மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரெஞ்சு தேர்தல்களின் இரண்டாம் சுற்றுக்கு முன்னதாக, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் மரின் லு பென் ஆகியோர், தாம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையான வாக்குகளைப் பெறுவதற்காக சிடுமூஞ்சித்தனமாக தங்கள் ஊடக விம்பத்தை பெருக்கி வருகின்றனர். மிக விரைவில் வர இருக்கும் இரண்டாவது சுற்று தேர்தலுக்கு, இந்த இரண்டு வேட்பாளர்களும், 22 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த, அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI) ஜோன்-லூக் மெலோன்சனின் வாக்காளர்களை நோக்கித் திரும்பியுள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சி (PES) இந்த இரண்டு பிற்போக்கான வேட்பாளர்களையும் எதிர்ப்பதோடு, மக்ரோன் மற்றும் லு பென் இருவரையும் நிராகரிக்குமாறும், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை சூழ, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடுமாறும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
2017 இல் மரின் லு பென்னுக்கு எதிராக 66.1 சதவீத வாக்குகளுடன், 33.9 சதவீத அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோன், இத்தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகவில்லை. கடந்த 2017 தேர்தலைப் போலன்றி, மக்ரோனுக்கு பெரிய அளவில் தற்போது ஆதரவு இல்லை. ஐந்தாம் குடியரசில் ஆட்சி செய்த, தற்போது மக்ரோனுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ள பாரம்பரிய கட்சிகளான கோலிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்ட்டுக்கள், முறையே 4.8 சதவிகிதம் மற்றும் 1.8 சதவிகித வாக்குகளுடன் திவாலாகியுள்ளன. மீதமுள்ள சில வாக்காளர்கள் கூட மக்ரோனுக்கு வாக்களிக்கப் போவதில்லை.
முதல் சுற்ல் 7 சதவிகிதம் பெற்ற அதி தீவிர வலதுசாரி ஊடக பண்டிதர் எரிக் செமூரின் வாக்குகளை மரின் லு பென் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி ஊடகங்கள், ஏப்ரல் 24 வாக்கெடுப்புக்கு முன்னதாக இரு வேட்பாளர்களுக்கும் இடையே உள்ள வாக்கு இடைவெளி குறைவதால், மரின் லு பென்னுக்கு வெற்றி வாய்ப்புக்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கின்றது. மார்ச் 12 அன்று, கருத்துக்கணிப்பில் மக்ரோன் 58 சதவீதமாக இருந்தார். இரண்டாவது சுற்றுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், மக்ரோனுக்கு 51.9 சதவீதம் மட்டுமே உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
முதல் சுற்று தேர்தலுக்கு முன்பு மக்ரோனுடைய ஒரு ஆலோசகர், நவ-பாசிஸ்டுகளுக்கு எதிரான அனைத்து முதலாளித்துவக் கட்சிகளாலும் உருவாக்கப்பட்ட பொதுவான 'குடியரசு முன்னணி' தற்போது இல்லை என்பதால், மக்ரோனுக்கும், லு பென்னுக்கும் இடையிலான போட்டி “கடினமான சண்டையாக இருக்கும்” என்று அஞ்சியுள்ளார். Elabe கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தலைவரான Bernard Sananès பின்வருமாறு கூறினார்: 'குடியரசு முன்னணி ஏற்கனவே 2017 இல் சிக்கலில் இருந்தது, ஆனால், அது இப்போது மருத்துவ ரீதியாக இறந்துவிட்டது.'
L'Obs க்கான Odoxa கருத்துக் கணிப்பின்படி, இரண்டு வேட்பாளர்களில் யாரைத் தடுக்க அதிகமான பிரெஞ்சு மக்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு, இப்போது மரின் லு பென்னை விட (18 சதவிகிதம்) இமானுவல் மக்ரோனை (19 சதவிகிதம்) அவர்கள் தடுக்க விரும்புகிறார்கள்.
எந்த வேட்பாளரின் வெற்றியும் ஜோன்-லூக் மெலோன்சனின் வாக்காளர்களை பொறுத்தே அமையும். குறிப்பாக போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அவர் 22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். மார்சைய் மற்றும் பாரிஸ் பெருநகரப் பகுதியில் முதல் இடத்தைப் பிடித்த மெலோன்சோன், லியோனில் சிறப்பாக இரண்டாவது இடத்தைப் பிடித்து, மேயர் பதவியை வைத்திருக்கும் பசுமைக் கட்சி மற்றும் லு பென்னைவிட மிகவும் முன்னேறினார்.
