வெடிக்கும் வர்க்க மோதல்களுக்கு வழிவகுக்கும் ஒரு ஆழமான அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் விளைவுகளே, பிப்ரவரி 23 அன்று நடந்த ஜேர்மன் கூட்டாட்சித் தேர்தல்களின் முடிவுகளாகும்.
ஜேர்மனியில் இடம்பெற்ற 2025 கூட்டாட்சி தேர்தலானது, ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பாசிசம், இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிராகப் போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன், அடிப்படை அரசியல் பணிகள் முன் வைக்கப்படுகின்றன.
80 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல்முறையாக, நாஜிக்களுடன் நேரடியான சித்தாந்த தொடர்ச்சியைக் கொண்ட ஒரு கட்சி அரசாங்கத்தில் நுழைவதற்கான ஒரு நிஜமான சாத்தியக்கூறு உள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, பிரதான பாராளுமன்ற குழுக்களில் ஒன்று, ஒரு எதேச்சதிகார மற்றும் இனவாத மசோதாவை நிறைவேற்ற உதவுவதற்காக பாசிஸ்டுக்களுடன் கைகோர்த்துள்ளது.
ஜேர்மன் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பாசிசவாதத்தை ஆக்ரோஷமாக இயல்பாக்குவதன் மூலமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்(X) ஆகியவற்றின் உரிமையாளரான எலோன் மஸ்க், உலகெங்கிலும் உள்ள பாசிச சக்திகளுக்கு நிதியளிக்கவும், ஊக்குவிக்கவும் தனது மலைக்க வைக்கும் செல்வத்தைப் பயன்படுத்துகிறார்.
சனிக்கிழமையன்று, உலகசோசலிசவலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஜூலை 7 தேர்தல்களில் புதிய மக்கள் முன்னணி (NFP) வெற்றி பெற்ற பின்னரும், ஜனாதிபதி மக்ரோன் இந்த அரசாங்கத்தை அமைத்திருப்பது, மக்ரோனுடனான புதிய மக்கள் முன்னணியின் திவாலான கூட்டணிகளை இழிவுபடுத்தும் வகையில் இது அம்பலப்படுத்துகிறது.
இந்த உரையானது, 1929 ஆண்டிற்கும் 1933 ஆண்டிற்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திலிருந்து லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட முதலாவது காலகட்டத்தின் போது, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் அவரது வரலாற்றுப் பணிகள் தொடர்பான இரண்டாவது சர்வதேச நினைவு நாளில் டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்டதாகும்.
ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சிக்கு (Alternative for Germany - AfD) ஸ்தாபனக் கட்சிகள் சிவப்புக் கம்பளம் விரித்து, அதற்கான அனைத்து கதவுகளையும் திறந்து விட்டுள்ளன.
நாஜிக்களின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகு, முதல் முறையாக, ஜேர்மனியில் இடம்பெற்ற தேர்தலில் அதிதீவிர வலதுசாரி கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், புகலிடச் சட்டங்களை கடுமையாக்குதல் மற்றும் ஜேர்மனியில் சாக்சோனி மற்றும் துரிங்கியா மாநிலங்களின் தேர்தல்களுக்கு முந்தைய வாரத்தில் பொது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரங்களை உயர்த்துவதை சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische gleichheitspartei-ஜேர்மனி) திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
ஒற்றைப் பிரச்சினை எதிர்ப்புகள் அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு சோசலிசத்திற்காக, மக்கள்தொகையில் பெருவாரியான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழில்துறை அணிதிரட்டல்கள் அவசியமாகும்.
ஐக்கிய இராச்சியம் எங்கிலுமான நகரங்களில் இந்த வாரம் வெடித்த புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலகங்கள், 1930களுக்குப் பிந்தைய பிரிட்டனில் ஒரு பாசிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான மிகவும் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.
"ஜனநாயக" கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம், அதி தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியின் (AfD) எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது. பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது பாராளுமன்ற எண்கணிதத்தின் பிரச்சினை அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தின் பிரச்சினை.
சில பேர்லினேல் (Berlinale) பரிசு பெற்றவர்களும் விழா நடுவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊதுகுழல்களாக இருப்பதற்குப் பதிலாக விஷயங்களை அவற்றின் சரியான பெயர்களால் அழைக்கும் தைரியத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.
கடந்த 28ந் திகதி ஜனவரியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியானது, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா (I.N.D.I.A.) தேர்தல் கூட்டணியிலிருந்து விலகி, உடனடியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) மீண்டும் நுழைந்துள்ளது.
வாஃபென்-எஸ்எஸ் (Waffen-SS) இன் முன்னாள் உறுப்பினருக்கு கனடிய பிரதமர் ட்ரூடோ விடுத்த அழைப்பானது, ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளும், அதன் "தாராளவாத" பிரிவு என்று கூறுவது உட்பட, உலகெங்கிலும் அவர்களின் ஏகாதிபத்திய நலன்களை மிகத் தீவிரமாகப் பின்தொடர்வதில் அதிவலது மற்றும் முழு நாஜிப் படைகளைப் பயன்படுத்த தயாராக உள்ளன.