மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ட்ரொட்ஸ்கிசத்தின் நுாற்றாண்டு நினைவாக சோ.ச.க மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) ஏற்பாடு செய்த கூட்டங்களில் பேசுவதற்காக இலங்கைக்கு வந்துள்ளார்.
கிஷோர், 2008ல் இருந்து அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் (ICFI) பிரசுரிக்கப்படும் உலக சோசலிச வலைத்தின் எழுத்தாளரும் ஆவார்.
“லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நுாற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்” என்ற தலைப்பிலான இந்த இரண்டு கூட்டங்களில் முதாலாவது டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி அன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞஞான துறையின் அனுசரனையில் அங்குள்ள 86 ஆவது இலக்க மண்டபத்திலும் இரண்டாவது டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்திலும் நடைபெறும்.
இது மார்க்சிசத்தை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நுாற்றாண்டு காலப் போராட்டத்தையும் சர்வதேச சோசலிசப் போராட்டத்தின் சமகால பொருத்தத்தையும் விளக்கி இந்தக் கூட்டங்களுக்கான பிரச்சாரம் சோ.ச.க மற்றும் ஐ.வை.எஸ்.எஸ் ஆல் நடத்தப்படுகிறது. இது தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து உற்சாகமான பதிலை ஈர்த்துள்ளது
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வி- சாரா ஊழியர்கள் தெரிவித்த சில கருத்துக்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.
கலைப்பீட மாணவன் சமில் கூறியதாவது ”நான் சமீபத்தில் ஐ.வை.எஸ்.எஸ். ஈ நடத்திய இரு விரிவுரைகளில் பங்கேற்றேன். நான், உக்ரேன் போர் பற்றிய விரிவுரையில் இருந்து முதன் முறையாக ட்ரொட்ஸ்கி மற்றும் அவர் கட்டியெழுப்பிய இயக்கதை பற்றி அறிந்தேன்.
“முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலமே உலகப் போர் ஆபத்து மற்றும் எமது உரிமைகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படலாம்” என்பதை நான் ஏற்றுக்கொண்டேன்.
“இன்றைய கலந்துரையாடலின் மூலம் இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திலேயே ட்ரொட்ஸ்கியால் இந்த விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் ஆட்சியாளர்களின் ஊடகங்கள் உட்பட அவர்களின் அதிகாரத்தை கருத்தில் கொண்டு இவ் வகையான வேலைத்திட்டம் தொழிலாளர்களை தன்பக்கம் வெல்ல முடியுமான என்ற கேள்வி என்னிடம் உள்ளது.
“முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு அத்தகைய அதிகாரம் இருந்த போதிலும் இலங்கையில் கடந்த ஆண்டு இலட்சக்கணக்கான மக்களை கவர்ந்த மக்கள் எழுச்சியில் தொழிலாளர் வர்க்கம் இணைந்த போது அது தனது மகத்தான பலத்தை வெளிப்படுத்தியதாக பிரச்சாரகாரர்கள் சுட்டிக்காட்டினர். அதன் விளைவாக, முன்ளாள் ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்
“ஆம், தொழிலாளர் வர்க்கம் அத்தகைய பலத்தைக் கொண்டுள்ளது என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. ஆனால் ராஜபஷவிற்கு பிறகு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய துறைகளைத் தனியார்மயமாக்குவதை நடைமுறைப்படுத்துகின்றார். பொலிசைப் பயன்படுத்தி போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றது என சமில் பதிலளித்தார்.
“முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி -இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் போன்றன ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னனி போன்ற முதலாளித்துவ எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான கோரிக்கைக்கு அடிபணிந்து வெகுஜன எழுச்சியைக் காட்டிக்கொடுத்தன. இந்தக் காட்டிக்கொடுப்பு விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு வழிவகுத்தது” என்று அவர் விளக்கினார்.
1917 இல் ரஷ்யப் புரட்சியில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் போல்ஷிவிக் கட்சி ஆற்றிய பாத்திரத்திற்கு கலந்துரையாடல் திரும்பியது. “போல்ஷிவிக் கட்சி இருந்ததால்தான் ரஷ்யப் புரட்சி வெற்றிபெற்றது என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். மேலும் இதுபற்றி தெளிவுபெற நான் இந்த விரிவுரையில் பங்கேற்பேன்” என சமில் சேர்த்துக்கொண்டார்.
