மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE), புகழ்பெற்ற இசையமைப்பாளர், இசைக்குழுத் தலைவர் மற்றும் பியானோ கலைஞர் பேராசிரியர் பிரைட் ஷெங்கிற்கு எதிரான இனவெறி ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை கண்டிக்கிறது. லோரன்ஸ் ஒலிவியருடன் ஒத்தெல்லோ (Othello) வின் திரைப்பட பதிப்பை திரையிடுவதன் மூலம் அவர் ஒரு 'இனவெறிச் செயலை' செய்ததாக ஒரு பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூற்று தவறாக அறிவிக்கப்பட்டதும் பிழையானதுமாகும். அக்கறையுள்ள மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்து மாணவர்களும் அவர் மிரட்டப்படுவதை மறுத்து ஷெங்கின் பாதுகாப்பிற்கு முன்வரவேண்டும்.
வெள்ளிக்கிழமை, Michigan School of Music, Theatre & Dance (SMTD) இன் துறைக்கான தலைவர் டேவிட் ஜியேர், ஷெங் இந்த கல்வியாண்டில் தனது இசையமைப்பு பாடத்தை கற்பிப்பதை நிறுத்திவிடுவதாகவும் ஆனால் தொடர்ந்தும் அங்கு பதவியில் இருப்பார் என்றும் அறிவித்தார். வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோவின் 1965 ஆம் ஆண்டு திரைப்பட தழுவலை ஷெங் வகுப்பில் திரையிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த முடிவு வந்தது. இது நீண்டகால நாடக மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஸ்ரூவார்ட் பேர்ஜ் இனால் இயக்கப்பட்டு மற்றும் சிறந்த ஷேக்ஸ்பியராக நடித்த நடிகர் லோரன்ஸ் ஒலிவியே கறுப்பு நிற ஒப்பனையுடன் ஒத்தேல்லோவாக நடித்திருந்தார்.
சீனாவில் பிறந்த லியோனார்ட் பேர்ன்ஸ்டைன் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியர் ஷெங், உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர் ஆவார். அவர் 1995 முதல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கற்பித்து வருகிறார். அவர் புலிட்சர் பரிசு இறுதிப் போட்டியாளராக இருந்தார் மற்றும் 2001 இல் மக்ஆர்தர் 'மேதை' புலமைப்பரிசு பெற்றார். அறக்கட்டளை அவரை 'ஒரு புதுமையான இசையமைப்பாளர், அவரது திறமையான இசைக்குழுக்கள் கிழக்கு மற்றும் மேற்கு, பாடல் மற்றும் முரண்பாடான பாணிகள், மற்றும் வரலாற்று மற்றும் சமகால கருப்பொருள்கள் பார்வையாளர்களிடம் எதிரொலிக்கும் இசையமைப்புகளை உருவாக்குகிறது” எனக் குறிப்பிட்டது.
வகுப்பு கற்பித்தலில் இருந்து ஷெங் வெளியேற்றப்பட்டதற்கான 'குற்றம்' பல்கலைக்கழக வளாகங்களிலும் ஊடகங்களிலும் தூண்டப்படும் நிறவெறி வெறியால் மட்டுமே சாத்தியமானது. நேர்மையான அல்லது நியாயமான எண்ணம் கொண்ட எந்தவொரு நபரும் ஒலிவியரின் நடிப்பு அல்லது ஒட்டுமொத்த திரைப்படம் பற்றி எள்ளளவு கூட மோசமானது ஏதாவது இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியாது.
மிச்சிகன் டெய்லியின் படி, அவரது புதிய மாணவர்களில் ஒருவரான ஒலிவியா கூக், ஒலிவர் கறுப்புநிற ஒப்பனையில் ஒத்தெல்லோ நடிப்பதை பற்றி அவதானித்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்டார். 'நான் திகைத்தேன்' என கூக் கூறினார். 'பன்முகத்தன்மையை போதிக்கும் மற்றும் அமெரிக்காவில் பன்நிறமக்களின் (POC) வரலாற்றை அவர்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்துகொள்ளும் பள்ளியில், ஷெங் இதனை ஒரு பாதுகாப்பான இடமாக கருதி இதைக் காண்பிப்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது' என்றார்.
