முன்னோக்கு

இலாபங்களை விட உயிர்களே! பெருந்தொற்றை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 இன் ஓமிக்ரோன் வகை இப்போது மனிதர்கள் உயிர்வாழும் ஒவ்வொரு கண்டத்திலும் 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்தது. இந்த வகை உலகெங்கிலும் பரவி வருவதை எடுத்துக்காட்டும் விதமாக, அமெரிக்காவில் ஏற்கனவே 12 மாநிலங்களில் இது கண்டறியப்பட்டுள்ளது, வெளிநாடுகளுக்குச் சென்று வராதவர்களும் இதில் உள்ளடங்குகிறார்கள்.

Healthcare workers demand better working conditions and more COVID-19 vaccines during a protest outside the Clinicas Hospital in San Lorenzo, Paraguay, Wednesday, May 19, 2021 [Credit: AP Photo/Jorge Saenz]

இந்த புதிய வகை மேலோங்கிய முதல் நாடான தென்னாபிரிக்காவில், இந்த ஒட்டுமொத்த பெருந்தொற்று போதும் எந்தவொரு நாட்டிலும் பார்த்திராத விகிதத்தில் இது பரவி வருகிறது. கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை, வெள்ளிக்கிழமை 300 க்கும் குறைவாக இருந்ததில் இருந்து 11,000 ஆக ஒரே மாதத்தில் அண்மித்து 40 மடங்கு அதிகரித்துள்ளது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு மத்தியில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் ஒரே நாளில் 35 சதவீதம் அதிகரித்தது.

எல்லாவற்றையும் விட அனேகமாக மிகவும் தொந்தரவூட்டும் விஷயம், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தை நோயாளிகள் தென்னாபிரிக்காவில் மிக அதிகளவில் அதிகரித்து வருகிறார்கள், சில நகரங்களில் குழந்தைகள் நல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

டெல்டா வகை வைரஸ் சில அமெரிக்க மாநிலங்களில் புதிய நோயாளிகளின் உச்சபட்ச மட்டங்களை எட்டி வருகின்ற நிலையில், இந்த புதிய வகை முன்னிறுத்தும் முன்பில்லாத அபாயங்களோ ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த கொள்கையையும் குழப்ப நிலையில் விட்டு வைத்துள்ளது, இதை அவர்கள் அறிவார்கள். நியூ யோர்க் டைம்ஸ் எழுதியவாறு, “இந்த பெருந்தொற்றில் இருந்து வெளியே வருவதற்கான வழியாக அண்மித்து ஓராண்டாக தடுப்பூசி செலுத்துவதற்கு அழுத்தமளித்த பின்னர்,” “ஒரு நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான இந்த பொது சுகாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே போதுமானதில்லை என்பதை வெள்ளை மாளிகை மவுனமாக ஒப்புக் கொள்கிறது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பள்ளிகள் மற்றும் வணிகங்களைக் காலத்திற்கு முன்கூட்டியே திறப்பதை நியாயப்படுத்த முனைந்த பைடென் நிர்வாகத்தின் சொல்லாடல் —அதாவது தடுப்பூசி மட்டுமே இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்பது— கோவிட்-19 இன் மற்ற வகைகளை விட ஓமிக்ரோன் வெறுமனே அதிகளவில் பரவக்கூடியது மட்டுமல்ல மாறாக அதிகரித்தளவில் தடுப்பூசியையே எதிர்க்கக்கூடியது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதன் முன்னால் முற்றிலுமாக சிதைந்து வருகிறது.

'[தற்போதுள்ள தடுப்பூசிகளின் செயல்திறன்] ஒரே மாதிரியாக கொண்ட எந்த உலகமும் இல்லை என்று நினைக்கிறேன்,” என்று மாடர்னா தலைமை செயலதிகாரி ஸ்டீபன் பன்செல் இவ்வார தொடக்கத்தில் பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறினார். “சடரீதியான குறைவு ஏற்படுமென நினைக்கிறேன். … ஆனால் நான் பேசிய விஞ்ஞானிகள் அனைவரும்… 'இது நல்ல விதத்தில் இருக்காது' என்றே கூறுகிறார்கள்,” என்றார்.