மற்றொரு கலைப்பீட மாணவரான சுஜித் கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச தொழிலாளர் வர்க்கதை அணிதிரட்டாமல் போரை நிறுத்த முடியாது என்பதையும் அதற்காக உங்கள் இயக்கம் மட்டுமே பாடுபடுகின்றது என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல சமூக ஊடகங்களை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
உலக சோசலிச வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தொழிலார்கள் மற்றும் இளைஞர்களிடம் ட்ரொட்ஸ்சிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை கொண்டு சேர்க்க சோ.ச.க மற்றும் ஐ.வை.எஸ்.எஸ் ஈ வேலை செய்கின்றது என்பதை பிரச்சாரகர்கள் விவரித்தனர். 21 ஆம் நுாற்றாண்டின் மாக்சிசமான ட்ரொட்ஸ்சிசத்துடன் காரியாளரை ஆயுதபாணியாக்குவதின் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
“உண்மையில், நீங்கள் சொல்வது போல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்குள் நாம் எதை கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும், அதற்காக ட்ரொட்ஸ்சித்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட காரியாளர்கள் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். சமூகத்தில் புரட்சிகர வர்க்கம் தொழிலாள வர்க்கம் என்பதையும் மாணவர்கள் தொழிலாள வர்க்கம் பக்கம் திரும்பி அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு அதன் தலைமைத்துவத்தின் கீழ் சோசலிசத்திற்காக போராட வேண்டும் என்பதையும் நான் இந்த கலந்துரையாடலில் புரிந்துகொண்டேன்” என் சுஜித் பதிலளித்தார்.
“நான் ட்ரொட்ஸ்கியின் பெயரை அறிந்திருந்தாலும், அவர் வரலாற்றில் அத்தகைய மகத்தான பாத்திரம் வகித்தமை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. உங்களுடைய விளக்கத்தில் நான் ஒரு விடயம் புரிந்துகொண்டுள்ளேன். அதாவது., இந்த உலகத்தில் சகலரும் எதிர்நோக்கும் ஆபத்தான போர்கள், வேலையின்மை, வறுமை, தொற்றுநோய் மற்றும் சுற்றுப்புறச்சுழல் அழிப்பு என நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவத்திலும் காலாவிதியான தேசிய -அரசு அமைப்பு முறையிலுமே வேரூன்றிள்ளன” என விஞ்ஞான பிரிவு மாணவியான ருசிரா கூறினார்
“மத்திய கிழக்கு மற்றும் உக்ரேன் போர்கள் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு உலகில் ஒரே ஒரு தீர்வு உள்ளது. முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் அதன் தேசிய அரசு அமைப்பையும் இல்லாது செய்வதற்கான சோசலிச வேலைத்திட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமே அவசியம் ஆகும். இது கடினமாக பணியாகத் தோன்றனாலும், போர்களை நிறுத்தக்கோரி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெரும்பாண்மையான மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை நாம் செய்திகளில் பார்க்கின்றோம். அதனால் நாம் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். நான், கண்டிப்பாக டிசம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு வருவேன்” என அவர் தெரிவித்தார்.
பொறியியல்துறை மாணவியான விமுக்தி பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை விளக்கி இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்.
விடுதி வசதிகள் இல்லாத மாணவர்கள் மாதாந்தம் ரூ 5,000ம் ($US15.20) செலுத்தி வெளியில் தங்குமிட வசதிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களில் பெரும்பாண்மையானவர்கள் குறைந்த விலையில் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைகளில் குறைந்த விலையிலான சைவ உணவுகளை எடுக்க வேண்டி உள்ளது.
“ஒரு மாதத்திற்கான வாடகை, உணவு மற்றும் ஏனைய செலவுகள் சேர்த்து குறைந்தபட்சம் ரூ 15,000ம் முதல் ரூ 20,000ம் வரை செலவாகும். அத்தகைய உயர்ந்த வாழ்க்கைச் செலவுகள் காரணமாக றெ்றோர்களிடம் இத்தகைய செலவுகளுக்கு போதுமான பணம் கிடைப்பதில்லை. அதனால் நாங்கள் பகுதி-நேர வேலைகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இது எமது கல்விக்குத் தடையாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
மாணவர்கள் பட்டம் பெற்றாலும், வேலை கிடைப்பதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர் என்றும் விமுக்தி கூறினார். அவரும் மற்ற இளைஞர்களும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடிக்கொண்டிருந்தனர்.
