்ளபடியே அவை மிக அபாயகரமானவையாக உள்ள நிலையில், மிகப்பெருமளவுக்கு, அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்க நிலைக்கு சீனாவினால் முன்நிறுத்தப்படுகின்ற அச்சுறுத்தலாக தான் காண்கின்ற ஒன்றை தடுத்துநிறுத்துவதற்கு அமெரிக்கா எடுத்துள்ள உறுதியாலேயே செலுத்தப்படுவனவாக உள்ளன. சீனாவுடனான ஒரு போரின் சாத்தியம், இன்னும் தவிர்க்கவியலா தன்மை என்று கூட சொல்லலாம், என்பதே அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்திலும் ஊடகங்களிலும் மேலோங்கியிருக்கும் ஒரு விடமாக இருக்கிறது. மனித உரிமை மீறல்களாக சொல்லப்படுவன மற்றும் வீகர்களுக்கு எதிரான “படுகொலை”யாக சொல்லப்படுவன ஆகியவற்றுக்கு எதிரான தனது கண்டனங்களை அமெரிக்கா அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தென் சீனக் கடலின் திட்டமிட்ட இராணுவமயமாக்கல் மற்றும் சீனாவை சுற்றிவளைப்பு ஆகியவை தொடர்கின்றன.

43. பெருந்தொற்றானது போரின் அபாயத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும், ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக்கில் இருக்கும் அதன் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளுக்கும் தமது உள்நாட்டுக் கொள்கைகளின் நாசகரமான விளைவுகளில் இருந்து கவனத்தைத் திருப்பி மக்களை ஒரு வெளிப்புற எதிரியின் மீது நிலைகுத்திப் பார்த்திருக்கும்படி செய்வதற்கான ஒரு வழிவகையாக போரைக் காண்பதற்குரிய மனச்சலனம் பெற்றுவருவது உலக நிலைமையில் ஒரு முக்கியமான மற்றும் அதிகரித்துச் செல்லும் காரணியாக உள்ளது. இந்த பெருந்தொற்றானது, ஒரு மரணகரமான தொற்றுக்கிருமியின் ஒரு கசிவினால் அல்லது குற்றவியல்தனமான உருவாக்கத்தினால் விளைந்திருந்ததாக, நன்கு—ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகளுக்கு முரணான விதத்தில் கூறுகிற, “வூஹான் சோதனைக்கூட பொய்”க்குப் பின்னால் இருக்கும் உந்துசக்தி நிச்சயமாக இதுவே.

ஜனநாயகத்தின் பொறிவு

44. இறுதியாக, நிதிய சிலவராட்சியானது மில்லியன் கணக்கானோரின் மரணங்களுக்கு இட்டுச் சென்றிருக்கும் ஒரு கொள்கையை அமுல்படுத்தியுள்ள வேளையில், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பொறிவை இந்த பெருந்தொற்றானது மிகப்பிரம்மாண்டமான அளவில் வேகமெடுக்கச் செய்திருக்கிறது. பெருந்தொற்றின் முதலாவது ஆண்டின் போது, கடையடைப்புகளுக்கும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான பொதுச் சுகாதார நடவடிக்கைகள் அத்தனைக்கும் எதிரான பிரச்சாரத்திற்கு முன்முனையாக ட்ரம்ப் நிர்வாகத்தினால் அணிதிரட்டப்பட்ட பாசிச அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. பிணங்கள் குவிந்ததற்கு மத்தியில் 2020 தேர்தலையொட்டி, ட்ரம்ப் வாக்களிப்பின் முடிவை அமுக்குவதற்கும் அரசியல்சட்டத்தைக் கவிழ்ப்பதற்கும் ஒரு திட்டமிட்ட சதியில் ஈடுபட்டார்.

45. ட்ரம்ப்பின் சதிகள், அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்த, 2021 ஜனவரி 6 அன்று முயற்சிக்கப்பட்ட பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் உச்சமடைந்தன. பொதுத் தேர்தலில் பைடென் பெற்ற வெற்றி வாக்களிப்பு—மோசடியின் ஒரு விளைபொருளாக இருந்ததாக பொய்யாகக் கூறி, ட்ரம்ப்பும் பாசிச மூலோபாயவாதியான ஸ்டீபன் பானனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு வலைப் பின்னலை ஒழுங்கமைத்து தேர்தல் சபையின் சான்றிதழ் வழங்கலை குலைக்கும் நோக்கத்துடன் பாசிச துணை இராணுவப்படைகளை அணிதிரட்டினர். ஜனவரி 7அன்றான முன்னோக்கில் WSWS பின்வருமாறு எழுதியது:

