அமெரிக்காவில் வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்களுக்கு ஆதரவளியுங்கள்!

கென்ட் (பெல்ஜியம்) வொல்வோ தொழிலாளர்கள் மற்றும் அனைத்து ஐரோப்பிய தொழிலாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரியமான சக நண்பர்களே,

வேர்ஜீனியாவின் டப்ளினில் மூவாயிரம் வொல்வோ கனரக தொழிலாளர்கள் மூன்று வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நியூ ரிவர் வலி ஆலையில் உள்ள தொழிலாளர்கள் சமீபத்திய ஆண்டுகளில் ஊதியங்கள் மற்றும் பணியிட சலுகைகள் மீதான தாக்குதல்களை முறியடிக்கும் ஒப்பந்தத்திற்காக போராடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான அவர்களின் போராட்டத்தை வென்றெடுக்க அவர்களுக்கு உங்கள் ஆதரவு அவசரமாக தேவையாக உள்ளது.

வேலைநிறுத்தம் ஒரு தொழிற்சாலையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், நிறுவனம் அதன் தாக்குதலை விட்டுக்கொடுக்காமல், தொழிலாளர்களின் தைரியத்தையும் ஒற்றுமையையும் உடைக்க அதற்குள்ள அத்தனை வழிகளையும் பயன்படுத்தும். எனவே வேலைநிறுத்தத்தை அதன் தனிமைப்படலில் இருந்து வெளியே கொண்டு வந்து வலுவூட்டல்களை அணிதிரட்டுவது அவசரமான அவசியமாக உள்ளது: அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள பிற ஆலைகளின் தொழிலாளர்களை அணிதிரட்டுவது.

அமெரிக்காவிலுள்ள உங்கள் சகாக்கள் ஒரு கழுத்தை அறுக்கும் நிறுவனத்தை மட்டுமல்ல, நிறுவனத்தின் நிர்வாகத்திற்காக மோசமான வேலைகளைச் செய்யும் ஒரு தொழிற்சங்கத்தையும் எதிர்கொள்கின்றனர்.

யுனைடெட் ஆட்டோ தொழிலாளர்கள் (UAW) தொழிற்சங்கம் இரண்டு முறை கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள், 90 சதவீத தொழிலாளர்களினால் எதிர்த்து வாக்களிக்கப்பட்டன. அவற்றுள் சுகாதார செலவினங்களின் அதிகரிப்பு, வெறுக்கப்பட்ட பன்முக ஊதியம், பல மட்டங்களிலான சமூக நன்மைகள், எட்டு மணி நேர வேலை நாள் மற்றும் பிற சலுகைகளுக்கு அழைப்பு விடுத்தன.

சலுகைகள் ஆகியவை அவற்றில் இருந்தன. வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ கனரக வாகன தொழிலாளர்கள் (Source: UAW Local 2069/Facebook )

UAW இப்போது தொழிலாளர்களை பட்டினி போட முயற்சிக்கிறது. தொழிற்சங்கம் பில்லியன் கணக்கான டாலர்களை பதுக்கி வைத்திருந்தாலும், அதன் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான டாலர்களை சம்பாதிக்கிறார்கள் என்றாலும், அது குறைந்தபட்ச ஊதியத்துடன் கூட பொருந்தாத வேலைநிறுத்த ஊதியத்தை செலுத்துகிறது.

தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது. அது அமெரிக்காவில் உள்ள தனது உறுப்பினர்களுக்கு கூட வேலைநிறுத்தம் குறித்து அறிவிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க மற்ற நாடுகளில் வொல்வோ கனரக வாகனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பற்றியும் பொருட்படுத்தவில்லை, வேலைநிறுத்தம் நடக்கவில்லை என்பது போல முற்றிலும் புறக்கணித்துள்ளன.

வேர்ஜீனியாவில் தொழிலாளர்களின் போராட்டத்தை மற்ற தொழிலாளர்கள் ஒரு முன்மாதிரியாக பின்பற்றினால் அது காட்டுத்தீ போல் பரவக்கூடும் என நிறுவனம், தொழிற்சங்கம், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் பீதியடைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் அமெரிக்க சகாக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நீங்களும் சர்வதேச தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகள் தான்.