ஜோன்-லூக் மெலோன்சனின் வாக்காளர்களில் முப்பத்தொன்பது சதவீதம் பேர் மக்ரோனுக்கு இரண்டாவது சுற்றிலும், 24 சதவீதம் பேர் லு பென்னுக்கும் வாக்களிக்க உள்ளனர் என்று ஒரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மீதமுள்ள 37 சதவீதம் பேர் வாக்களிக்காமல் வெற்றுவாக்காகவோ, அல்லது வாக்குகளை செலுத்தாமல் இருக்வோ திட்டமிட்டுள்ளனர்.
மக்ரோனும், மரின் லு பென்னும் இதை நன்கு புரிந்துகொண்டு, மெலோன்சோனின் வாக்காளர்களுக்கு அழைப்புக்களை விடுப்பதன் மூலம் இரண்டாவது முறையாக தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளனர். அரசாங்க உறுப்பினர்களின் கூற்றுப்படி, ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தும், மிகவும் மதிப்பிழந்த ஓய்வூதிய வெட்டுக்கு திட்டமிடும் மக்ரோன், சிடுமூஞ்சித்தனமாகவும் மிகவும் 'கவனமாகவும்' தனது முகத்தை வைத்திருக்க முயற்சிக்கிறார். பிரான்சின் வடக்கே ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்த அவர், ஓய்வூதிய வெட்டு உட்பட 'எந்த ஒரு சீர்திருத்தத்திற்குமான வாக்கெடுப்பை நிராகரிக்க முடியாது' என்று அவர் கூறினார்.
இந்த திட்டங்களுக்கு தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாக மக்ரோன் வலியுறுத்தினார். “இதற்கு 2031 இல் [ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு] காலக்கெடு உள்ளது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மற்றும் நிலைமை மிகவும் பதட்டமாக இருப்பதாக நான் உணர்ந்தால், அதை மறுபரிசீலனை செய்ய தயாராக இருக்கிறேன். இது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் உடனடியாக விவாதிக்க விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது முதல் தேர்தல் பிரச்சாரத்திற்காக, மெலோன்சனுக்கு வாக்களித்த, பிரான்சின் தெற்கு நகரமான மார்சைக்கு சென்றார். புதன்கிழமை காலை France2 தொலைக்காட்சியில், அவர் 'Quotidien' பத்திரிகையாளர்கள் மீது மரின் லு பென் வைத்த கருத்துக்களை தாக்கியும் மற்றும் மரண தண்டனை பற்றியும் பேசினார். “மக்களிடம் கருத்து கேட்பது என்ற போலிக் காரணத்தின் கீழ் அரசியலமைப்பை மாற்றியமைப்பதை கொண்டிருப்பது, பத்திரிகையாளர்களை தெரிவுசெய்வதை கொண்டிருப்பது, அன்றே நமக்கு கூறுவதை கொண்டிருப்பது, என்பது லு பென்னின் வழிமுறை”, ‘மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டுமா? நிச்சயமாக, நாங்கள் மக்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்காத வரை நான் அதற்கு எதிரானவன் அல்ல, என்று மக்ரோன் விமர்சித்தார்.
செவ்வாயன்று மரின் லு பென், பிரான்சின் நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக செயல்பாடுகளை 'புத்துயிர் பெற' விரும்புவதாக வெர்னோனில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் 'வாக்கெடுப்பு புரட்சியை' முன்மொழிந்தார். “பொது வாக்கெடுப்பு ஆபத்தானது அல்ல, மக்களுக்கு ஒரு கருத்தைக் கொடுப்பது ஆபத்தானது அல்ல, ஆபத்தானது அதை அவர்களுக்குக் கொடுக்காமல் இருப்பது” என்று அவர் மேலும் கூறினார்.
மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தம் மற்றும் இடதுசாரி வாக்குகளைப் பெறுவதற்கான அவரது சூழ்ச்சியை, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் லு பென் விமர்சித்தார். “இந்த விடயத்தில் இமானுவல் மக்ரோனிடம் இருந்து எதிர்பார்க்க எதுவும் இல்லை. உண்மையில், ஓய்வுபெறும் வயதை 65 ஆக்குவதில் அவர் ஆவேசமாக உள்ளார்: அவர் இதைப் பற்றி பேசுகிறார், அவர் திட்டமிடுகிறார், மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சீர்திருத்தத்தை அவரால் மேற்கொள்ள முடியவில்லை என்பதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை. அனைத்து பிரெஞ்சு மக்களும் மிகவும் புத்திசாலிகள், இது, இடதுசாரி வாக்காளர்களின் எதிர்ப்பை மீட்டெடுக்க அல்லது குறைந்தபட்சம் தணிக்க இமானுவல் மக்ரோனின் சூழ்ச்சி என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.
