ஆர்ஜென்டினா ஜனாதிபதி மிலே, 1976 ஆட்சிக்கவிழ்ப்பு சதி நினைவு கூரலில் பாசிச-இராணுவ ஆட்சிக்குழுவைப் பாதுகாக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 24, 1976 இராணுவப் புரட்சியின் நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25, 2024) பாசிச பயங்கரவாதத்தின் ஆட்சியை நியாயப்படுத்துவதன் மூலமும் அதன் இரத்தக்களரி குற்றங்களை மறுப்பதன் மூலமும் ஜேவியர் மிலே முதல் ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதியாகியிருக்கிறார்.

ஜனாதிபதி ஜேவியர் மிலே மற்றும் முன்னாள் சர்வாதிகாரி ஜார்ஜ் ரஃபேல் விடேலா (படம் LLA மற்றும் Albasmalko / CC BY 3.0) [Photo by LLA and Albasmalko / CC BY 3.0]

அன்று அதிகாலையில், மிலே, அமெரிக்க ஆதரவு இராணுவ சதி மற்றும் சர்வாதிகாரத்தை “தீயவர்களுக்கு” எதிராகவும் “போர்” நடத்துவதற்கு தேவையான வழிமுறையாக நியாயப்படுத்தும் வகையிலும் ஒரு ஆவணப்படத்தைப் போன்ற வீடியோவை வெளியிட்டார். இராணுவ ஆட்சியின் கீழ் கொல்லப்பட்ட மற்றும் “காணாமல் போனவர்களின்” எண்ணிக்கையையும் மறுக்கிற அந்த 12 நிமிட வீடியோ, மேலும் இந்த வரலாற்றைப் “புதைக்க” மற்றும் கடந்த காலங்கள் கடந்து போகட்டும் என்று முறையீடுகளுடன் முடிகிறது.

ஒரு மூத்த இராணுவ அதிகாரியின் மகளும், ஏற்கனவே தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பதில் பணிபுரிந்தவரும் மற்றும் சர்வாதிகாரி ஜார்ஜ் ரஃபேல் விடேலாவை சிறையில் மீண்டும் மீண்டும் சந்தித்தவருமான தற்போதைய துணை ஜனாதிபதியாக இருக்கும் விக்டோரியா வில்லருவேல் (Victoria Villarruel), “பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள்” என்று ஒரு தனி வீடியோவை வெளியிட்டுள்ளார்.” அதில், 1970 களில் இடதுசாரி கெரில்லாக்களின் ஆதரவாளர்கள் மேலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.

வரலாற்றுப் பதிவு அவர்களின் கூற்றுகளை முற்றிலுமாக நிராகரித்தாலும், பெருநிறுவன ஊடகங்கள், இராணுவ ஆட்சிக்குழு கண்டிப்பாக அல்லது முக்கியமாக இடதுசாரி கெரில்லாக்களுக்கு எதிராக செயல்பட்டது என்ற அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு நம்பகத்தன்மையின் பல்வேறு கூறுகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன அல்லது அதன் செயல்பாடுகளில் “அதிகப்படியான” நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன மேலும் இராணுவ ஆட்சியினால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன 30,000 பாதிக்கப்பட்டவர்கள் என்ற பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடும் “மிகைப்படுத்தியிருக்கின்றன.”

மார்ச் 24, 1976 இல், இராணுவமானது ஜனாதிபதி இசபெல் மார்டினெஸ் டே பெரோனை (Isabel Martinez de Perón) தடுத்து நிறுத்தி ஹெலிகாப்டரில் காசா ரோசாடாவிலிருந்து (Casa Rosada) வெளியேற்றியது. 21 மாதங்களுக்கு முன்னர் ஜெனரல் ஜுவான் டொமிங்கோ பெரோனின் (Juan Domingo Perón) இயற்கையான மரணத்திற்குப் பிறகு, அவர் நெருக்கடி நிறைந்த அரசாங்கத்தை மரபுரிமையாகப் பெற்றார், அது ஏற்கனவே மிருகத்தனமான சமூக வெட்டுக்கள், 335 சதவீத பணவீக்கத்திற்கு மத்தியில் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பெரோனிஸ்ட் மும்மடங்கு கொலைப் படை (Peronist Triple A death squad) மூலம் நூற்றுக்கணக்கான இடதுசாரிகளைக் கொன்றது உட்பட பாரிய அடக்குமுறைகளைத் திணிக்கத் தொடங்கியது.