பல ஆண்டுகளாக, பூகோள வாகனத் தொழிற்துறையில் ஒரு கையளவு எண்ணிக்கையிலானவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்கள், உண்மையான ஊதியங்களைக் குறைக்கவும், சமூக நலன்களை அகற்றவும், பணிச்சுமையை அதிகரிக்கவும் வெவ்வேறு வேலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் ஈவிரக்கமின்றி கையாளுகிறார்கள். கனரக உற்பத்தியில், மிகப்பெரிய நிறுவனங்களாக, டைம்லர், அதைத் தொடர்ந்து இரண்டு சீன நிறுவனங்கள் மற்றும் வொல்வோ கனரக வாகனங்கள் உள்ளன.

இப்படியான நிறுவனங்கள், கொரோனா வைரஸ் பெரும் தொற்றுநோயை தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வரவேற்கத்தக்க வாய்ப்பாக கருதுகின்றன. விற்பனை குறைந்து வந்த போதிலும், வொல்வோ குழுமம் இந்த ஆண்டு 3.7 பில்லியன் டாலர் ஈவுத்தொகையை (நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு செலுத்தும் இலாபங்கள்) செலுத்தியது, மேலும் அதன் ஜப்பானிய துணை நிறுவனமான UD கனரக வாகனங்களை (முன்னர் நிசான் டீசல்) விற்பனை செய்வதற்காக 2.3 பில்லியன் டாலர்களை செலுத்தியது. இவை அனைத்தும் தொழிலாளர்களின் அதிகரித்த சுரண்டலின் மூலம் செலுத்தப்பட்டது.

அனைத்து ஆலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் ஒன்றுபட்டால் இந்த தாக்குதல் சாத்தியமற்றது. வொல்வோ 18 நாடுகளில் ஆலைகளை இயக்குகிறது, மேலும் 10 நிறுவனங்கள் சுயாதீனமான நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. உற்பத்தியின் பூகோளமயமாக்கல் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சக்தியையும் பலத்தையும் அளித்துள்ளது. அவர்கள் இந்த வலிமையை நனவுபூர்வமாக உணர்ந்து தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும்.

அனைத்து தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றுபட்டால் இந்த தாக்குதல் சாத்தியமில்லை. வொல்வோவில் 18 நாடுகளில் தொழிற்சாலைகள் உள்ளன, மேலும் 10 நிறுவனங்கள் சுயாதீன நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. உற்பத்தியின் உலகமயமாக்கல் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சக்தியையும் பலத்தையும் அளித்துள்ளது. அவர்கள் இந்த வலிமையை உணர்ந்து தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும்.

ஆனால் இதைத் தடுக்க தொழிற்சங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. இது அமெரிக்காவில் உள்ள UAW க்கு மட்டுமல்ல, ஜேர்மனியின் ஐ.ஜி மெட்டால், பெல்ஜியத்தின் வாகன தொழிற்சங்கங்கள் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களுக்கும் பொருந்தும்.

இந்த பூகோளரீதியான போட்டி போராட்டத்தில், தொழிற்சங்கங்கள் மற்றும் பணிக்குழுக்களில் அதிக ஊதியம் பெறும் அதிகாரிகள் "தங்கள்" நிறுவனங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், ஆனால் சர்வதேச வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அல்ல. அவர்கள் தொழிலாளர்களைப் பிரித்து ஒருவருக்கொருவர் குழி தோண்ட வைக்கிறனர்.