“நீங்கள் விளக்கியது போல, மரண வேதனையில் உள்ள முதலாளித்துவத்தின் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பது தெளிவாக உள்ளது. உங்கள் இயக்கம் முன்வைக்கும் சர்வதேச சோசலிச தீர்வே தர்க்கரீதியானது. மேலதிக தெளிவிற்காக நான் டிசம்பர் 7 ஆம் திகதி கூட்டத்திற்கு எனது நண்பருடன் வருவேன்” என்று குறிப்பிட்டார்.
சோ.ச.க மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.ஈ உறுப்பினர்கள் டிசம்பர் 7 விரிவுரையின் தலைப்பையும் அதன் உள்ளடக்கத்தையும் இறுதி ஆண்டு உளவியல் துறை மாணவர்களிடம் விளக்கினார்கள். அதில் ஒரு மாணவி கூறுகையில்,
“கடந்த நுாற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொண்ட அனைத்து முக்கியமான பிரச்சினைகளும் மீண்டும் தலைதுாக்கியுள்ளன என்று நீங்கள் கூறியபோது, அந்த நுாற்றாண்டில் ஏன் தீர்க்க முடியவில்லை என்பதை புரிந்துகொள்வது எனக்கு கடினமாக இருந்தது. ட்ரொட்ஸ்கியும் அவரது இயக்கமும் தொடர்ந்து போராடி சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்தாலும், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஏனைய இயக்கங்கள் வேலை செய்ததால் அதை உணர முடியவில்லை. இன்றைய தலைமுறையாகிய நாம், இந்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். எனவே கூட்டத்தில் பங்கேற்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழத்தின் வெளிவாரி கல்விப் பிரிவின் கல்வி-சாரா ஊழியரான சத்துரங்க என்பவர், ஒரு அரசியல் வேலைத்திட்டம் இல்லாமல் விக்கிரமசிங்க அராசாங்கத்தின் தாக்குதலை எவ்வாறு நிறுத்துவது என்பதில் தான் குழப்பமடைந்துள்ளதாக கூறினார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை கேட்ட பின் இப்போது தெளிவடைந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது “எமது மாத வருமானத்தின் உண்மையான மதிப்பு மிகவும் குறைவாக உள்ள அதேவேளை தொழிற்சங்கங்கள் மாதாந்த சம்பளத்தில் ரூ20,000ம் மட்டும் அதிகரிப்பை கோரியது. அந்தத் தொகையை முடிவு செய்வதற்கு முன் அவர்கள் எங்களுடன் கலந்துரையாடவில்லை. இப்போது மாதாந்தம் குறைந்தபட்சம் ரூ 50,000ம் எமது அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்க வேண்டும் இல்லையெனில் நாம் வாழ முடியாது.
“அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் ரூ 10,000ம் கொடுப்பனவை மட்டுமே வழங்கியுள்ளது. தொழிற்சங்கள் அத்தகைய சொற்ப தொகைளை வழங்க அரசாங்கத்திற்கு வழிவகுத்துள்ளன. அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாகச் செயற்படுகின்றன. எனவே, தொழிற்சங்கங்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
“முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ், எமது பிரச்சினைகள் தீர்க்க முடியாது என்ற உங்களது விளக்கத்துடன் நான் உடன்படுகிறேன். இதை எனது சமீப அனுபவத்தின் மூலம் நான் புரிந்துகொண்டுள்ளேன். நடவடிக்கை குழுக்களுக்கான போராட்டத்தை எமது சொந்தப் போராட்ட அமைப்புகளாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.நான் எனது சக ஊழியர்களுடன் இது தொடர்பாக பேசி டிசம்பர் 7ஆம்திதகி விரிவுரையில் பங்கேற்கும்படி அவர்ளை உடன்படச் செய்வேன்” என அவர் கூறினார்.
தகவல் தொழிநுட்ப துறையின் விரிவுரையாளர் அகமட் “நான் முழுமையாக காஸா இனப்படுகொலையை எதிர்க்கிறேன். இந்த இனப்படுகொலைக்கு முழு ஆதரவை வழங்கும் ஏகாதிபத்திய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபைக்கு போரை நிறுத்துமாறு முறையீடு செய்வது முற்றிலும் பயனற்றது. காஸா மீதான இந்த மிருகத்தனமான தாக்குதலை எப்படி நிறுத்துவது என்று யோசித்துகொண்டிருந்த போது உங்களைச் சந்தித்தேன். அரபு மற்றும் யுத தொழிலாளர்களின் ஒற்றுமையின் மூலம் மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிச குடியருசுக்காகப் போராடுவதன் மூலம் இந்த இனப்படுகொலையை நிறுத்த முடியும் என்ற உங்களது எண்ணம் தீர்க்கமானது” என்று குறிப்பிட்டார்.