ஆர்ஜென்டினா இராணுவமானது சிலி, உருகுவே, பராகுவே, பொலிவியா மற்றும் பிரேசில் இராணுவ சர்வாதிகாரங்களுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை “1974 இன் தொடக்கத்தில்” “கவிழ்க்க முனைகிற கூறுகளுக்கு எதிராக” சிஐஏ இன் கூற்றுப்படி, இந்த எல்லை தாண்டிய ஒத்துழைப்பை அமெரிக்க கழுகு ஆபரேஷன் (Operation Condor) என அறியப்பட்டதை மேற்பார்வையிட்டது. அந்த நேரத்தில் பெரோனிஸ்டுகளின் கீழ் ஜான் டிங்கஸின் (John Dinges) அமெரிக்க கழுகு ஆண்டுகள் (The Condor Years) என்ற புத்தகத்தின் தகவலின்படி, புவெனஸ் அயர்ஸில் (Buenos Aires) உள்ள காம்போ டி மேயோ (Campo de Mayo) தளத்தில் மிக முக்கியமான கூட்டங்கள் நடைபெற்றன.

ஆட்சிக்கவிழ்ப்பு முடிந்த உடனேயே, முன்கூட்டியே கவனமாக தயாரிக்கப்பட்ட திட்டங்களுடன், துருப்புக்கள் மற்றும் டாங்கிகள் தொழிற்சங்க மற்றும் இடதுசாரி கட்சி தலைமையகம் மற்றும் பணியிடங்களுக்கு எதிராக நகர்ந்து, அறியப்பட்ட போராளிகளை பெருமளவில் கைது செய்யத் தொடங்கின. பின்னர், தலைமைத் தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் ஜார்ஜ் ரஃபேல் விடேலா (Jorge Rafael Videla), இராணுவத் தலைமையகத்தில் பதவிப் பிரமாணம் செய்து, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுடன் ஆளும் ஆட்சிக்குழுவை அமைத்தார்.

அரசு அதிகாரத்திற்கு எந்தவொரு பிரதான அச்சுறுத்தலையும் ஒருபோதும் முன்வைக்காத தனிமைப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்திய, அரசியல் ரீதியாக தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளான அந்நாட்டில் உள்ள ஒரு சில நூறு கெரில்லா போராளிகள் மீதான ஒடுக்குமுறையானது, உலக நிதியால் கோரப்பட்ட பாரிய வறுமைக்கு எதிரான அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் நசுக்குவதை நியாயப்படுத்த சுரண்டப்பட்டது.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு குறைந்தது ஒரு மாதமாவது சதிகாரர்களுடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்த ஜனாதிபதி ஜெரால்ட் ஃபோர்டின் (Gerald Ford) அமெரிக்க நிர்வாகம், ஆட்சிக்குழுவை அன்றே அங்கீகரித்து, பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளின் தொகுப்பை தயார் நிலையில் வைத்திருந்தது. உத்தியோகபூர்வ ஆவணங்களால் சுட்டிக்காட்டப்பட்டபடி, “காலத்தை நீடிப்பதற்கும் மற்றும் முன்னெப்போதும் நடந்திராத கொடூரத்திற்கும்” ஹென்றி கிசிங்கரின் (Henry Kissinger) கீழ் உள்ள வெளியுறவுத் துறை திட்டமிடப்பட்டிருந்தது.

