மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளியன்று சர்வதேச நீதிமன்றம் (ICJ) வழங்கிய தீர்ப்பில், இனப்படுகொலைச் செயல்களைத் தவிர்ப்பதற்கு “தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க” இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்தது. இதற்கு, பாலஸ்தீனியர்களை பட்டினி போடும் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் மூலமும், யூத குடியேற்றங்களை காஸாவில் மேற்கொள்வதற்கு திட்டமிடுவதன் மூலமும் இஸ்ரேல் பதிலளித்துள்ளது.
ICJ இன் பூர்வாங்க கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்ட அதே நாளில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNRWA) அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையிலான ஊடுருவலில், அதன் 12 ஊழியர்கள் படுகொலைகளில் பங்கேற்றதாக குற்றம் சாட்டும் தகவலை, இஸ்ரேல் UNRWAக்கு வழங்கியதாக கூறியள்ளது.
அதன் 12 ஊழியர்களில் ஒருவர், பெண்ணைக் கடத்தியதாகவும், மற்றொருவர் வெடிமருந்துகளை விநியோகித்ததாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் 97 பேர் கொல்லப்பட்ட கிபுட்ஸ் படுகொலையில் பங்கேற்றதாகவும், மேலும் ஏழு பேர் UNRWA பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பதோடு, மற்ற இருவர் இதர நிலைகளில் பள்ளிகளில் பணிபுரிந்தனர் என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
பிடிபட்ட போராளிகள் மீதான விசாரணையின் விளைவாக, அதாவது சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாக, இந்த 12 பேர் பற்றிய தகவல்கள் தம்மிடம் இருப்பதாக இஸ்ரேல் ஆரம்பத்தில் கூறியது. ஆனால், தற்போது உளவுத்துறையினர் அவர்களின் செல்போன்களை கண்காணித்ததாகக் கூறி அதன் கதையை மாற்றிக்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ICJ க்கு எதிராக கவனமாக திட்டமிடப்பட்ட எதிர்த்தாக்குதல் ஆகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 21 ஆம் தேதி UNRWA ஆணையர் ஜெனரல் பிலிப் லஸ்ஸரினியிடம் இஸ்ரேல் தனது தகவலை கையளித்தது. UNRWA வின் நன்கொடையாளர்களுக்குத் தெரிவிக்கும் முன் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுடன் கலந்துரையாடுவதற்காக லஸ்ஸரினி நியூயோர்க்கிற்குச் சென்றார். பின்னர் ICJ தனது தீர்ப்பை வழங்கும் போது, கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
UNRWA, சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து குற்றவியல் விசாரணைக்கு அனுப்புவதாக அறிவித்தது. அவர்களில் ஒன்பது பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
30,000ம் பாலஸ்தீனியர்களைக் கொன்று காஸாவை தரைமட்டமாக்கிய இஸ்ரேல் சர்வதேச சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்று பல மாதங்களாக கண்ணியமான முறையீடுகளுக்கு முற்றிலும் மாறாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உடனடியாக UNRWAக்கான நிதியை நிறுத்தினார். இந்தப் போக்கை ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ருமேனியா, பின்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை விரைவாகப் பின்பற்றின. ஐரோப்பிய ஒன்றியம் UNRWA ஐ அதன் பணியாளர்கள் அனைவரையும் “தாக்குதல்களில் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்த” விசாரணைக்கு அழைப்பு விடுத்தது.
இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் மற்றும் UNRWA ஐ நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கான அதன் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. காஸாவில் UNRWA ஆல் பணியமர்த்தப்பட்ட 12,000ம் பேரில் சுமார் 1,200ம் பேர் (UNRWA ஊழியர்களைப் பற்றிய பிற மதிப்பீடுகள் 30,000 பேர் வரை) “ஹமாஸ் அல்லது பாலஸ்தீனிய, இஸ்லாமிய ஜிஹாத்துடன் தொடர்புகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு உளவுத்துறை மதிப்பீடுகளை இஸ்ரேல் வழங்கியதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளன. UNRWA க்கு நிதியுதவி நிறுத்தப்பட்டதை நியாயப்படுத்த இது போதுமானது. மேலும் இதில் பாதிப் பேர்கள், இஸ்லாமிய போராளிக் குழுக்களைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களைக் கொண்டுள்ளனர்.
ஒரு மூத்த இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி கருத்து தெரிவிக்கையில், “UNRWA வின் பிரச்சனை அக்டோபர் 7 படுகொலையில் ஈடுபட்டுள்ள ‘சில மோசமான ஆப்பிள்கள்’ மட்டுமல்ல... ஒட்டுமொத்த நிறுவனமும் ஹமாஸ் தீவிர சித்தாந்தத்தின் புகலிடமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
“எங்களுக்கு அவசரத் தேவையாக உள்ள அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உடனடியாக பயனுள்ள மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்ற ICJ இன் அர்த்தமற்ற அழைப்புக்கு, இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்களின் பதில் இதுவாகும்.