மரின் லு பென் TF1 தொலைக்காட்சிக்கு, பிரெஞ்சு மக்களுக்காக 'மிகவும் பாதுகாப்பான திட்டத்தை' கொண்டிருப்பதாகவும் 'தனது திட்டத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பையும்' பாராட்டுவதாகவும் கூறினார். புதன்கிழமை காலை, அவர் ஒரு சிமெண்ட் தொழிற்சாலைக்குச் சென்று, பிரான்ஸ் 'வரவிருக்கும் பணவீக்கச் சுவரை எதிர்கொள்கிறது'... விலைகள் அதிகரித்து வருகின்றன, வரும் வாரங்களில் மேலும் அது உயரும். இதற்கு அரசாங்கத்தின் மறுப்பு வடிவம் உள்ளது. மக்ரோனுடைய பிரான்ஸ் அது ஒரு பிரான்ஸ் ஆகும், அது நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மக்ரோன் அல்லது மரின் லு பென்னிடம் இருந்து ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது. அத்தோடு, லு பென்னின் கொள்கைகளின் அதி தீவிர வலதுசாரித் தன்மை பற்றிய மக்ரோனின் விமர்சனம் அல்லது மக்ரோனின் சமூகக் கொள்கைகள் மீதான லு பென்னின் தாக்குதல்களை பற்றி ஒருபோதும் பொருட்படுத்தக்கூடாது.
மக்ரோன் ஒரு வன்முறையான பிற்போக்குத்தனமான கொள்கையை பின்பற்றி வருகின்றார். ஆணைகள் மூலம், அவர் பாரிய பணிநீக்கங்களை எளிதாக்கும் தொழிலாளர் சட்டத்தை திணித்து, பெருமளவிலான இரயில்வே தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து, அவர்களது ஊதியத்தையும் குறைத்துள்ளார். செல்வாக்கற்ற மனிதரான மக்ரோன், 'மஞ்சள் சீருடை' இயக்கத்திற்கு எதிராக நாஜி ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானுக்கு வணக்கம் செலுத்தி, அதி தீவிர வலதுசாரிகளை வளர்த்தெடுத்தார். அத்தோடு, அதி வலதுசாரி அமைப்பான Action française இன் ஆதரவாளரான, அவரது உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானன், மரின் லு பென் இஸ்லாம் மீது 'மென்மையாக' இருக்கிறார் என்று கூறியதோடு, முஸ்லீம் அமைப்புகள் மீது பாரபட்சமான கடமைகளை சுமத்தும் சட்டத்தை உருவாக்கினார்.
உலகளாவிய COVID-19 தொற்றுநோயில், மக்ரோன் 'வைரஸுடன் வாழ்வது' என்ற ஐரோப்பிய கொள்கையைப் பின்பற்றினார், இது ஐரோப்பாவில் 1.8 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த இழிவான பதிவு, இப்போது லு பென்னை மக்களின் சமூக உரிமைகளின் பாதுகாவலராகக் காட்டிக் கொள்ள அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், லு பென் ஒரு நவ-பாசிஸ்ட், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்கள் உட்பட, மக்ரோனின் இரத்தம் தோய்ந்த கொள்கைகளைப் பின்பற்றுவார். லு பென்னின் கொள்கைகள், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்ரோனின் கொள்கைகள் போன்றவை. எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்யாவுடனான போருக்கான நேட்டோவின் உந்துதல், உலகளாவிய பணவீக்கம் மற்றும் உலகளவில் தொற்றுநோயால் ஏற்படும் பயங்கரமான உயிர் இழப்புகள் ஆகியவற்றால் இவர்களது கொள்கைகள் வடிவமைக்கப்படும்.
இந்த இரண்டு பிற்போக்குத்தனமான வேட்பாளர்களுக்கு மாற்றீடாக, தொழிலாள வர்க்கத்தினை அரசியல் ரீதியில் சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு, இரண்டாம் சுற்றுத் தேர்தலில், செயலூக்கமிக்க புறக்கணிப்பை மேற்கொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் இருந்தும், தொற்றுநோய் மீதான ஆளும் உயரடுக்கின் விஞ்ஞான-விரோதக் கொள்கைகள் மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் சமூகத்தைச் சூறையாடுவதில் இருந்தும் பிரிக்க முடியாதது.