அமெரிக்க ஜனநாயகத்தின் வெல்லமுடியாத் தன்மை மற்றும் காலத்தால் அழியா தன்மை குறித்த தேய்ந்த புகழ்மாலைகள் அனைத்தும் ஒரு வெற்று அரசியல் கட்டுக்கதையாக முழுமையாக அம்பலப்பட்டிருக்கின்றன, மதிப்பிழந்திருக்கின்றன. அமெரிக்க பாசிசத்தின் எழுச்சி குறித்து நியாயமான பிரபலத்திற்குரிய சிங்க்ளேய்ர் லூயிஸ் இன் தலைப்பில் இருந்து எடுக்கப்பட்ட “அது இங்கே நடக்க முடியாது” என்ற பிரபலமான வசனம் இந்நிகழ்வுகளால் தீர்மானகரமாக விஞ்சிச் செல்லப்பட்டிருக்கிறது. இங்கே ஒரு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு நடக்க முடியும் என்பதுடன் மட்டுமல்ல. 2021 ஜனவரி 6 அன்று மாலை அது இங்கே நடந்தே விட்டிருக்கிறது.

46. குடியரசுக் கட்சி தன்னை மேலும் மேலும் அதிகமாய் ஒரு பகிரங்கமான பாசிசக் கட்சியாக உருமாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், ஜோ பைடென் முதல் அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ—கோர்ட்டெஸ் வரையான ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்தும் அவர்களை “நமது சகாக்கள்” என்றே குறிப்பிடுகின்றனர், ஜனவரி 8 அன்று பைடென் “கோட்பாட்டுடன் இருக்கின்ற வலிமையான ஒரு குடியரசுக் கட்சி நமக்குத் தேவை” என்று அறிவித்தார். ட்ரம்ப்பின் நாடாளுமன்றக் கூட்டாளிகள் அவரவர்தம் பதவிகளில் இப்போதும் அமர்ந்திருக்கும் நிலையில், புளோரிடா மாளிகையில் இருந்தபடி தனது அடுத்தகட்ட சதி நடவடிக்கைகளை தீட்டுவதற்கு ட்ரம்ப் தனியாக விடப்பட்டுள்ளார். வருங்காலத் தேர்தல்களில் மில்லியன் கணக்கான வாக்காளர்களை வாக்குரிமை இழக்கச் செய்வதற்கான தயாரிப்புகள் பல மாகாணங்களிலும் மிக முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றன.

47. மேலும், பாசிச ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சி, ஸ்பெயினில் Vox, இந்தியாவில் மோடி மற்றும் பிரேசிலில் போல்சனாரோ, அத்துடன் உலகெங்குமான நாடுகளில் எங்கு பார்த்தாலும் அதிவலதுகள் மேலுயர்த்தப்படுவதாய் உள்ள ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பகுதியாகவே ட்ரம்ப் இருக்கிறார்.

பெருந்தொற்றும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும்

48. பெருந்தொற்றின் முடிவு மருத்துவரீதியான நடவடிக்கைகள் மூலமாக மட்டும் சாதிக்கப்பட்டு விட முடியாது என்பதையே கடந்த இரண்டாண்டு கால அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. அடிப்படையாக ஒரு சமூக நெருக்கடியாக உள்ள ஒன்றில் இருந்து வெளிவருவதற்கான வழியானது உலகை ஒரு மாறுபட்ட பொருளாதார மற்றும் சமூக அடித்தளத்தில் மறுஒழுங்குபடுத்துவதற்கான அரசியல் போராட்டத்தைக் கோருகிறது. முதலாளித்துவ அரசிடம் கொள்கை மாற்றம் வேண்டி விடுக்கக் கூடிய கோரிக்கைகள் அனைத்தும் தோல்வியே காணும். இந்தக் கொள்கைகள் அவசியமான சமூக அடித்தளத்தை உலகளவிலான தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்தில் காணக்கூடிய அளவிற்கே பெருந்தொற்றிற்கான விஞ்ஞானபூர்வமாக வழிநடத்தப்படுகின்ற மற்றும் முற்போக்கான ஒரு பதிலிறுப்பை அமுல்படுத்துவது சாத்தியமாகும்.

49. ஆனால் அப்படியானதொரு வெகுஜன இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புவளங்கள் என்ன? உண்மையில் அவை ஏற்கனவே தொடங்கி விட்டன. 2019 இல், அதாவது பெருந்தொற்று ஆரம்பிப்பதற்கு முந்தைய ஆண்டில், வர்க்கப் போராட்டமும் சமூக ஆர்ப்பாட்டங்களும் உலகெங்கும் வெடித்தன. அந்த ஆண்டில் மெக்சிகோ, போட்டோ ரிக்கோ, எக்வடார், கொலம்பியா, சிலி, பிரான்ஸ், ஸ்பெயின், அல்ஜீரியா, பிரிட்டன், லெபனான், ஈராக், ஈரான், சூடான், கென்யா, தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் எழுந்தன. அமெரிக்காவில் 40 ஆண்டுகளுக்கும் அதிகமானதொரு காலத்திற்குப் பின்னர் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் முதல் தேசியளவிலான வேலைநிறுத்தத்தை ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் தொடங்கினர்.

