இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ரஷ்யா மீதான நோட்டோவின் போரை எதிர்த்தமைக்காக அதி-வலது செலென்ஸ்கி அரசாங்கத்தால் சிறையிடப்பட்டுள்ள உக்ரேனிய சோசலிஸ்டான பொக்டான் சிரோடியுக் இன் விடுதலைக்காக உலக சோசலிச வலைத் தளம் மேற்கொள்ளும் பிரச்சாரம் இந்தியத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாய உரிமைகளைப் பாதுகாப்பவர்கள் மத்தியில் ஆதரவைப் ஆதரவைப் பெற்று வருகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சிரோடியுக் , ஏப்ரல் 25 அன்று தெற்கு உக்ரேனில் கைதுசெய்யப்பட்ட பின்னர் நிக்கோலேவில் சிறையிடப்பட்டுள்ளார்.
போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான பொக்டான், முதலாளித்துவ புட்டின் ஆட்சிக்கும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்புக்கும் எதிரான விட்டுக்கொடுப்பற்ற எதிராளி ஆவார். அவர், அமெரிக்க-நேட்டோ பினாமிப் போருக்கு எதிராக உக்ரேன், ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகப் போராடினார்.
சிரோடியுக்கின் கைதும் அதைத் தொடர்ந்து உலக சோசலிச வலைத் தளத்தின் தடை செய்ததும் செலென்ஸ்கி ஆட்சியால் இடதுசாரி இயக்கங்களை நசுக்குவதன் பரந்த உந்துதலின் ஒரு பாகம் ஆகும். இந்தத் தாக்குதல்கள், உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்குள் போருக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் பின்னணியில் நடைபெறுகின்றன.
பொக்டான் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கடந்த வாரம் இஸ்தான்புல், பாரிஸ், இலண்டன், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கன்பெர்ரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் உள்ள உக்ரேனிய துாதரகங்களின் முன் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த மறியல் போராட்டங்களை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டங்களின் போது பொக்டான் மீதான துன்புறுத்தலையும் அவரின் விடுதலைக்கான அழைப்பையும் சுருக்கமாகக் கூறும் ஒரு பகிரங்க கடிதம் உக்ரேனின் வெளியுறவு மையங்களுக்கு வழங்கப்பட்டது மேலும் வழங்கவும் முயற்சிக்கப்ட்டது. 'உக்ரேனிய சோசலிஸ்ட்டும் போர் எதிர்ப்பு ஆர்வலருமான பொக்டான் சிரோட்யுக்கின் விடுதலையைக் கோருங்கள்!' என்ற இணையவழி மனுவில் 2,800 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஆர்.எஸ் தொடர்பாடல் தகவல் தொழிலநுட்ட மைய ஊழியரான சிலம்பரசன்
உக்ரேனின் ஆளும் வர்க்கமும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் மறைக்க விரும்பும் பரவலடைந்துவரும் போர் பற்றிய புறநிலைமையை உலகிற்கு வெளிப்படுத்திமைக்காக, அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் கட்டளையின் கீழ் பாசிச உக்ரேன் ஆட்சியால் சிறையிடப்பட்டுள்ள உண்மையான சோசலிசவாதியான பொக்டான் சிரோட்யுக்கிற்கு எனது ஒற்றுமையை தெரிவித்துக் கொள்கின்றேன். உக்ரேனியப் போர் என்பது அமெரிக்க/நேட்டோ ஏகாதிபத்தியம் மற்றும் ரஷ்ய தேசியவாதத்தின் எதிர்வினையால் தூண்டப்பட்ட ஒரு போராகும். அமெரிக்க தலைமையிலான இந்தப் போர் உலகளாவிய முதலாளித்துவ மறுபகிர்வின் ஒரு பகுதியாக மூன்றாம் உலகப் போர் மற்றும் அணுஆயுத நிர்மூலமாக்கலுடன் மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது.
