எதிர்கால பெருந்தொற்று நோய்களைத் தடுக்க உலக சுகாதார அமைப்பினதும் (WHO) முதலாளித்துவத்தினதும் இயலாமை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

திங்களன்று துபாயில் நடந்த உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் (World Health Organization - WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus), மே மாதம் நடைபெறவுள்ள உலக சுகாதார மாநாட்டில் WHO இன் பெருந்தொற்று நோய் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக பேச்சுவார்த்தைகளை இறுதி செய்யுமாறு அரசாங்கங்களை வலியுறுத்தினார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் 2023, ஆகஸ்ட் 17, வியாழக்கிழமை, இந்தியாவின் காந்தி நகரில் G20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய மாநாட்டில் கலந்து கொண்டபோது. [AP Photo/Ajit Solanki]

WHO பெருந்தொற்று நோய் உடன்படிக்கைக்கான முயற்சிகள் டிசம்பர் 2021 இல் WHO இன் பொறுப்புடைய நபர்களின் குழுவான உலக சுகாதார சபையின் இரண்டாவது சிறப்பு அமர்வில் தொடங்கிய அதே நேரத்தில்,  அப்போது உலகளவில் மிக விரைவாகப் பரவிய ஓமிக்ரான் திரிபு வகையின் (Omicron variant) பரவலையும் இணைத்து, WHO  கோவிட்-19 பெருந்தொற்று நோயை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது நடைமுறையில் இருந்தது. தனி செயல்திட்டத்திற்காக கூடிய சிறப்பு அமர்வின் ஒரு குறிப்பு:

பெருந்தொற்று நோய்க்கான தயார்நிலை மற்றும் பதிலளிப்பு குறித்த WHO மாநாடு, ஒப்பந்தம் அல்லது பிற சர்வதேச முறையாவணத்தை உருவாக்குவதன் நன்மைகளைப் பரிசீலித்தல், இது போன்ற ஒரு மாநாடு, ஒப்பந்தம் அல்லது தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் பதிலளித்தல் பற்றிய பிற சர்வதேச முறையாவணத்தை வரைவதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு செயல்முறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. WHO தயார்நிலையை வலுப்படுத்துதல் மற்றும் சுகாதார அவசரநிலைகளுக்கு பதிலளிப்பது குறித்த பணிக்குழுவின் அறிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்வது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள இங்கிலாந்தின் தூதுக்குழு அந்த நேரத்தில் ட்வீட் செய்தது: “பெருந்தொற்று நோய்களுக்கு நாம் எவ்வாறு தயாராகிறோம் மற்றும் பதிலளிக்கிறோம் என்பதைப் பற்றிய பொதுவான புரிதல் ஏன் தேவை என்பதை #ஓமிக்ரான் திரிபு வகை (#Omicron variant) மீண்டும் காட்டுகிறது. எனவே நாங்கள் அனைவரும் ஒரே விதிகளின்படி செயல்படவேண்டும்.”

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரைவு செய்யப்பட்ட முன்மொழிவு அக்டோபர் 2023 இன் இறுதியில் வெளியிடப்பட்ட அந்த நேரத்திலிருந்து ஒப்பந்தத்தின் அபிவிருத்தி செயல்திட்டம் மெதுவாகவே நகர்ந்தது.

அந்த வார்த்தைகளின்படி, ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த நோக்கம், எதிர்கால பெருந்தொற்று நோய்களைத் தடுப்பதற்கும் அதற்குத் தயாராவதற்கும் உலகின் திறன்களை வலுப்படுத்துவதாகும். அனைத்து நாடுகளும் சாத்தியமான அளவு பரவும் நிலைமகளைக் கண்காணிப்பதை உறுதி செய்வதையும், பெருந்தொற்று நோய் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவமனை திறன் போன்ற தேவையான ஆதாரங்களை அணுகுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கான உலகின் சீரற்ற தயார்நிலை மற்றும் வளங்களை அணுகுவதில் தேசிய அரசுகளுக்கிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை ஒப்பந்தத்திற்கான உந்துதலாக மேற்கோள் குறிப்பானது காட்டுகிறது.

எவ்வாறாயினும், அக்டோபரில் முன்மொழிவு வெளியிடப்பட்டதிலிருந்து, பல சிக்கல்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன. உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் கெப்ரேயஸ்ஸின் கருத்துக்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை குழுக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இருந்தன.