இந்த நாடகத்தையோ, அதன் வரலாற்றையோ அல்லது ஒலிவியரின் வாழ்க்கை மற்றும் அவரது 1965 நிகழ்ச்சியில் உள்ள நோக்கங்கள் பற்றி எதுவும் தெரியாத கூக்கினால் கூறப்பட்ட, ஷெங் படத்தை காண்பிப்பதும் மற்றும் படமே ஒரு 'இனவெறியானது' என்ற ஆதாரமற்ற கூற்று பல்கலைக்கழகத்தால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது.
செப்டம்பர் 10 வகுப்பு மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட கூக்குரலிற்கு பின்னர், ஷெங் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார் மற்றும் பாடத்திட்டத்திற்கான திட்டமிடப்பட்ட ஒத்தெல்லோ திட்டத்தை இரத்து செய்தார். அறிக்கையின்படி, Michigan School of Music, Theatre & Dance இன் துறைக்கான தலைவர் டேவிட் ஜியேர் மற்றும் பல ஆசிரிய உறுப்பினர்கள் ஷெங் படம் காண்பிப்பது 'இனவெறி செயல்' என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள விரைந்தனர்.
மிச்சிகன் டெய்லிக்கான ஒரு அறிக்கையில், ஷெங்கிற்குப் பதிலாக பதவிக்குவந்த பாடநெறியில் பேராசிரியர் இவான் சேம்பர்ஸ் பின்வருமாறு எழுதினார். “குறிப்பாக கணிசமான பின்னணி இல்லாமல், உள்ளடக்க ஆலோசனை மற்றும் அதன் உள்ளார்ந்த இனவெறி மீது கவனம் செலுத்தாது அப்படத்தைக்காட்டும் பேராசிரியரின் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், அது ஒரு இனவெறிச் செயலாகும்”. 'அத்தகைய மூர்க்கத்தனமான கூற்றை ஆதரிக்க மன்றம் முற்றிலும் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. மக்கள் அவருடைய வார்த்தையை சாதாரணமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியேர், பல்கலைக்கழகத்தின் நடுநிலை, பொது உரிமைகள் மற்றும் Title IX அலுவலகத்திற்கு 'சம்பவத்தை' பற்றி அறிவித்தார்.
செப்டம்பர் 16 அன்று ஷெங் ஒரு பொதுவான துறைசார்ந்த மன்னிப்பை வெளியிட்டார். அந்த கடிதம் இனவெறிக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து மற்றும் பல்வேறு இனங்கள், பாலினங்கள் மற்றும் இனக்குழுக்களைச் சேர்ந்த கலைஞர்களுடன் அவர் பலதடவை கூடிப்பணி புரிந்ததைச் சுட்டிக்காட்டினார். இது தான் எவ்வகையிலும் பாகுபாடு காட்டுவதாக கருதவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக” குறிப்பிட்டார்.
இந்த பொதுவான மன்னிப்பு பின்னர் SMTD பட்டதாரி மற்றும் இளங்கலை மாணவர்கள் மற்றும் பல ஆசிரிய உறுப்பினர்களால் கைப்பற்றப்பட்டு, அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட கலைஞர்களின் 'வெற்றி' ஷெங் இதற்கு 'பொறுப்பு' என்பதை 'அர்த்தப்படுத்துவதால்' அது 'எரிச்சலூட்டுவதாக' உள்ளதாக கூறப்பட்டது. ஷெங் ஒரு 'தீங்கு விளைவிக்கும் சூழலை' உருவாக்கியதால், மீதமுள்ள கல்வியாண்டில் தனது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரி, இத்துறையின் தலைவருக்கு ஒரு கடிதத்தில் இந்த கண்டனத்தை வெளியிட்டது.
