கிராமடோர்ஸ்க் ஏவுகணை தாக்குதல் பற்றிய விடையளிக்கப்படாத கேள்விகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது

கிரமடோர்ஸ்க் இரயில் நிலையத்தில் குறைந்தது 50 பேரைக் கொன்ற ஏவுகணை எந்த விசாரணையும் இல்லாமல் உடனடியாக ரஷ்ய போர்க்குற்றம் என்று கண்டிக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை கேள்விக்குட்படுத்துவதற்கான காரணங்கள் உள்ளன.

நியூ யோர்க் டைம்ஸ், “உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமையர் செலென்ஸ்கி, டோச்கா-யு (Tochka-U) குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை என அவர் அடையாளம் கண்டதைக் கொண்டு ரஷ்யா அந்த நிலையத்தைத் தாக்கியதாகக் கூறினார்...” என்று தெரிவிக்கிறது.

ஏப்ரல் 8, 2022 வெள்ளிக்கிழமை, உக்ரைனின் கிராமடோர்ஸ்கில் உள்ள இரயில் நிலையத்தில் ரஷ்ய ஷெல் தாக்குதலுக்குப் பின்னர் உக்ரேனிய படைவீரர்கள் டோச்கா-யு ஏவுகணையின் ஒரு பகுதிக்கு அருகில் நிற்கிறார்கள் (AP Photo/Andriy Andriyenko)

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், டோச்கா-யு ஏவுகணைகளை உக்ரேன் இராணுவம் பயன்படுத்துவதாக கூறியுள்ளது. இது நிச்சயமாக உண்மை. மார்ச் 30 அன்று “1945” என்ற இணையப் பதிப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை: “டோச்கா: ரஷ்யாவைத் தாக்க உக்ரைன் ஏவுகணை பயன்படுத்த முடியுமா?” என்ற தலையங்கத்துடன் வெளியிடப்பட்டது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

1945 இன் Defense and National Security ஆசிரியர் பிரென்ட் எம். ஈஸ்ட்வூட், 'உக்ரேனியர்களிடம் டோச்கா என்று அழைக்கப்படும் குறுகிய தூர ஏவுகணை உள்ளது. அது அதன் இருப்பை இப்பொழுது வெளிப்படுத்துகின்றது' என்று அறிவித்தார். அறிக்கை தொடர்கிறது:

டோச்கா கட்டிடங்களை அழிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. மற்றும் டொனெட்ஸ்கில் மார்ச் 14 அன்று 23 பேரைக் கொன்ற தாக்குதலில் ரஷ்ய-சார்பு பிரிவினைவாதிகள் தங்கியிருந்த ஒரு கட்டமைப்பைத் தூள்தூளாக்க உக்ரேனியர்கள் அதைப் பயன்படுத்தியிருக்கலாம்.

தாங்கள் ஏவுகணையை வீசியதாக உக்ரைனியர்கள் மறுத்தனர். இருப்பினும், ரஷ்யர்கள் மற்றொரு டோச்கா ஏவுகணையை மார்ச் 19 அன்று சுட்டு வீழ்த்தியதாகக் கூறினர். குற்றச்சாட்டுகள் மற்றும் மறுப்புகளின் உண்மை எதுவாக இருந்தாலும், உக்ரேனியர்களிடம் 90 முதல் 500 ஏவுகணைகள் இருப்பதாக ஈஸ்ட்வூட் எழுதுகிறார்.

ஈஸ்ட்வூட் வழங்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், உக்ரேனிய டோச்கா ஏவுகணைகள் 'டொன்பாஸ் மற்றும் நாட்டின் தெற்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.' கிராமடோர்ஸ்க் நகரம் டொன்பாஸ் பகுதியில் அமைந்துள்ளது.

உக்ரேனிய இராணுவம் டோச்கா ஏவுகணைகளின் ஆயுதக் களஞ்சியத்தை வைத்துள்ளது. கடந்த மாதம் டொனெட்ஸ்கில் 23 ரஷ்யர்களைக் கொன்ற தாக்குதலில் (பெரும்பாலும் அமெரிக்க ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது) அத்தகைய ஏவுகணை பயன்படுத்தப்பட்டது என்பது கிராமடோர்ஸ்கை தாக்கிய அந்த ஏவுகணையை உக்ரேன் ஏவியது என்பதை நிரூபிக்கவில்லை.

ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் இவ்வளவு முக்கிய பங்கு வகிக்கும் அட்டூழிய பிரச்சாரத்திற்கு எரியூட்டும் என்பதை அறிந்த உக்ரேனிய இராணுவம், அதன் இரக்கமற்ற பாசிசக் குழுக்களுடன் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்பது முற்றிலும் நிகழக்கூடியதும், சாத்தியமும் கூட.

“குழந்தைகளுக்காக” என கையால் எழுதப்பட்ட ரஷ்ய மொழி செய்தியுடன் கூடிய ஏவுகணைப் பகுதியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது, நிலையத்தின் மீதான தாக்குதல் பிரச்சார நோக்கங்களுக்காக நடத்தப்பட்டது என்பதற்கு வலுவான அறிகுறியாகும். புச்சா சம்பவத்தின் மீதான பரபரப்பின் மத்தியில், அப்பாவி பொதுமக்கள் கூட்டத்தின் மீது ஏவுகணையை சுடத் திட்டமிட்ட ரஷ்ய இராணுவம் இதுபோன்ற ஒரு ஆத்திரமூட்டும் மற்றும் சுய-குற்றச்சாட்டு செய்தியை எழுதிவைக்கும் என்பது நம்ப முடியாத ஒன்றாகும். இது என்ன பிரயோசனமான நோக்கத்திற்கு உதவலாம்? சரியாகப் வாசிக்கக்கூடிய எழுத்துக்களுடன் இந்த ஏவுகணையின் பகுதியின் கண்டுபிடிப்பு, மிகவும் தற்செயலான நிகழ்வு என்று யார் தான் நம்பமாட்டார்கள்?

உக்ரேனிய ஆட்சிக்கு அது விரும்பியதைச் செய்வதற்கான முழு சுதந்திரமும் உள்ளது. ஏனென்றால் ஊடகங்கள் உடனடியாக எந்த விசாரணையும் இல்லாமல் ரஷ்யர்களைக் குற்றம் சாட்டும்.

Loading