லியோன் ட்ரொட்ஸ்கி

20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத் தலைவரான விளாட்மிர் இலிச் லெனினுடன் இணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி (1879-1940).

ட்ரொட்ஸ்கியும் லெனினும் 1917 அக்டோபர் புரட்சியில் போல்ஷிவிக் கட்சிக்கும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கும் தலைமை தாங்கினர். இது மனிதகுல வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை நிறுவியது. 1923 ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றிய ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான ஒரு தேசியவாத அதிகாரத்துவத்தின் வளர்ச்சியை எதிர்ப்பதற்காக ட்ரொட்ஸ்கி இடது எதிர்ப்பு (Left Opposition) இயக்கத்தை ஸ்தாபித்தார். 1933 ஆம் ஆண்டில், ட்ரொட்ஸ்கியால் எதிர்க்கப்பட்ட மூன்றாம் அகிலத்தின் அழிவுகரமான கொள்கையினால் ஜேர்மனியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் மூன்றாம் அகிலத்திலும் உருவாகிய ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்க ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

1938 இல் நான்காவது அகிலம் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி மெக்சிகோவின் கொயோகான் நகரில் ஒரு ஸ்ராலினிச முகவரான ரமோன் மெர்காடரின் கைகளால் படுகொலை செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போரின் படுகொலைக்கு மத்தியில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையை இல்லாதொழிப்பதற்கான உலக ஏகாதிபத்தியத்தின் மிக நனவான முயற்சியே அவரது படுகொலையாகும்.

ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்த நான்காம் அகிலம் இன்றுஉலக சோசலிச வலைத்தளத்தை வெளியிடும் அனைத்துலக்குழுவினால் தலைமை தாங்கப்படுகின்றது. நான்காம் அகிலத்தின்அனைத்துலகக் குழுவானது1953 இலிருந்து உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்தையும் கொள்கைகளையும்பாதுகாத்து வருகிறது.


நிரந்தரப் புரட்சி தத்துவம்

அக்டோபர் 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் போல்ஷிவிக் கட்சியை வழிநடத்திய முன்னோக்கானது, 1906 ஆம் ஆண்டில் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியால் விவரித்துக் கூறப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் 1905 ரஷ்ய புரட்சியின் தோல்வியின் அனுபவத்தை ட்ரொட்ஸ்கி ஒரு முழுமையான மார்க்சிச ஆய்விற்கு உட்படுத்தியிருந்தார்.

நிரந்தரப் புரட்சி தத்துவம் ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படுவதும் மற்றும் ஒரு தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் காலனித்துவ, நில உடமையாளர் மற்றும் சாதி ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அடைவது போன்ற புரட்சியின் ஜனநாயகப் பணிகளை வெற்றிகொள்வதில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் முன்னணி அரசியல் பங்கை வலியுறுத்துகிறது. மேலும், அந்த பணிகளை சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து வரலாற்றுரீதியாக பிரிக்க முடியாத தன்மையை அது வலியுறுத்துகிறது.

1917 ரஷ்ய புரட்சி

அக்டோபர், 1917 இல், முதலாம் உலகப் போரின் படுகொலைக்கு மத்தியில், விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் போல்ஷிவிக் கட்சியினால் வழிநடத்தப்பட்ட ரஷ்ய தொழிலாள வர்க்கம், அலெக்சாண்டர் கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து, உலக வரலாற்றிலேயே முதலாவது தொழிலாள வர்க்க அரசை நிறுவியது. இதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், இரண்டாம் ஜார் நிக்கோலஸ் II தலைமையிலான ஒரு முடியாட்சி வம்சத்தால் ரஷ்யா ஆட்சி செய்யப்பட்டது. இப்புரட்சி ஏகாதிபத்திய போரினை முடிவிற்கு கொண்டுவருவதன் தொடக்கமாக இருந்தது.

