இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஆடைத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு (AWAC-Sri Lanka) சுதந்திர வர்த்தக வலயங்களில் இராணுவத்தை நிலைநிறுத்துவதை எதிர்த்து, அதை உடனடியாக விலக்கிக்கொள்ள கோருமாறும் சுதந்திர வர்த்தக ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்வருமாறும் தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
சுதந்திர வர்த்தக வலயங்களில் இராணுவ நிலைநிறுத்தலானது ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் மே 6 நடந்த ஹர்த்தாலையும் (முழு அடைப்பு) அடுத்தே மேற்கொள்ளப்பட்டதாகும். நாடு முழுவதிலும் மில்லியன் கணக்காண பிற தொழிலாளர்களுடன் இணைந்து ஏப்ரல் 28 மற்றும் மே 6 பொது வேலை நிறுத்தங்களில் இலட்சக் கணக்காண சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் பங்குபற்றினர்.
ஜனாதிபதி கோடபாய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலக கோரியும், உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருள் போன்ற அத்தியவசியங்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விண்ணை முட்டும் விலை அதிகரிப்பையும் மற்றும் நாளாந்த மின்வெட்டை நிறுத்தவும் கோரி தொழிலாளர்கள் போராடினர்.
“தடைகள் இன்றி உரிய தொழிற்சாலைகளுக்கு அவர்களின் பிரயாணத்தை ஒழுங்குபடுத்தி அனைத்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கைப் பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக” முதலீட்டு சபை (BOI) அறிவித்தது. சுதந்திர வர்த்தக வலயங்கள் அனைத்தும் முதலீட்டுச் சபை என்ற அரச அதிகாரத்தின் கீழேயே உள்ளன.
பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளும் சுதந்திர வர்த்தக வலயத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக முதலீட்டு சபையின் பேச்சாளரளர் ஊடகத்துக்குத் தெரிவித்தார். “போராட்டகாரர் குழுக்கள் வளாகத்தில் நுழைந்து தொழிற்துறை நடவடிக்கையில் பங்குபற்றுமாறு தொழிலாளர்களை வெளியே அழைப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் கூற்று பொய்யானது. மில்லியன் கணக்கான தொழிலாளர்களைப் போலவே சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களும் தாங்கமுடியாத வாழ்க்கை நிலைமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே வேலை நிறுத்தத்தில் இணைந்தனர்.
மே 6 பொது வேலை நிறுத்தத்துக்குப் பின்னர் உடனடியாக நாடு முழுவதிலும் இராணுவத்தை அணி திரட்ட வசதியமைக்கும் அவசரகால நிலையை ஜனாதிபதி அறிவித்தார். இந்த அவசகாலச் சட்டத்தின் கீழ் பிடி ஆணை இன்றி மக்களை கைது செய்யவும் வேலை நிறுத்ங்கள், போராட்டங்கள் மற்றும் கூட்டங்களை தடை செய்யவும் ஊடங்குகள் மற்றும் ஊடக தணிக்கையை அமுல்படுத்தவும் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய பிற அமைப்புக்களை தடைசெய்யவும் கூடிய அதிகாரங்களுடன் இராணுவம் மற்றும் பொலிசை அவரால் நிலைநிறுத்த முடியும்.
ஜனாதிபதி, மே 10 அன்று, கலகக்காரர்கள் மற்றும் சூறையாடுபவர்கள் என அழைக்கப்படும் எவரையும் “கண்டதும் சுடுவதற்கான” அதிகாரங்களுடன் இராணுவத்தை வீதிகளில் அணிதிரட்டினார்.
நூற்றுக்காணக்கான விமானப் படை சிப்பாய்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த வேளையிலும் தொழிற்சாலை அமைந்துள்ள வலயத்தின் உள்பக்கம் அனுப்பப்படலாம்.
இந்த இராணுவ நிலைநிறுத்தலானது சுதந்திர வர்த்தக வலய தொழிலார்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரிய தாக்குதல் ஆகும். இந்த அடக்குமுறை நகர்வானது தனியார் மற்றும் அரச துறைகளில் ஏனைய தொழிலாளர் வர்க்க மையங்களுக்கும் விரிவாக்கப்படும் என ஆடைத் தொழிலாளர் நடவடிக்கை குழு எச்சரிக்கின்றது.