ஜோர்டான், லெபனான், சிரியா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா ஆகிய இடங்களில் உள்ள 58 அகதி முகாம்களில் உள்ள ஆறு மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதன் சேவைகளின் ஒரு பகுதியாக, காஸாவில் இடம்பெயர்ந்த 2 மில்லியன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை UNRWA நிர்வகித்து வருகிறது.
“ஒரு சில நபர்களின் அனுமானமான நடத்தையின் அடிப்படையில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகிறது, போர் தொடர்வதால், தேவைகள் மோசமாகி, தலைவிரித்தாடுகிறது என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என்று லஸ்ஸரினி குறிப்பிட்டார்.
பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்து, தங்குமிடம் மற்றும் பிற முக்கிய மனிதாபிமான ஆதரவு உள்ளிட்ட உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் UNRWA முக்கியப் பங்காற்றுகிறது என்றும் உயிர்களைக் காப்பாற்றவதே அவர்களின் பணி என்றும் அமெரிக்க அறிக்கை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஏகாதிபத்திய சக்திகள் இஸ்ரேலுடன் இணைந்து பாலஸ்தீனியர்களை பட்டினி போடுவதற்கும், ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுவிட்டு, அவர்களை நாடுகடத்துவதற்கும் வேலை செய்கின்றன என்பதை மட்டுமே இது உறுதிப்படுத்துகிறது.
UNRWA ஐ அழிப்பது இஸ்ரேலின் ஒரு குறிக்கோளாக உள்ளது மற்றும் பைடெனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு டிரம்ப் நிர்வாகத்தின் முழு ஆதரவையும் கொண்டிருந்தது. காஸாவில் நடந்துவருகின்ற மோதலின் போது, அதன் நூற்றுக்கணக்கான தங்குமிட வசதிகள் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு உட்பட்டன, 150 க்கும் மேற்பட்ட UNRWA பணியாளர்களை அது கொன்று தள்ளியது மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் UNRWA ன் தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.
டிசம்பரில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து கசிந்த இரகசிய அறிக்கை ஒன்று, காஸாவில் இருந்து UNRWA ஐ மூன்று படிகளில் அகற்ற வேண்டும் என்று முன்மொழிகிறது. UNRWA பணியாளர்களுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்ற குற்றச்சாட்டுடன் தொடங்கிய இந்தத் திட்டத்தை தொடர்ந்து காஸாவில் UNRWA சேவைகள் குறைக்கப்பட்டது, பின்னர் அதன் செயல்பாடுகளை காஸாவைக் கட்டுப்படுத்த எஞ்சியிருந்த நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இதன் விளைவு, பாலஸ்தீனியர்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதில் இஸ்ரேலுக்கு ஒரு தடையை அளிக்கிறது.
அரசு அதிகாரிகளால் தங்கள் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், UNRWA நாளைய பகுதியாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் கொள்கையை ஊக்குவிப்பதை தனது குறிக்கோள்களில் உள்ளடக்கியது என்று முன்பு கூறியதை Twitter/X இல் எழுதினார். “நாங்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம்: UNRWA அகதிகள் பிரச்சினையை நிலைநிறுத்துகிறது, அமைதியைத் தடுக்கிறது மற்றும் காஸாவில் ஹமாஸின் சிவிலியன் பிரிவாக செயல்படுகிறது”.
“அகதிகள் பிரச்சனையில் UNRWA இன் நிலைத்தன்மையை முடிவுக்குக் கொண்டுவருவது” என்பது இஸ்ரேலை அவர்களைக் கொல்வதைத் தடுக்கும் திறனை முடிவுக்குக் கொண்டுவருவதாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலிய மூலோபாயத்தின் இரண்டாம் கட்டம், பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களை காஸாவிலிருந்து வெளியேற்றுவதாகும். இந்தத் திட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை “இஸ்ரேலின் வெற்றிக்கான பாசிச மாநாட்டில், தீர்வு பாதுகாப்பைக் கொண்டுவருகிறது” என்ற துணைத் தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
நச்சலா குடியேற்ற ஆர்வலர் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டு நிகழ்வில் காஸா நகரின் ஆழமான (எச்சங்கள்) மற்றும் கான் யூனிஸ் உட்பட காஸா பகுதிக்குள் ஆறு முன்மொழியப்பட்ட யூத குடியிருப்புகளின் வரைபடங்கள் வழங்கப்பட்டன.
“மில்லியன் கணக்கான போர் அகதிகள் உலகம் முழுவதும் நாடு விட்டு நாடு செல்கின்றனர், காஸாவில் வளர்ந்த அரக்கர்களை மட்டும் ஏன் இணைக்க வேண்டும் என்று வாய்வீச்சுடன் கேட்கிறார்கள். குறிப்பாக, அவர்கள் நரகமாக மாற்றிய தேசத்திலிருந்து நகர முடியாது, இஸ்ரேலை அழிக்க அச்சுறுத்தும் இடத்திலிருந்து அவர்களால் நகர முடியாது?” என்று ஜனாதிபதி டேனியலா வெயிஸ் கூறினார்.
