தெற்காசியத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்: 2022 இல் தொற்று நோய் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கண்டியில் கடந்த ஜூன் மாதம் சுகாதார ஊழியர்கள் நடத்திய போராட்டம் [WSWS Media]

அன்பின் சகோதர, சகோதரிகளே,

புதிய ஆண்டு தொடங்குகையில், தெற்காசிய மற்றும் உலகம் பூராகவும் உள்ள தொழிலாளர்கள் கூட்டாகச் செயற்பட்டு இறுதியில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டும் பாரிய தொற்றுக்கள், நோய்கள் மற்றும் மரணங்களையும் கொண்ட மற்றொரு பயங்கர ஆண்டாக இருக்க கூடாது!

கடந்த இரண்டு ஆண்டுகளின் சமூகப் பேரழிவானது, கூட்டுத்தாபன இலாபங்கள் மற்றும் மெகா மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் தனியார் சொத்துக்களின் இடைவிடாத குவிப்புக்கு பொதுச் சுகாதாரத்தை குற்றவியல்தனமாக கீழ்ப்படுத்தியதன் விளைவுகள் ஆகும்.

மனித உயிர்களின் இழப்பின் அளவில், இந்த தொற்றுநோயானது தெற்காசியா மற்றும் குறிப்பாக இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய துயரங்களின் ஒன்றாகும். 2021 தொடங்குகையில் இந்தியாவில் 148,994க்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு பலியாகினர். இன்று, இந்த எண்ணிக்கை உயிர்-காக்கும் தடுப்புசிகள் வழங்கப்பட்ட போதும் 482,000க்கும் அதிமாக உள்ளது. இது ஒரு வருடத்தில் மூன்று மடங்கிலும் அதிகமாகும்.

கடந்த ஜீலையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகலாவிய மேம்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயின் உண்மையான எண்ணிக்கை மூன்று முதல் ஐந்து மில்லியனுக்கும் இடையில் உள்ளது. இது அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட பத்து மடங்கு ஆகும்.

ஜனவரி 4 ஆகும் போது, இந்தியா மற்றும் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான் புட்டான், மாலைதீவு ஆகிய தெற்காசிய நாடுகளில் உத்தியோகபூர்வ கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 573,300க்கும் அதிகமாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 39.51 மில்லியன் ஆகவும் பதிவாகியுள்ளது.

பொதுச் சுகாதாரத்தின் மிக முக்கியமான குறிகாட்டியான ஆயுட்காலம், பாரியளவில் குறைந்துள்ளது. சனத்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐ.ஐ.பி.எஸ்.) படி, இந்தியாவில் ஆண் பெண் பிறப்பில் ஆயுட்காலம் “முறையே 2019 இல் 69.8 மற்றும் 72 வருடங்களில் இருந்து 2020 இல் 67.5 மற்றும் 69.8 வருடங்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த இரண்டு வருடத்தில் இந்தியாவின் மீது கோவிட்-19 ன் தாக்கம், “ஆயுட் கால எண்ணிக்கையை அதிகரிக்க கடந்த காலத்தில் நாம் மேற்கொண்ட முன்னேற்றத்தை துடைத்துவிட்டதாக” ஐ.ஐ.பி.எஸ். உதவி பேராசிரியர் சுரயகாந் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக, 2020 டிசம்பர் 31 வரையிலான முதல் ஆண்டின் வேளையில், 10.26 மில்லியன் இந்தியரகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முடக்கங்கள் கைவிடப்பட்டு டெல்டா மற்றும் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை தடுக்க மோடி அரசாங்கம் எதையும் செய்ய மறுத்ததால், தொற்றுக்களின் எண்ணிக்கை 2021 இன் இறுதியில் 34.83 மில்லியனை அடைந்துள்ளது.

2021 ஏப்பிரல் 8 அன்று இந்தியாவில் மும்பையில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்கின்றன்ர். (AP Photo/Rafiq Maqbool)

இலங்கையில், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், அதன் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு உட்பட நாடு முழுவதும் பரவுகின்ற போதிலும், அதன் மட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துகின்றது. ஜனவரி 3 இல் இருந்து, கர்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கான கோவிட்-தொடர்பான விடுமுறையையும் இரத்து செய்து, சகல அரச ஊழியர்களையும் பணியை மீண்டும் தொடங்க உத்தரவிட்டது. திருமண நிகழ்வுகள், வெளிப்புற நிகழ்வுகள், மற்றும் விளையாட்டு விழாக்கள் ஆகியவற்றுக்கான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை, அத்தியவசியமற்ற வணிகங்கள், பாடசாலைகள் மற்றும் வணிக வளாகங்களும் இப்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன.

“சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுதற்கான” சகல பொறுப்புக்களையும் அரசாங்கம் மக்கள் மீது சுமத்தியுள்ளதோடு, தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் வழங்குவதற்கான பொறுப்பைக் கைகழுவி விட்டுள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் தாங்கள் பெற்ற வெற்றியைப் பற்றிய இராஜபக்ஷவின் வெற்றுப் பிதற்றல்கள் ஒருபுறம் இருக்க, குறைவாக கணக்கிடப்பட்ட அதிகாரபூர்வ தரவுகளின்படி, இலங்கையில் தொற்றுக்கள் 600,000 ஆகவும் மரணங்கள் 15 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற ஒரு குற்றவியல் கொள்கையான “வைரசுடன் வாழுதல்” என்பதன் அவசியத்தை அறிவித்து, தெற்காசியாவில் அதன் சகாக்களைப் போல, இராஜபக்ஷ அரசாங்கமும், தடுப்பூசியே தொற்று நோய்க்கு ஒரே தீர்வு என்பதை ஊக்குவிக்கின்றது.

அக்டோபர் 31 தரவுகளின் படி, தெற்காசியாவில் கோவிட்-19 இல் இருந்து உயிர் பிழைத்த உத்தேசமாக 49 சதவீதமானவர்கள், அதாவது கோடிக்கணக்கான மக்கள், நீண்டகால கோவிட் பாதிப்பால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய், உடலில் ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்பதோடு பல வருடங்கள் நீடிப்பதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களை தீவிர உடல் பிரச்சிகைகளுடனும் ஈய நஞ்சூட்டலுடன் சம்பந்தப்பட்ட நோயைவிட மிகக் கடுமையான மூளைப் பாதிப்புக்கறுக்குள் அவர்களை தள்ளிவிடுகின்றது.

இந்த கொடிய வைரஸால் இறந்த ஒரு நண்பரையோ அல்லது குடும்ப உறுப்பினரையோ கிட்டத்தட்ட அனைவரும் கொண்டுள்ளனர். இந்தக் கட்டுரையை வாசிக்கின்ற உங்களில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் நீண்டகால கோவிட்டால் துண்பப்பட்டுக்கொண்டிருக்கலாம்.

ஒமிக்ரோனின் விரைவான பரவலானது, 2022 ஆம் ஆண்டு, 2020 மற்றும் 2021ஐ விட வேகமானதாக இருக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. ஜனவரி 4 அன்று, இந்தியாவில், 116 நாட்களில் மிக உயர்வான 37,379க்கும் அதிகமான தொற்றாளர்களும் 124 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் ஒரு நாளில் தொற்றுக்கள் 1.4 மில்லியனை அடையும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தெற்காசியா முழுவதும் உள்ள அதன் சமதரப்பினரைப் போல், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், ஒமிக்ரோன் “டெல்டாவை விட குறைந்த பாதிப்பைக்” கொண்டுள்ளது என்ற மந்திரத்தை தொடந்தும் கூறிவருகின்றது. ஆனால், இந்த ஆபத்தான ஒமிக்ரோன் தூண்டலானது மூன்றாவது அலையுடன் இந்தியாவை மூழ்கடிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். டெல்டாவைப் போன்று, இலட்சக் கணக்கானவர்கள் இல்லாவிட்டால் மில்லியன் கணக்காணவர்கள் மருத்துவமனையில் அணுமதிக்கப்படுவார்கள்.

இந்தியாவின் குறைவாக நிதியிப்பட்ட, செயல் இழந்து வருகின்ற மருத்துவ உட்கட்டமைப்புக்கள், கடந்த இரண்டு வருடங்களில் இது முகங்கொடுத்த பாரிய எண்ணிக்கையிலான நோயாளர்களைக் கையாள்வதில் இலாயக்கற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றப்படாத மக்களின் கணிசமான எண்ணிக்கைகள், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள், சனத் தொகையில் முதியவர்களின் பாரிய எண்ணிக்கை உட்பட பிற அதிர்ச்சி ஊட்டும் காரணிகள், இந்த ஆண்டு அதி வேகமாக உயர்ந்து வரும் கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கையில் பங்களிக்கும்.

முன்னெப்போதும் இருந்திராத இந்த நெருக்கடிக்கு மத்தியில், எதிர் கட்சியான இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் பிற ஸ்தாபன கட்சிகளின் முழுமையான ஆதரவுடன், பெரு நிறுவன இலாபத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு பொதுச் சுகாதார நடவடிக்கைகளையும் தொடங்க மோடி அரசாங்கம் மறுத்து வரும் நிலையில், பங்குச் சந்தை தெடர்ந்து உயர்வடைகின்றது.