டிசம்பர் 1983 வரை இராணுவ சர்வாதிகாரம் ஆட்சியில் இருந்தது மேலும் 100,000 தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதையினை களியாட்டத்துடன் மேற்பார்வையிட்டது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னர் வேலைநிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட போராளிகள் கூட, திட்டமிட்ட முறையில் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, விமானங்களில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலில் வீசப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் புவெனஸ் அயர்ஸில் உள்ள டஜன் கணக்கான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் ஃபோர்டு (Ford) வாகனத் தொழிலாளர்களும் அடங்குவர்.

அமெரிக்க இரகசிய ஆவணங்களின் குறிப்பின்படி, 1978 க்கு முன்னரே, சிலியில் உள்ள பினோசேயின் உளவுத்துறை இயக்குநரகத்தின் (DINA) 1975 ஆம் ஆண்டு முதல் “இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் 22,000 பேரை ஆர்ஜென்டினா 601 பட்டாலியன் ஆவணப்படுத்தியுள்ளது”. ஆர்ஜென்டினா இராணுவம் மற்றும் சிஐஏ வுடன் அதன் நடவடிக்கைகளை நெருக்கமாக ஒருங்கிணைத்த DINAவின் தலைவரான மானுவல் கான்ட்ரேராஸ் (Manuel Contreras) ஜூன் 2002 நேர்காணலில், ஆர்ஜென்டினா இராணுவம் அதன் கறைபடிந்த போரின் போது 30,000 பேரைக் கொன்றதாக மதிப்பிட்டுள்ளார்.

அந்த தருணம் வரை, 12,000 முதல் 17,000 பேர்கள் வரை “காணாமல் போயுள்ளனர்” என மார்ச் 1978 வெளியுறவுத்துறை அறிக்கை மதிப்பிட்டுள்ளது. காணாமல் போனவர்களின் முக்கிய பிரிவில் 3,750 முதல் 5,000 நடவடிக்கைக்குழு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் மற்றும் இரண்டாவது இடத்தில் 3,000 தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர்.

அமெரிக்க வெளியிடப்பட்ட இரகசிய ராஜதந்திர பரிமாற்றத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, நாஜி ஜேர்மனிக்கு இணையான ஒன்றாக “பொருளாதார ரீதியாக மீண்டு வர, அவர்கள் பாரம்பரிய கட்டமைப்புகளை மற்றும் குறிப்பாக தொழிலாளர் இயக்கத்தின் சக்தியை உடைக்க வேண்டும்…” என்று ஒரு உதவியாளர் கிசிங்கருக்கு விளக்கினார், அதே கணக்கீடுகள் இன்று இங்கு செய்யப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, மிலேயின் ஆத்திரமூட்டும் பொய்மைப்படுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரவும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தெருக்களில் இறங்கினர், இதில் 400,000 பேர் புவெனஸ் அயர்ஸில் உள்ள பிளாசா டே மாயோ வில் நிரம்பி வழிந்தனர். கடந்த ஆண்டுகளை விட கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

உலகப் போர் வெடித்தமை மற்றும் இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பாசிசவாத சர்வாதிகாரத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களை ஆளும் உயரடுக்கினர் மூர்க்கமாக ஊக்குவித்தமை உட்பட, இந்த ஆண்டு, மார்ச் 24 அன்று, ஆர்ஜென்டினாவிலும் உலகளவிலும் கடுமையாக மாறிய புறநிலை நிலைமையால் குணாம்சப்படுத்தப்பட்டது.

வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூக உதவி மீதான மிலேயின் தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகளுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடந்திருக்கின்றன. சமீபத்திய நாட்களில், இந்த போராட்டங்கள் 70,000 பொதுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மிலேயின் திட்டங்களை எதிர்ப்பதில் முழுக்கவனம் செலுத்தியிருக்கின்றது.

பெரோனிஸ்ட் தலைமையிலான தொழிற்சங்க அதிகாரத்துவம் இதுவரை வெற்றிகரமாக வேலைநிறுத்தப் போராட்டங்களைப் பிளவுபடுத்தி மட்டுப்படுத்தியுள்ளது, பணிநீக்கங்கள் மற்றும் கடந்த மாதம் ஆண்டுதோறும் 276 சதவீதத்தை எட்டிய பணவீக்கத்திற்கு மிகக் குறைவாக உள்ள ஊதிய உயர்வுகளை ஏற்று விற்பனை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

70 சதவீத குழந்தைகள் உட்பட 60 சதவீத ஆர்ஜென்டினா மக்கள் இப்போது வறுமையில் வாழ்கின்றனர்.