“இஸ்ரேல் மக்கள் மட்டுமே காஸா பகுதி முழுவதையும் காலனித்துவப்படுத்தி முழு காஸா பகுதியையும் ஆள்வார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
சுமார் 1,000ம் பங்கேற்பாளர்கள் கொண்ட மாநாடு, திருவிழா போன்று இருந்ததாக, அந்த சூழ்நிலையை நிருபர்கள் விவரித்தனர்.
சுமார் 1,000ம் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் சிலர், தெளிவாக காணக்கூடிய வகையில் ஆயுதம் ஏந்தியிருந்தனர், அதிதீவிர வலதுசாரி பயங்கரவாத யூத பாதாளக் குழுவின் முன்னாள் தலைவரான உசி ஷர்பாக் போன்றவர்களின் பேச்சுகளுக்கு மத்தியில், அவர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதை, பத்திரிகையாளர்கள் ஒரு திருவிழா சூழலுடன் விவரித்தனர்.
மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள், யூத சக்தியின் மூன்று உறுப்பினர்கள், மத சியோனிசத்தின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய டோரா யூத மதத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 அமைச்சர்கள் அடங்குவர். இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் அமைச்சரவை அல்லாத பதினைந்து உறுப்பினர்களும் அதில் கலந்து கொண்டனர்.
அவர்களில் ஆறு பேர், நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் மற்றும் தேசிய பாதுகாப்பு மந்திரி இடாமர் பென் க்விர் ஆகியோருடன், காஸாவில் துடிப்பான யூத குடியேற்றங்களை உருவாக்க உறுதிமொழி அளித்து வெற்றி மற்றும் தீர்வை புதுப்பித்தல் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
“தீர்வு இல்லாமல், பாதுகாப்பு இல்லை. இஸ்ரேலின் எல்லையில் பாதுகாப்பு இல்லாமல், இஸ்ரேலின் எந்தப் பகுதியிலும் பாதுகாப்பு இல்லை... கடவுள் விரும்பினால், ஒன்றாக நாம் வெற்றி பெறுவோம்” என்று ஸ்மோட்ரிச் மாநாட்டில் கூறினார்.
2005 இல் காஸாவில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் கைவிடப்பட்டதை பென் க்விர் ஒரு “தவறு” என்றும் “அக்டோபர் 7 க்கு கொண்டு வந்த வடிவமைப்பு பாவத்தின்” ஒரு பகுதி என்றும் அவர் கண்டனம் செய்தார். “குஷ் கடிஃப் [ஒரு வெளியேற்றப்பட்ட இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு]” என்பதற்கு அவர் திரும்ப அழைப்பு விடுத்தார். காஸாவில் நடந்துவருகின்ற இனப்படுகொலையானது, உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனஅழிப்புப் போரின் முதல் கட்டமாக மட்டுமே நோக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், மேற்குக் கரையை இஸ்ரேலிய வலதுசாரிகளால் பயன்படுத்தப்படும் பெயரான “சமாரியா” என்றும் குறிப்பிட்டார்.
இந்த பாசிச அமைச்சர், மனிதாபிமான பிரச்சனைக்கு தார்மீக மற்றும் தர்க்கரீதியான தீர்வைக் கோரினார், குடியேற்றம் மற்றும் [பயங்கரவாத குற்றவாளிகளுக்கு] மரண தண்டனை சட்டத்தை ஊக்குவிக்கவும் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சேர்ந்த தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி இதேபோல் வாதிட்டார்: “எங்கள் சொந்த நலனுக்காகவும், இந்த ஈடுபாடற்ற பொதுமக்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்காகவும் கூட, தன்னார்வ குடியேற்றத்தைத் தூண்டுகிறது - இந்தப் போரில் கூட செயல்பட வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. நம் மீது சுமத்தப்பட்ட, இந்த தன்னார்வ குடியேற்றத்தை ஒரு சூழ்நிலையாக மாற்றுகிறது: அவர் சொல்லும் வரை: நான் அதை செய்ய விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
தனது உரையில், நெதன்யாகுவிற்கு விடுத்த மறைமுகமான வேண்டுகோள் ஒன்றில், பென் ஜிவிர் “தைரியமான முடிவுகளை எடுப்பது தைரியமான தலைமையின் பணி” என்று கூறினார்.
நெதன்யாகு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், வெளிப்படையாகக் கூறாமல் தனது உடன்பாட்டைச் இதற்கு சுட்டிக்காட்டினார், அவருடைய அமைச்சர்கள் “அவர்களின் கருத்துக்களுக்கு உரிமையுள்ளவர்கள்” என்றும் அவர் கூறினார்.