முன்னோக்கு

காஸா இனப்படுகொலைக்கான எதிர்ப்பை இலக்கு வைத்து, மிச்சிகன் பல்கலைக்கழகம் போராட்டங்களை தடைசெய்யும் கொள்கையை முன்மொழிகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த புதன் கிழமையன்று, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான தேசிய மற்றும் உலகளாவிய ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, மிச்சிகன் பல்கலைக்கழகம் ஒரு புதிய நிர்வாகக் கொள்கைக்கான முன்மொழிவை வெளியிட்டது. இது பல்கலைக்கழக வளாகத்தில் பொது எதிர்ப்புகளை திறம்பட தடைசெய்ய பயன்படுத்தப்படலாம்.

மார்ச் 28, 2024 அன்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் காஸா இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கொள்கை ஆவணம் கூறுகிறது: 

பல்கலைக்கழகத்தின் (”பல்கலைக்கழக செயல்பாடுகள்”) சாதாரண கொண்டாட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை சீர்குலைப்பதன் மூலம், மற்றவர்களின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை மீறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை 

இந்தக் கொள்கையை மீறும் மாணவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் வெளியேற்றம் உட்பட, ஒழுங்கு உறுதியான நடவடிக்கைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள்.

பேச்சுரிமை மீதான இந்தத் தாக்குதல், மார்ச் 26 அன்று நடைபெற்ற எதிரப்பு போராட்டத்தில் பல்கலைக்கழகத் தலைவர் சாண்டா ஓனோ, காஸா மீதான இனப்படுகொலைக்கு எதிரான பொதுக் கண்டனத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. 

ஓனோ பின்வருமாறு அறிவித்தார்:

போராட்ட எதிர்ப்புகள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும், இடையூறு ஏற்படாது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை, மகிழ்ச்சியான நிகழ்வில் பங்குபெறும் மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை மீறுவதில்லை.

“பொது ஒழுங்கு” மற்றும் “பொருளாதார வாழ்க்கை” சீர்குலைவதைத் தடுக்கும் போர்வையில், போராட்டத்தைத் தடை செய்வது நவீன வரலாற்றில் ஒவ்வொரு சர்வாதிகார ஆட்சியின் வர்த்தகத்தில் பங்கு வகிக்கிறது. அந்த காரணத்திற்காக, ஜனநாயக சட்ட கண்ணோட்டத்தில், “இடையூறுக்கான” அனுமதி எப்போதும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு இன்றியமையாததாக புரிந்து கொள்ளப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இது தொடர்பாக விளக்கியது போல்:

தனியார் நிறுவனங்களும் ஒட்டுமொத்த சமூகமும்... அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்குத் இது தேவைப்பட்டால், ஒரு குறிப்பிட்ட அளவிலான இடையூறுகளை ஏற்க வேண்டும்.

புதன்கிழமை சுற்றுக்கு விடப்பட்ட இந்தக் கொள்கை வரைவு உரையின்படி, ஏப்ரல் 3 வரை பின்னூட்டத்தில் “கருத்துகளை” வெளியிடுவது, “பார்வைக்கு தடையாக இருப்பது, உரத்த அல்லது பாரியளவிலான சத்தங்களை உருவாக்குவது, ஒளி அல்லது காட்சிகளை முன்வைப்பது அல்லது குறிப்பிடத்தக்க கவனச்சிதறல்களை உருவாக்குவது, வளாகத்தில் உள்ள நபர்கள் சுதந்திரமாக செல்வதைத் தடுப்பது அல்லது தடை செய்வது” அல்லது பல்கலைக்கழக அதிகாரியால் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டால் அவ்வாறு செய்ய மறுப்பது கொள்கையை மீறுவதாகும்.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மறியல், பாதசாரிகளின் போக்குவரத்தை “தடுக்கிறதா அல்லது முடக்கிறதா”?, ஒரு நிகழ்விற்கு வெளியே ஒரு பேனரை வைத்திருப்பது “பார்வைக்கு இடையூறு விளைவிக்கிறதா?”, ஒரு போர்க் குற்றவாளி மேடை ஏறும்போது கைதட்டுவதற்குப் பதிலாக “பூ” என்று கத்துவது “கணிசமான கவனச்சிதறல்” ஆகுமா?, இந்தக் கொள்கையின் தெளிவற்ற தன்மை வேண்டுமென்றே அனைத்து ஆர்ப்பாட்டங்களும், அவற்றின் இயல்பிலேயே, “கணிசமான கவனச்சிதறல்களை” உள்ளடக்கியிருப்பதால், எந்த ஆர்ப்பாட்டத்தையும் தடைசெய்யும் உரிமையை பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதே இந்தக் கொள்கையின் விரும்பிய விளைவு ஆகும்.