அரசாங்கத்திடம் இருந்து வரும் தவறான தகவல்களும் பொய்களும் தன்நம்பிக்கை இழக்கச் செய்வதோடு பின்னர் இவை தொற்று நோய் சம்பந்தமாக முற்றிலும் தோல்விவாதத்தை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகின்றது. வாழ்நாள் நோயாக ஆகும் என அறிவித்து வரும் பெரு நிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் இப்போது வெகுஜனங்களை “கோவிட் உடன் வாழ வேண்டிவரும்” என வாதாடுகின்றன. இதன் அர்த்தம் என்ன? இந்தக் கொள்கையின் இறுதி இலக்கு என்ன? தேவையற்ற துன்பங்கள் மற்றும் மில்லியன் கணக்கான மரணங்கள் எப்போது நிறுத்தப்படும்?

உண்மையில், சரியான நடவடிக்கைககளுடன் ஒரு சில மாதங்களில் இந்த வைரஸ் முற்றாக அழிக்கப்படலாம். சீனாவில், பூச்சிய- கோவிட் மூலோபாயம், 2020 ஏப்ரலில் இந்த வைரஸை அகற்ற வழிவகுத்தது. 2020 மே மாதம் அங்கு இரண்டு மரணங்கள் மட்டுமே பதிவாகின. சீனாவில் பயன்படுத்தப்பட்ட முறைகள் நன்கு அறியப்பட்டவையும் தொற்று நோய்களுக்கு எதிரான ஒரு நுற்றாண்டுக்கும் மோலான அனுபவங்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதும் ஆகும்.

வணிகங்கள் மற்றும் பொருளாதரத்தை மீண்டும் முழுமையாகத் திறப்பதை உறுதிப்படுத்தும் வகையில், கட்டுக்கதைகளை தினிப்பதற்கு, விஞ்ஞான மற்றும் பொதுச் சுகாதார அடிப்படைகள் தொடர்சியாக அலட்சியம் செய்யப்படுவதோடு பொய்மைப்படுத்தப்படுகின்றன.

அதனது கோவிட் தனிமைப்படுத்தல் மற்றும் வழிகாட்டுதல்களில் இது வரையில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை என்றாலும், ஆரம்பத்தில் இருந்தே இந்திய அரசாங்கம் குற்றவியல் “சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையையே பின்பற்றி வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவுள்ள மாநில சட்ட மன்றத் தேர்தல், நடைபெற இருக்கும் ஐந்து மாநிலங்களில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளால் பாரிய அரசியல் பேரணிகள் நடத்தப்படக் கூடாது என்ற நீதி மன்றக் கோரிக்கைகளையும் மீறி நடத்தப்படுகின்றன.

மில்லியன் கணக்கான மக்களின் உயிர்வாழ்வு சம்பந்தமாக முழு ஆளும் உயரடுக்கினதும் ஈவிரக்கமற்ற அலட்சியம் மற்றும் தொழிற்சாலைகள், ஏனைய வேலைத் தளங்கள் திறந்திருக்க வேண்டும் மற்றும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவேண்டும் என்ற அதன் வலியுறுத்தல்களும், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் கற்றுக்கொண்ட சகலதையும் எதிர்த்து நிற்கின்றன. நுற்றாண்டு கால விஞ்ஞான கற்கைகள், தொற்று நோயை எதிர்த்துப் போராடுவற்கான அறிவியல் ஆயுதத்தை மனித குலத்துக்கு வழங்கியுள்ளது. இந்த அறிவுகள், போலியோ, சின்னம்மை, தட்டம்மை, மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் உட்பட ஒரு காலத்தில் மரணங்களுக்கு முக்கிய காரணிகளாக இருந்த வைரஸ்களை ஒழிக்க 20 ஆம் நாற்றாண்டில் பயன்படுத்தப்பட்டன.

அனைத்து அத்தியவசியமற்ற வேலைத்தளங்களைப் பூட்டுவது மற்றும் இரண்டு மாத காலத்துக்கு சகல பாடசாலைகளையும் தொலைக் கல்விக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகள், வைரஸ் பரவலை மிக வேகமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு, கோவிட்-19 முழு அளவில் ஒழிக்கப்படுவதற்கான அடித்தளத்தை ஸ்தாபிக்கும். இந்த அவசியமான முடக்கங்கள், பாதிக்கப்பட்ட சகல தொழிலாளர்கள் மற்றும் சிறிய-வணிகங்களுக்கு முழுமையான நிதி மற்றும் சமூக ஆதரவுகளை வழங்குவதுடன் இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் உயர்ந்த தரத்திலான முகக் கவசம், அதே போல் பரிசோதனைகள், தொடர்பு தடமறிதல், தொற்றுக்குள்ளானவர்களின் பாதுகாப்பான தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை, மற்றும் சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்பின் விரைவான விரிவாக்கத்துடன் சேர்த்து இரண்டு மாத முடக்கம் அமுல்படுத்தப்பட வேண்டும். அனைத்து அத்தியாவசியமான வேலைத் தளங்கள் மற்றும் வைத்தியசாலைகளிலும் உயர்ந்த தரத்திலான FFP3 அல்லது சிறந்த முகக் கவசம், அதேபோல் நவீன வடிகட்டல் மற்றும் காற்றோட்ட முறைகளும் தொழிலாளர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் வைரஸை அழிப்பதற்கு அனுமதிக்கும் வகையில் அனைத்து அத்தியாவசியமற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் இந்த விடயங்களை தனது கையில் எடுக்க வேண்டும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்:

1. ஜனத்தொகை முழுவதும் கோவிட்-19 பரவலை அனுமதிக்கின்ற தற்போதைய “சமூகத்தில் நோய் எதிர்ப்புசக்தி பெருக்கும்” தற்போதைய கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும். SARS-CoV-2 வைரஸை ஒழிப்பதையும் முற்றாக இல்லாது செய்வதையும் இலக்காகக் கொண்ட ஒரு புதிய மூலோபாயம் பின்பற்றப்பட வேண்டும்.

2. வரஸின் பரவலை நிறுத்த அமுல்படுத்தப்படும் கொள்கைகள் பொது சுகாதார தேவைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். அனைத்து கூட்டுத்தாபன-நிதிய நலன்களை விட மனித வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கே முழுமையான நிபந்தனையற்ற முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். சம்பளங்கள் கொடுப்பது, சிறு வியாபார உரிமையாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பது, சுகயீனமுற்றவர்களுக்கு முழு மருத்துவ உதவி, மற்றும் விதவைக் குடும்பங்களுக்கான கொடுப்பனவையும் கூட்டுத்தாபனங்கள் ஏற்றுக்கொள்வதோடு பங்குச் சந்தை ஓட்டத்தின் ஊடக பெரும் முதலீட்டாளர்களால் பெறப்பட்ட பிரமாண்டமான தொற்றுநோய் இலாபங்களுக்கு 100 சதவீதம் வரி அறவிடவேண்டும்.

3. தொற்று நோய்க்கு எதிரான போரட்டமானது உலகளவில் நடத்தப்பட வேண்டும். அனைத்து நாடுகளிலும் SARS-CoV-2 வைரஸை அகற்றாது விடின் இந்த தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வர முடியாது.

ஆளும் முதலாளித்துவக் கட்சிகள், பெரு வணிகர்கள் மற்றும் கூட்டுத்தாபன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், 1) இந்த கொள்கைகள் அமுல்படுத்துவது சாத்தியமற்றது எனவும் 2) நடைமுறையில் உள்ள முதலாளித்துவ அமைப்பு முறைக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கின்றன.

முதலாவது மறுப்புக்கு, மில்லியன் கணக்கான மக்கள் தொற்றுக்குள்ளாகுதலையும் பாரியளவில் உயிர்கள் பலியாவதையும் ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றதாகும் என்பதே பதிலாகும்.

இரண்டாவது எதிர்ப்புக்கு பதில் இதுவே ஆகும்: வெகுஜனங்களில் பரந்த பெரும்பான்மையினரின் உயிர்கள் மற்றும் நல்வாழ்வை அச்சுறுத்தும் நெருக்கடிக்கான தீர்வை முதலாளித்துவத்தால் வழங்க முடியாது எனில், அது முற்றாக அகற்றப்பட்டு இலாபங்களை விட மனித உயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற சோசலிச அமைப்பு முறையால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

உள்ளடக்கத்தில், கோவிட்டுக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டம் ஆகும். கடந்த இரு ஆண்டுகளின் துன்பமானது தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களின் பேரில் உலகப் பொருளாதாரத்தை மறுஒழுங்கு செய்வதை அவசியமாக்கியுள்ளது.

இந்த அறிக்கையை விநியோகித்து, உங்கள் வேலைத்தளத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்து, நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறும் தொற்றுநோயின் பரவலை நிறுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைக்காக ஆதரவை வென்றெடுக்குமறும் சகல தொழிலாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சியையும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியையும் தொடர்புகொள்ளுங்கள். நாங்கள் உங்களது வேலைத்தளத்தில் காணப்படும் நிலைமைகளைப் பற்றி கலந்துரையாடவும் தொற்றுநோய்க்கு முடிவுகட்டுவதற்கான போராட்டத்தை ஏற்பாடு செய்ய உங்களுக்கு உதவுவதற்கும் நாம் அக்கறையாக உள்ளோம்.

சகோதரத்துவத்துடன்,

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)

Loading