50. உலகளாவிய பெருந்தொற்றானது வர்க்கப் போராட்டத்தின் “இயல்பான” பாதையை சீர்குலைத்தது. அதன் ஆரம்ப கட்டங்களின் போது இத்தாலி, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் வேலை வெளிநடப்புகளும் முன்னறிவிப்பற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களும் இருந்தன. அது தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்குத் தள்ளியது. எனினும் தொழிற்சங்கங்களது அதிமுக்கியமான உதவியுடன், தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு அனுப்பப்பட்டு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இவை நோய்த் தொற்றுகளில் மற்றும் மரணங்களில் பாரிய அதிகரிப்புக்கு எண்ணெய் ஊற்றியது.

51. எவ்வாறெனினும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மீதான தற்காலிக ஒடுக்குமுறையானது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு சக்திவாய்ந்த மீளெழுச்சிக்கு வழிவிட்டிருக்கிறது. பெருந்தொற்றுக்கும் அதற்கு ஆளும் வர்க்கம் அளித்த பதிலிறுப்பின் பொருளாதார மற்றும் சமூக பின்விளைவுகளுக்கும் —ஆண்டு முடிவடையப் போகும் நேரத்தில், அடிப்படை நுகர்வுப் பொருட்களில் அதிகரித்துச் சென்ற விலையேற்றம் உள்ளிட்டவை— இரண்டுக்குமே கோபம் மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒரு தொடர் பெரும் வர்க்க போராட்டங்களை சென்ற ஆண்டு கண்டிருக்கிறது.

52. அலபாமாவில் சுரங்கத் தொழிலாளர்களின், நியூயோர்க், மசாசூட்ஸ் மற்றும் மினியசோட்டாவில் செவிலியரின், வேர்ஜினியாவில் வொல்வோ டிரக் தொழிலாளர்களின், மிட்வெஸ்டில் ஜோன் டீர் தொழிலாளர்கள் மற்றும் கெல்லாக் தானிய உணவு தொழிலாளர்களின் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்வி வளாகங்களில் இளங்கலை மாணவர் தொழிலாளர்களின் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் மருந்தாளுநர் தொழிலாளர்களது முன்னறிவிப்பற்ற மருத்துவ விடுப்பு போராட்டங்கள் மற்றும் பிற போராட்டங்களும் நடந்தன.

53. உலகளாவிய அளவில் சென்ற ஆண்டில், தென் ஆபிரிக்காவில் 170,000 உலோகவேலைத் தொழிலாளர்களின்; இந்தியாவில் ஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின்; இலங்கையில் 50,000 சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் பத்தாயிரக்கணக்கான பொதுத்துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன; துருக்கியில் ஆயிரக்கணக்கான எரிசக்தித் துறை தொழிலாளர்களின் முன்னறிவிப்பில்லாத வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது; சிலியில் ஆயிரக்கணக்கான பொதுச் சுகாதாரத் துறை தொழிலாளர்களது மற்றும் சுரங்கத் தொழிலாளர்களது போராட்டங்கள்; பிரான்சில் மருத்துவமனைகளது பரிதாபகரமான நிலைமைகளை எதிர்த்து சுகாதாரப் பராமரிப்பு தொழிலாளர்கள் நடத்திய பாரிய போராட்டங்கள் ஆகியவை நடைபெற்றன. அக்டோபரில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு தாயாரான லீசா டயஸ் தொடங்கிவைத்த பாதுகாப்பற்ற பள்ளி நிலைமைகளுக்கு எதிரான #SchoolStrike போராட்டம் பரந்த சர்வதேச ஆதரவை வென்றது.

54. 2022 தொடங்கி ஒமிக்ரோன் கட்டுப்பாட்டை மீறி கொந்தளிக்கின்ற நிலையில், பள்ளிகளில் நேரில் கற்க பள்ளிகளை மூட வேண்டும் என்றும், நோய் பரவுவதற்கான மையங்களான தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் தேவையற்ற உற்பத்தியை நிறுத்துமாறு கோரும் தொழிலாளர்களினதும் ஆசிரியர்களினதும் இயக்கம் அதிகரித்து வருகிறது. முக்கிய பெருநிறுவனங்களினால் கட்டளையிடப்பட்ட ஒரு கொள்கையான தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களில் இருந்து 5 நாட்களாய் குறைக்கும் அமெரிக்க CDC (நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்) இன் நடவடிக்கையானது சமூக கோபம் மற்றும் எதிர்ப்பின் ஒரு பிரம்மாண்டமான மட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

சாமானியத் தொழிலாளர் குழுக்களது சர்வதேசக் கூட்டணி

55. இந்த வர்க்கப் போராட்டமானது முதலாளித்துவ சமூகத்தின் குணாம்சம் மற்றும் பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கம் அளிக்கும் பதிலிறுப்பு ஆகியவற்றில் இருந்து புறநிலையாக எழுவதாகும். சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்கள் முற்றிலும் தடுத்திருக்கத்தக்க மரணங்களை அடைந்தார்கள் என்ற உண்மையை பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அமைதியாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