1600க்கும் அதிகமான தொழிற்சாலைகளை இயக்கும் முதலீட்டு சபையானது 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அநேகமான தொழிற்சாலைகள் 14 சுதந்திர வர்த்தக வலயங்களில் அடங்கியுள்ளன. சில நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சொந்தமானதுடன், மற்றையவை இலங்கை பெரும் வணிகங்களுடன் இணைப் பங்குதாரர்களாக உள்ளன. பெரும்பாண்மையான நிறுவனங்கள் சர்வதேச தரங்களுக்காக ஆடைகளை தயாரிக்கின்றன. அனைத்து உற்பத்திகளும் ஏற்றுமதிக்கானவை ஆகும்.
அரசாங்கம், முதலீட்டுச் சபை மற்றும் சுதந்திர வர்த்தக வலய நிறுவனங்களும் சமீபத்திய இரு பொது வேலை நிறுத்தங்களால் பீதியடைந்துள்ளன. சகல இடங்களிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளின் வழியில், சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களும் தமது தாங்கமுடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக போராட துரிதமாக முன்செல்கின்றனர்.
அரசாங்கமும் பெரு வணிகமும் நாட்டின் பொருளாதா நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகில் சுமத்துகின்றன. குறைந்த ஊதியங்கள் மற்றும் மோசமான வேலை நிலைமைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் மத்தியில் கோபம் பொங்குகின்றது.
முதலீட்டுச் சபை தலைவர் ராஜா எதிரிசூரிய, அனைத்து இலங்கையர்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வெளிநாட்டு நாணய வருவாய் துறைகள் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்தார். “கோவிட்-19 இல் இருந்து இன்று வரை பொருளாதாரத்தின் இயக்கத்தை பேணுவதற்கு ஏற்றுமதித் துறை மட்டுமே செயற்பட்டு வந்துள்ளன” என அவர் தெரிவித்தார். மே 6 நடந்த வேலை நிறுத்தத்தால் இலங்கை 22 மில்லியன் டொலரை இழந்துள்ளது என்ற விடயத்தை எதிரிசூரிய தூக்கிப் பிடித்ததோடு தொழிலாளர்கள் வேலையைத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.
தொழிலார்கள் மத்தியில் வளர்ந்து வரும் அமைதியின்மையால் தமது இலாபம் பாதிப்டையும் என முதலீட்டுச் சபையும் பல் தேசிய நிறுவனங்களும் வெளிப்பமையாக பீதியடைந்துள்ளன. அவர்கள் நெருக்கடியால் பாதிக்கப்ட்ட உலக சந்தையில் போட்டியிட மோசமான மற்றும் மேலதிக சுரண்டல் நிலைமைகளையும் கூட திணிக்கத் தயாராக உள்ளனர். தொழிலாளர்களை அச்சுறுத்தவும் அடுத்துவரும் போராட்டங்களை நசுக்குவதற்கும்அரசாங்ம் இராணுவத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
மே 2011இல், சகல கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்படையும் தமது ஓய்வுதியங்களான ஊழியர் சேம இலாப நிதியத்தை பாதுகாக்க தன்னிச்சையாக வேலையை நிறுத்தியது. நிராயுதபாணியான வேலைநிறுத்தக்காரர்கள் மீது பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ரொஷான் சானக என்ற தொழிலாளி கொல்லப்பட்டதுடன் டசின் கணக்கானோர் காயத்துக்குள்ளானர்கள். அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பாதுகாக்க கொடூரமாக இராணுவம் மற்றும் பொலிஸைப் பயன்படுத்தத் தயாராக உள்ளது.
கடந்த வாரம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினுள் பொலிஸ் தேடுதல்-வேட்டையை மேற்கொண்டது. கடந்த வாரம் மின்சார சபை தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலதிகமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள் எனவும் ஆனால் சட்டத்தரணிகளின் தலையீட்டின் பின்னர் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள் எனவும் ஒரு தொழிலி கூறினார்.
தொழிற் சங்கங்கள் இந்த இராணுவ நிலைநிறுத்தலை ஆதரித்தன. அவை, சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பாதுகாப்பு படைகளுடன் கலந்துறையாடலில் பங்குபற்றியதோடு “தொழிலாளர்களுக்கும் உடைமைகளுக்கும் அதிகபட்ச பாதுகாப்பை அவர்கள் வழங்குவார்கள்” என்ற போலிச் சாட்டில் படைகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்தன.
நிறுவனங்கள் மற்றும் அரசுடன் கூட்டுச்சேர்வதில் தொழிற்சங்கங்கள் பேர்போனவை. 2020 கோவிட்-19 பெருந்தொற்றின் ஆரம்பத்தில் குறுகிய முடக்கத்தின் பின்னர், சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. இதன் போது தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தும் கருவியாக செயற்பட்டன.