பொக்டான், செலென்ஸ்கியின் பாசிச ஆட்சி, அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியம் மற்றும் புட்டினின் பிற்போக்கு தேசியவாதம் ஆகியவற்றை எதிர்ப்பதோடு நுாறாயிரக்காணக்கான மக்களை பலியெடுக்கும் மற்றொரு ஆபத்தான போரையும் எதிர்க்கிறார். உக்ரேனிய பாதுகாப்பு சேவை அவரை கைதுசெய்தமை பேச்சுச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்புகள் மீதான பாரிய உலகளவிலான அடக்குமுறையின் ஒரு பாகம் ஆகும். ஏனென்றால், ஆளும் வர்க்கங்கள் உலக நிலைமை பற்றிய புறநிலையான உண்மையை தொழிலாள வர்க்கத்திடம் மறைக்க விரும்புகின்றன.
அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள், ஏனென்றால் ஒருமுறை உண்மை தெரிந்திருத்த மற்றும் அரசியல் புரிதலுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் தடுத்து நிறுத்த முடியாத ஒரு உலகளாவிய சக்தியாக, முதலாளித்துவவாதிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட அனைத்து தேசிய பேரினவாதத்தையும் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் என அறிவார்கள். தேசிய அரசுகளும் ஊழல்மிக்க முதலாளித்துவ அமைப்பு முறையும் எங்களை அழிக்க அச்சுறுத்துகின்றன. பொக்டான் சிரோட்டியுக்கை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கவும், உக்ரேனில் போர், காசாவில் அமெரிக்கா/நேட்டோ நிதியுதவி அளித்த இனப்படுகொலை, தேசியவாத மற்றும் ஒரே பூமியைச் சுற்றி நடக்கும் ஏகாதிபத்தியத்தின் அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரவும், மனித வாழ்வை பாதுகாக்கவும் உலகளாவிய தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்ப அனைத்து சோசலிஸ்டுகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அம்ஸா- சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டதாரி
உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் என்ற வகையில், நான், உக்ரேனிய சோசலிசப் புரட்சியாளரான பொக்டான் சிரோடியுக்கின் விடுதலைக்கான அதன் பிரச்சாரத்துடன் ஒற்றுமையாக நிற்கின்றேன். உ.சோ.வ.த மாத்திரமே மூன்றாம் உலகப் போருக்கு எதிராக உறுதியான குரல் ஆகும். நான், ரஷ்ய-உக்ரேன் போருக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளை வன்மையாக் கண்டிக்கிறேன்.
உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்க-நேட்டோ நாடுகளால் துாண்டிவிடப்பட்டு அதனால் ஆதரவளிக்கபட்ட போரையும் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக காசாவில் நடக்கும் போரையும் தொடர்ந்து எதிர்க்கிறது. உலக சோசலிச வலைத் தளம் மூன்றாம் உலகப் போர் வெடிப்பைத் தடுப்பதற்கான இயக்கத்தை கட்டியெழுப்ப முயன்று வருகிறது.
ரஷ்யா, உக்ரேன் ஆகிய இரு நாடுகளாலும் மேற்கொள்ளும் போரை எதிர்த்து, சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்ட பொக்டான் விடுவிக்கப்பட வேண்டும். செலென்ஸ்கியின் உக்ரேனிய அரசாங்கத்தால் பொக்டான் கைது செய்யப்பட்டதற்கு எதிரான எதிர்ப்பு உலகளவில் தொழிலாளர், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
பொக்டானை விடுதலை செய்!
சிறினிவாசன், சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் சட்டக்கல்லூரி மாணவர்
செலென்ஸ்கி அரசாங்கம், நடமாடும் சுதந்திரம் மற்றும் தன்னிச்சையான கைதுக்கு எதிரான தடை என 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் பொதிந்ததும் உக்ரேனிய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவதுமான ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமைகளையும் நீர்த்துப் போகச் செய்துள்ளது. நியாயமான பொது விசாரணைக்கு சமஉரிமை வழங்காததும் உரிமைகளை மீறுவதாகும்.