இதேபோல், 50 முக்கிய அறிவியல், அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களின் கடிதம், ஒப்பந்தத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த உதவுமாறு உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகளை வலியுறுத்தியிருக்கிறது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சுருக்கமாக, நாம் இன்று தலைவர்களை அழைக்கிறோம், இப்போதே முன்னேறி, ஒரு இலட்சியமான மற்றும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட பெருந்தொற்று நோய் உடன்படிக்கையை உறுதிசெய்யும் முடிவுகளை எடுக்க உங்கள் பேச்சுவார்த்தையாளர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

உலகை பாதுகாப்பானதாகவும் மேலும் நிலையானதாகவும் மாற்றுவதற்கு உலகளவில் ஒத்துழைப்பது உங்கள் பொறுப்பு. ஒரு புதிய பெருந்தொற்று நோய் அச்சுறுத்தல் தவிர்க்க முடியாதது. ஒரு புதிய பெருந்தொற்றுநோய் அல்ல - நாம் இப்போது செயல்பட்டால். அத்தகைய பேரழிவின் கடைசி பெருந்தொற்று நோயாக கோவிட்-19 ஐ உருவாக்க ஒரு பயனுள்ள உடன்படிக்கையை செயல்படுத்துவது இன்றியமையாதது. இந்த வரலாற்றை உருவாக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

எவ்வாறாயினும், உலக அரசாங்கங்கள் உச்சிமாநாட்டில், கெப்ரேயஸின் கருத்துக்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவையாக இருந்தன. அடுத்த பெருந்தொற்று நோய்க்கு தயாராகுமாறு உலகை வலியுறுத்தும் அதே வேளையில், கோவிட்-19 பெருந்தொற்று நோயைப் பற்றி அவர் மீண்டும் மீண்டும் பேசும்போது இறந்த காலத்தில் நடந்ததைப்போன்று குறிப்பதாக இருந்தது. அவர் கூறுகையில் “கோவிட்-19க்குப் பின் இன்று நான் உங்கள் முன் நிற்கிறேன்,...” மற்றும் “நாளை [ஒரு புதிய பெருந்தொற்று நோய்] தாக்கினால், நாங்கள் கோவிட்-19 உடன் எதிர்கொண்டதைப் போன்று அந்தப் பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்வோம்.” மேலும் “கோவிட்-19 மூலம் வாழ்ந்த தலைமுறை என்ற வகையில், எதிர்கால சந்ததியினரை நாம் அனுபவித்த துன்பங்களிலிருந்து பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என்று மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு WHO அதிகாரியும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் முடிந்துவிட்டது என்று பொய்யாக முன்வைத்த மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்ட கருத்துக்களாக இவை இருக்கின்றன. WHO இன் கோவிட்-19 தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கெர்கோ (Maria Van Kerkhove) அவர்களின் சமீபத்திய அறிக்கைகளுடன் பார்க்கும்போது அவை முரண்படுகின்றன. அவர் ஜனவரி 12 அன்று கூறினார், “கோவிட்-ஆல் பொது சுகாதார ஆபத்து உலகளவில் அதிகமாக இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.” பிப்ரவரி 6 அன்று, வான் கெர்கோவ் தொழில்நுட்பத் தலைவர், சயின்டிஃபிக் அமெரிக்கன் (Scientific American) அறிவியல் இதழில், “வைரஸ் பரவலாக உள்ளது. நாங்கள் இன்னும் ஒரு பெருந்தொற்று நோயில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது அதன் இரண்டாவது மிக உச்சக் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளது, இது ஆரம்ப ஓமிக்ரான் அலையை மட்டுமே மிஞ்சியுள்ளது. கோவிட்-19 ஐரோப்பாவில் தடையின்றி பரவி வருகிறது. ஜேர்மனியின் அளவுகள் 2022 கோடையில் இருந்து காணப்படாத அளவுக்கு எட்டியுள்ளன.