2014 ஆம் ஆண்டில் ஃபோர்டு ஆலை மூடப்பட்டதை கெண்டில் உள்ள பல தொழிலாளர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள், இது 4,600 வேலைகளை அழித்தது மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகஸ்தர்களில் 5,000 பேரின் வேலைகளை அழித்தது அல்லது 2010 ஆம் ஆண்டு ஆண்ட்வேர்ப்பில் Opel ஆலையை மூடியது. இரண்டு நிகழ்வுகளிலும், ஆலை மூடல்களுக்கு ஜேர்மனியின் ஐ.ஜி மெட்டால் ஆதரவளித்தது. இருப்பினும், ஜேர்மனியில் வேலைகளை "பாதுகாப்பதில்" தொழிற்சங்கம் வெற்றிபெறவில்லை. இப்போது ஸ்டெல்லாண்ஸ் (Stellantis) க்கு சொந்தமான Opel தொடர்ந்து இயங்கவில்லை.

வேலைகள் மற்றும் ஊதியங்களைப் பாதுகாக்க ஊழல் மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களிலிருந்து ஒரு முறிவு தேவைப்படுகிறது, மேலும் தொழிலாளர்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது அவசியப்படுகிறது. வேர்ஜீனியாவில், வொல்வோ சாமானிய தொழிலாளர் குழு, UAW இன் காட்டிக்கொடுப்புகளை எதிர்ப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது.

அது, UAW இன் தலைமைக்கு எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தில், மூடிய கதவுகளுக்கு பின்னால் எட்டப்படும் ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வலியுறுத்தியது. ஒவ்வொரு பேரம் பேசும் அமர்விலும் தொழிலாளர்களின் பிரதிநிதி கலந்து கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அது ஒரு ஒப்பந்தத்தை பூர்த்தி செய்ய வேண்டிய குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்தது. அது ஒரு வேலைநிறுத்தக்காரரின் முழு ஊதியத்திற்கு சமமான வேலைநிறுத்த ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று கோரியது, அதனை UAW இன் 700 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும் என்றும் கூறியது. இது தொழிலாளர்களின் சந்தா தொகையிலிருந்து கட்டப்பட்டது.

கார்ப்பரேட் மேலாண்மை மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் கிளர்ச்சியின் அடையாளமாக, வொல்வோ தொழிலாளர் வேலைநிறுத்தம் வெளிப்படுகிறது. அலபாமாவில், ஏப்ரல் 1 முதல், வாரியர் மெட் நிலக்கரி நிறுவனத்திற்கு எதிராக 1,000 க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். ஏப்ரல் 9 ஆம் தேதி, யுனைடெட் மைன் வொர்க்கர்ஸ் ஆஃப் அமெரிக்கா (UMWA) ஒப்புக் கொண்ட ஐந்தாண்டு ஒப்பந்தத்தை பெரும் பெரும்பான்மை பலத்துடன் தோற்கடித்தனர்.

இந்த போராட்டங்களை சர்வதேச மட்டத்தில் ஒன்றிணைத்து அவற்றுக்கு ஒரு ஒருங்கிணைந்த முன்னோக்கு வழங்குவது மிகவும் முக்கியமானது. நான் இணைந்திருக்கும் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சர்வதேச தொழிலாளர்களின் சாமானியக் குழுக்களின் கூட்டணியை மே 1 அன்று ஸ்தாபித்தது.

கென்ட் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள வொல்வோ தொழிலாளர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்:

• நியூ ரிவர் வலி வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவளியுங்கள், அதனை உங்கள் சொந்த போராட்டமாக மாற்றுங்கள்.

• உலக சோசலிச வலைத் தளத்தில் வேலைநிறுத்தத்தின் தகவலைப் பின்பற்றி, சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி மற்றும் வொல்வோ சாமானிய தொழிலாளர் குழுவுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

• வொல்வோ மற்றும் அனைத்து கனரக மற்றும் வாகன உற்பத்தித் துறையையும் மூடுவது உட்பட ஆர்ப்பாட்டங்கள், உற்பத்தி வேகத்தை குறைப்பது மற்றும் பிற ஒற்றுமை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உங்கள் சொந்த சாமானியக் குழுவை அமையுங்கள்.

வலுவான ஒற்றுமையுடன்,

உல்ரிச் ரிப்பேர்ட், சோசலிச சமத்துவக் கட்சி தலைவர் மற்றும் ஜேர்மன் கூட்டாட்சி தேர்தலில் வேட்பாளர்.

Loading