56. இந்த புறநிலையான நிகழ்ச்சிப்போக்குக்கு ஒரு அமைப்புரீதியான வடிவம் கொடுக்கப்பட வேண்டும், அது அரசியல் நனவுமிக்கதாக ஆக்கப்பட வேண்டும். கடந்தாண்டின் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பில் இரண்டு வெகுமுக்கிய முன்னெடுப்புகளைத் தொடங்கியது: சாமானியத் தொழிலாளர் குழுக்களது சர்வதேசக் கூட்டணி (IWA—RFC) மற்றும் கோவிட்—19 பெருந்தொற்றுக்கான உலகளாவிய தொழிலாளர்களது உண்மையறியும் விசாரணை (Global Workers’ Inquest into the COVID—19 Pandemic).

57. 2021 ஏப்ரலில், பெருந்தொற்றின் காரணத்திலான உலகளாவிய மரணங்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனுக்கும் அதிகமாய் இருந்தவொரு சமயத்தில் IWA—RFC தொடங்கப்பட்டது. IWA—RFC க்கான தேவை என்பது தொழிலாளர்களுக்கு அவர்தம் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புகள் ஏதுமில்லை என்ற உண்மையில் இருந்து எழுகிறது. வெளிப்படையாக வலது-சாரியாக இருப்பவையானாலும் சரி அல்லது ஓரளவுக்கு “இடதாக” இருப்பவையானாலும் சரி, ஒவ்வொரு பெரிய முதலாளித்துவ நாட்டிலும் இருக்கக் கூடிய அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுமே பாரிய தொற்று மற்றும் மரணத்தின் ஒரு கொள்கையையே தழுவியிருப்துடன், பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்கு விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளால் கோரப்பட்ட நடவடிக்க்கைகளை நிராகரித்திருக்கின்றன.

58. தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கவும் பெருநிறுவனங்களின் கோரிக்கைகளைத் திணிக்கவுமே பல தசாப்தங்களாக வேலைசெய்து வந்திருக்கின்றன. பெருந்தொற்றின் போது, பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலைசெய்ய தொழிலாளர்களை நிர்ப்பந்தித்து ஆளும் வர்க்கத்தின் கொலைகாரக் கொள்கையை கட்டாயப்படுத்தித் திணிப்பதில் அவை ஒரு மிகமுக்கியமான பாத்திரத்தை வகித்திருக்கின்றன.

59. IWA—RFC ஐ முன்னெடுக்கையில், ICFI விளக்கியது:

சர்வதேச அளவில் தொழிற்சாலைகளிலும், பள்ளிகளிலும் மற்றும் வேலையிடங்களிலும் தொழிலாளர்களது சுயாதீனமான, ஜனநாயகரீதியான, மற்றும் போர்க்குணமிக்க சாமானிய அமைப்புகளது புதிய வடிவங்களின் கட்டுமானத்தை அபிவிருத்தி செய்ய IWA—RFC போராடும். தொழிலாள வர்க்கம் போராடத் தயாராய் உள்ளது. ஆனால் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் ஒடுக்குகிற பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ அமைப்புகளால் அது தளையிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, பாதுகாப்பற்ற ஆலைகளையும் அத்தியாவசியம் சாராத உற்பத்தியையும் மூடுதல், மற்றும் வைரஸ் பரவலை தடுத்துநிறுத்துவதற்கு அவசியமான மற்ற அவசரகால நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கோரி ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கும் தகவல்பரிமாறிக் கொள்வதற்கும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களுக்கு வழிவகை தருவதாக அது இருக்கும்.

60. எண்ணிலடங்கா தேசிய, இன, மற்றும் நிறப் பேரினவாத மற்றும் அடையாள அரசியலின் வடிவங்களைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த முனையும் அத்தனை முயற்சிகளுக்கும் எதிரான ஒரு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். பெருந்தொற்று அத்தனை தொழிலாளர்களையும் பாதிக்கிற ஒரு உலக நெருக்கடியாக இருக்கிறது. போலி-இடதுகளின் ஊக்குவிப்புடன், இனம் மற்றும் பாலினம் போன்றவற்றை அடிப்படை சமூக வரைறைகளாக முன்னெடுத்துக் கொண்டு, தொழிலாளர்கள் அனைவரையும் அவர்களது பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு செய்யப்படுகின்ற அத்தனை முழுப் பிற்போக்கான முயற்சிகளையும் IWA—RFC அம்பலப்படுத்துகிறது.

கோவிட்—19 பெருந்தொற்றுக்கான உலகளாவிய தொழிலாளர்களது உண்மையறியும் விசாரணையும் SARS—CoV—2 ஐ ஒழிப்பதற்கான போராட்டமும்

61. நவம்பர் 21 அன்று, உலக சோசலிச வலைத் தளம் கோவிட்—19 பெருந்தொற்று விவகாரங்களிலான உலகளாவிய தொழிலாளர்களது உண்மையறியும் விசாரணை முன்னெடுப்பைத் தொடக்கியது. பெருந்தொற்றில் மில்லியன் கணக்கான மக்கள் சந்தித்த தவிர்த்திருக்கத்தக்க மரணங்களுக்குப் பொறுப்பான கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காய் நிலைநிறுத்தப்படுகின்ற, தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற மூடிமறைப்புகள், பொய்மைப்படுத்தல்கள், மற்றும் பொய்த்தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு இந்த விசாரணை அவசியமாயுள்ளது.