கடந்த வாரம் பகிரங்க கடிதம் வழங்கப்பட்ட பின்னர், ஷெர் ஜியேரின் வற்புறுத்தலின் பேரில் படிப்பித்தலை தொடருவதில் இருந்து ஷெங் தன்னை விலக்கிக்கொண்டார்.
இந்த முழு சம்பவமும் மோசமானதும் மற்றும் வெட்கக்கேடானதுமாகும். நாடகத்தைப் பற்றிய 'சூழல் தேவை' மற்றும் 'தூண்டுதல்-எச்சரிக்கைகள்' பற்றிய மாணவர்களின் அனைத்து தேடல்களிலும் இப்படத்தின் உண்மையில் நோக்கமோ அல்லது திரைப்படத் தழுவல் பற்றிய விவாதமோ எதுவும் இல்லை.
1603 ஆம் ஆண்டில் முதன்முதலில் மேடையேற்றப்பட்ட ஒத்தெல்லோ, ஆங்கில மொழி நாடக நியதியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். அதன் முக்கிய கதாபாத்திரம் வெனிஸ் இராணுவத்தில் இருந்த ஒரு மூரிஷ் தளபதி ஆவார். அவர் ஒரு முன்னணி செனட்டரான பிரபாண்டியோவின் மகள் டெஸ்டெமோனாவை இரகசியமாக திருமணம் செய்து கொண்டார். டெஸ்டெமோனா வெளிப்பட்டு தனது புதிய கணவருக்கான அவளது மிகுந்த அன்பை வெளிப்படுத்தும் வரை, ஓதெல்லோ தனது மகளைச் கூட்டிச்செல்ல மந்திரம் மற்றும் சூனியத்தைப் பயன்படுத்தியதாக பிரபாண்டியோ முதலில் குற்றம் சாட்டினார். ஒத்தெல்லோவை வெறுக்கும் அதே இராணுவத்தில் உள்ள ஐயாகோ, அவரது மணமகளைப் பார்த்து ஓதெல்லோ பொறாமைப்பட வைக்க வெற்றிகரமாக சதி செய்கிறார். நாடகத்தின் முதல் பாதியின் கடுமையான தளபதி படிப்படியாக இரண்டாம் பாதியில் ஐயாகோவின் சூழ்ச்சிகளுக்கு அடிபணிந்து, இத்துயரமானது ஓதெல்லோவினால் டெஸ்டெமோனா குருட்டுத்தனமாகவும், பொறாமையுடனான ஆத்திரத்தில் கொன்றதில் உச்சகட்டத்தை அடைகின்றது. ஒத்தெல்லோ ஆழ்ந்த அனுதாபமுள்ள, சோகமான உருவமாகி, மாக்கியவல்லிய லாகோவிற்கு பலியாகின்றார்.
இந்த நாடகம் நான்கு நூற்றாண்டுகளாக உலகின் ஒவ்வொரு மூலையிலும் எண்ணற்ற முறை மேடையேற்றப்பட்டது. மேலும் 1887 இல் இத்தாலிய இசையமைப்பாளர் கிசுப்ப வேர்டியால் குறிப்பாக இசைநாடகம் உட்பட பல வடிவங்களில் தழுவி எடுக்கப்பட்டது.
ஓர்சன் வெல்லஸ் இயக்கிய மற்றும் நடித்த ஒரு புகழ்பெற்ற 1951 முயற்சி உட்பட பல திரைப்பட பதிப்புகள் உள்ளன (ஐயாகோவாக ஐரிஷ் நடிகர் Micheál MacLiammóir), 1981 ஆம் ஆண்டு ஜொனாதன் மில்லரரால் இயக்கப்பட்டு அந்தோனி ஹாப்கின்ஸ் (ஓதெல்லோவாக) மற்றும் பொப் ஹொஸ்கின்ஸ் (ஐயாகோவாக) மற்றும் 1995 இல் ஒலிவர் பார்க்கரால் இயக்கப்பட்ட ஒரு தழுவலாக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் ஒத்தெல்லோவாகவும், கென்னத் பிரானாக் ஐயாகோவாகவும் நடித்தனர்.