மே 5, 2023 அன்று பொதுசுகாதார அவசரநிலை சர்வதேச அமைப்புக்கு (public health emergency of international concern - PHEIC) கோவிட்-19 முற்றுப்பெற்றுவிட்டதென முன்கூட்டியே அறிவித்ததன் மூலம், WHO மற்றும் கெப்ரேயஸ் இந்த நிலைமைக்கு முற்றிலும் குற்றவாளிகளாக இருக்கின்றனர். இந்த நடவடிக்கை பற்றி, அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் (WSWS)  குறிப்பிட்டது போல, அறிவியல் ரீதியாக எந்த முகாந்திரமும் இல்லை என்பதை மேலும் குறித்துக்காட்டியது “...இது கொடிய நோய்க்கிருமிகள் தீடீரென தோன்றி பரவுவதைத் தடுப்பதையும் நிறுத்துவதையும் மையமாகக் கொண்டதும் மற்றும் பெருந்தொற்று நோய்களை நீக்குவதற்கும் ஒழிப்பதற்கும் போராடுகிற அனைத்து நவீன பொது சுகாதாரக் கொள்கையை முழுமையாவும் மற்றும் மொத்தமாகவும் நீக்கிவிட்டிருக்கிறது.

முன்னதாக, கோவிட்-19 காற்றுவழி மூலம் பரவுதலின் பின்னணியில் உள்ள அறிவியலை தாமதமாகவே WHO அங்கீகரித்தது, இதனால் வைரஸ் பரவுவதற்கான அடிப்படை வழிமுறையில் உலக மக்களை ஆழமான முறையில் தவறாக வழிநடத்தியிருக்கிறது.

கெப்ரேயஸும் ஒப்பந்தத்தை விவரிப்பதன் மூலம் தனக்குத்தானே முரண்பட்டுள்ளார். அதாவது, இது “சட்டப் பிணைப்பு ஒப்பந்தம்” என்றும் அதே நேரத்தில் “... ஒப்பந்தம் உண்மையில் தேசிய இறையாண்மையை உறுதிப்படுத்துகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் அனைத்து முயற்சிகளையும் போலவே, பெருந்தொற்று நோய் ஒப்பந்தத்திலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிய நாடுகள் மீது எந்த கட்டாயப்படுத்தல் வழிமுறையும் இருக்கவில்லை.

பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் இல்லாத மற்ற பல்லில்லாத ஐ.நா. வின் முன்முயற்சிகளை இது நினைவூட்டுகிறது. உண்மையில், கடந்த நவம்பரில், காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் (COP28) கட்சிகளின் 28வது மாநாடு நடந்த அதே நகரத்தில் கெப்ரேயஸ் தனது உரையை நிகழ்த்தினார். இந்த உண்மையை அவர் தனது கருத்துக்களில் குறிப்பிட்டிருந்தார். அந்த மாநாட்டைப் பற்றி உலக சோசலிச வலைத்தளம் கீழ்வருமாறு கருத்து தெரிவித்தது போல்,

இந்த ஆண்டு COP28 உச்சிமாநாடு பற்றிய அனைத்தும், விரைவான காலநிலை பேரழிவிற்கு முதலாளித்துவ அரசாங்கங்களின் மொத்த அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த மாநாட்டை நடத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை புதைபடிவ எரிபொருள் (fossil fuel) விற்பனையிலிருந்து பெற்றுகொண்டிருக்கிறது. இந்த உச்சிமாநாட்டின் தலைவராக அரசுக்கு சொந்தமான அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுல்தான் அல்-ஜாபர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமைகளின் கீழ்தான், உச்சிமாநாடானது புதைபடிவ எரிபொருள் (fossil fuel) தொழிலுக்கான “வர்த்தகக் கண்காட்சி” என்று விவரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் காஸாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் சமீபத்திய தீர்மானம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி இஸ்ரேல் காஸா பகுதியையும் மேற்குக் கரையையும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு உட்பட ஐ.நா தீர்மானங்கள் மற்றும் தீர்ப்புகள் தேசிய அரசுகளை கட்டுப்படுத்த இயலாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தண்டனை எதுவுமின்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், ஏகாதிபத்திய சக்திகள் இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு செய்வதற்கான வழிமுறைகளை அதற்கு தொடர்ந்து வழங்கி வருகின்றன.

கெப்ரேயஸ் அவரது கருத்துக்களில்,”... ஒப்பந்தத்தைப் பற்றிய பொய்கள் மற்றும் சதி கோட்பாடுகளின் வழிபாடுகள்...” என்று குற்றம் சாட்டினார், பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடையவில்லை, ஆனால் அவ்வாறு செய்வதில் அவர் குறி தவறிவிட்டார். உண்மையான பொறுப்பு முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் போட்டி தேசிய அரசுகளாக பிளவுபட்டுள்ள பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு இடையிலான அதன் மைய முரண்பாட்டில் தங்கியுள்ளது. பெருந்தொற்று நோய் ஒப்பந்தத்தின் முக்கிய விமர்சனமான தேசிய இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உலகளாவிய ஒத்துழைப்புக்கான தேசியவாத எதிர்ப்பின் உண்மையான தோற்றம் இதுதான்.

