முன்னோக்கு

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்தது, ஆனால் காஸாவில் இனப்படுகொலையை தடுத்துநிறுத்த உத்தரவிட மறுத்துவிட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஜனவரி 26, 2024 வெள்ளிக்கிழமையன்று, நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ICJ) அல்லது உலக நீதிமன்ற அமர்வின் போது தென்னாப்பிரிக்க தூதுக்குழு இடதுபுறமும், மற்றும் இஸ்ரேலின் தூதுக்குழு வலதுபுறமும் நிற்கிறார்கள். [AP Photo/Patrick Post]

1948 இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை ஒப்பந்தத்தை (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) மீறி காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டி தென்னாபிரிக்க அரசாங்கம் நிலுவையிலுள்ள வழக்கில் 'இடைக்கால நடவடிக்கைகளுக்கான' கோரிக்கை மீது சர்வதேச நீதிமன்றம் 86 பத்திகள் கொண்ட எழுத்துப்பூர்வ தீர்ப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கட்டுப்பாடான ஆனால் இருந்தபோதினும் கண்டிக்கத்தக்க மொழியைப் பயன்படுத்தி, 'காஸாவில் இஸ்ரேலால் இழைக்கப்பட்டதாக தென்னாபிரிக்காவால் கூறப்படும் சில நடவடிக்கைகள் மற்றும் பின்பற்றாமைகள் உடன்படிக்கையின் விதிகளுக்குள் வரக்கூடிய திறன் கொண்டவையாக தோன்றுகின்றன' என்று நீதிபதிகள் தீர்ப்பை எழுதினர்.

அதேநேரத்தில், காஸா குடிமக்களுக்கு எதிரான இஸ்ரேலின் பல மாத கால தாக்குதலை நிறுத்துவதற்கு அழைப்பு விடுக்க ICJ ஆனது நிராகரித்ததுடன், இஸ்ரேல் சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் தற்போதைய கடமைப்பாடுகளுக்கு இணங்கி ஒரு மாதத்திற்குள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று 'இடைக்கால நடவடிக்கைகளாக' மட்டுமே உத்தரவிட்டது. படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோருவதில் இந்த அப்பட்டமான தோல்வியானது, நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளில் இருந்து தர்க்கரீதியில் பின்தொடர்கிறது, அதாவது ஏகாதிபத்திய சக்திகளால் பிரயோகிக்கப்படும் அரசியல் அழுத்தங்களுக்கு சரணடைதல் என்பது என்னவென்று காட்டப்படும்.

டிசம்பரில் ஐ.நா. பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ICJ சற்று தாமதமாக பின்னிற்கு நிற்கிறது, அதில் 193 உறுப்பு நாடுகளில் 153 நாடுகள் ஒரு 'போர்நிறுத்தத்திற்கு' ஆதரவாக வாக்களித்தன, 10 நாடுகள் (அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட) எதிராக வாக்களித்தன, 23 நாடுகள் (பிரிட்டன் மற்றும் ஜேர்மனி உட்பட) வாக்களிப்பை புறக்கணித்தன.

அதற்கு பதிலாக, இந்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து 30 நாட்களுக்குள் இஸ்ரேல் ஒரு 'அறிக்கை' ஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

டிசம்பர் 29 அன்று தொடங்கப்பட்ட விசாரணையின் இந்த ஆரம்ப கட்டத்தில், இடைக்கால உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கள் 'நம்பத்தகுந்தவையா' என்பதை தீர்மானிக்கும் பணியை மட்டுமே நீதிபதிகள் மேற்கொள்கின்றனர். எந்தவொரு உறுதியான தீர்ப்பையும் எட்டுவதற்கு முன்னர் இந்த வழக்கே பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படலாம்.

ICJ இன் தீர்ப்பானது, இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாறாக காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு ஆயுத விநியோகம், நிதியாதாரம், நியாயப்படுத்தல் மற்றும் பாதுகாத்து வந்துள்ள அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் மீதான ஒரு கண்டனத்திற்குரிய குற்றப்பத்திரிகையாக சரியாகவே இது பார்க்கப்படும்.

சான்றாக, ஜனவரி 3 அன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி இந்த வழக்கை 'தகுதியற்றது, பயனற்றது மற்றும் உண்மையில் எந்த அடிப்படையும் இல்லாதது' என்று கண்டனம் செய்தார். வெள்ளிக்கிழமையன்று, ICJ துல்லியமாக எதிரான முடிவை எடுத்தது.

இந்த மாத தொடக்கத்தில் 'இனப்படுகொலை' என்ற குற்றச்சாட்டை கையசைத்து நிராகரித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாட் மில்லர் போன்ற பிரமுகர்களுக்கு ICJ இன் தீர்ப்பு ஒரு கடுமையான கண்டனமாகும், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்க அரசாங்கம் 'இனப்படுகொலையை உள்ளடக்கிய எந்தவொரு நடவடிக்கையையும் காணவில்லை' என்று கூறினார்.