1965 இன் பேர்ஜ்-ஒலிவியர் பதிப்பு உண்மையுள்ள மற்றும் முக்கியமான விளக்கமாகும். படம் 'அந்த நேரத்தில் சர்ச்சைக்குரியதாக' இருந்தது என்று மிச்சிகன் டெய்லி அறிவித்திருந்தாலும், அது உண்மையில் பல தரப்பிலும் பலமாகப் பாராட்டப்பட்டது. ஃபிராங்க் ஃபின்லே (ஐயாகோ), மேகி ஸ்மித் (டெஸ்டெமோனா), ஜாய்ஸ் ரெட்மேன் (எமிலியா) மற்றும் ஒலிவர் உள்ளிட்ட இந்தப் படத்தின் அனைத்து முன்னணி நடிகர்களும் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
'வெனிஸ் நகர மூர்' ஆகிய ஒத்தெல்லோ இன்றைய மொராக்கோ பகுதியிலிருந்து வட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது. அக்கால நாடகங்களில் மூர்கள் (கறுப்புநிற தோல் நிறமுடையவர்கள்) இடம்பெறுவது மிகவும் அசாதாரணமானது (ஷேக்ஸ்பியர் தனது Titus Andronicus இல்வில்லன் ஆரோன் மூரை சேர்த்தார்) மற்றும் பல விமர்சகர்கள் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் பதட்டத்தை அதிகரிப்பதற்கு ஒரு ஆதாரமாக உணர்வுபூர்வமாக இனத்தை அறிமுகப்படுத்தியதாக வாதிடுகின்றனர். இது டெஸ்டெமோனாவின் தந்தைக்கும் ஓதெல்லோவிற்கும் இடையிலும், அதேபோல் இயாகோவை உந்தும் நோக்கங்களில் ஒன்றாகவும் காட்டப்படுகின்றது.
சோவியத் விமர்சகர் அலெக்ஸாண்டர் ஸ்மிர்னோவ், ஷேக்ஸ்பியர் ஒத்தெல்லோவில் தனது மனிதநேயத்தை நிரூபித்தார் என்று ஒரு வலுவான வாதத்தை முன்வைத்தார். 'டெஸ்டெமோனா ஒத்தெல்லோவின் இனம் மற்றும் நிறத்தை பற்றி அக்கறைகொள்ளாது நேசிக்கிறார். அவர்களின் துன்பகரமான காதலில் இனப் பிரச்சனை என்பதே இல்லை, அல்லது ஓதெல்லோ மீதான டோஜின் [வெனிஸ் ஆட்சியாளர்] அணுகுமுறையிலும் அது பாதிக்கவில்லை. ஷேக்ஸ்பியர் தனது வெனிஸ் நகர வணிகரில் மிகவும் தீவிரமான முறையில் இனப்பிரச்சினையைத் தீர்க்கிறார். வெனிஸ் நகர வணிகரில், நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி கூட இல்லாத ஒரே ஒரு தனி உரையில் மட்டுமே பிரச்சனையை அணுகப்படுகின்றது. அதேசமயம் ஒத்தெல்லோவில், இக்கருப்பொருள் முழுமையாக அணுகப்படுகின்றது. ஒத்தெல்லோ புதிய யுகத்தின் முழுமையான பிரதிநிதியாக உள்ளது” எனக்குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் மேடையில் அவர் முன்பு காட்டிய ஒலிவியரின் நடிப்பைக் கண்டித்தல் குறிப்பாக பிற்போக்குத்தனமானது. முன்னைய ஒன்றரை நூற்றாண்டுகளாக நிலவிய ஓதெல்லோ கதாபாத்திரத்தில் அச்சமூட்டும் அரை-இனவெறி அணுகுமுறைகளை எடுக்க நடிகர் விரும்பாத போதும் முயன்றார் என்று கூறப்பட்டது.