62. உண்மையறிதல் விசாரணைக்கான இந்த அழைப்பானது SARS—CoV—2 ஐ உலகளவில் ஒழிப்பதற்கான போராட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் இருந்து உருவாகியிருந்தது. உலகளாவிய ஒழிப்புக்கான ஒரு மூலோபாயத்தின் அவசியம் மற்றும் சாத்தியத்தை நிரூபிக்கும் விரிவான விஞ்ஞான தகவல்களை வழங்கிய ஆகஸ்டு 22 மற்றும் அக்டோபர் 24 அன்று நடத்தப்பட்ட இரண்டு சர்வதேச இணையவழி கருத்தரங்குகளும் இதில் அடங்கும். அக்டோபர் 24 கருத்தரங்கின் அறிமுகத்தில், உலக சோசலிச வலைத் தளம், பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டம் அடித்தளமாகக் கொண்டிருக்கும் கோட்பாடுகளை எடுத்துரைத்தது:

1. கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் Sars-CoV-2 இன் இலக்கு தனிநபர்கள் அல்ல, மாறாக அது ஒட்டுமொத்த சமூகத்தையும் குறி வைக்கிறது. அந்த வைரஸ் பரவும் விதம் பாரிய நோய்தொற்று ஏற்படுவதை நோக்கி உள்ளது. Sars-CoV-2 பில்லியன் கணக்கானவர்களைத் தாக்க உயிரியல்ரீதியில் பரிணமித்துள்ளது, அவ்விதம் செயல்படுகையில் மில்லியன் கணக்கானவர்களை உயிரிழக்கச் செய்கிறது.

2. எனவே, ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த வைரஸை அகற்றுவதை இலக்காகக் கொண்ட ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயமே ஒரே பயனுள்ள மூலோபாயமாகும். இந்த பெருந்தொற்றுக்குப் பயனுள்ள ஒரு தேசிய தீர்வு என்று எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த மனிதகுலமும் —அனைத்து இனங்களும், இனவழிகளும் மற்றும் அனைத்து தேசியத்தை சார்ந்தவர்களும்— சுயநலமின்றி ஓர் உண்மையான பரந்த உலகளாவிய கூட்டு முயற்சியின் மூலம் இந்த சவாலை எதிர்கொண்டு, வென்றாக வேண்டும்.

3. இந்த பெருந்தொற்று வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட அத்தனை அரசாங்கங்களும் பின்பற்றி வரும் கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். சமூகக் கொள்கையின் கேள்விக்கிடமற்ற முன்னுரிமையாக இருக்க வேண்டியதை, அதாவது மனித உயிர்களின் பாதுகாப்பை, பெருநிறுவன இலாப நலன்கள் மற்றும் தனியார் செல்வக் குவிப்புக்கு அடிபணிய செய்வதைத் தொடர அனுமதிக்க முடியாது.

4. உலகளவில் அகற்றுவதை நோக்கிய ஒரு தீர்க்கமான திருப்பத்தை கொண்டு வரும் முன்முயற்சி, மில்லியன் கணக்கான மக்களின் சமூகரீதியில் நனவான இயக்கத்திலிருந்து எழுந்து வந்தாக வேண்டும்.

5. இந்த உலகளாவிய இயக்கம் விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சியை உள்ளீர்த்திருக்க வேண்டும். விஞ்ஞானிகள் பலர் அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களின் உயிரையே கூட ஆபத்தில் வைத்து உழைத்து வருகின்றனர் என்கின்ற நிலையில், விஞ்ஞானிகளை துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இந்த வைரஸை உலகளவில் அகற்றுவதற்கு சமூகத்தின் மிகப் பரந்த மக்களாக இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் விஞ்ஞான சமூகத்திற்கும் இடையே நெருக்கமான கூட்டுழைப்பு அவசியப்படுகிறது.

63. முந்தைய ஆண்டின் காலத்தில் முக்கிய முதலாளித்துவ நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் கொள்கையின் மையப் புள்ளியாக இருந்த, “தடுப்பூசி—மட்டும்” மூலோபாயமானது தோல்வி கண்டு விட்டிருந்தது என்பதை இந்த உண்மையறியும் விசாரணை முன்னெடுப்பைத் தொடங்கிவைத்த தனது அறிக்கையில் WSWS விளக்கியது. உலகின் பெரும்பான்மையினர் இன்னமும் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல, “தடுப்பூசிகளை மந்தவேகத்தில் செலுத்தத்தின் மத்தியில் பாரிய தொற்றுகள் தொடர்வதென்பது ஒரு தடுப்பூசி—எதிர்ப்பு தொற்றுவகையை உருவாக்க அச்சுறுத்துகிற பரிணாமவளர்ச்சி நெருக்குதலை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர்” என்று WSWS எழுதியது. இதற்கு நான்கு நாட்கள் பின்னர், ஒமிக்ரோன் வகை அடையாளம் காணப்பட்டதாக வந்த அறிவிப்பில் இந்த எச்சரிக்கை ஊர்ஜிதம் கண்டது.