கட்டுநாயக்கவில் உள்ள நெக்ஸ் ஆடைத் தொழிற்சாலை மற்றும் ஸ்மார்ட் சேர்ட் போன்ற தொழிற்சாலைகளில் மோசமான வேலை நிலைமைகள், குறைந்த ஊதியங்கள் மற்றும் வேலை வெட்டுக்களுக்கு எதிராக கடந்த மற்றும் இந்த ஆண்டில் பல வேலைநிறுத்தங்கள் வெடித்தன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்துறை நடவடிக்கைகளைக் காட்டிக்கொடுத்தன.
நிறுவனங்கங்கள் மற்றும் அரசுக்கு சேவை செய்யவே தவிர தொழிலாளர்களுக்காகவோ அல்லது அவர்களின் தேவைகளுக்கு போராடவோ தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவம் செய்வதில்லை என மீண்டும் ஒரு முறை காட்டியுள்ளன. இப்போது அவை தொழிலாளர்களை அடக்குவதற்கான தயாரிப்பில் இராணுவத்தை நிலை நிறுத்துவதற்கு ஆதரவளிக்கின்றன.
தமது உரிமைகளுக்காகப் போராட தொழிற்சங்கங்கள் மற்றும் சகல முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து சுயாதீனமான ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கபட்ட நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு ஆடைத் தொழலாளர் நடவடிக்கை குழு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுகின்றது. முதலாளித்துவக் கட்சிகளைப் போன்றே தொழிற்சங்கங்களும் உங்களுக்கு எதிரானவையும் பெரு வணிகங்களைப் பாதுகாப்பவையும் ஆகும்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்தல் என்ற சாக்குப் போக்கில் சர்வதேச நாணய நிதியத்தால் உத்தரவிடப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை துரிதமாக அமுல்படுத்த புதிய பிரதமரை ஜனாதிபதி இராஜபக்ஷ நியமித்துள்ளார். ஆனால் அவரின் கொள்கைகள் தமது நெருக்டியை எங்கள் மீது திணிக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
எல்லா வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப் புறங்களில் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கான அதன் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக சோசலிச சமத்துவக் கட்சியால் ஆடைத் தொழிலாளர் நடவடிக்கை குழு ஸ்தாபிக்கப்பட்டது. அந்த நடவடிக்கை குழு, சகல இடங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு உதவி செய்ய தாயராக உள்ளது.
ஆடைத் தொழிலாளர் நடவடிக்கை குழுவானது தொழிலாளர் வர்க்கம் எதிர்நோக்குகின்ற மோசமான சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளை தீர்ப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியால் (சோ.ச.க.) முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தையும் ஆதரிக்கின்றது.
- மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத சகல அத்தியவசிய பொருட்கள் மற்றும் வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீது தொழிலாளர்களின் ஜனாநாயக கட்டுப்பாட்டை ஸ்தாபிக்க வேண்டும்! வங்கிகள், பெரு நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் பிற பாரிய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்கு!
- அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் இரத்து செய்! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி ஸ்தாபனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கன கோரிக்கைகளை நிறுத்து!
- பில்லியனர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் பாரியளவன சொத்துக்களை கையப்படுது!
- ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்துக் கடன்களையும் இரத்துச் செய்!
- அனைவருக்கும் ஒழுக்கமானதும் பாதுகாப்பானதுமான வேலை நிலைமைகளை உறுதிப்படுத்து!
- வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வேண்டும்!
- இலவச கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட சமுக திட்டங்களுக்கு பல பில்லியன்களை ஒதுக்குவதோடு அவசியமான அனைவருக்கும் உயர் தர சேவைகளை உறுதிப்படுத்துதல் வேண்டும்!
இந்தக் கொள்கைகளை அமுல்படுத்த ஒரு “தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காகப் போராடுவது அவசியம் என சோ.ச.க. விளக்கியது.
நாம், இந்த சோசலிச வேலைத்திட்டத்துக்காகப் போராட ஆதரவளிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
ஆடைத் தொழிலாளர் நடவடிக்கை குழு சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்துக்காகப் போரடுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஒரேவிதமான கொடூர தாக்குதல்களையே தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்றனர்.
மேலும் படிக்க
- இலங்கை: பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமையில் வேலைக்கு திரும்புவதை எதிர்த்திடுவோம்! தொழில் அழிப்பு செய்யாதே!
- இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!