ஒலிவர் ஒத்தெல்லோவை கருப்பு நிற, ஆப்பிரிக்கராக எடுத்துக்காட்டுகையில், வெள்ளை நிற பெண் டெஸ்டெமோனா ஒரு கறுப்பினத்தவரை தலைகால் தெரியாது காதலித்ததை நினைத்து பல்வேறு வர்ணனையாளர்கள் ஆச்சர்யமடைந்து கிளர்ந்தெழுந்தனர். எலிஸ் மார்க்ஸ் 2001 கட்டுரையில் கருத்துரைத்தபடி, “1814 க்குப் பின்னர் ஒத்தெல்லோவை கறுப்பு ஒப்பனையில் நடித்த முதல் வெளிர் நிறமுள்ள நடிகர்களில் ஒலிவர் ஒருவர். தனது சுயசரிதையில், ஒலிவர் தனது கறுப்புநிற ஒத்தெல்லோ 'வெளிறிய' நிறத்தைக் கொண்டதை விட மிகவும் உண்மையானவர், தைரியமானவர், வலிமையானவர் என்று பெருமை பேசுகிறார் -அவர் கிட்டத்தட்ட 'நீர்த்துப்போனவர்' என்று சொல்லியிருக்கலாம்- அவரது உடனடி முன்னோடிகள் ஒத்தெல்லோவாகலாம். 'உண்மையில், ஒலிவர் அந்த நினைவுக் குறிப்பில் பின்வருமாறு விளக்குகிறார், ஆதிக்கம் செலுத்தும் 'காப்பி நிற சமரசம்' 'மூர் மிகவும் கறுப்பாகவும், மேன்மையான வெள்ளை நிறத்தவருக்கு மிகவும் மாறுபட்டவராகவும் இருந்தால் உண்மையிலேயே உன்னதமான மூர் என்று கருத முடியாது என்பதில் இருந்து எழுந்தது: இது தூய வஞ்சகத்தின் அதிர்ச்சியூட்டும் விடயமாகும்.
லாரா ரெய்ட்ஸ்-வில்சன், 'திரைப்படத்தில் இனமும் ஒலிவியரும்' என்பதில் '1965 ஒத்தெல்லோ முந்தைய இரண்டு [பதிப்புகளை] விட புரட்சிகரமானதும், இனப் பிரச்சினையை முன்னணியில் கொண்டுவந்தது. லாரன்ஸ் ஒலிவர் மிகவும் கறுப்பு நிற ஒத்தெல்லோவாக நடிக்கிறார். நாடகத்தில் பெரும்பாலான இன மொழி சேர்க்கப்பட்டுள்ளது. எமிலியா மற்றும் டெஸ்டெமோனாவின் சிறிய குறிப்புகள் கூட வெட்டப்படவில்லை. ஒத்தெல்லோவின் இனம் பற்றிய குறிப்புகள் அப்படியே வைக்கப்பட்டு, ஷேக்ஸ்பியர் விரும்பியபடி அவை ஒலிவியரால் விளக்கப்படுகிறது.
ஒலிவியரின் நடிப்பில் இனவெறியின் ஒரு குறிப்பு இருப்பதாக எந்தவொரு ஆலோசனையும் அபத்தமானது. நடிகர் தனது கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய மதிப்பையும் மனிதாபிமானத்தையும் கொடுக்க கடினமாக உழைக்கிறார். மிச்சிகன் டெய்லி ஷெங்கிற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் 'ஓப்ரா இசையமைப்பாளர் கியூப் வேர்டி எப்படி ஷேக்ஸ்பியரின் நாடகத்தை ஒரு ஓபராவாக மாற்றியமைத்தார் என்பதைக் காட்டுவதே உண்மையான நோக்கம் என்று விளக்கியது. ஓப்ராவில் வழமையாக வெள்ளை நிறத்தவர் கறுப்பின பாத்திரத்தில் நடிப்பதால், லாரன்ஸ் ஆலிவியரின் நடிப்பு ‘ஆப்பிரிக்க அமெரிக்கர்களை தாழ்த்தும் வேடம்போடும் நிகழ்ச்சிகளைப் போலவே இருக்கும்’ என்று அவர் நினைக்கவில்லை”.