64. உண்மையறியும் விசாரணை முன்னெடுப்பு தொடங்கப்பட்டது முதலான ஐந்து வாரங்களில், இந்த விசாரணையானது நடந்தேறிக் கொண்டிருக்கும் அழிவின் காரணங்கள் மற்றும் பின்விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து சாட்சியங்களை சேகரிக்கத் தொடங்கியிருக்கிறது. என்ன நடந்து கொண்டிருக்கிறது, மற்றும் இந்த பெருந்தொற்றை இறுதியாக நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதலைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க இந்த விசாரணை இன்றியமையாத அவசியமாய் உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகள்

65. பெருந்தொற்றின் மூன்றாவது ஆண்டில் நாம் நுழைகின்ற வேளையில், பெருந்தொற்றை “நிரந்தரத் தொற்று” ஆக்குகின்ற, அதாவது சமூகத்தின் ஒரு நிரந்தரமான அம்சமாக இந்த வைரஸ் ஆவதை அனுமதிக்கின்ற ஒருகொள்கையை, ஆளும் வர்க்கம் பின்பற்றிக் கொண்டிருப்பது தெளிவாகி இருக்கிறது. தனது செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்வது மற்றும் இலாப அமைப்புமுறையை பராமரிப்பது என்று வரும்போது, ஆளும் வர்க்கம் இத்தனை உயிரிழப்புகள் வரை சகித்துக் கொள்ளும் என்றான எந்த வரம்பும் அங்கே இல்லை. ஆனால் தவிர்த்திருக்கக் கூடிய மரணங்களினால் மில்லியன் கணக்கான மக்கள் இறந்துள்ளதையும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்து இறப்பதையும் பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் அமைதியாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

66. பெருந்தொற்றுக்கு முன்பே, சோசலிசப் புரட்சிக்கான புற நிலைமைகள் அசாதாரணமான மட்டத்திற்கு ஏற்கனவே அபிவிருத்தி கண்டிருந்தன. 2020 தொடக்கத்தில், முந்தைய சகாப்தத்தில் அபிவிருத்தி கண்டிருந்த ஆழமடைந்து சென்றிருந்த பொருளாதார, அரசியல், புவியரசியல் மற்றும் சமூக நெருக்கடி குறித்து திறனாய்வு செய்த ஒரு அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம்எழுதியது, “புத்தாண்டு வருகையானது தீவிரமடையும் வர்க்கப் போராட்டம் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு தசாப்தம் தொடங்குவதைக் குறிக்கிறது.”

எதிர்காலத்தில், புத்திசாதுர்யமான வரலாற்றாசிரியர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டின் எழுச்சிகள் பற்றி எழுதுகின்றபோது, 2020களின் தொடக்கத்தில் நிலவிக் கொண்டிருந்த, விரைவில் உலகெங்கும் வியாபிக்கவிருந்த புரட்சிகரப் புயலின் “வெளிப்படையான” அறிகுறிகளைப் பட்டியலிடுவார்கள். உண்மைகளின் ஒரு விரிவான தொகுப்பு, ஆவணங்கள், வரைபடங்கள், வலைத் தள மற்றும் சமூக ஊடக பதிவுகள், மற்றும் தாங்கள் கையாளக்கூடிய மற்ற மதிப்புமிக்க டிஜிட்டல் தகவல் வடிவங்களின் மூலமாக, அறிஞர்கள், 2010 களை உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கமுடியாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் குணாதிசயப்படுத்தப்பட்ட ஒரு காலகட்டமாக விவரிப்பார்கள்.

67. அதாவது உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய—அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்களது தனியார் உடைமைத்துவத்திற்கும் இடையிலான உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் மையமான முரண்பாடுகள் பாரிய, புரட்சிகரப் போராட்டங்களுக்குரிய நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றன.

68. எனினும், ஒரு புரட்சிகர சூழலின் அபிவிருத்தியானது இரண்டு கூறுகள் சம்பந்தப்பட்டதாகும்: ஒருபக்கத்தில் பழைய சமூகத்தின் புறநிலை முரண்பாடுகள், மறுபக்கத்தில் வெகுஜனங்களின் நனவு மற்றும் அரசியல் ஒழுங்கமைப்பு என்ற அகநிலைக் காரணி என்பனவே அவையாகும். எனினும், இந்த புறநிலை மற்றும் அகநிலைக் காரணிகளது இடைத்தொடர்பு என்பது சிக்கலான ஒன்றாகும். “ஒரு இயந்திர பழுதுபார்ப்பவர் தனது சாதனங்களை மாற்றிக் கொள்வதுபோல், தேவை எழும்போது சமூகம் அதன் ஸ்தாபகங்களை மாற்றிக்கொண்டு விடுவதில்லை” என்று ட்ரொட்ஸ்கி அவரது தலைசிறந்த ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நினைவுச்சின்ன நூலில் விளக்கினார்.