முதலாளித்துவ வர்க்கம் என்று ஒரு வர்க்கம் இருக்கும் வரை சாமானிய மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது. பணக்கார வர்க்கத்தின் பேராசையால் நடத்தப்படும் போரினால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தான். எனவே போர் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த பொக்டான் சிரோட்டியுக் விடுவிக்கப்பட்டு உக்ரேனில் போரும் நிறுத்தப்பட வேண்டும்.
சியாம்- உதவித் திரைப்பட இயக்குனர், சென்னை.
தற்போது ஏகாதிபத்தியம் உலகை துண்டாடுகிறது. இதற்கு எதிராக நிற்பது என்பது உலகை பாதுகாப்பது என்பதாகும். பொக்டான் அதையே செய்தார், ஆகவே ஏகாதிபத்திய-போரை எதிர்ப்பவர்கள் பொக்டானுக்காக ஒன்றாக எழவேண்டும்.
ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள தொழிலாளர்கள் இந்த ஏகாதிபத்தியப் போரை நிறுத்த ஒன்றிணைய வேண்டும். நான் அந்தப் போராட்டத்தில் பொக்டானுடன் நிற்கிறேன்.
பொக்டான் சிரோடியுக்கை விடுதலை செய்!
பாலஸ்தீனத்தை விடுதலை செய்!
கைலாஷ், மகாராஷ்டிரா அரசு சாலைப் போக்குவரத்துக் கழக தொழிலாளி
சகோதரன் பொக்டானை கைது செய்து ஆயுள் தண்டனையுடன் அவரை அச்சுறுத்துவதன் மூலம் உக்ரேன் அரசாங்கம் அவரை போர்க் கைதியாக மாற்றியுள்ளதோடு அவருக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது. அவர் சித்திரவதையின் ஆபத்தை முகங்கொடுக்கிறார்.
மற்றவர்களின் ஜனநாயக உரிமைகளையும் மீறுவதற்கான ஒரு உதாரணமாக அரசாங்கம் அவரது கைதை பயன்படுத்துகிறது. இந்த தடுப்புக்காவல் மூலம் 25 வயது இளைஞருக்கு உக்ரேன் அரசாங்கம் பெரும் அநீதி இழைத்துள்ளது.
இந்தியாவில் இருந்து கைலாஷ் ஆகிய நான், அவரை உடனடியாக விடுவிக்குமாறு உக்ரேனிய அரசாங்கத்தை கோருகின்றேன். அவருக்கு நீதி வழங்க வேண்டும்.
பொக்டானை விடுவிப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர்களின் தலையீடு முக்கியமானது என்பதை எனது சொந்த அனுபவத்திலிருந்து நான் அறிவேன். 2022 ஆம் ஆண்டில், 90,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிர மாநில அரசாங்கம் என்னை (MSRTC) தொழிலாளியாகப் பலிகடா ஆக்கியது. எனக்கும், ஏறத்தாழ 11,000 தொழிலாளர்களுக்கும் பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
150 நாட்கள் தெருக்களில் நடந்த வர்க்கப் போராட்டத்திற்குப் பின்னர்தான் பம்பாய் உயர் நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கியது, இது மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் MSRTC பொது சாலை போக்குவரத்துக் கழகத்தின் பணிநீக்க உத்தரவை நீதிமன்றம் இரத்துச் செய்ய வழிவகுத்தது.
தனேஸ், சென்னையில் உள்ள ரெனால்ட்-நிஸான் தொழிற்சாலை தொழிலாளி
ரஷ்ய நலன்களுக்கு சேவைசெய்தார் என்ற மோசடி குற்றச்சாட்டில் பொக்டான் சிரோட்டியுக் மிருகத்தனமான நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற சம்பவத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தோழர் பொக்டான் மீதான இந்த பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்.
நேர்மைக்கும் உண்மைக்கும் குரல் கொடுத்த ஒரு தொழிலாளி இன்று பொய் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது உலகத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மனஉழைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தோழர் பொக்டான் குறிப்பிட்டது போல உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே போரை நிறுத்தி தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க முடியும்.
பொக்டான் சிரோடியுக்கை விடுதலை செய்!