மேலும், அது முழுமையாக நோக்கமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பல சந்தர்ப்பங்களில் ஒத்தெல்லோவாக நடித்த சிறந்த ஆபிரிக்க அமெரிக்க நடிகரும் பாடகரும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளருமான பால் ரோப்சனின் நடிப்பிற்கு ஒலிவர் மதிப்பு செலுத்துகிறார். 1956 ஒரு நேர்காணலில், ரோப்சன் ஒத்தெல்லோவை 'ஒரு வெள்ளை சமூகத்தில் ஒரு கறுப்பு மனிதர்' என்று விவரித்தார். இது அவரது தனிமை மற்றும் பாதிப்புகளை பயன்படுத்தி ஐயாகோவின் சதித்திட்டத்தின் பாத்திரத்தின் அவநம்பிக்கையான எதிர்வினைகளை விளக்குகிறது.
அவரது நேர்காணலில், ரோப்சன் பிரிட்டிஷ் விமர்சகர் ஏ.சி. பிராட்லியின் எழுத்துக்களை ஒப்புக்கொள்கிறார். பிராட்லி ஷேக்ஸ்பியர் 'ஓதெல்லோவை ஒரு கறுப்பின மனிதராகக் கற்பனை செய்தார்' என்று கடுமையாக வாதிட்டதுடன் மற்றும் 'ஒரு கருப்பு ஒத்தெல்லோ என்ற கருத்து பற்றிய பெரும்பாலான அமெரிக்க விமர்சகர்களின் பயங்கரத்தை' தாக்கினார்.
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்களும் மாணவர்களும் இடதுசாரி அல்லது முற்போக்கு அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாத ஷெங்கிற்கு எதிரான பிரச்சாரத்தை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றனர். 'பாதுகாப்பான இடங்கள்' மற்றும் ஓதெல்லோவை காண்பிப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட 'தீங்கு விளைவிக்கும் சூழல்' பற்றி அழும் அந்த மாணவர்கள் வளர்ந்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு பல்கலைக்கழகக் கல்வியாக இருக்க வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதற்கு எதிராக கவலைகொள்ளும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக குரல் கொடுக்க அழைப்பு விடுக்கிறது. இனவெறி மற்றும் அடையாள அரசியலின் தீங்கு விளைவிக்கும் கட்டமைப்பின் மீதான எந்தவொரு விமர்சனத்திற்கும் எதிரான அச்சுறுத்தல் பிரச்சாரம் நிராகரிக்கப்பட்டு எதிர்க்கப்பட வேண்டும்.
இதேவேளை சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு, லியோனார்ட் பேர்ன்ஸ்டைன் சிறப்பு பல்கலைக்கழக பேராசிரியர் பிரைட் ஷெங்கை உடனடியாக இளங்கலை பாடத்தின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் நியமிக்க வேண்டும். நீங்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் பேராசிரியர் ஷெங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் ஷெங் மீதான 'இனவெறி' அல்லது 'இனவெறிச் செயலை' நடத்திய அனைத்து அவதூறு தாக்குதல்களையும் பகிரங்கமாக மறுக்க வேண்டும் என்று கோரும் ஒரு பகிரங்க கடிதத்தை ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இசை, நாடக மற்றும் நடனப் பள்ளியின் துறைத்தலைவர் டீன் டேவிட் ஜியேருக்கு எழுதியுள்ளது.