அதிருப்தியின் பழமைவாத சங்கிலிகளை தகர்த்தெறிந்து வெகுஜனங்களை கிளர்ச்சிக்குக் கொண்டுவருவதற்கு, மனிதர்கள் மற்றும் கட்சிகளின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட சுயாதீனமான முற்றிலும் விதிவிலக்கான சூழ்நிலைமைகள் அவசியமாயுள்ளன.

இவ்வாறாக, புரட்சியின் ஒரு சகாப்தத்தில் வெகுஜனக் கண்ணோட்டங்கள் மற்றும் மனோநிலைகளிலான சட்டென்ற பெரும்மாற்றங்கள், மனித மூளையின் நெகிழ்வுத்தன்மை மற்றும் நகர்வுத்தன்மையில் இருந்தல்ல, மாறாக அதற்கு நேரெதிராய், அதன் ஆழமான பழமைவாதத்தில் இருந்தே எழுகின்றன. புதிய புறநிலைமைகள் ஒரு பெருந்துயரின் வடிவில் மக்களின் முகத்திலறைந்து மோதுகின்ற தருணம் வரையில், சிந்தனைகளும் உறவுகளும் அந்நிலைமைகளுக்குக் காலத்தால் பின்தங்கியிருக்கின்ற நிலை தான், புரட்சியின் ஒரு காலகட்டத்தில் சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளது ஒரு பாய்ச்சல் இயக்கத்தை (போலிஸ் கண்களுக்கு இது வெறுமனே “வாய்வீச்சாளர்களின்” நடவடிக்கைகளின் ஒரு விளைவாகத் தெரிகிறது) உருவாக்குவதாகும். [6]

69. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின், அதன் அரசியல் ஸ்தாபகங்களின் மற்றும் வர்க்க கட்டமைப்பின் காலாவதியான தன்மையையும் மீட்சிக்கு வழியற்ற பிற்போக்குத் தன்மையையும் அம்பலப்படுத்தியிருக்கின்ற பெருந்தொற்றின் பேரிடரானது வேலைநிறுத்தங்களையும் சமூக போராட்டங்களின் பிற வடிவங்களையும் தூண்டுகின்றதாக மட்டும் இருக்கவில்லை, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் நனவை ஆழமாக மாற்றுவதாகவும் இருக்கிறது. பல தசாப்தங்களாக நிதியாதார பற்றாக்குறையுடன், அலுவலர் பற்றாக்குறையுடன், அளவுகூடிய மாண்வர்கள் எண்ணிக்கையுடன் நடத்தப்பட்டு வந்த பள்ளிகள் மூடப்படுவதைக் குறித்து ஆளும் வர்க்கம் கபடத்தனமாக புலம்புகிறது. அது அஞ்சுவது முறையான கல்வி இல்லாமல் போய்விடுகிறதே என்பதற்காக அல்ல. பள்ளிகளுக்கு வெளியில் இருக்கும்போது, இளைஞர்கள் சிந்திப்பதை நிறுத்தி விடுவதில்லை என்பதை அரசாங்கங்கள் அறியும். இந்த பெருந்தொற்று தனது சொந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது, முதலாளித்துவ சமூகத்தின் இயல்பை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

70. எனினும் நனவு ஆழமான மாற்றத்திற்குள் செல்லும் வேளையில், புரட்சிகரத் தலைமை குறித்த கேள்வி அங்கே அப்படியே தான் இருக்கிறது. சோசலிச நனவு அதாவது, முதலாளித்துவ சமூகத்தையும் சமூகத்தை உருமாற்றுவதற்கு அவசியமான அரசியல் வேலைத்திட்டம் குறித்துமான விஞ்ஞானரீதியான புரிதல் தன்னிச்சையாக அல்லது தானாக வந்துவிடுவதில்லை. புறநிலை நெருக்கடி சோசலிசத்திற்கான ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாறுவது தான் நமது காலத்தின் மாபெரும் சவாலாய் இருக்கிறது.