இஸ்ரேலின் சார்பில் இந்த வழக்கில் தலையிட முற்பட்ட ஜேர்மன் அரசாங்கமும் இதேபோல் அம்பலமாகியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டை 'தார்மீக தாக்குதல்' என்று குறிப்பிட்டு ஜனவரி 16 அன்று ஒரு முக்கிய கட்டுரையை எழுதிய நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் பிரெட் ஸ்டீபன்ஸ் அவ்வாறே செய்கிறார்.

அத்தனை ஒடுக்குமுறை, வன்முறையான ஆத்திரமூட்டல்கள் மற்றும் 'யூத-எதிர்ப்புவாதம்' குறித்த வேட்டையாடும் குற்றச்சாட்டுக்களையும் மீறி, உலகெங்கிலுமான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து கலந்து வருகின்ற பத்து மில்லியன் கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்த வரையில், ICJ இன் தீர்ப்பானது நியாயமான முறையில் ஒரு நிரூபணமாக பார்க்கப்படும்.

ICJ இன் தீர்ப்பு பின்வரும் புள்ளிவிபரங்களை முன்வைக்கிறது: அதாவது '25,700 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 63,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர், 360,000 க்கும் அதிகமான குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ளன மற்றும் சுமார் 1.7 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.'

இந்த தீர்ப்பானது ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான துணை பொதுச் செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸை மேற்கோளிடுகிறது, இது பொதுமக்களையோ அல்லது மருத்துவமனைகளையோ இலக்கு வைக்கவில்லை என்ற இஸ்ரேலிய அரசாங்கத்தின் வலியுறுத்தல்களுக்கு முரண்படுகிறது: 'பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வேறு இடங்களுக்கு செல்லுமாறு கூறப்பட்ட பகுதிகள் குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளன. மருத்துவ வசதிகள் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன' என்று மேற்கோளிடுகிறது.

ஐ.நா. நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் முகமையின் ஆணையர் ஜெனரல் பிலிப் லஸரினியையும் இந்த தீர்ப்பானது மேற்கோளிடுகிறது: அதாவது 'கடந்த 100 நாட்களில், காஸா பகுதி எங்கிலும் தொடர்ச்சியான குண்டுவீச்சு ஒரு மக்களை பாரியளவில் இடம்பெயரச் செய்தது ... தொடர்ந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, இரவோடு இரவாக வெளியேற நிர்பந்திக்கப்பட்டு, பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல மட்டுமே நிர்பந்திக்கப்படுகின்றனர். இது 1948 க்குப் பிறகு பாலஸ்தீனிய மக்களின் மிகப் பெரிய இடப்பெயர்வாகும்.'

காஸாவானது 'மனித மிருகங்களிலான' மக்களைக் கொண்டது என்றும் 'நாங்கள் அனைத்தையும் அழிப்போம்' என்றும் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் வலியுறுத்தியது உட்பட, இஸ்ரேலிய அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் இருந்து வெளிவந்த இனப்படுகொலை சொல்லாட்சியுடன் மாபெருமளவில் திணிக்கப்பட்ட இந்த மனிதத் துயரத்திற்கான ICJ இன் தீர்ப்பானது ஒன்றோடோன்று பின்னிப் பிணைந்துள்ளது.

அக்டோபர் 13 அன்று இஸ்ரேலின் அப்போதைய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சராக இருந்த இஸ்ரேல் காட்ஸ் என்பவர் எழுதியதையும் ICJ பின்வருமாறு மேற்கோளிட்டது, '[காஸாவில்] உள்ள அனைத்து அப்பாவி மக்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்படுகிறார்கள். ... அவர்கள் உலகை விட்டு வெளியேறும் வரை அவர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீரோ அல்லது ஒரு பேட்டரியோ கிடைக்காது.'

'இனப்படுகொலை நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்களின் உரிமை' உட்பட, 'தென்னாபிரிக்கா கோரும் மற்றும் அதற்காக அது பாதுகாப்பைக் கோரும் சில உரிமைகள் நம்பத்தகுந்தவை' என்ற முடிவுக்கு வர இந்த உண்மைகள் போதுமானவை என்று ICJ நிறைவு செய்தது.

சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கையில், இஸ்ரேல் இடைவிடாத வேகத்தில் போர்க் குற்றங்களையும் படுகொலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. வெள்ளிக்கிழமை ICJ இன் தீர்ப்பிற்கு முன்னைய மணிநேரங்களில், காஸா நகரில் மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கானவர்கள் கொண்ட ஒரு கூட்டத்தை இஸ்ரேலிய படைகள் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை முதல் வியாழன் வரையிலான 24 மணி நேர காலத்தில், இஸ்ரேலிய படைகள் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குடிமக்களைக் கொன்றன.