வெடிக்கும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி இருந்தபோதிலும், அமைப்பாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் போலி-இடதுகளின் உரைகள் மற்றும் வர்ணனைகள், பாசிச ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பும் அச்சுறுத்தல் குறித்து மெத்தனப் போக்கையே வெளிப்படுத்தியுள்ளனர். “நீதி” மற்றும் “நினைவுகூரல்” என்ற பலவீனம் மற்றும் வெற்று முழக்கங்களுக்கு அப்பால், 1976 ஆட்சிக் கவிழ்ப்பின் வரலாற்று படிப்பினைகளை எடுத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதற்குப் பதிலாக, இடது தொழிலாளர் முன்னணி (Left Workers Front - FIT-U) என்று அழைக்கப்படும் பெரோனிஸ்டுகள் மற்றும் அவர்களது வக்காலத்து வாங்குபவர்கள், வெகுஜன சமூகக் கோபத்தை காங்கிரஸில் உள்ள பெரோனிஸ்ட் கட்சிகள், நீதிமன்றங்கள் மற்றும் மிலே நிர்வாகம் உட்பட முதலாளித்துவ நிறுவனங்களில் முறையிட்டு அதன் மாயைகளுக்குப் பின்னால் திசைதிருப்புவதற்கு தங்கள் முயற்சிகளைத் தொடர இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

1976க்கு முந்தைய ஆண்டுகளில், இதே சக்திகள் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்குவதற்கும், அதிகாரத்திற்கான சுயாதீனமான போராட்டத்தைத் தடுப்பதற்கும், வெற்றிகரமான பாசிச-இராணுவ சதிக்கு களம் அமைப்பதற்கும் இதே வழிமுறைகளைப் பயன்படுத்தியது.

மிலே மற்றும் வில்லருவேல் இன் அறிக்கைகளுக்கு அப்பால், இராணுவத்தினைக் குறித்து எந்த விமர்சனத்தையும் நசுக்குவதற்கு ஆளும் வர்க்கம் கண்மூடித்தனமாக செயல்பட்ட சம்பவங்கள் நினைவு கூரலுக்கு முந்தைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டியிருந்தது.

அது தேசிய அரசியலிலும் அடக்குமுறை நடவடிக்கைகளிலும் அதன் பங்கை மீட்டெடுக்கவும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சமூகத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான அடுக்குகளை அணிதிரட்டவும், சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதற்குத் தயார்படுத்தவும், ஆழமாக வேரூன்றியிருக்கும் ஜனநாயக உணர்வு மற்றும் இராணுவத்தின் மீதான மக்கள் எதிர்ப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்கிறது. இந்த முயற்சிகளில் அவநம்பிக்கை மற்றும் பொறுப்பற்ற தன்மை உள்ளது.

மார்ச் 20 அன்று, சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் உளவுத்துறை-பாதுகாப்பு எந்திரத்தின் தலைமையைச் சந்திக்க புவெனஸ் அயர்ஸுக்கு வந்தார். அந்த சமயம் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் நிலைமை அமைந்திருந்தது மற்றும் சர்வாதிகாரத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் சிஐஏ இன் விரிவான பங்கைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நலன்களுக்கு எதிரான எந்த எதிர்ப்பிற்கும் எதிராக அதே அளவிலான இனப்படுகொலை வன்முறையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்பதை இந்தப் பயணம் தெளிவுபடுத்துகிறது.

அதிகப்படியாக, இயற்கை எரிவாயு, எண்ணெய், லித்தியம் மற்றும் பிற முக்கிய கனிமங்களின் முக்கிய ஆதாரமாகவும், உலகின் முக்கிய விவசாய உற்பத்திகள் மற்றும் நன்னீர் ஆதாரங்களில் ஒன்றாகவும் உள்ள ஆர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தை உலகின் மறுகாலனியாக்கத்திற்கான திட்டங்களில் ஒரு முக்கிய இடமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தெளிவாகக் கருதுகிறது.