கோவிட்-19 க்கு செல் உருமாற்றி எதிர்ப்பாற்றல் சிகிச்சை (monoclonal antibody treatment) மேற்கொள்ளும் ரெஜென்ரான் நிறுவனம், இந்த புதிய வகைக்கு எதிராக அதன் சிகிச்சைகளின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக ஓர் அறிக்கையில் எச்சரித்தது. “தடுப்பூசியால் கிடைக்கும் எதிர்ப்புச் சக்தி மற்றும் செல் உருமாற்றி எதிர்ப்பாற்றல் முறையில் கிடைக்கும் எதிர்ப்புச் சக்தி இரண்டின் சமப்படுத்தும் செயல்பாடுமே குறைய வாய்ப்புள்ளதாக ஓமிக்ரோனில் இருந்து உருமாறிய தனித்தனி வகைகள் சுட்டிக் காட்டுகின்றன,” என்றது குறிப்பிட்டது.

தென்னாபிரிக்காவின் தொற்றுநோய் நிபுணர்கள் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு முன்வரைவு ஆய்வு, கோவிட்-19 ஆல் முன்னர் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பாதிக்கும் ஆற்றல் ஓமிக்ரோன் வகைக்கு 2.4 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பதை கண்டறிந்தது. இந்த வகை 'முந்தைய நோய்த்தொற்றிலிருந்து உருவான நோய் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பி விடுவதை மக்கள்தொகை அளவிலான கணிசமான ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன,” என்று அந்த ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

தென்னாபிரிக்காவில் மறுக்க முடியாத அதிகரிப்புக்கு விடையிறுத்த எண்ணற்ற ஊடக செய்திகள், இந்த புதிய வகை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில், ஓமிக்ரோன் வகை நோயாளிகள் பலருக்கு மிதமான பாதிப்பே ஏற்பட்டிருப்பதாக வாதிடுகின்றன.

ஆனால் கோவிட்-19 சர்வசாதாரணமாக 'மறைந்துவிடும்' என்ற ட்ரம்பின் கட்டுக்கதையை மீண்டும் கூறுவது மிகவும் ஆபத்தாகும். தென்னாபிரிக்காவில் மருத்துவமனை அனுமதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன என்ற உண்மை, “மிதமான பாதிப்பேற்படுத்தும் வகை' என்ற பொய்யான வாதங்களை, அனைத்திற்கும் மேலாக, இந்த பெருந்தொற்று நெடுகிலும் நோய்தொற்று ஏற்பட்ட பெரும்பாலானவர்கள் மீண்டு வந்து விடுவார்கள் என்பதையும் ஓமிக்ரோன் பரவல் ஏற்கனவே அம்பலப்படுத்தி உள்ளது. மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டதாலேயே இந்தளவுக்கு அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

டெல்டா வகையை விட ஓமிக்ரோன் வகை அதிகளவில் தொற்றக்கூடியது என்ற உண்மையானது, அது சற்று அபாயம் குறைந்தது என்றாலும் கூட —சொல்லப் போனால் இதுவரையில் இந்த வாதத்திற்கு எந்த அடித்தளமும் இல்லை— நிறைய பேர் நோய்வாய்ப்படும் பட்சத்தில் நிறைய மருத்துவமனை அனுமதிப்புகள் ஏற்படும், அவ்வாறு மருத்துமனைகள் நிரம்பி வழிந்தால், பாரியளவில் மரணங்கள் ஏற்படும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

இந்த புதிய வகையின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்தாலும், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூட மறுப்பதை பைடென் நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது, இதே கொள்கை சாராம்சத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் திட்டத்தில் 'அடைப்புகள் அல்லது பொது முடக்கங்கள் உள்ளடக்கப்படவில்லை, மாறாக பரந்தளவில் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர்கள் செலுத்துவது இருக்கும்,” என்று ஜனாதிபதி வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். “நம் பள்ளிகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை இப்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், அவை இந்த குளிர்காலம் முழுவதும் திறக்கப்பட்டிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது,” என்று பைடென் அப்பட்டமாக தெரிவித்தார்.