ரஷ்ய புரட்சியானது உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை குறித்தது. முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசுவதானது முதலாளித்துவத்திற்கு மாற்றீடு என்பது ஒரு கற்பனாவாத கனவு அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் போராட்டத்தின் மூலம் அடையக்கூடிய ஒரு உண்மையான சாத்தியம் என்பதை நிரூபித்தது.

More on the Russian Revolution
ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் போராட்டம் (1923-1933)

ட்ரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் அக்டோபர் 1923 இல் இடது எதிர்ப்பு என்ற அமைப்பை உருவாக்கினர். ஜோசப் ஸ்ராலின் தலைமையில் எழுச்சியடைந்துவரும் பழமைவாத, தேசியவாத அதிகாரத்துவத்திற்கு எதிராக, சோசலிச சர்வதேசியவாத நிலைப்பாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியையும் மூன்றாம் அகிலத்தையும் சீர்திருத்துவதே இதன் நோக்கமாக இருந்தது.

ஸ்ராலினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையே தோன்றிய மோதல் சமரசம் செய்யப்படமுடியாத அரசியல் வேலைத்திட்டங்களுக்கு இடையேயானதாக இருந்தது. ஸ்ராலினால் அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்வதும், அவரால் உருவகப்படுத்தப்பட்ட அதிகாரத்துவ சர்வாதிகாரமும் தவிர்க்கப்பட முடியாதது அல்ல. சர்வதேச மற்றும் ஐரோப்பிய புரட்சியின் தாமதம் காரணமாக இந்த தொழிலாளர் அரசு பொருளாதாரரீதியாக பின்தங்கியதும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டதுமான நிலைமைகளிலிருந்துதான் இந்த அதிகாரத்துவம் உருவானதாகும்.

ஸ்ராலினிசத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில், ட்ரொட்ஸ்கி உலக சோசலிசப் புரட்சிக்கான தத்துவத்தை உருவாக்கினார். இது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நடைமுறை தேசியவாத சூழ்ச்சிகளைக் காட்டிலும் அளவிடமுடியாத அளவிற்கு தொலைநோக்குடையதாக நிரூபிக்கப்பட்டது.

More on the struggle of the Left Opposition
நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் (1933-1938)

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மூன்றாம் அகிலத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவருவதற்கான கொள்கைரீதியான மூலோபாயமே 1923 இல் நிறுவப்பட்டதிலிருந்து சர்வதேச இடது எதிர்ப்பாளர்களின் வழிகாட்டியாக இருந்தது. ஆனால் ஸ்ராலினின் பேரழிவுகரமான கொள்கைகளின் உதவியால்1933 இல் ஜேர்மனியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தமையானது இக்கொள்கையை மறுபரிசீலனை செய்யக் கோரியது.

ஹிட்லரின் வெற்றியைத் தொடர்ந்து வந்த மாதங்களில், ஸ்ராலின் பின்பற்றிய கொள்கைகள் குறித்த எந்தவொரு விமர்சனமும் அகிலத்தின் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் வெளிவருகிறதா என்று அவதானிக்க ட்ரொட்ஸ்கி காத்திருந்தார். ஏப்ரல் 7, 1933 அன்று கம்யூனிசஅகிலம் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புதல் அளித்தது. ட்ரொட்ஸ்கிஒரு புதிய பாதை அவசியம் என்ற முடிவிற்கு வந்தார். ஜூலை 15, 1933 தேதியிட்ட ஒரு அறிக்கையில், மூன்றாம் அகிலத்துடனான ஒரு உடைவிற்கும் மற்றும் ஒரு புதிய அகிலத்தை கட்டியெழுப்பவும்அவர் அழைப்பு விடுத்தார். அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் இப்போராட்டத்திற்கு அர்ப்பணிப்பு செய்திருந்தார்.