உண்மையில், பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக ஒட்டிக்கொண்டிருக்கும் புள்ளிகளில் ஒன்று அறிவுசார் சொத்துரிமை (intellectual property) மீதான அதன் விதிகள் தொடர்பானதாகும். உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் பிராந்தியங்களில் பெருந்தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தடுப்பூசிகள் மற்றும் பிற பொருட்களைத் தயாரிக்க, அறிவுசார் சொத்துரிமைகளுக்கான “காலக்கெடு” ஒப்பந்தம் தற்போது விலக்குகளை கொண்டிருக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்று நோய், மருந்து உற்பத்தியில் ஏகபோக நிறுவனங்கள் mRNA தடுப்பூசி தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மறுப்பதைப் பார்த்தோம். மோசமான தடுப்பூசி அளவுகளில் கணிசமான காரணி குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் காணக்கூடியதாக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கான முன்மொழியப்பட்ட உரை, இந்தப் போக்கு பெருந்தொற்று நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்கிறது என்று சரியாகக் கூறுகிறது மற்றும் அறிவுசார் சொத்துரிமை விட்டுக்கொடுப்புகளுக்கான அர்ப்பணிப்புகளைச் சேர்ப்பதன் மூலம் அதை நிவர்த்தி செய்கிறது.

இருப்பினும், இந்த விதிகளை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன. மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு (The International Federation of Pharmaceutical Manufacturers and Associations - IFPMA) இந்த விதிகளை நேரத்தை வீணடிப்பதாகக் கண்டித்தது, அவற்றை “கெட்டது” மற்றும் “சேதப்படுத்தும்” என்று தெரிவித்தது மற்றும் “மருத்துவ எதிர்விளைவுகளுக்கான கண்டுபிடிப்பு வரிசையாக இருக்கும் வாய்ப்புகள் மீது அவை மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்” என்று கூறியது.

ஒப்பந்தத்தின் அறிவுசார் சொத்துரிமை விதிகளுக்கு எதிராக எடைபோடுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு தேசிய அரசாங்கங்கள் பொறுப்பாக இருந்தன. ஜேர்மன் சுகாதார மந்திரி கார்ல் லாட்டர்பாக் உலக சுகாதார உச்சி மாநாட்டில் பின்வருமாறு கூறினார்:

ஜேர்மனி மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு, அறிவுசார் சொத்துரிமைகளில் ஒரு பெரிய வரம்பு இருப்பதால், அத்தகைய ஒப்பந்தம் செல்லாது என்பது தெளிவாகிறது.

சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் (SPD) 14 ஜனவரி 2022 அன்று செய்தியாளர் சந்திப்பின் போது (AP Photo/Michael Sohn)

“...தேவையான அளவிற்கு” கீழ்படிய வேண்டியதில்லை என்பதன் மீதான விதிகள் தகுதிவாய்ந்த சொற்களால் பற்களற்றதாக ஆக்கப்பட்ட போதிலும் பெருந்தொற்று நோய் ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அதில் எது அவசியம், எப்படி என்பதை யார் தீர்மானிப்பார்கள் என்று வார்த்தைகள் எதுவும் இல்லை. இது ஒரு தப்பிக்கும் உட்பிரிவாக இருக்கிறது, இருப்பினும் முதலாளித்துவ அமைப்புமுறை எந்த விதமான அறிவுசார் சொத்துரிமையை கீழ்படிய மறுப்பதற்கு எதிராக உள்ளது. 

கெப்ரேயஸின் கருத்துக்கள், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பெருந்தொற்று நோய் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளின் தேக்கம் மற்றும் அந்த தேக்கத்தை ஏற்படுத்தும் பெருநிறுவன நலன்கள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்விகள் பற்றிய ஒரு கடுமையான குற்றச்சாட்டாக அவைகள் சேவை செய்கின்றன. மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFPMA) மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் எதிர்ப்பானது பொது சுகாதாரத்தை தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்வதை எடுத்துக்காட்டுகிறது.