இந்த பயணத்திற்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட நாட்களில், காம்போ டே மாயோ (Campo de Mayo) இராணுவச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சர்வாதிகார முன்னாள் அதிகாரிகளைச் சந்திக்க பாதுகாப்பு அமைச்சர் லூயிஸ் பெட்ரி (Luis Petri) அதிகாரிகளை அனுப்பியுள்ளார். அவர்களை விடுவிக்கக் கோரும் ஆர்வலர்கள் மற்றும் அந்த அதிகாரிகளின் மனைவிகளுடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சர் பாட்ரிசியா புல்ரிச் (Patricia Bullrich), தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் “அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் சாத்தியமான மன்னிப்புக்கள் பற்றிய ஊடகங்களில் வந்த வதந்திகள் மார்ச் 24 அன்று கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றவர்களுக்கு “மன்னிப்பு, மனிதாபிமான பொதுமன்னிப்பு அல்லது நன்மைகளை வழங்க வேண்டாம்” என்று அழைப்பு விடுத்து மனித உரிமைகளுக்கான ஐ.நா. மற்றும் இண்டர்-அமெரிக்க ஆணையகங்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட வழிவகுத்தன. ஆர்ஜென்டினா ஃபெடரல் நீதிபதியான அலெஜான்ட்ரோ ஸ்லோகார் (Alejandro Slokar), எந்தவொரு மன்னிப்பு, பொது மன்னிப்பு அல்லது பணிநீக்கம் தற்போதுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை என்று எச்சரித்தார்.

மார்ச் 21 அன்று, பெட்ரியும் புல்ரிச்சும் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தி, இராணுவம் “உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிடுவதையும் செயல்படுத்துவதையும்” சர்வாதிகாரத்தைத் தடுத்த பின்னர் நிறுவப்பட்ட தடையை நீக்குவதற்கான மசோதாவை காங்கிரசில் அறிவித்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கு என்று ரொசாரியோ நகரத்திற்கு “தளவாட உதவியாக” இராணுவத்தை அனுப்பியுள்ளது.

இறுதியாக, மார்ச் 21 அன்று, இராணுவ ஆட்சியின் கீழ் கொல்லப்பட்டவர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் தேசிய வலையமைப்பான HIJOS அமைப்பு, அதன் உறுப்பினர்களில் ஒருவருக்கு எதிரான பாசிச தாக்குதலைக் கண்டித்தது. வாரத்தின் பிற்பகுதியில், பொதுத்துறை ஊழியராகவும் இருக்கும் பாதிக்கப்பட்ட சப்ரினா போல்கே (Sabrina Bölke), மார்ச் 5 அன்று இரண்டு ஆயுதமேந்திய தாக்குதல்காரர்களால் சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் மரண அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக வெளிப்படுத்தினார்.

தாக்குபவர்கள் அவரது படுக்கையறைச் சுவரில் “VLLC”-என வரைந்தனர் - மிலேயின் முழக்கமான “சுதந்திரம் நீடூழி வாழ்க, கராஜோ” (”Long Live Liberty, Carajo”) என்பதன் ஸ்பானிஷ மொழியின் சுருக்கமாகும். பின்னர் அவர்கள் HIJOS க்கு சொந்தமான ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் பெரோனிஸ்ட் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டே கிர்ச்னருக்கு (Cristina Fernandez de Kirchner) எதிராக “சுதந்திரவாதி” (“Libertarian”) மிலே சார்பு வெறியர்களை உள்ளடக்கிய கூட்டாட்சிப் புரட்சி (Federal Revolution) என்ற பாசிசக் குழுவின் உறுப்பினரால் செய்யப்பட்ட கொலை முயற்சிக்குப் பிறகு இது பாசிசக் குழுக்களின் மிக முக்கியமான தாக்குதலாக இருக்கிறது.

Loading