கோவிட்-19 இன் தொடர்பில் வரும் குழந்தைகளைத் தனிமைப்படுத்துவதை கூட நிறுத்த கோரிய பைடென், மாணவர்கள் 'வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும், அந்த வகுப்பறையில் நோய்தொற்று கண்டறியப்படும் போது அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள' வேண்டும் என்றவர் அறிவித்தார்.

இதே புள்ளிகளை எதிரொலித்து, நியூ யோர்க் ஆளுநர் Kathy Hochul குறிப்பிடுகையில், “பள்ளிகளையோ அல்லது பொருளாதாரத்தையோ மூட நான் தயாராக இல்லை. அதுவொரு அவசியமான விடையிறுப்பாக இருக்காது,” என்றார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், இந்த பெருந்தொற்று முடிந்துவிட்டதாக முட்டாள்தனமான கருத்துக்கள் அமெரிக்க ஊடகங்களில் நிரம்பி இருந்தன. 'நோயாளிகளின் எண்ணிக்கை சிறிது குறைவது இந்த பெருந்தொற்றின் மிகவும் மோசமான காலம் முடிந்துவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறது… தடுப்பூசிகளால் இந்த கோவிட் ஐ ஒரு சாதாரண சளிக் காய்ச்சல் அல்லது சாதாரண ஜலதோஷத்திலிருந்து வேறுபடாத, ஒரு கையாளக்கூடிய நோயாக மாற்றிவிட முடியும். … இந்த இலையுதிர் காலத்தில் என்ன ஏற்பட்டாலும், இந்த பெருந்தொற்றின் மோசமான காலத்தை ஏறக்குறைய நிச்சயமாக நாம் கடந்து வந்து விட்டோம்,” என்று வாதிட்டு அக்டோபர் 4 இல் David Leonhardt நியூ யோர்க் டைம்ஸில் எழுதுகையில், “கோவிட்-19 மீண்டுமொருமுறை பின்வாங்குகிறது,” என்று எழுதினார்.

'விஷயங்கள் சரியாகி விட்டால்?' என்று டைம்ஸின் பௌல் க்ரூக்மன் அக்டோபர் 7 இல் முணுமுணுத்தார். தடுப்பூசி கிடைப்பது என்பது, மக்கள் 'ஓரளவுக்குப் பாதுகாப்பாக அலுவலகத்திற்குத் திரும்புவதை, விரும்பியதை உண்ணச் செல்வதை —எல்லாவைற்றையும் விட— அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை,” அர்த்தப்படுத்துகிறது என்றார்.

உலக சோசலிச வலைத் தளம் அதன் ஆகஸ்ட் 20 அறிக்கையில், “தணிப்பு நடவடிக்கைகள்' அல்லது 'தடுப்பூசி மட்டுமே போதும்' மூலோபாயத்தை அறிவுறுத்தியவர்களுக்கு எதிராக, “கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே இந்த பெருந்தொற்றை நிறுத்த ஒரே வழி,” என்று விவரித்தது: “இந்த வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் வரை, அது மனிதகுலம் மொத்தத்தையும் அச்சுறுத்தும் வகையில் அதிகளவில் தொற்றக்கூடிய, உயிராபத்தான மற்றும் தடுப்பூசிகளையே எதிர்க்கும் புதிய வகைகளாகத் தொடர்ந்து உருவெடுக்கும். அது உலகளவில் முற்றிலுமாக ஒழிக்கப்படாவிட்டால், நீறு பூத்த நெருப்பாக இருக்கும் கோவிட்-19 இன் தழல்கள் இந்த வைரஸின் புதிய வகைகளை ஏற்படுத்தும் நிலைமைகளுக்கு எரியூட்டி, தொடர்ந்து அவற்றை உருவாக்கும்.”

உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தனியார் இலாபம் மற்றும் செல்வந்த தன்னலக் குழுவுடன் மோதும் என்பதால், அகற்றும் மற்றும் முற்றிலுமாக ஒழிக்கும் ஒரு கொள்கையை முதலாளித்துவ அரசாங்கங்கள் நிராகரித்தன.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இந்த கொள்கை அமெரிக்காவில் மட்டும் 800,000 க்கும் அதிகமான இறப்புகள் உட்பட உலகளவில் 5.2 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் இறப்புகளுக்கு வழிவகுத்தது. இந்த கொள்கையில் ஓர் அவசர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், இதுவரையிலான பாரிய இறப்பு எண்ணிக்கையானது ஓமிக்ரோன் வகை மற்றும் இன்னும் என்னென்ன புதிய மற்றும் கொடிய வகைகள் வருகிறதோ அவற்றால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு வழங்கப்பட்ட வெறும் முன்தொகையாக மட்டுமே இருக்கும்.

இந்த முட்டாள்தனம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்! ஒரேயொரு நம்பகமான கொள்கையே உள்ளது: இந்த பெருந்தொற்று நிறுத்தப்பட வேண்டும்! இலாபங்களுக்காக உயிர்கள் தியாகம் செய்யப்படக்கூடாது!

அவசர பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் கோவிட்-19 ஐ அகற்ற முடியும், அல்லது முற்றிலுமாக ஒழிக்கவும் கூட முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால் பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதற்காக பாரியளவில் பல ட்ரில்லியன் டாலர் திட்டத்தை உருவாக்குவது, பரிசோதனை, நோயின் தடம் அறிதல், பாதுகாப்பான தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்துதல், உலகம் முழுவதும் விரைவாக தடுப்பூசி செலுத்த ஓர் உலகளாவிய திட்டம், எல்லா இன்றியமையா வேலையிடங்களிலும் உயர்தரமான N95 ரக முகக்கவசங்கள் அல்லது தரமான முகக்கவசங்கள் வழங்குவதாகும்.

இந்தாண்டு கோவிட்-19 ஆல் வெறும் இரண்டு நபர்களே இறந்துள்ள சீனாவில், இந்த திட்டத்தை தேசியளவில் எட்ட முடியும் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோய்க்கு எதிராக ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு, உலகளவில் கோவிட்-19 ஐ அகற்றுதல் மற்றும் இறுதியில் முற்றிலுமாக ஒழிப்பது அவசியமாகும்.

இதற்கு, இலாப நலன்களுக்கு உயிர்களை 'விட்டுக் கொடுக்கும்' இந்த ஒட்டுமொத்த கொள்கையையும் நிராகரிக்கும் மூலக்கூற்றை அடிப்படையாக கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்குப் போராடவும் கோரிக்கை விடுக்கவும் ஒவ்வொரு பணியிடத்திலும், பள்ளியிலும், அண்டைப் பகுதியிலும் சாமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவது உட்பட, தொழிலாளர்கள் இப்போது தயாரிப்புகள் செய்ய தொடங்க வேண்டும்.

ஓமிக்ரோன் வகை உலகளவில் அதிகரித்து வருவது இப்போதும் கூட அதன் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. கோவிட்-19 பரவல் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம், இந்த வகை பரவ அனுமதிக்கப்பட்டால், அது தற்போது மேலோங்கி உள்ள டெல்டா வகையைப் பிரதியீடு செய்தோ, அல்லது அதற்குத் துணையாகவோ கூட, பரவ அனுமதிக்கப்பட்டால் ஏற்படும் செலவை விட, இது குறைவாக இருக்கும்.

ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பதும் உலகெங்கிலும் அது வேகமாக பரவி வருவதும், உலக சோசலிச வலைத் தளம் தொடங்கிய கோவிட்-19 பெருந்தொற்று மீதான உலகளாவிய தொழிலாளர் விசாரணையின் அவசரத் தேவையை நிரூபித்துள்ளன. இந்த விசாரணைப் பணிக்கான ஆதரவைக் கட்டமைக்குமாறு நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த விசாரணைப் பணியை முன்னெடுப்பதில் விபரங்கள் மற்றும் தொழில்ரீதியான உதவிகளை வழங்குமாறு விஞ்ஞானிகளுக்கும் பொது சுகாதாரத் துறையில் செயலூக்கத்துடன் உள்ள அனைவருக்கும் நாங்கள் முறையிடுகிறோம்.

Loading