நிர்வாகக் கொள்கைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் பட்சத்தில், மாணவர்களுக்குச் சுருக்கமாக குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டு, “தானாக முன்வந்து பொறுப்பை ஏற்க” அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் அல்லது அவர்களின் தண்டனையை தீர்மானிக்க ஒரு சார்பு பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள “செயல்முறையை” மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அத்தோடு, இந்தக் கொள்கை மாணவர்களை பொலிசுக்கு அனுப்புவதாகவும் அச்சுறுத்துகிறது. மற்றும் உள்ளூர் வழக்குரைஞர்கள் “ஆட்சியாளர்களின் கட்டளை மற்றும் அரச அத்துமீறல் சட்டத்தின் பிரிவு XII இன் கீழ் தவறான குற்றச்சாட்டுகளுக்கான கோரிக்கைகளை” முன்வைக்கிறார்கள்.

பொலிஸ் மற்றும் வழக்குரைஞர்களை ஈடுபடுத்தும் பல்கலைக்கழகத்தின் அச்சுறுத்தல், குறிப்பாக பல்கலைக்கழகத்தின் பல சர்வதேச மாணவர்களை இலக்காகக் கொண்டது. அவர்களின் விசா நிலை பெரும்பாலும் ஆபத்தானது மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அல்லது எந்த காரணத்திற்காகவும் அவை ரத்து செய்யப்படலாம்.

மாணவர்களைத் தவிர, இந்த புதிய “தடைக்” கொள்கையானது ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் வெளிப்படையாகப் பொருந்தும். கொள்கையை மீறும் மாணவர்கள் வளாகத்திலிருந்து “வெளியேற்றப்படுவதை” சந்திக்க நேரிடும். அதே நேரத்தில், ஆசிரியர்கள் “பணி நீக்கத்தை” சந்திக்க நேரிடும். அத்தோடு, இந்தக் கொள்கை மற்ற எல்லா முரண்பட்ட கொள்கைகளையும் மீறுவதாகக் கூறுகிறது. இது அநேகமாக மாணவர் உரிமைகளின் அறிக்கையை உள்ளடக்கியிருக்கியிருக்கிறது. இது “மாணவர் செயல்பாட்டின் நீண்ட பாரம்பரியத்தை நிலைநிறுத்துகிறது மற்றும் பேச்சு சுதந்திரத்தை மதிக்கிறது, இதில் செல்வாக்கற்ற கருத்துக்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதும் அடங்கும்.”

மிச்சிகன் பல்கலைக்கழகம், உண்மையில், வியட்நாம் போர் மற்றும் சிவில் உரிமைகள் காலங்களில் மாணவர் போராட்டங்களின் மையமாக இருந்தது. புதிய முன்மொழியப்பட்ட கொள்கை, அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்திருந்தால், மாணவர் அமைப்பின் முழு பட்டதாரி மாணவர்களின் வகுப்புகளையும் கிட்டத்தட்ட குற்றமாக்கியிருக்கும்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) வியாழனன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை அச்சுறுத்தி மௌனமாக்குவதற்கான நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கைகளை அந்த அறிக்கை கண்டித்துள்ளது.

IYSSE கூறியது:

“நாஜி இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில், நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடிய ‘குற்றத்திற்காக’ பல்கலைக் கழக பொலிஸால் குறிவைக்கப்பட்ட அனைத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும், ஊழியர்களையும் நிபந்தனையின்றி நாங்கள் பாதுகாப்போம்” 

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர், வியாழன்று ஆன் ஆர்பரில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்ற 1,000 பேர் கொண்ட பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் மற்றும் பல மாணவர்களிடம் பேசினார். அவர் முன்மொழியப்பட்ட இந்தக் கொள்கையை “ஜனநாயக உரிமைகள் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமைக்கு எதிரான மூர்க்கத்தனமான தாக்குதல்” என்று கூறினார்.

