2024 ஆண்டு, மே மாதம் 4ந் திகதி, சனிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் உலகம் முழுவதிலுமுள்ள பேச்சாளர்களைக் கொண்ட ஒரு இணையவழிப் பேரணியாக மே தினத்தை நடத்தியிருந்தது. பதிவு செய்யப்பட்ட நிகழ்வை இங்கே பார்க்கலாம்.உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
காஸாவில் ஆழமடைந்து வரும் இனப்படுகொலை, ஈரானை இலக்கு வைத்து மத்திய கிழக்கில் ஒரு பிராந்தியப் போர் அச்சுறுத்தல், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவுடன் நேரடி மோதலை நோக்கி அதிகரித்து வரும் நகர்வுகளுக்கு மத்தியில், 2024 ஆண்டு மே தினம் நடைபெறுகிறது. உலகம் மீதான ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபங்கீடு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அணுவாயுத மோதலின் அச்சுறுத்தலானது பனிப்போரின் எந்தவொரு புள்ளியையும் விட இன்று உயர்ந்தளவில் உள்ளது.
போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் குறிப்பாக காஸாவில் நடந்துவரும் கொடூரமான இனப்படுகொலைக்கு எதிர்ப்பானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக அதிகரித்து வருகிறது. இனப்படுகொலைக்கு எதிராக ஒவ்வொரு கண்டத்திலும் மில்லியன் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர், இஸ்ரேலில் உள்ள சியோனிச ஆட்சியுடன் தங்கள் அரசாங்கங்கள் உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்கள் பயனற்றவையாக உள்ளன, ஏனெனில் ஏகாதிபத்தியத்தை சீர்திருத்த முடியாது. அது தூக்கியெறியப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த 2024 ஆண்டு மே தினக் கூட்டமானது, இந்தத் தலைமையை கட்டியெழுப்புவதற்கான ஒரு முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் வழங்குவதோடு ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தில் ஒரு முன்னோக்கிய பாதையையும் வழங்கும்.