பங்குனி 7ம் திகதி வெள்ளியன்று இடம்பெற்ற "அறிவியலுக்காக எழுந்து நில்" போராட்டங்கள், பாசிச ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
வலென்சியாவை வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை எச்சரித்து வந்தனர். ஆனால், பெருந்திரளான பொதுமக்களுக்கு, அவர்களது வீடுகள் மற்றும் பணியிடங்களில் நீரினால் சுவர்கள் உடைந்து விழும்வரை எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை.
பூமியின் காலநிலை மற்றும் மனித சமூகம் ஆகிய இரண்டைப் பற்றியும், குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும் ஒரு அறிவியல்பூர்வமான புரிதல் உருவாக்கப்பட வேண்டும்.
நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் மிகக் கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் போது, அரசாங்கங்களும் நிறுவனங்களும் தங்கள் காலநிலை உறுதிமொழிகளை கைவிட்டு வருகின்றன.
சிலியின் வரலாற்றில் மிக மோசமான தீ பேரழிவு முதன்மையாக முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட காலநிலை நெருக்கடியின் விளைவாகும், இது பூமியின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள்தொகை மீது பேரழிவை ஏற்படுத்தும் அதிர்ச்சிகளாக இருக்கிறது.
ஆளும் உயரடுக்குகளானது இனப்படுகொலை மற்றும் அணு ஆயுதப் போரை இயல்பாக்கியது போலவே, கோவிட்-19 இன் தடையற்ற பரவல் மூலம் நடந்து வரும் வெகுஜன இறப்புகளையும் மனித துயரங்களையும் அவர்கள் வேண்டுமென்றே இயல்பாக்கியுள்ளனர்.
•உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் அறிக்கை
ஞாயிறன்று, மவுய் காட்டுத்தீயால் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கக்கூடும் என்று வெளியான அறிக்கைகள், உலகளாவிய காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதில், முதலாளித்துவ ஆளும் ஸ்தாபனத்தின் பொறுப்பற்ற தன்மை மற்றும் அலட்சியத்தை, இந்த பேரழிவு அம்பலப்படுத்துகிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம் போலவே, காலநிலை மாற்ற நெருக்கடிக்கு எதிரான போராட்டமும் தவிர்க்கவியலாதவாறு வர்க்கப் போராட்ட அபிவிருத்தியோடு பிணைந்துள்ளது.
பூமி வெப்பமடைதல் என்பது அடிப்படையில் சர்வதேச பிரச்சனையாகும். இதற்கு, சர்வதேச சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி தீர்வுகாண வேண்டும். உலக முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த நெருக்கடியைத் தீர்க்க முற்றிலும் திறனற்றவை என்பதை நிரூபித்துள்ளன.
இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம், அதன் காங்கிரஸ் கட்சி தலைமையிலான முன்னோடியைப் போலவே, காலநிலை பேரழிவு தாக்கத்தை தடுப்பதற்கு அல்லது போதுமான நிவாரணம் வழங்குவதற்கு உண்மையான நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.
முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் மக்கள் படும் துயரைக் குறித்து முற்றிலும் அலட்சியாக உள்ளனர். பெருந்திரளான மக்கள் அவதிப்பட்டாலும் உயிரிழந்தாலும் கூட, உற்பத்தியைத் தொடர வேண்டும் மற்றும் இலாபங்களைத் தக்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே அக்கறையாக உள்ளது.
அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்படும் இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகள், எண்ணற்ற மண்சரிவு எச்சரிக்கைகளையும் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான வேண்டுகோள்களையும் புறக்கணித்துள்ளன.
மில்லியன் கணக்கானவர்கள் எப்படியாவது தங்களால் இயன்ற வழிகளில் முயற்சித்து உயிர்பிழைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், அதாவது பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் மேல்மாடிகளிலும் கூரைகளிலும் ஏறி தங்களைத் தற்காத்துக் கொள்கின்றனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து பெறும் நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட உள்ள அடுத்தாண்டு COP28 என்ன பலனைத் தரும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம்
ஒரு நேர்மையான அரிய குறிப்பில், அன்டோனியோ குட்டெரெஸ் காலநிலை மாநாட்டைத் தொடங்கி வைக்கையில், உலகம் "காலநிலை மாற்றம் எனும் நரகத்திற்கான நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிறது — நாம் வேகத்தை விரைவுபடுத்தும் கருவியை அழுத்திக் கொண்டிருக்கிறோம்,” என எச்சரித்தார்
அமெரிக்க ஜனாதிபதி பைடென், போரின் தொடக்கத்தில் இருந்து ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கான கன மீட்டர் இயற்கை எரிவாயுவை வழங்குவதாக உறுதியளித்திருப்பது அவரது நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் வாக்குறுதிகளை பாசாங்குத்தனம் என அம்பலப்படுத்துகிறது
மீண்டும் ஒருமுறை, ஒரு கணிக்கக்கூடிய பேரழிவு மற்றும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த அதன் கொலைவெறி அலட்சியத்தை தெளிவாக்கியுள்ளது