கிஷோர் தொடர்ந்தார்:

இது காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை குற்றமாக்கும் மற்றும் அவதூறு செய்யும் முயற்சிகளின் தொடர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகும். பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான, நிதி மற்றும் அரசியல் ஆதரவுடன் நடத்தப்படும் இந்தக் கொடூரமான குற்றங்களுக்கு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பிற்கு இது ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பாகும்.

புதனன்று வெளியிடப்பட்ட Gallup கருத்துக்கணிப்பின்படி, நவம்பரில் காஸாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு 45 சதவீத எதிர்ப்பு இருந்ததில் இருந்து மார்ச் மாதத்தில் 55 சதவீதத்திற்கு அதிகமான அமெரிக்க மக்களின் எதிர்ப்பு உணர்வு கடுமையாக மாறியுள்ள நிலைமையில் தற்போதைய ஒடுக்குமுறை வந்துள்ளது. சமூக ஊடகங்களில் காஸாவில் இருந்து நேரடியாகப் புகார் செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த மாற்றம் இன்னும் அதிகமாக உள்ளது. Facebook, TikTok மற்றும் Instagram இல், இஸ்ரேலிய அரசாங்கத்தை விமர்சிக்கும் ஹேஷ்டேக்குகள், இஸ்ரேலுக்கு ஆதரவான ஹேஷ்டேக்குகளை இருபதுக்கு ஒன்று, முப்பதுக்கு ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்ட விகிதங்களில் இஸ்ரேலிய சார்பு ஹேஷ்டேக்குகளை விட அதிகமாக உள்ளன.

பல்கலைக்கழக அதிகாரிகளின் பதில், ஆளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடனான எண்ணற்ற உறவுகளால் சிதைந்துள்ளது, பொதுவாக கடுமையான அடக்குமுறையாகவே உள்ளது.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக சுமார் இரண்டு டசின் மாணவர்களும் ஒரு பத்திரிகையாளரும் பாதிக்கப்பட்டதால் U-M நிர்வாகம் ஒரே வாரத்தில் “இடையூறு” க்கு எதிரான அவர்களின் புதிய கொள்கையை வெளியிட்டது. இஸ்ரேலை ஆதரிக்கும் வணிகங்களில் மாணவர் அரசாங்க நிதி செலவிடப்படுவதைத் தடுக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நிர்வாகம் தடுத்ததை அடுத்து இந்த எதிர்ப்பு போராட்டதுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகள், துரிதப்படுத்தும் செயல்முறையின் சமீபத்திய வெளிப்பாடுகள் மட்டுமே. கடந்த அக்டோபரில் காஸாவிற்கு எதிரான தாக்குதல் தொடங்கப்பட்டதில் இருந்து, பல்கலைக்கழக வளாக எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கான கோரிக்கைகள், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் “யூத-எதிர்ப்பு” என்று தவறான போர்வையில் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகத் தலைவர்கள் வாஷிங்டனில் விசாரணைக் குழுவின் முன் நிறுத்தப்பட்டனர். அங்கு சட்டமியற்றுபவர்கள் மாணவர்களின் பேச்சுக்களை தணிக்கை செய்யாததற்காக அவர்களைத் துன்புறுத்தியதால், முன்னாள் ஹார்வர்ட் பல்கலைக்கழக தலைவர் கிளாடின் கே ராஜினாமா செய்தார்.

மிக சமீபத்தில் ஜனநாயகக் கட்சி, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு எதிராக “ஒட்டமொத்த போரை” நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக அவர்கள் தேர்தல்களுக்கு அணுகுவதைத் தடுக்கும் நோக்கத்துடன். இங்கிலாந்தில் ரிஷி சுனக்கின் புதிய “தீவிரவாத” சட்டம் மற்றும் பாரிஸில் அல்ஜீரியா தொடர்பான போராட்டங்கள் மீதான தடை உட்பட உலகம் முழுவதும் இந்த செயல்முறை பிரதிபலிக்கிறது.