நிச்சயமாக, தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு முதலாளித்துவ அமைப்புமுறையின் பிரதிபலிப்பின் இந்த முழு வரலாறும் அதன் பாரிய தோல்விகள் மற்றும் குற்றங்களை அப்பட்டமான வார்த்தைகளில் உரத்துக் கூறுகிறது. பெருநிறுவனங்கள் விலைகளைத் தீர்மானிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட பொருட்களின் சமமற்ற விநியோகத்தைக் கட்டாயப்படுத்தியது. அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொது சுகாதாரக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி, சீனா மற்றும் பிற நாடுகளில் பூஜ்ஜிய கோவிட் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரியது. மற்றும் பெருந்தொற்று நோய்க்கு முந்தைய அல்லது அதற்கும் குறைவான நிலைக்குத் திரும்ப பொது சுகாதார அமைப்புகளுக்கான செலவினங்களை குறைக்க அரசாங்கங்களைத் தூண்டியது.

இதன் விளைவாக, கிட்டத்தட்ட தேவையற்ற 30 மில்லியன் மக்களின் மரணங்கள் மற்றும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பலவீனமடைந்துள்ளனர்.

இந்த கேலிக்கூத்துகள் சமூக சமத்துவமின்மையின் வியப்புதருகிற அதிகரிப்புடன் சேர்ந்துள்ளன. ஒக்ஸ்பாம் (Oxfam) சமீபத்தில் இந்த நிகழ்வை ஆவணப்படுத்தும் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது, 2020 முதல் 5 பில்லியன் மக்கள் ஏழைகளாகிவிட்டனர். அதே நேரத்தில் உலகின் ஐந்து பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை ஒரு மணி நேரத்திற்கு 14 மில்லியன் டாலர் என்ற விகிதத்தில் இரட்டிப்பாக்கியுள்ளனர். அதே நேரத்தில் பில்லியனர்கள் மொத்தமாக 3.3 டிரில்லியன் டாலர் செல்வத்தைப் பெற்றுள்ளனர். உலகளவில் பணக்காரர்களில் ஒரு சதவீதத்தினர் இப்போது உலகின் 43 சதவீத செல்வத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளத்தால் (wsws.org) விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதன்படி, மரணம் மற்றும் நோய் மற்றும் சமூக சமத்துவமின்மையின் இந்த பாரிய எழுச்சி ஆகிய இரண்டிலும் பெருந்தொற்று நோய்க்கு அளித்த முதலாளித்துவத்தின் பதில் ஒரு மிகப்பெரிய சமூகக் குற்றமாக இருக்கிறது. முதலாளித்துவ நிறுவனங்களின் பக்கம் திரும்புவதும், அவர்களின் போக்கை மாற்ற வேண்டும் என்று கோருவதும் முட்டாள்தனமான செயலாகும். மூன்றாம் உலகப் போரின் தீப்பிழம்புகளை தூண்டுவதன் மூலமும், பாதிக்கப்படக்கூடிய மக்களை முடிவில்லாமல் அழிக்க ஒரு கொடிய வைரஸை அனுமதிப்பதன் மூலமும், அவை முடிவில்லாதவை என்பதை நிரூபித்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போதைய பெருந்தொற்று நோயை நிவர்த்தி செய்வதற்கும் எதிர்காலத்தில் வராமல் தடுப்பதற்கும் உலகளாவிய அளவில் முதலாளித்துவத்தின் இயலாமையை சர்வதேச தொழிலாள வர்க்கமானது பெருந்தொற்று நோயின் படிப்பினைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். உண்மையில், இந்த அளப்பரிய உலகளாவிய பணிகள், தொழிலாள வர்க்கத்தின் மீதே விழுகின்றன. தொழிலாள வர்க்கமானது, பெருநிறுவன இலாபங்களைக் காட்டிலும் பொது சுகாதாரம் உட்பட சமூக தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க அதன் சொந்த வரையறைகளில் உலகப் பொருளாதாரத்தை மறுஒழுங்கு செய்தாக வேண்டும். இது முதலாளித்துவம் மற்றும் அதன் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுகாதாரத்தை பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும், காலநிலை மாற்றத்தைத் தீர்க்கும் மற்றும் சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரு புதிய சமூகத்தை கட்டமைக்கும் இலக்குடன் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் மூலம்தான் இது அடையப்பட முடியும்.

Loading