இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வரும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு, தொழிலாள வர்க்க சோசலிச வேலைத்திட்டத்தை பரிந்துரைப்பதற்காக, இணையவழி பகிரங்க கூட்டமொன்றை நடத்துகின்றன.
இந்தக் கூட்டம்ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும். ஸூம் வழியாக நடத்தப்படும் இந்த கூட்டம்சோ.ச.க. முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
சகிக்க முடியாத சமூக நிலைமைகள் சம்பந்தமாக வெடித்த முன்னெப்போதும் இல்லாத இப்போது நடந்து வரும் வெகுஜன எதிர்ப்புக்களால் இராஜபக்ஷ அரசாங்கம் ஆட்டங்கண்டுள்ளது. நீண்ட நேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரும் 'கோட்டா வீட்டுக்கு போ' (Go Home Gota) என்ற கோரிக்கையை சூழ வெகுஜன இயக்கம் ஒன்றிணைந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இந்தக் கோரிக்கையை ஆதரிப்பதுடன் அது ஏப்ரல் 7 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கை, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சோசலிச அரசியல் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கைக்கையும் வழங்குகிறது.
முதலாளித்துவ ஆட்சிக்கு விரோதமான உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் சகல சமூக எதிர்ப்பையும் கொடூரமாக நசுக்க 1978ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
கடந்த காலத்தில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகளை நசுக்குவதில் தொழிற்சங்கங்கள் வகித்த துரோகப் பாத்திரத்தை சுட்டிக் காட்டிய சோசலிச சமத்துவக் கட்சி, வெகுஜனங்களின் அனைத்து அவசர சமூகத் தேவைகளையும் நிவர்த்தி செய்ய, தொழிற்சங்கங்கள் சாராத நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.
முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கட்சிகளும், உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் எதிர்கொள்ளும் எரியும் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க இயலாயக்கற்றுள்ளதை விளக்கும் அந்த அறிக்கை, அந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்ட கொள்கைகளை அபிவிருத்தி செய்கிறது.
சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கு தேவையான ஒரு வேலைத் திட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கு சோ.ச.க. பரிந்துரைக்கிறது. இலங்கை தொழிலாள வர்க்கத்தின் இந்தப் போராடமானது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட அடுக்கினரை இந்த பகிரங்க இணையவழி கூட்டத்தில்பங்கேற்குமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் அழைக்கின்றன.
ஸூம் கூட்டத்திற்கு இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
- இலங்கை பிரதமர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அச்சுறுத்தும் உரையை ஆற்றினார்
- இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!
- பாரிய அரசாங்க எதிர்ப்பு எழுச்சியின் மத்தியில் இலங்கையின் தொழிற்சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?