71. மனிதகுலம் மாபெரும் சமூகப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கும்போது, என்ன சாதிக்க முடியும் அல்லது முடியாது என்பதைக் குறித்த செயலற்ற ஊகங்களைக் காட்டிலும் வீணான — பயனற்ற என்பதை சொல்லவும் வேண்டியதில்லை— ஒன்று இருக்க முடியாது. முன்னேற்றத்திற்கான பாதை ரோஜா பூக்களால் நிரம்பியிருக்க, நெருக்கடியின் ஒரு காலகட்டம் வந்ததாக எப்போதும் இருந்தது கிடையாது. அப்படியான வரலாற்றுத் தருணங்களில், லிங்கன் ஒருமுறை கூறியதைப் போல, “அச்சந்தர்ப்பம் கஷ்டங்கள் மலைபோல் குவிந்திருப்பதாக இருக்கிறது”. தொழிற்சங்கங்களின் மற்றும் பழைய முன்னாள்—சீர்திருத்தவாத மற்றும் முன்னாள்—தாராளவாத முதலாளித்துவக் கட்சிகளின் கையாலாகாத்தனம் மற்றும் அப்பட்டமான துரோகத்தைக் குறித்து புகார் சொல்லிக் கொண்டிருப்பது முன்னிருக்கும் முக்கியமான வேலைகளில் இருந்து கவனத்தை சிதறடிப்பதாக இருக்கும். இந்த அமைப்புகள், அவற்றின் பிரதிநிதிகள் மற்றும் உடந்தையாளர்கள் முற்றிலும் சீரழிந்து போயுள்ளனர்.

தீர்க்கமான மற்றும் அயராத போராட்டம் இல்லாமல் இப்போதைய பேரிடரில் இருந்து வெளியேற வழியிருக்கவில்லை எனும் போது, பாசிசம், போர், மற்றும் பூகோளத்தில் ஏற்படுத்தப்பட்ட மீழவியலாத சுற்றுச்சூழல் சேதம் போன்ற உருப்பெருத்துக் கொண்டிருக்கும் பேரழிவுகளைக் குறித்து நாம் கூறவும் தேவையில்லை.

73. வரலாற்று சடவாதத்தின் அடிப்படையிலான மார்க்சிசமானது, உண்மையான வெகுஜன புரட்சிகர இயக்கங்களுக்கு வித்திடுகின்ற, நியதிகளால்—ஆளப்படுகின்ற, நிகழ்ச்சிப்போக்குகளைக் குறித்து மிக நன்றாய் அறிந்து வைத்திருக்கிறது. எனினும் புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் வெகுஜனங்களிடம் இருந்தான நடவடிக்கையின் அவசியம் ஆகியவற்றைப் புரிந்து வைத்திருப்பது என்பது தனிமனிதர் செயலற்று இருப்பதற்கான ஒரு காரணமாக ஒருபோதும் ஆவதில்லை. தனிமனிதர்கள் முடிவுகளை —சமத்துவமின்மையை, அநீதியை மற்றும் ஒடுக்குமுறையை எதிர்க்கும் முடிவு உள்ளிட— எடுக்கிறார்கள். தனிமனிதர்கள் போராடுவதற்கான நனவான முடிவை எடுக்காமல் எந்தவொரு மாபெரும் வெகுஜன புரட்சிகர இயக்கமும் இருந்ததில்லை, ஒருபோதும் இருக்கவும் முடியாது.

74. ஆகவே, புத்தாண்டில் நாம் நுழைகிற வேளையில், கடந்த இரண்டாண்டு கால நெருக்கடியில் இருந்து, இன்னும் சொன்னால் வரலாற்றில் இருந்து, அத்தியாவசியமான மற்றும் தவிர்க்கமுடியாத அரசியல் படிப்பினைகளைத் எடுத்துக்கொள்வதற்கு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம். முதலாளித்துவம் தன்னைத் தானே தண்டித்துக்கொள்கிறது. மனிதகுலத்தின் வருங்காலம் சோசலிசத்தின் வெற்றியை சார்ந்திருக்கிறது. இந்த போராட்டத்தில் இணையுங்கள். சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேசக் கூட்டணியைக் கட்டியெழுப்புங்கள்! கோவிட்—19 பெருந்தொற்று தொடர்பான உலகளாவிய தொழிலாளர் உண்மையறியும் விசாரணைக் குழுவில் பங்குபெறுங்கள்! உலக சோசலிச வலைத் தளத்தின் பரவல் எண்ணிக்கையை விரிவுபடுத்துங்கள்! எல்லாவற்றுக்கும் மேல், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவது என்ற முடிவினை எடுத்து சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புங்கள்!

அடிக்குறிப்புகள்:

[1] A History of Public Health, by George Rosen (Baltimore: The Johns Hopkins University Press, 1958), p. lxxxix

[1] “Social Stress and Mental Disease from the Eighteenth Century to the Present: Some Origins of Social Psychiatry,” in The Milbank Memorial Fund Quarterly, Jan. 1959, Vol, 37, No. 1, p. 9

[2] The Permanent Revolution (Seattle: Red Letter Press, 2010), p. 313

[3] Spider Web: The Birth of American Anticommunism, by Nick Fischer (Urbana: University of Illinois Press, 2016), p. 8

[4] Workers League Internal Bulletin: 10thPlenum of the ICFI, May 1990, Remarks by David North, p. 13

[5] The History of the Russian Revolution (London: Pluto Press, 1977), p. 18.

Loading