பெருகிய முறையில் தணிக்கை மற்றும் அடக்குமுறையின் அவநம்பிக்கையான முயற்சிகள் ஒரு நிலையான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட சமூக ஒழுங்கின் அடையாளம் அல்ல. அவை பலவீனத்தின் அடையாளம் ஆகும். உலக முதலாளித்துவம் மற்றும் அதன் அனைத்து பாரம்பரிய நிறுவனங்களின் நெருக்கடியின் செயல்பாடு, குறிப்பாக அமெரிக்காவில் தீர்க்கப்படாத சமூகக் குறைகளால் கொதித்துக்கொண்டிருக்கிறது. அதன் கொள்கைகளுக்கு உண்மையான வெகுஜன ஆதரவை ஈர்க்கவோ அல்லது சீர்திருத்தம் போன்ற எதையும் வழங்கவோ முடியாமல், ஆளும் வர்க்கம் இன்னும் நேரடி அடக்குமுறைக்கு திரும்புகிறது. அமெரிக்காவில், ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் தலைமையிலான பிரிவினர், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் தலைமையிலான பிரிவை விட ஒன்றும் குறைவானவர்கள் அல்லர். 

காஸாவில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையானது, உக்ரேனில் ஏற்கனவே தீவிரமடைந்து வரும் உலகளாவிய மோதலின் இரத்தம் தோய்ந்த அதிகரிப்புக்கு மத்தியில் நிகழ்கிறது மற்றும் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுக்கு விரிவடைந்து மனித குலத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அத்தோடு, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு சீரழிந்து வருகிறது. இந்த சூழலில், காஸா இனப்படுகொலையானது, அமெரிக்க மற்றும் நேட்டோ ஏகாதிபத்தியங்களை உண்மையாகவே அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் (”ஜனநாயகத்தின் சாம்பியனாகவும்”, “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை” பாதுகாப்பவர்களாகவும் காட்டிக் கொள்பவர்கள்) உலக மக்களின் முன் இரத்தம் தோய்ந்த நயவஞ்சகர்கள் மற்றும் வெகுஜன கொலைகாரர்களின் கூட்டமாக நிற்கிறார்கள்.

அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அமைப்பும் இதேபோல் அம்பலமாகியுள்ளது: அது சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய போக்கை வெளிப்படுத்தவில்லை, மாறாக அடக்குமுறை மற்றும் அழிவை நோக்கியதாக உள்ளது. கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள், பாசிசம் மற்றும் இனப்படுகொலைகளை தோற்றுவித்த முதலாளித்துவத்துடன் தொடர்புடைய அனைத்து பெரிய வரலாற்றுப் பிரச்சனைகள் “தீர்ந்துவிட்டன” என்றும், மீண்டும் மீண்டும் வராது என்றும் கூறுவதற்கான அனைத்து முயற்சிகளும் இருந்தபோதிலும், பழிவாங்கலுடன் இவை மீண்டும் திரும்பியுள்ளன.

இந்தச் சூழலில், ஜனநாயகக் கட்சிக்கு “அழுத்தம்” கொடுக்கலாம் மற்றும் முதலாளித்துவம் “சீர்திருத்தம்” செய்யப்படலாம் என்ற மாயையை விதைக்க முயன்ற அனைத்து அரசியல் போக்குகளும், தனிநபர்களும் அம்பலப்பட்டுப்போய் உள்ளனர். வரலாற்றில் மிகவும் “இடதுசாரி” மற்றும் “தொழிலாளர் சார்புடையவர்” என்று இந்த வட்டாரங்களில் புகழப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி, “இனப்படுகொலை ஜோ” என்ற அவருக்கு தகுதியான புனைப்பெயரில் நினைவு கூரப்படுவார்.

முதலாளித்துவத்தின் ஜனநாயகப் போர்வை சிதைந்து, அதன் பிற்போக்கு சாரம் பெருகிய முறையில் பார்வைக்கு வரும்போது, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், அதனை விரிவுபடுத்தவும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தவும் திறன் கொண்ட சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கம் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும். இதற்கு அனைத்து மதிப்பிழந்த சாதனைகள் மற்றும் இனப்படுகொலையை செயல்படுத்துபவர்களுக்கு நம்பிக்கையற்ற முறையீடுகளை விடுப்பதில் இருந்து ஒரு திருப்பம் தேவைப்படுகிறது. ஆதலால், அனைத்து முயற்சிகளும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தேவையான கூட்டு வர்க்க உணர்வு மற்றும் அமைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

Loading