காஸாவுக்கான உணவு, எரிசக்தி, மருத்துவ விநியோகங்கள் மற்றும் எரிபொருள் மீதான இஸ்ரேலின் தற்போதைய முற்றுகையைக் குறிப்பிட்டு, ICJ முடிவானது, 'நீதிமன்றம் அதன் இறுதி தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாக காஸா பகுதியில் பேரழிவுகரமான மனிதாபிமான நிலைமை இன்னும் மோசமடையும் தீவிர அபாயத்தில் உள்ளது,' இது 'தற்காலிக நடவடிக்கைகளை' மேற்கொள்வதை நியாயப்படுத்தி உறுதிசெய்கிறது.

ICJ இன் 'இடைக்கால நடவடிக்கைகளின்' வெற்றுத் தன்மையானது, இஸ்ரேலிய அதிகாரிகளே மேலதிக இனப்படுகொலை தூண்டுதலைத் தவிர்க்க வேண்டும் மற்றும் மனிதாபிமான உதவிகள் காஸாவை சென்றடைய உதவ வேண்டும் என்ற அறிவுரை உட்பட அவற்றில் பலவற்றில் இஸ்ரேலே சேர்ந்து கொண்டது என்ற உண்மையால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

நேற்று Foreign Affairs இதழ் குறிப்பிட்டதைப் போல, இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு ஒரு கண்டனம் என்ற வகையில் அதன் அனைத்து முக்கியத்துவமும் ஒருபுறம் இருக்க, ICJ இன் தீர்ப்பானது ஒரு அரசியல் முடிவாக இருந்தது: ஒருபுறம் 'காஸாவில் அசாதாரண உயிர் இழப்புகள் குறித்து உலகெங்கிலும் நிலவும் பெருவாரியான உலகத்தின் கவலையை' (அவற்றை ஊக்கமிழக்கச் செய்வதற்கும் ஒடுக்குவதற்குமான அனைத்து முயற்சிகளுக்கும் முன்னால் உலகெங்கிலும் பாரிய வெகுஜன போராட்டங்கள் தொடர்கின்றன) ஒப்புக்கொண்டு, ஒரு 'மத்திய தளத்தைக்' காண்பதற்கான ஒரு முயற்சியாகும். மாறாக, மறுபுறம், உண்மையில் 'இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர' உத்தரவிடாமல், அப்படி செய்திருந்தாலும் கூட 'இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏறத்தாழ நிச்சயமாக அதை உதறித்தள்ளியிருக்கும்.'

நேற்று அந்த தீர்ப்பிற்கு விடையிறுக்கையில், இஸ்ரேலிய ஜனாதிபதி பென்ஜமின் நெத்தனியாகு அந்த தீர்ப்பை 'மூர்க்கத்தனமானது' என்று குறிப்பிட்டார், அதேவேளையில் இந்த வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புக்கான பாசிசவாத அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் அதை 'பாசாங்குத்தனம்' என்று கண்டித்தார். ICJ என்ன உத்தரவு பிறப்பித்தாலும் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடரும் என்று முன்னதாக நெத்தனியாகு தெரிவித்திருந்தார், 'யாரும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது — ஹேக் ஆகட்டும், தீமையின் அச்சும் அல்ல, வேறு எவராலும் செய்யமுடியாது,' என்றார்.

காஸாவில் கட்டவிழ்ந்து வரும் இனப்படுகொலை குறித்த பெருவாரியான ஆதாரங்களுக்கு முன்னால் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவும் கூட ICJ மறுப்பது, ஒரு ஏகாதிபத்திய நிறுவனமாக அதன் குணாம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாறாக, மார்ச் 2022 இல், உக்ரேனில் போர் தொடங்கிய சில வாரங்களுக்குள், ரஷ்யா 'பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று ICJ உத்தரவு விடுவதற்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

வெள்ளிக்கிழமை தீர்ப்பானது, இம்மாத தொடக்கத்தில் ICJ க்கு தென்னாபிரிக்கா வழங்கிய சக்திவாய்ந்த வழக்கு விளக்கத்தை முன்வைத்ததன் முடிவில் உலக சோசலிச வலைத் தளம் விடுத்த எச்சரிக்கையை ஊர்ஜிதம் செய்கிறது: அதாவது 'ஐக்கிய நாடுகள் சபையின் அரங்குகளில் ஜனநாயக, மனிதாபிமான மற்றும் பகுத்தறிவார்ந்த உணர்வுகளின் ஏதோவொரு மறுபிறப்பிற்கு அவைகள் கட்டியம் கூறுகின்றன என்ற பிரமைகளை இப்போது ஊக்குவித்து வருபவர்களை புறந்தள்ளி வியாழக்கிழமை நடவடிக்கைகளில் இருந்து எதிர்மாறான முடிவுக்கு வருவது அவசியமாகும்.'

இனப்படுகொலையை நிறுத்துவதற்கும், குற்றவாளிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கும், மற்றும் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையில் அவைகள் உடந்தையாக இருப்பதாலும் மற்றும் பங்கேற்பதாலும் என்றென்றும் கறைபடிந்துள்ள அனைத்து முதலாளித்துவ கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அதன் சொந்த சுயாதீனமான கொள்கைகள் மற்றும் வர்க்க நலன்களின் அடிப்படையில் அணிதிரட்டுவது அவசியமாகும்.

Loading