More on the founding of the Fourth International
ட்ரொட்ஸ்கியின் கடைசிப் போராட்டம்: சோசலிச தொழிலாளர் கட்சியின் உள்ளான ஒரு குட்டி முதலாளித்துவ எதிர்ப்பு (1939-1940)

ஆகஸ்ட் 1939 இல் ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதன் பின்னர் இரண்டாம் உலகப் போர் வெடித்ததும் அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் ஒரு அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. சோவியத் ஒன்றியத்தை இனி ஒரு தொழிலாளர் அரசாக வரையறுக்க முடியாது என்று மக்ஸ் ஷாக்ட்மன், ஜேம்ஸ் பேர்ன்ஹாம் மற்றும் மார்ட்டின் ஆபெர்ன் தலைமையிலான ஒரு அரசியல் பிரிவு வாதிட்டது. சோவியத் அரசின் வர்க்க தன்மை குறித்த அவர்களின் வரையறையில் ஏற்பட்ட இந்த மாற்றத்திலிருந்து பேர்ன்ஹாம் இப்போது சோவியத் ஒன்றியத்தை 'அதிகாரத்துவ கூட்டுறவு' என்று வரையறுத்தார். ஆகையால் போர் ஒன்று ஏற்பட்டால் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க நான்காம் அகிலம் அழைப்பு விடுக்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.

ட்ரொட்ஸ்கி இந்த வரையறைப்படுத்தலுக்கு பதிலளித்தார், ஸ்ராலினிச ஆட்சியை 'அதிகாரத்துவ கூட்டுறவு' என்பது, சுரண்டல் சமூகத்தினை பற்றி மார்க்சிசத்தால் முன்எதிர்பாராத ஒரு புதிய மற்றும் முன்னோடியில்லாத வடிவம் எனவும் இதற்கு நீண்டகால அரசியல் மற்றும் வரலாற்று தாக்கங்கள் உள்ளன என்றார். இறுதி ஆய்வில், இந்த விடயத்தில் உள்ளடங்கியிருப்பது மார்க்சிச வேலைத்திட்டத்தின் வரலாற்று நம்பகத்தன்மையே ஆகும் என்றார்.

அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்கள் வரை, அவரது மிக அற்புதமான மற்றும் தொலைநோக்குடைய பல ஆவணங்கள் மூலம் ட்ரொட்ஸ்கி பங்களித்த SWP க்குள் நடந்த போராட்டம் ஏப்ரல் 1940 இல் ஒரு பிளவில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

More on the 1939-1940 struggle in the SWP
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்
பாதுகாப்பும் நான்காம் அகிலமும்: ஸ்ராலினின் ஜி.பி.யூ எவ்வாறு லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்தது

ட்ரொட்ஸ்கியின்படுகொலை இருபதாம் நூற்றாண்டின் மிகவும் அரசியல்ரீதியான நீண்ட பின்விளைவுகளை கொண்ட குற்றங்களில் ஒன்றாகும். இதுசர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் உலக சோசலிச இயக்கத்திற்கும் நீண்டகால தாக்கங்களை உள்ளடக்கியுள்ளது. இன்னும், பலதசாப்தங்களாக, படுகொலையை சுற்றியுள்ள சூழ்நிலைகள் இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன. ட்ரொட்ஸ்கிக்கு எதிரான ஸ்ராலினிச சதித்திட்டத்தின் பாரிய அளவானது கவனமாக திட்டமிடப்பட்ட மூடிமறைப்புக்கு உட்பட்டது.

1975 ஆம் ஆண்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, படுகொலை பற்றி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் முதல்தடவையாக முறைப்படியான விசாரணையை செய்தது. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்று அழைக்கப்படும் இந்த விசாரணை, நான்காம் அகிலத்திற்குள் ஜி.பி.யூ முகவர்களின் வலைப்பின்னலை அம்பலப்படுத்த வழிவகுத்ததுடன், ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைக்கு எதிரான ஸ்ராலினின் சதித்திட்டத்தினை உறுதிப்படுத்தியது.

More on the investigation
சமீபத்திய கட்டுரைகள்